இதுவரை நாம் ஒவ்வொரு வீட்டின் குணங்களைப் பற்றி பார்த்தோம் இப்பொழுது ஒவ்வொரு கிரகங்களும் எந்த எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம். முதலில் சூரியன் கிரகத்தை எடுத்துக்கொள்வோம்.
சூரியன் முதல் வீட்டில் இருந்தால் என்ன பலன் ?
முதல் வீடு லக்கனம் லக்கனத்தில் சூரியன் இருந்தால் தலை வழுக்கை தலையாக இருக்க வாய்ப்பு உண்டு அல்லது ஏறு நேற்றியாகவும் இருக்க வாய்ப்பு அதிகம். உங்கள் ஜாதகத்தை எடுத்து வைத்துக்கொண்டு எனக்கு முதல் வீட்டில் சூரியன் இருக்கிறது ஆனால் முடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இல்லை என்று கேட்க வேண்டாம். எல்லாம் பொது பலன்கள் மட்டும்தான்.
ஒரு கிரகம் ஒரு வீட்டில் இருக்கும் போது அந்த வீடு அந்த கிரகத்திற்க்கு அது உகந்த வீடா அல்லது அந்த வீடு பகை வீடா என்று பார்க்க வேண்டும். அந்த வீட்டிற்க்கு எந்த கிரகத்தின் பார்வை இருக்கிறது என்றும் பார்க்க வேண்டும் அப்பொழுது தான் பலன்கள் சரியாக இருக்கும்.
முதல் வீட்டில் சூரியன் இருக்கும் போது அந்த நபர் மிக சிறந்த திறமையாளராகவும் இருப்பார். அந்த லக்கனம் மேஷமாகவும் அல்லது சிம்மமாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் அந்த நபருக்கு பணம் நன்றாக வரும். நல்ல படிப்பையும் கொடுப்பார்.
சூரியன் முதல் வீட்டில் இருந்தால் கண்ணில் நோய் இருக்க வாய்ப்பு உண்டு. சந்திரன் வீடான கடகம் லக்கனம் ஆக இருப்பவர்கள் கண்ணில் ஒரு கோடு இருக்க வாய்ப்பு உண்டு.
ஒரு சிலர் பித்த சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கும் தலையில் பாரமாக இருக்கிறது என்று சொல்வார்கள். திருமண வாழ்வு சந்தோஷமாக இருக்கும். கோபமும் பொறுமை இல்லாதவராகவும் இருப்பார்கள்.
நாம் ஒரு உதாரண ஜாதகத்தை பார்க்கலாம்.
இந்த ஜாதகத்தில் சூரியன் முதல் வீட்டில் உள்ளது இதன் பலன் எப்படி இருக்கும்.
இந்த ஜாதகத்தில் சூரியன் மகர ராசியில் இருக்கிறார். மேலை சொன்ன பலன்களை பாருங்கள் இவருக்கு நடந்தது என்ன என்றால்? இவருக்கு தலை சிறிய ஏறு நெற்றியாக உள்ளது படிப்பு அவ்வளவு பெரியதாக ஒன்றும் இல்லை படித்தது பள்ளி கல்வி மட்டும் தான். இன்னும் திருமணம் நடைபெறவில்லை. நல்ல திறமை உடையவர். பல தொழிகளிலும் ஈடுபாடு உள்ளவர். வருமானம் குறைவு தான். கண்ணில் நோய் இல்லை. பார்வை குறைபாடும் இல்லை ஆனால் விழியில் வெண்மை இல்லாமல் அழுக்காக உள்ளது.
பார்க்கலாம் ...
அன்புடன்
ராஜேஷ்சுப்பு