Followers

Tuesday, November 27, 2018

புயல் நிவாரணம்


வணக்கம்!
          நீண்டநாட்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். புயல் பாதிப்பால் மின்சாரம் இதுவரை வரவில்லை. மின்சாரம் வருவதற்க்கு இன்னமும் நாட்கள் பிடிக்கும் என்று தோன்றுகின்றது. கார் சார்ஜர் வழியாக போன் சார்ஜ் செய்துக்கொள்கிறேன்.

புயல் நிவாரணம் வழங்கி இருக்கிறோம். பல நண்பர்கள் புயல் நிவாரணத்தில் பங்குக்கொள்ளவேண்டும் என்று கேட்டனர். பூஜைகளுக்கு மட்டுமே உங்களிடம் கேட்பது உண்டு.ஒரு மாவட்டமே புயலால் பாதிக்கும்பொழுது இதனை தனிநபர் கஷ்டம் என்று எடுத்துக்கொள்ளாமல் தாராளமாக பிறரிடம் உதவி கேட்கலாம் என்று நண்பர்கள் சொன்னார்கள்.

நீங்களும் புயல் நிவாரணத்தில் பங்குக்கொள்ளலாம். எனது வங்கிகணக்கை தந்து இருக்கிறேன். உங்களால் முடிந்த உதவியை மற்றும் உங்களின் நண்பர்களின் வழியாக பெறும் பணத்தை செலுத்தலாம். அனைத்து பணமும் புயல் நிவாரணத்திற்க்கு பயன்படுத்தப்படும். பொருள்கள் வழியாக உதவி செய்கிறேன் என்றால் என்னை தொடர்புக்கொண்டு செய்யலாம்.

நான் சொல்லிவிட்டேன் என்பதற்க்காக கஷ்டப்பட்டுக்கொண்டு பணம் அனுப்பவேண்டாம். உங்களிடம் பணம் இருந்தால் மட்டும் அதனை அனுப்புங்கள் அல்லது உங்களின் நண்பர்களின் வழியாக பணம் சேகரித்தும் அனுப்பலாம். புயல் நிவாரணம் என்பது உங்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை ஆன்மீக வழியாக சொல்லுகிறேன்.

வங்கி கணக்கு விபரம் 

KVB Bank :  Karur Vysya Bank
Branch : Pattukkottai
Name : RAJESH S
Account Type : Savings account.
A/C Number : 1623155000063470
IFSC Code : KVBL0001623

மேலும் விபரங்களுக்கு  தொடர்பு கொள்ளுங்கள்.

E-Mail ID : payrajeshsubbu@gmail.com

Cell No : 9551155800,8940773309 Whatapp : 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, November 20, 2018

நன்றி

வணக்கம்!
          ஒவ்வொரு நாளும் மிகுந்த போராட்டத்தில் தான் வாழ்க்கை சென்றுக்கொண்டு இருக்கின்றது. இந்த போராட்டத்தையும் மீறி நமது நண்பர்களுக்கு தேவையான ஆன்மீக வழியில் உள்ள பிரச்சினையை தீர்த்துக்கொண்டு தான் இருக்கின்றேன். 

புயலால் பாதிப்படைந்து இருக்கின்றார் ஒன்றும் கேட்டவேண்டாம் என்று யாரும் இருக்கவேண்டாம். தாராளமாக அனைவரும் கேட்கலாம். மின் பிரச்சினை காரணமாக தான் பதிவை தொடர்ச்சியாக கொடுக்கமுடியவில்லை.

புயல் அடித்தபொழுது கடும் பாதிப்பை இந்த மாவட்டம் அடைந்தது. பல பேர்க்கு வெளியில் இந்த பாதிப்பு தெரியவில்லை என்று மட்டும் புரிகின்றது. வெளியில் இருந்து தொடர்புக்கொள்ளும் நண்பர்கள் இதனைப்பற்றி சொல்லுகின்றனர்.

பலர் என்னை தொடர்புக்கொண்டு என்ன உதவி வேண்டும் என்று கேட்டனர். உண்மையில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். தொடர்பில் இருந்து பல வருடங்கள் சென்ற நண்பர்கள் கூட இந்த நேரத்தில் தொடர்புக்கொண்டது மகிழ்ச்சி. அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நேற்று வரை சும்மா இருந்த இயற்கை இரவு முதல் காற்று வீச தொடங்கியது. இன்று மழை கூட வருவது போலவே இருக்கின்றது. அடுத்த புயலும் வரும் என்று சொல்லிருக்கின்றனர். அம்மன் அருளால் அதன் தாக்கம் குறையவேண்டும்.

ஆன்மீக வழியில் இருந்த காரணத்தால் தான் புயலின் பொழுது பெரும் சேதம் எனக்கு ஏற்படவில்லை. சேதம் என்பது பிறரை விட குறைவு. உங்களின் பிரச்சினையை வழக்கம் போல தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளலாம். ஜாதக பலன் கேட்க அனுப்பிய நண்பர்களுக்கு மட்டும் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். விரைவில் அந்த சேவையும் தொடரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, November 18, 2018

அறிவிப்பு

வணக்கம்!
          புயலின் தாக்கத்தால் கடும் பாதிப்பை தஞ்சாவூர் மாவட்டம் சந்தித்தது. எனது சொந்த ஊரும் கடும் பாதிப்பை அடைந்தது. ஏற்கனவே எனது ஊரை பார்த்தவர்களுக்கு தற்பொழுது பார்த்தால் அடையாளமே தெரியாத அளவுக்கு பாதிப்பு இருக்கின்றது.

அடிப்படையான வசதிகள் கூட தற்பொழுது கிடைக்கவில்லை. மின்கம்பங்கள் சரி செய்து மின்சாரம் கிடைப்பதற்க்கு கூட மாதகணக்கு ஆகும் என்று தோன்றுகின்றது. எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் சமாளிக்கவேண்டும் என்ற தன்னம்பிக்கை உள்ளதால் போராடி மீண்டுவிடலாம். பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டார்கள் அனைவருக்கும் நன்றி.

தொலைதொடர்பு பிரச்சினை இருக்கின்றது. அவ்வப்பொழுது தொலைதொடர்பு வேலை செய்வதால் இந்த பதிவை தரமுடிந்தது. பதிவை தொடர்ந்து தருவதற்க்கு அனைத்து முயற்சியும் எடுத்துக்கொண்டு இருக்கிறேன். விரைவில் மீண்டு வந்துவிடுவேன். அதுவரை பொறுமையாக இருக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, November 15, 2018

இரண்டாவது வீடு


வணக்கம்!
          ஒருவருக்கு இரண்டாவது வீட்டை வைத்து தான் அந்த நபர்க்கு எந்த மாதிரியான குழந்தை பிறக்கும் என்பதை சொல்லலாம். ஐந்தாவது வீட்டை வைத்து குழந்தையை சொல்லுவார்கள் நீங்கள் இரண்டாவது வீட்டை வைத்து சொல்லுகின்றீர்கள் என்று கேட்கலாம்.

பெரும்பாலான ஜாதகர்களுக்கு இரண்டாவது வீட்டில் ஆண் இராசியாக வந்தால் முதல் குழந்தை ஆண் குழந்தையாக இருக்கும். பெண் இராசியாக இருந்தால் பெண் குழந்தையாக இருக்கும். இரண்டாவது வீட்டில் செவ்வாய் சம்பந்தப்பட்டால் அந்த நபர்க்கு பிறக்கும் அனைத்து குழந்தையும் ஆண் குழந்தையாகவே இருக்கின்றது.

ஒரு வீட்டில் அதிகபடியான பெண்கள் இருந்தால் அந்த குடும்ப தலைவரின் ஜாதகத்தில் இரண்டாவது வீட்டில் பெண் இராசியின் தாக்கம் அதிகமாக இருக்கும். இரண்டாவது வீடு என்பது குடும்பத்தை காட்டுவதால் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் எப்படி என்பதை காட்டக்கூடிய இடமாகவே இருக்கின்றது.

ஒரு சில ஜாதகத்தில் எந்த வீடு பலம் பெறுகின்றது என்பதை பொறுத்தும் இருக்கின்றது. ஒரு சில ஜாதகர்களுக்கு ஐந்தாவது வீடு பலம் பெற்றால் அந்த ஜாதகர்களின் வாரிசுகள் ஐந்தாவது வீட்டை பொறுத்து இருக்கும்.

ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அதிகபட்சம் ஆண்களா அல்லது பெண்களா என்பதை பார்ப்பதற்க்கு இந்த விதியை பயன்படுத்தி பார்த்துக்கொள்ளலாம். ஒரு சிலருக்கு எந்த மாதிரியான வாரிசுகள் பிறக்கும் என்பதை சொல்லுவதற்க்கும் இது பயன்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, November 14, 2018

கோவிலுக்கு செல்லகூடாது எப்பொழுது?


வணக்கம்!
          நாம் நிறைய தோல்விகளை சந்தித்து இருக்கும் காலக்கட்டத்தில் நாம் கோவில்களுக்கு செல்லக்கூடாது. பொதுவாகவே மனிதனின் மனம் தோல்வியை சந்திக்கும் காலக்கட்டத்தில் கோவில் பக்கம் மனம் செல்ல நினைக்கும். நீங்கள் கோவில் பக்கம் சென்றால் கண்டிப்பாக அந்த காலக்கட்டதில் உங்களுக்கு பிரச்சினை அதிகமாக தான் ஏற்படும்.

நம்மிடம் என்ன இருக்கின்றது என்பதை அறிந்து அந்த பலன் தான் அதிகமாக நமக்கு கிடைக்கும். கஷ்டக்காலத்தில் அனைவரும் செய்யும் தவறாகவே இது இருக்கும். நாம் கோவில் பக்கம் செல்லவேண்டாம் என்று சொன்னால் யாரும் கேட்ட மாட்டார்கள். பதிவுகளில் சொல்லிவிட்டால் கண்டிப்பாக கேட்பார்கள்.

கஷ்டக்காலக்கட்டத்தில் ஆன்மீகவாதிகளை சந்திப்பதை வைத்துக்கொள்ளலாம். ஏன் என்றால் இவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். கோவில்களை விட ஆன்மீகவாதி பெரியவர்களாக என்று கேட்கலாம். ஆன்மீகவாதிகள் பெரியவர்கள் கிடையாது தான் ஆனால் அவர்கள் உங்களுக்கு சரியான ஒரு அறிவுரை அல்லது காப்பாற்றமுடியும்.

கஷ்டக்காலத்தில் வனப்பகுதிகளில் இருக்கும் கோவில்களுக்கு சென்று வரலாம். வனப்பகுதிகளில் இருக்கும் கோவில்களில் உங்களின் உடலை தூய்மைப்படுத்தி ஆத்மாவிற்க்கு பலன் சேர்த்து உங்களின் கஷ்டத்தை போக்க வழி வகுக்கும்.

கஷ்டம் வந்துவிட்டால் பொறுமையாக இருந்து உங்களை மேம்படுத்த என்ன வழி என்பதை பார்த்து செய்யவேண்டும். கோவில்களுக்கு நீங்கள் சந்தோசமாக இருக்கும் காலக்கட்டத்தில் சென்றுவந்தால் அது பெரியளவில் நல்லது செய்யும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, November 13, 2018

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

வணக்கம்!
          நேற்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.



அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

வணக்கம்!
          நேற்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.




அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

வணக்கம்!
          நேற்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, November 12, 2018

அம்மன் பூஐை


வணக்கம்!
          இன்று அம்மன் பூஜை நடைபெறுகின்றது. அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.    
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள். 
சிங்கபூரை சேர்ந்த நண்பர் அவர்கள்.  

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள். 
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள்.    
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள்.      

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்.  
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள்.      
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள்.       

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.    
பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள்.    
மயிலாடுதுறையை சேர்ந்த யுவராஜ் அவர்கள். 
விழுப்புரத்தை சேர்ந்த திரு அசோக்குமார் அவர்கள்.  

வழக்கம்போல்                                                                     
                 திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள். 

மற்றும் பல நண்பர்கள் தங்களின் பங்களிப்பை அளித்துள்ளனர்.

இன்று அம்மன் பூஜை நடைபெறுவதால் அனைத்து நண்பர்களும் அம்மனிடம் வேண்டுதலை வையுங்கள்.

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

Saturday, November 10, 2018

இராகு


வணக்கம்!
          தற்பொழுது இராகு கடகத்தில் இருக்கின்றது. கடக இராசி சந்திரனுக்குரிய இராசி. சந்திரன் மனக்காரகன் மட்டும் இல்லாமல் அதோடு தாய்க்கும் காரத்துவம் வகிக்கிறார். இராகு கிரகம் கடக இராசியில் இருந்து வருகின்றது.

இராகு கேதுவிற்க்கு கோச்சாரபலன்களை ஏற்கனவே படித்து இருப்பீர்கள். இந்த இராகு தற்பொழுது கொஞ்சம் அதிகமாகவே வேலை செய்துக்கொண்டு இருக்கின்றது என்று சொல்லலாம். இதனைப்பற்றி யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்ற காரணத்தால் உங்களிடம் சொல்லுகிறேன்.

இராகு கிரகம் கடகத்தில் இருந்த காரணத்தால் பலரின் ஜாதகத்தில் தாய்க்கு பிரச்சினை இருக்கின்றது என்று சொல்லலாம். ஒரு சில நபர்களின் தாய் மரணம் கூட அடைந்து இருக்கின்றனர். இது சைலண்டாக நடந்துக்கொண்டு இருக்கின்றது. 

நீங்களே உங்களை சுற்றி இருக்கும் நபர்களை கொஞ்சம் கவனித்து பாருங்கள் அவர்கள் சொல்லுவார்கள் என்னுடைய அம்மாவிற்க்கு உடல்நிலை சரியில்லை என்பார்கள். ஒரு சிலரின் தாயார் மரணம் அடைந்து இருக்கின்றனர்.

இது கடக இராசிக்கு மட்டும் தான் நடக்கின்றது என்று இல்லை அனைவருக்கும் நடந்துக்கொண்டு இருக்கின்றது. உங்களின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்தவரோடு இராகு கேதுவிற்க்கும் ஒரு சிறிய பரிகாரத்தையும் செய்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, November 8, 2018

நாம் செய்யும் புண்ணியம்


வணக்கம்!
          ஒரு குடும்பத்தில் இரு சகோதர்கள் இருக்கின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம். இதில் மூத்த சகோதர் ஒருவர் கெட்டு போய்விட்டால் இளைய சகோதர் என்ன தான் முயற்சி செய்தாலும் அவரால் முன்னேற்றம் என்பதை அடையமுடியாது.

என்னுடைய அனுபவத்தில் பல இடங்களில் நான் பார்த்த விசயம் இது. மூத்த சகோதர் சரியாக இல்லை அவர் ஊதாரியாக இருந்தால் அவரின் குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களும் வீணாக போய்விடுவார்கள். மூத்த சகோதர் வீணாக போய்விடகூடாது.

பல குடும்பங்களில் மூத்த சகோதர் சொத்து முழுவதும் ஆட்டையை போட்டாலும் அவரின் குடும்பம் நன்றாக இருக்காது. அவர்க்கு பிறக்கும் வாரிசுகள் சரியாக இருக்காது. இதனை எல்லாம் புரிந்து நடந்துக்கொள்ளவேண்டும்.

ஒரு சிலர் பங்காளி சொத்துகளை திருட்டு தனமாக அபகரிப்பதும் உண்டு. பல இடங்களில் இன்றளவும் நடந்துக்கொண்டே இருக்கின்றது. இது மிகப்பெரிய கர்மத்தை நமக்கு இழுத்துக்கொள்வதாக இருக்கின்றது. பங்காளி சொத்தை அபகரித்தால் நமக்கு பெரிய கர்மமாக இருக்கும்.

நம்மால் நமக்கு தெரிந்த வரை பாவங்களை இழுக்காமல் இருந்தாலே போதுமானது. நாம் சொத்தை நமது வாரிசுகளுக்கு சேர்த்து வைக்க வேண்டியதில்லை அவர்களே அந்த ஊரை ஆள்வார்கள். உங்களால் அவ்வளவு புண்ணியத்தை கொடுக்க முடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, November 7, 2018

தோல்வியில் இருந்து வெற்றி


வணக்கம்!
          ஒருவருக்கு ஒரு தோல்வி ஏற்படுகின்றது என்று வைத்துக்கொள்வோம். அதன் பிறகு அந்த தோல்வியை சரி செய்வதற்க்கு என்று ஒருவர் பாடுபடுவது அதிக காலம் எடுக்கும். மனிதனுக்கு நம்பிக்கை கொடுப்பதற்க்கு தோல்வி வந்தால் தான் வாழ்வில் வெற்றி வரும் என்று சொல்லுவார்கள்.

தோல்வி வந்த பிறகு வெற்றி காண்பது என்பது மிகவும் எளிதான ஒரு காரியம் கிடையாது. ஒருவருக்கு ஒரு வெற்றியை கொடுத்து ஒரு தோல்வியை கொடுக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அந்த தோல்விக்கு பிறகு வெற்றி எங்கு இருக்கின்றது என்று ஜாதகத்தை தேடிப்பார்த்தால் கொஞ்சம் கூட தெரியாது.

தோல்விக்கு பிறகு வரும் தசாவை பார்த்தால் அவனை எழுந்துவிடகூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு கிரகம் வேலை செய்துக்கொண்டு இருக்கும். கிரகங்களை சரி செய்து அவனை வெற்றி பெறவைப்பதற்க்குள் போதும் போதும் என்றாகிவிடுகின்றது.

தசாநாதன் கொஞ்சம் கூட ஒத்துழைப்பை அளிக்கவில்லை என்றால் பிறகு வரும் கோச்சாரபலன் எல்லாம் பெரியதாக ஒன்றும் அளிக்கபோவதில்லை. ஏதாே கொஞ்சம் கொடுக்கும். பத்து லட்சம் கொடுக்க வேண்டிய இடத்தில் பத்து ரூபாய் வருவது போல இருந்தால் எப்படி இருக்கும்.

ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் இப்படி தான் வேலை செய்கின்றன. இதனை எல்லாம் கருத்தில் கொண்டு உங்களின் குருவை நாடி வாழ கற்றுக்கொண்டால் கண்டிப்பாக மாற்றத்தை அவரால் தான் கொடுக்கமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஜாதக அனுபவம்


வணக்கம்!
          தற்பொழுது எல்லாம் சாேதிடம் பார்த்து சொல்லும் விதத்தில் பல மாறுதல்கள் வந்துவிட்டன. சோதிடபலன் பார்க்கும் வரும் நபர்களுக்கு அனைத்து தகவலும் நன்றாக தெரிந்துவிடுகின்றது. இதனை ஒரு சோதிடரின் வாயின் வழியாக கேட்டால் போதும் என்று தான் கேட்க வருகின்றனர்.

ஒரு சிலர் இதில் என்ன செய்கின்றார்கள் என்றால் எனக்கு சோதிடம் நன்றாக தெரிகின்றது என்ற நினைப்பில் சோதிடம் பலன் சொல்லும் சோதிடர்களின் வார்த்தையை அதிகம் கவனிப்பதில்லை. ஏற்கனவே எனக்கு இது தான் நடக்கும் என்று ஒரு தீர்மானித்தை வைத்துக்கொண்டு வந்துவிடுகின்றனர்.

சோதிடபலனை தீர்மானித்துவிட்டு சோதிடபலனை கேட்கும்பொழுது ஒன்று நடக்கின்றது அது எனக்கு ஒரு தசா நடக்கின்றது என்றால் இந்த தசா எனக்கு யோகத்தை தரும் என்று வரும் வாடிக்கையாளர்களே தீர்மானித்துவிடுகின்றனர். பலருக்கு இந்த இடத்தில் பிரச்சினை வருகின்றது.

தசா பலன் நமக்கு நல்லதை தான் தரும் என்பதை ஒரு போதும் நம்பிவிடகூடாது பலருக்கு தசாநாதன் சரியாக பலனை கொடுப்பதில்லை. சோதிடத்தில் நன்றாக ஆராய்ச்சி செய்யும்பொழுது இதனைபற்றி தெரியவரும். தசாநாதன் நன்றாக பலனை கொடுக்கவில்லை என்றால் அவர் நம்பி ஏமாந்து போய்விடுவார்கள். அதனால் சோதிடத்தை அவ்வளவு எளிதில் பார்த்துவிட்டு ஏமாந்துபோய்விடகூடாது. நன்றாக ஆராய்ந்து பார்த்தால் தான் அதனைப்பற்றி தெரியவரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, November 6, 2018

நல்வாழ்த்துக்கள்

வணக்கம்!
          இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, November 5, 2018

லாபஸ்தானம்



வணக்கம்!
          லாபஸ்தானம் எனும் பதினோறாம் இடம் நன்றாக இருக்கும்பொழுது தான் ஒருவருக்கு லாபம் அதிகமாக சம்பாதிக்கமுடியும் என்று சொல்லுவார்கள். அனைவருக்கும் லாபஸ்தானம் என்பது நன்றாக அமைந்துவிடாது. ஒரு சிலருக்கு இந்த இடம் அருமையாக வேலை செய்துக்கொண்டு இருக்கும்.

லாபஸ்தானம் எனும் பதினோறாம் இடத்தில் அமைந்த கிரகங்கள் அது கெடுதலாக இருந்தாலும் எந்த கிரகமாக இருந்தாலும் அது நன்மையை செய்யும் என்பது சோதிட விதி. அனைத்து நேரத்திலும் இந்த கிரகங்கள் வேலை செய்வதில்லை என்பது தான் பலருக்கு இது அனுபவ உண்மையாக இருக்கின்றது.

சோதிடத்தில் ஒவ்வொரு காரியமும் வெற்றி பெறுவதற்க்கு பார்க்கும்பொழுது அது லாபஸ்தானத்தோடு சம்பந்தம் பெறும்பொழுது மட்டுமே அந்த கிரகம் வெற்றியை பெறும். அது லாப ஸ்தானத்தோடு சம்பந்தம் பெறவில்லை என்றால் வெற்றியை நோக்கி செல்லாது.

ஒரு மனிதன் எடுக்கும் அனைத்து காரியமும் வெற்றி பெறுவதில்லை. வெற்றி பெறுவதற்க்கு லாபஸ்தானம் வழிவிடுவதில்லை. நாம் பல வீடுகளைப்பற்றி அலசி ஆராய்ந்து பார்த்துக்கொண்டு இருப்போம் ஆனால் இந்த வீட்டை கொஞ்சம் அலட்சியமாகவே விட்டுவிட்டு சென்றுவிடுவோம்.

உங்களின் லாபஸ்தானம் நன்றாக இருந்தால் தான் அனைத்து காரியமும் வெற்றியை நோக்கி செல்லும். லாபஸ்தானம் சரியில்லை என்றால் கண்டிப்பாக அனைத்தும் தோல்வியை நோக்கியே  செல்லும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, November 4, 2018

கர்மத்தில் தர்மம்


வணக்கம்!
          ஒவ்வொரு தொழிலும் அதன் தோல்வியை சந்திக்க ஒரு சில காலம் எடுக்கும். காலசுழற்சியின் காரணமாக ஒரு தொழில் தோல்வி அடைவதற்க்கு என்று ஒரு சில காலம் எடுக்கும்பொழுது அதுவாகவே தோல்வி அடையும். மனிதர்களாலும் ஒரு தொழில் தோல்வி அடையும் அது மனிதர்கள் செய்யும் தவறால் நடப்பதாக இருக்கும்.

கர்மஸ்தானம் என்று சொல்லக்கூடிய பத்தாவது ஸ்தானத்தை வைத்து தொழில் செய்யும்பொழுது அதில் தர்ம நோக்கத்தோடும் அந்த தொழிலை செய்யும்பொழுது கண்டிப்பாக அது நீண்ட காலமாக செல்லும். தர்மம் இல்லாமல் அதர்மமாகவவே அது சென்றால் ஒரு சில காலக்கட்டத்தில் அந்த தொழில் தோல்வியை அடையும்.

கர்மஸ்தானத்தில் தர்மத்தை எப்படி செய்யமுடியும் அப்படி செய்தால் அது தோல்வியை சந்திக்காதா என்று கேட்கலாம். எல்லா நேரத்திலும் தர்மத்தையே செய்யதுக்கொண்டு இருக்கமுடியாது. பத்திற்க்கு ஒன்று என்ற கணக்கில் செய்யலாம்.

கர்மஸ்தானத்தில் தர்மம் என்று சொல்லுவது அந்த தொழிலை நேர்த்தியாக நடத்துவதிலும் இருக்கின்றது. ஒரு சிலருக்கு ஒரு தொழில் நன்றாக சென்றுக்கொண்டு இருக்கும். தொழில் நேர்த்தியாக சென்றுக்கொண்டு இருக்கும்பொழுது இவர்களே அந்த தொழிலை தவறான பாதைக்கு இழுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள் அதனாலும் அந்த தொழில் தோல்வியை சந்திக்கின்றது.

உங்களுக்கு எந்த தொழில் நன்றாக வருகின்றதோ அந்த தொழிலை கடைசி வரை செய்யலாம். உங்களின் கர்மப்படி அந்த தொழில் உங்களுக்கு அமைக்கின்றது அதனை விட்டுவிட்டு பல தொழிலும் கையில் பணமே இல்லாமல் அல்லது அடுத்த தொழிலில் அறிவு இல்லாமல் நுழைந்தால் கர்மமே உங்களை காவுவாங்கிவிடும்.

தீபாவளி போனஸ் இலவச சோதிட ஆலோசனைக்கு கூப்பிடலாம். அனைவருக்கும் தீபாவளிக்குள் இலவச சோதிட ஆலோசனை சொல்லிவிடுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, November 2, 2018

தீபாராதனை மற்றும் நைவேத்தியம்


ணக்கம்!
          ஒரு படையல் போட்டு அல்லது ஒரு பூஜை செய்து அந்த பூஜைக்கு தீபாராதனையை காட்டுவோம். இந்த தீபாராதனையை காட்டிவிட்டு அந்த தீபாராதனை எரிந்துக்கொண்டு இருக்கும்பொழுதே நாம் நைவேத்தியத்தை எடுத்து சாப்பிட்டுவிடகூடாது.

கற்பூர தீபாராதனை காட்டிவிட்டு அந்த கற்பூரம் எரிந்துக்கொண்டு இருக்கும்பொழுது நாம் நைவேத்தியத்தை சாப்பிடாமல் அந்த கற்பூரம் அதுவாகவே அணைந்த பிறகு நைவேத்தியத்தை நீங்கள் எடுத்து சாப்பிடலாம் பிறர்க்கும் கொடுக்கலாம்.

பொதுவாகவே ஒரு தெய்வத்திற்க்கு தீபாராதனை காட்டும்பொழுதும் அல்லது ஏதோ ஒரு பூஜையை செய்த பிறகும் அதனை நாம் உடனே சாப்பிடாமல் அதனை ஒரு குறைந்தது மூன்று நிமிடமாவது சென்ற பிறகு சாப்பிட்டால் நல்லது.

தெய்வங்கள் வந்து நமது நைவேத்தியத்தை சாப்பிட்ட பிறகு அதாவது அதன் காரத்துவத்தை எடுத்துக்கொள்ளும். பெரும்பாலும் அதன் மணம் மற்றும் அதன் காரத்துவம் இனிப்பு அல்லது துவர்ப்பு என்று இருக்கும் இதனை தெய்வங்கள் நுகர்ந்த பிறகு நாம் சாப்பிட்டால் நல்லது.

தெய்வங்கள் அதனை வந்து சாப்பிடும்பொழுது அதனை உடனே எடுத்தால் அதனை சாப்பிடவிடாமல் செய்வது போல ஆகிவிடும் என்பதால் நீங்கள் மூன்று நிமிடத்திற்க்கு பிறகு எடுத்து சாப்பிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, November 1, 2018

சனியின் பார்வை சூரியன் மற்றும் சந்திரன்


வணக்கம்!
          ஒரு ஜாதத்தில் சனி மூன்றாம் பார்வையாக சூரியனை பார்க்கின்றது என்று வைத்துக்கொள்வோம் அதே சனி ஏழாம் பார்வையாக சந்திரனை பார்க்கிறது என்று வைத்துக்கொள்வோம். சூரியன் காட்டக்கூடிய காரத்துவம் தந்தை சந்திரன் காரத்துவத்தை காட்டக்கூடிய காரத்துவம் தாய். இந்த இரண்டு பேரில் யாருக்கு அதிக பாதிப்பு வரும்?

சனியின் மூன்றாம் பார்வைக்கு அதிக பாதிப்பு இருக்கும். தந்தை அதிகமான கஷ்டத்தை தாங்கவேண்டிய ஒரு சூழலை உருவாக்கும். தீயபலன்களை பார்க்கும்பொழுது அதிக பாதிப்பை தருவார். தந்தையின் உடல் நலனிலும் பாதிப்பை அதிகம் ஏற்படுத்துவார்.

சந்திரனை ஏழாம் பார்வையால் பார்ப்பதால் சந்திரனுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தினாலும் சந்திரனுக்கு உரிய காரத்துவம் உடைய தாய் மனநிலை பாதிப்பை அதிகமாக ஏற்படுத்தும். தாய் ஒழுங்கான ஒரு நிலையில் இருக்கமாட்டார். மனநிலை பாதிப்பை ஏற்படுத்தும்.

தாய் மற்றும் தந்தை இந்த இருவரில் தந்தை முதலிலேயே இறந்துவிடுவார். தந்தைக்குரிய சூரியனுக்கு சனியின் மூன்றாம் பார்வை கிடைத்தால் தந்தையின் உயிரை முதலிலேயே பறித்துவிடுவார். 

சூரியன் கெட்ட வீட்டில் அமர்ந்தால் உதாரணத்திற்க்கு சனியின் வீட்டில் சூரியன் அமர்ந்து சனியின் மூன்றாம் பார்வை கிடைக்கும்பொழுது ஜாதகரின் தந்தை ஜாதகரின் இளம் வயதிலேயே மரணம் அடைந்துவிடுவார்.

தாய் இறக்க மாட்டார் ஆனால் தாயின் மனநிலை பாதிப்பை ஏற்படுத்தும் அல்லது தாய் சம்பந்தப்பட்ட ஜாதகருக்காக மிகுந்த போராட்டத்தை அனுபவிக்க வேண்டிய ஒரு சூழலை ஏற்படுத்திவிடுவார்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

இனிய தொடக்கம்


வணக்கம்!
          பலர் சிக்குவது கடனில் தான் சிக்குகின்றனர். கடனை போக்குவதற்க்கு என்று நிறைய பரிகாரத்தை பரிந்துரை செய்து இருக்கின்றனர். பரிகாரம் என்பதை விட இதனை சரி செய்யும் விதத்தில் தான் நம்முடைய திறமையே இருக்கின்றது.

கடன் வாங்காமல் யாரும் இருக்கபோவதில்லை. கடனை வாங்க தான் அரசாங்கமே பரிந்துரை செய்ய வைக்கும். கடன் வாங்கி உங்களை சிக்க வைக்க இதனை செய்கின்றனர். ஒரு அடிமை போலவே உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

கடன் வாங்கிவிட்டு அதனை சரி செய்யமுடியாமல் சிக்கி தவிக்கும் நபர்களுக்கு என்று தனியாக ஒரு பொது பரிகாரத்தை செய்யுங்கள் என்று நண்பர்கள் பரிந்துரை செய்தனர். இதனை நாமும் நினைத்துக்கொண்டு இருந்த வேளையில் இதனை இரு நண்பர்கள் சொல்லி இருந்தார்கள்.

ஒவ்வொரு தடவையும் நாம் நவ அம்மன் யாகத்தை முதன்மையாக செய்து வருகிறோம். வருகின்ற நாட்களில் கடன் பிரச்சினை தீர்வதற்க்கு என்று சிறப்பு யாகத்தை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

கடன் தீர்வதற்க்கு அதனால் வரும் பிரச்சினை தீர்வதற்க்கு என்று அடுத்து வரும் சிறப்பு யாகம் நடத்த இருக்கிறோம். இதனை முன்கூட்டியே உங்களிடம் சொல்லுவதற்க்கு காரணம் நீங்கள் தயாராக இருக்கலாம் என்பதற்காக இதனை தற்பொழுது சொல்லுகிறேன். உடனே கிடையாது கொஞ்ச நாட்களுக்கு பிறகு இதனை செய்வோம்.

ஜாதக கதம்பத்திற்க்கு வரும் அனைவரும் பயன்பெறவேண்டும் என்பது போலவே அந்த பூஜைகள் இருக்கும். அனைவரும் தங்களுக்குள்ள கடன் தீர்வது பாேலவே அது இருக்கும்.

அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு