Followers

Wednesday, December 31, 2014

நன்றி


வணக்கம் நண்பர்களே!
                      2014 ஆம் வருடத்தில் உங்களின் நேரத்தை என்னோடு பகிர்ந்துக்கொண்டதற்க்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

ஒவ்வொரு வருடத்திலும் நிறைய செய்திகளை உங்களுக்கு கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறேன். பல்வேறு சூழ்நிலை காரணமாக என்னால் எழுதமுடியவில்லை. 2015 ஆம் வருடத்தில் நிறைய பதிவுகளை தரவேண்டும் என்று அம்மனிடம் பிராத்தனை செய்கிறேன்.

ஜாதககதம்பத்தை புது நண்பர்களிடம் நீங்கள் அனைவரும் அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கின்றீர்கள். அதற்கு முதலில் ஒரு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதனை தொடர்ந்து செய்து வாருங்கள்.

புத்தாண்டை கொண்டாடும் நண்பர்கள் அனைவரும் விதிமுறைகளை மீறாமல் கொண்டாடுங்கள். குடும்பத்தோடு கொண்டாடுங்கள். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                      நேற்று புத்தாண்டு ஸ்பெஷசல் பதிவை படித்துவிட்டு பல நண்பர்கள் சந்தேகம் எழுப்பினர். ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

நண்பர் பரமேஷ் அவர்கள் மானசீகமாக வழிபாட்டை செய்யலாமா என்று கேட்டார்.

மனதில் அபிஷேகம் செய்வது போல் செய்யலாம் ஆனால் நமது மனதில் பல எண்ணங்கள் இடையில் ஏற்படும் நாம் மனதில் செய்கிற வழிப்பாட்டில் தடை இல்லாமல் செய்ய வேண்டும் அந்த மனநிலையில் நீங்கள் இருந்தால் தாராளமாக செய்யலாம். 

முதலில் நீங்கள் நேரிடையாக செய்து பழகிக்கொள்ளுங்கள். அதன் பிறகு மனதில் செய்துக்கொள்ளலாம். நேரிடையாக மனதில் செய்கிறேன் என்று போட்டு மனதை குழப்பிக்கொள்ள வேண்டாம்.

சிவனுக்கு வீட்டில் வைத்து பூஜை செய்வதை விட வெளியில் நீங்கள் சென்று பூஜை செய்வது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்கள் ஏற்பட்டால் வீட்டில் வைத்து பூஜை செய்துக்கொள்ளுங்கள்.

சிவ லிங்கங்கள் கடையில் சிறியதாக கிடைக்கும். அதை வாங்கிக்கொண்டு அதற்கு நீங்கள் பூஜை செய்யலாம்.அதனையே நீங்கள் வைத்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் செய்துக்கொள்ளலாம்.

பூஜை செய்வதற்க்கு பணம் எல்லாம் அதிகம் தேவைப்படாது. உதிரிபூக்களை வைத்து அர்ச்சனை செய்தால் கூட போதும். எளிமையான அதே நேரத்தில் மிக சக்தி வாய்ந்த ஒரு பூஜையை நான் உங்களுக்கு சொல்லியுள்ளேன். அனைவரும் தாராளமாக செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Tuesday, December 30, 2014

புத்தாண்டு ஸ்பெஷல் பதிவு


வணக்கம் நண்பர்களே!
                      பல நண்பர்கள் என்னிடம் புத்தாண்டு பிறக்க போகின்றது ஏதாவது ஒரு நல்ல செய்தியை சொல்லுங்கள் என்று கேட்டார்கள். அனைத்து தளத்திலும் இதனைப்பற்றி சொல்லியிருப்பார்கள். நான் தனியாக சொல்லவேண்டுமா என்று கேட்டேன். அவர்கள் நீங்களும் ஏதாவது ஒரு நல்லதைப்பற்றி சொல்லுங்கள் என்று கேட்டார்கள். நண்பர்கள் கேட்டதால் உங்களுக்கு ஒரு பயனுள்ள ஒரு செய்தியை சொல்லுகிறேன்.

பொதுவாக நான் காடுகளுக்கு மற்றும் தனிமையான ஒரு இடத்திற்க்கு செல்லும்பொழுது நான் செய்வதை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். காடுகளில் உள்ள கோவில்கள் பெரும்பாலும் சித்தர்கள் உருவாக்கி இருப்பார்கள். இந்த கோவில்களில் நானே அபிஷேகம் செய்வேன். குறிப்பாக சிவனுக்கு அபிஷேகம் செய்வேன்.

மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோவிலுக்கு ஐயர் அபிஷேகம் செய்வார்கள். காடுகளில் இருக்கும் கோவிலுக்கு நாம் அபிஷேகம் செய்யலாம்.

அபிஷேகம் செய்வதால் என்ன பயன்?

ஒரு மனிதன் உலகியல் விசயங்களிலும் வெற்றி பெறவேண்டும் ஆன்மீகவிசயங்களிலும் மேலான நிலையை ஒருவன் பெறவேண்டும் என்றால் அவன் கண்டிப்பாக சிவனுக்கு அபிஷேகம் செய்யவேண்டும். 

ஜாதகத்தில் அதிகளவில் தோஷத்தால் பாதிப்படையும்பொழுது நமக்கு வழியே தெரியாது. அப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்யும்பொழுது எப்படிப்பட்ட தோஷமும் விலகி நல்ல வாழ்க்கை அமையும்.

வடநாட்டில் உள்ள கோவில்களில் நீங்களே அபிஷேகம் செய்யலாம் ஆனால் தென்இந்தியாவில் செய்யமுடியாது. நீங்கள் ஒரு கோவிலை அணுகி அங்கு பணத்தை கட்டி தான் செய்யமுடியும்.

பொதுவாக நீங்களே அபிஷேகம் செய்தால் மிக மிக நல்லது. அதற்கு நீங்கள் செய்யவேண்டியது நீங்களே ஒரு மண்ணை லிங்கம் போல் பிடித்து அதற்கு நீங்கள் அபிஷேகம் செய்யுங்கள்.

சிவனுக்குரிய ஏதாவது ஒரு மந்திரத்தை சொல்லி அபிஷேகம் செய்யுங்கள். சிவன் அன்பு மயமானவர் நீங்கள் செய்யும் குறைகளை நிவர்த்தி செய்து நல்லதை செய்வார்.

என்னுடைய தொழில் நண்பர்களுக்கு அவர்கள் கையில் அபிஷேகம் செய்ய சொல்லுவேன். அவர்கள் செய்வார்கள். அவர்கள் எல்லாம் நன்றாக தான் வாழ்க்கையை வாழ்கிறார்கள். நீங்களும் பயமின்றி அபிஷேகம் செய்யுங்கள்.

இதனை செய்து நீங்கள் நன்றாக வாழ என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அன்பே சிவம்.



அன்புடன்
ராஜேஷ்சுப்பு

விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                      நேற்று பதிவை படித்துவிட்டு அம்மன் பூஜைக்கு கலந்துக்கொள்கிறேன் என்று ஒரு சில நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு போன் செய்தார்கள்.

இவர்கள் அனைவரும் எனக்கு நல்ல பரிச்சம் ஆனவர்கள். இவர்களின் மாத சம்பளத்தை எடுத்து இவர்களின் செலவுக்கு மட்டும் தான் இவர்கள் செலவு செய்யமுடியும்.இவர்கள் எப்படியும் முன்னேறிவிடவேண்டும் என்று நினைக்கிறார்கள் ஆனால் இவர்களின் பொருளாதார நிலை இவர்கள் எடுக்கும் முயற்சிக்கு ஒத்துழைப்பதில்லை.

கடன் வாங்கியாவது சாமி கும்பிடவேண்டும் என்று நினைக்கும் மக்கள் நம் மக்கள். இவர்களுக்கு தேவையற்ற தொந்தரவை நான் கொடுக்க விரும்பவில்லை. நான் உங்களின் ஊர்க்கு வரும்பொழுது செய்துக்கொடுக்கிறேன் என்று சொல்லியுள்ளேன்.

நல்ல செல்வநிலையில் இருந்தால் வாருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன். கடன் வாங்கிக்கொண்டு சாமியை கும்பிடகூடாது.நல்ல வேண்டுதலை வையுங்கள். உங்களின் ஊர்களுக்கு நான் வரும்பொழுது என்னை சந்தித்து உங்களுக்கு தேவையானவற்றை என்னிடம் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Monday, December 29, 2014

வீடு


வணக்கம் நண்பர்களே!
                      ஒரு வீடு மட்டும் ஒழுங்காக நீங்கள் கட்டிவிட்டால் போதும் அது உங்களை காப்பாற்றுவது போல் உங்களை வேறு ஒருவன் காப்பாற்ற மாட்டான். இதனை நான் பல நண்பர்களிடம் நேரில் சொல்லியுள்ளேன்.

முதலில் நாம் நன்றாக இருக்கவேண்டும் என்றால் எதுவெல்லாம் நமக்கு பிரச்சினை கொடுக்கும் என்பதை பார்த்து அதனை விலக்கிவிட்டு எது நமக்கு நல்லது செய்யும் என்பதை பார்த்து தேர்ந்தெடுத்து நமக்கு செய்துக்கொள்ளவேண்டும்.

பொதுவாக இந்தியர்களிடம் அரைகுறை இருக்கும் எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு நிறைவாக செய்யமாட்டான். ஆரம்பத்தில் படுவேகமாக செய்ய ஆரம்பிப்பான் முடிவில் ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டு ஒரு அரைகுறையாக செய்துமுடித்துவிட்டு செல்வான்.

அரைகுறையாக எல்லாம் செய்வதால் தான் நாம் கட்டும் வீடு கூட அரைகுறையாக கட்டிமுடித்துவிடுகிறோம். முதலில் அரைகுறையாக இருக்ககூடாது நன்றாக இருக்கவேண்டும் என்பதை முதலில் தீர்மானித்துவிட்டு வீடு கட்ட ஆரம்பிக்கவேண்டும்.

பெரிய வீடு தான் அப்படி கட்டவேண்டும் என்பதில்லை சின்ன வீடாக இருந்தாலும் அதனை ஒழுங்காக கட்டிவிட்டால் அதுவே உங்களை எங்கோ கொண்டு சென்றுவிடும். மிகப்பெரிய வளர்ச்சி மற்றும் அமைதியை உங்களுக்கு அந்த வீடு பெற்று தந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அம்மன் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                      முதலில் ஒரு நல்ல விசயத்தை பார்க்கலாம். மார்கழி மாத அம்மன் பூஜை ஐனவரி மாதம் பத்தாம் தேதிக்குள் நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளேன். அம்மனின் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் தங்களின் காணிக்கையை செலுத்தலாம். 

அம்மன் பூஜைக்கு இதுவரை நான் யாரையும் கூப்பிட்டதில்லை. அப்படி இருந்தும் பல நண்பர்கள் நமது அம்மன் பூஜைக்கு கலந்துக்கொண்டுள்ளனர். ஜாதககதம்பத்தை படித்துவிட்டு அதன் வழியாக வந்து கலந்துக்கொண்டுள்ளனர். அம்மன் பூஜைக்கு யாரையும் கூப்பிடாமல் இருந்தர்க்கு காரணம் எனக்கு அதிக வேலை இருக்கும். அடுத்தபடியாக இது கிராமம் இந்த ஊரில் வெளியூரில் இருந்து வந்து செல்பவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதும் கடினமாக உள்ளது.

அம்மன் பூஜை ஏற்பாடு செய்வதற்க்கு இரண்டு நாட்கள் தேவைப்படுகிறது. இரண்டு நாட்கள் தொடர்ந்து வேலை செய்தால் மட்டுமே பூஜையை சிறப்பாக செய்யமுடியும். அம்மன் பூஜைக்கு மலர் வாங்குவது ஒரு சவாலாகவே இருக்கும். அதனை எடுத்து அலங்காரம் செய்வதற்க்கு அதிக நேரம் எடுக்கும். காலையில் இருந்து வேலையை தொடங்கினாலும் தீபாராதனை காட்டுவதற்க்கு மாலை ஏழு மணியாகிவிடுகிறது. 

அம்மன் பூஜைக்கு நேரில் நீங்கள் வந்து கலந்துக்கொள்வதாக இருந்தால் கலந்துக்கொள்ளலாம். இத்தனை நாள் கூப்பிடாமல் ஏன் இப்பொழுது கூப்பிடுகிறேன் என்று கேள்வி கேட்பவர்களுக்கு நான் சொல்லுவது வரும் நண்பர்களுக்கு அம்மன் பூஜையின் பொழுது அவர்களுக்கு சிறந்த முறையில் காப்பு கட்டப்படும். உடல்காப்பு கட்டப்படும். இதனைப்பற்றி நான் பழைய பதிவில் சொல்லியுள்ளேன். சூட்சமசரீரத்தை காப்பாற்றுவதற்க்கு உடல்காப்பு பூஜை செய்யப்படும்.

அம்மன் பூஜைக்கு தகுந்த காணிக்கையை அனுப்பி வையுங்கள். சூட்சம சரீர பாதுகாப்பை நேரில் வந்து செய்துக்கொள்ளுங்கள். கலந்துக்கொள்ளும் நண்பர்கள் அம்மனை அலங்காரம் செய்வதிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம். எந்த வித கட்டுபாடும் கிடையாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, December 28, 2014

வீடு


வணக்கம் நண்பர்களே!
                      வீட்டைப்பற்றி எழுதியவுடன் பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு அவர்களின் வீட்டைப்பற்றிய சந்தேகத்தை கேட்கிறார்கள். இதனை போனில் பேசக்கூடிய ஒரு விசயமாக இருக்காது.

நேரில் உங்களின் வீட்டிற்க்கு வந்து பார்த்தால் தான் இதனைப்பற்றி கருத்து சொல்லமுடியும். நான் உங்களின் வீட்டை பார்க்காமல் எதுவும் சொல்லமுடியாது.

ஒவ்வொரு வீட்டிலும் நல்ல சக்தி இருக்கின்றதா அல்லது கெட்ட சக்திகள் இருக்கின்றதா என்பதை உங்களின் வீட்டிற்க்கு வரும்பொழுது மட்டுமே சொல்லமுடியும்.அதே நேரத்தில் எப்படி வீட்டை கட்டியுள்ளீர்கள் என்பதையும் நேரில் பார்க்கும்பொழுது மட்டுமே தெரியவரும்.

ஒவ்வொரு ஊருக்கும் வரும்பொழுது என்னை தொடர்புக்கொள்ளுங்கள். உங்களின் வீட்டை வந்து பார்த்துவிட்டு அதன் பிறகு என்ன செய்யலாம் என்று சொல்லுகிறேன்.

வீட்டைப்பற்றி முழுமையாக எழுதி முடித்த பிறகு உங்களின் கேள்வியை என்னிடம் கேட்கலாம். தற்பொழுது இதனை தவிருங்கள் நண்பர்களே

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தினமும் படியுங்கள்


வணக்கம் நண்பர்களே!
                      நேற்று மதுரையில் இருக்கும்பொழுது திருபரங்குன்றம் சென்று வந்தேன். பிரசித்திப்பெற்ற கோவிலாக இருந்தால் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. அந்த காரணத்தால் நேற்று புகைப்படம் எடுக்கவில்லை. கோவிலில் நல்ல தரிசனமும் நமது மதுரை நண்பரால் கிடைக்கப்பெற்றது.

திருபரங்குன்றம் முருகன் கோவிலை தரிசனம் செய்துவிட்டு மதுரையில் இருந்து நேற்றே தஞ்சாவூர் வந்துவிட்டேன். மதுரைக்கு பயணம் செய்து முடித்த பிறகு பதிவை படித்து மதுரையில் இருக்கிறீர்களா என்று கேட்கிறார்கள். இது ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் ஒரு செயலாகவே உள்ளது. தினமும் பதிவை படிப்பதில்லை என்றும் தெரிகிறது.

ஒவ்வொரு ஊருக்கும் செல்லும்பொழுது நமது தொழில் நண்பர்களின் அவசர தேவைக்காக செல்வது உண்டு. அதனால் உங்களுக்கு முன்கூட்டியே என்னால் பதிவில் தெரிவிக்கமுடியவில்லை. எந்த ஆன்மீகவாதி சும்மா இருந்தாலும் நான் சும்மா உட்கார்ந்துக்கொண்டு இருக்கமுடியாது. எந்த நேரத்தில் எந்த இடத்தில் பிரச்சினை வரும் என்று எனக்கு சொல்லமுடியாது. தொழில் நண்பர்கள் என்னை கூப்பிட்டுக்கொண்டே இருப்பதால் அப்படி நிலை எனக்கு ஏற்படும்.

ஒவ்வொரு ஊரிலும் அருகில் உள்ள கோவிலுக்கு அவர்களோடு தான் சென்று வருகிறேன். பல நண்பர்கள் எங்களையும் அழைத்துக்கொண்டு செல்லுங்கள் என்று கேட்கிறார்கள். நான் ஒவ்வொரு ஊருக்கும் வரும்பொழுது என்னை தொடர்புக்கொண்டால் இது சாத்தியப்படும்.

ஒவ்வொரு ஊர்களுக்கும் நான் அவசரமாக தான் செல்லுவேன் அப்படி நிலை ஏற்படும்பொழுது உங்களுக்கு முன்கூட்டியே பதிவில் தெரிவிக்க முடியவில்லை அதனால் தினமும் ஜாதககதம்பத்தை படியுங்கள். 

அடுத்த பயணம் சென்னைக்கு செல்கிறேன். சென்னையில் உள்ள நண்பர்கள் சந்திக்க விருப்பம் உள்ளவர்கள் என்னை இப்பொழுதே தொடர்புக்கொண்டு விடுங்கள். சென்னை வந்தவுடன் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, December 27, 2014

வீடு


வணக்கம் நண்பர்களே!
                      மதுரையில் இருந்து இந்த பதிவை தருகிறேன். வீட்டைப்பற்றி பார்த்து வருகிறோம். வாஸ்துவிலும் ஈசானிய மூலைக்கு அதிகம் முக்கியதுவம் கொடுக்கிறார்கள். ஈசானிய மூலையின் வழியாக வீட்டிற்க்கு இறைஅருள் கிடைக்கிறது என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஈசானிய மூலை மிகவும் நல்லமுறையில் இருப்பதுபோல் அமைத்துக்கொள்வது நல்லது. சுத்தமாக இருக்கவேண்டும். பொதுவாக வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று பல பதிவுகளில் நான் சொல்லியுள்ளேன். அதேப்போல் நீங்கள் ஈசானி மூலையை நல்ல முறையில் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ஈசானிய மூலை நன்றாக உங்களின் வீட்டிற்க்கு அமைந்துவிட்டால் அதுவே உங்களுக்கு மிகப்பெரிய அளவில் நல்லது செய்துவிடும். ஈசானிய மூலையின் வழியாக தான் ஈசன் அருள் வீட்டிற்க்கு கிடைக்கிறது. 

உங்களின் ஜாதகத்தின் வழியாக உங்களுக்கு நல்லது நடக்கிற காலம் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில் உங்களின் வீட்டின் ஈசானிய மூலையும் நன்றாக இருந்தால் மட்டுமே முழுமையான பயனை அடையமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, December 26, 2014

உங்களின் தெய்வம் எனக்கு ஆசி


வணக்கம் நண்பர்களே!
                      மதுரை வந்து சேர்ந்துவிட்டேன். ஒவ்வொரு ஊர்களுக்கும் நான் செல்லும்பொழுது நமது நண்பர்களை சந்தித்தாலும் அதிலும் எனக்கு பலவிதமான அனுபவங்கள் ஏற்படும்.

பல வருடங்களாக இப்படி சுற்றிக்கொண்டு இருக்கிறேன். பல விதமான மக்களை சந்தித்து இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவமும் கிடைக்கிறது. 

நீங்கள் வெளியில் இப்படி சுற்றும்பொழுது அந்தந்த ஊர்களில் இருக்கும் காவல்தெய்வங்கள் மற்றும் அந்தந்த ஊர்களில் இருக்கும் குலதெய்வங்கள் நம்மிடம் தரிசனம் காட்டும். ஆன்மீகவாதியாக இருந்தால் இப்படி தரிசிக்கமுடியும்.

இப்படி தரிசித்துவிட்டு வந்தால் அடுத்த முறை அந்த ஊர்களில் இருந்து ஏதாவது ஒரு வேலை வந்தால் அந்தந்த ஊர்களில் உள்ள தெய்வங்களை வைத்தே முடித்துக்கொள்ள முடியும்.

இதனை நான் பல ஊர்களில் செய்து இருக்கிறேன். அம்மனை வைத்தே அனைத்து வேலையும் செய்வது கிடையாது. அந்தந்த ஊர்களில் உள்ள தெய்வங்களை வைத்தே வேலையை வாங்கிக்கொள்வது எனக்கு கொஞ்சம் எளிதான காரியமாக இருக்கும்.

பொதுவாக எந்த ஊர்களுக்கு போனாலும் அந்தந்த ஊர்களில் இருந்து எனக்கு அழைப்பு வந்துக்கொண்டே இருக்கும். அதற்கு காரணம் இப்படி அந்தந்த ஊர் தெய்வங்களின் அனுக்கிரகத்தை பெறுவதால் அப்படி நடைபெறுகிறது. ஒரு சில ஊர்களில் நானே வேண்டாம் என்று வந்துவிடுவது உண்டு.

நன்றி

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வீடு


வணக்கம் நண்பர்களே!
                       சிவன் கோவிலுக்கு போனால் எப்படி நமக்கு தோன்றுகிறதோ அதேப்போல் தேவாலயத்திற்க்கு (சர்ச்) சென்றாலும் தோன்றுவது போல் அவர்களும் செய்து வைத்திருக்கிறார்கள். எந்த மதம் ஆனாலும் இப்படி தான் செய்து வைக்கிறார்கள்.

கட்டிடங்கள் தான் அப்படி செய்கின்றனவே தவிர வேறு ஒன்றும் கிடையாது. இதனை நன்கு அறிந்த ஞானிகள் தான் உனக்குள் தேடு வெளியில் தேடாதே என்று சொல்லி வைத்தனர்.

பிரபஞ்ச சக்தியை வெளிப்படுத்துவது போல் கட்டிடங்களை உலகத்திற்க்கு அறிமுகப்படுத்தியது இந்தியர்கள் தான். நம்ம ஆட்களிடம் இதனை கற்று அனைவரும் இதனை பயன்படுத்தி வருகின்றார்கள்.

பொதுவாக மதங்களை வைத்து தொழில் செய்வதும் சாமியார்கள் ஆசிரமங்களை வைத்து தொழில் செய்வதும் ஒரு சில சின்ன டிரிக் மட்டுமே தானே தவிர அதில் விஷேசமாக ஒன்றும் இருக்காது. சின்ன சின்ன விசயங்களில் கவனத்தை செலுத்தி கோவில்கள் மற்றும் ஆசிரமங்களை கட்டி வைத்துவிடுவார்கள். நீங்கள் உள்ளே சென்றவுடன் சாமிக்கிட்ட பெரிய சக்தி இருக்கிறது என்று நீங்களும் நம்பி வரவேண்டியது தான்.

ஒரு சில ஆசிரமங்களில் நான் பார்த்து இருக்கிறேன். அவர்கள் அனைவரும் கட்டிடங்களுக்கு முன்னுரிமை கொடுத்து கட்டி வைத்திருப்பார்கள். என்ன காரணம் என்றால் வரும் அனைவரும் அந்த கட்டிடங்களுக்குள் உள்ளே வந்தவுடன் அவர்களின் மனம் அமைதி அடைந்துவிடவேண்டும் என்ற ஒரே குறிக்கோள் தானே தவிர வேறு ஒன்றும் கிடையாது.

பிரபஞ்ச சக்தி உங்களின் வீட்டிற்க்குள்ளும் அமைத்துக்கொண்டு நீங்களும் அமைதியாக ஆனந்தத்தோடு வாழுங்கள்.

நாளை மதுரையில் என்னை சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

நன்றி

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Thursday, December 25, 2014

வீடு


வணக்கம் நண்பர்களே!
                      வீட்டைப்பற்றி சொல்லிவரும் கருத்துக்களை நன்றாக உன்னிப்பாக கவனித்து படித்து பாருங்கள். அதில் உள்ள கருத்துகள் உங்களை தெளியவைக்கும். நான் சொல்லவரும் விசயம் உங்களுக்கு கற்றுக்கொடுக்கும் விசயமாக அது இருக்காது. அதனை கற்றுதர முடியாது. அனைத்தும் படு ரகசியமானவை. உங்களுக்கு அப்படிப்பட்ட வீடு தேவைப்பட்டால் என்னை தொடர்புக்கொண்டு உங்களின் வீட்டை கட்டிக்கொள்ளலாம் அல்லது கட்டியவீட்டை மாற்றிக்கொள்ளலாம்.

ஏன் ரகசியம்?

பொதுவாக மக்கள் ஒரு இடத்திற்க்கு அதாவது கோவில் அல்லது ஆசிரமம் போன்றவற்றிக்குள் உள்ளே சென்றாலே யாருடைய வழிகாட்டுதல் இல்லாமல் அவர்களே அதற்குள் வயப்பட்டுவிடவேண்டும்.

கோவில்களுக்குள் நீங்கள் சென்றால் உங்களின் மனம் அதுவாகவே அமைதி அடைந்துவிடும். அதற்கு காரணம் கட்டட அமைப்பு அப்படிப்பட்டது. பிரபஞ்ச சக்தியை அப்படியே உள்ளேயே தேக்கி வைத்து இருப்பதால் நீங்கள் உள்ளே சென்றவுடன் உங்களுக்கு சக்தி கிடைப்பது போல் செய்துவிடுவார்கள்.

இதனை வெளியில் விட்டால் கோவிலுக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்ற காரணத்தால் ரகசியமாக இதனை வைத்துள்ளார்கள். எனக்கு சொல்லிக்கொடுத்தவர்களும் இதனை வெளியில் சொல்லிவிடாதே என்று சொல்லியதால் இதனைப்பற்றி உங்களுக்கு சிறிய கருத்தை மட்டும் சொல்லிவருகிறேன்.

நிறைய ஆசிரமங்களில் இந்த டெக்னிக் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் உள்ளே சென்றவுடன் ஒரு அமைதி அதுவாகவே நடந்துவிடும். இதனை நீங்கள் குருவின் சக்தி என்று நினைத்துக்கொண்டு இருப்பீர்கள் அது தான் தவறு. அந்த ஆசிரமம் அப்படி கட்டப்பட்டு இருக்கிறது.அந்த கட்டிடம் உங்களை அப்படி மாற்றிவிடும்.

ஆசிரமத்தில் வருகின்ற ஒவ்வொரு ஆளுக்கும் உட்கார்ந்துக்கொண்டு குரு அமைதியை கொடுத்துக்கொண்டிருந்தால் அவருக்கு சக்தி போய்விடும். அதனை எல்லாம் கருத்தில் கொண்டு இப்படி கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. நீங்களே இதனை சோதனை செய்துவிட்டு என்னிடம் வந்து சொல்லுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நல்வாழ்த்துக்கள்

வணக்கம் நண்பர்களே!
                      கிருஸ்துமஸ் கொண்டாடும் நண்பர்களுக்கு இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, December 24, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                      என் உள்மனதில் ஒரு கேள்வி எழுந்தது. யாராவது இதனை கேட்பார்கள் என்று நான் எதிர்பார்த்து இருந்தேன் ஆனால் ஒருவரும் இதனைப்பற்றி கேள்வி கேட்கவில்லை. சரி நாமே எழுதிவிடலாம் என்று எழுதிவிட்டேன்.

நாம் கோவில்கள் போல் வீடு இருக்கவேண்டும் என்று சொல்லுகிறோம். பிரபஞ்சத்தின் சக்தியை வெளிப்படுத்துவதற்க்கு கோவிலை கட்டி வைத்துள்ளனர். கோவிலில் தவறு நடப்பதற்க்கு வழி இல்லை ஆனால் நாம் வீட்டில் தவறு செய்வோம் அதனால் நமக்கு பாதிப்பு வராதா என்ற கேள்வி தான் அது. நீங்கள் கேட்கவில்லை நானே கேட்டுக்கொண்டு எழுதிவிட்டேன்.

இல்லறத்தில் இருப்பவர்கள் காமத்தில் ஈடுபட செய்வார்கள். காமம் ஒன்றும் பிரபஞ்ச சக்திக்கு எதிரி கிடையாது. கோவில்களில் பள்ளியறை என்ற ஒன்று இருக்கும். அது எப்பொழுதும் மூடி தான் இருக்கும். இரவில் அந்த அறையை திறந்து பூஜை செய்வார்கள். கடவுளுக்கும் தனி அறை ஒதுக்கப்பட்டு கட்டப்படுகிறது. அதுப்போல் நீங்களும் பெட்ரூம் கட்டி வைத்துள்ளீர்கள். பிரபஞ்ச சக்தியால் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

பிரபஞ்ச சக்தியுடன் ஒரு வீடு அமைக்கப்பட்டால் உங்களின் இல்லறம் நன்றாக இருக்கும் அதே நேரத்தில் உங்களின் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

வீடு


வணக்கம் நண்பர்களே!
                      வீட்டைப்பற்றி எழுதிய கருத்துக்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பல நண்பர்கள் தங்களின் வீடுகளுக்கு நீங்கள் வாருங்கள் என்று கூப்பிட்டு உள்ளனர். கருத்தை ஏற்று என்னை அழைத்தற்க்கு நன்றி.

நமது மக்கள் வார்த்தையில் கூட வறுமையை காட்டுபவர்களாக இருக்கின்றனர். ஒரு வீடு கட்டவேண்டும் என்றால் அவர்கள் சொல்லுவது பங்களா மாதிரி கட்டவேண்டும் என்கின்றனர். அது என்ன பங்களா மாதிரி கட்டவேண்டும். பங்களா கட்டபோகிறேன் என்று சொல்லவேண்டியது தானே. அதில் கூட மாதிரி என்ற வார்த்தையை உபயோகித்து தன்னுடைய வார்த்தையில் கூட நல்ல வாழ்வதாக தெரியவில்லை.

பங்களா கட்டவேண்டும் என்று ஆசைப்படுங்கள். பங்காள மாதிரி கட்டபோகிறேன் என்று ஆசைப்பட்டால் கூரை வீடு கூட கட்டமுடியாது. வார்த்தைகளை தவறாக பயன்படுத்தி பயன்படுத்தி அவனின் வறுமைக்கு அவனே காரணமாகிவிடுகிறான்.

உங்களிடம் எல்லாம் நான் சொல்லுவது வீடு என்பது நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையின் அந்தஸ்தை காட்டுகின்ற ஒரு விசயம். நீங்கள் பேங்கில் கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கலாம். அதனை எல்லாம் மக்கள் பார்க்கமாட்டார்கள். நீங்கள் எப்படிப்பட்ட வீட்டில் வசிக்கின்றீர்கள் என்பதை தான் இந்த உலகம் பார்க்கும். 

இந்த பூமியில் நீங்கள் செய்கின்ற அதிகப்பட்ச ஒரு செயல் எது என்றால் நீங்கள் கட்டுகிற வீடு மட்டும் தான். வேறு எதுவும் அதிகம் இருக்காது. அப்படி நீங்கள் கட்டுகிற வீடு மிகவும் சொசுசான வீடாக அதே நேரத்தில் நல்ல சக்தியை கொடுக்கின்ற வீடாக நீங்கள் அமைத்துக்கொண்டால் அதன் பிறகு உங்களுக்கு எல்லாம் தேடி வந்துவிடும்.

இன்றைய நாளில் இருந்து நல்ல சொகுசான வீடு கட்டி அதில் நான் வாழவேண்டும் என்று அம்மனிடம் பிராத்தனை வையுங்கள். ஒரு வருடத்தில் அதனை நீங்கள் நிறைவேற்றிவிடமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


Tuesday, December 23, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
       நேற்று எழுதிய சக்தி பதிவை படித்துவிட்டு நமது நண்பர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் காமத்தை வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டார்கள். 

எவ்வளவு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். அதே நேரத்தில் உங்களின் மனைவியிடம் வைத்துக்கொள்ளுங்கள். பல பேர்களிடம் சென்று நோயை வாங்கிக்கொண்டு வந்துவிடாதீர்கள்.

இளம்வயதில் ஆட்டம் ஒவராக ஆடிவிட்டு பிறகு திருமணம் முடிந்த பிறகு குழந்தை இல்லை என்று வருபவர்கள் அதிகம் இப்பொழுது இருக்கின்றார்கள். இளமையில் அதிகம் ஆட்டம் போடுபவர்களுக்கு கவுண்டிங் பிரச்சினை நிறைய பேருக்கு ஏற்படுகிறது. பல பேர்களின் வாழ்வில் இதனை நான் பார்த்து இருக்கிறேன். எதுவுமே ஒழுங்கு முறையில் இருந்தால் மட்டுமே அனைத்தும் நன்றாக இருக்கும். ஒழுங்காக இல்லை என்றால் வருவதை அனுபவிக்கவேண்டும் ஒன்றும் செய்யமுடியாது.

என்னிடம் குழந்தை இல்லை என்று வரும் பல பேர்கள் இளம் வயதில் அதிகம் ஆட்டம் போட்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் வந்து ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து எங்களுக்கு குழந்தை பாக்கியத்திற்க்கு பூஜை செய்துக்கொடுங்கள் என்று கேட்பார்கள்.

இவர்கள் பாேட்ட ஆட்டத்திற்க்கு நானா பொறுப்பு ஏற்க முடியும். பார்க்கலாம் என்று சொல்லிவிடுவேன். அதாவது கடவுள் எப்படி நமக்கு ஆப்பு அடிப்பான் என்று தெரியாது. அதனால் இருக்கும்பொழுது ஒழுங்காக இருந்துக்கொண்டு நல்ல வாழ்க்கை வாழவேண்டும். காமத்தை பயன்படுத்த வேண்டும் அதே நேரத்தில் இயற்கையை மீறி செய்ய கூடாது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Monday, December 22, 2014

வீடு


வணக்கம் நண்பர்களே!
                      வீட்டைப்பற்றி பல பதிவுகளில் சொல்லிருக்கிறேன். இந்தப்பதிவில் மேலும் ஒரு கருத்தை பார்க்கலாம்.

ஒரு கோவில் கட்டி முடிக்கப்பெற்ற பின்பு அதற்கு கும்பாபிஷேகம் செய்து பிறகு தான் மக்களை வழிபாடு செய்ய சொல்லுகிறார்கள். கும்பாபிஷேகம் செய்யும்பொழுது பல பூஜைகள் மற்றும் யாகங்களை செய்த பிறகு தான் வழிபாடு செய்கிறார்கள்.

கும்பாபிஷேகத்தில் ஒரு நிகழ்வாக பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை உள்ளே இழுக்க செய்வதற்க்கு ஒரு வித சடங்கு செய்வார்கள். அந்த சடங்கு செய்யும்பொழுது பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை உள்ளே வரவழைக்க கோவிலின் கலசம் வழியாக நூல் கட்டி உள்ளே இழுப்பார்கள். அப்படி இழுத்து சிலைக்குள் கொண்டுவந்து நிறுத்துவார்கள். இது பழைமையான கோவிலில் இப்படி தான் செய்வார்கள். தற்பொழுது இதனை எல்லாம் செய்வதில்லை. அதனால் தான் கோவிலில்களில் சக்தி இல்லாமல் இருக்கிறது.

 ஒரு வீட்டை கட்டிய பிறகு அந்த வீட்டிற்க்கு குடிபோகும்பொழுது ஒரு சின்ன கணபதி ஹோமம் மட்டும் செய்துவிட்டு அப்படியே குடிபுகுந்துவிடுவார்கள். இந்த ஹோமம் செய்வதற்க்கு கூட இப்பொழுது சரியான ஆட்கள் இல்லை என்பது தான் உண்மையான ஒரு செய்தி.

குடிபுகும்பொழுது செய்கின்ற பூஜை எல்லாம் அந்த வீட்டில் நடந்த தீட்டை மட்டும் குறைக்குமே தவிர பிரபஞ்ச சக்தியை உள்ளே தங்குவதற்க்கு எல்லாம் செய்வது கிடையாது. 

வீடு கட்டும்பொழுது பல ஆட்கள் வேலை செய்வார்கள். அவர்கள் வேலை செய்யும்பொழுது ஒழுங்காக சுத்தமாக இருந்து வேலை செய்து இருக்க மாட்டார்கள். அவர்களின் வழியாக தீட்டு உள்ளேயே இருக்கும். நீங்கள் பிராமணர்களை வைத்து செய்கின்ற பூஜை எல்லாம் இந்த தீட்டை மட்டும் குறைக்குமே தவிர பிரபஞ்ச சக்தி உள்ளே வருவதற்க்கு செய்வது கிடையாது.

பிரபஞ்ச சக்தி அதுவாகவே உள்ளே வந்தால் கூட உங்களின் கட்டிடத்தில் உள்ளே தங்க வைக்க பல ஏற்பாடுகளை நீங்கள் செய்யவேண்டும். அப்படி ஏற்பாடுகளை செய்தால் மட்டுமே உங்களின் வீடு மிகுந்த சக்தி அளிக்க கூடியதாக இருக்கும்.

கோவிலில் இருக்கும் சிலைக்கு மனிதன் பிராணன் கொடுத்து தான் அந்த சிலைக்கு உயிர் கொடுக்கிறான். அப்படி கொடுக்கும்பொழுது தான் அது கடவுள். அப்படி இல்லை என்றால் அது வெறும் கல். உங்களின் வீட்டிற்க்கும் உயிர் கொடுத்தால் தான் அது சக்தி மிகுந்த வீடு அப்படி இல்லை என்றால் அது வெறும் டப்பா போல் தான் இருக்கும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சக்தி


வணக்கம் நண்பர்களே!
                      ஒரு சாதாரணமான மனிதன் ஏன் சக்தியை இழக்கிறான் என்பதைப்பற்றி பார்க்கலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் சிறிதளாவது சக்தி இல்லாமல் இருக்காது. ஒரு மனிதன் இறக்கவேண்டும் என்றாலும் அவனுக்கு சக்தி தேவைப்படும்.

இன்றைய பரபரப்பான சூழ்நிலை மனிதனை வேகமாக ஒடவைக்கிறது. வாழ்க்கையில் நிறைய சவாலை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்படி ஒடும் மனிதனுக்கு சக்தி இழப்பு ஏற்படும். இதனை சமாளிக்க ஒவ்வொரு மனிதனின் உடலும் பல்வேறு வழியில் சக்தியை சேரிக்கும். உணவு வழியாக வழிபாடு வழியாக பிரபஞ்சம் வழியாக இப்படி பல்வேறு வழியில் சேகரிக்கும்.

ஒரு மனிதனுக்கு சக்தி வீணாக போவது காமத்தில் தான் என்று நினைத்து அனைத்து ஆன்மீகவாதியும் காமத்தை வேண்டாம் என்று சொல்லுவார்கள். ஆன்மீகத்திற்க்கு காமம் ஒரு தடை என்பது போல் காட்டுவார்கள். காமத்தில் சக்தி வீணாக சென்றாலும் அந்த சக்தியை உடல் வெகு சீக்கிரத்தில் திரும்பி பெற்றுவிடும்.

நீங்கள் அதிகமாக காமத்தில் ஈடுபட்டால் கூட அதில் வெளியாகும் சக்தியை உடல் உணவில் வழியாக பெற்றுவிடும். ஒரு மனிதனுக்கு கவலை என்று ஒன்று ஏற்பட்டால் அந்த மனிதனுக்கு சக்தியை திரும்ப பெறுவது என்பது மிக கடினமான ஒன்று. இன்று பல பேருக்கு கவலை ஏற்பட்டதால் தான் சக்தியை இழக்கிறார்கள்.

உதாரணத்திற்க்கு ஒருவருக்கு கடன் வழியாக கவலை ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவரின் உடல் வெகு சீக்கிரத்தில் சக்தியை இழந்துவிடும். அதனை திரும்ப பெறுவது என்பது அந்த கடனை அடைத்தால் மட்டுமே.

ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்றால் அவருக்கு மனதில் கவலை ஏற்பட்டுவிட்டால் அவரும் வெகு சீக்கிரத்தில் தனது சக்தியை இழந்துவிடுவார். கவலையால் தான் சக்தி இழப்பு ஏற்படும்.

இல்லறவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இன்றைய பொருளாதாரம் மற்றும் வாழ்வியல் அதிக சுமைக்கொண்டதாகவே இருக்கின்றது. உங்களுக்கு சக்தி இழப்பு ஏற்படுவது இயல்பு. சந்நியாசி என்ற நிலை ஏற்பட்ட காரணமும் கூட இல்லறத்தின் வழியாக வரும் கவலையால் சக்தி இழப்பு ஏற்படும் அதனை தவிர்க்க வேண்டும் என்ற காரணத்தால் தான் தான் சந்நியாசி ஆகிவிடு நீ சக்தி உடையவனாக மாறிவிடுவாய் என்று வந்தது.

மிக சிறந்த ஆன்மீக குருவாக இருந்தால் உங்களிடம் சொல்லும் வார்த்தை சந்தோஷமாக இருங்கள் என்று சொல்லுவார்கள். ஏன் என்றால் சந்தோஷமாக இருந்தால் உங்களுக்கு சக்தி இழப்பு ஏற்படாது என்ற காரணத்தால் அப்படி சொல்லுவார்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, December 20, 2014

செல்வவழி


வணக்கம் நண்பர்களே!
                       என்னை தொடர்புக்கொள்ளும் நண்பர்களில் முக்கால்வாசி பேர் எப்படியாவது என்னை பயன்படுத்திக்கொண்டு மேம்மையான வாழ்க்கை வாழவேண்டும் என்று நினைக்கின்றார்கள். அதனை என்னால் உங்களுக்கு செய்துக்கொடுக்க முடியும்.

பணக்காரர் ஆகவேண்டும் என்றால் அது உடனே நடந்துவிடாது. அதற்கு நிறைய உழைக்கவேண்டும். என்னிடம் வந்த நாளே பணக்காரர் ஆகிவிடவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. உங்களை தயார்படுத்த சிறு காலம் தேவைப்படும் அந்த காலம் வரை நீங்கள் பொறுமை காக்கவேண்டும்.

வேலை பார்த்துக்கொண்டு இருப்பவர் என்னிடம் வந்து பெரிய அளவில் நான் பணக்காரர் ஆகவேண்டும் என்று வந்தால் அது உடனே சாத்தியப்படாத ஒன்று. ஏன் என்றால் அவரின் வேலை வழியாக மட்டுமே அவருக்கு பண வரவு இருக்கும்பொழுது வேலையில் இருப்பவர்களுக்கு பெரிய அளவில் பணத்தை கொடுக்ககூடிய அளவிற்க்கு கம்பெனி தயாராக இருந்தால் அதற்கு வழி செய்யலாம். வருடத்திற்க்கு ஒரு ஊதிய உயர்வை மட்டும் தரும் நிலையில் உள்ள கம்பெனியில் வேலை பார்த்தால் அது சாத்தியப்படாத ஒன்று.

தொழில் செய்பவர்கள் குறைந்த காலம் என்னிடம் ஒழுங்காக இருந்தால் கண்டிப்பாக நல்ல முறையில் நீங்கள் பெரிய அளவில் வரமுடியும். உங்களால் எளிதில் செல்வந்தராக மாறிவிடமுடியும். ஒரு தடவை பணத்தை பார்த்தவுடன் ஓடி விடுபவர்கள் தான் அதிகம் இருக்கும்பொழுது என்னால் எப்படி தொடர்ந்து உங்களுக்கு செய்யமுடியும்.

பொதுவாக வரும் நண்பர்கள் உடனே ஜாதகத்தை வைத்து செய்துக்கொடுங்கள் என்று கேட்பவர்களாக தான் இருக்கின்றார்கள். ஜாதகத்தை வைத்து உங்களுக்கு செய்துக்கொடுக்க தயாராக இருக்கிறேன் ஆனால் நீங்கள் எனக்கு காலம் முழுவதும் உதவ தயார் என்ற நிலை ஏற்படும்பொழுது மட்டுமே அது சாத்தியப்படும். அதற்கு காரணம் குருவின் கட்டளை அப்படிப்பட்டது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மார்கழி மாதம்


வணக்கம் நண்பர்களே!
                      கடந்த ஒரு வாரக்காலம் கடும் காய்ச்சலில் அவதிப்பட்டேன்.முடிந்தளவுக்கு பதிவை கொடுத்தேன். உடல் மோசமான நிலையில் இருந்த நாட்களில் உங்களுக்கு பதிவு தரமுடியவில்லை. தஞ்சாவூரில் தொடர்ச்சியாக மழை பெய்துக்கொண்டே இருக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் தான் நல்ல மழை தஞ்சாவூர் பகுதியில் பெய்து இருக்கிறது. இன்று ஒரளவு உடல் நிலை நன்றாக இருந்தவுடன் பதிவை எழுத ஆரம்பித்துவிட்டேன்.

மார்கழி மாதத்தை பற்றி நமது நண்பர்கள் கேள்வி கேட்டுருந்தனர். அதனைப்பற்றி சொல்லலாம் என்று இப்பதிவு. மார்கழி மாதத்தில் எந்த வித நல்ல காரியங்களும் செய்யகூடாதா என்று கேட்டுருந்தார்கள். மார்கழி மாதத்தில் நல்ல காரிங்களுக்கு தேவையான முன் ஏற்பாடுகளை செய்யலாம்.

ஒரு திருமண ஏற்பாடு நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். ஜாதகப்பொருத்தம் பார்ப்பது மாப்பிள்ளை வீட்டை பார்ப்பது பெண் வீட்டைபார்ப்பது எல்லாம் வைத்துக்கொள்ளலாம். முடிவு செய்துவிட்டு அதனை விழாவாக கொண்டாட கூடாது. மார்கழி மாதம் முடிந்த பிறகு விழா வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு நண்பர் வீடு குடி போகலாமா என்று கேட்டார். வீடு குடி போககூடாது. எந்த ஒரு விழாவாக இருந்தாலும் மார்கழி மாதம் கொண்டாட கூடாது. மார்கழி மாதம் முடிந்த பிறகு வைத்துக்கொள்ளவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, December 18, 2014

உங்களின் வீடு பகுதி 10


வணக்கம் நண்பர்களே!
                      உங்களின் ஜாதகத்தை வைத்து உங்களின் வீட்டைப்பற்றி பார்த்து வருகிறோம். உங்களின் ஜாதகத்தில் நான்காவது  வீட்டில் ராகு சம்பந்தப்பட்டு இருந்தால் உங்களுக்கு அமையும் வீடு அந்தளவுக்கு சுபிட்ஷம் இல்லாமல் இருக்கும்.

ராகு சம்பந்தப்படுவதால் வீட்டில் அதிகம் தீயசக்திகளின் ஆதிக்கம் இருக்கும். வீட்டில் நீங்கள் தூங்கும்பொழுது கெட்ட கனவுகள் வந்து உங்களின் தூக்கத்தை கெடுக்கும்.

உங்களுக்கு வீடு அமைவது நகரங்களில் அமையும். ஒரு சிலருக்கு அவர்களின் சொந்த ஊரில் கூட அமைந்து இருக்கிறது.ராகு அமரும் வீட்டின் தன்மையை கொடுப்பதால் உங்களின் ஜாதகத்தை கொண்டு தான் இதனை அறியமுடியும்.

வீட்டில் இருப்பது துர்சக்திகள் இருக்கும். இந்த துர்சக்திகளால் உங்களுக்கு ஆபத்தை தான் விளைவிக்கும்.  ஜாதகத்தில் அமரும் வீட்டை பொறுத்து சக்திகளில் தன்மை வெளிப்படும்.

பொதுவாக ராகு நான்காவது வீட்டில் சம்பந்தப்பட்டால் எந்த வீட்டிற்க்கு நீங்கள் சென்றாலும் அல்லது வீடு கட்டினாலும் பல முறை நன்றாக பார்த்துவிட்டு கட்டவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வெளிநாட்டு வாய்ப்பு


வணக்கம் நண்பர்களே!
                     இந்தியாவில் இருப்பவர்களுக்கு எப்படியும் ஒரு தடவையாவது வெளிநாடுகளுக்கு சென்று வரவேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கும். ஏதாவது ஒரு நாட்டிற்க்கு சென்று வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பார்கள்.

வெளிநாட்டிற்க்கு சென்று வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். எப்படியே வெளிநாடு சென்று வந்தால் ஒன்று நல்ல அனுபவம் ஏற்படும் அல்லது நல்ல சம்பாதித்து விட்டு வரலாம் என்று நினைக்கின்றார்கள்.

வெளிநாட்டு பயணங்களை குறிப்பது எல்லாம் பனிரெண்டாவது வீடு தான். பனிரெண்டாவது வீட்டு அதிபதி பங்களிப்பு இல்லாமல் வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்காது. 

பனிரெண்டாவது வீட்டு அதிபதி வலு பெறும்பொழுது உங்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் வரும். இயற்கையாக வலுபெறும்பொழுது வெளிநாட்டு வாய்ப்புகள் வரும். நாம் நினைத்தது நடக்கவேண்டும் அல்லவா அதனால் நீங்கள் வெளிநாடு செல்லவேண்டும் என்று நினைத்தால் உங்களின் ஜாதகத்தில் பனிரெண்டாவது வீட்டு அதிபதி யார் என்று பார்த்து அவர்களுக்கு பரிகாரம் செய்தால் உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, December 17, 2014

வீடு


வணக்கம் நண்பர்களே!
                      வீட்டைப்பற்றி நாம் பார்த்துக்கொண்டு வருகிறோம். இதில் உங்களின் ஜாதகத்தை வைத்தும் பார்த்துக்கொண்டு வருகிறோம். நமது ஆட்கள் அனைத்தையும் கண்டுபிடித்தாலும் இப்பொழுது உள்ள ஆட்கள் அதனை முழுமையாக செய்வதில்லை.

பழங்காலத்தில் உள்ள மக்கள் அனைத்தையும் கண்டுபிடித்து வைத்தார்கள் ஆனால் அதனை நாம் சோம்பேறிகளாக இருந்ததால் அதனை முழுமையாக இன்று பயன்படுத்தவில்லை. இதனை வெளிநாட்டினர் அறிந்துக்கொண்டு அதனை பயன்படுத்தி நல்ல முறையில் அவர்களின் வாழ்க்கையை வளப்படுத்திக்கொண்டுள்ளனர்.

இன்றைக்கும் பிரிட்டிஸ் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களுக்குள் சென்றால் முழுமையான ஒரு அமைதி கிடைக்கும். நீங்கள் எவ்வளவு நேரம் இருந்தாலும் உங்களுக்கு சக்தி குறையாமல் இருப்பீர்கள். அந்தளவுக்கு பிரபஞ்ச சக்தியை உள்வாங்கும் தன்மையில் அமைக்கப்பட்ட கட்டிடங்கள் அவை. இன்றைக்கு நாம் கட்டும் கட்டிடங்கள் பிரபஞ்ச சக்தியை உள்வாங்கும் தன்மையில் இல்லை என்பது தான் உண்மை. 

நாம் ஒரு கட்டிடம் கட்டினால் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் அதனை விட்டுவிட்டு ஒடிவிடுவோம். பிரிட்டிஸ் காலத்தில் இங்கு கட்டிடம் கட்டும்பொழுது நமக்கு சுதந்திரம் கிடைத்தப்பொழுது அவர்கள் உடனே கட்டிடத்தை போட்டுவிட்டு செல்லவில்லை. அவர்கள் கட்டிடத்தை முடித்துவிட்டு அதன் பிறகு தான் வெளிநாட்டிற்க்கு சென்றனர். தொழிலின் மீது இருந்த பக்தி. அந்த கட்டிடத்திற்க்கு கொடுத்த மரியாதை.

உங்களுக்கே சந்தேகம் இருந்தால் பிரிட்டிஸ் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நீங்கள் சென்று பார்த்துவிட்டு அதன் பிறகு வந்த சொல்லுங்கள். இன்றைக்கு குளிர் சாதனவசதி எல்லாம் செய்து கட்டிடங்கள் கட்டினால் உங்களுக்கு சோர்வு ஏற்படும் ஆனால் பிரிட்டிஸ் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களுக்குள் இருந்தால் எவ்வளவு நேரம் இருந்தாலும் சோர்வு இல்லாமல் இருக்கலாம். இது ஒரு உதாரணத்திற்க்கு உங்களுக்கு சொன்னேன். விரிவாக பல உதாரணங்களை உங்களுக்கு நான் சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, December 16, 2014

சோதிட அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                      கேது மூன்றாவது இடத்தில் இருந்த பல பேர்களின் ஜாதகத்தை நான் பார்த்து இருக்கிறேன். அவர்களுக்கு காதுகளில் பிரச்சினை கொடுத்து இருக்கிறது.

காதுகளில் ஏதாவது ஒரு சின்ன பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. ஒரு சிலருக்கு காது கேட்கும் திறனையும் இழந்து இருக்கிறது. ராகு கேது பொதுவாக மூச்சிகளை குறிக்கும் கிரகங்கள். இந்த கிரகங்கள் மூன்றாவது வீட்டில் ஒருவருக்கு இருக்கும்பொழுது அவர்களின் காதுகளில் இரவில் மூச்சி நுழைந்து இருக்கிறது என்று சொல்லியுள்ளார்கள்.

ஒரு சிலருக்கு காதில் சீழ் வைத்து இருக்கிறது என்று மருத்துவர்களை நாடி காண்பித்து இருக்கின்றனர். இதற்கு காரணம் ராகு கேது தன்னுடைய வேலையை காதில் காண்பித்த காரணத்தால் இப்படி வருகிறது.

மூன்றாவது வீட்டில் ராகு கேது இருக்கும் நபர்கள் இரவில் படுக்கும்பொழுது காதிற்க்கு பஞ்சு வைத்துக்கொண்டாவது படுத்துக்கொள்ளுங்கள் அல்லது ராகு கேதுவிற்க்கு பரிகாரம் செய்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சனிக்கு பரிகாரம் விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                      சனி பரிகாரத்தின் தொடர்ச்சி இது. காலையில் எழுதிய சனி பரிகாரத்தை படித்துவிட்டு என்னை தொடர்புக்கொண்டு நண்பர்கள் பேசினார்கள். நல்ல தகவல்களை கொடுத்தீர்கள் என்று சொன்னார்கள். அவர்களுக்கு நன்றி. 

வெப்பத்தை தருகின்ற கிரகங்கள் என்று பார்த்தால் சூரியன் மற்றும் செவ்வாய் இந்த இரண்டு கிரகங்களும் சனிக்கு எதிரியாக தான் இருக்கின்றது. இதனை வைத்துக் கூட நீங்கள் சனியின் பிடியில் இருந்து தப்பமுடியும்.

உடலுக்கு கொடுக்கின்ற வெப்பம் தரும் உணவுகளை சேர்த்தாலே போதும். வெப்பமும் அதிகமாக போகிவிடகூடாது. அளவாக இருந்தால் போதும்.சனிக்கு முதலில் நான் சூப் பரிகாரம் சொல்லியுள்ளேன். அதனை அனைவரும் கடைபிடித்தால் போதும். அதுவும் சூடு தருகின்ற ஒரு விசயம். அசைவம் சாப்பிடாதவர்கள் காய்கறிக்கொண்டு தயாரிக்கும் சூப் வகைகளை சாப்பிடுங்கள். 

கிராமங்களில் பார்த்தால் சளி பிடிப்பவர்களுக்கு நண்டு ரசம் அல்லது நண்டு குழம்பு வைத்து கொடுப்பார்கள். சளியை போக்குவதில் இது சிறந்த விளங்ககூடிய உணவில் ஒன்று. இதுவும் சனியின் பாதிப்பில் இருந்து மீளுவதற்க்கு மிக சிறந்த ஒன்று.

ஒரு சில மூலிகையின் வேர்களை வைத்து ரசம் செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இந்த வேர்கள் கிடைப்பது உங்களுக்கு கடினம் அதனால் இதனை தவிர்த்துவிடுங்கள். 

ஏன் இப்படிப்பட்ட பரிகாரம் எல்லாம் சொல்லுகிறேன் என்றால் இந்த அவசர உலகத்தில் நீங்கள் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்வது எல்லாம் நடக்ககூடிய ஒன்று கிடையாது. முடிந்தளவு நீங்கள் வீட்டிலேயே செய்யகூடிய ஒன்றை கொடுத்துள்ளேன்.

நான் கோவிலில் சென்று தான் பரிகாரம் செய்வேன் என்றால் அது உங்களின் பாடு வழக்கம் போல் ஒன்பது வாரம் நீங்கள் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வாருங்கள் என்று அனைவரின் போல் நானும் சொல்லிவிடுவேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சனிக்கு பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                      சனி பரிகாரம் நிறைய உங்களுக்கு கொடுத்து இருந்தாலும் புதிய ஒரு பரிகாரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

சனி என்றாலே குளிர் தான். சனிகிரகம் ஒருவருக்கு தீங்கு செய்கிறது என்றால் அவர்க்கு சளி தான் முதலில் பிடிக்கும். அதன் பிறகு தான் ஒவ்வொன்றாக ஆரம்பிக்கும். 

உடலில் சளி இருந்தால் எந்த இடத்தில் இருக்கிறதே அந்த இடத்தை அரித்துவிடும் தன்மை உடையது. சனிக்கிரகம் சளியை கொடுத்து தொல்லை செய்யும்.

கிராமங்களில் ஒரு பழமொழியை சொல்லுவார்கள். செருப்படிக்கு மிஞ்சிய ஒரு அடி கிடையாது. சூட்டிற்க்கு மீறிய ஒரு வைத்தியம் கிடையாது என்பார்கள். அதாவது ஒருத்தரை அடிக்கவேண்டும் என்றால் செருப்பால் அடித்தால் நல்ல அடிக்கலாம் என்பார்கள். மருத்துவத்தில் சூடு வைத்து மருத்துவம் செய்தால் அந்த மருத்துவத்தை மிஞ்சிய ஒரு மருத்துவம் கிடையாது என்பார்கள்.

ஒருவர் இறக்க போகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவருக்கு ஒரு டம்ளர் தண்ணீரை நன்றாக சூடு வைத்து கொடுத்தால் போகின்ற உயிர் திரும்பி வரும். சிறிது நேரம் கழித்து தான் இறப்பார். வெப்பத்தை வைத்து நிறைய வைத்தியம் செய்யலாம். உதாரணத்திற்க்கு இதனை சொன்னேன்.

சூட்டை கொண்டு தான் உடல் இயங்குகிறது. அந்த சூட்டை உடலுக்கு கொடுக்கும்பொழுது நமக்கு சனியின் பாதிப்பு குறையும். உடலுக்கு குளிரை கொடுப்பது சனி. உடல் இயங்க வெப்பம் வேண்டும். வெப்பம் குறையும்பொழுது அது நோயாக நமக்கு உருவாகிறது. சனிக்கு சரியான பரிகாரம் என்றால் வெப்பத்தை கொடுப்பது தான் அதனால் வெப்பத்தை தருகின்ற மாதிரி உள்ள விசயங்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு நீங்கள் உடலுக்கு கொடுத்து வாருங்கள். உங்களுக்கு சனியால் ஏற்பட்ட பாதிப்பு குறையும்.

தொடர்ந்து இதன் விளக்கத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, December 15, 2014

வீடு


ணக்கம் ண்பர்களே!
                      இன்றைய காலத்தில் மக்கள் ஒரு விசயத்தை பின்பற்றுகிறோம் என்று தெரிந்தால் அதனை உடனே எடுத்து தொழிற் செய்பவர்கள் பயன்படுத்திக்கொண்டு மக்களிடம் இருந்து பணத்தை பறிக்க தொடங்கிவிடுவார்கள்.

நகரத்தில் கட்டிடம் கட்டும் அனைத்து பில்டர்களும் வாஸ்துவை முறையாக பயன்படுத்தி தான் கட்டடத்தை கட்டி விற்பனை செய்கின்றனர். இந்து மக்கள் மட்டும் வாஸ்துவை பின்பற்றுவார்கள் என்பது கிடையாது. அனைத்து மக்களும் வாஸ்துவை பின்பற்றி தான் குடி அமர்கின்றனர்.

நிறைய வீடுகள் வாஸ்துபடி வீடு கட்டி அதில் குடியிருந்தாலும் மக்களுக்கு பிரச்சினை மட்டும் தீர்ந்தபாடு இல்லை. ஏதாவது ஒரு பிரச்சினை மனதில் வந்துக்கொண்டே இருக்கின்றது. சக்தியை இழந்தவர்களுக்கு தான் பிரச்சினை மேல் பிரச்சினை வரும்.

ஒரு வீட்டில் நீங்கள் குடியிருந்தால் அந்த வீடு உங்களுக்கு சக்தியை கொடுக்ககூடிய வீடாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே உங்களுக்கு பிரச்சினை இல்லாமல் உங்களின் வாழ்க்கை செல்லும். 



சக்தி எப்படி வீடு கொடுக்கும் என்று கேட்கிறீர்களா?

பிரபஞ்சத்தில் இருந்து வரும் சக்தியை வீட்டில் அப்படியே நிலைநிறுத்த வேண்டும். நமது கோவில்கள் எல்லாம் பிரபஞ்சத்தில் இருந்து வரும் சக்தியை அப்படி உள்வாங்கிக்கொண்டு நாம் வணங்கும்பொழுது நமக்கு கொடுக்கும்படி அமைத்து இருக்கின்றனர். அதனை போல் நமது வீடும் பிரபஞ்ச சக்தியை நமக்கு கொடுத்தால் நாம் கோவிலுக்கு கூட செல்லவேண்டியதில்லை.மிகுந்த சக்தி படைத்தவர்களாக மாறிவிடுவீர்கள்.

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

ஆன்மீக அனுபவங்கள் 174


வணக்கம் நண்பர்களே!
                      இசையின் வழியாக எளிய வழியில் கடவுளை அடையமுடியும். இதனைப்பற்றி பழைய ஆன்மீக அனுபவங்களின் நான் எழுதியுள்ளேன்.

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு இசைகருவியை வைத்திருக்கிறார்கள். அந்த இசைக்கருவியை நாம் வாசிக்கும்பொழுது அந்த கடவுள் அந்த இடத்திற்க்கு வருகிறார் என்ற நம்பிக்கை உள்ளது. இசைக்கு மயங்காத உயிர் கிடையாது என்று சொல்லி இருக்கிறார்கள்.

நீங்கள் எந்த ஒரு தியான மையத்திற்க்கு போனாலும் அங்கு இசையை வைத்து தியானத்தை நடத்துவார்கள். இசையால் எளிதில் மனது வயப்படும். செல்லும் இடத்திற்க்கு அழைத்துச்செல்லும் என்ற காரணத்தால் அப்படி நடத்துக்கிறார்கள்.

நமது இந்திய இசை பெரும்பாலும் தியானத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். மேற்கித்திய இசை காமத்தை அடிப்படையாக கொண்டு இருக்கும். பெரும்பாலும் மக்கள் இளம்வயதில் மேற்கித்திய இசைக்கு அடிமையாகிவிடுவார்கள். முப்பது வயதிற்க்கு மேல் இந்திய இசையின் மீது நாட்டம் அதிகம் ஆகும். 

இளம்வயதில் ரஹ்மான் இசையை விரும்பி கேட்கும் இளைஞர்கள் முப்பது வயதிற்க்கு மேல் இளையராஜாவை விரும்புவார்கள். இதற்கு காரணம் காமத்தை முடித்துவிட்டு கடவுளுக்கு ஆத்மா பயணப்படுகிறது.அதன் பிறகு நீங்கள் ஆன்மீக விசயங்களின் நாட்டம் அதிகம் ஏற்படும்.தியானமும் எளிதில் வசப்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சனிப்பெயர்ச்சி


வணக்கம் நண்பர்களே!
                      சனிப்பெயர்ச்சியைப்பற்றி நிறைய நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு கேட்கிறார்கள். அவர்களுக்கு புரியும் விதத்தில் ஒரு சில விசயங்களைப்பற்றி பார்க்கலாம்.

கோச்சாரப்படி நடப்பதற்க்கு அதிகம் கவலைப்படதேவையில்லை. உங்களின் தசாநாதன் வலுவாக இருந்தால் கோச்சாரத்தைப்பற்றி அதிகம் கவலைப்படதேவையில்லை. சோதிடம் மற்றும் ஆன்மீக விசயங்களை தேடி நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் முதலில் உங்களுக்கு குரு கிரகம் நல்ல முறையில் உங்களின் ஜாதகத்தில் இருந்து உங்களுக்கு பலனை கொடுத்துக்கொண்டிருக்கிறது என்பதை முதலில் நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.

குரு கிரகம் உங்களுக்கு நல்லதை செய்துக்கொண்டிருக்கும்பொழுது நீங்கள் அதிகம் அலட்டிக்கொள்ள தேவையில்லை. குரு கிரகம் எப்படிப்பட்ட தீய கிரகத்தின் தாக்குதலையும் குறைத்துவிடும் தன்மை உடையது.

உங்களை குரு கிரகம் பாதுகாத்துவிடும். உங்களின் குடும்பத்தில் மற்றும் உங்களின் சோதிட வாடிக்கையாளருக்கு மட்டும் நீங்கள் அக்கறை செலுத்தினால் போதும். நீங்கள் சனிக்கிரகத்திற்க்கு பரிகாரம் செய்ய வேண்டியதில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

உங்களின் வீடு பகுதி 9


வணக்கம் நண்பர்களே!
                      உங்களின் வீட்டைப்பற்றி உங்களின் ஜாதகத்தின் துணைக்கொண்டு அறிந்து வருகிறோம். இப்பதிவில் நான்காவது வீட்டில் சனிக்கிரகம் சம்பந்தப்பட்டு இருந்தால் உங்களின் வீட்டில் கிராமபுறத்தில் உள்ள தெய்வங்களின் வாசம் இருக்கும்.

ஒரு சில வீடுகளில் எல்லையை காக்கும் தெய்வமும் உங்களின் வீட்டிற்க்கு அடிக்கடி வந்து செல்லும். எல்லையை காக்கும் தெய்வம் வீட்டிற்க்கு வரகூடாது இருந்தாலும் உங்களை காக்குவதற்க்கு தான் வீட்டிற்க்கு வருகிறது அதனால் கவலைப்படதேவையில்லை.

உங்களின் வீடு அமைவது உழைப்பாளிகளின் வீடுகளுக்கு அருகில் உங்களின் வீடு அமையும். ஒரு சிலருக்கு தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கும் பகுதியில் வீடு அமையும்.பெரும்பாலும் நான்காவது வீட்டில் சனி சம்பந்தப்பட்டால் அவர்களின் வீடு நிறைய வீடுகள் இருக்கும் பகுதியில் அமைவதற்க்கு வாய்ப்பு அதிகம்.

நான்கில் சனி அமைந்தால் உங்களுக்கு வீடு அமைவது கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். பெரும்பாலும் கூட்டுக்குடும்பங்கள் இருப்பது போல் உங்களின் வீடு அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சக்தி


வணக்கம் நண்பர்களே!
                      சக்தியைப்பற்றி பல பதிவுகளில் நாம் பார்த்து வருகிறோம். ஒரு சக்தியை நீங்கள் எடுத்துவிட்டால் அந்த சக்தியிடம் சும்மா சும்மா போய் வேலை வாங்கிகொண்டு இருக்ககூடாது. அந்த சக்தியே உங்களுக்கு பார்த்து நல்லதை செய்துவிடும்.

பொதுவாக சக்தியை எடுத்தவர்கள் அதனை மிக பாதுகாப்பாக தான் பாதுகாப்பார்களே தவிர கண்ட இடத்திலும் பயன்படுத்திக்கொண்டு இருக்கமாட்டார்கள்.

இந்த பிறவியில் ஒரு சக்தி கிடைத்து நாம் முன்ஜென்மத்தில் செய்த புண்ணியத்தால் மட்டுமே என்று நினைத்துக்கொண்டு அதே நேரத்தில் அந்த சக்தி நம்மை விட்டு போய்விடகூடாது என்றும் நினைப்பார்கள்.

உண்மையில் சக்தியை எடுத்த பிறகு அதனை தொலைத்த பிறகு மிகவும் கஷ்டப்படுவார்கள். சக்தியோடு இருந்த வாழ்க்கை வேறு இப்பொழுது இருக்கும் நிலை மிக கொடியது என்று சொல்லுவார்கள். நீங்களும் சக்தியை எடுத்தால் அதனை பயன்படுத்தாமல் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது உங்களுக்கு நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, December 14, 2014

ஆன்மீகம்


வணக்கம் நண்பர்களே!
                      இன்றைய காலத்தில் ஆன்மீகத்தில் இருக்கின்றேன் என்று சொல்லிக்கொள்ள பலருக்கு ஆர்வம் இருக்கிறது. இதனை வரவேற்க வேண்டும்.

ஒவ்வொருவரும் ஆன்மீகவாதி மாறவேண்டும் என்று நான் நினைப்பேன். ஆன்மீகவாதி என்று வெளியே சொல்லிக்கொண்டு இருக்ககூடாது. உங்களுக்குள் அது நடைபெறவேண்டும். வெளியில் சொல்லிக்கொள்வதற்க்கு ஆன்மீகத்தை நாடினால் அது உங்களை காவுவாங்கிவிடும்.

நாம் ஆன்மீகவாதியாக மாறிவிட்ட பிறகு நமது குறைகளை நிவர்த்தி செய்துவிட்டு பிறகு தான் அடுத்தவர்களுக்கு நாம் ஏதாவது செய்யபோகவேண்டும். நமது குறைகளே நிவர்த்தி ஆகவில்லை நாம் அடுத்தவர்களுக்கு செய்யபோகிறோம் என்று அடுத்தவர்களின் கர்மாவை வாங்கிக்கொள்ளகூடாது.

ஆன்மீகவாதியாக இன்று மாறிவிட்டேன். எனக்கு நாளைக்குள் என்னுடைய பிரச்சினை அனைத்து தீர்ந்துவிடும் என்று நினைக்ககூடாது. படிப்படியாக உங்களின் குறைகள் எல்லாம் நிவர்த்தி ஆகிவிடும்.

ஒரு சிலர் என்னிடம் வந்து அந்த கோவிலுக்கு சென்றேன் எனக்கு நல்ல வைபேரேஷன் கிடைத்தது என்று சொல்லிவிட்டு எனக்கு இந்த பிரச்சினை இருக்கிறது என்று என்னிடம் சொல்லுவார்கள். உனக்குள் சக்தியை பற்றி புரியும் நிலை ஏற்பட்ட பிறகு என்னிடம் ஏன் வரவேண்டும் என்று நான் நினைப்பேன்.

சக்தியை உணர்ந்த பிறகு அந்த சக்தியை தான் நம்பவேண்டுமே தவிர என்னை நம்பகூடாது. அது உனக்கு காட்டிக்கொடுத்த பிறகு இடையில் நான் எதற்க்கு என்று பலரிடம் நான் கேட்டுள்ளேன் அதனால் உங்களுக்குள் ஆன்மீகத்தை வளருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பார்க்கலாம்


வணக்கம் நண்பர்களே!
                      பார்க்கலாம் இந்த வார்த்தையை அதிகம் நான் பயன்படுத்துவேன். இதனை நான் அதிகம் பயன்படுத்துவதை எனது நண்பர் ஒருவர் பார்த்துவிட்டு ஏன் இப்படி நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். ஒரு வேலை நீங்கள் அனைத்தையும் தவிர்க்க இப்படி பயன்படுத்துகிறீர்களாக என்று கேட்டார்.

பொதுவாக குரு அவர்களின் பிரதிபலிப்பு அதிகமாக என்னிடம் காணப்படும். குருவும் அதிகமாக இதனை போல் ஒரு வார்த்தையை பயன்படுத்துவார். நீங்களே இருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் வந்து என்னிடம் ஒரு உதவி என்று கேட்டால் உடனே அதனை நிறைவேற்றி கொடுக்ககூடாது என்று சொல்லுவார். ஆளை பார்த்து உதவியை செய் என்று சொல்லுவார். 

ஏன் ஆளை பார்த்து உதவியை செய் என்றால் நல்லவனை கண்டுபிடிப்பது கடினம். நல்லவன் என்று தெரியும்பொழுது மட்டுமே செய்யவேண்டும். ஒரு ஆள் வருகிறார் என்றால் அந்த ஆள் கண்டிப்பாக நம்மை போல் வேலை செய்பவரை பல பேரை பார்த்துவிட்டு தான் வருவார். பல சாமியார்களை நாடி விட்டு தான் நம்மை பார்க்கவருகிறார் அதனால் பொறுமையாக வேலையை தொடங்க வேண்டும் என்பார்.

என்னோடு நீண்ட நாட்கள் தொடர்பில் இருப்பவர்களுக்கு தான் வேலையை தொடங்குவோம். அதுவும் காலம் முடிவு செய்யவேண்டும் என்று காத்து இருப்போம்.  இப்படி செய்வதற்க்கு தான் பார்க்கலாம் என்று சொல்லுவது உண்டு.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ஆலய தரிசனம்


வணக்கம் நண்பர்களே!
                      பல நண்பர்களின் ஆவல் நீங்கள் கோவிலுக்கு செல்லும்பொழுது எங்களிடம் சொல்லுவதில்லை. எங்களிடம் சொன்னால் நாங்களும் வருவோம் அல்லவா என்று கேட்கிறீர்கள். இதனைப்பற்றி பழைய பதிவில் சொல்லிவிட்டேன். அப்படி இருந்தும் பல நண்பர்கள் கேட்கிறார்கள்.

ஒவ்வொரு ஊருக்கும் செல்லும்பொழுது அங்குள்ள நமது நண்பர்கள் அங்குள்ள கோவிலுக்கு என்னை அழைத்துக்கொண்டு செல்வார்கள். நான் எதுவும் சொல்லுவதில்லை. அந்தந்த ஊர்களில் உள்ள நண்பர்கள் முடிவு செய்து தான் கோவிலுக்கு செல்கிறேன்.

நீங்கள் இதுவரை பார்த்த ஆன்மீகவாதிக்கும் எனக்கும் மிகவும் வித்தியாசம் இருக்கும். இதனை அறிந்தவர்கள் மட்டும் தான் என்னை கோவிலுக்கு அழைத்துக்கொண்டு செல்வார்கள்.

கோவிலுக்கு நான் செல்வது எல்லாம் மிகவும் ஜாலியாக தான் இருக்கும்படி விரும்புவேன். இந்த ஜாலி எப்படி உங்களுக்கு ஏற்றுக்கொள்ளும். சந்தோஷமாக ஆன்மீகத்தை விரும்புவன் நான். இதனை எல்லாம் சகித்துக்கொண்டு வருபவர்கள் தாராளமாக வாருங்கள். அந்தந்த ஊர்களுக்கு வரும்பொழுது கண்டிப்பாக என்னை தொடர்புக்கொள்ளுங்கள். கோவிலுக்கு சென்றுவரலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சக்தி


வணக்கம் நண்பர்களே!
                      சக்தியைப்பற்றி நிறைய பதிவில் சொல்லியுள்ளேன். அதனை எல்லாவற்றையும் நீங்கள் படித்து பயன்பெற்று வருகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த பதிவில் புதுமையான ஒரு விசயத்தை பார்க்கலாம்.

ஒரு இல்லறம் என்பது ஆணும் பெண்ணும் சேர்ந்து தான் இருக்கும். அதாவது சிவனும் சக்தியும் சேர்ந்து இருக்கும். இரண்டு வித சக்தியும் சமநிலையில் இருக்கும்பொழுது மட்டுமே அந்த குடும்பம் நல்ல முறையில் இருக்கும். 

பெண்ணின் சக்தி அதிகமானால் குடும்பத்தில் பிரச்சினை தான் வரும். பெண்ணின் சக்தி அதிகம் அடைந்துவிட்டால் ஆணுக்கு பிரச்சினை அதாவது ஆண் பலகீனம் அடைந்துவிடுவான்.

ஒரு பெண் தனது நெற்றியில் இடும் திலகம் மிக முக்கியமானது. நெற்றியில் இருக்கும் பொட்டு மிகப்பெரிய அளவில் ஒரு பெண் வைத்துக்கொண்டால் அந்த பெண்ணின் சக்தி அதிகம் அடைந்துவிடும். வீட்டில் இருக்கும் ஆண் உங்களின் வார்த்தையில் சொல்லபோனால் டம்மியாகிவிடுவார். 

நெற்றியில் பெண்கள் இடும் பொட்டு சிறிய அளவில் இருக்கவேண்டும். பெரிய அளவில் வைத்தால் அம்மன் போல் மாறி ஆணின் பலம் குறைந்துவிடும்.

பின்குறிப்பு
           பெண்கள் இதனை வைத்து ஆணை கீழ் தள்ளிவிடலாம் என்று நினைத்துக்கொண்டு பொட்டை பெரிய அளவில் வைத்துக்கொள்ளாதீர்கள்.

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

குழந்தை பாக்கியம்


வணக்கம் நண்பர்களே!
                      இன்றைய காலத்தில் பல பேருக்கு குழந்தை இல்லாமல் இருக்கின்றனர். அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் முதலில் மனிதனுக்கு ஏற்படும் சூடும் ஒரு காரணமாக இருக்கிறது. 

பல்வேறு வகையில் மனிதனுக்கு ஏற்படும் சூட்டை தணிக்க பல வழிகளை மேற்க்கொள்கின்றனர். பழங்காலத்தில் மனிதன் கைக்கு மருதாணியை இட்டுக்கொண்டு உடலுக்கு குளிர்ச்சியை அளித்தான். 

மருதாணி உடலுக்கு நல்ல குளிர்ச்சியை அளிக்கிறது. இயற்கையான வகையில் கிடைக்கும் மருதாணியை கையில் வைத்தாலே போதும். குழந்தை இல்லாதவர்க்களுக்கு குழந்தை கிடைக்கும். இன்றைய காலத்தில் இயற்கையான மருதாணியை யாரும் பயன்படுத்துவதில்லை என்று தெரிகிறது. இயற்கையான முறையில் கிடைக்கும் மருதாணியை எடுத்து கையில் இட்டுக்கொள்ளுங்கள். உங்களுக்கு கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பொதுவாக ஆண்கள் யாரும் மருதாணியை கையில் இட்டுக்கொள்வதில்லை. முதலில் ஆண்களுக்கு தான் கையில் மருதாணியை இடவேண்டும். ஆண்களுக்கு தான் குறைப்பாடு அதிகம் இருக்கிறது. அதனால் கையில் அழகுக்கு இட்டுக்கொள்ளாமல் குளிர்ச்சிக்காவது மருதாணியை இட்டுக்கொள்ளுங்கள். உங்களின் உடல் நன்றாக இருக்கும். குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு