வணக்கம் நண்பர்களே !
நேற்று பதிவு எழுதவில்லை காரணம் மந்திர அனுபவங்களை பெறுவதற்க்கு நேரில் வரச்சொல்லிருந்தேன். அவர்களை சந்தித்ததால் எழுதமுடியவில்லை நேற்று மட்டும் என்னை சென்னையிருந்து ஏழு நபர்களை சந்தித்து பேசினேன். இது எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செயல் தான் ஏன் என்றால் நான் நினைத்தது யாராவது ஒருவர் அல்லது இருவர் வரலாம் என்று எதிர்பார்த்தேன் எதிர்பார்த்ததை விட அதிகமாகதான் வந்தார்கள்.
அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் ஏற்பாடு செய்து தருகிறேன். அனைவரும் புதுவருட கொண்டாங்களில் ஈடுபட காத்துக்கொண்டு இருப்பீர்கள். குடிப்பதை குறைத்து கொள்ளுங்கள் குடிக்க வேண்டாம் என்று சொன்னால் யாரும் கேட்கபோவதில்லை அதனால் குறைத்து குடியுங்கள்.
நான் சென்னையில் இருப்பதால் கடந்த ஒரு வார காலமாக பார்ட்டி என்று அழைந்துக்கொண்டு தான் இருக்கிறேன். பல பார்ட்டிகள் நான் இருக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விடுதிகளில் நடந்ததால் அனைத்தையும் விடாமல் கலந்துக்கொண்டேன்.அனைத்து பார்ட்டியிலும் மது என்பது தவறாமல் இருந்தது. அனைத்து பார்ட்டியிலும் நான் ஒருவன் தான் குடிக்காமல் இருந்திருப்பேன். குடிப்பது என்பது மனிதனின் அடிப்படை தேவை மாதிரி கொண்டுவந்து விட்டார்கள்.
அனைத்து பார்ட்டிலும் தவறாமல் கலந்துகொண்டதான் காரணம் அனைத்து பேர்களும் என்னிடம் நெருங்கி பழகியவர்கள். அவர்களின் அன்பு தொல்லையால் தவிர்க்க முடியவில்லை கலந்து கொண்டேன். இன்றும் நிறைய நபர்கள் டிக்கெட்களை அனுப்புகிறேன் வாருங்கள் என்று சொன்னார்கள் ஆனால் நான் போகவில்லை. ஏன் என்றால் சாதாரண மனிதன் பாதி மனிதனாக இருப்பான் இந்த கூட்டத்தில் நாம் போய் என்ன செய்யபோகிறோம். வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
2013 வருடம் சோதிடப்படி கிரகநிலைகளைப் பார்த்தால் கெடுதல் தான் அதிகம் நடக்கும் என்று தோன்றுகிறது. ஒரு கிரகமும் நல்ல நிலையில் இருக்கபோவதில்லை. அனைவரும் கடவுளிடம் நன்றாக பிராத்தனை செய்துக்கொள்ளுங்கள். எப்பொழுதும் சனியும் செவ்வாயும் பார்த்துக்கொள்ளும் காலங்களில் தான் பிரச்சினை வெடிக்கும் ஆனால் இந்த வருடம் கேது மேஷத்தில் இருந்து சனியை பார்க்கிறது. கேது அமரும் இடத்தின் பலனை தரவேண்டும் என்ற நியதியால் செவ்வாயின் பலனை அப்படியே கொடுத்துவிடும். சனி துலாத்தில் இருந்து கேதுவை பார்ப்பதால் அதுவும் பிரச்சினை தான் குருவும் சரியில்லை என்று தான் சொல்லவேண்டும். சோதிடம் தெரியாதவன் கூட சொல்லிவிடுவான் கிரகநிலைகள் சரியில்லை என்று அதனால் கடவுளை பிராத்திப்பது நல்லது.
2012 வருடத்தில் என்னால் முடிந்தளவுக்கு உங்களுக்கு பதிவுகள் தந்தேன். 2013 வருடம் நிறைய பதிவுகளை கொடுக்கவேண்டும் என்று நினைத்துள்ளேன். அங்காளபரமேஸ்வரி அருளுடன் உங்களை சந்திக்கிறேன்.
அமைதியாக புத்தாண்டை கொண்டாடுங்கள். உங்கள் குடும்பத்தில் உள்ள நபர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.