Followers

Tuesday, July 31, 2018

ஆடி மாதம்


வணக்கம்!
          இன்றைய ஆடி செவ்வாய் அம்மன் யாகத்திற்க்கு பங்களிப்பை அளித்தவர் சென்னையை சேர்ந்த திரு சம்பத் அவர்கள்.

ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் என்று தான் அர்த்தம் கொண்டு அனைத்து அம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் நடைபெறும். ஆடி மாதத்தில் நமது தளத்திற்க்கு வரும் அனைவரும் வருடசந்தாவை செலுத்த அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

பலர் தங்களின் சந்தாவை செலுத்தி வருகின்றனர். ஒரு கலையை இலவசமாக கற்ககூடாது அதற்குரிய மரியாதை செலுத்தவேண்டும் என்பதற்க்காக ஆடி மாதத்தில் மட்டும் தங்களின் விருப்ப சந்தாவை செலுத்த சொல்லுகிறேன்.

ஒவ்வொரு வருடமும் பலர் தங்களின் விருப்ப சந்தாவை செலுத்தி வருகின்றனர். இந்த வருடமும் அனைவரும் செலுத்திவையுங்கள் அனைத்தையும் நல்ல காரியத்திற்க்கு பயன்படுத்திக்கொள்ள இருப்பதால் செலுத்தி வைக்கலாம்.

ஜாதக கதம்பத்தை படிக்கும் பெரும்பாலான நண்பர்கள் எனக்கு நன்கு தெரியும். நம்மை மறந்து இருப்பார் என்று நினைக்காமல் தங்களின் விருப்ப சந்தாவை செலுத்தி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, July 30, 2018

கிரகங்கள் தரும் கஷ்ட நேரம்


வணக்கம்!
          ஒரு சில ஜாதகங்கள் அடிப்பட ஆரம்பித்தால் அது பெரியளவில் பிரச்சினையை கொண்டு வந்துவிட்டுவிடும். அதிகப்பட்சம் அனைவருக்கும் இப்படி தான் நடக்கின்றது. கஷ்டம் வர ஆரம்பித்தால் அது பெரிய அளவில் கஷ்டத்தை கொடுக்க ஆரம்பித்துவிடுகின்றது.

ஒருவருக்கு தொடர்ச்சியான கஷ்டம் வர ஆரம்பித்துவிட்டால் அவர் மீண்டு வருவதற்க்கு குறைந்தபட்சம் பத்து வருடங்களாவது தேவைப்படுகின்றது. பத்து வருடத்திற்க்கு அவரின் வாழ்க்கை முழுவதும் திசை திரும்பிவிடுகின்றது.

பத்து வருடங்களுக்கு பிறகு நல்ல காலம் வர ஆரம்பித்தாலும் அவர்களால் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்குவதற்க்கு மிகுந்த பாடுபட வேண்டும். அவர் இழந்ததை அனைத்தும் பிடிப்பது கடினமாக போய்விடும். ஒரு சில தசாகிட்ட மாட்டினால் அவன் பாடு பெரும் திண்டாட்டம் தான் அவர்களை காப்பாற்றுவது மிக மிக கடினம். சனி இராகு கேது தசா போன்ற தசாக்களில் மாட்டினவர்களின் பாடு திண்டாட்டம். விழித்துக்கொண்டு செயல்பட்டால் இதில் இருந்து தப்பிக்கலாம்.

கஷ்டகாலத்தில் நாம் என்னதான் சொன்னாலும் அவர்கள் கேட்கபோவதில்லை. ஜாதக கதம்பத்திலேயே நிறைய பேர் அப்படி தான் இருக்கின்றனர். நாம் என்ன தான் சொன்னாலும் இதனை எல்லாம் நான் நம்ப தேவையில்லை என்று கூட இருக்கின்றனர். மேலும் மேலும் கஷ்டத்தை அதிகப்படித்துக்கொண்டே செல்கின்றனர்.

நான் அனைவரும் நம்மிடம் வரத்தான் இதனை சொல்லுகிறேன் என்பது கிடையாது. அவர் அவர்களின் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் செல்லும் சூழ்நிலை எப்படிப்பட்டது என்பதை அறிந்து அதற்கு தகுந்தார் பாேல் உள்ள நிலையை சொல்லுகிறேன்.

ஆடி மாதம் முழுவதும் இலவச சோதிட ஆலோசனை சொல்லிக்கொண்டு இருக்கிறேன். அனைவரும் இதில் பங்குக்கொண்டு பயன்பெறுமாறு அன்போடு வேண்டுகிறேன். பல தடவை பதிவில் சொல்லுவதின் நோக்கம் அனைவரும் பயன்பெறவேண்டும் என்பதற்க்காக தான் சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, July 28, 2018

மூன்றாவது வீடு எனும் மறைவுஸ்தானம்


வணக்கம்!
          மூன்றாவது வீடு என்பதை நாம் ஒரு மறைவுஸ்தானம் என்று மட்டும் பார்க்கிறோம். மூன்றாவது வீட்டை சோதிடர்கள் கூட அந்தளவுக்கு எடுத்துக்கொள்வதில்லை. முக்கால்வாசி பேர் இதனை எடுத்துக்கொண்டாலும் மறைவுஸ்தானம் அதில் இந்த கிரகம் அமர்ந்து இருக்கின்றது என்பதை போலவே சொல்லிவிடுவார்கள்.

மூன்றாவது வீட்டில் ஒருவருக்கு ராகு கேது அமர்ந்தால் அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய தோஷமாக கருதப்படும் பித்ருதோஷத்திற்க்கு ஆளாகிவிடுவார். நிறைய இன்னல்களை அவர் சந்திக்க நேரிடும்.

மூன்றாவது வீட்டில் கெட்ட கிரகங்கள் அமர்ந்தால் அது நல்லது என்று சொல்லுவார்கள். மூன்றாவது வீட்டில் கெட்டகிரகங்கள் அமர்ந்தால் அது இளைய சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை பாழாக்கிவிடும். காது கெட்டு காது கேளாத தன்மையை உருவாக்கிவிடும்.

மூன்றாவது வீட்டில் சுபக்கிரகங்கள் என்று சொல்லப்படும் குரு அமர்ந்தால் அவர்க்கு திருமணமே நடக்காமல் கூட வாழ்க்கை சென்றுவிடும். மூன்றாவது வீட்டில் குரு அமர்ந்தால் அவர்களின் வாழ்க்கை சுவாராசியமாகவே இருக்காது.

மூன்றாவது வீட்டை அவ்வளவு எளிதில் எடுத்துக்கொள்ளாமல் அதற்கும் முன்னுரிமை கொடுத்து ஜாதகம் பார்த்தால் நமக்கு பல விசயங்களை நமக்கு அது கொடுத்துவிடும். மூன்றாவது வீட்டையும் நன்றாக அலசி சோதிடபலனை சொல்லவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, July 27, 2018

என்னுடைய ஆசி


வணக்கம்!
          ஆடி மாதம் மட்டும் எனக்கு பணத்தை செலுத்தி வையுங்கள் என்று வருடம் வருடம் சொல்லும் இரகசியம் இருக்கின்றது. இன்றைய நாளை பலர் மறந்துபோய்விட்டார்கள் என்று தான் தோன்றுகிறது. அதற்கு காரணம் ஒருவரும் விழிப்போடு இருப்பதில்லை என்பது எனக்கு நன்கு தெரிகிறது.

பாக்கியத்திற்க்கு எல்லாம் பெரும் பாக்கியம் என்ன தெரியுமா அவர் அவர்களின் குருவிற்க்கு நன்றியோடு இருப்பது. குருவின் ஆசியை சரியான நேரத்தில் பெறுவது தான் பெரிய பாக்கியம். இன்று ஆடி பெளர்ணமி அதோடு எனக்கு காலையில் அம்மன் யாகம் வேறு இருந்த காரணத்தால் காலையில் செல்போனை எடுக்கமுடியவில்லை. பலர் எனக்கு காலையில் போன் செய்துவிட்டார்கள். அனைவருக்கும் மறுமுறை நானே போன் செய்து பேசிவிட்டேன்.

பல நெருங்கிய வட்டம் என்னை நேரில் வந்து சந்தித்துவிட்டு சென்றுவிட்டனர். என்ன விவரம் என்று தெரியாத உங்களுக்கும் என்னுடைய ஆசிகளை கொடுத்து இருக்கிறேன். என்னுடைய குருவின் ஆசியும் உங்களுக்கு கிடைக்கும். காலையிலேயே இந்த பதிவை கொடுத்து இருக்கலாம் எத்தனை பேர் விழிப்புணர்வோடு செயல்படுகின்றீர்கள் என்று பார்க்க தான் இத்தனை தாமதமாக இதனை வெளியிடுகிறேன்.

ஒவ்வொரு நாளும் ஏன் ஒவ்வொரு தமிழ்மாதமும் ஆரம்பிக்கும்பொழுது அந்த மாதத்தில் என்ன என்ன வருகின்றது. நாம் இந்த மாதத்தில் எப்படி செயல்படபோகின்றோம் என்பதை எல்லாம் திட்டம் தீட்டி செயல்படுங்கள். கிரகங்களை எல்லாம் மிஞ்சி நீங்கள் சூப்பராக வாழலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

எட்டில் குரு


வணக்கம்!
          நேற்று ஒரு நண்பரிடம் பேசிய தகவலை வைத்து இந்த பதிவை தருகிறேன். குரு கிரகம் எட்டில் நின்றால் அது பிரச்சினையை தருமா என்ற கோணத்தில் பார்த்தால் அது அவ்வளவு பிரச்சினையை கொடுப்பதில்லை என்று தோன்றுகிறது.

என்னிடம் உள்ள பல ஜூவல்லரி உரிமையாளர்களுக்கு குரு கிரகம் எட்டில் நிற்கின்றது. எட்டில் இருக்கும் குரு அவர்களுக்கு நல்ல செல்வவளத்தை கொடுக்கின்றது. செல்வவளம் மட்டும் அல்லாமல் அவர்களுக்கு எல்லா தொழிலிலும் வெற்றியை கொடுத்து நல்ல வாழ்க்கையை வாழ்கின்றனர்.

ஒரு சில நண்பர்கள் குரு கிரகம் எட்டில் நிற்பதால் ஆன்மீகத்தில் கூட நல்ல நிலையில் இருக்கின்றனர். குரு மறைவுக்கு போனாதல் அவர்களுக்கு மறைவுபொருள்கள் ஆராய்ச்சி செய்து ஆன்மீகத்தில் இருக்கின்றனர்.

மறைவுஸ்தானம் குரு செல்லக்கூடாது என்று சொல்லிருக்கிறேன். அதே நேரத்தில் எட்டில் உள்ள குரு பலருக்கு பொன்னான வாய்ப்பை கொடுத்து இருக்கின்றது என்பது மட்டும் உண்மை என்று நான் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.


பல நண்பர்கள் ஆன்மீகத்தில் ஈடுபட்டு ஆர்வகோளாறு காரணமாக அனைத்து சாேதிடபதிவுகளையும் படித்துவிடுகின்றனர். அதனை அப்படியே அவர் அவர்களின் வாழ்க்கையில் ஒப்பிட்டுவிடுகின்றனர். அது எப்படிப்பட்ட விளைவை தருகின்றது என்றால் எனக்கு இப்படி இருக்கின்றது அதனால எனது வாழ்க்கையில் இப்படி நடந்துவிடுமோ என்று அதனை எண்ணியே இருக்கின்றனர்.

பலர் திருமணத்தில் பல சந்தேக கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கின்றனர். திருமணத்தை செய்யாமல் இருக்கின்றனர். உண்மையில் வாழ்க்கையில் அப்படி எல்லாம் இருப்பதில்லை. இதற்கு காரணமாக இருப்பது ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் இறைவன் படைத்து இருக்கின்றார். சோதிடவிதிகள் எல்லாம் நடந்துவிடுவதில்லை என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். இறைவனை நம்பி அனைத்து காரியத்திலும் இறங்கிவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, July 26, 2018

ஆடி பெளர்ணமி


வணக்கம்!
          நாளை ஆடி பெளர்ணமி அம்மன் சிறப்பு யாகத்திற்க்கு சிங்கபூரை சேர்ந்த திரு மயிலப்பன் அவர்கள் காணிக்கையை செலுத்தியுள்ளார். 

நான் நிறைய தொழில் அதிபர்களுக்கு ஆன்மீக பணி செய்துக்கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். இவர்கள் அனைவரும் லட்சகணக்கில் பணம் செலுத்துகின்றனர். தொழில் அதிபர்களுக்கு கொடுக்காத முன்னுரிமை தொடர்ச்சியாக அம்மன் பூஜையில் பங்குக்கொள்ளும் நபர்களுக்கு கொடுக்கிறேன்.

தொடர்ச்சியாக அம்மன் பூஜையில் பங்குக்கொள்ளும் நபர்களுக்கு முக்கிய நாளை ஒதுக்கி கொடுத்தவிடுவேன். அம்மன் பூஜை நடைபெறுவதற்க்கு முக்கிய காரணமாக இருக்கின்றனர். ஒவ்வொருவரும் மாதசம்பளத்தை பெற்றால் முதலில் அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்திவருகின்றனர். இந்த காரணத்தை கொண்டு தான் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன்.

அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்களுக்கு அனைத்து பூஜையிலும் முன்னுரிமை அளிக்கப்படுகின்றது அதோடு சிறப்பு பூஜையில் அவர்கள் கேட்டவுடன் அவர்களுக்கு சிறப்பு நாள் ஒதுக்கி செய்கிறேன்.

இலவச சோதிட ஆலோசனைக்கு ஜாதகத்தை அனுப்பியவர்கள் என்னை தொடர்புக்கொண்டு தங்களின் பலனை கேட்டு தெரிந்துக்கொள்ளலாம். ஆடி பெளர்ணமி அன்று உங்களின் குலதெய்வத்திற்க்கு பச்சைப்பரப்புதல் செய்யலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, July 25, 2018

ஆரோக்கியம்


வணக்கம்!
          நம்முடைய நண்பர்கள் சொல்லும் கருத்தை வைத்து நான் பார்த்தவரையிலும் சொல்லுகிறேன். புதியதாக திருமணம் ஆன தம்பதிகள் வீட்டில் தற்பொழுது சமைத்து சாப்பிடுவதில்லை. வருகின்ற பெண்கள் அனைத்தும் மூன்று நேரமும் கடையில் ஆர்டர் செய்து சாப்பிடுவதிலேயே இருக்கின்றனர்.

புதியதாக திருமணம் முடிந்து இருக்கும் சமைப்பதற்க்கு தெரியாது என்று விட்டாலும் பல வருடங்கள் இது தொடர் கதையாகவே இருக்கின்றது. பலர் இதனாலேயே அழிந்துக்கொண்டும் வருகின்றனர். இரண்டு பேர் கடையில் சாப்பிடவேண்டும் என்றால் ஒரு நாளை குறைந்தது 500 முதல் 1000 வரை செலவாகும். முப்பது நாட்களும் இப்படியே  என்றால் என்ன செய்வது.

உணவகத்தில் சாப்பிடவேண்டும் என்றால் வாரத்தில் ஒரு நாள் சாப்பிடலாம் இதிலேயே உடல் கெடும். ஒருவர் தொடர்ச்சியாக உணவத்திலேயே சாப்பிடவேண்டும் என்றால் அவர்க்கு கண்டிப்பாக உடல்நிலை கெட்டுவிடும். இதனை ஏன் ஒருவர் தெரிந்தே செய்யவேண்டும்.

ஜாதககதம்பத்தை படிக்கும் அனைவரும் திருமணத்திற்க்கு முன்பு சொல்லும் வார்த்தை இதுவாக இருக்கட்டும். எந்த காரணம் கொண்டும் உணவகத்தில் சாப்பிடகூடாது. வாரம் ஒரு முறை மட்டுமே அனுமதி உண்டு. இதற்கு சம்மதம் என்றால் திருமணம் செய்யலாம் என்று சொல்லுங்கள்.

பல தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போனதற்க்கு இதன் தான் காரணமாக இருக்கின்றது. உணவகத்தில் சாப்பிடும் முறை தயவு செய்து நிறுத்துங்கள். பல வருடங்கள் உணவகத்தில் சாப்பிட்டு எனது உடல்நிலையை கெடுத்துக்கொண்டேன். இதனை சரிசெய்ய என்னால் முடியாமல் இருக்கின்றது. நீங்களாவது நல்ல உடல்நிலையோடு வாழுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, July 24, 2018

நீசகிரகத்தால் கெடும் வாழ்க்கை


வணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் லக்கினாதிபதி மறைவிடம் சென்று அதோடு ஒன்று அல்லது இரண்டு கிரகங்கள் நீசம் ஆகிவிட்டால் அவர் ஒரு காவிதுணியை கட்டிக்கொண்டு செல்லவேண்டியது தான் இல்லை என்றால் இந்த உலகம் அவரை போட்டு படுத்தி எடுத்துக்கொண்டுவிடும்.

ஒருவரின் ஜாதகத்தில் கிரகங்கள் நீசம் பெறும்பொழுது அந்த விசயத்திற்க்காக அவர் மிகுந்த சிரமப்பட நேரிடும். நீசகிரகங்கள் பலனை அதிகளவில் கொடுப்பதில்லை. நீசகிரகங்கள் பலன் கொடுத்தாலும் நூற்றுக்கு பத்து சதவீதம் வட பலனை கொடுப்பதில்லை என்பதை பலரின் ஜாதகத்தில் அனுபவ ரீதியாக நான் அறிவேன்.

ஜாதகத்தில் லக்கினாதிபதி நன்றாக இருந்தால் ஒரளவு போட்டு இழுத்துக்கொண்டு வந்துவிடும். லக்கினாதிபதி சரியில்லாமல் அதோடு இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட கிரகங்கள் நீசம் என்ற நிலையை அடையும்பொழுது அவர் மிகுந்த கஷ்டத்தை அடைவார்.

லக்கினாதிபதியே நீசம் என்ற நிலையை அடைந்தால் அவரை பிறர் பயன்படுத்திக்கொள்வார்கள். அவர் ஊருக்கு உழைத்து அவர் வீணாகபோய்விடுவார். அவர் உழைத்தற்க்கு சம்பளம் கூட கிடைக்காமல் போய்விடும்.

லக்கினாதிபதி நன்றாக இருந்து பிற கிரகங்கள் நீச ஆனால் பரவாயில்லை. லக்கினாதிபதி போட்டு இழுத்துக்கொண்டு வந்து அவரை ஒரளவு காப்பாற்றிவிடும். வாழ்வில் வெற்றி என்பது குறைவாக இருக்கும்.

எப்பேர்பட்ட ஜாதகமும் ஏதோ ஒரு கிரகம் இருந்து அவர்களுக்கும் ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க முனையும் என்ன என்றால் நிறைய இழப்பிற்க்கு பிறகு அந்த வாழ்க்கை அமையும். நிறைய ஏக்கத்தோடு அந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்வது போல இருக்கும்.

ஆடி மாதத்தில் அனைவரையும் விருப்ப சந்தாவை அனுப்ப சொல்லுவேன். அனைவரும் அன்போடு அனுப்பி வையுங்கள். ஆடி மாதத்தில் இலவச சோதிட ஆலோசனை இருக்கின்றது அனைவரும் பயன்பெற்றுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, July 23, 2018

பணத்தட்டுபாட்டை தரும் இரண்டாவது வீடு


வணக்கம்!
          மனிதனின் பொதுவான ஒரு இயல்பான விசயம் பணம் நிறைய சம்பாதிக்கவேண்டும் என்று நினைப்பார்கள். கையில் பணப்புழக்கம் நன்றாக இருந்தால் நினைத்ததை செய்துவிடலாம் என்ற ஒரு சிந்தனையால் பணத்தின் மீது அனைவருக்கும் ஈடுபாடு அதிகமாக இருக்கும்.

ஒருவருக்கு லாபம் என்பதை பதினாேராவது வீடு காட்டினாலும் ஒருவரின் ஜாதகத்தில் இரண்டாவது வீடு என்பது மட்டும் நன்றாக இருந்தால் தான் ஒருவருக்கு பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். இரண்டாவது வீடு கெட்டால் பணத்திற்க்கு திண்டாடத்தை ஏற்படுத்திவிடும்.

பணப்புழக்கத்திற்க்கு இரண்டாவது வீடு நன்றாக இருக்கவேண்டும். இரண்டாவது வீட்டிற்க்கு எந்த வித தீயகிரகங்களின் தொடர்பு மற்றும் பார்வை இருக்ககூடாது. இரண்டாவது வீட்டிற்க்கு இப்படி தீயகிரங்களின் தொடர்பு ஏற்படும்பொழுது அவர்க்கு பணம் என்பது சரியாக வராது.

இரண்டாவது வீட்டிற்க்கு தீயகிரகங்களின் தொடர்பு இருந்தால் அவர் தன்னுடைய பணம் வரும் வழியில் பல தொல்லைகளை அனுபவித்து அதன் வழியாக சம்பாதிக்க நேரிடும் அல்லது இவர்களுக்கு வரும் ஒரு தீய வழியில் இருந்து வரலாம் என்று சொல்லலாம்.

உங்களுக்கு பணம் தட்டுபாடு என்பது வந்தால் உங்களின் ஜாதகத்தில் இரண்டாவது வீட்டை கொஞ்சம் சோதனை செய்து பார்த்தால் பணம் ஏன் தடைகள் ஏற்படுகின்றன என்பதை தெரிந்துக்கொள்ள முடியும். இரண்டாவது வீட்டிற்க்கு தற்பொழுது கோச்சாரபடி ஏதும் தீங்கு வந்திருக்கின்றதா என்பதையும் பார்க்கவேண்டும். இப்படி பார்த்துவிட்டால் கண்டிப்பாக உங்களுக்கு பணப்பிரச்சினை என்பது வராது என்று சொல்லலாம். அதற்குரிய பரிகாரத்தையும் செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, July 21, 2018

சோதிட ஆலோசனை


வணக்கம்!
         முன்கூட்டியே திட்டமிட்டு நல்ல வாழ்க்கையை வாழவேண்டும் என்பதற்க்காக தான் சோதிட அறிவியல் பயன்படுகின்றது. நமது திட்டமிடல் நன்றாக இருக்கவேண்டும் அதோடு நாம் செல்லும் வழியும் நன்றாக இருக்கின்றதா என்பதை பார்த்து அதற்கு தகுந்தார் போல் நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும்.

பெரும்பாலும் நமது வாழ்க்கையை நமக்கு வருகின்ற தசாநாதன் தான் அதிகப்பட்சம் தீர்மானிப்பார். தற்பொழுது நடைபெறுகின்ற தசா அதன்பிறகு வருகின்ற தசா என்ன என்பதை பார்த்துக்கொண்டு அதற்கு தகுந்தார் போல வாழ்க்கையை அமைப்பது நன்றாக இருக்கும்.

இராகு தசாவில் ஆன்மீகத்தை கொஞ்சம் காட்டினால் அதன்பிறகு வருகின்ற குருதசா அதிகமாகவே ஆன்மீகத்தை கொடுக்கவேண்டும். குருதசா ஆன்மீகத்தை கொடுக்கவில்லை என்றால் அப்பொழுது நாம் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்ற வாழ்க்கையில் தடம்மாறுவதற்க்கு சந்தர்ப்பம் அமைந்துவிடும்.

இராகு தசா ஆன்மீகத்தை கொடுத்து குரு தசாவும் ஆன்மீகத்தை கொடுத்தால் உங்களின் வாழ்க்கை சீராக சென்றுக்கொண்டு இருக்கும். குரு தசாவிற்க்கு பிறகு வருகின்ற சனி தசாவும் ஆன்மீகத்தை கொடுத்தால் அவர் ஒரு சிறந்த ஆன்மீகவாதியாக தன்வாழ்க்கையை வாழ்ந்து இருக்கின்றார் என்று அர்த்தம் கொள்ளலாம்.

ஒவ்வொரு தசாவும் ஒவ்வொரு மாதிரியான வாழ்க்கையை கொடுத்துக்கொண்டு இருந்தால் அவர் வாழ்க்கை வித்தியாசமாக இருக்கும் எதிலும் நிலை இல்லாத வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு இருப்பார்.

நீங்கள் வாழ்க்கின்ற வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தில் நீங்கள் எப்படி வாழபோகின்றீர்கள் அதற்கு தசா பங்களிப்பை சரியாக செய்யுமா என்பதைப்பற்றி எல்லாம் உங்களின் ஜாதகத்தின் வழியாக தெரிந்துக்கொள்ளலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது தற்பொழுது ஜாதககதம்பத்தில் இலவச சோதிட ஆலோசனை மற்றும் அதற்கு பரிகாரமும் இலவசமாக வழங்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது உடனே தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, July 20, 2018

ஆலய தரிசனம்


வணக்கம்!
         நேற்று மதுரை பயணத்தில் நண்பரை சந்தித்துவிட்டு நேராக அழகர்கோவில் சென்றாேம். பழமுதிர்சோலை செல்லவேண்டும் என்பதை சொன்னேன். நண்பர் பழமுதிர்சோலைக்கு அழைத்து சென்றார். பழமுதிர்சோலையில் சாமி தரிசனம் முடிந்து அங்கிருந்து இராக்காயிகோவில் சென்றோம்.

இராக்காயிகோவில் புனித நீராடல் மிக புனிதமான ஒன்று. இந்த கோவில்கள் எல்லாம் நீங்கள் ஏற்கனவே சென்று வந்து இருக்கலாம். உங்களுக்காக நினைவூட்ட வேண்டும் என்பதற்க்காக இதனை தருகிறேன். 

இராக்காயிகோவில் புனித நீராடல் நமக்கு ஒரு புதிய சக்தியை கொடுக்கிறது. கண்டிப்பாக இந்த கோவிலுக்கு சென்று நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு வரவும். மதுரையில் இருப்பவர்கள் அடிக்கடி கூட சென்று நீராடிவிட்டு வரலாம்.

இராக்காயிகோவிலுக்கு மேலே மலையில் இராமதேவர் ஜீவசமாதி இருக்கின்றது. அதற்கு செல்வதற்க்கு இந்த போதாது பாதை மிக கடினம் மலை ஏற்றத்திற்க்கு கூட்டமாக வந்தால் போகலாம் என்று நண்பர் சொன்னார். இன்று கண்டிப்பாக செல்லமுடியாது வேறு ஒரு நாள் பார்த்துக்கொள்ளலாம் என்று வந்துவிட்டோம்.

மலையை விட்டு கீழே இறங்கும்பொழுது பெரியாழ்வார் ஜீவசமாதி இருக்கின்றது அதனை தரிசனம் செய்துவிட்டு செல்லலாம் என்று நண்பர் கோபி சொன்னார். பெரியாழ்வார் ஜீவசமாதியும் தரிசனம் செய்துவிட்டு அதன்பிறகு மதுரை சென்றோம்.

மதுரையில் நண்பரை சந்திக்க சென்றேன். எங்கிருந்தோ என்னை அழைத்துக்கொண்டு சக்தியை உணர்வதற்க்கு அழைத்த அந்த சக்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக தான் இந்த பதிவை தருகிறேன். அனைவரும் சென்று வாருங்கள். மலை கோவிலுக்கு அழகர்கோவிலில் இருந்து பேருந்து வசதி இருக்கின்றது. நடை பயணமாகவும் செல்லலாம். கார் இருந்தால் மிகவும் வசதியாக இருக்கும்.

இந்த பயணத்திற்க்கும் மற்றும் சிறந்த முறையில் கைடு செய்த நண்பர் கோபிக்கு நன்றியை தெரிவிக்கவேண்டும்.

இன்றைய ஆடி வெள்ளி அம்மனுக்கு சிறப்பு யாகத்திற்க்கு காணிக்கை செலுத்தியவர் நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, July 19, 2018

கோச்சாரபலன் கொடுக்கும் குறுகிய வாழ்வு


ணக்கம்!
         எப்படியும் பதிவை தந்துவிடவேண்டும் என்று நினைக்கிறேன். அவசர வேலையாக வெளியில் சென்றுவிடுவதால் எழுதமுடியவில்லை. கூடுமானவரை முன்கூட்டியே பதிவை எழுதிவைத்து தான் கொடுக்கவேண்டும்.

ஆடிமாதம் வெள்ளிக்கிழமையில் அம்மனுக்கு சிறப்பு யாகம் சொல்லிருந்தேன். வெள்ளிக்கிழமை அன்று யாகம் நடைபெறும்.நிறைய மாற்றங்களை ஒவ்வொருவரின் வாழ்விலும் சிறப்பான பலனை அம்மன் தரும் என்ற நம்பிக்கையோடு செய்ய இருக்கிறேன்.

ஒரு சில கிரகங்கள் தங்களின் பலனை கோச்சாரபலனோடு முடித்துவிட்டு தசா பலன்களில் ஒன்றும் கொடுப்பதில்லை. இப்படிப்பட்ட ஜாதகர்களை நிறைய பேரை பார்த்து இருக்கிறேன். 

கோச்சாரபடி பலன்களை கொடுத்தால் அவர்களுக்கு வாழ்வில் ஒரு குறிப்பிட்ட காலம் நல்ல பலனை கொடுக்கும் அதன்பிறகு அவர்களுக்கு கஷ்டக்காலம் வந்துவிடும். கோச்சாரபடி பலனை கொடுத்தால் இரண்டரை வருடம் பணம் கொடுத்தால் அதன்பிறகு பணத்தை கொடுக்காது ஜாதகர் மாட்டிக்கொள்வார்.

தசாபலன்களை கொடுக்கும்படி ஜாதகர் அந்த கிரகத்திற்க்கு நிறைய பரிகாரங்களை செய்யும்பொழுது மட்டுமே அவர் வாழ்க்கை முழுவதும் நல்ல பலன்களை பெறமுடியும். கஷ்டப்பட்டு தான் இதனை எல்லாம் செய்து அவர் பலனை அனுபவிக்கவேண்டும்.

இன்று மதுரைக்கு செல்கிறேன். மதுரையில் இருந்து திரும்பியபிறகு உங்களுக்கு பதிவை தருகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, July 17, 2018

ஆடி மாத சோதிட ஆலோசனை


வணக்கம்!
          ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் அம்மனுக்குரிய வழிபாடுகளை தொடர்ந்து செய்து வாருங்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும்பொழுது எல்லாம் உங்களுக்கு அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.

ஆடி மாதத்தில் அம்மன் வழிபடும்பொழுது நமது கர்மவினை கழிந்து அதனால் நல்ல மாற்றத்தை நம் வாழ்க்கையில் உருவாக்கிக்கொள்ள முடியும். தினந்தோறும் உங்களின் பூஜையில் நமது அம்மனை நினைவில் வைத்துக்கொண்டு பூஜை செய்யுங்கள்.

ஆடிமாதம் ஆண்டு தோறும் உங்களிடம் ஆண்டு சந்தா போல அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தசொல்லுவேன். இது ஆண்டுதோறும் அறிவிப்பை தெரிவித்தவுடன் அனைவரும் எனக்கு அனுப்பி வந்து இருக்கின்றீர்கள். தொடர்ந்து இந்த வருடமும் அனுப்பி வையுங்கள்.

நேற்று மாலை அம்மனுக்காக பூஜை செய்யும்பொழுது இந்த எண்ணம் வந்தது. இந்த மாதம் முழுவதும் இலவச சோதிட ஆலோசனையை வழங்கவேண்டும் என்று வந்தது. அம்மன் எனக்கு இட்ட கட்டளை இது இதனை ஏற்று இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு இலவச சோதிட சேவை செய்ய இருக்கிறேன்.

உங்களின் ஜாதகத்தை அனுப்பிவிட்டு என்னை தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளலாம். நீங்கள் செய்யவேண்டிய பரிகாரமும் பரிந்துரை செய்கிறேன். அனைவரும் தொடர்புக்கொண்டு  தெரிந்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, July 16, 2018

சுக்கிரனால் திருமண தடை



ணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் பாதிக்கபட்டு இருந்தால் அவர்க்கு திருமண யோகம் என்பது அந்தளவுக்கு இருக்காது என்று சொல்லலாம். குரு கிரகம் திருமணத்தை தரும் என்றாலும் சுக்கிரன் கிரகம் நன்றாக இருந்தால் தான் அதனைப்பற்றி சிந்தனையை தூண்டும்.

திருமண ஆசை வந்தால் தான் திருமணத்திற்க்கு செல்ல முடிவு எடுப்பார்கள். ஒரு சிலருக்கு கடுமையாக சுக்கிரன் பாதிக்குப்பட்டு இருக்கும்பொழுது அவர்க்கு திருமண ஆசை இருக்காது. எதற்க்கு திருமணம் சாதித்தவர்கள் அனைவரும் திருமணம் செய்துக்கொண்டு சாதித்தவர்களா திருமணம் ஆகாமல் இருந்தால் தான் சாதிக்கமுடியும் என்பார்கள்.

சுக்கிரன் பாதிக்கும்பொழுது அந்த தூண்டுதல் சக்தியை கொடுப்பதில்லை. ஒரு சிலருக்கு சுக்கிரன் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் வேறு துறையில் சாதித்தவர்களும் இருப்பார்கள். இந்த சக்தி அந்த துறையில் சாதிக்க சென்றுவிடும்.

சுக்கிரன் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கவேண்டும். சுக்கிரன் ஆறாவது வீட்டிற்க்கு சென்றாலும் ஒரு சிலருக்கு திருமணம் அமைவதில்லை. ஆறாவது வீட்டில் சுக்கிரன் சூரியனோடு இருந்தால் அவர்களுக்கு திருமணம் மிக கஷ்டப்பட்டு நடத்தவேண்டும்.

ஏழாவது வீட்டு காரத்துவம் ஆறாவது வீட்டிற்க்கு சென்றுவிடுவதால் பலருக்கு திருமண யோகம் இருப்பதில்லை என்று சொல்லலாம். ஒரு சிலருக்கு திருமண யோகம் அமைவது அவர் அவர்களின் தசா உகந்த தசாவாக வருவதால் அமையும்.

உங்களுக்கு திருமணம் நடைபெறவில்லை என்றால் திருமண கோலத்தில் இருக்கும் கோவில்களுக்கு சென்றுவாருங்கள். திருமணம் நடைபெறும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, July 15, 2018

பாவம் எத்தனை தோஷம்?


ணக்கம்!
          ஒருவருக்கு அரேன்ஜ் திருமணம் செய்யும்பொழுது அவரின் பெண் வீட்டிற்க்கு சென்று பெண் பார்க்கிறார் என்று வைத்துக்கொள்வோம். முதலில் ஒரு ஆண் ஒரு பெண்ணை பெண் பார்த்தால் அந்த பெண்ணை பிடிக்கவில்லை என்று வரக்கூடாது.

ஒரு பெண் வீட்டிற்க்கு சென்று பெண்ணை பிடிக்கவில்லை என்று வந்துவிட்டால் அந்த பெண்ணின் மனது கஷ்டப்படும். பெண் மனது கஷ்டப்பட்டால் அது பாவமாக கருதப்படும். இதன் வழியாக கூட ஒருவருக்கு பாவம் வருகின்றது.

முதன் முதலில் ஒரு ஆண் பெண்ணை பார்க்க செல்லும்பொழுது அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் இதனை அறிவார்கள். இவர் அந்த பெண்ணை பிடிக்கவில்லை என்று வரும்பொழுது பக்கத்தில் உள்ளவர்களும் ஒரு மாதிரியாக பேசுவார்கள் அல்லவா அந்த பாவத்தையும் இவர் ஏற்கவேண்டும்.

மேலே சொன்னதை எல்லாம் நான் ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் ஒருவர் நான் பாவமே செய்யவில்லை என்று சொல்லுவார்கள். இவர்கள் இப்படிப்பட்ட பாவத்தை கூட செய்து இருக்கலாம் என்பதை சொல்லுவதற்க்கு சொல்லுகிறேன்.

பலர் நிறைய தவறுகளை செய்துவிட்டு எனக்கு கடவுள் ஒன்றும் கொடுக்க மாட்டேன்கிறார் என்று சொல்லுவார்கள். முதலில் எங்கு எல்லாம் பாவம் செய்திருக்கிறோம் என்று எண்ணி பார்த்தால் நிறைய தவறு நம்மால் இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, July 14, 2018

மறைவுஸ்தானத்தில் இராஜகிரகங்கள்



வணக்கம்!
         ஒரு சில ஜாதகத்தில் இராஜகிரகங்கள் என்று சொல்லக்கூடிய குரு மற்றும் சனி மறைவுஸ்தானத்திற்க்கு சென்றுவிட்டால் அவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவும். எந்த வித வேலை எடுத்தாலும் இழுபறியில் சென்றுக்கொண்டு இருக்கும்.

இவர்கள் ஏதாவது ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தாலும் அவர்களின் கம்பெனி கொஞ்ச நாளில் திவாலாகிவிடும். கம்பெனி கடனில் மூழ்கிவிடும். கம்பெனியை தேடி வரும் கடன்காரர்களுக்கு இவர்கள் பதில் சொல்லிக்கொண்டு இருக்கவேண்டிவரும்.

குரு மற்றும் சனி மறைவுஸ்தானத்திற்க்கு செல்லும்பொழுது ஒருவர் எடுத்த எந்த ஒரு காரியமும் தடை என்பது இறப்பு சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். ஒரு சுபகாரியம் இவர் வீட்டில் நடத்தினாலும் பக்கத்தில் யாராவது ஒருவர் இறந்துவிடுவார்கள். இவர்களுக்கு நல்லசகுனமாக அதனையே எடுத்துக்கொண்டு செய்யலாம்.

சுபக்காரியம் என்றாலும் ஒரு கோவில் நிகழ்ச்சியை இவர்கள் செய்தாலும் இவர்களுக்கு ஒரு தடை உருவாகிய பிறகு தான் அந்த நிகழ்வுகள் நடக்க ஆரம்பிக்கும். தடை ஏற்பட்ட பிறகு இவர்கள் செய்தால் அது வெற்றியை நோக்கி செல்லும் என்று சொல்லலாம்.

குரு கிரகம் மற்றும் சனிக்கிரகம் மறைவுஸ்தானத்திற்க்கு சென்றவர்கள் வாழ்வில் முன்பகுதியில் அதிக கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள். பின்பகுதியில் நல்ல நிலைக்கு வருவார்கள். ஒரு காலம் வரை கஷ்டம் இருக்கும் அதன்பிறகு அது யோகமாக மாறிவிடும்.

இன்று சென்னை பயணம் செய்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, July 13, 2018

ஆண்டு சந்தா + ஆடி மாதம்


வணக்கம்!
          ஜாதககதம்பத்தின் ஆண்டு சந்தா என்பதை ஆடி மாதத்தில் கேட்பது உண்டு. ஜாதககதம்பம் உங்களுக்கு இலவச பதிவுகளை தந்தாலும் சோதிடம் என்பதை கட்டணம் இல்லாமல் படிக்ககூடாது என்ற தர்மத்தாலும் இதனை ஆடிமாதத்தில் வாங்குவது உண்டு.

ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் அம்மன் பூஜையின் பொழுது இதனை செலுத்தி வையுங்கள். ஆடி மாதத்தில் நடைபெறும் அம்மன் பூஜையில் பயன்படுத்திக்கொள்கிறேன் என்று சொல்லுவேன். ஆண்டு தோறும் நீங்களும் இதனை செலுத்தி வருகின்றீர்கள்.

ஆடிமாதத்தில் அனைவரும் அம்மன் பூஜையில் பங்குபெறவேண்டும் என்று கேட்பேன். இந்த வருடமும் முன்கூட்டியே உங்களுக்கு தெரிவிப்பதற்க்கு விரைவில் ஆடிமாதம் வருவதால் நீங்கள் அனுப்பி வைக்கும் பணம் எல்லாம் ஆடிமாதத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதற்க்காக முன்கூட்டியே அனுப்பிவைக்கலாம்.

ஆடி மாதம் முடியும் வரை நீங்கள் இந்த பணத்தை அனுப்பிவைக்கலாம். நீங்கள் அனுப்பும் தொகையை அப்படியே பூஜைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதற்க்கு தற்பொழுது இருந்து அனுப்பி வைக்கலாம். 

ஜாதககதம்பத்தை படிக்கும் அனைவரும் அனுப்பி வைக்க வேண்டுகிறேன். ஆடி மாதம் முடிவதற்க்குள் ஜாதககதம்பத்தை படிக்கும் அனைவரும் தங்களால் முடிந்த பணத்தை அனுப்பிவைக்கலாம்.

வங்கி கணக்கு விபரம்:

 KVB Bank :  Karur Vysya Bank

 Branch : Pattukkottai 

 Name : RAJESH S 

Account Type : Savings account. 

A/C Number : 1623155000063470

IFSC Code : KVBL0001623 

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

இராகு & கேது தோஷம்


வணக்கம்!
          ஒரு சிலர் திருமணத்திற்க்கு ஜாதக பொருத்தம் பார்க்கும்பொழுது அந்த ஜாதகத்தின் இராசி கட்டத்தை மட்டும் பார்த்து சொல்லிவிடுவார்கள். நவாம்ச கட்டத்தை பார்த்து சொல்லுவது கிடையாது.

நேற்று ஒரு ஜாதக பொருத்தம் பார்க்க நேர்ந்தது. விருச்சிகத்தில் ராகு இருக்கின்றது. விருச்சிகத்தில் இராகு இருந்தால் அது தோஷத்தை தராது என்று சோதிடர் எழுதிக்கொடுத்து இருக்கின்றார். லக்கினத்தில் இராகு இருந்தால் அது தோஷத்தை தரும் என்பதால் அது விருச்சிகத்தில் இருந்ததால் தோஷம் இல்லை என்று எழுதியிருக்கிறார்.

நவாம்ச கட்டத்தில் இரண்டாவது வீட்டில் இராகு இருக்கின்றது. கண்டிப்பாக இது தோஷத்தை தருகின்றது. இராசி கட்டத்தை மட்டும் திருமண பொருத்ததை பார்க்ககூடாது. திருமணத்திற்க்கு நவாம்ச கட்டத்தையும் பார்த்து தான் முடிவு செய்யவேண்டும்.

ராகு கேது தோஷம் இருந்தால் அவர்க்கு எப்படிப்பட்ட மாதிரி அவர்களின் உடல்வாகு இருக்கும் என்பதை சொன்னேன். இப்படி தான் அவர்க்கு இருக்கின்றது என்றார் அப்பொழுது கண்டிப்பாக இது இராகு கேது தோஷம் இருக்கின்றது என்று சொல்லிவிட்டேன்.

திருமணத்திற்க்கு மட்டும் இராசிகட்டத்தை பார்த்துவிட்டு கொஞ்சம் நவாம்ச கட்டத்தையும் ஆராயுங்கள். இரண்டையும் பார்த்துவிட்டு அவர்களுக்கு நாம் சொன்னால் கண்டிப்பாக அவர்களுக்கு நன்றாக இருக்கும்.

இன்று திருச்சியில் இருக்கிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, July 12, 2018

வேண்டுகோள்


வணக்கம்!
         தொழில் செய்பவர்கள் வருகின்ற ஆறு மாதத்தில் சம்பாதிக்க வழி செய்துக்கொள்ளுங்கள் அதன்பிறகு நாடாளுமன்ற தேர்தல் வந்துவிடும். தேர்தல் வருகின்றது என்று ஒருத்தரும் வேலையை பார்க்காமல் தொழில் அப்படியே மந்தநிலையை தரும்.

வருகின்ற ஆறுமாதத்தில் நீங்கள் நன்றாக சம்பாதித்துவிடவேண்டும் என்பதற்க்காக முன்கூட்டியே இந்த கருத்தை உங்களிடம் தெரிவிக்கிறேன். என்னிடம் பலர் தொழில் செய்பவர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் இந்த ஆறு மாதத்தில் கடுமையாக உழைத்து சம்பாதித்துவிடுங்கள்.

நம்ம ஆளுங்க ஒரு காரணம் வந்தாலே அதனை சொல்லியே ஒன்றும் செய்யாமல் இருந்துவிடுவார்கள். இவர்கள் காரணத்தை மட்டுமே சொல்லிக்கொண்டு காலத்தை தள்ளுவார்கள். காரணத்தை காட்டி தொழில் செய்யமாட்டார்கள். 

2019 நீங்களே புரிந்துக்கொள்ளலாம் ஏதாவது தொழில் என்று சென்றால் தேர்தல் முடியட்டும் என்று சொல்லுவார்கள். தேர்தல் முடிந்தால் மட்டும் பெரிய மாற்றம் வந்துவிடபோகின்றதா? எதுவும் நடக்காது. காரணத்தை சொல்லி காலத்தை தள்ளுவார்கள்.

வருகின்ற ஆறு மாதத்தில் மிகப்பெரிய அளவில் ஒவ்வொருவரையும் கொண்டுவருவதற்க்கு உள்ள ஆன்மீக வேலையும் நான் செய்ய உள்ளேன். அதே நேரத்தில் உங்களின் பங்களிப்பும் இதற்கு தேவை. காலத்தை வீணாக்காமல் அதிகமாக ஓடி வேலையை பார்த்து நன்றாக சம்பாதியுங்கள். அம்மன் உங்களுக்கு அருள் புரியும்.

ஆடி மாத பூஜைக்கு புக்கிங் செய்பவர்கள் உடனே தொடர்புக்கொள்ளவும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, July 11, 2018

கிரகத்தின் பார்வை


வணக்கம்!
          பெரும்பாலான சோதிடர்கள் சொல்லும் பலன் கிரகம் எந்த வீட்டில் அமர்ந்திருக்கின்றது கோச்சாரபடி கிரகங்கள் எப்படி செல்கின்றது என்பதை வைத்து சோதிடபலன் சொல்லுவார்கள். அதனைவிட கொஞ்சம் அதிகமாக என்ன தசா நடக்கின்றது என்பதை பார்த்து சொல்லுவார்கள். 

ஒரு ஜாதகத்தை முழுமையாக அறிந்து அந்த ஜாதகபலனை சொல்லும் சோதிடர்கள் குறைவு அல்லது சோதிடர்களுக்கு நேரமின்மையை கணக்கில் கொண்டு அடித்துவிடுவதும் உண்டு. இன்றைய காலத்தில் வரும் வாடிக்கையாளர்களே ஒரு தேர்ந்த சோதிடபுலமையோடு தான் வருகின்றனர். அதனையும் மீறி கர்மா சரியாக சொல்லமுடியாமல் போகலாம்.

கிரகத்தின் பார்வையை எடுத்துக்கொள்வோம். ஒரு கிரகத்தின் பார்வை எந்த வீட்டிற்க்கு கிடைக்கின்றது அதனால் என்ன பலன் என்பதை கணிப்பது கிடையாது என்று தோன்றுகிறது. கிரகத்தின் பார்வையில் ஒரு ஜாதக வீடு கெடுவதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது. ஒரு ஜாதக வீடு நன்றாக இருப்பதற்க்கும் வாய்ப்பு இருக்கின்றது.

குரு கிரகம் பார்த்தால் ஒரு வீடு சுபிட்ஷம் அடையும். குரு கிரகத்தின் பார்வையை நாம் திருமணத்திற்க்கும் மட்டும் பார்த்துக்கொண்டு இருப்போம் மற்றபடி அதனை கவனிப்பது கிடையாது. ஒரு இராசிக்கு குருவின் பார்வை கிடைத்தால் அவருக்கு அனைத்திலும் வெற்றி என்று சொல்லலாம்.

சனிக்கிரகத்தை பொறுத்தவரை அது அமரும் வீட்டை விட அது பாரக்கும் வீட்டிற்க்கு தான் அதிகமாக பலனை சோதிடம் சொல்லிருக்கும் இதனை எல்லாம் அவ்வளவு எளிதில் யார் சொல்லுகின்றனர். சனியின் பார்வை படும் இடம் படுபாழ் ஆகிவிடும். 

ஒவ்வொரு கிரகத்திற்க்கும் பார்வை இருக்கின்றது அதனையும் பார்த்து சோதிடபலனை நீங்கள் தெரிந்துக்கொண்டால் உங்களுக்கு எளிதில் எப்படி வெற்றி பெறலாம் என்பதை தெரிந்துக்கொள்ளலாம். கிரகத்தின் பார்வையும் அறிந்து பலனை தெரிந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கேள்வி & பதில்


அன்புள்ள ராஜேஷ்,
                  எனது பெயர் M. செந்தில்குமார் 35, மதுரையில் இருக்கின்றேன், பொதுவாக கன்னி தெய்வத்தை (சக்தியை) எடுக்க வேண்டும் என்றால் ஜாதகத்தில் பத்தாம் இடத்தில் மாந்தி இருக்க வேண்டும், அப்படி இருந்தால் தான் கன்னி தெய்வம் நமக்கு சாதகமாக இருக்கும், இல்லை என்றால் நமக்கு எதிர்மறையான பலன்களை தரும் சொல்லுகிறார்கள், இதில் எந்த அளவுக்கு உண்மை? உங்கள் கருத்தை ( ASTROVANAKAM.BLOGSPOT.COM) தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ராஜேஷ்.


இப்படிக்கு அன்புள்ள
M. செந்தில்குமார்

பதில்
      நம்முடைய ஜாதகத்தை பார்த்து அதற்கு தகுந்தமாதிரி சக்தியை எடுக்கவேண்டும் என்று சொல்லுவது தவறான ஒன்று. மாந்திக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. சொல்லபோனால் சக்தியை எடுப்பதற்க்கு ஜாதகத்தை பார்ப்பதில்லை.

ஜாதகத்தை பார்த்து தான் சக்தியை எடுக்கவேண்டும் என்று சொல்லுவது பொய்யான ஒரு விசயம் தான். ஒரு குரு ஜாதகத்தை பார்த்து சக்தியை கொடுப்பதில்லை. ஏதோ ஒன்று உங்களை பிடிக்கலாம் அல்லது நீங்கள் தீவிரமாக எடுக்கவேண்டும் என்று செயலில் நீங்கள் இருந்தால் சக்தியை கொடுத்துவிடுவார்.

சக்தியை எடுத்து அது தவறான வழிக்கு கொண்டு செல்வதும் அதனை சரியாக பயன்படுத்துவதும் அவர்களின் கையில் அதிகப்பட்சம் இருக்கின்றது. அதனைவிட குருவின் கையிலும் இது இருக்கின்றது என்று சொல்லலாம்.

நல்ல குருவாக இருந்தால் உங்களை தவறான வழியில் கொண்டு செல்லவிடமாட்டார். குருவின் எண்ணம் போலவே உங்களின் செயல் இருக்கும். குருவை விட்டு நீங்கள் வந்தாலும் அவரின் கட்டுபாட்டில் தான் நீங்கள் இருப்பீர்கள். ஜாதகத்திற்க்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை நண்பரே. நன்றி.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பூர்வபுண்ணியம்


வணக்கம்!
         பூர்வபுண்ணிய வீடான ஐந்தாவது வீட்டில் தீயகிரகங்கள் நிற்ககூடாது. பூர்வபுண்ணிய வீடான ஐந்தாவது வீட்டில் தீயகிரகங்கள் நின்றால் அது நிறைய மனநிலையில் பாதிப்பை தருகின்றது. தீயகிரகங்கள் ஐந்தில் நின்றால் புத்தியை கொஞ்சம் குளறுபடி செய்யும்.

எப்படிப்பட்ட காலக்கட்டங்களில் இது செய்கின்றது என்றால் அமாவாசை மற்றும் பெளர்ணமி காலக்கட்டங்களில் இது அதிகமாக தாக்கும். இந்த காலக்கட்டங்களில் இவர்கள் கொஞ்சம் உஷாராக இருக்கவேண்டும்.

ஐந்தில் தீயகிரகங்கள் இருக்கும் நபர்கள் திருமண காலக்கட்டங்களில்    பல பிரச்சினைகளை சந்திக்கின்றனர். திருமண காலக்கட்டங்களில் இவர்களுக்கு பிரச்சினை காதல் வடிவில் வரும். காதல் வடிவில் என்றால் இவர்கள் காதல் செய்யாமல் இருந்தால் கூட காதல் என்று யாராவது வந்து திருமணத்தை குழப்புவார்கள்.

திருமணம் முடிந்த பிறகு அது குழந்தை பாக்கியத்திலும் கொஞ்சம் காலம் கடத்தும். எப்படியும் குழந்தை இருக்கும் அதற்காக கொஞ்சம் சிரத்தை எடுக்கவேண்டும். நிறைய பேருக்கு ஆண்குழந்தைகளுக்கு வாய்ப்பு இருக்கின்றது.

ஐந்தில் தீயகிரகங்கள் இருக்கும் நபர்களுக்கு சொத்து தகராறுகள் அதிகமாக ஏற்படுகின்றது. கஷ்டப்பட்டு சம்பாதித்து சொத்து சேர்த்தாலும் அதிலும் சொத்து தகராறு ஏற்படுகின்றது. குலதெய்வத்தையும் மற்றும் இஷ்டதெய்வத்தை வணங்கிவரும்பொழுது இந்த பிரச்சினை தீரும்.

ஆடிமாத பூஜைகளுக்கான புக்கிங் நடந்துக்கொண்டு இருக்கின்றது. உடனே புக்கிங் செய்துக்கொள்ள அன்போடு வேண்டுகிறேன்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, July 9, 2018

மறைந்த குருவின் பலன்


வணக்கம்!
          குரு கிரகம் மறைந்தால் எப்படிப்பட்ட பிரச்சினை வரும் என்று பழைய பதிவில் நிறைய சொல்லிருக்கிறேன். என்னுடைய நினைவில் அவ்வப்பொழுது வரும் எண்ணங்களை பகிர்ந்துக்கொள்ளவேண்டும் இன்று வந்த குருவைப்பற்றிய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

குரு கிரகம் மறைந்தால் ஒருவருக்கு கடன் தொல்லையும் அதிகரிக்கும். குரு கிரகம் தங்கத்திற்க்கு காரத்துவம் வகிப்பதால் தங்கத்தை அடகுகடையில் வைக்கவேண்டிய ஒரு சூழ்நிலையை உருவாக்கிவிடும். 

அடகு கடையில் தங்கத்தை திருப்பமுடியாமல் போன காரணத்தால் உங்களுக்கு உங்களின் துணையின் வழியாக பிரச்சினை வந்துவிடும். நீங்களும் அதனால் நிறைய மனக்கஷ்டத்திற்க்கு ஆளாகிவிடுவீர்கள்.

ஒரு மனிதனுக்கு ஒரு வேலை என்பது இருக்கவேண்டும். வேலை இல்லை என்றால் ஒரு தொழிலாவது இருந்து அவர்களை காப்பாற்றவேண்டும். இரண்டும் இல்லை என்றால் ஒருவரின் நிலைமை படுமோசமாக போய்விடும். ஒன்றும் இல்லாத ஒரு நிலையை மறைந்த குரு கிரகம் உருவாக்கிவிடும்.

மேலே சொன்ன இரண்டும் ஒருவருக்கு இல்லை என்றால் இந்த சமுதாயத்தில் அவர்களுக்கு எப்படிப்பட்ட மரியாதை கிடைக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள். இது மறைவுகுரு கிரகம் தரும் அதிகப்பட்ச தண்டனை என்றே சொல்லலாம்.

பெரும்பாலும் மறைந்த குரு காதல் தோல்விகளை உருவாக்கி மனக்கஷ்டத்தை உருவாக்கிவிடுகின்றது. காதல் தோல்விகளால் அவர்களின் மனநிலை பாதிப்பை உருவாக்கிவிடுகின்றது. ஒருவருக்கு தலைகுனிவை கூட ஏற்படுத்தி அவர்களின் மனக்கஷ்டத்தை எல்லாம் ஏற்படுத்திவிடும்.

மறைந்த குரு ஒருவருக்கு கையில் பணம் தங்காதா நிலையை உருவாக்கிவிடும். பணத்திற்க்கு அல்லல்படும் நிலையை உருவாக்குவதில் மறைந்த குருவிற்க்கு ஈடு இணை இல்லை என்று சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, July 8, 2018

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

வணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

வணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜைபடங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

வணக்கம்!
         இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.



அன்புடன்
ராஜேஷ்சுப்பு