Followers

Thursday, August 31, 2017

ஆறு தரும் ஏமாற்றம்


ணக்கம்!
          ஆறாவது வீடு ஒரு சில இடத்தில் நம்மை அதிகம் கவிழ்த்துவிடும். வாழ்க்கையில் எப்படியும் ஒரு இடத்தில் நமக்கு வேலை செய்துவிடுவது உண்டு. அதாவது நாம் எங்காே யாரிடம் ஏதாவது ஒரு வகையில் ஏமாந்துவிடுவது உண்டு.

ஏதோ ஒரு விதத்தில் நம்மை ஏமாற்றுபவர்களிடம் சிக்கி ஏமாந்துவிடுவோம்.  ஏதோ ஒன்று ஏமாந்துவிடுவது உண்டு தான். இதில் பங்குவர்த்தம் போன்ற பணவிளையாட்டில் சிக்கி பணத்தை விடுபவர்களும் வருவார்கள்.

ஒரு விதத்தில் நாம் ஏமாறுவது கூட நல்லது என்று தான் தோன்றுகிறது. நம்முடைய கெடுதல் சரிசெய்யப்படுகின்றது என்று சொல்லலாம். நமக்கு வரும் கெடுதல் ஏமாற்றுவிதத்தில் வெளியில் சென்றுவிடும் என்று நினைக்கிறேன்.

பெரிய ஒரு கண்டம் வருகின்றது என்று வைத்துக்கொள்வோம். நமது உயிருக்கு ஆபத்தாக வரும் கெடுதல் ஒரு விதத்தில் பணத்தால் அல்லது ஏதோ ஒரு விதத்தால் சரிசெய்யபட்டுவிடும். உயிர்க்கு வந்த ஆபத்து விலகிவிடும்.

பல நண்பர்களுக்கு இதில் நல்ல அனுபவம் இருக்கும். அனுபவம் இருந்தால் நல்லது தான். அதற்கு காரணம்  இந்த ஒரு விதத்தில் ஆறாவது வீடு வேறு வழியாக வேலை செய்யாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, August 30, 2017

கேள்வி & பதில்


ணக்கம்!
          ஆறில் குருவைப்பற்றி சொல்லிருந்தீர்கள். அது எனக்கு சரியாக இருக்கின்றது அதற்கு பரிகாரம் என்ன என்று நண்பர் ஒருவர் கேள்வி கேட்டார்.

இதனை பரிகாரம் மட்டும் கொண்டு சரி செய்துவிடமுடியாது. அதற்கு மருந்தையும் சேர்த்து எடுக்கவேண்டும். செரிமானத்தைப்பற்றி சொல்லும்பொழுது செரிக்கவில்லை என்றால் அதற்கு மருந்து தான் தீர்வாக இருக்கமுடியும்.

பரிகாரத்தில் உணவையும் சொல்லுவார்கள். உணவு முறையில் மாற்றத்தை கொண்டு வருவதையும் சொல்லுவார்கள். நீங்கள் உணவு எடுக்கும்பொழுதும் சரியான உணவை எடுக்கவேண்டும் அதன் பிறகு பரிகாரத்தையும் செய்யவேண்டும்.

நம்ம ஆளுங்க பரிகாரம் மட்டும் செய்தால் போதும் என்று இருந்துவிடுவார்கள். உணவை சரி செய்யமாட்டார்கள். உணவையும் சரி செய்யவேண்டும். இரவில் நன்றாக செரிக்க வைக்க என்ன செய்யவேண்டுமாே  அதனை செய்யுங்கள்.

குருவிற்க்கு பரிகாரம் என்று சொல்லுவதை விட உங்களுக்கு ஆன்மீகம் எந்தளவுக்கு வருகின்றது என்று பார்க்கவேண்டும். மறைவுஸ்தானத்தில இருந்து குரு வேலை செய்யும்பொழுது எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கவேண்டும்.

உங்களின் பூர்வபுண்ணியாதிபதி வீட்டை சரி செய்யவேண்டும். குரு இல்லை என்றால் பூர்வபுண்ணியாதிபதி நன்றாக வேலை செய்தால் எளிமையாக இது இருக்கும் என்று சொல்லுகிறேன். அவர் அவர்களின் ஜாதகத்தை வைத்து முடிவு செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கிரிவலம்


ணக்கம்!
          கிரிவலம் எல்லா நாட்களிலும் செல்லலாமா என்று கலைராஜன் அய்யா அவர்கள் கேட்டார்கள்.

சாதாரணமாக செல்லும் மனிதனுக்கு பெளர்ணமி மட்டும் கிரிவலம் செல்லலாம். பிரச்சினையோடு செல்பவர்கள் இருந்தால் அவர்கள் அடிக்கடி செல்லவேண்டும் என்பதால் சாதாரணமான நாளை தேர்ந்தெடுத்து செல்லலாம்.

ஒருவர் அதிகபிரச்சினையில் இருக்கும்பொழுது அவர் ஒரு வருடத்திற்க்கு நூறு தடவை செல்லவேண்டும் என்று ஒரு வேண்டுதல் வைக்கிறார் என்றால் அவர் நாளை பார்த்து செல்லமுடியாது. முடிந்தளவுக்கு எப்படி எல்லாம் செல்லமுடியுமே அந்தளவுக்கு கிரிவலம் செல்லவேண்டும்.

நூறு தடவை கிரிவலம் சாத்தியப்படக்கூடிய ஒன்றா என்று கேட்கலாம். எனக்கு தெரிந்த ஒருவர் ஒரு வருடத்திற்க்கு நூறு தடவை செல்லவேண்டும் என்ற ஒரு வேண்டுகோள் இருந்தது. அவர் ஒரு தடவை சென்றால் இரண்டு முறை கிரிவலம் சென்றுவிடுவார். ஒரு வருடத்தில் நூறு தடவை அவர் சென்றார் அது எனக்கு தெரியும்.

நீங்கள் நூறு தடவை எல்லாம் செல்லவேண்டாம். ஒரு வருடத்திற்க்கு குறைந்த எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு சென்றால் கூட உங்களுக்கு நல்லது நடக்கும் என்று அண்ணாமலையார் மீது நம்பிக்கையோடு சொல்லுகிறேன். உங்களின் விருப்பம் போல் சென்று வாருங்கள்.

ஒரு நாள் தான் செல்லமுடியும் என்றால் அங்கு விஷேசமாக உள்ள நாட்களை தேர்ந்தெடுத்து செல்லலாம். தனிமையாக செல்லவேண்டும் என்று விருப்பம் இருந்தால் சாதாரணமான நாளை தேர்ந்தெடுத்து செல்லுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

எதிரி


வணக்கம்!
         நமக்கு வாய்த்த எதிரிகள் தான் நம்முடைய வாழ்க்கையை வெற்றி பாதையில் செலுத்த உதவியவர்கள் என்று சொல்லலாம். ஒருத்தருக்கு எதிரி நன்றாக அவனை எதிர்க்கும்பொழுது தான் அவன் பெரிளவில் வெற்றி பெறுவான்.

நம்முடைய ஜாதகத்தில் ஆறாவது வீட்டில் உள்ள கிரகங்கள் அல்லது ஆறாவது வீட்டு அதிபதி நமது எதிரியை தீர்மானிக்கிறார். ஆறாவது வீட்டில் சுபகிரகங்கள் இருந்தால் எதிரிகளின் கை நன்றாக ஓங்கும். ஆறாவது வீட்டில் தீயகிரகங்கள் இருந்தால் எதிரிகள் இருக்கமாட்டார்கள்.

ஆறாவது வீட்டில் சுபகிரகங்கள் இருந்தால் கூட ஒரு சிலருக்கு நல்ல வாழ்க்கை அமைவதற்க்கு காரணம் அவர்களின் எதிரிகள் இவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கிறார்கள். நல்ல இவர்களை எதிர்த்து இவர்களை நல்ல வேலை செய்ய செய்துவிடுகின்றார்கள்.

ஒருத்தரை துரத்த ஆள் இருந்தால் சோம்பேறியாக இல்லாமல் உழைக்க ஆரம்பித்துவிடுவார்கள். வாழ்க்கையிலும் மேலும் மேலும் உயர்ந்துவிடுவார்கள்.

நீங்கள் பொறுமையாக இருந்து எதிர்பவரை எதிர்த்து நிற்காமல் வாழ்க்கையில் வெற்றி பெறுவேன் என்று நினைத்தால் இது சாத்தியப்படும். எதிர்ப்பவரை அவரைபோல் நானும் எதிர்த்து நிற்பேன் என்று சண்டைப்போட்டால் வீணாகதான் போய்விடுவார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மனோசக்தி


ணக்கம்!
          ஒரு பதிவில் இந்தியா சீனா இடையே ஏற்பட்ட பிரச்சினையைப்பற்றியும் அதனை தீர்க்க மனோசக்தி வழியாக தீர்வு காணலாம் என்பதைப்பற்றியும் சொல்லிருந்தேன். தற்பொழுது இரண்டு நாடுகளுக்கம் சுமூகமான தீர்வு ஏற்பட்டு இருக்கின்றது. 

இரண்டு நாடுகளுக்கும் சண்டை ஏற்படும்பொழுது கூட இருநாட்டில் உள்ள வீரர்கள் மல்லுக்கட்டு கட்டிக்கொண்டு தான் இருந்தனர். கையில் உள்ள துப்பாக்கியை எல்லாம் பயன்படுத்தவில்லை. இது ஒரு நல்ல பண்பாடாக இருந்தது.

நான் எழுதியது ஒரு பழைய தகவலை வைத்து இப்படி செய்தால் இது நன்றாக இருக்கும் என்று சொல்லிருந்தேன். அது எப்படி நடந்ததோ தெரியவில்லை ஆனால் நாம் சொல்லியபடி நாம் எழுதியது போல சாதகமாக இருந்தது.

ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஆன்மீகவாதிகள் தன்னுடைய ஆன்மசக்தியை பயன்படுத்தினால் அது நல்லதாக அமையும் என்பதில் மட்டும் எனக்கு ஒரு கருத்து இருக்கின்றது. அந்த கருத்தை உங்களோடு பகிர்ந்துக்கொண்டேன். தற்பொழுது நடந்ததை கூட நான் சொல்லி மார்தட்டிக்கொள்ளவேண்டும் என்பதற்க்காக சொல்லவில்லை. ஆன்மீகத்தில் இது சாத்தியப்படிக்கூடிய ஒன்று என்று சொல்லுவதற்க்காக சொல்லுகிறேன்.

கண்டிப்பாக இந்த மாதிரியான ஆன்மீகசெயல் செய்வதற்க்கு ஒரு பெரியளவில் ஆன்மீகம் தெரிந்து இருக்கவேண்டும் என்பதில்லை. குருவின் ஆசி முழுமையாக இருக்கவேண்டும் நாம் அவர்க்கு அடிபணிந்து இருந்தால் போதும். இது கிடைத்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

செரிமானம்


ணக்கம்!
          ஆறாவது வீட்டைப்பற்றி பார்க்கும்பொழுது ஒரு நண்பர் செரிமானத்தைப்பற்றி சொல்லிருந்தார். அறிவியல் ரீதியாக சொல்லிருந்தார். அறிவியல் ரீதியாக செரிமானத்தை சொன்னாலும் ஒரு விசயம் இருக்கின்றது.

உங்களின் உணவை சாப்பிடும்பொழுது நீங்கள் அதனை நன்றாக ரசித்து சாப்பிட்டால் உங்களுக்கு நல்ல செரிமானம் நடக்கும். வாழ்க்கையில் டயட் எடுக்க வேண்டியதில்லை. நல்ல ரசித்து சாப்பிட்டால் நீங்கள் விஷத்தை கூட சாப்பிடமுடியும் அது செரிக்கும்.

உணவு எடுக்கும்பொழுது நல்ல முறையில் சமைத்து பொறுமையாக அதனை ரசித்து சாப்பிடுங்கள். உங்களுக்கு ஆறாவது வீடு பிரச்சினை எந்த காலத்திலும் கொடுக்காது. 

மனிதனுக்கு சாப்பிட கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறான் இதில் ரசித்து எப்படி சாப்பிடமுடியும் என்று கேட்கலாம். என்ன செய்வது ஒரு சில விசயத்தை நாம் கடைபிடித்தால் தான் நாம் கடைசிவரை இருக்கமுடியும்.

ஆறாவது வீட்டில் இருக்கும் கிரகங்கள் தான் மேலே சொன்னதை முடிவு செய்யவேண்டும். ஆறாவது வீட்டில் பிரச்சினைக்குரிய கிரகங்கள் இருந்தால் மேலே சொன்னது தவறாக நடந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, August 29, 2017

வேலைக்காரன்


ணக்கம்!
          நமக்கு அமையும் வேலைக்காரனை காட்டக்கூடிய இடமும் ஆறாவது வீடு தான். ஆறாவது வீட்டில் தீயகிரகங்கள் அமைந்தால் பெரிய அளவில் வேலைக்காரர்களை வைத்துக்கொண்டு செய்யக்கூடிய தொழில் நமக்கு அமைக்கும். 

ஆறாவது வீட்டில் சுப கிரகங்கள் அமைந்தால் வேலைக்காரன் அமையமாட்டார்கள். வேலைக்காரன் அமைந்தால் கூட அவர்களை வைத்துக்கொண்டு நாம் எதுவும் செய்யமுடியாது. வேலைக்காரனுக்கு நாம் அடிமைப்போல் வேலை செய்ய வேண்டியிருக்கும்.

ஆறாவது வீட்டில் குருகிரகம் சம்பந்தப்படுகின்றது என்று வைத்துகொள்வோம். வேலைக்காரன் அமைந்தால் கூட அவர்கள் நமக்கு ஆப்பு வைப்பவராக இருப்பார். நம்மைப்பற்றி பிறரிடம் போட்டு கொடுப்பார்கள்.

தீயகிரகங்கள் அமைந்தால் வேலைக்காரர்களை அடிமைப்போல நடத்தி சம்பாதித்துக்கொண்டு இருப்பார்கள். வேலைக்காரர்களுக்கு சம்பளம் கொடுக்காமலே இழுத்து அடித்து வேலை வாங்கிக்கொண்டு இருப்பார்கள்.

நம்முடைய ஜாதகத்தில் ஆறாவது வீடு சரியில்லை என்று வைத்துக்கொள்வோம். நாம் ஒரு வேலைக்கு சேர்ந்தால் முதலாளி நமக்கு பணம் கொடுக்காமல் நம்மை வேலை வாங்கிக்கொண்டு இருப்பார்.

ஒரு சில இடத்தில் ஆறாவது வீடு சரியில்லாத ஆட்களை வேலை வைத்தால் அந்த கம்பெனியை இழுத்து மூடகூட முதலாளிக்கு நேரம் வந்துவிடும். வேலைக்காரர்களால் கம்பெனி திவலாகிவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

திருவண்ணாமலை கிரிவலம்


ணக்கம்!
          பல வருடங்களாக நான் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று இருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவண்ணாமலை கிரிவலம் செல்லவில்லை. நமது ஊரில் இருந்து வந்தால் அங்கு தங்கிவிட்டு தான் கிரிவலம் செல்லமுடியும் நமது ஊருக்கும் திருவண்ணாமலைக்கும் தூரம் அதிகம் என்பதால் தங்கிவிட்டு தான் கிரிவலம் செல்லமுடியும்.

கிரிவலத்தில் நல்ல நன்மை கிடைக்கும் என்பது என்னுடைய சொந்த அனுபவத்திலும்  எனது நண்பர்களின் வட்டாரத்திலும்  நல்ல அனுபவத்தை தந்திருக்கிறது என்று சொல்லலாம். அவர் அவர்களின் கர்மா வினைப்படி அவர்களுக்கு பலனை கொடுத்து இருக்கின்றது.

ஒரு சிலருக்கு ஒரு முறையில் நல்லது நடந்துவிடும். ஒரு சிலருக்கு பலமுறை சென்றால் தான் அவர்கள் விரும்பியது கிடைக்கும். பிரச்சினையோடு வருபவர்களுக்கு நிறைய தடவை சென்றால் பலன் கிடைக்கும். பலன் கிடைக்காமல் சென்றவர்கள் இருக்கமாட்டார்கள். அனைத்தும் அண்ணாமலையாரின் அருள் இன்றி வேறு எதுவும் இருக்க முடியாது.

கிரிவலம் செல்லும்பொழுது என்னோடு நிறைய நண்பர்கள் எல்லாம் வந்திருக்கின்றனர். தனியாகவும் கிரிவலம் சென்று இருக்கிறேன். கிரிவலம் செல்லும்பொழுது என்னோடு வரும் நண்பர்கள் நிறைய கேள்விகளை கேட்பார்கள் அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு நடந்து இருக்கிறேன்.

நான் அடுத்தவர்களுக்கு பதில் சொன்னாலும் அண்ணாமலையார் எனக்கும் அருளை கொடுத்து இருக்கிறார். ஏன் என்றால் கிரிவலம் செல்லும்பொழுது பேசாமல் செல்லவேண்டும் என்பார்கள். நான் பேசிக்கொண்டு செல்லும்பொழுதும் எனக்கு அருளை தந்திருக்கிறார். 

வரும் நாளில் திருவண்ணாமலை கிரிவலம் செல்லவேண்டும் என்ற ஒரு விருப்பம் இருக்கின்றது. அது ஒரு சாதாரணமான நாளாக பார்த்து செல்லவேண்டும் என்று நினைத்து இருக்கிறேன். உங்களுக்கு எப்பொழுது எல்லாம் நேரம் கிடைக்கிறதாே கிரிவலம் சென்று வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, August 28, 2017

ஆறில் லக்கினாதிபதி

ணக்கம்!
          லக்கினாதிபதி ஆறாவது வீட்டிற்க்கு சென்றால் அந்த நபருக்கு எப்பொழுதும் ஏதாவது ஒரு வியாதி இருந்துக்கொண்டே இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எப்பொழுதும் வியாதி இருந்துக்கொண்டே இருக்கின்றது என்றால் அது எப்படி சாத்தியப்படும். நோய் முற்றினால் மரணம் வரும் என்று ஒரு கருத்தும் வருகின்றது.

லக்கினாதிபதி ஆறாவது வீட்டிற்க்கு செல்லும்பொழுது நோய் என்பது அதிகப்பட்சம் சக்தி குறைபாடாக இருக்கும். நல்ல தெம்போடு இருக்கும் நேரத்தில் சம்பந்தமே இல்லாமல் சக்தி குறைவாக இருக்கும். அவர்களுக்கு களைப்பு போல் தோன்றும். மறுபடியும் அது தானாகவே சரி செய்யும் அப்படி இல்லை என்றால் நன்றாக சாப்பிடவேண்டும்.

ஒரு சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அடிக்கடி ஜலதோஷம் பிடித்துக்கொண்டுவிடும். அதில் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள். 

லக்கினாதிபதி ஆறில் இருந்தால் அந்த நபர்கள் நல்ல சத்தான உணவை சாப்பிட்டுக்கொண்டு இருப்பது நல்லது. ஒரு சிலருக்கு இயற்கையாகவே நல்ல சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

ஒரு சிலரை நீங்களே பார்த்திருக்கலாம் எப்படி டா இவன் மட்டும் எந்த நேரமும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறான் உடலும் நன்றாகவே இருக்கின்றது எப்படி செரிக்கும் என்று நினைக்கலாம். அவர்களுக்கு எல்லாம் லக்கினாதிபதி ஆறில் நல்ல முறையில் இருந்தால் இப்படி சாப்பிடுவார்கள்.

கோயம்புத்தூர், திருப்பூர் பகுதியில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும். பயணதிட்டம் இருப்பதால் சந்திக்க நினைக்கும் நண்பர்கள் முன்கூட்டியே தொடர்புக்கொள்ளவும். Cell No : 9551155800.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தோஷத்திற்க்கு பரிகாரம்


ணக்கம்!
          ஒருவருக்கு மறைவுஸ்தான தசா நடைபெறுகின்றது என்றால் அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும். ஆபத்து நிறைந்த வாழ்க்கை வாழவேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகலாம்.

மறைவுஸ்தான அதிபதி தசாவை நாம் என்ன செய்வது அதற்கு பரிகாரமாக என்ன செய்யலாம் என்று கேட்கலாம். பரிகாரம் செய்வதை விட இதனை வழிபாட்டு வழியில் நீங்களே சரிசெய்துக்கொள்ளலாம். பரிகாரத்திற்க்கு செய்யும் செலவை நீங்களே கோவிலுக்கு சென்று அதனை சரிசெய்துக்கொள்ளுங்கள்.

எப்படிப்பட்ட காேவிலுக்கு செல்லலாம் என்பதைப்பற்றி சொல்லுகிறேன். புகழ்பெற்ற ஸ்தலங்களாக இருக்கவேண்டும். புகழ் என்றால் அதிக வருடம் அந்த கோவில் இருந்திருக்கவேண்டும். மிகவும் பழைமையான சிவன் கோவிலாக இருந்தால் நன்றாக இருக்கும்.

இதனை அடிக்கடி செய்துக்கொண்டே இருக்கவேண்டும். தொடர்ந்து செய்யவேண்டும். அதாவது தொடர்ந்து செய்யும்பொழுது நம்முடைய  தோஷக்கணக்கு குறையும். எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும் அல்லது மறைவுஸ்தான அதிபதி தசாவில் அதன் வேகம் குறைந்துவிடும்.

நிறைய கோவில்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றது. ஒரு கோவிலை நான் குறிப்பிட்டு சொல்லவில்லை அது உங்களின் ஊரில் இருக்கும் கோவிலாக இருந்தாலும் சரி. செய்வதை தொடர்ந்து செய்துக்கொண்டே வரவேண்டும் இது தான் விதி. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, August 27, 2017

நல்ல உணவு


வணக்கம்!
          உணவு ஜுரணத்தை சொல்லக்கூடிய ஆறாவது வீட்டைப்பற்றி நாம் பார்த்துக்கொண்டு இருப்பதால் உணவையும் நாம் சேர்த்து பார்க்கவேண்டும். இந்த காலத்தில் நான் இந்த டயட்டில் இருந்துக்கொண்டு இருக்கின்றேன் சொல்லுவது ஒரு பேஷன் போல் ஆகிவிட்டது. உணவுக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்தியர்கள் நன்றாக சாப்பிடஆரம்பித்துவிட்டார்கள் என்று அமெரிக்ககாரன் கூட பயப்பட ஆரம்பித்துவிட்டான். கடந்த வருடம் என்று நினைக்கிறேன். இந்தியர்கள் நன்றாக சாப்பிடுகின்றனர் என்று அமெரிக்காரன் சொன்னதாக செய்திகளில் சொல்லிருந்தார்கள்.

இந்தியர்கள் ஏன் நன்றாக சாப்பிடுகின்றனர் என்று அமெரிக்காரன் கவலைப்படுகிறான் என்றால் அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. நல்ல உணவை ஒருவர் தேர்ந்தெடுத்து உண்ண ஆரம்பித்துவிட்டார் என்றால் அவரின் மூளை மற்றும் செயல்பாடு அனைத்தும் வியத்தக்க அளவில் வேலை செய்யும். அமெரிக்காரனுக்கு அடுத்தவன் நன்றாக இருந்தால் தான் பிடிக்காதே அதனால் சொல்லிருக்கிறான்.

டயட் ஒரு காலத்தில் மட்டும் எடுத்துக்கொள்ளலாம். வாழ்க்கை முழுவதும் டயட் எடுத்துக்கொண்டே இருந்தால் அது நல்ல உணவு கிடையாது.  முடிந்தவரை நல்ல உணவுகளை சாப்பிட்டால் போதுமானது.

நல்ல சத்துணவுள்ள உணவுகளை எடுத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பியுங்கள். நல்ல உடல் நலத்தோடு நன்றாக வாழுங்கள். அது தான் ஆறாவது வீட்டை பலப்படுத்தும் வழி.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, August 26, 2017

மறைவுஸ்தானம்


வணக்கம்!
          சோதிடத்தில் ஆறாவது வீட்டைப்பற்றி பார்த்து வருகிறோம். ஆறாவது வீடு பலம் பெறும்பொழுது அதிகப்பட்சம் ஏழாவது வீடு பலம் இழக்க ஆரம்பித்துவிடும். பொதுவான தகவலை சொல்லுகிறேன் ஆறாவது வீடு பலன் பெற்றுவிட்டால் ஏழாவது வீடு பலன் இழக்கிறது என்பது பல ஜாதகத்தில் பார்த்து இருக்கிறேன்.

ஆறாவது பலன் பெற்றுவிட்டால் அவர்களுக்கு அமையும் துணை கொஞ்சம் நன்றாக அமையாது. நன்றாக அமையாது என்பது அவர்க்கு பிடிக்காமல் இருப்பதற்க்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும். ஒரு வித மனகசப்பு இருவருக்கும் ஏற்படும்.

மறைவு ஸ்தானம் பலப்படும் ஆள்கள் அனைவரும் வெளியிடத்தில் ஒரு மறைமுகமான ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு இருப்பார்கள். கடைசி வரை இப்படி தொடர்பு இருந்துக்கொண்டே இருக்கும்.

நான் பார்த்த வரை அரசியல்வாதிகளுக்கு ஆறாவது வீடு நல்ல பலன் பெற்று இருக்கின்றது. இவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு மறைமுக தொடர்பை வைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஒரு சில காலத்தில் இது பிரச்சினையும் தருவதாக அமைவது உண்டு.

அரசியல்வாதிகள் என்றால் அது பெரிய அளவில் இருக்கவேண்டும் என்பது கூடகிடையாது. ஒரு வார்டு மெம்பர் கூட இப்படிப்பட்ட தொடர்பை வைத்துக்கொண்டு இருக்கின்றனர். அவர் அவர்களுக்கு உள்ள பலத்தை பொறுத்து இது அமைகிறது.

பெரும்பாலும் மறைவுஸ்தானங்கள் பலப்படாமல் இருந்தால் நல்ல இல்லறவாழ்க்கை அமையும். பலப்பட்டால் வெளிதொடர்பு ஏற்பட்டு இல்லறத்தில் அமைதி குறையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, August 25, 2017

நல்வாழ்த்துக்கள்

ணக்கம்!
         அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, August 24, 2017

ஆறில் குரு


வணக்கம்!
          பொதுவாக குரு கிரகம் மறைவுஸ்தானத்திற்க்கு மட்டும் செல்லகூடாது. மறைவுஸ்தானத்திற்க்கு சென்றால் வாழ்க்கை போராட்டமாக அமைந்துவிடும் அதிலும் ஆறாவது வீட்டிற்க்கு குரு கிரகம் சென்று அமைந்துவிட்டால் பெரியளவில் போராட்டம் இருக்கும்.

குரு கிரகம் மறைவுஸ்தானத்திற்க்கு செல்லும்பொழுது எந்த வகையிலும் பணவரவு வராது என்பது தான் கொஞ்சம் கடினமான ஒன்று. யாரிடமும் பணம் கேட்டாலும் அதாவது கடனுக்கு கேட்டால் கூட கிடைக்காது.

கடன் எப்படியாவது கிடைத்துவிட்டால் அதனை திரும்ப கொடுப்பது கடினமாகிவிடும். கடன்காரன் துரத்தியதால் ஊரை விட்டு தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டிய ஒரு நிலை ஏற்படும். கடனுக்கு வட்டி கட்டகூட பணம் வராது.

ஆறில் குரு கிரகம் அமைந்தால் அவர்களுக்கு அஜீரணகோளாறு ஏற்படுவதற்க்கு வாய்ப்பு அதிகம். உடல் நிலையில் அதிக கவனம் தேவை. குரு லக்கினமாக இருந்து ஆறில் சென்றால் ஏதாவது ஒரு நோய் இருந்துக்கொண்டே இருக்கும்.

பெரும்பாலும் அடிமைதொழில் செய்வதாக அமையும். ஒரு வேலையில் இவர்கள் சேர்ந்தால் அந்த தொழிலை நடத்துபவர் தொழிலில் நஷ்டம் அடைந்து இவர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாத ஒரு நிலை ஏற்படும். ஆறில் குரு கிரகம் இருப்பது நல்லதல்ல.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, August 23, 2017

ஆறில் புதன்


ணக்கம்!
          ஆறில் புதன் கிரகம் இருந்தால் படிப்பு என்பது கொஞ்சம் வராது. அனுபவ அறிவு உள்ளவரை  அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு ஆறாவது வீடாக புதன்கிரகம் சம்பந்தப்பட்டால் அவரின் நடவடிக்கை எழுத்து வழியாக அடுத்தவரை ஏமாற்றி பிழைப்பார்கள்.

எழுத்து வழியாக அடுத்தவரை ஏமாற்றுபவது என்றால் ஏதாவது பத்திரம் எழுதி அதனை அவரின் பேருக்கு வைத்துக்கொள்வார். நிலபத்திர மோசடி எல்லாம் நடந்தது அல்லவா அது எல்லாம் இதில் வரும்.

இன்றைக்கு நடக்கும் அனைத்து எழுத்துபூர்வமாக நடைபெறும் பித்தலாட்டம் அனைத்தும் புதன் ஆறாவது வீட்டிற்க்கு சம்பந்தப்பட்டதாக இருக்கும். ஆறாவது வீடு என்றவுடன் அறிவு வேலை செய்வது வித்தியாசமாக இருக்கின்றது.

புத்தியை கொடுக்கும் புதன் மறைவு ஸ்தானத்தில் நிற்பதால் அவர்களுக்கு புத்தி அப்படி வேலை செய்கிறது. இவர்களுக்கு வரும் வியாதி தோல்வியாதி என்று சொல்லுவதைவிட இரத்தத்தில் பிரச்சினை என்று சொல்லலாம். இரத்தத்தில் பிரச்சினை என்பதால் தான் இவர்களுக்கு வரும் வியாதி தோல்வியாதியாக இருக்கலாம்.

இவர்கள் சாப்பிடும் சாப்பாடு கூட வெளியில் தான் வாங்கி சாப்பிடுவார்கள். உணவங்களில் உள்ள உணவை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். செரிமானமும் நன்றாக இருக்கும். வயதிற்க்கு தகுந்தார் போல் சாப்பாட்டை சாப்பிட்டுக்கொள்ளுங்கள்.

கடன் கொடுத்தால் இவர்களிடம் இருந்து திரும்பி வாங்கமுடியாது. ஒரு சிலர் மட்டும் திருப்பிக்கொடுப்பார்கள். பலர் கடனை திருப்பிக்கொடுக்கமாட்டார்கள். ஒரு சிலர் அரசாங்கவழியில் எப்படி செயல்பட்டால் கடனை வாங்கலாம் என்று தெரிந்து வைத்திருப்பார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

செரிமானத்தை தரும் ஆறாவது வீடு


வணக்கம்!
          நாம் சாப்பிடும் உணவை செரிக்க வைக்க இந்த சோதிடத்தில் ஆறாவது வீடு ஒழுங்காக வேலை செய்யவேண்டும். ஆறாவது வீடு நன்றாக வேலை செய்தால் மட்டுமே ஜீரணம் நன்றாக இருக்கும். உடலில் ஜீரணம் நன்றாக நடைபெற்றால் நோய் வருவதற்க்கு வாய்ப்பு குறைவு.

நமது உடல் அவ்வப்பொழுது ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் அல்லது வருடத்திற்க்கு ஒரு முறையாவது ஜீரணம் ஒழுங்காக நடைபெறாது. அந்த நேரத்தில் நமக்கு மிகவும் கடினமாக இருக்கும். இளமையாக இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை இருப்பதற்க்கு வாய்ப்பு இல்லை. வயது ஏற ஏற இது தலைதூக்க ஆரம்பித்துவிடும்.

செரிமான சக்தி வயது ஏற ஏற குறைய தொடங்கிவிடுகிறது. இதுவே  நோய் வருவதற்க்கு காரணமாகிவிடும். வயது ஏறியவுடன் செரிமானம் நன்றாக நடைபெறுவதற்க்கு வழி என்ன என்பதை தெரிந்துக்கொள்ளவேண்டும்.

இயற்கையான முறையில் நல்ல செரிமானத்தை தந்து நன்றாக உடலை வைத்துக்கொள்ள இயற்கையான முறையை கையாளுங்கள். உங்களின் உடல் நல்ல செரிமானம் நடக்கும்.  ஆறாவது வீடு நோயை கொடுக்கவிடாமல் செய்தாலே போதும். நோயிற்க்கு மாற்றாக செரிமானத்தை செயல்படுத்தினாலே போதும் நீண்ட ஆயுளை பெறலாம்.

ஜாதகத்தை பொறுத்தவரை ஒரு வீட்டில் ஒரு பகுதியை மட்டும் நன்றாக வேலை செய்ய வைத்துவிட்டால் மீதியுள்ள பகுதி தலைதூக்காமல் இருக்கும். இது ஒரு புத்திசாலிதனமான ஒரு வேலை தான். நீங்கள் இதனை செய்து நீண்டஆயுளை பெறுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, August 22, 2017

ஆறில் செவ்வாய்


வணக்கம்!
         ஒரு சிலருக்கு ஆறில் செவ்வாய் இருக்கும் அவர்களை பார்த்தால் வட்டி தொழிலில் கொடிக்கட்டி பறந்துக்கொண்டு இருப்பார்கள். வட்டி தொழில் செய்வதற்க்கு ஆறில் உள்ள செவ்வாய் நல்ல வழி வகுக்கும்.

பணத்தை வெளியில் கொடுத்து அதனை வாங்குவது என்றால் அது அவ்வளவு எளிதான காரியமா என்ன அதற்கு எந்தளவுக்கு தைரியம் வேண்டும். ஒரு சிலர் ஒரு பைசா கூட விடாமல் வசூலித்துவிடுபவர்கள் எல்லாம் இருக்கின்றனர்.

ஒரு சிலர் கொஞ்ச பணத்தை கொடுத்துவிட்டு வட்டி மேல் வட்டி போட்டு இருக்கின்ற இடத்தை எல்லாம் பிடிங்கிக்கொண்டு போய்விடுபவர்களும் இருக்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் செவ்வாய் ஆறில் இருக்கும்.

செவ்வாய் ஆறில் இருக்கும்பொழுது தைரியத்தை அதிகம் கொடுத்து பிறரை பணியவைத்துவிடுவார்கள். செவ்வாய் ஆறில் இருந்தால் பொதுவாக பணம் அவர்களிடம் வாங்கினால் நாம் அழிந்துபோய்விடுவோம். 

அவனின் ராசி அவன் பணம் கொடுத்தால் நம்முடைய நிலத்தை நாம் இழக்கவேண்டும் என்று சொல்வார்கள் அல்லவா. அவர்களின் ஜாதகத்தில் செவ்வாய் ஆறில் நிற்க்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வேண்டுகோள்


வணக்கம்!
          சென்னையில் ஜாதககதம்ப நண்பர்களை சந்திக்கும்பொழுது ஒரு விசயத்தை கவனித்தேன். அவர்களின் பல ஆசைகளை அல்லது அவர்களின் நோக்கத்தை இதுவரை என்னிடம் போனில் கூட சொல்லவில்லை நேரில் செல்லும்பொழுது என்னிடம் சொல்லுகின்றார்கள்.

நாம் அடிக்கடி ஜாதககதம்பத்தில் பரிகாரத்தை சொல்லும்பொழுது கூட உங்களின் நோக்கம் அல்லது உங்களுக்கு என்ன தேவை என்று கேட்பது உண்டு. அதில் கூட பல நண்பர்கள் தங்களின் நோக்கம் என்ன என்று சொல்லுவதில்லை.

நோில் சந்திக்கும்பொழுது நமது நண்பர்கள் என்னிடம் சொல்லுகின்ற தகவல் அனைத்தும் புதுமையாக இருக்கின்றது. அவர்களின் விருப்பம் என்ன என்பது சந்திக்கும்பொழுது மட்டுமே சொல்லுகின்றனர்.

உங்களின் இலக்கு அல்லது எனக்கு இது இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் அதனை முதலில் தெரிப்பது உங்களின் ஆன்மீக ஆலாேசகர்களிடம் தான் தெரிவிக்கவேண்டும். அப்பொழுது தான் அது நடக்க அவர்கள் ஆலோசனை சொல்லமுடியும்.

என்னிடமும் உங்களின் நோக்கத்தை சொல்லிவிட்டால் உங்களின் தேவைக்கு தகுந்தமாதிரி ஆன்மீக வழியை செய்துக்கொடுக்கமுடியும். தினமும் அம்மனிடம் வேண்டுதலை வைக்கலாம்.

பரிகாரம் இன்னமும் அறிவிக்கவில்லை என்ன என்று நண்பர்கள் கேட்டார்கள். கொஞ்ச இடைவெளி விட்டு அதனை செய்யலாம் என்று தான் தள்ளி வைத்திருக்கிறேன். வருகின்ற அம்மன் பூஜை முடிவடைந்தவுடன் பரிகார அறிவிப்பு வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, August 21, 2017

என்னைப்பற்றி


ணக்கம்!
          நேற்று சென்னையில் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது ஒரு விசயத்தை நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன். அதனை ஜாதககதம்பத்தில் சொல்லவேண்டும் என்று பலமுறை நினைத்தது உண்டு ஆனால் அதனை எழுதுவதற்க்கு நேரம் வரவில்லை. பெரிய விசயம் கிடையாது ஆனால் அது என்னைப்பற்றிய ஒன்று.

பல வருடங்கள் ஆன்மீகத்தில் இருக்கிறேன். சோதிடத்தையும் பார்த்து சொல்லிக்கொண்டு இருக்கிறேன். இதுவரை என்னுடைய ஊரில் உள்ளவர்களுக்கு நான் ஜாதகத்தை பார்த்து பலன் சொல்லியது கிடையாது. எந்த ஒரு ஆன்மீக வழியிலும் வேலை செய்தது கிடையாது. எங்கள் ஊரில் வந்து என்னை கேட்டால் கூட தெரியாது.

என்ன இப்படி சொல்லுகின்றீர்கள் என்று கேட்கிறீர்களா 

உண்மையான ஒன்று. என்னை தேடி வெளியூரில் இருந்து வரும் நண்பர்கள் அனைவரையும் தஞ்சாவூரில் சென்று பார்த்துவிட்டு வந்துவிடுவது உண்டு. ஊரில் எதுவும் சந்திப்பது கிடையாது. வெளியூரில் எனக்கு நிறைய பேர்கள் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். உள்ளூரில் வைத்துக்கொள்வது கிடையாது.

ஜாதககதம்பத்தில் இருந்து இதுவரை அதிகப்பட்சம் ஏழு பேர் என்னுடைய வீட்டிற்க்கு வந்திருக்கலாம் அதற்கு மேல் ஒருத்தரும் வந்தது கிடையாது. தொடர்ந்து என்னுடைய வீட்டிற்க்கு வரும் நபர்கள் மிககுறைவானவர்கள். இரண்டு அல்லது மூன்று இங்கு கூட்டத்தை கூட்டினால் ஒன்றும் நடைபெறாது. பேர்கள் வரலாம் அவ்வளவு மட்டுமே.

ரொம்ப உஷாராக இருக்கின்றீர்களா என்று நினைக்கலாம்.

உண்மையில் அது தவறான ஒன்று. என்னை சந்திக்க நிறைய பேர்கள் வந்துக்கொண்டே இருந்தால் உங்களுக்கு நடக்கின்ற எந்த ஒரு வேலையும் நடைபெறவே நடைபெறாது என்பது தான் உண்மை. நான் இங்கு பிரீயாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு நல்லது நடக்கும். 

உள்ளூரில் எதுவும் கிடையாது அனைத்தையும் வெளியூரில் உள்ளவர்கள் மட்டுமே வைத்துக்கொண்டு இத்தனை வருடங்கள் இதனை நடத்திக்கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு எல்லாம் பரிகாரங்கள் செய்து அது நடக்கின்றது என்றால் நான் இங்கு அமர்ந்து உங்களாக செய்யும் வேலையில் இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மறைவுஸ்தான அதிபதி தசா


ணக்கம்!
          எந்த ஒரு ஜாதகருக்கும் சரி அவரின் ஜாதகத்தில் மறைவுஸ்தான அதிபதி தசா நடந்தால் அவர் கொஞ்சம் பொறுமையாக நடந்துக்கொள்ளவேண்டும். உங்களின் வீட்டில் உள்ளவர்களிடமும் நீங்கள் அமைதியாக நடந்தால் தான் உங்களுக்கு நல்லது.

ஒரு சிலர் வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு அவர்கள் தற்கொலை முயற்சிக்கு கூட இந்த தசா தூண்டிவிட்டுவிடும். நீங்கள் உங்களின் கடமையை செய்யமுடியாமல் நீங்கள் போய் சேரவேண்டியது தான். அதுவும் குழந்தைகள் இருந்தால் மிகவும் கடினமாக போய்விடும். இல்லறத்தலைவன் இல்லை என்றால் குழந்தைகளின் நிலை மிகவும் கடினமாகிவிடும்.

தற்கொலை தூண்டாமல் கூட ஒரு சில இடத்தில் உங்களுக்கு மனஉளைச்சலை தூண்டிவிட்டு உங்களுக்கு ஹர்ட்அட்டாக் வரவழைத்துவிடும். இதிலும் பலர் உயிர்விட்டு இருக்கின்றார்கள். 

பொதுவாக மறைவுஸ்தான தசா வேலை செய்யும்பொழுது உங்களின் மனைவி ஒத்துழைக்க மாட்டார். எதிலும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார். உங்களுக்கு வாழ்க்கையை பற்றியே பல சிந்தனை இருக்கும்பொழுது அதோடு இவரும் சண்டைப்போட்டால் உங்களின் நிலை சொல்லவேண்டியதில்லை.

மறைவுஸ்தான அதிபதியின் தசா நடக்கும்பொழுது என்ன தான் நடந்தாலும் சரி நீங்கள் அமைதியாகிவிடுங்கள். உங்களின் மனைவி உங்களை அடிக்க வந்தால் கூட நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள். அது தான் உங்களின் ஆயுளுக்கு நல்லது. உங்களின் குடும்பத்திற்க்கும் நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, August 20, 2017

மனோசக்தி


வணக்கம்!
          நல்ல மனோசக்தி உடைய ஒருவரிடம் நாம் நல்ல அன்பு வைக்கும்பொழுது அவர்களின் மனோசக்தியின் வழியாக நம்மை வாழ்த்தினாலே போதும் நாம் பெரியளவில் வளர்ச்சியை கண்டுவிடலாம்.

ஒவ்வொரு சாமியார்களிடமும் இப்படிப்பட்ட சக்தி தான் இருக்கின்றது. அவர்களிடம் நாம் ஆசி வாங்கினாலே போதும் அவர்களிடம் உள்ள சக்தி நம்மை வழிநடத்த ஆரம்பித்துவிடும்.

நாம் ஒரு இடத்தில் இருப்போம் நாம் ஆசி வாங்கி சாமியார் ஒரு இடத்தில் இருப்பார். நமக்கு ஏதோ ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவரை அறியாமலேயே அவரின் சக்தி நம்மை வந்து காக்கும்.

இது எப்படி நடக்கிறது என்று எல்லாம் நாம் ஆராய்ச்சி செய்யகூடாது. நமது வேலை அதுவல்ல அவர்களின் சக்தி நம்மை காத்துக்கொண்டே இருக்கின்றது என்பது மட்டும் உண்மையாக இருக்கின்றது.

ஒரு தவறான வழிக்கு நாம் செல்வதை கூட அந்த சக்தி தடுத்து அது நம்மை நேர்வழிக்கு கொண்டு செல்ல வைக்கும். முடிந்தளவுக்கு நல்ல மனோசக்தி உடையவர்களின் அன்பை பெறுங்கள்.

சென்னையில் இருக்கிறேன். சென்னையில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும். Cell No 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, August 19, 2017

ஆறில் சந்திரன்


வணக்கம் !
          ஆறாவது வீட்டில் சந்திரன் இருந்தால் மனக்குழப்பம் அதிகமாக ஏற்படும். ஒரு நிலையில் மனது இருக்காது. எதிரிகளின் கை ஓங்கும். கடனும் அவ்வப்பொழுது வந்து தலைதூக்கும். ஒரு சிலர் மருத்துவ ஆலோசனையும் நன்றாக கொடுப்பார்கள்.

ஆறில் சந்திரன் இருக்கும் நபர்கள் அடுத்தவரை நம்பி ஏமாந்து போவதும் உண்டு. அடிமைத்தொழிலை செய்பவராக இருப்பார்கள். பிறர்க்கு வேலை செய்து அந்த வேலைக்கு உரிய கூலியை அவர்களால் பெறுவதற்க்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

வாழ்க்கையில் ஒரு வித சலிப்பு இருந்துக்கொண்டே இருக்கும். மனது வில்லங்கமாக வேலை செய்துக்கொண்டே இருக்கும். மனதில் ஒரு வித படபடப்பு இருக்கும். ஆறில் சந்திரன் வலுவாக அமையப்பெற்றவர்கள் அடுத்தவர்களை ஏமாற்றி பிழைப்பார்கள். பொதுவாக ஆறில் சந்திரன் இருப்பது அந்தளவுக்கு நல்லதல்ல.

நோய்க்கு அடிக்கடி மருந்து எடுத்துக்கொள்ள நேரிடும். அதாவது மனக்குழப்பத்தால் அதிகமாக நோயை உருவாக்க கூடிய ஒரு சூழ்நிலை சந்திரனால் உருவாகும்.

நாளை சென்னையில் என்னை சந்திக்கலாம். சந்திக்க விருப்பம் தெரிவிக்கும் நண்பர்கள் என்னை உடனே தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, August 18, 2017

ஆறில் சூரியன்


வணக்கம்!
          சூரியன் ஆறாவது வீட்டில் சம்பந்தப்பட்டு இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அவர்களுக்கு எதிரிகள் அனைத்தும் அவர்களின் தந்தை வழியில் தான் இருப்பார்கள். அவர்கள் எதனை செய்தாலும் அவர்களின் தந்தையின் வழியில் இருப்பவர்கள் அவர்களுக்கு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள்.

தந்தை வழியில் உள்ளவர்கள் எதற்க்கு பிரச்சினை வரப்போகின்றார்கள் எல்லாம் சொத்து பிரச்சினைக்கு தான் வருவார்கள். உங்களின் பூர்வீக சொத்து இருக்கும் இடத்தில் அவர்கள் அவர்களின் வில்லங்க வேலையை காட்டுவார்கள்.

ஒன்று அவர்களும் வாழாமல் உங்களையும் வாழவிடாமல் செய்துவிடுவார்கள். என்ன செய்வது எல்லாம் விதிபயன் என்று கூடுமானாவரை ஒதுங்கி செல்வது உங்களின் வளர்ச்சிக்கு நல்லது. நீங்களும் அவர்கள் போலவே இருக்கவேண்டும் என்றால் பிரச்சினை உங்களுக்கு தான் அதிகமாக வரும்.

சொத்துப்பிரச்சினை இல்லை என்றால் உங்களின் குலதெய்வத்திற்க்கு நீங்கள் ஏதாவது செய்யும்பாெழுது அங்கு வந்து வம்பு இழுப்பார்கள். உங்களை ஒழுங்காக சாமி கும்பிடவிடாமல் செய்வார்கள் கொஞ்சம் அமைதியாக இருந்து செயல்பட்டால் தப்பித்துக்கொள்ளலாம்.மனிதர்கள் எல்லாம் அப்படி தான் இருப்பார்கள்.

விரைவில் சென்னை வருகிறேன். சென்னையில் சந்திக்க நினைக்கும் நண்பர்கள் உடனே சந்திப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கண்திருஷ்டி


ணக்கம்!
          நம்முடைய மனிதர்கள் இருக்கின்றீர்களே இவர்கள் இந்த பூமியிலேயே மிக மிக மோசமான விலங்குகள். எப்படி என்றால் விலங்குகள் பசி எடுத்தால் தான் அடுத்த மிருகத்தை கொல்லும் மனிதர்கள் எதுவும் இல்லாமலே அடுத்தவனை கொல்லுவார்கள்.

உங்களுக்கு சோதிடத்தில் கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தாலும் மனிதர்களின் பார்வைபட்டால் நீங்கள் வீணா போய்விடுவீர்கள். கண் திருஷ்டி என்பதை தான் சொல்லுகிறேன். இன்றைய காலத்தில் நகர்புறத்திலும் இது பெரியளவில் இருக்கின்றது. 

கிரகங்கள் கூட அது நகர்ந்து அது நாள் பார்த்து தான் தாக்க ஆரம்பிக்கும் மனிதர்கள் இது எல்லாம் பார்க்கமாட்டார்கள் நீ நன்றாக இருந்தால் பார்த்தவுடனே உடனே தங்களின் தீய எண்ணத்தால் தாக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

நகர்புறத்தில் உள்ளவர்கள் உங்களின் சொந்தம் இல்லாமல் இருந்தாலும் உங்களின் நட்பு வட்டமும் உங்களின் வளர்ச்சியில் பெரிதும் பாதிப்படைய செய்கின்றனர. உங்களின் நட்பு வட்டத்தில் இருந்து கூட உங்களுக்கு கண்திருஷ்டி ஏற்படுகின்றது.

எப்பேர்பட்ட ஆளையும் கண்திருஷ்டி ஆளை சாய்த்துவிடும். இது உறவினர்களிடம் மட்டும் இல்லாமல் உங்களின் வீட்டிற்க்கு பக்கத்தில் வசிப்பவர்களிடமும் இருந்தும் இது வருகின்றது. அதனால் கண்திருஷ்டி போக்க என்ன வழி என்பதை தெரிந்துக்கொண்டு அதனை போக்கிக்கொள்ளுங்கள்.

உங்களின் வீட்டில் அடிக்கடி கண்திருஷ்டி போட சொல்லுங்கள். உங்கள் வழியாக உங்களின் வீட்டிற்க்கு வருமானம் வருகின்றது என்றால் உங்களுக்கு அடிக்கடி கண்திருஷ்டி போட வேண்டும். உங்களுக்கு கண்திருஷ்டி வருகின்றது என்றால் உங்களின் கால் அடிக்கடி மோதிக்கொள்வீர்கள். அதாவது கால் இட்டுக்கொண்டது என்று சொல்லுவார்கள் அல்லவா. அது உங்களுக்கு அடிக்கடி நடக்கும்.

தற்பொழுது எல்லாம் முன்கூட்டியே சொல்லிக்கொண்டு இது நடப்பதில்லை உடனே நமக்கு அடிவந்துவிடுகின்றது. கண்திருஷ்டி பட்டவுடன் நமக்கு அடி வந்துவிடும் நாம் மாட்டிக்கொள்ளவேண்டியதுதான். ஆன்மீக பூஜைகளில் எல்லாம் கண்திருஷ்டி போக்க தான் வழி செய்வார்கள். அடிக்கடி நீங்கள் கண்திருஷ்டி எடுத்துக்கொள்ளுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, August 17, 2017

மனிதனிடம் உள்ள மனோசக்தி


ணக்கம்!
          இந்தியாவிற்க்கு போர் ஆபத்து வரும்பொழுது எல்லாம்  நமது ஆன்மீகவாதிகளால் அது தடுத்து நிறுத்தப்பட்டது என்று சொன்னால் நீங்கள் சிரிப்பீர்கள். உண்மையில் சீனாவுடன் ஏற்பட்ட சண்டையில் ஒரு ஆன்மீகவாதிதான் தன்னுடைய மனோசக்தியால் தீர்த்தார் என்று ஒரு தகவல் இருக்கின்றது.

தற்பொழுது எல்லையில் சீனா அதிக பிரச்சினையை கொடுத்துவருகின்றது என்பது அனைவருக்கும் தெரியும். கண்டிப்பாக இதற்கு எல்லாம் யாரோ ஒருவர் காரணமாக இருந்து இதனை வழிநடத்த வேண்டும். அதாவது சீனாவில் உள்ளவர் இதனை செய்யலாம்.

இதனை நன்கு மனோசக்தி பயிற்சி பெற்ற ஆன்மீகவாதி அவரின் மனதில் உருவாகும் எண்ணத்தை மாற்றலாம். கண்டிப்பாக அந்த ஆன்மீகவாதி வெளியில் தெரியாதவர்களாக இருப்பார். எப்படி இதனை சொல்லுகிறேன் என்றால் ஆன்மீகத்தில் இது சாத்தியப்படக்கூடிய ஒன்று என்பதால் இதனை சொல்லுகிறேன்.

இதனை உங்களிடம் சொல்லுவதற்க்காக காரணம் ஆன்மீகத்தில் உள்ள திறன் அப்படிப்பட்ட ஒன்று. இதனை கொஞ்சம் நான் அறிந்ததால் சொல்லுகிறேன். கண்டிப்பாக நான் செய்கிறேன் என்று நினைக்கவேண்டாம் எனக்கு எல்லாம் அப்படிப்பட்ட சக்தி கிடையாது. உங்களிடம் சொல்லுவதற்க்கு காரணம் நீங்களும் இப்படிப்பட்ட சக்தியை உருவாக்கமுடியும்.

நிறைய ஆன்ம சாதகர்கள் நம்ம நாட்டில் இருக்கின்றனர். இவர்கள் இதனை எல்லாம் கண்டுக்கொள்வதில்லை. இதனை எல்லாம் கண்டுக்கொண்டார்கள் என்றால் கண்டிப்பாக பெரியவில் மாற்றம் வரும். மனிதனிடம் உள்ள சக்தி மிகப்பெரிய சக்தி இதனை அறிந்துக்கொண்டால் போதும்.

சீனாவில் உள்ளவர்கள் இதனை தடுக்கவும் செய்வார்கள். அதனையும் மீறி இதனை செய்வதற்க்கு இந்தியாவில் உள்ளவர்களால் முடியும். ஏன் என்றால் இந்தியாவில் இருந்து தான் ஆன்மீகம் வெளியில் சென்றது. ஆன்மீகத்தில் இந்தியனை வெல்லுவதற்க்கு ஆட்கள் கிடையாது என்று சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கேள்வி & பதில்


ணக்கம்!
          ஒரு இடத்தில் நல்ல வசதியாக வாழுங்கள் என்று சொல்லுகின்றீர்கள் ஒரு இடத்தில் ஆடம்பரம் இல்லாமல் வாழுங்கள் என்று சொல்லுகின்றீர்கள் எந்த வாழ்க்கையை வாழுவது என்று சொல்லுங்கள்.

மேலே நண்பர் ஒருவர் கேட்ட கேள்வி. நான் காலையில் சொன்னது மறைவு ஸ்தானத்தைப்பற்றி சொல்லுகிறேன். மறைவுஸ்தான தசா நடக்கும்பொழுது மட்டுமே ஆடம்பரம் இல்லாமல் வாழுங்கள் என்று சொல்லுகிறேன்.

நல்ல தசா நடக்கும்பொழுது உங்களின் விருப்படி ஆடம்பரமாகவே வாழுங்கள். ஒரு கெடுதல் தசா நடக்கும்பொழுது உங்களுக்கு கண்டம் என்பது வரும் என்பதால் இப்படி சொன்னேன். நல்ல தசா நடந்தால் கண்டிப்பாக நீங்கள் நன்றாகவே வாழலாம்.

பொதுவாக கொஞ்சம் அமைதியாக வாழ்ந்தால் அது எப்படிப்பட்ட தசாவாக இருந்தாலும் நல்லது. உங்களுக்கு எந்த காலத்திலும் அது தோல்வியை கொடுக்காது என்பது தான் உண்மை. ஏன் என்றால் நடுநிலையில் நீங்கள் வாழ்ந்தால் அது கிரகங்களின் பாதிப்பில் இருந்து தப்பித்து வாழுவது. கிரகங்களால் உங்களுக்கு பாதிப்பு இல்லை.

உயர்ந்த நிலையில் வாழ்ந்துவிட்டு ஏதோ ஒரு கிரகத்தின் தாக்குதலால் கீழே வீழ்ந்துவிட்டால் உங்களின் வாழ்க்கை மிக கஷ்டமாக போய்விடும் அப்பொழுது உங்களால் வாழ்வது என்பது ஒரு கொடுமையான வாழ்க்கையாகிவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மறைவுஸ்தானம்


ணக்கம்!
         ஒருவருக்கு மறைவுஸ்தானத்தின் அதிபதி தசா நடந்தால் அவர்க்கு ஆயுள் கண்டம் ஏற்படும். ஆறாவது வீட்டு அதிபதி தசா நடந்தால் நீங்கள் வாழும் வாழ்க்கை முறையில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

உங்களிடம் பணம் இருந்தாலும் கடன் வாங்கிக்கொண்டு தான் அனைத்திலும் செயல்படவேண்டும். ஒரு பொருளை வாங்கினால் கூட கடன் வாங்கி அதனை வாங்கி வாங்க வேண்டும். கடன் ஆறாவது வீட்டு தசா முடியும் வரை ஏதாவது ஒரு ரூபத்தில் இருக்கவேண்டும்.

உங்களிடம் பணம் இருந்தால் கூட அதனை வெளியில் காட்டகூடாது. நான் பணக்காரன் என்று வெளியில் சொன்னால் அதுவே உங்களுக்கு ஆபத்தாகவும் முடியும். பணம் இருந்தால் கூட பணமே சம்பாதிக்க முடியவில்லை என்று நீங்கள் பிறர்களிடம் சொல்லிக்கொண்டு இருக்கவேண்டும்.

உங்களிடம் எல்லாமே இருந்தாலும் எளிமையாக இருந்தால் அது உங்களை பெரியவில் பாதிப்பதில்லை இது எல்லோருக்கும் பொருந்தும். பணமே இருந்தாலும் மறைவு ஸ்தானம் தசா நடைபெறும்பொழுது எளிமையாக காட்டிக்கொண்டால் போதுமானது அந்த தசா உங்களை பெரியவில் பாதிப்பதில்லை.

உங்களிடம் சொகுசு கார் வைத்திருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆறாவதுவீட்டு தசா நடக்கும்பொழுது நீங்கள் அந்த காரை  அடிக்கடி பயன்படுத்தாமல் ஒரு அரசு பேருந்தில் ஏறி செல்லவேண்டும். பெரியளவில் உங்களை தசா பாதிக்காது.

அணியும் ஆடைகளிலும் பகட்டு காட்டகூடாது. சாதாரணமான ஒரு ஆடைகளை அணிந்துக்கொண்டு செல்லவேண்டும். இது மிக மிக முக்கியமான ஒன்று. இப்படி நீங்கள் செய்தால் ஆறாவது வீட்டு தசாவாக இருந்தாலும் சரி எந்த மறைவு தசாவும் வேலை செய்யாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, August 16, 2017

கடன்


வணக்கம்!
          நமக்கு ஏற்படும் கடன் ஆறாவது வீட்டில் இருந்து வருகின்றது என்பது தெரியும். அதேப்போல் நமக்கு கடன் கொடுப்பவர்களும் ஆறாவது வீட்டு அதிபதியை பொறுத்து தான் கடன் கொடுப்பவரையும் கணிக்கமுடியும்.

பொதுவாகவே நமக்கு ஒருவர் கடன் கொடுக்கிறார் என்றால் ஒன்று அன்பால் கொடுக்கவேண்டும் அப்படி இல்லை என்றால் நம்மை வைத்து அவர் ஏதாே செய்ய போகிறார் என்று அர்த்தம் கொள்ளவேண்டும். 

நமக்கு கடன் கொடுக்கிறார்கள் என்றால் ஒன்று நட்பு வட்டாரம் செய்யும். அடுத்ததாக உறவினர்கள் செய்வார்கள். கொஞ்ச காலத்திற்க்கு முன்பு உறவினர்கள் தான் கடன் கொடுப்பார்கள். தற்பொழுது உறவினர்கள் செய்வதில்லை என்று பரவலாக தெரிகிறது.

நம்முடைய சொந்த அனுபவத்திலும் உள்ளதால் அதனை வைத்து சொல்லுகிறேன். எனக்கு கடன் தேவைப்படும்பொழுது எல்லாம் நட்பு வட்டம் தான் செய்து இருக்கின்றது. உறவினர்கள் வட்டம் இரண்டாம் பட்சம் தான் கொடுக்கும்.

தற்பொழுது எல்லா இடத்திலும் நட்பு வட்டம் தான் இதனை செய்கிறது. உறவினர்களிடம் இருந்து கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு மனிதனை உயர்த்துவதில் நட்பு வட்டம் தான் அதிகம் செய்கிறது. உறவினர்கள் நாம் இவனுக்கு செய்தால் இவன் முன்னேற்றம் அடைந்துவிடுவான் என்று ஒதுங்கிவிடுகின்றார்கள்.

கடன் நமக்கு கொடுப்பதை பொறுத்து தான் நம்முடைய மதிப்பு என்ன என்பது நமக்மே தெரியும். இது எல்லாம் கடவுளே நமக்கு கொடுக்கும் அனுபவம் என்பது தெரிகிறது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மருத்துவம்


வணக்கம்!
          ஒரு நோயை கண்டறிந்து அதனை நீக்குவது என்பது பெரிய விசயம். சோதிடத்தில் நோயை கண்டறிவது என்பது பெரிய தலைப்பு அது. அதனைப்பற்றி நிறைய தகவல் இருக்கின்றன. நமக்கு எப்படிப்பட்ட நோய் வரும் அதனை கண்டறிந்து அதற்கு தீர்வு என்ன என்பது எல்லாம் அதில் வரும்.

ஒரு மருத்துவருக்கு நோய்க்கு மருந்து மட்டும் கொடுப்பதை விட அவர்க்கு சோதிடமும் தெரிந்து இருக்கவேண்டும் என்று சொல்லுவார்கள். சோதிடம் தெரிந்தால் தான் அவர் பிறர்க்கு சரியானமுறையில் தீர்வை தரமுடியும்.

நாம் ஆறாவது வீட்டில் இருந்து இந்த நோய் வந்திருக்கின்றது அல்லது வரும் என்று சொன்னால் அதற்கு பரிகாரம் ஒரு வழிபாட்டை சொல்லலாம். சரியான மருந்தை அதற்கு தகுதியானவர்கள் தான் சொல்லவேண்டும். 

ஒரு நோய் வந்துவிட்டால் அந்த நோயை குணப்படுத்த எந்த மருத்துவர் உங்களுக்கு சரியான மருத்தை கொடுப்பார் என்பதை தெரிந்துக்கொண்டு அதனை எடுக்கவேண்டும். அதாவது உங்களுக்கு ஒரு வருகின்றது என்றால் அந்த நோய்க்கு எந்த மருத்துவரை நாடலாம் என்பதை சொல்ல ஒரு ஆள் வேண்டும்.

இன்றைய காலத்தில் எந்த மருத்துவத்தை நாடினால் அதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்பதை அறிந்துக்கொண்டு கூட மக்கள் அந்தந்த மருத்துவத்தை நாட ஆரம்பித்துவிட்டார்கள். இந்த மருத்துவத்தை சொல்லுவதற்க்கும் ஒரு ஆள் வேண்டும். இதனை எடுங்கள் சரியாகும் என்று சொல்லுவார்கள். அதற்கு நல்ல ஆட்களை நாம் பழக்கம் வைத்துக்கொள்வது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, August 15, 2017

நோயும் இடமும்


வணக்கம்!
          ஆறாவது இடத்தில் இருந்து தான் நோய் வரும் என்று தெரியும். ஒரு சில காலங்களில் ஒரு சில இடங்களில் அது பொதுவாகவும் வரும். அந்தந்த இடத்தை பொறுத்து இது அமைகிறது.

தற்பொழுது டெங்கு காய்ச்சல் வருகின்றது. இது எங்கு அதிகம் இருக்கின்றது என்றால் சேலம் ஈரோடு திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் இது அதிகம் இருக்கின்றது என்று சொல்லுகின்றனர். இதற்கு முன்பு டெங்கு காய்ச்சல் கன்னியாகுமரி பகுதி மற்றும் தென் தமிழகத்தில் இது இருந்தது.

தற்பொழுது மேலே சொன்ன இடத்தில் இந்த நோய் அதிகம் இருக்கின்றது என்று செய்தியில் படிக்கிறோம். பொதுவாக டெங்கு காய்ச்சல் என்றாலே அது கொசுவிடம் இருந்து தான் வருகின்றது என்று தெரியும். தமிழ்நாட்டில் கொசு எல்லா இடத்திலும் இருக்கின்றது ஒவ்வொரு பகுதிக்கும் எப்படி இந்த நோய் வருகின்றது.

நீங்களே செய்தியை படிக்கும்பொழுது அல்லது பார்க்கும்பொழுது இது நன்றாக தெரியும். சுத்தம் மற்றும் அசுத்தம் எல்லா இடத்திலும் இருக்கும் ஆனால் நோய் குறிப்பிட்ட பகுதியில் தான் தாக்கம் அதிகமாக இருக்கும். 

ஆன்மீக ரீதியில் நிறைய இதனை சொல்லலாம் ஆனால் அது எல்லாம் நமக்கு தேவையில்லை. அதாவது ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு நோய் தாக்கும்பொழுது நமக்கு நேரம் சரியில்லை என்றால் அந்த பகுதிக்கு செல்லும்பொழுது நமக்கு வந்துவிடும்.

காய்ச்சல் தாக்கப்பட்டவர்களின் ஜாதகத்தை நாம் எடுத்து பார்த்தால் அவர்களுக்கு ஆறாவதுவீட்டு அதிபதி செவ்வாய் மற்றும் சனி இதன் தொடர்போடு நோய் வந்திருக்கும். ஆறாவது வீடு மட்டும் இல்லாமல் அந்தந்த பகுதி அந்த பகுதியில் வாழும் மோசமான ஜாதகர்களுக்கு கண்டிப்பாக இந்த மாதிரியான நோய் வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஆறாவது ஸ்தானம்


வணக்கம்!
          ஆறாவது ஸ்தானம் பலப்படுவது நல்லது என்று சோதிட சாஸ்திரத்தில் சொல்லுவார்கள். ஆறாவது ஸ்தானம் பலப்படும்பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகர் துணிச்சலாக பல சாதனையை செய்து வாழ்வில் முன்னேற்றம் காண்பார்கள்.

வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டாலும் ஒரு விதத்தில் உஷாராக இருக்கவேண்டும். அவருக்கு வருகின்ற நோயில் உஷாராக இருக்கவேண்டும். நோய் இல்லை என்றாலும் திடீர் மரணம் வந்து ஜாதகரை தூக்கிவிடுவதும் உண்டு. நல்ல இருந்தவர் மரணம் அடைந்துவிட்டார் என்று சொல்லுவார்கள்.

ஒரு சிலர் மர்மநோய் தாக்கி கூட உயிர் இழப்பதும் ஆறாவதுவீடு பலப்படும்பொழுது தான் நடக்கிறது. எப்பொழுதும் ஆறாவதுவீட்டை மட்டும் கவனத்தில் கொண்டு செயல்படும்பொழுது வாழ்வில் நோய் இல்லாமல் இருக்கலாம்.

இல்லறத்தில் இருப்பவர்கள் உஷாராக இருக்கவேண்டும். அவர்களுக்கு கடமை என்பது நிறைய இருக்கின்றது. கடமையை செய்வதற்க்கு உடல் பலம் வேண்டும் அல்லவா அதனால் கவனித்துக்கொள்ளுங்கள். 

ஜாதகத்தை எடுத்து ஆறாவது வீடு எது அந்த வீட்டின் அதிபதி அதில் அமரும் கிரகம் அந்த வீட்டிற்க்கு கிடைக்கின்ற பார்வை அனைத்தையும் தெரிந்துவைத்துக்கொண்டால் நல்லது. வாழ்க்கையில் நோய் சண்டை சச்சரவு கடன் இல்லாமல் இருக்கலாம் அல்லவா அதனால் சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, August 14, 2017

லாபம் நஷ்டம்


ணக்கம் !
         ஒரு இடத்தில் இருந்து பணவரவு வந்துக்கொண்டே இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். நாம் அந்த பணத்தை சேமித்து வைத்துக்கொண்டே இருப்போம். ஏதாவது ஒரு வழியில் ஒரளவு செலவு செய்ய வேண்டும். அனைத்திலும் லாபம் மட்டுமே குறிக்கோளாக இருந்தால் பெரிய அளவில் நமக்கு ஒரு நாள் பிரச்சினை வந்துவிடும்.

ஒரு வழியில் சம்பாதித்தால் ஒரு வழியில் அழிவுக்கு என்று கொடுக்கவேண்டும். ஆன்மீகத்திற்க்கு என்று பெரிய பணக்காரர்கள் எல்லாம் செய்யும் செலவு எல்லாம் இதனை கருத்தில் கொண்டு தான் செய்வார்கள். ஒரு பக்கம் பணம் செல்லவேண்டும் என்று செய்வார்கள்.

பெரிய கம்பெனிகள் எல்லாம் லாபத்திற்க்கு ஒரு தொழில் செய்வார்கள். நஷ்டத்திற்க்கு வேறு ஒரு தொழில் செய்வார்கள். அதாவது வருகின்ற லாபம் பாதிக்கப்படகூடாது என்பதை கருத்தில் கொண்டு நஷ்டத்திற்க்கு என்று ஒரு தொழிலை நடத்திக்கொண்டு இருப்பார்கள்.

ஜாதகத்தில் மறைவு இடங்களுக்கு என்று நாம் தீனி போடவேண்டும். நமக்கு வருகின்ற தீமைகள் வராமல் இருப்பதற்க்கு இந்த மாதிரியான  விசயங்களை செய்தாலே அதிகப்பட்சம் தீமைகள் வராமல் இருக்கும்.

அனைத்திலும் நாம் லாபத்தை தான் பார்ப்பேன் ஒரு பைசா நான் செலவு செய்யமாட்டேன் என்று நினைத்தால் உங்களுக்கு மறைவு ஸ்தானத்தில் இருந்து வரும் அடி பெரியளவில் இருக்கும் என்பதை மட்டும் தெரிந்துக்கொள்ளுங்கள்.

விரைவில் சென்னையில் என்னை சந்திக்கலாம். சென்னையில் சந்திக்க விருப்பம் இருக்கும் நபர்கள் என்னை தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

வணக்கம்!
          நேற்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

வணக்கம்!
          நேற்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

ணக்கம்!
                        நேற்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு