வணக்கம்!
ஒரு மனிதன் பிறந்த நாளில் இருந்து வாழ்நாள் முழுவதும் வளர்ச்சி என்ற பாதையை நோக்கி தான் செல்லவேண்டும். மெதுவாக வளர்ச்சி அடைந்தாலும் உயர்வை நோக்கி தான் செல்லவேண்டும். உயர்வு இல்லாமல் கீழே சென்றால் அப்பொழுது அவர்களின் வாழ்க்கை மிகுந்த துயரத்திற்க்கு செல்லும்.
மேல்நாேக்கி சென்றுக்கொண்டிருந்த வாழ்வு கொஞ்சம் கீழ்நோக்கி செல்லுகின்றது மறுபடியும் மேலே வந்துவிடுகிறது என்றால் கவலை இல்லை. அது நல்லபடியாக தான் சென்றுக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். கீழே சென்ற வாழ்வு மேல்நிலையை அடையவே இல்லை என்றால் தான் பிரச்சினை.
நமக்கு கொடுத்த வாழ்வு சரியாக அமைந்திருக்கிறது என்றால் நம்மை விட்டு போகவில்லை என்றால் நாம் செய்த பாக்கியம் என்று சொல்லுகின்றோம். பாக்கிய வீடு மிக சரியாக வேலை செய்தால் நமக்கு கிடைத்தது எதுவும் விரைய வீட்டுக்கு கொடுக்காமல் பாதுகாக்கிறது என்று அர்த்தம்.
பாக்கியஸ்தானம் நன்றாக வேலை செய்ய வைத்துவிட்டாலே போதும் நமக்கு கிடைப்பது அனைத்தும் நம்மிடம் இருக்கும். பாக்கியஸ்தானம் வேலை செய்யவில்லை என்றால் நமக்கு கிடைத்தது எதுவும் நம்மிடம் இருக்காது.
கீழே சென்றவர்கள் அனைவரும் பல முயற்சிகளை எடுத்துக்கொண்டே இருப்பார்கள். கடைசி நிமிடத்தில் வாய்ப்பு கை நழுவி சென்றுவிடும். அப்படி இருப்பவர்கள் விழித்துக்கொண்டு பாக்கியஸ்தானத்திற்க்கு உரிய பரிகாரத்தை செய்துவிடவேண்டும். பரிகாரம் செய்துவிட்டால் கண்டிப்பாக ஏதாவது ஒரு வாய்ப்பு கைகூடும்.
மதியம் கோயம்புத்தூர் பயணம். நாளை திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளுங்கள்.
புரட்டாசி மாதம் அம்மன் பூஜை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு