வணக்கம்!
இரண்டு நாட்களாக வேலை அதிகம் இருந்த காரணத்தால் உங்களுக்கு பதிவை தரமுடியவில்லை. வெற்றி அடைந்த ஒவ்வொருரின் குணத்தையும் பார்க்கும்பொழுது அவர்களுக்கு அதிகமான பொறுமை இருந்து இருக்கின்றது. நீண்ட நாட்கள் இதற்காகவே காத்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.
நமது ஆத்மாவில் படிந்துள்ள விசயத்தை தான் நாம் எதிர்நோக்கி செல்கிறோம் அப்படி ஆத்மாவில் படிந்த ஒரு விசயத்தை எதிர்நோக்கும்பொழுது பொறுமையாக அதனை நாம் கையாண்டால் கண்டிப்பாக நமக்கு வெற்றி கிடைத்துவிடும்.
ஒருவருக்கு ஏதோ ஒரு துறையில் முன்னேற்றம் ஏற்படவேண்டும் என்று நினைத்து அதற்கு வேலை செய்துக்கொண்டு இருக்கிறார் என்றால் அந்த துறையில் அவருக்கு பொறுமை இருந்திருந்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.
பூர்வபுண்ணியம் இந்த துறை என்பதை உங்களுக்கு கொடுத்துவிட்டது. பெற்ற துறையில் இருந்து வெற்றி பெறுவதற்க்கு பாக்கியஸ்தானம் கொடுக்கவேண்டும். பொறுமையாக அதனை நாம் பிடித்துக்கொண்டே இருந்திருந்தால் கண்டிப்பாக நமக்கு வெற்றி கிடைத்துவிடும்.
ஒரு சிலர் வயது அதிகம் இருந்தால் கூட அவர்களால் பொறுமையாக இருக்கமுடிவதில்லை. ஏதாவது அவசரப்பட்டு செய்து சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள் இதுவும் அவர்களுக்கு கொடுத்த பாக்கியம் தான் என்று சொல்லவேண்டும்.
ஒரு சிலருக்கு பாக்கியஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கும் அந்த நபர்கள் பொறுமையிழந்து வெற்றி பெறுவதில்லை. எடுத்தோம் கவிழ்த்தோம் என்பது போல் நடப்பார்கள்.
உங்களின் ஜாதகத்தில் எந்த கிரகம் அமர்ந்திருந்தாலும் நீங்கள் கொஞ்சம் பொறுமையாக அமைதி காக்கும்பொழுது உங்களுக்கு கண்டிப்பாக வெற்றி கிடைத்துவிடும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு