வணக்கம்!
ஒவ்வொருவரின் வாழ்வில் நிறைய கஷ்டங்களை கிரகங்கள் தந்தாலும் ஒரு சில காலக்கட்டங்களில் கிரகங்கள் கண்டிப்பாக நல்லதை கொண்டு வந்து சேர்த்துவிடும். இது பலரின் வாழ்க்கையில் நடந்து இருக்கின்றது.
ஒரு சில சாமி கும்பிடாதவர்கள் எல்லாம் நல்ல நிலையில் இருக்கின்றனர். நான் தினமும் சாமி கும்பிட்டுக்கொண்டு இருக்கிறேன் எனக்கு நல்லது நடக்க மாட்டேன்கிறது என்று புழும்பும் நபர்களும் இருக்கதான் செய்கின்றனர்.
சாமி கும்பிடுகின்றவர் சாமி கும்பிடாதவர்கள் என்று இல்லை. கிரகங்கள் கொடுக்க நினைத்தால் அது கொண்டு வந்து கொட்டிக்கொடுத்துவிடும். கிரகங்களுக்கு கொடுக்க நினைக்கும்பொழுது மனிதன் எப்படி இருந்தாலும் அவனை தூக்கிவிட்டுவிடும்.
சாமி கும்பிட்டால் எதுவும் நடக்காது என்று இல்லை எப்பொழுதாவது கொண்டுவந்து கொடுத்துவிடும். அதே நேரத்தில் நாம் செல்லும் பாதையில் பாவங்களை அதிகம் சேர்க்காமல் இருக்கவும் சாமி கும்பிடுவது துணைபுரியும்.
செல்வம் சேரும்பொழுது பாவங்களை சேர்த்துவிடாமல் செல்வம் மட்டும் சேர்வது போல செய்ய செய்வது தான் சாமி கும்பிடுவதில் உள்ள பெரிய விசயமே இருக்கின்றது இதனை புரிந்து தான் சாமி கும்பிடுவதில் அதிக முனைப்பை செல்வந்தர்கள் காட்டுகின்றனர்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு