Followers

Friday, March 31, 2017

சந்திரன் பரிகாரம்


ணக்கம்!
          சந்திரன் பரிகாரம் நாம் செய்தாலும் அதோடு நீங்கள் ஒரு சில விசயங்களையும் செய்யுங்கள். சந்திரன் என்றாலே நீர் சம்பந்தப்பட்ட காரத்துவத்திற்க்கு காரகம் வகிக்கிறார்.

புண்ணியநதிகளில் நாம் நிறைய நீராடினால் நமக்கு வருகின்ற பிரச்சினை தீரும். வருடத்திற்க்கு ஒரு முறையாவது புண்ணிய நீராடல் மிக மிக முக்கியமான ஒன்று. கடல் அல்லது நதிகளில் நீராடுவது புண்ணியம் தரும். சந்திரனுக்கு நல்ல பரிகாரமும் இது.

வருடம் ஒரு முறை இராமேஸ்வரம் சென்று நீராடிவிட்டு வரலாம். இராமேஸ்வரம் சென்றால் நிறைய புண்ணியதீர்த்தங்களையும் நீராடுவது வாய்ப்பு கிடைக்கும். 

எங்கு எல்லாம் உங்களால் நீராட முடியுமோ அங்கு எல்லாம் நீங்கள் நீராடிவிடுங்கள். புண்ணியநதிகள் கூட கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்களின் ஊருக்கு அருகில் கடல் இருந்தால் அதில் கூட நீங்கள் நீராடிவிட்டு வந்துவிடலாம்.

கடலில் நீராடுவது மிக மிக நன்மை பயக்கும். உங்களின் சூட்சமஉடல் பாதுகாக்கப்படும். சந்திரன் பரிகாரம் செய்ய நாம் ஆயத்தமாக போகின்றோம். இந்த வேளையில் நீங்கள் மேலே சொன்னது போல் ஒரு முறை செய்துக்கொள்ளலாம்.

இராமேஸ்வரத்தில் 1996 ஆம் வருடம் சென்றேன். அப்பொழுது ஒரு சாஸ்திரிகளிடம் ஒரு பூஜை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. நல்ல வயதானவர் மிக அருமையாக பூஜைகளை செய்தார். அவர் தற்பொழுது இல்லை. அப்பொழுதே அவர்க்கு நல்ல வயதாகிவிட்டது.

வருடத்திற்க்கு ஒரு முறை அங்கு சென்று நம்முடைய பாவத்தை எல்லாம் போக்கிக்கொள்ளலாம். அங்கு பூஜை செய்யும்பொழுது அவர்களே நிறைய சொல்லுவார்கள். நாம் நடக்கும்பொழுது நமது காலடிப்பட்டு எறும்புகள் செத்துவிடும். அந்த எறும்பின் பாவத்தை போக்க கூட இங்கு பூஜை செய்யும்பொழுது சொல்லுவார்கள். தற்பொழுது எல்லாம் அந்தளவுக்கு செய்வதில்லை என்று நினைக்கிறேன். 

நீங்கள் நமக்கு தெரியாத செய்ய பாவத்தை எல்லாம் போக்கவேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டு அங்கு நீராடிவிட்டு சாமியை தரிசனம் செய்துவிட்டு வரலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, March 30, 2017

சந்திராஷ்டமம்


ணக்கம்!
          சந்திரன் பரிகாரத்திற்க்கு இதுவரை ஜாதகம் அனுப்பியவர்களுக்கு இன்று முதல் முதல் மெயில் அனுப்புகிறேன். விரைவில் சந்திரன் பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்ப இறுதிநாள் அறிவிக்கப்படும். இதுவரை சந்திரன் பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்பாதவர்கள் உடனே அனுப்பி வையுங்கள்.

சந்திரனை கண்டு நாம் பயப்படுவது நமது ராசிக்கு சந்திராஷ்டமம் ஏற்படும் நாளில் சந்திரனைப்பற்றி நாம் அதிகம் பயப்படுவோம். மாதத்தில் சந்திராஷ்டமம் வரும் நாளில் பல பேருக்கு அதிகப்பயம் ஏற்படும்.

மாதம்தாேறும் சந்திராஷ்டத்தை கண்டு நாம் பயப்படதேவையில்லை. பல நேரங்களில் சந்திராஷ்டமம் அன்று தான்  பல பேருக்கு நல்லது நடந்து இருக்கின்றது. ஒரு சிலருக்கு மட்டும் சந்திராஷ்டமம் வரும் நாளில் அதிகப்பிரச்சினை வரும்.

நமது பரிகாரத்தில் சந்திராஷ்டமத்திற்க்கும் சேர்த்து தான் பரிகாரம் செய்யப்படும். சந்திரனுக்கு பரிகாரம் செய்த பிறகு மாதந்தோறும் வரும் சந்திராஷ்டமம் உங்களுக்கு அதிகபாதிப்பை தராது. குறைவான ஒரு பாதிப்பை மட்டும் கொடுக்கும்.

சந்திராஷ்டமம் அன்று ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்க்கொண்டு வாருங்கள். அதோடு நமது பரிகாரமும் உங்களுக்கு நல்லது செய்யும். சந்திரனால் வரும் பிற பாதிப்பு கண்டிப்பாக நிவர்த்தி ஆகும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, March 29, 2017

புதன் சந்திரன் கூட்டணி


வணக்கம்!
          புதன் சந்திரன் சேர்ந்து இருந்தால் நல்லது என்பார்கள். புத்திகாரகன் புதன் மனக்காரனோடு சேரும்பொழுது நல்ல புத்தி இருக்கும் என்று சொல்லுவார்கள்.

புதன் பெரும்பாலும் நன்றாக ஜாதகத்தில் அனைவருக்கும் அமைவதில்லை. புதன் தீயகிரகங்கள் போல் ஜாதகத்தில் அமைந்துவிடுகிறது. அதில் சேரும் சந்திரன் நல்ல புத்தியை கொடுப்பதற்க்கு பதில் திருட்டு புத்தியும் கொடுத்துவிடுகிறது.

புதன் வஞ்சககாரகனாகவும் விளங்கும். மனக்காரகன் சந்திரனோடு புதன் சேரும்பாெழுது பிறர்க்கு வஞ்சகமும் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இவர்களின் வஞ்சகத்திற்க்கு ஆளானவார்கள் அதிகம் பேர் இருப்பார்கள்.

இன்றைய காலத்தில் நடக்கும் கள்ளதனத்திற்க்கு எல்லாம் இந்த சேர்க்கையில் உள்ள ஜாதகர்களால் தான் நடக்கிறது என்று சொன்னால் அது தான் உண்மை. இவர்களிடம் ஏமாற்றம் அடைந்தவர்கள் அதிகமாக இருப்பார்கள்.

ஒரு சிலர் திருட்டுதனமான வியாபாரம் செய்துக்கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கும் இப்படிப்பட்ட நிலையில் புதனும் சந்திரனும் அமைந்து இருக்கும்.

ஒரு சிலருக்கு புதன் சந்திரன் நல்லதை கொடுக்கிறார்கள். இவர்களாகல் அவர்களுக்கும் நன்மை செய்துக்கொண்டு பிறர்க்கும் நன்மை செய்வார்கள். ஒரு சிலர்க்கு இப்படி இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நல்வாழ்த்துக்கள்

ணக்கம்!

தெலுங்கு வருடப்பிறப்பை கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும்
 இனிய தெலுங்கு வருடபிறப்பு நல்வாழ்த்துக்கள்


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, March 28, 2017

வக்கிரபுத்தியை தரும் சந்திரன்



வணக்கம்!
         1950 ஆம் வருடத்தில் அமெரிக்காவில் ஒரு திட்டம் இருந்ததாம் நிலாவில் ஒரு அணுகுண்டை போட்டு வெடிக்க வைப்பது. பூமியில் இருந்து மனிதர்கள் பார்க்கும் நிலா பகுதியில் அதனை வெடிக்க வைக்கவேண்டும் என்று அமெரிக்காவின் திட்டமாக இருந்ததாம். இது மக்களிடம் வரவேற்பு இல்லாத காரணத்தால் இதனை கைவிட்டதாக செய்தி தாள்களில் படித்தேன்.

நல்ல வேளை நிலா தப்பியது என்று கூட சொல்லிருந்தார்கள். இது தான் மனிதனின் வக்கிரபுத்தி என்று சொல்லுவது. எப்படி எல்லாம் அழிவை ஏற்படுத்துவது என்பதை சிந்திக்கும் ஒரு மனநிலை இருந்தால் சந்திரன் ராகுவோடு அல்லது சனியோடு சேர்ந்துக்கொண்டு இருக்கின்றது என்று அர்த்தம்.

வக்கிரபுத்தி ஒரு மனிதனுக்கு ஏற்படுவதற்க்கு அதிகம் காரணமாக இருப்பது சனிக்கிரகம் அல்லது ராகு கிரகத்தின் தாக்கம் அதிகமாக ஜாதகத்தில் இருக்கின்றது என்று அர்த்தம். அதுவும் சந்திரனோடு சேர்ந்துக்கொண்டு இந்த கிரகங்கள் செய்யும் தீயவேலை என்று சொல்லலாம்.

ஒரு சிலர் தன்னுடைய மனைவியை போட்டு சித்திரவதை செய்துக்கொண்டு இருப்பார்கள். அவன் அவன் லெவலுக்கு சிந்தனை செய்வான். அமெரிக்காரானுக்கு முடிந்ததை அவன் வக்கிரபுத்தியோடு சிந்தித்து இருக்கிறான். நம்மாலுக்கு கிடைத்து அவனுடைய மனைவி. 

வக்கிரபுத்தி உருவாதற்க்கு சந்திரனுக்கு ஏற்படும் தீயகிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை தான் காரணம். உங்களுக்கு இப்படிப்பட்ட தாக்குதல் இருந்தால் நீங்களும் சந்திரன் பரிகாரத்தில் கலந்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சந்திரன் செவ்வாய் கூட்டணி


வணக்கம்!
          சந்திரன் மற்றும் செவ்வாய் சேர்ந்து இருந்தால் அந்த நபர்களின் தாய்க்கு ஆப்ரேஷன் செய்யவேண்டிய நிலை ஏற்படும் என்று சொல்லிருந்தேன். பல நண்பர்கள் நேற்று தொடர்புக்கொண்டு இதனைப்பற்றி கேட்டனர்.

சந்திரன் செவ்வாய் சேரும்பொழுது அந்த தசாவில் அல்லது ஏழரை சனி அஷ்டமசனி காலத்தில் அவர்களின் தாய்க்கு ஆப்ரேஷன் செய்யவேண்டிய ஒரு நிலை ஏற்படுகின்றது. பெரும்பாலும் இதனை நான் அனுபவத்தில் நிறைய ஜாதகத்தில் பார்த்து இருக்கிறேன்.

ஒருவரின் ஜாதகத்தில் இப்படி இருந்தது. அவரின் தாய் சமையலறை தான் வேலையாக இருந்தார். எப்படி என்றால் அவர் ஓட்டல் நடத்திக்கொண்டு இருந்தார். அவரின் தாய் தான் அனைத்தையும் சமைத்து அவரின் வியாபாரத்திற்க்கு உறுதுணையாக இருந்தார்.

ஒவ்வொரு ஜாதகத்திலும் அந்த ஜாதகத்தின் அமைப்புக்கு தகுந்தவாறு பலன் கொடுத்துக்கொண்டு இருக்கின்றது. சந்திரன் செவ்வாய் சேர்ந்து இருந்து சந்திரன் தசா அல்லது செவ்வாய் தசா நடந்தால் அவரின் தாய்க்கு அடிபடுவது கூட நடக்கும்.

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் செவ்வாய் கூட்டணி இருந்தது. அவருக்கு செவ்வாய் தசா நடந்தது. செவ்வாய் தசா நடக்கும்பொழுது அவரின் தாய் ஒரு ரோட்டை கடக்கும்பொழுது ஒரு காரில் அடிப்பட்டு இறந்தார்.

ஒவ்வொரு ஜாதகத்தையும் நாம் பார்த்த அதற்கு தகுந்தவாறு தான் பலனை முடிவு செய்து அதற்கு தக்க பரிகாரத்தை செய்யமுடியும். சந்திரனுக்கு தற்பொழுது பரிகாரம் செய்யப்ப்டுகின்றது. அதற்கு பரிகாரம் செய்துக்கொள்ளலாம்.

சந்திரன் பரிகாரத்தை ஏன் இவ்வளவு நாளாக இழுக்கின்றீர்கள் என்று நண்பர் ஒருவர் கேட்டார். சந்திரன் பரிகாரத்தில் அனைவரும் கலந்துக்கொண்டு நல்ல நிலையை அடையவேண்டும் என்பதற்க்காக இதனை தாமதம் செய்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, March 27, 2017

தாய்க்கு பாதிப்பை தரும் சந்திரன்


ணக்கம்!
          சந்திரன் தாய்க்கு காரகம் வகிக்கின்றார். சந்திரன் ஒருவருக்கு கெட்டால் அவரின் தாய் உடல் நலம் கெட்டுவிடும். எப்பொழுதும் நோயோடு வாழ்கின்ற ஒரு நிலையை உருவாக்கிவிடும்.

சந்திரன் கெட்டு தாயின் உடல்நிலை கெட்டு அதற்க்காக கஷ்டப்பட்டு வாழ்கின்ற பையன்களை எல்லாம் நான் நிறைய பார்த்து இருக்கிறேன். ஒரு சிலருக்கு சந்திரன் கெட்டு சம்பந்தப்பட்ட தசா நடக்கும்பொழுது தாய்க்கு வரக்கூடாத ஒரு நோய் வந்து மருத்துவமனையிலேயே இருந்து கஷ்டப்பட்டவர்களை நான் நிறைய பார்த்து இருக்கிறேன்.

சந்திரன் ராகுவோடு சேரும்பொழுது அவரின் தாய்க்கு வரும் வியாதி மிகவும் கோரமாக உள்ள நோய் வந்துவிடும். அந்த நோயோடு போராடுகின்ற நிலையும் இருக்கின்றது.

சந்திரன் செவ்வாயோடு இணையும்பொழுது சம்பந்தப்பட்ட தசா வந்தால் அவரின் தாய்க்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய ஒரு நிலை வந்துவிடும்.

சந்திரன் தசா வந்தால் அவர்களின் தாய் எப்படி இருக்கின்றார்கள் என்று அடிக்கடி கண்காணிப்பது நல்லது. மருத்துவ ஆலோசனையும் அவ்வப்பொழுது கேளுங்கள்.

சந்திரன் பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்புவர்கள் அனுப்பி வையுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, March 26, 2017

சூரியன்


ணக்கம்!
          சூரியன் ஒருவருக்கு நன்றாக இருந்தால் அவர்க்கு தந்தை அனுகூலமாக இருப்பார். தந்தை அவர் கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுத்து நிறைய சொத்தை சேர்த்து வைத்துக்கொடுப்பார்.

சூரியன் நன்றாக இருந்தால் தந்தையை மட்டும் சார்ந்து இருக்கும் ஒரு சூழ்நிலை உருவாகும். பையன் வாழ்வில் வெற்றிபெறுவதில்லை. ஊதாரியாக வாழ்க்கையை ஓட்டுபவர்களாக இருந்துவிடுவார்கள்.

கை நிறைய பணம் இருக்கின்றது. சொத்து இருக்கின்றது என்று வீணாக காலத்தை தள்ளிவிட்டு திருமணத்திற்க்கு பிறகு நிறைய கஷ்டப்பட்டவர்களை நான் பார்த்து இருக்கிறேன்.

தந்தையாக இருப்பவர்களிடம் சொல்லுவது எல்லாம் நிறைய சம்பாதியுங்கள் சொத்து சேர்த்து வையுங்கள் ஆனால் அதனை பையன் எப்படி கையாளவேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுங்கள்.

தான் வாழாத ஒரு வாழ்க்கையை தன் பிள்ளைகள் வாழவேண்டும் என்று ஆசைபடுவது நல்லது தான் ஆனால் அதனை எப்படி வாழவேண்டும் என்று சொல்லிக்கொடுப்பது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, March 25, 2017

சனி பரிகார கோவில்


வணக்கம்!
          சனிக்கிரகத்திற்க்கு என்று பரிகாரம் நிறைய பரிந்துரைக்கின்றனர். இதில் அதிகம் இடம்பெறுவது பைரவரை வணங்குங்கள் என்று சொல்லுவார்கள். பைரவரை வணங்கும்பொழுது உங்களுக்கு சனியின் பாதிப்பு குறையும் என்பது ஒரு சாதாரண சோதிடர் முதல் புகழ் பெற்ற சோதிடர் வரை சொல்லும் பரிகாரம்.

சனி என்றாலே தாழ்ந்தப்பட்ட சமுதாயத்தை குறிக்கும் கிரகம். தாழ்ந்தப்பட்ட சமுதாயத்தினர் வணங்கும் கடவுள் வைரவர். பெரும்பாலும் இது பைரவர் போல உள்ள கடவுள் தான். இருவரும் ஒருவரே என்று தான் சொல்லுவார்கள்.

தாழ்த்தப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து கோவில் கட்டினால் அதற்கு வைரவசுவாமி என்ற பேரோடு அந்த கோவில் விளங்கும். பல பகுதியில் நான் நேரில் சென்று பார்த்து இருக்கிறேன். வைரவன் கோவில் என்ற பேராேடு இருக்கும்.

வைரவன் கோவிலில் சிலை வழிபாடு எப்படி இருக்கும் என்றால் சிமெண்ட் கொண்டு சிலை வடித்து இருப்பார்கள். அதிகப்பட்சம் இப்படி தான் செய்து இருக்கிறார்கள். கலர் பெயிண்ட் அடித்து அந்த சிலை இருக்கும். 

சனிக்கிரகத்திற்க்கு சொல்லும் பைரவர் சிவன் கோவிலில் இருப்பார். தமிழ்நாட்டில் தாழ்ந்தப்பட்டவர்கள் அதிகம் சிவன் கோவிலுக்கு செல்லுவதில்லை. தற்பொழுது டிவியை பார்த்து தான் சிவன் கோவிலுக்கு எல்லாம் செல்லுகின்றனர். அதுவும் நகர்புறத்தில் மட்டும் இந்த பழக்கம் இருக்கின்றது. கிராமபுறங்களில் இந்த பழக்கம் அதிகம் இருப்பதில்லை.

சனிக்கிரகத்திற்க்கு பரிகாரம் நாம் தாழ்த்தப்பட்டவர்கள் கட்டிய வைரவன் கோவில் சென்று வணங்கினால் சனிக்கிரகத்தின் பாதிப்பு குறையும். சிவன்கோவிலில் உள்ள பைரவரை சென்று வணங்கினால் சனியின் பாதிப்பு குறையாது.

வைரவன் கோவிலில் அஷ்டமிக்கு எல்லாம் பூஜை செய்யமாட்டார்கள். வருடத்திற்க்கு ஒரு முறை கிடா வெட்டி பொங்கல் வைத்து பூஜை செய்வார்கள். அந்த நேரத்தில் வேண்டுமானால் வணங்கலாம். செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் ஏதாவது ஒரு தாழ்த்தப்பட்டவர் சென்று அந்த கோவிலில் விளக்கு ஏற்றி ஊதுவத்தி ஏற்றிவிட்டு வருவார். வேண்டுமானால் அதனை வாங்கி அவர்களிடம் கொடுத்தால் அவர்கள் செய்வார்கள். உங்களுக்கு சனியின் பாதிப்பு குறையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, March 24, 2017

நல்ல முன்னேற்றம்


வணக்கம்!
          ஒருத்தரை வாழவிடாமல் செய்வதற்க்கு என்ன வழி என்பதை தான் எல்லா சாதாரண மனிதனும் நினைப்பான். அதனை தவிர்த்து பிறரும் வாழவேண்டும் என்று நினைப்பவன் குறைவாக தான் இருப்பார்கள்.

இந்த உலகம் அப்படிப்பட்ட உலகமாக இருக்கின்றது. அண்ணன் தம்பியாக இருந்தால் கூட அவர்களுக்குள்ளும் பொறாமை இருக்கின்றது. அவர்களே ஒற்றுமையாக வாழ விரும்பமாட்டேன் என்கிறார்கள்.

உங்களுக்கு எதிர்ப்பு அதிகமாக இருக்கின்றது என்றால் அது அக்கம் பக்கம் உள்ளவர்களாக இருந்தாலும் எதிர்ப்பு அதிகமாக இருக்கின்றது என்றால் முடிந்தளவு நீங்கள் அமைதியாக இருக்க கற்றுக்கொள்வது நல்லது.

உங்களின் வீட்டில் அக்கம்பக்கம் உள்ளவர்களோடு தேவை ஏற்பட்டால் மட்டுமே பேசவேண்டும். தேவையில்லாமல் பேசகூடாது. உங்களின் வளர்ச்சிக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் எதிர்ப்பு இருந்தால் உங்களின் வளர்ச்சி பாதிக்கும்.

எதிர்ப்பு இருக்கும் இடத்தில் நீங்கள் அதிக பந்தாவையும் காண்பிக்க வேண்டாம். அதே போல் அடுத்தவர்களின் வாய் வார்த்தையிலும் நீங்கள் வாங்கிகட்டிக்கொள்ளாமல் இருப்பதும் அவசியம்.

பெரிய பணக்காரர்களின் தாரகமந்திரம் இது தான். எதனையும் கண்டுக்கொள்ளாமல் இருப்பார்கள். அவர் அவர்களின் வேலை உண்டு தான் உண்டு என்று இருப்பார்கள். இது எதனை காட்டுகிறது என்றால் அடுத்தவனிடம் எதனையும் வாங்கவில்லை அதனால் அவர்கள் மேலும் மேலும் முன்னேற்றம் காண்கிறார்கள். முடிந்தால் நீங்களும் இதனை கடைபிடித்து வாழலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, March 23, 2017

நல்ல காலத்திற்க்கு காத்திருக்கவும்


ணக்கம்!
          ஒரு சில நேரத்தில் ஏதோ ஒன்றுக்கு முயற்சி செய்வோம். அந்த முயற்சி செய்தால் அந்த நேரத்தில் கடுமையான ஒரு எதிர்ப்பு வரும். நம்மால் அதனை செய்யவே முடியாது.

இப்படிப்பட்ட நேரத்தில் என்ன செய்யவேண்டும் என்றால் இதனை கொஞ்சம் விட்டுவிட்டு பிற விசயத்தில் கவனத்தை வைக்கவேண்டும். கொஞ்ச நாள்கள் சென்ற பிறகு அந்த விசயத்தில் நாம் கையை வைத்தால் பெரும்பாலும் நமக்கு சாதகமாக அமைந்துவிடும்.

ஒரு சில காரியங்கள் பல தடவை முயற்சி செய்தாலும் தடங்கல் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அப்பொழுது நீண்ட காலம் அதனை தள்ளி வைத்துவிட்டு அதனை தொட்டால் நடக்கும்.

ஒரு சில கிரகங்கள் கடுமையான கோபத்தில் இதனை நம்மீது காட்டுகிறது. அந்த கிரகத்தின் கோபம் குறையும் காலம் வரை நாம் காத்திருந்தால் பெரும்பாலும் நாம் எடுக்கும் முயற்சி வெற்றியை கொடுத்துவிடும். நேரம் பார்த்து காயை நகர்த்தும் ஒரு டெக்னிக் இது.

ஒரு சில காலக்கட்டத்தில் பல வருடங்கள் கூட சம்பந்தப்பட்ட கிரகத்தின் தாக்கம் இருக்கும். என்ன செய்வது நமக்கு நடக்கவேண்டும் என்றால் காத்து இருக்கவேண்டியது தான். காத்திருந்து செய்தாலும் காரியம் நடந்துவிடும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வழிகாட்டிய சித்தர்கள்


வணக்கம்!
          ஆன்மீகபயணம் தொடங்கிய நாள்களில் இருந்து சித்தர்களை பற்றி அறிந்துக்கொள்ளகூடிய வாய்ப்பை அந்த சித்தர்களே கொடுத்ததால் அவர்களின் அருளை பெறமுடிந்தது. 

இன்று பல்வேறு நாடுகளிலும் பல்வேறு இடங்களிலும் என்னை தேடி வருபவர்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதற்க்கு அம்மன் அருள் மற்றும் குருவின் அருளோடு பல சித்தர்களின் அருளும் இருப்பதால் தான் அது நடக்கிறது.

இன்று நம்மை தேடி வருபவர்களுக்கு அவர்களுக்கு ஏதோ ஒரு நல்லது நடந்துவிடவேண்டும் என்ற மனநிலை எனக்கு கொடுத்து அதனை நடத்தியும் கொடுக்கிறார்கள்.

பணத்தை எதிர்பார்க்காமல் நடத்திக்கொடுக்கும் ஒரு மனநிலையை எனக்கு கொடுத்ததே சித்தர்களின் அருளால் மட்டுமே சாத்தியப்படுகிறது. என்னை ஏமாற்றுபவர்கள் மற்றும் எதிர்ப்பர்களை எல்லாம் எந்தவிதத்திலும் நான் தொந்தரவு கொடுக்காமல் இருப்பதற்க்கும் சித்தர்கள் கொடுத்த அந்த நல்ல பழக்கம். மனிதனுக்கு தேவையானதை கொடு. மனிதன் கொடுப்பதை எதிர்பார்த்து செய்யாதே என்பது தான்.

என்ன சித்தர்களைபற்றி எழுதுவார் என்றால் இந்த பதிவில் இவரை பற்றி எழுதிக்கொண்டு இருக்கின்றார் என்று நினைக்கலாம். நான் சித்தர் கிடையாது சித்தர்கள் கொடுத்த நல்ல விசயத்தை உங்களிடம் தெளிவாக சொல்லுவதற்க்கு என்னை உதாரணமாக எடுத்துக்கொண்டு சொன்னேன்.

சித்தர்களின் அருள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் பிறர்க்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நிறைய செய்துக்கொண்டு அவர்களின் வாழ்க்கைக்கு நிறைய பாடுபடுவீர்கள் என்பதால் தான் சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, March 22, 2017

திருமணம்


வணக்கம்!
          பல பதிவுகளில் இதனைப்பற்றி சொல்லிருக்கிறேன். பல இளைஞர்கள் திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டு இருக்கின்றனர். நாற்பது வயது தொட்டவர்கள் கூட திருமணம் ஆகாமல் இருக்கின்றனர்.

இவர்களை கேட்கும்பொழுது இன்னுமும் லைப் செட்டாகவில்லை அதனால் அப்படியே இருக்கின்றேன் என்கிறார்கள். ஒரு சிலர் நான் நினைத்த பதவியை அடையவில்லை என்பதற்க்காக இப்படியே இருக்கின்றேன் என்கிறார்கள்.

நீங்கள் நினைப்பது போல் ஆகவேண்டும் என்றால் வயது மேலே போய்விடும் அதன் பிறகு நடந்தால் என்ன நடக்காமல் இருந்தால் என்ன என்று இருந்துவிடவேண்டியது தான். பணம் சம்பாதித்த பிறகு தான் திருமணம் என்றால் பணம் சம்பாதித்த பிறகு உங்களுக்கு இருப்பது இளமை கிடையாது என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.

இருபத்தைந்து வயதுக்குள் ஆண்களாக இருந்தால் திருமணத்தை நடத்திவிடுங்கள். பணம் பதவி வந்தபிறகு தான் திருமணம் என்ற பேச்சு வேண்டாம். முடிந்தளவுக்கு இளைமையில் திருமணம் செய்துவிடுவது நல்லது.

பணம் எல்லாம் சம்பாதித்து முடித்த பிறகு யார்க்காக சம்பாதிக்கிறோம் என்று நீங்கள் நினைப்பீர்கள். அதனால் திருமணத்தை முன்கூட்டியே செய்துவிடுங்கள். ஆன்மீகத்திற்க்கும் திருமணத்திற்க்கும் தடை என்பது எல்லாம் கிடையாது. இல்லறத்தில் இருந்துகூட நல்ல முறையில் ஆன்மீகத்தில் இருக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, March 21, 2017

தண்ணீர் தரும் வியாதி


வணக்கம்!
          நமக்கு ஏற்படும் நோய்களுக்கு பல காரணங்கள் சொன்னாலும் அடிப்படையாக ஒரு காரணத்தை சொல்லவேண்டும் என்றால் அது தண்ணீர் தான். தண்ணீரால் தான் முதலில் நோய் என்பது உருவாவதற்க்கு காரணமாக இருக்கும். தண்ணீரை நாம் பெரிதுப்படுத்துவதில்லை என்பது தான் கவலையான ஒன்று.

எனக்கு சிறுவயதில் எங்களின் ஊரில் தண்ணீர் எடுப்பதற்க்கு அவர் அவர்களின் வீட்டில் உள்ள கிணற்றில் தான் குடிப்பதற்க்கு தண்ணீரை எடுப்பார்கள். கிணறு சுமார் முப்பது அடி வெட்டி வைத்திருப்பார்கள். அந்த தண்ணீர் என்பது சூரிய ஒளிப்பட்டு அந்த குடிநீர் குடிப்பதற்க்கு அப்படி ஒரு சுவையாக இருக்கும். காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளியால் அந்த தண்ணீரை குடிப்பதற்க்கு வரம் பெற்று இருக்கவேண்டும்.

இன்று நிலைமை தலைகீழ். போர் போட்டு அந்த தண்ணீரை தான் பயன்படுத்தவேண்டும். போரில் உள்ள தண்ணீர் அந்தளவுக்கு இருப்பதில்லை. கிராமபுறத்தில் கிணறு இல்லை என்பது தான் உண்மை.

நகர்புறத்தில் சொல்லவே வேண்டியதில்லை அந்தளவுக்கு மோசமான தண்ணீர். என்ன தான் பில்டர் செய்து தண்ணீரை குடித்தாலும் அதுவும் வியாதியை தான் தரும். 

தண்ணீருக்கு காரகம் வகிக்கும் சந்திரன் சரியாக இருந்தால் நீங்கள் குடிக்கும் எந்த தண்ணீரும் உங்களுக்கு சக்தியை தரும். சந்திரன் சரியில்லை என்றால் நீங்கள் குடிக்கும் தண்ணீர் கண்டிப்பாக வியாதியை உருவாக்கும்.

சந்திரன் பரிகாரத்திற்க்கு தங்களின் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தாளக்கரை லட்சுமி நரசிம்மர்


ணக்கம்!
          ஞாயிற்றுக்கிழமை திருப்பூரில் காலையில் நண்பரை சந்தித்துவிட்டு மாலை நேரத்தில் நண்பர் சந்திரசேகர் அவர்கள் தொடர்புக்கொண்டு ஒரு கோவிலுக்கு செல்லவேண்டும் வாருங்கள் என்று கூப்பிட்டார். அவிநாசி அருகில் உள்ள தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவில் தான் அது. சேவூர் வழி அவிநாசி தாலுக்கா கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்த கோவில் அமைந்து இருக்கின்றது.

இங்கு விநாயகர் சர்ப்பவிநாயகராக இருக்கின்றார். ராகு கேது தோஷத்திற்க்கு பரிகாரமாக இந்த சர்ப்பவிநாயகரை வழிபடலாம் என்று நண்பர் சொன்னார்.

கோவிலில் மூலஸ்தானத்தில் நரசிம்மர் கையில் சங்கு சக்கரத்தோடு சாந்தமூர்த்தியாக இருக்கின்றார். நரசிம்மர் மஹாலட்சுமி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள். சந்தனகாப்பு செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.



பொதுவாக லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்மர் மடியில் மஹாலட்சுமி அமர்ந்து இருப்பார். இந்த கோவிலில் நின்ற கோலத்தில் மஹாலட்சுமி அருள்பாலிக்கிறார். கருடாழ்வாரும் இருக்கின்றார்.

500 வருடம் பழமையான கோவிலாக இந்த கோவில் இருக்கின்றது. நீங்கள் அவிநாசி பக்கம் சென்றால் இந்த கோவிலையும் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். எனது பயணத்தில் இந்த கோவில் தரிசனம் கிடையாது ஆனால் கடவுளின் அருளால் இது நடந்தது. இந்த கோவிலைப்பற்றி அன்று தான் எனக்கே தெரிந்ததது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, March 19, 2017

வழிகாட்டிய சித்தர்கள்


வணக்கம்!
          ஒரு சில சித்தர்கள் ஒருவரிடம் வந்து இறங்கி அவர் அந்த சித்தர்களின் வழியாக அருள்வாக்கு சொல்லுவார்கள் என்று நம்ம ஊரில் நிறைய பிரபலமாக இதனை நீங்கள் பார்த்து இருக்கலாம். போர்டு வைத்து விளம்பரம் செய்து இதனை செய்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கலாம் அல்லது பார்த்து இருக்கலாம்.

சித்தர்கள் வந்து அருள்வாக்கு சொல்லுகிறார் என்றால் எப்படி இருக்கும். அருள்வாக்கு சொல்ல விளம்பரமே தேவையில்லை சித்தர்களே கூட்டத்தை கூட்டிவிடலாம். இதனையும் ஒரு தொழிலாக செய்துக்கொண்டு இருக்கின்றனர்.

போகர் என்னுடைய ஆத்மாவில் வந்து இறங்கி சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்று பல இடங்களில் நானே பார்த்து இருக்கிறேன். ஒரு ஆத்மாவில் வந்து அடுத்த ஆத்மாவை செலுத்தமுடியும் என்று சித்தர்கள் சொல்லி இருக்கின்றனர். அவர்கள் குறிசொல்ல தான் வந்து இருக்கின்றார்கள் என்று நம்ம ஆளுங்கள் விடும் கதை தான் நம்பமுடியவில்லை.

இந்த பூமியில் அவசியமாக ஏதோ ஒன்று செயல்படுத்தவேண்டும் என்றால் மட்டுமே அவர்கள் இந்த வேலையை செய்வார்கள். அதுவும் அது அடுத்தவர்களுக்கு தெரியவே தெரியாமல் செய்துவிட்டு போய்விடுவார்கள் என்பது மட்டும் தான் உண்மை. நம்ம ஆளுங்க சொல்லுவது போல் கிடையாது.

ஒரு செயலை இந்த பூமியில் கண்டிப்பாக செய்யவேண்டும் என்ற ஒரு நிலை ஏற்படும்பொழுது மட்டுமே இந்த பூமியில் சித்தர்கள் மனிதனுக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ இப்படிப்பட்ட சித்தவிளையாட்டை செய்கின்றனர்.

நிறைய கருத்துக்கள் இதனைப்பற்றி எழுதபோகிறேன். இனி வரும் பதிவுகளில் நாம் பார்க்கலாம்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, March 18, 2017

சனி சந்திரன் கூட்டணி பலன்


ணக்கம்!
          சந்திரன் சனியோடு சேர்ந்து இருந்தால் அவர்களுக்கு மணவாழ்வும் நன்றாக இருக்காது. மனநிலையும் நன்றாக இருக்காது என்பதை ஏற்கனவே நீங்கள் பார்த்து இருப்பீர்கள். சனியோடு சந்திரன் சேரும்பொழுது அவர்கள் தொடர்பு வைத்திருப்பவர்கள் தங்களின் நிலையை விட தாழ்ந்தவர்களிடம் தொடர்பு வைத்திருப்பார்கள்.

ஒரு படித்தவர் படிக்காதவர்களிடம் தொடர்பு வைத்திருப்பது என்பது அந்தளவுக்கு சரிப்பட்டு வராது என்று சொல்லலாம் ஆனால் சனி சந்திரன் கூட்டணியில் இருப்பவர்கள் இணைபிரியாத நட்போடு பழகுவார்கள்.

சனி சந்திரன் தொடர்பு இருந்தால் தாழ்ந்தப்பட்ட பெண்ணை மணக்கும் நிலையும் உருவாகும். தன்னைவிட கீழ் உள்ள சாதியினரை மணக்கலாம். திருமணம் ஆகவில்லை என்றாலும் கூட தன்னை விட கீழ் சாதியில் உள்ள பெண்ணிடம் ஒரு தொடர்பை வைத்திருப்பார்கள்.

சனி சந்திரன் தொடர்பு இருக்கும்பொழுது தன்னை விட வயதில் மூத்தவர்களோடு பேசிக்கொண்டு இருப்பது மிகவும் பிடிக்கும். இருபது வயதில் இருந்துக்கொண்டு அறுபது வயதில் உள்ளவர்களிடம் பேசிக்கொண்டு இருப்பார்கள்.

சனி சந்திரன் இணைவு என்பது தன்னை விட வயதில் மூத்தவர்களிடம் மட்டும் இல்லாமல் ஆன்மீகத்திலும் அதிகமான நாட்டத்தை உருவாக்கிவிடும். சனி சந்திரன் கூட்டணி ஆன்மீகம் சிறந்த நிலையில் இருப்பார்கள்.

மேலே சொன்னதற்க்கும் பரிகாரம் தேவைப்படும். இப்படி உங்களின் ஜாதகத்தில் இருந்தால் உடனே ஜாதகத்தை அனுப்பி வைக்கவேண்டுகிறேன்.

நாளை கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதியில் உள்ளவர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, March 17, 2017

கேள்வி & பதில்


ணக்கம்!
          கர்மா பதிவை படித்துவிட்ட பலர் நிறைய சந்தேகங்களை கேட்டுள்ளனர். கர்மா என்பதைப்பற்றி நிறைய பதிவுகள் நம் ஜாதககதம்பத்தில் இருக்கின்றன அப்படியே இருந்தாலும் ஒரு சின்ன கருத்தை தான் அதில் சொல்லிருந்தேன்.

நான் இலவசமாக பரிகாரம் செய்தால் கூட சம்பந்தப்பட்ட நபரிடம் நீங்கள் ஏதாவது ஒன்றை ஆன்மீகபணிக்காக செய்துவிடுங்கள் என்று சொல்லுவேன். அது உங்களை காப்பாற்றும்.

இந்த உலகத்தில் தீயவனாக இருந்தால் ஒன்றும் பிரச்சினை இருக்காது ஆனால் ஒருவன் நல்லவனாக இருந்தால் தான் பிரச்சினை. நல்லவனாக இருந்தால் அவன் வாழமுடியாது. அது கடவுளுக்கு கூட பிடிக்காது என்று தான் நான் எண்ணுகிறேன்.

இந்த காலத்தில் இளைஞர்கள் ஆன்மீகத்தை நாடி செல்லுகின்றனர். ஆன்மீகத்தை நாடி செல்லும் நபர்களுக்கு கர்மா விசயத்தில் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். 

இளம்வயதில் நிறைய ஆசை அல்லது ஒரு ஈர்ப்பு இருக்கும். அது என்ன என்றால் நிறைய ஆன்மீகத்தை கற்று அதனை பிறர்க்கு இலவசமாக செய்யவேண்டும் என்ற ஒரு ஆசை தான் அது. நடைமுறையில் நிறைய சிக்கல்கள் இதில் இருக்கின்றது என்பதற்க்காக தான் இது எல்லாம் செய்யவேண்டாம் என்று சொல்லுகிறேன். அடுத்தவர்களின் கர்மாவை சுமப்பதற்க்கும் விதி இருந்தால் மட்டுமே அது சாத்தியப்படகூடிய ஒன்று. 

எங்களை காப்பாற்ற நல்லகுரு இருக்கிறார். அம்மன் இருக்கின்றது அதனையும் மீறி நடந்தால் மட்டுமே அது கடைசி விதி என்று இருக்கும். அவ்வளவு எளிதில் கர்மா தாக்கமுடியாது. எங்களைபோல ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிக்கொண்டு செயல்புரிய ஆரம்பியுங்கள்.

உங்களின் குடும்பத்தை மட்டும் மேலே ஏற்ற வழி என்ன என்பதை பார்க்கவேண்டும். அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும்பொழுது அது நம்மால் முடியும் என்றால் செய்யலாம். அப்படி இல்லை என்றால் விட்டுவிடுங்கள்.

சந்திரன் பரிகாரத்திற்க்கு நிறைய நண்பர்கள் ஜாதகத்தை அனுப்பியுள்ளனர். நான் நிறைய ஜாதகங்களை எதிர்பார்க்கிறேன். உடனே தாமதப்படுத்தாமல் அனுப்பி வையுங்கள்.

வரும் ஞாயிற்றுக்கிழமை கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதியில் உள்ளவர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, March 16, 2017

கர்மா


ணக்கம்!
          ஒருவராக நீங்கள் கோவிலுக்கு சென்றுவாருங்கள். நீங்கள் ஒருவராக கோவிலுக்கு செல்லும்பொழுது உங்களுக்கு அந்தளவுக்கு பாதிப்பு வராது. 

பத்துபேரின் ஜாதகத்தை வாங்கிக்கொண்டு நீங்கள் அவர்களுக்கு எல்லாம் அர்ச்சனை செய்கிறேன் என்று சென்று பாருங்கள். கோவிலுக்கு செல்லமுடியாதபடி அந்தளவுக்கு தொந்தரவை கொடுக்க ஆரம்பிக்கும். கோவிலுக்கு ஒழுங்காக சென்று வரமுடியாது.

ஏன் என்றால் அடுத்தவர்களின் கர்மாவை சுமந்து செல்லுபவர்களாக செல்லும்பொழுது நிறைய பிரச்சினையை நீங்கள் எதிர்கொள்ளவேண்டும். இப்படி தான் எனக்கு பரிகாரம் செய்யும்பொழுதும் ஏற்படும் ஆனால் நமது அம்மன் அருளால் இது அனைத்தையும் எளிதில் எடுத்துவிடும். 

எல்லாேருக்கும் சொல்லுவது உங்களின் குடும்ப ஜாதகத்தை மட்டும் எடுத்துக்கொண்டு செல்லுங்கள். அடுத்தவர்களின் குடும்பத்தின் ஜாதகத்தை அல்லது நண்பர்களின் குடும்பத்தின் ஜாதகத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு சென்றால் கண்டிப்பாக உங்களுக்கு பிரச்சினை வந்துவிடும்.

நிறைய பிரச்சினையை எதிர்க்கொள்ளாமல் இருப்பதற்க்கு வழிதான் மேலே சொன்ன ஒரு விசயம். அதனையும் நீங்கள் கடைபிடித்தால் நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வழிகாட்டிய சித்தர்கள்


வணக்கம்!
          சித்தர்கள் ஏதோ ஒரு காரியத்தை இந்த பூமியில் மறுபடியும் நடத்த அவர்கள் தன்னுடைய ஆத்மாவை வைத்து ஒரு பிறப்பை எடுப்பார்கள் என்று ஒன்று இருக்கின்றது. ஒரு சித்தர் ஜூவசமாதி ஆனபிறகு மறுபடியும் ஏதோ ஒரு நல்ல நோக்கத்தை நிறைவேற்ற ஒரு தாய் கர்ப்பமாக இருக்கும்பொழுது அதற்குள் செல்லவேண்டிய ஆத்மாவை தடுத்து இவர்களின் ஆத்மாவை புகுத்தி இந்த பூமியில் அவதாரம் எடுப்பார்கள்.

இந்த ஒரு மேட்டரை வைத்து தான் நம்ம ஆளுங்க நான் கோரக்கராக பிறந்து இருக்கிறேன் அல்லது வேறு ஒரு சித்தர் பேரை வைத்து பிறந்து இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். 

இப்படி நடப்பது எல்லாம் அவ்வளவு எளிதில் அவர்கள் அவதாரம் எடுக்கமாட்டார்கள். மிக மிக அபூர்வமாக நடக்கும் ஒரு செயல். அப்படியே அவர்கள் அவதாரம் செய்தால் கூட வெளியில் பெயரை சொல்லமாட்டார்கள்.

பிறப்பே எடுக்கவில்லையா என்று நீங்கள் நினைக்கலாம். கண்டிப்பாக எடுப்பார்கள். அவர்கள் செய்ய வந்த வேலையை மட்டும் தான் செய்வார்களை தவிர வேறு வேலையை செய்யமாட்டார்கள். வெளியில் பிரபலத்தை தேடமாட்டார்கள்.

மனிதன் கொடுக்கும் கெளரவத்தை எல்லாம் எதிர்பார்த்து செயல்புரியமாட்டார்கள். மனிதனின் குணம் என்ன என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்குமா என்ன?

பிறப்பில் இடைமறித்து பிறக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அவர்கள் இந்த பூமியில் தான் தன்னுடைய கவனத்தை எல்லாம் செலுத்துகின்றார்கள். நாம் அவர்களின் அருளை மட்டும் பெறுவதற்க்கு என்ன வழி என்பதை மட்டும் யோசித்தால் போதும். நல்ல வாழ்க்கைக்கு வழிகாட்டுவார்கள் சித்தர்கள்.

ஞாயிற்றுகிழமை அன்று கோயம்புத்தூர் பயணம் இருக்கின்றது. கோயம்புத்தூரில் தனிப்பட்ட முறையில் நண்பர் சந்திப்பு இருக்கின்றது. நேரம் கிடைத்தால் பிறரையும் சந்திப்பேன். சந்திக்க நினைக்கும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, March 15, 2017

கேள்வி & பதில்


வணக்கம்!
          நான் ஸ்ரீஅன்னை அரவிந்தரின் பக்தன் மற்றும் ஈஷா யோகாவிலும் தீவிர ஈடுபட்டுள்ளேன்,நான் பரிகாரத்திற்கு ஜாதகம் அனுப்பலாமா?

நல்லூர் பரமேஸ்.

வணக்கம்
          ஒரு சில சித்த மார்க்க யோகாவில் கிரகங்களை சாந்தப்படுத்துவதற்க்கு என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். அதனை பயன்படுத்தி கிரகங்களை சாந்தப்படுத்தமுடியும். மேலே சொன்ன யோகாவைப்பற்றி எனக்கு தெரியவில்லை.

எதில் ஈடுபட்டாலும் நம்முடைய வாழ்க்கை தரம் எந்தளவுக்கு இருக்கின்றது என்பதை அனுபவத்தில் கவனித்து பாருங்கள். நான் பரிகாரம் செய்யவேண்டும் என்பது சொல்லுவது கூட உங்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்க்கு வழியை தான் நான் செய்கிறேன். 

வாழ்க்கை நன்றாக மேலே வந்துவிட்டது என்று நினைப்பவர்கள் அவர் அவர்கள் கடைபிடிக்கும் வழக்கத்தை அப்படியே கடைபிடிக்கலாம். வாழ்க்கை தரம் மேலே வரவில்லை என்பவர்கள் பரிகாரத்திற்க்கு வரலாம். 

பரிகாரத்திற்க்கும் நீங்கள் செய்யும் ஆன்மீகபணிக்கும் மற்ற காரியங்களுக்கும் தொந்தரவு அளிக்காது. உங்களை மேலும் மேலும் உயர்த்த மட்டுமே வழியை தரும். கிரகங்களுக்காக தான் பரிகாரம் செய்கிறோம். உங்களுக்கு விருப்பட்டால் நீங்கள் தாராளமாக ஜாதகத்தை அனுப்பலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, March 14, 2017

செவ்வாய்


ணக்கம்!
          இன்று செவ்வாய்கிழமை. செவ்வாய்கிழமை அன்று முழுவதும் செவ்வாய் பகவானுக்காக விரதம் இருப்பது வழக்கம். பல வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட வழக்கம் இன்றும் தொடர்ந்து இருந்துக்கொண்டே இருக்கின்றது.

பொதுவாக எந்த ஒரு விரதம் இருந்தாலும் அந்த விரதத்தை விட்டுவிட்டால் கூட அந்த நாளில் சுத்தமாக இருக்கவேண்டும் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இன்றும் தொடர்ந்து ஒரு விரதம் இருக்கிறேன் என்றால் அது செவ்வாய்கிழமை விரதம் மட்டுமே என்று சொல்லலாம்.

செவ்வாய்கிழமைக்கு என்று அப்படி என்ன விஷேசமான ஒன்று இருக்கின்றது என்றால் செவ்வாய்பகவான் நமக்கு பல விசங்களை கொடுக்கிறார் என்று பழைய பதிவுகளில் நாம் பார்த்து இருக்கிறோம். அந்த காரத்துவம் அனைத்தும் நன்றாக இருக்கவேண்டும் என்றால் செவ்வாய் பகவானுக்காக விரதம் இருக்கவேண்டும்.

வருடம் ஒரு முறை பழனி சென்று முடி இறங்குவதை வழக்கமாகவும் வைத்திருக்கிறேன். இந்த முறை தை மாதமே சென்று இருக்வேண்டும் ஒரு சில காரணங்களால் தள்ளி போகிக்கொண்டே இருக்கின்றது. விரைவில் அது நடைபெறவேண்டும் என்று நம்புகிறேன்.

உங்களிடம் இதனை சொல்லுவதற்க்கு காரணம் என்ன தான் நாம் தொழில் செய்தாலும் நம்முடைய தனிப்பட்ட காரணத்திற்க்கு நாம் இப்படி எல்லாம் செய்தே ஆகவேண்டும். உங்களுக்கும் விருப்பம் இருந்தால் செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு
Cell no 9551155800.

Monday, March 13, 2017

நட்சத்திர தானம்


ணக்கம்!
          நட்சத்திரத்தின் மீது நிறைய ஈடுபாடு உண்டு. நம்முடைய நட்சத்திரம் நம்மை உயர்த்தும் என்ற நம்பிக்கை தான் அது. நம்முடைய நட்சத்திரத்தினை கொண்டு தான் நிறைய விசங்களை நாம் செய்யமுடியும். அதில் ஒரு சில காலத்திற்க்கு முன்பு ஒரு தகவல் எனக்கு கிடைத்தது. அதனை பல நண்பர்களின் வாழ்வில் ஒப்பிட்டு பார்த்தேன். அது உண்மையாக தான் இருக்கின்றது. அதனை அப்படியே உங்களுக்கு கொடுக்கிறேன்.

அஸ்வினி                 பொன் தானம்
பரணி                          எள் தானம்
கிருத்திகை              அன்ன தானம்

ரோஹிணி                 பால் தானம்
மிருகசீரிடம்             கோதானம்
திருவாதிரை             எள் தானம்

புனர்பூசம்                   அன்ன தானம்
பூசம்                             சந்தன தானம்
ஆயில்யம்                 காளைமாடு தானம்

மகம்                           எள் தானம்
பூரம்                           பொன் தானம்
உத்திரம்                   எள் தானம்

ஹஸ்தம்                  வாகன தானம்
சித்திரை                   வஸ்திர தானம்
ஸ்வாதி                     பணம் தானம்

விசாகம்                    அன்ன தானம்
அனுசம்                     வஸ்திர தானம்
கேட்டை                   கோ தானம்

மூலம்                        எருமை தானம்
பூராடம்                      அன்ன தானம்
உத்திராடம்              நெய் தானம்

திருவோணம்            வஸ்திர தானம்
அவிட்டம்                   வஸ்திர தானம்
சதயம்                          சந்தன தானம்

பூரட்டாதி                    பொன் தானம்
உத்திரட்டாதி            வெள்ளாடு தானம்
ரேவதி                         பொன் தானம்


உங்களின் நட்சத்திரத்திற்க்கு என்று உள்ள தானத்தை செய்துவரும்பொழுது உங்களின் வாழ்க்கை தரம் உயரும். கண்டிப்பாக நிறைய பேர்களின் அனுபவமாகவும் இது இருக்கின்றது. நீங்களும் செய்து பயன்பெறுங்கள்/

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சந்திரன்


ணக்கம்!
          லக்கினத்தில் சந்திரன் இருந்தால் பெரும்பாலும் அவர்களுக்கு நல்லதை தரும் எண்ணம் இருக்கும். நல்லதை தரும் என்றால் அவர்களால் பிறர்க்கு உதவி கிடைக்கும். பெரும்பாலும் தீயகிரகங்களின் வீட்டில் இருந்தால் கூட அவர்களால் எப்படியாவது பிறர்க்கு உதவி கிடைக்கும் என்று சொல்லலாம்.

சந்திரன் லக்கினத்தில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் அவ்வப்பொழுது தடுமாற்றம் ஏற்படுவது இயல்பான ஒன்று. மனசு கொஞ்சம் சஞ்சலப்படுவது உண்டு. ஒரு சில காரிய தடையும் ஏற்படுவது உண்டு.

சந்திரன் பரிகாரம் அறிவித்து பல நண்பர்கள் தன்னுடைய ஜாதகத்தை அனுப்பி வைத்து இருக்கின்றனர். ஜாதககதம்பத்திற்க்கு வரும் நண்பர்கள் எண்ணிக்கை அதிகம். இவர்கள் அனைவரும் அனுப்பி வைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

எதற்க்கு இப்படி சந்திரன் பரிகாரத்திற்க்கு எல்லாம் ஜாதகத்தை அனுப்பவேண்டுமா என்று நினைத்து இருப்பவர்கள் பெரும்பான்மையானர்க்கு சந்திரன் சரியில்லாமல் ஜாதகத்தில் இருக்கும் என்று சொல்லலாம்.

எப்படி சொல்லுகிறேன் என்றால் எந்தவித பிடிப்பும் ஒரு விசயத்திலும் காட்டமாட்டார்கள். தனக்கு என்ன என்கிற மாதிரியான ஒரு எண்ணம் இருந்தால் உங்களுக்கும் சந்திரன் சரியில்லை என்று அர்த்தம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, March 12, 2017

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

ணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்,






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

வணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.




.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

வணக்கம்!
                  இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்
                   





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, March 11, 2017

சந்திரன் பரிகாரம்


ணக்கம்!
          ஏதோ ஒன்று நடந்துவிடாதா என்று தான் பல கோவிலுக்கு நான் ஒரு காலத்தில் சென்று இருக்கிறேன். ஏன் என்றால் அப்படி ஒரு கஷ்டத்தில் வாழ்ந்த காலம் அது. அப்படிக்கொண்ட நேரத்தில் நானும் பல சோதிடர்களிடம் சென்று ஜாதகம் பார்த்தது உண்டு. அவர்கள் ஏதாவது ஒன்று செய்து நமக்கு நல்லதை செய்துவிடமாட்டார்களா என்றும் நினைத்தேன்.

நமக்கு என்ன தேவையோ அதனை நீ பிறர்க்கு கொடு என்று ஜென் மதத்தில் சொன்ன வார்த்தை மட்டும் அதிகம் எனக்கு பிடிக்கும். எனக்கு எது தேவையோ அதனை எல்லாம் பிறர்க்கு கொடுக்கவேண்டும் என்று தான் பொதுபரிகாரத்தை ஆரம்பித்தேன்.

சந்திரனுக்கு பரிகாரம் என்பது ஒரு பெரிய சவாலாக தான் எனக்கு இருக்கும். ஒவ்வொரு ஜாதகத்திலும் ஒவ்வொரு விதமாக சந்திரன் மட்டும் செயல்பட்டுக்கொண்டு இருக்கும். இப்படி செயல்படும் சந்திரனுக்கு பரிகாரம் என்பது சவால்.

எப்படிப்பட்ட விசயத்தையும் நமது அம்மன் மற்றும் குருவின் துணையோடு செயல்படுத்திவிடுவோம் என்ற நம்பிக்கையில் தான் சந்திரன் பரிகாரம் ஆரம்பித்து இருக்கிறேன். நம்முடைய நண்பர்கள் சந்திரன் பரிகாரத்திற்க்கு அவர்களின் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்.

சந்திரன் பரிகாரம் ஆரம்பித்துவிட்டார். சனிப்பெயர்ச்சி பரிகாரம் அவ்வளவு தான் என்று நினைக்கவேண்டாம். சனிப்பெயர்ச்சி பரிகாரம் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கும். சனிப்பெயர்ச்சி பரிகாரம் என்றால் சனிப்பெயர்ச்சி பரிகாரம் என்று தனியாக எழுதி அனுப்பிவிட்டு கட்டணத்தை செலுத்துங்கள்.

சந்திரன் பரிகாரம் பொதுவாக அறிவிக்கப்பட்ட பரிகாரம். ஜாதககதம்பத்திற்க்கு வரும் அனைவரும் ஜாதகத்தை அனுப்பி வைக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, March 10, 2017

பரிகாரம்


வணக்கம்!
          நேற்று ஒரு நண்பரோடு பேசிக்கொண்டு இருக்கும்பொழுது பரிகாரத்தைப்பற்றி பேச்சு வந்தது. அதனன வைத்தே இந்த பதிவை கொடுத்துவிடலாம் என்று ஒரு பதிவை எழுதிவிட்டேன்.

ஒருவருக்கு பரிகாரம் பலிக்காமல் போவதற்க்கு முதற்காரணம் பாக்கியாதிபதி என்று சொல்லக்கூடிய ஒன்பதாவது வீட்டு அதிபதி சரியில்லாமல் ஜாதகத்தில் அமருவது தான் பரிகாரம் பலிக்காமல் போய்விடுவதற்க்கு காரணமாக இருக்கும்.

ஒன்பதாவது வீட்டு அதிபதி யார் என்று பார்த்து அவருக்கு சரியான முறையில் வழிபாட்டை செய்யவேண்டும். உங்களின் ஜாதகத்திற்க்கு தகுந்தமாதிரி அந்த வழிபாட்டை செய்யவேண்டும். 

சோதிடத்தில் சொல்லப்படுகின்ற பரிகாரம் நடைமுறையில் பலிக்காமல் போவதற்க்கு நிறைய காரணம் இருக்கின்றது. சனிக்கிரகம் என்றால் உடனே பைரவர் அல்லது சாஸ்தா என்று சொல்லிவிடுவார்கள். இதனை எல்லாம் கும்பிட்டால் ஒன்றும் நடக்காது என்பது தான் உண்மையான விசயம். ஒவ்வொரு கிரகத்திற்க்கு தகுந்தமாதிரியான அனுபவத்தில் ஒத்துவரக்கூடிய தேவதைகளை வணங்கினால் பலன் தரும்.

கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்யப்படுவது எல்லாம் வீண் என்றே சொல்லலாம். பரிகாரகோவில்கள் என்று சொல்லக்ககூடிய கோவில்கள் எல்லாம் பரிகாரகோவில்களே கிடையாது என்பது தான் உண்மை.

சிற்பசாஸ்திரத்தில் பரிகாரகோவில்கள் என்றால் இரண்டு பாம்புக்கு நடுவில் சூரியன் அல்லது சந்திரன் இருக்கவேண்டும். இந்த விதிகளுக்குள் இருந்தால் மட்டுமே அது பரிகாரகோவில் என்று சொல்லவேண்டும் என்று சொல்லிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இப்படி இருக்கின்ற கோவில்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

நன்றாக ஜாதகத்தை பார்த்து இந்த ஜாதகத்தில் இது தான் பிரச்சினை. இந்த பிரச்சினைக்கு இப்படி தான் பரிகாரம் செய்யவேண்டும் என்று யூகித்து செய்தால் பலன் கண்டிப்பாக கொடுக்கும். அதோடு எங்களை போல உள்ள ஆட்களிடம் பரிகாரம் கண்டிப்பாக பலன்கொடுக்கும். இதற்கு காரணம் இதனையே தொழிலாக செய்துக்கொண்டு இருப்பதால் தான் பலன் கொடுக்கும் என்று சொல்லுகிறேன்.

சந்திரன் பரிகாரத்திற்க்கு தங்களின் ஜாதகத்தை அனுப்பிவிட்டீர்களா. உடனே அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வழிகாட்டிய சித்தர்கள்


ணக்கம்!
          ஒரு காலக்கட்டத்தில் என்னுடைய வாழ்வில் பின்னிபிணைந்தவர் கோரக்கர் என்றால் அது உண்மை என்றே சொல்லவேண்டும். அந்த காலத்தில் அவரின் அருள் நம்மீது பட்டு இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் அவரைப்பற்றி பேசும் வாய்ப்பு அந்த நேரத்தில் கிடைத்தது.

என்னங்க பேசுவதற்க்கு வாய்ப்பு கிடைக்கவேண்டுமா என்று கேட்கலாம். நாம் தினசரி வாழ்வில் கடவுளைப்பற்றி ஏதாவது ஒரு வார்த்தை பேசுகிறோமா என்று பாருங்கள். வாரத்தில் ஒன்று இரண்டு நாட்கள் பேசலாம். தினமும் பேசினால் அது புண்ணியம். வாழ்க்கைக்கு சம்பந்தமே படாத எத்தனையோ விசயங்களை பேசிக்கொண்டு இருக்கிறோம்.

பிற மதங்களை பாருங்கள் ஐந்து வேளை தொழுவுகிறார்கள் நம்ம அப்படி இல்லை. அடுத்தவரை நாம் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது நாம் குறைவாக தான் கடவுளை கும்பிடுகிறோம் என்று தோன்றுகிறது. 

நாம் ஆன்மீகத்தைபற்றி பேசகூடிய ஒரு நிலையில் இல்லாத நேரத்தில் கோரக்கரைப்பற்றி பேசுவது என்றால் கண்டிப்பாக அந்த நேரத்தில் அவரின் அருள் இல்லாமல் நடக்குமா என்பது எனக்கு சந்தேகம். 

நானும் ஒரு வயதான ஒருவரும் பேசும்பொழுது நாகப்பட்டிணத்தில் அவருக்கு ஜூவசமாதி இருக்கின்றது. கோரக்காபூரில் ஜூவசமாதி இருக்கின்றது என்று சொன்னேன்.அவர் என்னிடம் சொன்னார். எப்படி ராஜேஷ் இரண்டு இடத்தில் ஜீவசமாதி இருக்கும் இது நம்பும்படியாக இல்லையே என்றார். 

அவர் கேட்ட இந்த கேள்வி தான் நான் நாகப்பட்டிணம் செல்லாமல் இருந்தேன். ஒரு சிலர் கோரக்கர் பிறந்தது கோரக்பூர் என்றும் அவர் ஜூவசமாதி அடைந்தது நாகப்பட்டிணத்தில் என்றும் சொல்லுகின்றனர். சித்தரைப்பற்றி ஆராய்ந்துக்கொண்டு இருக்கவேண்டியதில்லை அவர் காட்டும் பாதையை மட்டும் சென்றால் போதும் என்றும் இருந்துவிட்டேன்.

சித்தர்களால் அனைத்தும் சாத்தியமே என்பது தற்காலத்தில் எனக்கு தெரிந்த உண்மை. அதுபோல ஜீவசமாதியும் இருக்கலாம் என்பது தான் என்னுடைய தனிப்பட்ட கருத்து.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு
Cell No : 9551155800

Thursday, March 9, 2017

பொதுபரிகாரம் : சந்திரன்


ணக்கம்!
          சந்திரனைப்பற்றி இவ்வளவு நாட்கள் எழுதிவந்தேன். அது எதற்கு என்று உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். பொதுபரிகாரம் சந்திரன் கிரகத்திற்க்கு தான் செய்யபோகிறோம். 

ஜாதகத்தில் மிக மிக முக்கியமான ஒன்று சந்திரன் என்று அனைவருக்கும் தெரியும். உங்களின் ஜாதகத்தில் சந்திரன் கிரகம் எப்படி இருந்தாலும் சரி அதற்கு ஒரு பரிகாரம் செய்துவிடுவது நல்லது. 
.
இலவச சேவையும் உண்டு. அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு ஏதாவது செய்துவிடுவது நல்லது. ஏற்கனவே நடந்த சனி செவ்வாய் பரிகாரத்திற்க்கு அனுப்பிய ஜாதகர்கள் இந்த நாள் வரை ஒரு கோவிலுக்கும் செய்யவில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது.

இலவசசேவைக்கு அனுப்பிவிட்டு நான் வாட்ஸ்அப்பில் கூப்பிடும்பொழுது கண்டுக்கொள்ளாமல் இருப்பதும் நல்லதல்ல. வீணாக ஒரு நல்ல செயலுக்கு இடையூறு செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு கிரக பரிகாரத்திற்க்கும் அடுத்த கிரக பரிகாரத்திற்க்கும் குறைந்தது ஒரு வருடத்திற்க்கு மேல் ஆகும் என்பதால் அனைவரும் இதில் கலந்துக்கொள்வது நல்லது. அடுத்த சந்திரன் பரிகாரம் எப்பொழுது வரும் என்று சொல்லமுடியாது அதனால் அனைவரும் ஜாதகத்தை அனுப்பிவையுங்கள். மறக்காமல் வாட்ஸ்அப் எண்ணையும் அனுப்பிவையுங்கள்.

கட்டணசேவையிலும் சந்திரனுக்கு பரிகாரம் செய்யப்படும். கட்டணம் இது தான் என்று நிர்ணயம் செய்யப்படவில்லை. வழக்கம்போல் உங்களின் விருப்பம் போல் கட்டணத்தை செலுத்தலாம்.

முக்கியமான ஒன்று : ஏற்கனவே நடந்த பொதுபரிகாரத்திற்க்கு பலனை சொல்லிக்கொண்டு இருந்தேன். அதில் பாதிபேருக்கு மேல் பலனை என்னால் சொல்லமுடியவில்லை. இந்த பரிகாரத்திற்க்கு கண்டிப்பாக பலனை சொல்லமுடியாது. எனக்கு வேலை அதிகம் என்பதால் சொல்லமுடியாது. பரிகாரம் மட்டுமே செய்யப்படும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு
Cell no : 9551155800

அம்மன் பூஜை


ணக்கம்!     
அம்மன் பூஜை வருகின்ற 12-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்களுக்கு ஜாதககதம்பம் வழியாக நன்றியை நீங்கள் சொல்லவேண்டும். இவர்கள் அனுப்பும் பணத்தில் மற்றும் ஒரு சிலர் கொடுக்கும் பணத்தை வைத்து தான் பொதுபரிகாரம் இலவசமாக நடத்தப்படுகிறது. 

பொதுபரிகாரம் செய்யப்படுவதை பொதுவாக தளத்தில் படத்தை வெளியிடமுடியாது என்பதற்க்காக தான் அவர் அவர்களின் வாட்ஸ்அப் எண்ணை வாங்கிக்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் அனுப்பி வைக்கிறேன். அம்மன் பூஜை மட்டும் தளத்தில் வெளியிடப்படும்.

இந்த மாதம் அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள் .அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள் .

சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள். 

நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
இராஜபாளையத்தை சேர்ந்த திரு அருண் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு ஹரி அவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள்.
கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்
பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள். 

வழக்கம்போல்                திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள். 

மற்றும் பல நண்பர்கள் அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியுள்ளனர். 

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

வழிகாட்டிய சித்தர்கள்


வணக்கம்!
          குரு பூஜை என்ற ஒன்று சித்தர்களுக்காக செய்யவேண்டிய ஒன்று. பெரும்பாலும் சித்தர்களின் வழியை கடைபிடிப்பவர்கள் அவர்களின் நட்சத்திரம் வரும்நாளில் வருடத்திற்க்கு ஒரு முறை குருபூஜையை செய்வார்கள். அவர்களுக்கு வழிகாட்டியாக சித்தர்கள் இருப்பதால் அவர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களின் ஆசியை பெறுவதற்க்கு செய்யும் ஒரு விழா தான் குருபூஜை.

நமக்கு அவர்களின் நட்சத்திரம் வரும்நாளில் அல்லது அவர்கள் பிறந்த மாதத்தில் வரும் பெளர்ணமி நாளில் இந்த குருபூஜையை நாம் செய்யலாம். கண்டிப்பாக இதனை செய்யவேண்டுமா என்றால் கண்டிப்பாக செய்து தான் ஆகவேண்டும். 

சித்தர்களின் குருபூஜையில் நாமும் கலந்துக்கொண்டு அவர்களின் ஆசியை பெறலாம். பொதுவாக தற்பொழுது நிறைய இடங்களில் இப்படிப்பட்ட விழா நடைபெறுகிறது. விழா நடைபெறுகிறது என்றால் பூஜை செய்தால் பரவாயில்லை அங்கு நடப்பது வேறுவிதமாக இருக்கின்றது.

நான் வெளியூர் பயணத்தில் ஒரு இடத்தில் கவனித்தேன். ஒரு சித்தரின் பெயரை போட்டு குரு பூஜை என்று இருந்தது. அங்கு இசைக்கச்சேரி வைத்திருந்தார்கள். சினிமா பாட்டை பாடி நடனம் நடந்துக்கொண்டு இருந்தது. சித்தர்கள் காட்டிய வழி இன்று தவறாக போய்க்கொண்டு இருக்கின்றது.

பல இடங்களில் ஒவ்வொருத்தருக்கும் பொன்னாடை போர்த்தி விழா நடக்கிறது. கண்டிப்பாக இப்படிப்பட்ட செயல் சித்தர்களின் வழிக்கு எதிராக தான் இருக்கும். அவர்களின் அருள் கிடைப்பதற்க்கு மாறாக வேறு ஏதாவது கிடைக்கும்.

எனது ஊருக்கு அருகில் ஒரு இடத்தில் பார்த்தேன். ஒரு இளைஞர்க்கு குருபூஜைக்கு பயங்கரமான விளம்பரம். முதல் ஆண்டு குரு பூஜை என்று இருந்தது. அந்த இளைஞர் எப்படி என்றால் ஒரு ரெளடி பய அவனை எதிரி கும்பல் வெட்டி கொலை செய்தது. அதற்கு குரு பூஜை நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள். எதிர்காலத்தில் அவனை பெரிய மகான் போல காட்டி அவனுக்கு கோவிலை கட்டிவிடுவார்கள். அவனையும் பின்பற்ற ஒரு சிலர் இருப்பார்கள்.

சித்தரைப்பற்றி சொல்லுவதற்க்கு வேறு ஏதோ ஒன்றை சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள் என்று நினைக்கலாம். தவறான பாதையை நம்ம மக்கள் பின்பற்றி செல்லகூடாது என்பதற்க்காக தான் இதனை எல்லாம் சொல்லுகிறேன்.

சித்தர்களின் வழி எல்லாம் நம்ம மக்கள் பிடிக்கிறது என்றால் அவர்கள் சொன்ன வழி மிகச்சிறந்த வழி என்று தான் சொல்லவேண்டும். உன் ஆத்மாவை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுவதற்க்கும் உன் உடலையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சொன்னவர்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு