Followers

Tuesday, May 31, 2016

நட்சத்திரம் பூசம்


ணக்கம்!
          பெரும்பாலும் பூசநட்சத்திரத்தில் ஒரு கிரகம் சென்றுக்கொண்டு இருந்தால் அந்த கிரகத்தின் பலன் கொஞ்சம் குறைவாக தான் இருக்கின்றது. பல பேர்களுக்கு அனுபவத்தில் இதனை பார்த்து இருக்கிறேன்.

சோதிடவிதியில் இதனைப்பற்றி சொல்லியுள்ளார்களா என்பதைப்பற்றி தெரியாது ஆனால் அனுபவத்தில் பூசநட்சத்திரத்தில் செல்லும் கிரகங்கள் தங்களின் பலனை குறைவாக கொடுக்கிறது. 

பூசநட்சத்திரம் வரும் நாட்களில் கூட மந்த நிலையை ஏற்படுத்தும் அதாவது பரப்பரப்பு இல்லாமல் இருக்கும். பூசம் சனியின் நட்சத்திரம் என்பதால் அப்படி இருக்கலாம். சனி மந்தக்காரகன் அல்லவா அதனால் மந்தநிலை ஏற்படும்.

உங்களின் ஜாதகத்தில் பூசநட்சத்திரத்தில் ஒரு கிரகம் சென்றுக்கொண்டிருந்தால் அந்த கிரகத்தின் பலன் குறைவாக கொடுக்கும் அதற்கு பரிகாரம் செய்யவேண்டும்.

சனி கிரகத்தை அதிகப்படுத்த செவ்வாய கிரகத்திற்க்கு பரிகாரம் செய்யவேண்டும். தை பூச நட்சத்திரத்திற்க்கு முருகன் கோவில் எல்லாம் விஷேசமாக இருக்கும் அல்லவா. அதுபோல் நீங்களும் முருகனுக்கு பரிகாரம் செய்து வலுப்படுத்திக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, May 30, 2016

ஜாதக தீர்வு :: ஆத்மகாரகன்



ணக்கம்!
          ஜாதகத்தை வைத்து தீர்வை சொல்லவந்தோம் இடையில் அப்படியே நட்சத்திரத்தையும் பார்க்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இனி ஜாதகத்திற்க்கு தீர்வை பார்க்கலாம்

சூரியன் என்பவர் ஆத்மாகாரகன் என்று அழைக்கப்படுகிறார். உங்களின் ஜாதகத்தில் லக்கினாதிபதியும் ஆத்மாகாரகன் என்று அழைத்தாலும் சூரியன் நன்றாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்குள் இருக்கும் ஆத்மா நன்றாக இருக்கும்.

லக்கினாதிபதியாக இருக்கட்டும் சூரியனாக இருக்கட்டும் யாராக இருந்தாலும் நன்றாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே உங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும். நல்ல வளர்ச்சியை நோக்கி செல்லும்.

இன்றைய காலத்தில் ஞாயிற்றுகிழமை என்றாலே அவர் அவர்களுக்கு தூங்கும் ஒரு தினமாகவே வைத்திருக்கிறார்கள். எப்படியே இருந்துவிட்டு போகட்டும்.

சூரியன் நன்றாக இருப்பதற்க்கு என்ன செய்யவேண்டும் என்றால் தினமும் அதிகாலையில் எழுந்தால் போதுமானது. வேறு தனியாக பரிகாரம் செய்யவேண்டாம். காலையில் எழுந்துவிட்டால் உங்களுக்கு அனைத்தும் தானாக நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, May 29, 2016

ராகு சந்திரன் கூட்டணி பலன்


வணக்கம்!
          ராகு சந்திரன் கூட்டணி பலனைப்பற்றி பார்த்து வந்தோம். தொடர்ந்து அதனைப்பற்றி பார்க்கலாம். மனக்காரகன் என்று அழைக்கப்படும் சந்திரனோடு சேரும்பொழுது மனதில் பல பிரச்சினை உருவாகும் அதில் வெறுப்பு என்ற தன்மை அதிகமாக இருக்கும்.

எதனை செய்தாலும் ஏதாவது பிரச்சினை வந்து அதிலேயே வெறுப்பு ஏற்பட்டு நாளடைவில் அதிக வெறுப்பாகி சுற்றும் நிலைமை ஏற்படும். எதுவும் நடக்கவில்லை என்றால் என்ன செய்வது வெறுப்பு தான் அதிகமாக வரும். நிறைவான செல்வம் வந்து கூட ஒரு சிலருக்கு வெறுப்பு ஏற்படும்.

நிறைய பணக்காரர்கள் கூட என்னிடம் கேட்டுள்ளார்கள். என்ன தான் இருந்தாலும் வெறுப்பாக இருக்கின்றது என்று சொல்லிருக்கிறார்கள். அதற்கு காரணம் ராகுவும் சந்திரனும் சேர்ந்து இருந்த காரணத்தால் இப்படி நடக்கிறது.

ராகு கிரகம் ஒரு சிலருக்கு அப்படி தான் வேலை செய்யும் எனக்கு ராகு தசா நடக்கும்பொழுது கூட அப்படி இருந்தது. எதிலும் பிடிப்பு இல்லை பிடிப்பு இல்லை என்றால் எதுவும் என்னிடம் இல்லை. நிரந்தரமாக எதுவும் இல்லாமல் இருந்தது. எனக்கு ராகுவும் சந்திரனும் சேர்ந்து இல்லை ஆனால் ராகு தசா அப்படி ஏற்படுத்தியது.

உங்களுக்கும் இப்படிப்பட்ட நிலை இருந்தால் பெளர்ணமி நாளில் கிரிவலம் சென்று வாருங்கள்.படிப்படியாக உங்களுக்கு இந்த பிரச்சினை குறையும்.

கோயம்புத்தூர் திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதியில் உள்ளவர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, May 28, 2016

பச்சைப்பரப்புதல்


வணக்கம்!
          பச்சைப்பரப்புதலைப்பற்றி அவ்வப்பொழுது பார்த்து வருகிறோம். ஒவ்வொரு குலதெய்வத்திற்க்கும் குலதெய்வம் தெரியாத நபர்களுக்கு இஷ்டதெய்வத்திற்க்கும் என்று பச்சைப்பரப்பதலை செய்யுங்கள்.

அமாவாசை அல்லது பெளர்ணமி உங்களின் குலதெய்வத்திற்க்கு உகந்த நாளில் மாலை நேரத்தில் இந்த பூஜையை செய்யவேண்டும். மாவிலக்கு பிசைந்து அதனை உருண்டையாக பிடித்து அதில் தீபம் ஏற்றவேண்டும். நெய் அல்லது எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றுங்கள்.

வாழை இலையை போட்டு கொஞ்சம் பச்சை அரிசியை எடுத்து தண்ணீர் விட்டு அலசி அதனை பரப்பி தேவையானல் கொஞ்சம் வெல்லத்தை போடலாம். அதன் மேல் மாவிலக்கு உருண்டை வைத்து உங்களின் குலதெய்வத்திற்க்கு உகந்த நேவேத்தியம் செய்து தீபாராதனை காட்டலாம்.

உங்களின் வேண்டுதலையும் வைக்கலாம். கோவிலில் சென்று வழிபடுவதைவிட இது அதிக பலனை உங்களுக்கு கொடுக்கும். தொடர்ந்து செய்து வர உங்களின் வாழ்வு மேம்படும். இதனைப்பற்றி பழைய பதிவில் நிறைய எழுதியிருக்கிறேன். படித்துபாருங்கள்.

கோயம்புத்தூர் ,திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதியில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளலாம். விரைவில் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, May 27, 2016

சுக்கிரனும் நட்சத்திரமும்


ணக்கம்!
          நட்சத்திரத்தைப்பற்றி பார்த்தோம் அல்லவா. ஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் அதிபதியைப்பற்றி சொல்லிருந்தேன். சுக்கிரனின் நட்சத்திரம் பரணி பூரம் மற்றும் பூராடம் ஆகும். இந்த நட்சத்திரத்தில் செல்லும் கிரகங்கள் பெரும்பாலும் நல்ல பலனை கொடுக்ககூடிய கிரகங்களாக இருக்கும்.

எப்படிப்பட்ட தீயகிரகங்களும் இந்த நட்சத்திரத்தில் செல்லும்பொழுது அதன் தீயபலன்கள் குறைந்து நல்ல பலனை கொடுக்ககூடிய கிரகங்களாக இருக்கின்றன. அனுபவத்தில் நான் பார்த்து இருக்கிறேன்.

ஒரு சிலருக்கு குரு கிரகம் இந்த நட்சத்திரத்தில் செல்லும்பொழுது கொஞ்சம் பிரச்சினையை கொடுக்கிறது. குருவுக்கும் சுக்கிரனுக்கும் ஆகாது என்பதால் இப்படிப்பட்ட பலனை கொடுக்கலாம்.

சுக்கிரனின் காரத்துவத்தைப்பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். சுக்கிரனுக்கு நீங்கள் பரிகாரம் செய்தால் சுக்கிரனின் நட்சத்திரத்தில் செல்லும் கிரகங்கள் சுக்கிரனின் காரத்துவத்தை உங்களுக்கு கொடுக்கும்.

பெரிய அளவில் கொடுக்கவில்லை என்றாலும் ஒரளவு நல்ல பலனை எதிர்பார்க்கலாம். பரிகாரம் செய்வதில் இருக்கிறது. உங்களின் ஜாதகத்தை நன்றாக பார்த்து அதற்கு தகுந்தார்போல் செய்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, May 26, 2016

ராகு சந்திரன் கூட்டணி பலன்


ணக்கம்!
          ராகு சந்திரன் கூட்டணியைப்பற்றி சொன்னோம் அல்லவா. அவர் அவர்கள் தன்னுடைய ஜாதகத்தை தூக்கிட்டு வந்து எனக்கு இப்படி இருக்க சார் எனக்கு என்ன செய்யலாம் என்று வந்துட்டார்கள். ஒவ்வொருவருக்கும் பதிலை சொல்லி அனுப்பி இருக்கிறோம்.

ராகு சந்திரன் அதிகப்பட்சமாக ஜாதகத்தில் ஆறாவது இடத்தில் சேர்ந்து இருந்தால் ஜாதகர் பெரும்பாலும் திருட்டு வேலை செய்பவராக இருப்பார்.  ஒரு சிலருக்கு அப்படிப்பட்ட மனநிலை கூட ஏற்படலாம்.

திருட்டு எண்ணம் வருவதும் ஜாதகத்தில் இருப்பதால் தான் வருகிறது. மனக்காரகனோடு ராகு கிரகம் சேரும்பொழுது இப்படிப்பட்ட மனநிலையை உருவாக்கி அவர்களை திருடவைக்கிறது. எல்லாேருக்கும் அப்படி என்று சொல்லமுடியாது .

ராகு சந்திரன் கூட்டணி இருந்தால் நானும் திருட்டு தொழில் தான் செய்யவேண்டுமா என்று நினைக்காதீர்கள். கோடியில் ஒருவருக்கு இப்படிப்பட்ட நிலைமை ஏற்படும். ஒவ்வொருவரின் ஜாதகமும் வித்தியாசப்படும்.

ஒரு சிலர் பிறர் மனதை கொள்ளை கொள்பவராகவும் இருப்பார்கள். பிறரின் மனதை கூட தன்வசம் ஈர்க்கும் ஒரு சக்தியை உடையவராகவும் இருப்பார்கள். அவர் அவர்களின் ஜாதகம் இதனை முடிவு செய்யும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

குருவின் அருள்


ணக்கம்!
         தற்பொழுது பல பேருக்கு குரு தசா நடக்கிறது ஆனால் குரு தசாவிற்க்கு உண்டான எந்த ஒரு நல்ல செயலும் எனக்கு நடக்கவில்லை என்று சொல்லுவார்கள்.அதற்கு காரணம் தசாநாதன் மட்டும் கிடையாது அவர்களின் முன்னோர்களும் சரியாக செய்யவில்லை என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.

முன்னோர்கள் என்பவர்கள் நமது தந்தை நமது தந்தைக்கு தந்தை இப்படி செல்லும் தொடரால் நாம் பாதிப்படைந்துக்கொண்டு இருக்கிறோம். அவர்கள் ஏதாவது ஒரு நல்லது செய்து இருந்தால் நமக்கு நடக்கும் குரு தசா வாரி வழங்கிக்கொண்டு இருக்கும்.

முன்னோர்களை நாம் குறைச்சொல்லி ஒன்றும் தற்பொழுது நடக்க போவதில்லை. அதற்கு வழி என்ன என்று பார்க்கவேண்டும். அது என்ன வழி என்றால் முன்னோர்கள் செய்த தவறுக்கும் நாம் தற்பொழுது பிராசித்தியம் தேடினால் கிடைத்துவிடும்.

பாக்கியஸ்தானம் சொல்லும் வழியில் நீங்கள் நடக்க ஆரம்பித்தால் உங்களின் வாழ்வு மேம்பட ஆரம்பிக்கும். பல பேருக்கு நான் இதனை தான் சொல்லுவேன். பலர் நன்றாக இருக்கின்றனர்.

இதனை கேட்காத நபர்கள் தற்பொழுதும் சிக்கலில் தவித்துக்கொண்டு இருக்கின்றனர். அவர் அவர்களுக்கு முடிந்ததை செய்து வெளியில் வந்துவிடுங்கள். குருவின் அருளால் நன்றாக வாழலாம்.

கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதியில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும். உங்களை விரைவில் சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, May 25, 2016

புதனும் நட்சத்திரமும்


வணக்கம்!
         ஒருவருக்கு நுண்ணறிவை காட்டக்கூடிய கிரகம் எது என்றால் புதன் கிரகம். புதன் கிரகம் எந்த கிரகத்தோடு சேருகின்றதோ அந்த கிரகத்தின் தன்மையை அப்படியே கொடுக்ககூடிய ஒரு கிரகம். புதன் தனித்து அமைந்தால் புதன் எந்த நட்சத்திரத்தில் சென்றுக்கொண்டு இருக்கின்றதோ அந்த நட்சத்திரத்தின் தன்மையை அப்படியே கொடுக்கும்.

ஒருவருக்கு புதன் கிரகம் அவிட்டம் நட்சத்திரத்தில் சென்றுக்கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம் அவர் பேசினாலே சண்டை சச்சரவு தான் ஏற்படும். அவிட்டம் செவ்வாயின் நட்சத்திரம் என்பதால் இப்படிப்பட்ட தன்மையை கொடுக்கும்.

புதன் கிரகம் அனுஷத்தில் சென்றால் அனுஷம் சனிக்கிரகத்தின் நட்சத்திரம் என்பதால் சனியின் தன்மையை கொடுக்கும். ஏதாவது வில்லங்கத்தை செய்துக்கொண்டே இருப்பார்.

பெரும்பாலும் பலருக்கு புதன் கிரகம் ஏதாவது ஒரு கிரகம் குறிப்பிட்டு சொன்னால் சூரியனோடு சென்றுக்கொண்டிருக்கும் தனித்து நிற்பவர்கள் மட்டும் நட்சத்திரத்தை பார்க்கலாம்.

புதன் தனித்து நின்று உங்களின் ஜாதகத்தில் இருந்தால் எந்த நட்சத்திரத்தில் செல்லுகின்றது என்பதை மட்டும் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். அந்த நட்சத்திர அதிபதியின் காரத்துவத்தை அப்படியே காட்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, May 24, 2016

ராகு


ணக்கம்!
          இராகுவைபற்றி நாம் நிறைய சொல்லிருக்கிறோம். நிறைய சொல்லவும் போகிறோம் இதற்கு எல்லாம் என்ன காரணம் என்று நினைக்க தோன்றும். நினைக்கிறீர்களா என்று எனக்கு தெரியவில்லை என்னுடைய மனது நினைக்கிறது அதனால் எழுதுகிறேன். 

இன்றைய வாழும் மக்களின் மனநிலை எப்படி இருக்கின்றது என்று பார்த்தாலே உங்களுக்கு தெரிந்துவிடும். ஒவ்வொருவரும் முடிந்தளவு வில்லங்கம் செய்கின்றனர். இப்படிப்பட்ட வில்லங்கம் எண்ணம் எல்லாம் ஒருவருக்கு வருகின்றது என்றால் ராகுவின் காரத்துவம் இல்லாமல் வருமா ?

ராகு குணங்கள் அதிகரிப்பதால் தான் இப்படிப்பட்ட விசயத்தில் கவனத்தை அதிகம் செலுத்தி எழுதுகிறேன். அதே நேரத்தில் நம்ம ஆட்களுக்கு பணம் என்றால் அதிக விருப்பம் என்பதால் ராகுவின் குணம் சும்மா கொட்டு கொட்டும் பணம் என்பதால் அதில் கவனத்தை செலுத்தி எழுதுகிறேன்.

இன்றைக்கு நடக்கும் ஒவ்வொரு மாற்றத்திற்க்கும் இராகு தான் அதிக காரணம் வகிக்கிறது. உலகம் இந்தளவுக்கு முன்னேற்றம் காண்கிறது என்றால் அதற்கு ராகு தான் காரணம் என்பதால் ராகுவைப்பற்றி கொஞ்சம் அதிகம் எழுதுகிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நட்சத்திரமும் தேவை


வணக்கம்!
         நேற்று நட்சத்திர பதிவை படித்துவிட்டு நிறைய மெயில்கள் வந்தன. அனைத்தையும் இலவசமாக தரவேண்டும் என்றால் பதிவை எழுத ரீசார்ஸ் கூட என்னால் செய்யமுடியாது. முடிந்தவரை உங்களின் ஜாதகத்தை கட்டணத்தில் அனுப்பி வையுங்கள்.

பல பேர்களின் சந்தேகம் நட்சத்திரம் எப்படி பார்ப்பது என்று கேட்டார்கள். சோதிட பாடம் படிப்பதில் அறிமுகத்தில் இருப்பவர்கள் என்று நினைக்கிறேன். உங்களின் ஜாதகத்தில் இராசி கட்டம் மற்றும் நவாம்ச கட்டத்திற்க்கு பிறகு வரும் ஏட்டில் கண்டிப்பாக சோதிடர்கள் இதனைப்பற்றி எழுதி வைத்திருப்பார்கள்.

பொதுவாக நட்சத்திரத்தை பார்த்து பலன் சொல்லுவது எல்லாம் நடக்கிறதா என்பது தெரியவில்லை. ஒவ்வொரு சோதிடர்களும் இதனை எல்லாம் ஆராய்ந்து சொன்னால் அவர்களுக்கு டைம் என்பது இருக்காது.

என்னைப்பொறுத்தவரை நட்சத்திரத்தை பார்த்து பலனையும் சொல்லுவேன் அதே நேரத்தில் பரிகாரத்திற்க்கு அதிகம் இதனை வைத்து தான் செய்வேன்.பரிகாரம் செய்யும்பொழுது நட்சத்திர கால் அறிந்து செய்யவேண்டும் அப்பொழுது தான் முழுமையான பயனை பெறலாம் என்பதால் இப்படி செய்வது உண்டு.

நட்சத்திரத்தை நன்றாக கவனிக்க தொடங்கினால் உங்களின் பலன் எப்படியும் மாறாது. அதாவது துல்லியமான பலனை உங்களால் கணிக்கமுடியும். அதனால் நட்சத்திரம் என்பது முக்கியமாக நீங்கள் கவனிக்கவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, May 23, 2016

நட்சத்திரம்


வணக்கம் !
          ஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் அதன் அதிபதியை கொடுத்து இருக்கிறேன்.

1. அஸ்வினி - கேது
2. பரணி - சுக்கிரன்
3. கார்த்திகை - சூரியன்
4. ரோகிணி - சந்திரன்
5. மிருகசீரிஷம் - செவ்வாய்
6. திருவாதிரை - ராகு
7. புனர்பூசம் - குரு
8. பூசம் - சனி
9. ஆயில்யம் - புதன்
10. மகம் - கேது
11. பூரம் - சுக்கிரன்
12. உத்திரம் - சூரியன்
13. அஸ்தம் - சந்திரன்
14. சித்திரை - செவ்வாய்
15. சுவாதி - ராகு
16. விசாகம் - குரு
17. அனுஷம் - சனி
18. கேட்டை - புதன்
19. மூலம் - கேது
20. பூராடம் - சுக்கிரன்
21. உத்திராடம் - சூரியன்
22. திருவோணம் - சந்திரன்
23. அவிட்டம் - செவ்வாய்
24. சதயம் - ராகு
25. பூரட்டாதி - குரு
26. உத்திரட்டாதி - சனி
27. ரேவதி - புதன்

மேலே 27 நட்சத்திர அதிபதி யார் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். உங்களின் ஜாதகத்தை எடுத்து எந்தந்த கிரகங்கள் எந்த நட்சத்திரத்தில் சென்றுக்கொண்டு இருக்கின்றது என்பதை பாருங்கள். இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் இதனை வைத்து ஒரு வேலை செய்யலாம் என்பதற்க்காக சொல்லுகிறேன். 

உங்களின் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் எந்த நட்சத்திரத்தில் சென்றுக்கொண்டு இருக்கின்றது என்று பார்த்து அதன் அதிபதி யார் என்பதை தெரிந்துக்கொண்டுவிட்டு அதன் பிறகு எப்படி பலனை கொடுக்கிறது என்பதை பார்க்கலாம்.

உதாரணத்திற்க்கு ராகு அல்லது கேதுவை எடுத்துக்கொள்ளுங்கள். இது இரண்டும் ஜாதகத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லுவதே அது எந்த நட்சத்திரத்தில் செல்லுகிறதோ அந்த நட்சத்திர அதிபதியின் குணத்தை அப்படியே கொடுக்கும் கிரகங்களாக இருக்கின்றது.

உதாரணத்திற்க்கு ஒன்றை பார்க்கலாம்

பரணி நட்சத்திரத்தில் ராகு செல்லுகின்றது என்று வைத்துக்கொள்வோம். பரணி நட்சத்திர அதிபதி சுக்கிரன். சுக்கிரனின் காரத்துவத்தை அப்படியே கொடுக்கும். ராகு சுக்கிரன் போல் செயல்படுவார். மேலே சொன்ன விசயம் உங்களுக்கு தெரிந்து வைத்திருப்பீர்கள் இது எல்லாம் ஒரு விசயமாக என்று கேட்கலாம். 

ராகு அனுஷ நட்சத்திரத்தில் சென்றுக்கொண்டு இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அனுஷம் சனியின் நட்சத்திரம். ஜாதகருக்கு சனி ஒரு வீட்டில் இருந்து பலனை கொடுத்துக்கொண்டு இருக்கும் அதோடு ராகு சனியின் குணத்தை கொடுத்துக்கொண்டு இருக்கும். ஜாதகருக்கு இரண்டு சனி என்று கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டியது தான்.

ஒரு சனியேவே தாங்கமுடியவில்லை இதில் இரண்டு சனி என்றால் என்ன செய்வது என்று நீங்களே தெரிந்துக்கொள்ளுங்கள். இந்தளவுக்கு உள்ளுக்குள் சென்று யாரும் பார்ப்பதில்லை. வாழ்வில் பெரிய வாழ்க்கை வாழவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் கண்டிப்பாக இதனை தெரிந்துக்கொள்ளவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஜாதக தீர்வு :: சந்திரன்


வணக்கம்!
          சந்திரன் எந்த நட்சத்திரத்தில் சென்றுக்கொண்டிருக்கிறது என்பதை கவனிக்கவேண்டும். நட்சத்திர அதிபதியின் குணத்தை அப்படியே சந்திரன் கொடுக்கும். 

உதாரணமாக சந்திரன் பூசம் நட்சத்திரத்தில் சென்றுக்கொண்டு இருந்தால் சனியின் குணத்தை அப்படியே கொடுக்கும். சனியின் குணத்தை உடையவராக இருப்பார்.

நட்சத்திர அதிபதியை நாம் தெரிந்துக்கொண்டு என்ன செய்ய போகிறோம் என்று கேட்கலாம். சனியின் குணத்தை உடையவராக ஒருவர் இருந்தால் அது கொஞ்சம் கடினமான ஒரு விசயமாக இருக்கும் என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது நட்சத்திர அதிபதிக்கு பரிகாரம் செய்யலாம்.

நட்சத்திர அதிபதிக்கு பரிகாரம் செய்யும்பொழுது அவரின் கெடுதல் குணம் குறைந்து ஒரளவு நல்ல குணத்தை அளிக்கும். நமக்கு வரும் தீமையை குறைக்கும் ஒரு வழி என்பதால் இதனை சொல்லுகிறேன்.

ஒவ்வொறு நட்சத்திரத்திற்க்கும் தனிதனி குணம் இருக்கும் அதனை எல்லாம் தெரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார் போல் பரிகாரத்தை செய்தால் ஒரளவு ஜாதகருக்கு நிம்மதியை ஏற்படுத்தி தரமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, May 22, 2016

நல்ல நேரத்திற்க்கு காத்திருப்போம்


ணக்கம்!
          இராமாயாணம் தொடரை பார்த்து இருப்பீர்கள் அல்லது படித்திருப்பீர்கள். இதில் சொல்லப்படும் ஒரு செய்தி இராவணன் கிரகங்களை எல்லாம் தன்வசப்படுத்தி கட்டுபோட்டு வைத்திருப்பார். அந்த நேரத்தில் இயற்கை சீற்றம் அதிகமாக நடக்கும். இதனை அறிந்து இராமன் அனுமனை அனுப்பி கிரகங்களை கட்டு அவிழ்த்து விடுவிப்பான். கிரகங்களை வைத்து இராமனுக்கு மரணயோகத்தை உருவாக்க இப்படி இராவணன் சதி செய்வான்.

கிரகங்களை நமக்கு தகுந்தவாறு செய்துவிடமுடியும் என்று அந்த காலத்திலேயே இதனை சொல்லி இருக்கிறார்கள். கிரகங்களை வைத்து செய்யும் வேலை என்பது இது தான். நாம் எதனை செய்தாலும் நமக்கு கிரகங்கள் அனுகூலமாக இருந்தால் நாம் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம். 

கிரகங்கள் நமக்கு சாதகமாக இல்லை என்றால் நாம் எளிதில் வெற்றி பெற்றுவிடமுடியாது. சரி நாம் என்ன செய்யலாம் என்று சொல்லுகிறேன். கிரகங்கள் நமக்கு சாதகமாக வரும் காலம் வரை கொஞ்சம் அமைதியாக இருந்துவிடலாம். கிரகங்கள் நமக்கு சாதகமாக இல்லை என்றால் எந்த காரியத்தையும் ஒரு எச்சரிக்கை உணர்வோடு இருக்கவேண்டும்.

கிரகங்களை மாற்றும் வேலை எல்லாம் வேண்டாம் அது சரியான வழிக்கு வரும் வரை காத்து இருக்கலாம்.  எப்படியும் வெற்றி பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் கிரகங்களை பிடித்தால் போதும் கண்டிப்பாக எப்படியும் கொடுத்துவிட்டு போகும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஜாதக தீர்வு : நேரம்


ணக்கம்!
          நமக்கு ஏதோ ஒரு பிரச்சினை வருகின்றது என்றால் பிரச்சினை வந்ததை பார்ப்பதை விட இந்த பிரச்சினை எதனால் வருகின்றது என்பதை பார்க்கவேண்டும். பிரச்சினை என்றால் எந்த கிரகத்தால் வருகின்றது என்பதை முதலில் பார்க்கவேண்டும்.

பொதுவாக உள்ள மனிதனாக இருந்தால் என்ன செய்வான் என்றால் ஒருத்தன் சண்டைக்கு வந்தால் அவனோடு மல்லு கட்டிக்கொண்டு இருப்பான். நீங்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்றால் எந்த கிரகத்தால் வருகின்றது என்பதை தான் பார்க்கவேண்டும்.

நமக்கு வரும் பிரச்சினை எல்லாமே கிரகங்கள் வழியாக தான் வரும். நமக்கு நல்லது வந்தாலும் சரி தீயது வந்தாலும் சரி அனைத்தும் கிரகங்களால் தான் வரும். நாம் அதனை தெரிந்துவைத்துக்கொண்டாலே போதும் நாம் பிறர் மீது பழிபோட்டுக்கொண்டு இருப்பதை விட நாமே அதனை சரி செய்துக்கொள்ளமுடியும்.

தீர்வு

ஓரை என்ற ஒன்று இருக்கின்றது. உங்களிடம் ஒருவர் சண்டைக்கு வந்தால் அந்த நேரத்தை மனதில் இருத்திக்கொண்டு காலண்டரை எடுத்து அந்த கிழமையில் அந்த நேரத்தில் எந்த ஓரை என்று பார்த்தாலே போதும் இந்த கிரகத்தால் பிரச்சினை வந்தது என்று தெரிந்துக்கொள்ளமுடியும். 

ஓரையிலும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால் ஜாதகத்தை எடுத்து தான் பார்க்கவேண்டும். அந்த கிரகம் உங்களுக்கு பிரச்சினை தருகின்றது என்பது புரிந்துவிடும். அந்த கிரகத்தின் நேரத்தில் சும்மா இருந்துவிடலாம் அல்லது ஏதாவது பரிகாரத்தை செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, May 21, 2016

ராகு சந்திரன் கூட்டணி பலன்


ணக்கம்!
          ராகு சந்திரனோடு சேர்ந்த என்ன பலன் என்று அவ்வப்பொழுது பார்த்துக்கொண்டு வருகிறோம். இன்று ஒன்றைப்பற்றி பார்க்கலாம். ராகுவோடு சேரும் சந்திரன் மனநிலை பாதிப்பை ஏற்படுத்தினாலும் ஒரு சிலருக்கு இதனால் நல்ல பலனை கொடுத்து இருக்கிறது.

ராகு செவ்வாய் வீட்டில் அல்லது சனியின் வீட்டில் இருக்கும்பொழுது நல்ல தைரியத்தை ஒரு சிலருக்கு கொடுக்கிறது. நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள் ஒரு சிலருக்கு தான் இப்படி கொடுக்கிறது. அனைவருக்கும் கிடையாது.

இப்படி தைரியத்தை கொடுக்கும் ஆட்களுக்கு எதிலும் ஈடுபட்டு வென்று வந்துவிடுகிறார்கள். என்ன ஒன்று என்றால் அது தவறான வழியாக கூட இருக்கலாம். எதிலும் ஒரு தில்லாக இருந்து காரியத்தை முடிப்பவர்களை எல்லாம் நீங்கள் பார்த்தால் அவர்களின் ஜாதகத்தை எடுத்து பார்த்தால் இப்படிப்பட்ட விசயம் இருக்கும்.

உங்களுக்கு இருந்து அடடா நாம இதுவரை இந்த வழியில் எல்லாம் இறங்கவில்லையே என்று இறங்கிவிடவேண்டாம். கிரகங்களாக பார்த்து அதன் வேலையை செய்யவேண்டும். நாமும் அப்படி தான் இறங்கவேண்டும் என்று இறங்கினால் பிரச்சினையில் மாட்டிக்கொள்வீர்கள்.

ஒரு சில நபர்களுக்கு மட்டும் இப்படி இருக்கின்றது. அதனை வைத்து உங்களுக்கு சொல்லுகிறேன். ராகு சந்திரன் நிலையை கவனிக்கும்பொழுது நிறைய சோதிடஅறிவு தேவைப்படும் அப்பொழுது தான் நாம் கணிக்கமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

காரிய வெற்றி


ணக்கம்!
          ஒவ்வொரு காரியமும் வெற்றியை நோக்கி செல்லுகின்றது என்றால் அது நாம் செய்யும் தர்ம புண்ணிய காரியங்களால் தான் நடைபெறுகிறது.

நம்மிடம் சோதிடம் பார்த்து அவர்களுக்கு ஏதாவது பரிகாரம் செய்வது என்றாலும் முதலில் தர்மம் செய்துவிட்டு அதன் பிறகு பரிகாரம் செய்வது உண்டு. அதற்கு காரணம் அப்பொழுது தான் அவர்களுக்கு காரியம் வெற்றி பெறும்.

ஒரு பரிகாரம் என்பது யார் செய்தாலும் அது வேலை செய்யும் ஆனால் நமது தர்ம புண்ணிய கணக்கை பொறுத்து தான் அது எப்பொழுது வெற்றி பெறுகிறது என்பதை முடிவு செய்யமுடியும். 

எனக்கு தெரிந்த ஒருவர் எப்பொழுதும் ஏதாவது கோவிலில் ஏதாவது ஒரு நிகழ்வை செய்துக்கொண்டே இருப்பார். அப்பொழுது எல்லாம் எனக்கு அந்தளவுக்கு ஆன்மீக அனுபவம் கிடையாது அவரை தற்பொழுது பார்த்தால் மிக உயர்ந்த ஒரு இடத்தில் இருக்கிறார். இதற்கு எல்லாம் காரணம் அவர் செய்த அந்த ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நிகழ்வு தான் காரணமாக இருக்கின்றது.

சோதிடத்தில் கூட சொல்லிருப்பது ஒரு காரியம் வெற்றி பெறவேண்டும் என்றால் உன்னுடைய பாக்கியம் என்று சொல்லி ஒன்பதாவது வீட்டை காண்பித்து இருக்கிறார்கள். பாக்கியஸ்தானம் சொல்லும் கருத்தும் தர்ம புண்ணியம் தானே தவிர வேறு ஏதும் இல்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, May 20, 2016

ஜாதக தீர்வு : சந்திரன்

ணக்கம்!
          ஜாதக தீர்வு என்பது அடிக்கடி நமது ஜாதக கதம்பத்தில் கொடுக்ககூடிய ஒன்று தான் அதில் கொஞ்சம் அதிகமான விசயத்தை தற்பொழுது பார்க்கலாம். ஒன்றை நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள் செயல்படுத்தினால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.

உங்களின் ஜாதகத்தில் சந்திரன் எப்படி இருக்கின்றது என்பதை முதலில் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். நீங்கள் உங்களின் மனைவியோடு வீட்டில் சண்டைபோட்டுக்கொண்டு அதன் பிறகு அலுவலகத்திற்க்கு சென்றால் உங்களின் மனநிலை உங்களை அலுவலக வேலை பார்க்க விடுமா ?

உங்களை கண்டிப்பாக அந்த மனநிலை விடாது. நீங்கள் கோவிலுக்கு செல்லுகின்றீர்கள் கோவிலுக்குள் இருக்கும் மனநிலை வெளியில் வந்து தெருவில் நடக்கும்பொழுது இருக்காது. சந்திரன் சரியாக இருந்தால் உங்களின் மனநிலை எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்கும். சந்திரன் அடிக்கடி மாறும் கிரக நிலை என்பதால் மனநிலையும் அப்படி மாறுகிறது என்று சொல்லுவார்கள்.

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெறவேண்டும் என்றால் உங்களின் மனநிலை சரியாக இருந்தால் போதும் கண்டிப்பாக நீங்கள் வெற்றி பெற்றுவிடுவீர்கள். சந்திரனை பிடித்தால் நாம் மனநிலையை சரி செய்துவிடலாம்.

சந்திரனை எப்படி பிடிப்பது. சந்திரனுக்கு என்று பல பரிகார முறைகளை சொல்லிருப்பார்கள் அதில் ஏதாவது ஒன்றை பின்பற்றி வந்தால் போதும் கொஞ்ச நாளில் நமது மனநிலை சரியாகி அனைத்தும் சரியாகிவிடும்.

உங்களின் ஜாதகத்தில் சந்திரன் எப்படி எல்லாம் இருக்கின்றது என்பதைப்பற்றி அலசி ஆராய்ந்து பாருங்கள். உங்களின் மனநிலையைப்பற்றி தெரிந்துக்கொள்ளமுடியும். அவர் அவர்களின் ஜாதகத்தைப்பொறுத்து தான் இதனை அறியமுடியும்.

இதனை கண்டிபிடுத்தாலே ஒரளவு நீங்கள் வெற்றி பெற்றுவிடுவீர்கள். அதாவது ஒரு பிடிமானம் கிடைத்துவிடும் இனி இப்படி மாற்றிக்கொள்ளலாம் என்ற தீர்வு உங்களுக்கு கிடைத்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, May 19, 2016

நல்ல வாய்ப்பு


வணக்கம்!
          நம்முடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு இதுவரை நாம் எப்படி வாழ்க்கை பயணம் செய்துக்கொண்டிருக்கிறோம் இனிமேல் எப்படி பயணம் அமையபோகின்றது என்பதை பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். இதனை தெரிந்துக்கொண்டு இருந்தால் மட்டும் போதுமா இனிமேல் என்ன செய்யவேண்டும் என்பதை நாம் கொஞ்சம் யோசித்தால் அதன்படி மாற்றிக்கொள்ளமுடியும்.

ஜாதகத்தில் தான் வாழ்க்கை பயணத்தின் சூட்சமும் இருக்கின்றது. ஜாதகத்தை எடுத்துக்கொண்டு எப்படி போகின்றது என்பதை மட்டும் தெரிந்துக்கொள்ளுங்கள் அதன் பிறகு ஒரு சில விசயங்களை நான் பதிவில் சொல்லுகிறேன். 

முழுமையான ஒரு தீர்வாக அது இருக்கும் என்று நீங்கள் நம்பலாம் அதே நேரத்தில் அதனை நீங்கள் செய்து வந்தால் உங்களின் வாழ்க்கை உடனே மாறாது படிப்படியாக உங்களின் வாழ்க்கை நிச்சயம் மாறும்.

இது ஒரு நல்ல ஆரம்பமாக உங்களுக்கு இருக்கும். முடிந்தவரை முதலில் உங்களின் ஜாதகத்தை தூசி தட்டி எடுத்து எப்படி கிரகங்கள் சென்றுக்கொண்டிருக்கின்றன என்பதை மட்டும் பார்த்து வையுங்கள் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பாக்கியஸ்தானம் தரும் வெற்றி


வணக்கம்!
          நமது ஜாதககதம்பத்தில் அடிக்கடி சொல்லும் விசயம் பாக்கியஸ்தானத்தை பலப்படுத்துங்கள் என்பது தான். கிரக நிலை எப்படி இருந்தாலும் பாக்கியஸ்தானத்தை பலப்படுத்திவிட்டால் அவர் வாழ்க்கையில் முன்னேறுவது உறுதி.

ஒவ்வொரு பெரிய ஆளும் இதனை புரிந்துக்கொண்டு செயல்படுகிறார்கள். நம்ம மாதிரி ஆள்கள் எல்லாம் இதனை புரிந்துக்கொண்டு செயல்பட்டால் கண்டிப்பாக நாமும் முன்னேறிவிடலாம். 

பாக்கியஸ்தானத்தை பலப்படுத்த தான் ஒவ்வொரு அரசியல்வாதியும் மற்றும் பெரிய ஆள்களும் நிறைய பூஜைகளை செய்கின்றார்கள் நிறைய தான தர்மம் செய்கின்றனர் இது எல்லாம் எப்படிப்பட்ட கிரகநிலையிலும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள தான் செய்கின்றனர்.

பல பெரிய இடங்களுக்கு நானே இப்படிப்பட்ட வேலைகளை செய்துக்கொடுத்து இருக்கிறேன். இதனை எல்லாம் நீங்கள் புரிந்துக்கொண்டு செயல்பட்டாலே போதும் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, May 18, 2016

ராகு சந்திரன் கூட்டணி பலன்


வணக்கம்!
          ராகு சந்திரன் இணைந்து இருந்தால் எப்படிப்பட்ட பலனை தரும் என்பதை அவ்வப்பொழுது பார்த்து வருகிறோம். இதனை தொடர்ந்து எழுதுவாக இருந்தால் பல நண்பர்கள் பயப்படுவார்கள் என்பதால் மாற்றி மாற்றி எழுதி வருகிறேன்.

ராகு சந்திரன் என்ற கூட்டணி வந்தாலே அவர்களின் திருமண வாழ்வு என்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அது என்ன கொஞ்சம் கஷ்டம் என்று கேட்கலாம். ராகு சந்திரன் இணையும்பொழுது திருமணம் செய்யும் துணை மீது அந்தளவுக்கு ஈர்ப்பு என்பது வராது.

இன்றைய காலத்தில் மனைவி மீது எவனுக்கு ஈர்ப்பு வருகின்றது என்று நினைக்கதோன்றும். என்ன தான் இருந்தாலும் இணைந்து கடைசி வரை வாழ்கின்றார்கள் அல்லவா. ராகு சந்திரன் இணையும்பொழுது விரிசல் அதிகமாக இருக்கும்.

விரிசல் என்பது விவாகாரத்து வரை செல்லாது ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள். விவாகாரத்து  நடைபெறும் நபர்களுக்கு பிற கிரகங்களில் தாக்கம் அதிகமாக இருக்கும். ராகு சந்திரன் இணைந்து இருந்தால் முடிந்தவரை கணவன் மனைவியோடு சந்தேகம் இல்லாமல் வாழ கற்றுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, May 17, 2016

தங்கரதம் படங்கள் பகுதி 2

வணக்கம்!
          இன்று நடைபெற்ற தங்கரதம் படங்கள். முருகன் என்றாலே அழகு அதிலும் தங்கரதத்தில் மிதந்து வரும் முருகனின் அழகை பாருங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு





தங்கரதம் படங்கள் பகுதி 1

வணக்கம்!
                       இன்று நடைபெற்ற சுவாமிமலை தங்கரதம். தங்கரதம் நடைபெறுவதற்க்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் மற்றும் அதனை கண்காணித்து நடைபெற செய்த கண்டீயூர் இராமசுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி
                 





அன்புடன்
ராஜேஷ்சுப்பு




சுவாமிமலை தங்கரதம்


வணக்கம்!
          இன்று நமது ஜாதககதம்பத்தின் வழியாக நடைபெறும் சுவாமிமலை தங்கரதம் நடைபெறும். செவ்வாய் கிரகத்தின் காரத்துவத்தும் சம்பந்தப்பட்ட காரியத்திற்க்கு இந்த தங்கரதம் இழுக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட நபர்கள் மாலை எட்டுமணியளவில் உங்களின் பிராத்தனைகளை வைக்கலாம். முருகன் உங்களுக்கு நல்லதை செய்யும். அறுபடை வீடுகளில் தந்தைக்கு உபதேசம் செய்த மிகவும் சக்தி வாய்ந்த முருகன் கோவிலை தேர்ந்தெடுத்து செய்கிறோம்.

தனிப்பட்ட முறையில் நல்ல பலனை அனுபவித்தவன் நான் ஒரு முறை சென்றாலே நல்ல பலனை கொடுக்கும் ஒரு கோவிலில் நாம் தங்கரதம் இழுக்கிறோம். நன்றாக வேண்டிக்கொள்ளுங்கள்.

தஞ்சாவூர் பகுதியில் கடும் மழை பெய்துவருகிறது. நேற்று இருந்து இன்று வரை தொடர் மழை பெய்கிறது. இன்று எப்படியும் தங்கரதம் இழுத்துவிடவேண்டும் என்று நினைக்கிறேன். ஏதாவது மாற்றம் இருந்தால் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, May 15, 2016

செவ்வாய்


வணக்கம் !
          காலையில் பதிவை தந்துவிடவேண்டும் என்று தான் இருந்தேன். பல ஜாதகங்கள் வந்துவிட்டன ஒவ்வொன்றையும் பார்த்து முடிக்கவேண்டும் என்ற கட்டாயத்தால் அனைத்தையும் பொறுமையாக பார்த்தேன். இன்னமும் பல ஜாதகங்கள் இருக்கின்றன.

இது ஒரு பொதுசேவை என்பதால் நன்றாக அனைத்தையும் கவனிக்கவேண்டும் அதே நேரத்தில் இவர்களுக்கு கொடுக்கின்ற மதிப்பு இறைவனுக்கு செய்யும் ஒரு தொண்டு என்பதால் இதனை பார்த்தேன். 

ஒவ்வொருவருக்கும் நான் பதில் அனுப்பியுள்ளேன். அதே நேரத்தில் அவர்களுக்கு பலனை சொல்லவில்லை. நமக்கு அவர்களின் நிலை மட்டும் தெரிந்தால் போதும் என்று இதனை செய்தேன்.

நமது நண்பர்கள் பல பேர் செவ்வாய் கிரகத்தால் பாதிப்படைந்து இருக்கின்றார்கள் என்பது தெரிகிறது. மறுபடியும் உங்களுக்கு பல வாய்ப்பை ஒவ்வொரு கிரகத்திற்க்கும் தருகிறேன். இதுவரை அனுப்பாமல் இருக்கும் நண்பர்கள் நாளையும் அனுப்பலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, May 14, 2016

சோதிடம் பார்க்கும்பொழுது


வணக்கம்!
          ஒவ்வொருவரையும் செவ்வாய்கிரகத்தின் பாதிப்பிற்க்கு மெயிலை அனுப்ப சொன்னவுடன் தான் பாதிபேர் ஏற்கனவே என்னை தொடர்புக்கொண்டு சோதிடம்பார்த்த நண்பர்கள் இருந்தனர். இவர்கள் சொன்ன விசயம் எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளமுடிந்தது.

பொதுவாக பழைய நண்பர்களுக்கு நான் அதிகம் பரிகாரம் பரிந்துரைப்பதில்லை. தற்பொழுது வரும் நண்பர்களுக்கு அவர்களால் முடிந்தால் பரிகாரம் பரிந்துரைப்பதில்லை. இதற்கு காரணம் ஒவ்வொருவரும் தங்களின் பொருளாதார நிலையை கணக்கில் கொண்டு சொல்லப்படுவது உண்டு.

ஒரு சிலருக்கு மட்டும் நான் பரிகாரம் செய்கிறேன் என்று ஏற்றுக்கொண்டு செய்துக்கொடுத்து இருக்கிறேன். அதுவும் தற்பொழுது மட்டுமே செய்துக்கொடுக்கிறேன். இன்றைய நிலையிலும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் விருப்பபட்டால் மட்டுமே  இதனை செய்வது உண்டு.

சோதிடப்பலனை சொல்லுவது உண்டு நீங்களே பரிகாரம் செய்துக்கொள்ளும் படி தான் அதிகப்பட்சம் பரிகாரம் இருக்கும் அதே நேரத்தில் ஒரு சிலருக்கு சோதிடர்கள் பரிகாரம் செய்தால் மட்டுமே நடக்கும். அதற்கு மட்டும் இதனை செய்யலாமா என்று கேட்பது உண்டு. அவர்கள் சொன்னால் நடத்திக்கொடுப்போம் இல்லை என்றால் எதுவும் கண்டுக்கொள்வதில்லை.

இனிவரும் நண்பர்கள் பயம்கொள்ளாமல் வழிபாடு வேண்டும் என்றால் வழிபாடு மட்டும் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொள்ளுங்கள். பரிகாரம் செய்து தரவேண்டும் என்று கேட்டால் உங்களின் பொருளாதார நிலைக்கு தகுந்தவாறு செய்துக்கொடுக்கப்படும்.

எதுவாக இருந்தாலும் கொஞ்சம் வெளிப்படையாக சொல்லிவிடுங்கள். அதே நேரத்தில் உங்களின் வாழ்க்கை எப்படி சென்றுக்கொண்டு இருக்கின்றது என்பதை போனில் அல்லது மெயிலில் எனக்கு தெரிவித்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சுவாமிமலை தங்கரத புறப்பாடு


ணக்கம்!
          நமது ஜாதககதம்பத்தின் சார்பாக வரும் 17.05.2016 செவ்வாய்கிழமை அன்று சுவாமிமலை சுவாமிநாதசுவாமி ஆலயத்தில் தங்கரத புறப்பாடு நடைபெறும். அனைவரும் நேரில் கலந்துக்கொள்ள தங்களை பணிவோடு அழைக்கிறேன்.

நேரில் வரமுடியாதவர்கள் அன்று மாலை 8 மணியளவில் முருகபெருமானை மனமுருகி வேண்டிக்கொள்ளுங்கள். தங்களின் ஜாதகத்தில் செவ்வாய்கிரகத்தின் பாதிப்பால் ஏற்பட்ட பிரச்சினை தீரும். சுவாமிமலை முருகன் உங்களுக்கு அருளை வழங்கி நல்ல வாழ்க்கையை கொடுக்கும்.

பல நண்பர்கள் தங்களின் கோரிக்கை மெயிலை எனக்கு அனுப்பி இருந்தனர். அனுப்பாத நண்பர்களுக்கும் உடனே உங்களின் ஜாதகத்தை பார்த்து உங்களின் பிரச்சினை மற்றும் கோரிக்கையை எனக்கு அனுப்பலாம்.

அறுபடை வீட்டிலேயே அதிக சக்தி படைத்த முருகனின் கோவிலில் நாம் தங்கரதம் இழுக்கிறோம். ஏதோ வெறும் வேண்டுதல் இல்லாமல் தங்களின் நியாயமான வேண்டுதலை வைக்கும்பொழுது கண்டிப்பாக அதனை நமக்கு நிறைவேற்றி முருகன் கொடுப்பார். உங்களின் கோரிக்கை மற்றும் வேண்டுதலுக்கு என்று எந்த வித கட்டணமும் தரவேண்டியதில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, May 13, 2016

சுக்கிரன் பலன்


ணக்கம்!
          சுக்கிரன் காரத்துவம் உடைய ஆள்களை நான் பார்த்தோம் என்றால் தன்னை அலங்கரித்துக்கொள்வதில் அதிக பிரியம் உடையவர்களாக இருப்பார்ககள். சுக்கிரனின் காரத்துவம் அதிகம் இருந்தாலே அழகாக தான் இருப்பார்கள். அழகாக இருந்தாலும் தன்னை அலங்கரித்துக்கொள்வதில் அதிக பிரியம் இருக்கும்.

ஒரு சிலர் அழகாக இருக்கமாட்டார்கள் ஆனால் சுக்கிரனின் தசா வந்தால் தன்னை அழகரிக்க தொடங்கிவிடுவார்கள். பல பேர்களை நீங்களே பார்த்து இருக்கலாம். உடல் முழுவதும் பவுடரை பூசிக்கொண்டு இருப்பார்கள். உடல் முழுவதும் என்பது ஒரு கேலியாக சொன்னேன். பவுடரை அப்படியே முகத்தில் பூசிக்கொள்வார்கள்.

பவுடர் பூசிக்கொள்ளாவிட்டாலும் அதிகளவில் நறுமணம் வரக்கூடிய வாசனை திரவியத்தை உடல் முழுவதும் பூசிக்கொள்ளும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். இன்றைக்கு எல்லாரும் தன்னை அலங்காரம் செய்துக்கொண்டாலும் இவர்கள் அதிகளவில் அலங்காரம் செய்துக்கொள்பவர்களாக இருப்பார்கள்.

நீங்களே இதனை தெரிந்துக்கொள்ளமுடியும். ஒரு பத்து பேரை எடுத்துக்கொண்டாலே ஒருத்தர் தன்னை அலங்காரம் செய்வதில் அதிக நாட்டமாக இருப்பார் அவர்களின் ஜாதகத்தை வாங்கி பார்த்தால் சுக்கிரன் அவர்களுக்கு பலமாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, May 12, 2016

செவ்வாய்க்கு பரிகாரம்:: இலவச சேவை

ணக்கம்!
          செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு மற்றும் இதுவரை நிலம், வீடு அமையாதவர்களுக்கு என்று ஒரு பொதுவாக ஒரு பரிகாரம் செய்யலாம் என்று ஒரு திட்டம் இருந்தது. ஏற்கனவே அம்மனுக்கு இதன் சம்பந்தமாக ஒரு பூஜை நடத்தப்பட்டது. மேலும் இதனை ஒரு அறுபடை வீட்டில் வைத்து நடத்தினால் நன்றாக இருக்கும் என்று எண்ணி இருந்தேன்.

இன்று மாலை ஆலங்குடி சென்று குரு பகவானை தரிசனம் செய்துவிட்டு நண்பர் கண்டியூர் இராமசுப்பிரமணியனிடம் ஆலோசனை செய்துவிட்டு சுவாமிமலையில் பூஜை செய்துவிட்டு அப்படியே தங்கரதம் இழுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

நமது ஜாதககதம்பம் வழியாக ஏற்கனவே இது போல் ஒரு தங்கரதம் இழுத்துள்ளோம். அதனைப்பற்றி உங்களுக்கும் தெரியும் மேலும் இதனை செய்யலாம் என்ற எண்ணம் ஏற்பட்ட காரணத்தாலும் பல நண்பர்களின் வேண்டுகோளால் இது மறுபடியும் நடைபெற இருக்கின்றது.

நாளை எப்படியும் தேதி முடிவு ஆகிவிடும். உங்களின் ஜாதகத்தில் செவ்வாய் எப்படி இருக்கின்றது என்பதை மட்டும் எடுத்து பாருங்கள். செவ்வாய் கிரகம் எனக்கு பிரச்சினை கொடுக்கிறது என்று நீங்கள் நினைத்தால் எனக்கு ஒரு மெயில் செய்யுங்கள். உங்களின் பெயர் உங்களின் ஜாதகத்தில் செவ்வாயால் என்ன பிரச்சினை ஏற்படுகிறது மற்றும் ஏதாவது முருகனிடம் வேண்டுதல் இருந்தால் அனுப்பிவைக்கலாம்.

சுவாமிமலையில் உங்களின் செவ்வாய் தோஷம் மற்றும் செவ்வாய் கிரகத்தால் வரும் பிரச்சினைக்கு அங்கு நான் சங்கல்பம் வைத்துவிடுகிறேன். முருகன் உங்களுக்கு அருளை வழங்குவான்.

உங்களின் தகவல்கள் மற்றும் வேண்டுதல்கள் ரகசியமாக இருக்கும் கவலை வேண்டாம். இது அனைத்தும் இலவச சேவை எந்த வித கட்டணமும் இல்லை. நமது ஜாதககதம்பத்தின் வழியாக வந்த பணத்தில் இது செய்யப்படுகிறது. 

எண்ணற்ற நண்பர்கள் ஜாதககதம்பத்தில் இருக்கின்றார்கள். நம்முடைய வேண்டுதலை எப்படி இவர் எடுத்துக்கொள்வார் என்று அனுப்பாமல் இருந்துவிடாதீர்கள். அனைத்தையும் படித்துவிட்டு உங்களுக்கு மெயில் அனுப்புகிறேன்.

அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி : astrorajeshsubbu@gmail.com

செவ்வாய் சம்பந்தப்பட்ட காரத்துவம் உடைய வேண்டுதல்களை மட்டும் அனுப்புங்கள். நியாயமான கோரிக்கையாக அது இருக்கவேண்டும். விரைவில் உங்களுக்கு எந்த தேதி என்பதை அளிக்கிறேன். உடனே எனக்கு உங்களின் கோரிக்கையை அனுப்பிவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

செல்வ வளம்

ணக்கம்!
          இன்று காலையில் இருந்தே பல பண சம்பந்தப்பட்ட பதிவுகள் வந்துக்கொண்டு இருக்கின்றன. அதாவது கட்டண சேவையிலும் செல்வவளத்தைப்பற்றி ஒரு பதிவை தந்தேன். இதிலும் ஒரு பதிவை காலையில் பார்த்தோம் மேலும் ஒரு சில விசயங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

உங்களிடம் பணம் வரவேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்களும் ஒரு சக்தி படைத்தவராக தான் இருக்கவேண்டும். பெரிய பணம் பார்க்கவேண்டும் என்றால் நல்ல சக்தி கிடைக்கவேண்டும் என்பது ஒரு விதி.

உங்களிடம் சக்தி எடுக்கமுடியவில்லை என்றாலும் உங்களுக்கு அமையும் மனைவி வழியாக பல மாறுதல்கள் நடக்கும். உங்களின் மனைவி ஒரு லட்சுமிகரமாக இருந்தார்கள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு பணம் வரும்.

உங்களின் மனைவி எந்த நேரமும் அழுதுக்கொண்டும் சண்டைபோட்டுக்கொண்டும் இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு பணம் என்பது வரவே வராது.  உங்களின் மனைவியை இதனை படிக்க சொல்லுங்கள்.

நிறைய செல்வவளம் பற்றிய பதிவை படிக்க கட்டண சேவையில் தங்களை இணைத்துக்கொள்ளுங்கள். பரிகாரம் மற்றும் செல்லவளத்திற்க்கு என்று நிறைய பதிவுகள் கட்டண சேவையில் வழங்கப்படுகிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கோடிஸ்வரர் ஆக என்ன செய்யவேண்டும்?


வணக்கம்!
          குரு கிரகம் தன்னுடைய பலனை ஒருவருக்கு தருகிறது என்றால் அந்த நபருக்கு பணமாக கொட்டிக்கொடுக்க கொடுத்துக்கொண்டே இருக்கும். அவர் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் அவரை தேடி பணம் வந்துக்கொண்டே இருக்கும்.

ஒரு நபருக்கு பணம் வந்துக்கொண்டே இருந்தால் எப்படி இருக்கும். லட்சத்தில் ஒருவருக்கு இப்படி பணம் வரும் அப்பொழுது லட்சத்தில் ஒருவருக்கு தான் குரு கிரகம் தன்னுடைய முழுபலனையும் வழங்கிறது என்று அர்த்தம்.

முக்கால்வாசி மக்கள் ஏதோ வாழ்ந்தோம் என்று தான் அதாவது ஏதோ பணம் வந்தால் போதும் என்று தான் இருப்பார்கள். ஒரு சிலர் மட்டும் தான் பணம் நிறைய வேண்டும் என்று வெறியோடு இருப்பார்கள். இப்படி வெறியோடு இருப்பவர்களுக்கு உங்களின் ஜாதகத்தில் குரு கிரகம் எப்படி இருக்கின்றது என்று பாருங்கள்.

உங்களின் ஜாதகத்தில் குரு கிரகம் நன்றாக இருந்தால் உங்களின் வெறி நியாயமான ஒன்று தான் கண்டிப்பாக உங்களுக்கு அந்த பணம் கிடைத்துவிடும். குரு கிரகம் நன்றாக இல்லை என்றால் உங்களை வேண்டும் என்றே வெறி பிடிக்க வைத்து அலையவிடுகிறது என்று அர்த்தம்.

வெறிபிடித்து அலைய விட்டாலும் அதனை நாம் ஆன்மீகபக்கம் கொஞ்சம் சென்றால் அதனை நமக்கு சாதகமாக ஆக்கமுடியும். பாக்கியஸ்தானம் என்ற ஒன்றைப்பற்றி நிறைய பதிவுகளை எழுதியிருப்பேன் அதனை படித்துவிட்டு அது போல் நடந்துக்கொள்ளுங்கள். கண்டிப்பாக நீங்கள் பெரும் கோடிஸ்வராக மாறிவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, May 11, 2016

புதன் பலன்


ணக்கம்!
          புதன் கிரகம் ஒருவருக்கு ஏதாே பிரச்சினை தருவதுபோல் இருந்தால் அவர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை வரும். தோல் நிறம் மாறும். தேமல் அல்லது ஏதாே ஒரு சருமபிரச்சினை வந்துவிடும்.

ஒரு சிலருக்கு புதனின் தசாவில் அதிகளவில் இப்படிப்பட்ட பிரச்சினை வருவது உண்டு. அதுவும் லக்கினத்தில் அல்லது லக்கினாதிபதியோடு சம்பந்தம் ஏற்பட்டு இருந்தால் இது நடக்ககூடிய வாய்ப்பு இருக்கின்றது.

ஒரு சிலருக்கு மாமனார் வழியாக பிரச்சினை ஏற்படும் அவர்களுக்கு எல்லாம் புதன்கிரகம் அதிகளவில் பாதிக்கப்பட்டு இருந்தால் வரும். மாமனார் சொத்து கிடைப்பதாக இருந்தால் அப்பொழுது புதன் கிரகம் உங்களுக்கு வலுவாக இருக்கின்றது என்று அர்த்தம்.

புதன் கிரகம் இரட்டை தன்மை உள்ள கிரகம் என்பதால் அதிகளவில் நடப்பது எல்லாம் இரண்டு ஆப்ஷன் கொடுத்து தான் வரும். ஏதோ ஒன்றை வாங்க செல்வோம் நமக்கு இரண்டு வாங்கும் நிலையை ஏற்படுத்திவிடுவார்.

புதன் கிரகம் எதனோடு சேருகின்றதோ அதன் தன்மையை தரும்கிரகம் என்பதால் உங்களின் ஜாதகத்தில் எப்படி இருக்கின்றது என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, May 10, 2016

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

ணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள். அம்மனை அலங்காரம் செய்தவர் இராசிபுரம் இராஜ்குமார் அவர்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

ணக்கம்!
           இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

ணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு