Followers

Tuesday, March 31, 2020

அம்மன் பூஜை & பங்குனி உத்திரம்


வணக்கம்!
          அம்மன் பூஜை கொரோனாவால் தள்ளிவைக்கவில்லை திட்டமிட்டபடியே நடத்தப்படும். என்னால் முடிந்தவரை என்ன கிடைக்கின்றதோ அதனை வைத்து பூஜையை நடத்திவிடுகிறேன். கொராேனா தடுப்பு என்ற முதல் கோரிக்கையை அம்மனிடம் வைத்துவிடுகிறேன். 

அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்திவைக்கலாம். கொரோனாவால் சம்பள பிரச்சினை மற்றும் பணப்பிரச்சினையில் இருக்கும் நண்பர்கள் அனுப்பவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அம்மன் பூஜை முடிந்த பிறகு பங்குனி உத்திரம் வருகின்றது. வருடந்தோறும் பங்குனி உத்திரம் அன்று பழனிக்கு சென்றுவிடுவது உண்டு. இந்த வருடம் கொரோனாவால் செல்லமுடியாது. நீங்களும் எந்த ஒரு முருகன் கோவிலுக்கும் செல்லமுடியாத ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள் என்று தெரிகின்றது. 

வரும் பங்குனி உத்திரம் அன்று முருகனுக்காக சிறப்பு பூஜை செய்ய முடிவு எடுத்துள்ளேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் பங்குனி உத்திரம் 6-4-2020  திங்கள் கிழமைக்குள் தங்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்தை எனக்கு அனுப்பி வைக்கலாம். பங்குனி உத்திர பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வைக்கலாம் பணம் செலுத்தமுடியாதவர்களும் தங்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்தை எனக்கு அனுப்பி வைக்குமாறு அன்போடு கேட்டுகு்கொள்கிறேன்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, March 30, 2020

காவல் தெய்வம்


வணக்கம்!
     ஒவ்வொரு ஊரிலும் காவல் தெய்வங்கள் என்பது இருக்கும். காவல் தெய்வங்கள் பெரும்பாலும் அய்யனார் வீரனார் முன்னாேடியான் கருப்பசாமி மற்றும் மாரியம்மன் என்று இருக்கும். இந்த தெய்வங்கள் அந்த ஊரை எல்லாவற்றிலும் இருந்து காப்பாற்றி அந்த மக்களை வாழவைக்கும். ஒரு ஊரில் எந்த ஒரு தீயசக்திகளும் நுழையாமல் அந்த ஊரை காப்பாற்றும். 

ஒரு ஊரில் கொள்ளை நோய் வந்தாலும் அந்த நோயில் இருந்து அந்த மக்களை காப்பாற்றும். காவல் தெய்வங்கள் ஒரு ஊரில் இருந்து அந்த மக்களை காப்பாற்றுவதால் அந்த ஊர் மக்கள் ஒரு வருடத்திற்க்கு ஒரு முறை அந்த காவல்தெய்வங்களுக்கு திருவிழா எடுத்து கொண்டாடுவார்கள்.

இன்றைய காலத்தில் பிழைப்பை தேடி நகர்புறங்களுக்கு செல்லும் மக்கள் ஒரு ஊரில் சென்று வசிக்கலாம் அந்த ஊரின் காலதெய்வம் என்ன என்பதை கேட்டறிந்து அந்த காவல் தெய்வத்தை வணங்கி வந்தால் அந்த ஊரில் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் வாழலாம். சம்பந்தப்பட்ட ஊரில் நல்ல பாதுகாப்போடும் நல்ல வசதியோடும் வாழலாம்.

நாங்கள் வெளியூர் என்று ஏதாவது ஒரு வேலை நடக்கவேண்டும் என்றாலும் அந்த ஊரின் காவல்தெய்வத்தை வணங்கிவிட்டு அதன்பிறகு வேலை தொடங்குவோம் அப்பொழுது அந்த ஊரில் அனைத்து வேலையும் எளிதாக எங்களுக்கு முடிந்துவிடும்.

இதனைப்பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறேன். அதனை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, March 29, 2020

சனிக்கு பரிகாரம் செவ்வாய்


வணக்கம்!
             பரிகாரம் செய்வதில் இரண்டு வகை இருக்கின்றது. ஒன்று சம்பந்தப்பட்ட கிரகத்தை சாந்தப்படுத்தி அந்த கிரகத்தின் வழியாக நாம் பயன் அடைந்துக்கொள்வது. சாந்தப்படுத்தப்பட்ட கிரகம் சம்பந்தப்பட்ட நபர்க்கு நல்லது செய்யும் அதனை சாந்தப்படுத்தியதால் அது நல்லது செய்யும் மற்றோன்று சம்பந்தபட்ட கிரகத்தை எதிர்த்து வேலை செய்து அதனின் கோபத்தை குறைப்பது இது ஒரு வழிமுறையாகும்.

செவ்வாய்கிரகம் மகர இராசியில் உச்சம் பெறுகின்றது. சனிக்கிரகம் மேஷ இராசியில் நீசம் பெறுகின்றது. செவ்வாய் பலம் வாய்ந்த தன்மையால் சனியின் கோபத்தை குறைக்கும் ஆற்றல் உண்டு. சனிக்கிரகம் உங்களுக்கு பிரச்சினை கொடுக்கும் காலத்தில் குறிப்பாக ஏழரைச்சனி காலம் மற்றும் அஷ்டமசனி இன்னும் பிற காலங்களில் சனிக்கு பரிகாரமாக நீங்கள் செவ்வாய்கிரகத்தை வணங்கி சனியின் வேகத்தை குறைக்கலாம்.

நான் பலருக்கு ஏழரைச்சனி மற்றும் அஷ்டமசனியின் காலத்தில் பழனி முருகன் கோவிலுக்கு சென்று வணங்கி வாருங்கள் உங்களுக்கு நல்லது நடக்கும் என்று சொல்லிருக்கிறேன். பலர் அங்கு சென்று வணங்கி சனியின் பிடியில் இருந்து மீண்டு வந்து இருக்கின்றனர். 

சென்னை திருவான்மீயூரில் இருக்கும் பாம்பன் சுவாமிகள் ஒரு முருகர் பக்தர். அவருக்கு ஒரு முறை கால் முறிவு ஏற்பட்டது. கால் முறிவு ஏற்பட்டபொழுது அவர் முருகனை வணங்கி அந்த கால் நல்ல முறையில் சரியானதாக தகவல் இருக்கின்றது. சென்னை திருவான்மீயூரில் இருக்கும் பாம்பன் சுவாமிகள் ஆலயம் சென்று பார்த்தால் அது நிகழ்வாக இன்றும் கொண்டாடிவருகின்றனர்.

பல முருக பக்தர்களுக்கு சனியின் பாதிப்பில் இருந்து முருகன் காப்பாற்றி இருக்கின்றார். நீங்களும் சனியின் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்க்கு செவ்வாயின் கடவுளான முருகனை வணங்கி வரலாம். உங்களுக்கு அருகில் இருக்கும் முருகனின் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வந்தாலும் சனியின் பாதிப்பு குறையும்.

இந்த தகவலைப்பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறேன். வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, March 28, 2020

ஆரா பயிற்சி செய்வது எப்படி?



வணக்கம்!
ஆரா பயிற்சி செய்வது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம். முதலில் ஆரா பயிற்சி செய்வதின் நோக்கம் எதற்க்கு என்பதை தீர்மானிக்கவேண்டும். ஆரா பயிற்சி என்னுடைய வாழ்க்கைக்கு உதவும் அதனால் செய்கிறேன் அல்லது என்னுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்க்கு செய்கிறேன் என்று செய்யகூடாது. ஒரு சிலர் தங்களின் நோய் தீரவேண்டும் என்பதற்க்காக செய்கிறேன் என்பார்கள்.
நமது ஞானிகள் பலருக்கு நோய் இருந்து இருக்கின்றது. அவர்களின் ஆரா நன்றாக இல்லாமல் இல்லை ஆனால் அவர்கள் அதனை குணப்படுத்தவேண்டும் என்ற முனைப்பை காட்டவில்லை. அவர்களின் அனைவரும் அவர்களின் ஆன்மீகபாதைக்கு மிக சிறந்த ஒன்றாக இருக்கவேண்டும் என்பதற்க்காக இந்த பயிற்சியை மேற்க்கொண்டனர். நீங்களும் ஆன்மீகத்தில் ஒரு நல்ல நிலைக்கு செல்லவேண்டும் என்ற நினைப்போடு செயல்பட்டால் உங்களுக்கும் இந்த ஆரா பயிற்சி நன்மை பயக்கும்.
ஆரா பயிற்சி செய்வதற்க்கு முன்பு உங்களின் மூன்றாவது கண்ணிற்க்கும் ஆராவிற்க்கும் தான் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. ஆராவை பலப்படுத்த வேண்டும் என்றால் உங்களின் மூன்றாவது கண்ணிற்க்கு உள்ள பயிற்சியை மேற்க்கொண்டால் கண்டிப்பாக உங்களின் ஆரா பலப்படும். உங்களின் கர்மாவிற்க்கு இந்த ஆராவிற்க்கும் தொடர்பு இருக்கின்றது.

ஆராவை பயிற்சி செய்வது எப்படி என்பதை பற்றி வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, March 27, 2020

பாவத்தை போக்கும் மரம்


வணக்கம்!
கோவிலில் தல விருட்ஷம் என்பது மிக முக்கியமான ஒன்று. உருவவழிபாடு உருவாகாத காலத்தில் நம் முன்னோர்கள் மரத்தை வைத்து தான் வழிபாட்டை செய்தார்கள். மரம் என்பது கடவுள் என்று அதனை வணங்கி வாழ்ந்தனர். இன்றைய காலத்திலும் கோவில்களில் தலவிருட்ஷம் என்பது ஒன்று இருக்கின்றது. இதனையும் நாம் இன்று காலத்திலும் வணங்கி வருகிறோம்.

நமது அம்மன் அங்காளபரமேஸ்வரியை நாம் வணங்குவது கூட மரத்தில் வைத்து தான் வணங்கிறோம். இன்றைய காலத்திலும் இந்த நடைமுறை பல இடங்களில் இருப்பதை நாம் பார்க்கமுடியும். கிராமபுறங்களில் இது அதிகமாகவே இருக்கின்றது. நகர்புறங்களில் தற்சமயம் இராகு கேதுவிற்க்கு மரத்தை வைத்து அதில் ஒரு நாகசிலையை வைத்து வணங்கி வருகின்றனர்.

வீட்டில் துளசி செடியை வைத்து வணங்கும் நடைமுறை கூட நமது பாவத்தை அந்த செடி வாங்கிக்கொள்ளும் என்ற காரணத்தால் தான் வீட்டில் வைத்து வணங்குகின்றனர். மாரியம்மனை எல்லாம் வேப்பம்மரத்தில் வைத்து வணங்குவது கூட அந்த மரத்திற்க்கு அந்தளவுக்கு சக்தியை கொடுக்கும் ஆற்றல் இருப்பதால் அதனை வைத்து வணங்குகின்றனர்.

சீன மற்றும் திபெத்தில் தாவோ என்ற மதத்தில் உள்ள ஞானிகள் தங்களின் ஞான கருத்தை ஒரு சீடர் கிடைக்கவில்லை என்றால் மரத்தில் சொல்லிவிட்டு செல்வார்கள் அதன்பிறகு ஞானத்தை தேடி வரும் நபர் அந்த மரத்திற்க்கு அருகில் செல்லும் பொழுது அவர்க்கு அந்த கருத்தை மரம் கடத்திக்கொடுக்கும். மரத்தை நாம் வணங்கும்பொழுது நமக்கும் ஞான கருத்தை கொடுத்து நமது பாவத்தையும் போக்குகின்றது.

இதனைப்பற்றி ஒரு வீடியோ பதிவிட்டுருக்கிறேன் அதனை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.



அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, March 26, 2020

சனி கர்மா & பரிகாரம்


வணக்கம்!
                சனிக்கிரகம் ஒருவருடைய ஜாதகத்தில் எந்த வீட்டில் அமர்ந்திருந்தாலும் பரவாயில்லை அந்த சனிக்கிரகம் தன்னுடைய கர்மாவை எப்படி கொடுக்கின்றது என்பதை அவரின் அனுபவத்தை வைத்தே நாம் தெரிந்துக்கொள்ளலாம். சனிக்கிரகம் கர்மா கொடுக்கின்றது என்றால் அவர் கூட்டு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்களாக இருக்கவேண்டும் அல்லது அவரின் குடும்பத்தில் எட்டு பேருக்கு மேல் இருக்கவேண்டும் அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறக்க வைப்பார். 

சனிக்கிரகம் இளமையிலேயே நரமுடியை உருவாக்கிவிடுவார். தற்சமயம் அனைவருக்கும் தலைமுடி நரை ஏற்பட்டாலும் இவரின் உடலை பார்க்கும்பொழுது வயதானவர் போல் தோற்றத்தை கொடுத்துவிடும். இவரின் குடும்பத்தில் அதிகமான விதவைகள் இருப்பதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது. பெண்களுக்கு முன்பு அந்த வீட்டில் ஆண்கள் இறந்துவிடுவார்கள்.

சனிக்கிரகம் கர்மா கிரகம் என்பதால் இவர்க்கு வேலை என்பது அந்தளவுக்கு எளிதில் கிடைத்துவிடாது. வேலை கிடைத்தாலும் சம்பளம் குறைவாக கிடைக்கும் ஒரு சில மாதத்தில் சம்பளம் கிடைக்காது. இவர் சென்ற நேரம் அந்த கம்பெனி திவாலாகிவிடும். கம்பெனி அதிக கடனால் திவலாகிவிடுவதும் உண்டு.

சனிகிரகம் தாழ்த்தப்பட்ட சாதியை குறிக்கும் கிரகம் என்பதால் இவர்க்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிரச்சினை இருந்துக்கொண்டே இருக்கும் அல்லது தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இவர் வாழ்வது போலவே இவர்களின் வீடு இருக்கும். குப்பை கிடங்கில் வீடு அமைந்தது போன்று இருக்கும். இவர்கள் தாழ்த்தப்பட்டவர்களோடு வாழும் வாழ்க்கை ஏற்படும்.

சனிக்கிரகத்தின் கர்மா மற்றும் அதற்குள்ள பரிகாரம் என்ன என்பதைப்பற்றி ஒரு வீடியோ எடுத்து இருக்கிறேன். அதனைப்பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

இராகுவிற்க்கு பரிகாரம் சுக்கிரன்


வணக்கம்!
                கொரோனாவால் மக்கள் இராகு பக்கம் கேள்வி திருப்புகின்றனர். இராகுவால் தான் பெரிய பிரச்சினை வருகின்றது இதனை சரி செய்வது எப்படி மற்றும் இராகுகிரகத்தை எந்த கிரகத்தால் கட்டுப்படுத்த முடியும் என்று கேட்டனர். இராகுவின் நட்சத்திரமாக இருப்பது திருவாதிரை சுவாதி மற்றும் சதயம் நட்சத்திரம். திருவாதிரை மிதுன இராசியில் வருகின்றது. மிதுன இராசியில் புதனின் வீடு சுவாதி துலாம் இராசியில் வருகின்றது. துலாம் சுக்கிரனின் வீடு மற்றும் சதய நட்சத்திரம் கும்பத்தில் வருகின்றது. கும்பம் சனியின் வீடு. 

மூன்று இராசியில் துலாம் இராசியில் இராகுவின் வீரியம் குறைவாக இருக்கும். மற்ற இராசிகளை விட துலாம் இராசியில் இராகுவின் வீரியம் குறைவாக இருப்பதற்க்கு காரணம் அந்த இராசியின் அதிபதி சுக்கிரனால் மட்டுமே இது சாத்தியம். அசூரகுருவின் அருளால் இராகுவின் வீரியம் குறைந்துவிடுகின்றது. சுவாதி நட்சத்திரக்காரர்கள் மற்ற இராகுவின் நட்சத்திரத்தை விட நன்றாக வாழ்க்கின்றனர் என்றதால் அதற்கு சுக்கிரன் காரணமாக இருக்கின்றார்.

இராகுவின் வீரியம் சனி மற்றும் செவ்வாய் கிரகத்தால் வீரியம் குறையும் என்றால் அது அந்தளவுக்கு சாத்தியப்பட்டு வராது என்றே சொல்லவேண்டும். குரு கிரகம் நல்ல நிலையில் வரும்பொழுது இராகுவின் வீரியம் குறைய தொடங்கும் என்றாலும் அதுவும் அனுபவத்தில் ஏற்றுக்கொள்ளமுடியாதபடியாக தான் இருக்கின்றது.

இராகுவிற்க்கு துர்க்கை மற்றும் நாகாத்தமன் வழிபாடு எல்லாம் பெண் தெய்வங்களை வைத்தே வழிபாடு செய்யப்படுகின்றது. சுக்கிரனின் காரத்துவம் உடைய பெண் தெய்வங்களை வைத்து வணங்கும்பொழுது மட்டுமே இராகுவின் வீரியம் குறையும் மற்ற எந்த வழிபாடும் அந்தளவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதபடியாகவே இருக்கும்.

இதனைப்பற்றி ஒரு வீடியோ பதிவை தந்திருக்கிறேன். இதனை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, March 25, 2020

கொரோனா (Corona Virus)


வணக்கம்!
         கொரோனா உலகயே அச்சுறுத்தி வருகின்றது. கொரோனா தாக்குதலால் பலர் உயிர் இறந்து இருக்கின்றனர். கொரோனா தாக்குதலில் இருந்து மீண்டு வருவதற்க்கு அரசாங்கம் சொல்லிருக்கும் வழிமுறைகளை பின்பற்றி வாருங்கள் அதோடு ஆன்மீக வழியிலும் நீங்கள் வீட்டிலிருந்து வழிபாடு செய்து வாருங்கள். ஆன்மீக வழியில் பல மந்திரங்களை தற்பொழுது அனைத்து ஆன்மீகவாதியும் சொல்லிவருகின்றனர் அதனை அனைத்தையும் உங்களால் சொல்லமுடியாது. உங்களுக்கு தெரிந்த ஏதோ ஒரு வழிபாட்டை மட்டும் சொல்லி வரும்பொழுது உங்களுக்கு நல்லது நடக்கும்.

புதிய மந்திரங்களை சொல்லி வந்தால் அது உரு ஏற்றி வேலை செய்வதற்க்கு பல நாட்கள் சென்றுவிடும். ஒரு மந்திரம் ஒரு தடவையில் வேலை செய்யாது. வேலை செய்வதற்க்கு நீண்ட நாள்கள் எடுத்துக்கொள்ளும் என்பதால் புதிய மந்திரத்தை நீங்கள் எடுக்கவேண்டாம். உங்களுக்கு தெரிந்த மந்திரத்தை உரு ஏற்றினால் நல்லது. 

ஆன்மீக வழியில் நீண்ட நாள்களாக இருந்தால் நீங்கள் ஏதாே ஒரு மந்திரத்தை மட்டும் சொல்லி வந்து இருப்பீர்கள். அதனையே நீங்கள் இந்த நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். காயத்திரி மந்திரத்தை உரு ஏற்றி வந்திருந்தாலும் அதனையே நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

உங்களுக்கு எந்த ஒரு மந்திரமும் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை உங்களின் பூஜையறையில் சிறிது நேரம் உங்களின் மனதை விட்டு வேண்டிக்கொண்டாலே போதும். உங்களுக்கு நல்லது நடக்க ஆரம்பித்துவிடும். தற்பொழுது உள்ள சூழ்நிலையில் உங்களின் மனம் நல்ல ஆற்றலோடு இருக்கும்பொழுது மட்டுமே உங்களால் எளிதில் அனைத்தையும் எதிர்க்கொள்ளமுடியும். தற்சமயம் கோவில்களும் மூடி இருப்பதால் நீங்களே உங்களின் வீட்டின் பூஜையறையை நன்றாக பயன்படுத்திக்கொள்ளலாம்.


இதனைப்பற்றி வீடியோ பதிவை ஒன்றை வெளியிட்டு இருக்கிறேன். அதனை பார்த்த தெரிந்துக்கொள்ளுங்கள்.


அம்மன் பூஜை வருகின்ற 5 ஆம் தேதிக்குள் நடத்தப்படும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்களுக்களின் முன் ஏற்பாட்டிற்க்காக தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, March 23, 2020

அமாவாசை சிறப்பு பூஜை


வணக்கம்!
           கொரோனா தடுப்பு சிறப்பு யாகம் நேற்று சிறப்பாக செய்யபட்டது. யாகத்திற்க்காக தங்களின் குடும்பத்தினர்களின் பெயர்களை அனுப்பிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. கண்டிப்பாக உங்களுக்கு மிகப்பெரிய ஆற்றலை கொடுத்து இதனை  செய்து இருக்கிறேன். நம்முடைய நண்பர்கள் அனைவரும் இதில் இருந்து எளிதில் தப்பிக்கலாம். அரசாங்கம் சொல்லும் வழிமுறைகளையும் பின்பற்றி வாருங்கள்.

அமாவாசை இன்று பிற்பகலில் இருந்து வர இருப்பதால் இன்று மாலை நேரத்தில் சிறப்பு பூஜை நடத்த இருக்கின்றேன். இது முற்றிலும் இலவசம். அனைவரின் பெயரும் மற்றும் நட்சத்திரமும் என்னிடம் இருக்கின்றது அனுப்பதாவர்கள் வேண்டுமானால் அனுப்பி வைக்கலாம்.

தேவை ஏற்பட்டால் நவ சண்டி யாகமும் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்த இருக்கிறோம். அச்சம் இன்றி அம்மனின் அருளால் நீங்கள் நன்றாக வாழலாம்.  உங்களின் நலனுக்காக அனைத்தும் இலவசமாகவே நடத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களின் வீட்டில் இருந்து அம்மனை வேண்டிக்கொள்ளுங்கள். பல வழிபாட்டு முறைகள் உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நம்புகிறேன். உங்களுக்கு எது பிடித்த வழிபாடோ அதனை நீங்கள் தினமும் செய்து வாருங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, March 20, 2020

கொரோனா தடுப்பு சிறப்பு யாகம்


வணக்கம்!
           உலகம் எங்கும் கொரோனா வைரசு தாக்குதலால் பல உயிர்கள் பலி வாங்கி உள்ளது. பல பேர்கள் இதற்கு பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். பல நாடுகளிலும் உள்ள மக்களை தாக்கிக்கொண்டு இருக்கின்றது. உலக நாடுகளில் உள்ள மக்கள் அனைவரும் அச்சுறுத்தலில் இருக்கின்றனர். இதற்கு தீர்வு அரசாங்கம் சொல்லுவதை கேளுங்கள் அதோடு ஆன்மீகத்தில் வழியலும் நாம் இதற்கு ஏதோ ஒன்றை செய்யவேண்டும் என்று தோன்றியது.

நமது நண்பர்களே என்னிடம் இதனைப்பற்றி கேட்டனர். இதற்கு தீர்வு எப்பொழுது வரும் என்று பல நண்பர்கள் கேட்டனர். என்னுடைய பதிலை அவர்களுக்கு கொடுத்து இருக்கிறேன். நம்முடைய ஆன்மீக சக்தியை வைத்து நாமும் ஏதோ செய்யவேண்டும் என்ற நினைப்பு இருந்தது. வரும் ஞாயிறுக்கிழமை அன்று சிவராத்திரி மற்றும் அன்று இராகுவின் நட்சத்திரமான சதயமும் வருகின்றது.

இன்றைய நாளில் கொரோனா தடை சிறப்பு யாகம் செய்ய இருக்கிறோம். நமது நண்பர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்க்க்கும் மற்றும் உலக மக்களுக்காக இந்த யாகம் நடைபெற இருக்கின்றது. இதில் நமது ஜாதககதம்பத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் நட்சத்திரத்தை அனுப்பி வைக்கவும். இதனை இலவசமாக தான் செய்ய இருக்கிறேன். இதில் விருப்பட்டு காணிக்கை செலுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் அனுப்பி வைக்கலாம். யாகம் பெரியளவில் நடைபெறுவதற்க்கு அது வழி செய்யும் என்பதால் மட்டுமே சொல்லுகிறேன். உடனே நமது நண்பர்கள் எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு தங்களை பற்றி விபரத்தை அனுப்பி வைக்கவும்.

நாம் பெயர் அனுப்பினால் பணம் அனுப்பவேண்டும் நாம் பெயரை அனுப்பவேண்டாம் என்று இருக்கவேண்டாம். அனைவரும் இதில் பங்குக்கொள்ளவேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். பணம் அனுப்ப முடிந்தவர்கள் அனுப்பலாம் மற்றவர்கள் தங்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்தை உடனே அனுப்பி வையுங்கள். ஞாயிற்றுகிழமை இரவு யாகம் நடைபெறும்.

யாகம் (22.03.2020) ஞாயிற்றுகிழமை இரவு நடைபெறும்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, March 18, 2020

எட்டில் லக்கினாதிபதி தெய்வ உபாசாணை


வணக்கம்!
               எட்டாவது வீட்டில் லக்கினாதிபதி அமர்ந்தால் அந்த நபர் நிறைய கஷ்டபட வாய்ப்பு இருக்கின்றது. உடல் நிலையில் அடிக்கடி தெம்பு குறைவதற்க்கும் வாய்ப்பு இருக்கின்றது. உடலில் சக்தி இல்லாமல் கஷ்டபட வாய்ப்பு இருக்கின்றது. எந்த ஒரு வேலையை எடுத்தாலும் அவர் நிறைய கஷ்டப்பட்டு அதில் இருந்து முன்னேற்றம் காண்பதற்க்கு வழி இருக்கின்றது. 

லக்கினாதிபதி எட்டாவது வீட்டில் இருக்கும்பொழுது அவர்க்கு ஆயுளும் குறைவாக இருக்கும். இளைமையில் திருமணமும் நடைபெறுதற்க்கு வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும். இப்படிப்ட்டவர்கள் மயான கொள்ளைக்கு செல்லும் அம்மனை பார்த்து வணங்கினால் அவர்களுக்கு லக்கினாதிபதி வலுப்பெற்று நல்ல வாழ்க்கையை வாழமுடியும். 

உதாரணத்திற்க்கு மயானத்திற்க்கு செல்லும் அங்காளபரமேஸ்வரி மற்றம் சுடலை மாடன் போன்ற தெய்வங்களை உபாசாணை செய்வதன் வழியாக அவர்கள் நல்ல வாழ்க்கையை வாழமுடியும். நான் தெய்வத்தினை உபாசாணை செய்வது எல்லாம் முடியாத ஒன்று எனக்கு வேறு வழி இருந்தால் அதனைப்பற்றி சொல்லுங்கள் என்றால் அதற்கும் வழி இருக்கின்றது. 

உங்களின் ஊரில் அல்லது வெளியூரில் இறந்தவர்களுக்கு அதுவும் ஏழை மக்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு ஈமசடங்கு செய்வதற்க்கு உள்ள பணத்தை உதவியாக கொடுக்கலாம். நீங்கள் இறப்பிற்க்கு உதவி செய்வதன் வழியாக உங்களின் லக்கினாதிபதி பலப்பட்டு உங்களுக்கு நல்ல நிலையில் செயல்பட ஆரம்பிக்கும். பணஉதவி செய்யமுடியவில்லை என்றாலும் உங்களின் உடல் உழைப்பை இறப்பிற்க்கு போடும்பொழுது உங்களின் லக்கினாதிபதி பலம்பெறும்.

இதனைப்பற்றி ஒரு வீடியோ பதிவை போட்டு இருக்கிறேன். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.

https://youtu.be/oQCmuHJSi04


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, March 12, 2020

மனை சாஸ்திரம்


வணக்கம்!
          ஒவ்வொருவரின் கனவு என்பது ஒரு வீடு கட்டவேண்டும் அல்லது வீட்டை வாங்கவேண்டும் என்பதில் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்து வீட்டை வாங்கினாலோ அல்லது வீட்டை கட்டினாலோ அதில் பல வாஸ்து குறைகளை இந்த உலகம் சொல்லிவிடுகின்றது.

ஒரு வீட்டை கட்டும்பொழுது அதில் வாஸ்து குறைபாடு இருப்பது ஒன்றும் பெரிய விசயம் கிடையாது. ஒரு வீடு கட்ட மனையை தேர்வு செய்யும்பொழுது மட்டுமே ஒருவர் மிகுந்த கவனத்தோடு செயல்படவேண்டும். மனையை நன்றாக பார்க்கும் ஒருவரை அழைத்து வந்து அந்த இடத்தை காண்பிக்கவேண்டும். மனையை தேர்ந்தெடுக்கும் நபர்கள் உங்களிடம் இல்லை என்றால் நீங்கள் வாங்கும் மனையின் அருகில் இருக்கும் நபர்களிடம் அந்த மனையை பற்றி விசாரிக்கவேண்டும்.

ஒரு மனை அதன் காரத்துவத்தை நன்றாக வெளிப்படுத்தும். உதாரணத்திற்க்கு ஒரு மனையில் அதிகமாக பெண்கள் தான் வசிப்பது போல இருக்கும் ஒரு மனையில் ஆண்கள் வசிப்பது போன்ற நிலை இருக்கும். ஒரு சில மனையில் வம்பு வழக்கு ஏற்படும். ஒரு சில மனையில் கொலை கூட விழுவதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது. இது அனைத்தும் அந்த மனையின் காரத்துவத்தை வெளிப்படுத்தும் செயல்.

மனையைப்பற்றி நிறைய தகவல்களை இன்றைய வீடியோவில் பேசியிருக்கின்றேன். அதனை கீழே உள்ள லிங்கில் சென்று பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

 சேனல் பெயர் rajeshsubbu


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, March 9, 2020

ஆலய தரிசனம்


வணக்கம்!
         சனிக்கிழமை அன்று திருச்செந்தூர் சென்றுருந்தேன். வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் பயணம் திட்டம் போட்டு விடியற்காலையில் கிழப்பினேன். திருச்செந்தூர் மதியம் 12 மணியளவில் சென்று அடைந்தேன். கடலில் குளித்துவிட்டு நாழி கிணற்றில் குளித்துவிட்டு மாலை தரிசனத்திற்க்கு சென்றேன். திருச்செந்தூர் கோவிலை பற்றி பழைய பதிவில் சொல்லிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

திருச்செந்தூர் முருகன் நல்ல சக்தி வாய்ந்த முருகன் அதனை வைத்து நம்ம மக்கள் சம்பாதிக்கும் வழி சுத்தமாகவே எனக்கு பிடிக்கவில்லை. எப்படி சென்றாலும் மக்களிடம் இருந்து எப்படி சம்பாதிக்கலாம் என்பதில் தான் கவனத்தை நிர்வாகம் திட்டம் தீட்டுகின்றனர். முருகனை தரிசனம் செய்யவேண்டும் என்றால் நீங்கள் பணம் இல்லாமல் அவ்வளவு எளிதில் பார்த்துவிடமுடியாது.

இங்கு சொல்லுவதற்க்கு காரணம் இதனை படிக்கும் யாராவது சம்பந்தப்பட்ட நிர்வாகத்தில் இருக்கலாம் அவர்கள் இதனை கருத்தில்கொண்டு வசூல் செய்வதில் கொஞ்சம் குறைக்கலாம். ஏதோ ஒரு வழியை மட்டும் வைத்து அதில் சம்பாதித்துக்கொள்ளலாம் மற்றயவை அப்படியே விட்டுவிட்டால் எளிதில் மக்கள் பார்ப்பார்கள். கோவிலில் கட்டணத்தை வைத்தாலும் அதிலும் நிறைய குளறுபடி இருக்கின்றது.

வெளியில் நின்றுக்கொண்டு நிறைய பேர் நீங்கள் எளிதில் தரிசனம் செய்யலாம் இவ்வளவு பணம் கொடுங்கள் என்று நிறைய பேர் கேட்கின்றார்கள். இதனை எல்லாம் தவிர்த்தால் நன்றாகவே இருக்குமே என்று நான் நினைக்கிறேன். இந்த மாதிரியான கோவில்கள் எல்லாம் இருப்பது ஒன்றுமே இல்லாத மக்கள் இதனை பார்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் அந்த காலத்தில் உருவாக்கின்றார்கள்.

நான் செல்லும் கோவில்களைப்பற்றி நான் வெளியில் சொல்லுவது உண்டு. என்னுடைய கண்ணிற்க்கு இது எல்லாம் தவறாகபட்டது அதனை உங்களிடம் பகிர்ந்துக்கொண்டேன். திருநெல்வேலி வடி திருச்செந்தூர் சாலை படுமோசமான ஒரு சாலையாக இருக்கின்றது. இதனை சரி செய்யவும் முடிந்தவரை உங்களுக்கு தெரிந்தவர்களிடம் இதனைப்பற்றி சொல்லுங்கள். உயர் அதிகாரிகள் நினைத்தால் இது நடக்கும். திருச்செந்தூர் சென்றததால் வீடியோ பதிவை போடமுடியவில்லை இன்று மாலை வீடியோ பதிவு வந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, March 1, 2020

அம்மன் பூஜை


வணக்கம்!
                       இன்று அம்மன் பூஜை நடைபெறுகின்றது. அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள். 
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள். 
சிங்கபூரை சேர்ந்த நண்பர் அவர்கள். 

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள். 
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள். 
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள். 

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள். 
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள். 
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள். 

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள். 
பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள். 
மயிலாடுதுறையை சேர்ந்த யுவராஜ் அவர்கள். 

விழுப்புரத்தை சேர்ந்த திரு அசோக்குமார் அவர்கள். 
மதுரையை சேர்ந்த திரு முருகன் அவர்கள். 
வழக்கம்போல்                           
திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள். 

அம்மன் பூஜை நடைபெறுவதால் உங்களின் வேண்டுதல்களை வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு