Followers

Friday, July 31, 2015

ஆன்மீக பயிற்சி


வணக்கம்!
          காயத்ரி மந்திரத்தை பற்றி காலையில் பதிவை தந்தவுடன் பல நண்பர்கள் அதனை செய்யவேண்டும் எங்களுக்கும் வழியை சொல்லுங்கள் என்று கேட்டார்கள். ஒவ்வொருவரும் இதனை செய்யவேண்டும் என்று நினைக்கிறேன்.

பல நண்பர்கள் குலதெய்வத்திற்க்கு பச்சைப்பரப்புதலை செய்யுங்கள் என்று சொல்லிருந்தேன். பல பேர் இதனை செய்துக்கொண்டு இருக்கின்றனர். பல நண்பர்கள் இதனை விட்டுவிட்டார்கள் என்று நினைக்கிறேன். மறவாமல் இதனை செய்துவிடுங்கள்

வளர்பிறையில் இருந்து காயத்ரி மந்திரத்தை செய்ய ஆரம்பிக்கலாம். அதற்க்கான பதிவை தருகிறேன் அந்த நேரத்தில் என்னை தொடர்புக்கொண்டு புதிய நண்பர்கள் இதனை செய்ய ஆரம்பிக்கலாம்.

காயத்ரி மந்திரத்தை தொடர்ச்சியாக செய்யும்பொழுது மட்டுமே உங்களுக்கு பயன்தரும். உங்களின் கர்மவினையை நீங்களே போக்குவதற்க்கு வழி செய்கின்றீர்கள். இதற்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. வழியை மட்டும் சொல்லுவது எனது வேலை. தொடர்ச்சியாக செய்பவர்களை எந்த காரணத்திலும் விட்டுவிடுவதில்லை அவர்களுக்கு தேவையான கருத்துக்களை அவ்வப்பொழுது சொல்லிக்கொண்டே வருவேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கேள்வி & பதில்


வணக்கம்!

தாங்கள் ஒவ்வொரு பதிவிலும் தெய்வத்தை பிரசுரித்து எழுதி வருகிறீர்கள் . எல்லா தெய்வங்களும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. மகிழ்ச்சி . அந்த தெய்வ படத்திற்கு கிழே தெய்வத்தின் பெயர் & ஊர் பிரசுரம் செய்தல் நன்றாக இருக்கும் .

என் கோரிக்கை நிறைவேறும் என நினைக்கிறேன் ,

நன்றியுடன் 
சோமசுந்தரம் பழனியப்பன்.

பதில்
      ஓய்வு நேரத்தில் நெட்டில் தேடி எனது கம்யூட்டரில் சேமித்து வைத்துவிடுவேன். அதனை ஒவ்வொன்றாக பதிவில் போடுவது வழக்கம். இந்த படங்கள் எல்லாம் சம்பந்தப்பட்ட வெப்சைட்டில் கூட என்ன தெய்வம் எந்த ஊர் என்று இருப்பதில்லை. அதனால் படம் போடும்பொழுது அதனைப்பற்றி விபரம் அளிக்க முடிவதில்லை.

நமது பதிவில் இதனை தரும்பொழுது இதனை பார்த்துக் கூட ஆன்மீக பக்கம் வருவார்கள் என்ற நம்பிக்கையில் இப்படி நல்ல படங்களை எடுத்து போடுகிறேன். மனது இந்த படங்களை பார்த்தவுடன் அதுவாகவே ஒரு பக்குவதற்க்கு வரும் என்ற நம்பிக்கையில் போடுகிறேன். பல பேர்கள் இதனாலே ஆன்மீகத்தை தேடியதும் உண்டு.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

இந்த நிலைக்கு யார் காரணம்?


வணக்கம்!
          தற்பொழுது நிறைய பேர் காயத்ரி மந்திரத்தை கேட்டு செய்துக்கொண்டு இருக்கின்றனர். எப்படியும் தன் நிலையை உயர்த்த வேண்டும் என்று ஆன்மீகத்தின் பக்கம் வருகின்றனர். அனைவரையும் வரவேற்கிறேன். அதோடு ஒரு கருத்தையும் சொல்லிவிடுகிறேன்.

தற்பொழுது நீங்கள் இருக்கும் நிலைக்கு காரணம் நீங்கள் தான் என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள். உங்களுடைய மனது தான் அதற்கு காரணமாக இருக்கின்றது. 

என்னை தேடி வருபவர்களுக்கு எளிதில் ஆன்மீகத்தை தெரிந்துக்கொள்ள உதவமுடியும் ஆனால் அவர்களின் மனது அதனை ஏற்றுக்கொள்வதில்லை மனதின் தந்திரம் அது. மூன்று நாள்களுக்கு செய்யவேண்டும் என்று மனது சொல்லும் அதன் பிறகு மனது அதனை மாற்றிவிட்டு வேறு ஒன்றுக்கு தாவும். மூன்று நாட்களுக்கு காயத்ரி மந்திரத்தை செய்வீர்கள் அதன் பிறகு இதில் என்ன இருக்கின்றது என்று விட்டுவிடுவீர்கள்.உங்களுக்கு எஜமானாக மனது இருந்து உங்களை கெடுக்கிறது என்பது உங்களுக்கு தெரியவே தெரியாது.

நான் குருவிடம் செல்லும்பொழுது நான் முடிவு எடுத்தது என் மனதால் தான் நான் கெட்டேன் இனி அவர் பார்த்து எதை சொன்னாலும் அதனை நாம் கேட்டு அதன் படி நடப்போம் என்று சென்றேன். அவரின் மனது படி நான் செயல்பட்டதால் அவரிடம் உள்ளது அனைத்தும் என்னிடம் வளர்க்க முடிந்தது. 

மனது எல்லாவற்றையும் சந்தேகப்படும். அதன் இயல்வு அது. மூன்று நாட்களில் எந்த முன்னேற்றம் இல்லை என்றவுடன் உடனே அடுத்த வேலையை பாரு என்று உங்களின் மனது உங்களுக்கு ஆணையிட்டு நீங்கள் ஒழுங்காக செய்கின்ற வேலையை விடவைத்துவிடும். 

பல நண்பர்கள் இதில் இருக்கின்றனர் அனைவரும் எப்படியும் சக்தியை நாம் எடுத்துவிடவேண்டும் என்று பல்வேறு போராட்டம் செய்து அதனை பெறமுயற்சிக்கின்றனர். அனைவருக்கும் சொல்லுவது உங்களின் மனது உங்களை ஏமாற்றுகிறது. உங்களின் மனதிற்க்கு அடிபணியாமல் செய்கின்ற வேலையை விடாமல் செய்யுங்கள் விரைவில் சக்தி பெற்றவர்களாக மாறிவிடுவீர்கள்.


சக்தியை எடுக்கும் எளிமையான பல வழிகளை புதிய பிளாக்கில் சொல்லபோகிறேன். பணத்தை செலுத்திவிட்டு உடனே உங்களைப்பற்றிய விபரத்தை தெரியப்படுத்துங்கள். அனைத்து பதிவுகளும் பிராடிக்கலாகவே இருக்கும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, July 30, 2015

அஞ்சலி


ஆத்மா சாந்தியடைய அம்மனிடம் பிராத்திக்கிறேன்.

ராஜேஷ்சுப்பு

Wednesday, July 29, 2015

புதிய தொடக்கத்தைப்பற்றி


ணக்கம்!
          ஜாதககதம்பத்தில் நிறைய கருத்துக்களை எழுதியுள்ளேன். அதனை எடுத்து எத்தனை பேர்கள் முன்னேற்றம் அடைந்தனர் என்பது எனக்கு தெரியாது. ஜாதககதம்பத்தில் ஒரு பதிவில் ஒன்றை சொல்லிருந்தேன் அது இருட்டில் அமர்ந்துக்கொண்டு உங்களை பரிசோதனை செய்யும்பொழுது உங்களின் ஆத்மாவை பார்க்கலாம் என்று சொல்லிருந்தேன்.

இதனை எத்தனை பேர் முயன்று பார்த்தார்கள் என்று எனக்கு தெரியாது ஆனால் ஒருவர் முயன்று பார்த்து அதனைப்பற்றி எனக்கு சொல்லிருந்தார். இதுப்போல் பல பதிவுகளில் தனிப்பட்ட முறையில் உங்களை ஆன்மீகத்தில் மேம்படுத்திக்கொள்ள வழியை சொல்லிருந்தேன். 

சும்மா படித்துக்கொண்டே இருந்தால் அதில் ஒன்றும் வரப்போவதில்லை முயன்று பார்த்தால் தான் அது என்ன என்று தெரியும்.இப்பொழுது நாம் தொடங்கும் புதிய பதிவுகளில் ஒவ்வொரு பதிவுகளும் ஒரு ஆன்மீகப்பயிற்சியை கண்டிப்பாக எடுப்பது போல் இருக்கும். சும்மா படித்துக்கொண்டு இருக்கமுடியாது. அதனை பயிற்சியாக செய்ய ஆரம்பிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அந்த பதிவு வர இருக்கின்றது.

ஆன்மீகப்பயிற்சி வகுப்பை எடுங்கள் என்று சொல்லிக்கொண்டு இருந்தவர்கள் அனைவரும் அதில் இணைந்துக்கொள்ளுங்கள். இலவசமாக கொடுத்தால் நீங்கள் செய்ய மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும் அந்த காரணத்தால் அதற்கு பணம் என்று சொல்லியுள்ளேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, July 27, 2015

வீட்டிற்க்கும் அருள்


வணக்கம்!
          ஒருவருக்கு வீடு கட்டவேண்டும் என்றால் அவருக்கு அந்த யோகமும் இருக்கவேண்டும் அதே நேரத்தில் அவர்களின் குலதெய்வம் அல்லது இஷ்டதெய்வத்தின் அருளும் இருக்க வேண்டும்.

எந்த அருளும் இல்லாமல் இருந்தாலும் குருவின் அருள் இருந்தால் வீடு கட்டிவிடலாம். எதுவும் இல்லாமல் பணம் மட்டும் இருந்தால் போதும் வீடு கட்டிவிடலாம் என்று நினைத்தால் அது தவறு. வீடு கட்ட அனுமதி கூட அரசாங்கத்திடம் இருந்து வாங்கமுடியாது.

நாம் ஒரு வீடு கட்ட அரசாங்கத்திடம் அனுமதி கேட்டால் அரசாங்கம் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை என்றால் அப்பொழுதே நாம் தெரிந்துக்ககொள்ளலாம் நமக்கு எந்த அருளும் இல்லை. நாம் இனி நல்ல அருளை பெற்றுக்கொண்டு வீடு கட்ட ஆரம்பிக்கவேண்டும் என்று அதனை தேடி செல்லலாம்.


நமது புதிய பிளாக்கை தொடங்குவதற்க்கான வேலை எல்லாம் நடந்துக்கொண்டு இருக்கின்றது. நல்ல நாளாக பார்த்து அதனை ஆரம்பித்துவிடுவோம். 

பல தரப்பட்ட நண்பர்களிடம் எதிர்ப்பும் ஆதரவும் வந்தது. பொதுவாக இதனை தொடங்குவதற்க்கு காரணம் பல வருடங்களாக என்னை தொடர்ந்து ஆன்மீகத்திற்க்கு என்று வந்த நண்பர்கள் தொடர்ந்து என்னை வந்து சந்தித்துக்கொண்டே இருப்பார்கள். சந்திப்பு நேரத்தில் மட்டும் அவர்களுக்கு பல அனுபவங்களை சொல்லிவந்தேன். அது குறைவான அனுபவங்களாக இருக்கும். இப்படிப்பட்ட ஒன்றை தொடங்கிவிட்டால் அவர்களுக்கு தினமும் அவர்களை மேம்படுத்திக்கொள்ள நல்ல வழி கிடைக்கும்.

காயத்ரி மந்திரம் செய்தவர்கள் அதுவும் என்னிடம் கேட்டு செய்தவர்கள் எல்லாம் இதில் இணைந்துக்கொண்டால் மிகவும் நல்லது. உங்களை மேம்படுத்திக்கொண்டு உங்களின் முன்னேற்றத்தையும் நீங்களாகவே மேம்படுத்தக்கொள்ளலாம்.  சரியான ஒரு ஆன்மீகப்பயிற்சி எடுக்கவேண்டும் என்றால் இதில் நீங்கள் இணைந்துக்கொள்வது நல்லது.

பணம் அதிகம் என்பது எனக்கு தெரியும் அதே நேரத்தில் அதில் நான் கொடுக்க போகிற கருத்தை நீங்கள் படிக்கும்பொழுது எனக்கு அதிக பணம் நீங்களே கொடுப்பீர்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, July 25, 2015

மனை


வணக்கம்!
          மனையைப்பற்றி பார்த்து வருகிறோம். இதில் ஒன்றைப்பற்றி பார்க்கலாம். ஒருவர் வீடு கட்ட ஆரம்பிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் வீடு கட்ட ஆரம்பித்து அந்த வீட்டு வேலை முடியவே மாட்டேன்கிறது என்றால் அது அவரின் ஜாதகத்தில் உள்ள பிரச்சினை கிடையாது. அந்த மனையின் உள்ள பிரச்சினையாகவே இருக்கும்.

வீடு கட்ட ஜாதகத்தை மட்டும் பார்த்து பலனை சொல்லகூடாது அவரின் மனையும் பார்த்து பலன் சொல்லவேண்டும். வீடு கட்ட ஆரம்பித்து அந்த வீட்டை கட்டிமுடிக்க முடியவில்லை என்றால் அந்த மனையில் ஏதோ பிரச்சினை என்று நாம் முடிவு செய்துவிடலாம். 

வீட்டின் மனையில் ஏதோ ஒன்று புதையுண்டு இருக்கலாம் அல்லது ஏதாவது ஒரு துர்சக்தி அங்கு உலவிக்கொண்டு இருக்கலாம். நமது அப்பா காலத்தில் எல்லாம் பிரவச பார்க்க அவ்வளவு வசதி ஏற்படவில்லை. முதல் பிரவசத்தில் பிறந்த குழந்தை இறப்பதற்க்கு அதிக வாய்ப்பு இருந்திருக்கும். 

முதல் குழந்தை இறந்தால் அதுவும் ஆண் குழந்தையாக இருந்தால் அந்த குழந்தையை அவர்கள் வாழ்ந்த வீட்டிலேயே புதைத்துவிடுவார்கள். ஏன் என்றால் அந்த காலத்தில் ஆண் குழந்தையின் மண்டை ஓட்டை மாந்தீரிகம் செய்பவர்கள் எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள் என்று பயந்து இப்படி செய்வார்கள்.

புதையுண்ட அந்த இடத்தில் புது மனை போட்டதால் வீடு பாதியிலேயே நிற்க்கும். அதற்கு பரிகாரமாக ஒரு நல்ல ஆன்மீகவாதியை அழைத்துவந்து ஒரு பூஜையை அந்த வீட்டில் செய்தால் மறுபடியும் வேலை தொடங்கும்.

பொதுவாக நீங்கள் மனை போடுவதற்க்கு முன்பு நன்றாக மனையைப்பற்றி விசாரித்துவிட்டு நல்ல பூஜையை செய்த பிறகு வேலையை தொடங்குவது நல்லது.

விரைவில் புதிய பிளாக் தொடங்கப்படுகிறது. உடனே சந்தாவை செலுத்திவிட்டு உங்களைப்பற்றிய விபரத்தை எனக்கு அனுப்புங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, July 23, 2015

விளக்கம்


வணக்கம்!
         நேற்று பதிவு பார்த்துவிட்டு நண்பர்கள் ஒரு சிலர் கட்டணம் அதிகமாக இருக்கின்றது என்று சொன்னார்கள். இந்த கட்டணம் என்பது நான் கொடுக்கும் கருத்துக்களை படிக்கும்பொழுது நீங்கள் செலுத்திய கட்டிய பணம் குறைவு என்று எண்ண தோன்றும்.
 
ஆன்மீகத்தை எப்படி நாம் எளிதில் அனுபவிக்கலாம். செல்வ வளம், சக்தியை பற்றி என்று இருக்கும் அனைத்து விசயங்களும் அந்த பிளாக்கில் எழுதபோகிறேன். அனைத்தும் என் அனுபவத்தில் இருந்து எடுத்தவை வைத்து எழுதுவதால் எளிதில் அனைத்தும் உங்களுக்கு பிடிப்பட்டுவிடும்.

முழு பணமும் வரும்பொழுது அந்த பணத்தை வைத்து முழுமையான ஒரு காரியத்தை செய்யலாம் என்று எண்ணி முழுபணத்தையும் செலுத்த சொல்லுகிறேன்.

முழுபணத்தையும் செலுத்தும்பொழுது தற்பொழுது செல்வவளத்திற்க்கு கட்டணம் ஐந்தாயிரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இது உங்களுக்கு சலுகையாக அறிவிக்கப்படுவதால் முழுபணத்தையும் தாராளமாக செலுத்தலாம்.

நேற்று ஒரு நபர் இதற்கு புக் செய்துவிட்டார். நான் ஒருவர் வந்தாலே போதும் என்று தான் இருந்தேன். நான் அனுபவித்த விசயத்தை பிறர்க்கு கொடுக்கவேண்டும் என்று இருந்தேன் அந்த நபர் வந்துவிட்டார். மேலும் பல பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். 

நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த தகவல்கள் எங்கு தேடினாலும் கிடைக்காத  ஒன்று. உடனே பணத்தை செலுத்திவிட்டு என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


Wednesday, July 22, 2015

இனிய உதயம்


வணக்கம்!
         புதிய பிளாக்கை ஆன்மீக தேடுதல் இருப்பவர்களுக்காக தொடங்குகிறேன். இது கட்டண சேவையாக வருகிறது. 

வருட சந்தா (Rs 12000) பனிரெண்டு ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூல்செய்யப்படும். முழு பணத்தையும் முதலில் செலுத்திவிடவேண்டும். தினமும் அதில் பதிவுகள் வரும். மாதம் குறைந்தது முப்பது பதிவுகள் எழுதிவிடுவேன். கூடுதலாகவும் பதிவுகள் வரலாம்.

ஒவ்வொரு பதிவுகளும் உங்களை மிக அழகாக செதுக்கும் தன்மையோடு இருக்கும். இரகசியங்கள் அடங்கிய தொகுப்பாக அது இருக்கும்.விருப்பம் இருக்கும் ஆன்மீக நண்பர்கள் முழுபணத்தையும் செலுத்திவிட்டு என்னை தொடர்புக்கொள்ளவும்.

செல்வவளம் கட்டண சேவை என்று ஐந்தாயிரம் ரூபாய் பணம் கேட்டுருந்தேன். வருடசந்தாவை கட்டிவிட்டால் அது உங்களுக்கு இலவசமாக கிடைக்கும். 

மாதம் ஆயிரம் ரூபாய் என்ற படி கட்டணத்தை நிர்ணயத்துள்ளேன். முழு பணத்தையும் செலுத்தினால் அதனைக்கொண்டு ஒன்றை செய்யலாம் என்பதால் முழுபணத்தையும் செலுத்தவேண்டுகிறேன். ஆன்மீகத்தில் விருப்பம் இருப்பவர்கள் மட்டும் அதில் இணைந்துக்கொள்ளுங்கள். ஜாதககதம்பத்தில் வழக்கம்போல் பதிவுகள் வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கேள்வி & பதில்


Spalaniappan Palaniappan said...
அய்யா உங்கள் பதிவில் பல நல்ல விசயங்களை சொல்லி வருகீறீர்கள் . அதே சமயம் செல்வ வளம் பெருக நீங்கள் சொல்லியிருக்கிற விஷயம் நம்பும் படியாக இல்லை .
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இது தொடர்கதை தான் ....

எந்த மனிதனும் 2 மணி நேரம் உச்ச நிலையில் இருக்க இயலாது . உடலுறவுக்கு பின்பு தூக்கம் வருவது இயல்பு . காரணம் உடல் சோர்வு & மனம் விரும்பியதை அடைந்து விட்டதாலும் மனமும் சோந்து விடுகிறது.

இப்படி பல செய்திகளை சொல்லி கொண்டே போகலாம் . 

உடலும் மனமும் ஒன்று பட்டு இணைந்தால் மட்டுமே உடல் உறவு .இந்த விசயத்தில் மந்திரம் சிறப்பை தரும் என்பது நம்புவதற்கில்லை.

பதில்

இப்படிப்பட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்க புதிய பிளாக் ஒன்று தொடங்கலாம் என்று இருக்கிறேன். இந்த மாதிரி பதிவுகளை பொதுவில் எழுதி அதனை புரிய வைக்க போதும் போதும் என்றாகிவிடும். 

ஒரு சில விசயங்களை பொதுவில் வைப்பது சிரமமாகவும் இருக்கின்றது. பொதுவாக நமது பதிவில் இருக்கும் கருத்துக்கள் அனைத்தும் உள்வாங்கி அதனை சோதனை செய்து பார்த்த பிறகு தான் உங்களுக்கு புரிய வரும்.

இதுவரை இதற்கு என்னிடம் மூன்று நபர்கள் பணம் கட்டுகிறேன் என்று சொல்லியுள்ளார்கள். இவர்கள் அனைவரும் பல வருடங்கள் என்னோடு பழக்கத்தில் இருப்பவர்கள். இவர்களோடு பத்து பேர் எப்படியும் ஆன்மீகத்திற்க்காக என்னை நாடிவருபவர்கள். இவர்களிடம் பகிர்ந்துக்கொண்டுள்ள விசயங்கள் அனைத்தும் பொதுவில் வைத்தால் அது மிகப்பெரிய சிக்கலை கூட உருவாக்கும்.அவர்களுக்கும் மற்றும் ஆன்மீக தேடுதல் இருப்பவர்களுக்கும் ஒரு புதிய பிளாக்கை தொடங்கிறேன். அது கட்டண சேவையாக இருக்கும்.

தேடுதல் இருப்பவர்கள் அதில் வரும்பொழுது எளிதாக அவர்களுக்கு புரியும்படி இருக்கும். மற்ற அனைவருக்கும் ஜாதககதம்பத்தில் பொதுவான தகவல்களை வைக்கிறேன். அடுத்த பதிவில் அதனைப்பற்றி சொல்லிவிடுகிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, July 21, 2015

அம்மன் பூஜை விபரம்


வணக்கம்!
         இந்த மாதம் ஆடி மாதம் என்பதால் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது. பொதுவாக நடைபெறும் அம்மன் பூஜைக்கு அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று வருடந்தோறும் பதிவில் சொல்லிருக்கிறேன். அதற்கு அனைவரும் பங்களிப்பை அளிப்பார்கள்.

ஆடி மாதத்தில் நடைபெறும் பொதுவான பூஜையில் பதிவுக்கு வரும் அனைவரும் பங்களிப்பை அளிக்கவேண்டும் என்று அன்பான வேண்டுகளாக வைக்கிறேன். பூஜைப்பற்றி அறிவிப்பு வெளிவந்தவுடன் அதற்கு தேவையான காணிக்கை அளிக்கவும். 

இப்பொழுதே இதனை சொல்லுவதற்க்கு காரணம் நீங்களும் அதற்கு தயாராக வேண்டும் என்பதால் இப்பொழுதே சொல்லுகிறேன். ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு விஷேசமான பூஜை நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. 

ஆடி மாதம் முழுவதும் உங்களின் வீட்டிலும் அம்மனை நினைத்து மனதார பிராத்தனை செய்து வாருங்கள். உங்களின் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியோடு செல்லும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நிலம்


வணக்கம்!
          ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பி இரண்டு பேர் இருந்தார்கள் என்றால் அவர்கள் சொத்து பிரிக்கும்பொழுது சமமாக பிரித்து கொடுத்துவிடுவது நல்லது.

ஒரு சில இடங்களில் அண்ணனுக்கு அதிக நிலமும் தம்பிக்கு குறைவான நிலமும் கொடுப்பார்கள். ஒரு சிலர் யாரவது ஒருவர் மட்டும் நிலத்தை எடுத்துக்கொண்டு பிறரை ஏமாற்றிவிடுவதும் உண்டு.

இதில் யார் அநீதியாக செயல்படுகின்றார்களோ அவர்களின் குடும்பங்கள் சிறப்பாக வாழ்வதில்லை. சொத்தை அதிகம் எடுத்துக்கொள்பவர்களின் குடும்பத்தில் உள்ள வாரிசுகளும் நன்றாக வாழ்வதில்லை. இதனால் ஏற்படும் பிரச்சினை தான் செவ்வாய் தோஷம் என்று சொல்லுகிறார்கள்.

சொத்தை குறைவாக பெற்ற குடும்பத்தில் உள்ள நபர்களின் வாரிசுகள் பல மடங்கு சொத்தை வாங்குகிறார்கள். சொத்தை அதிகம் பெற்ற வாரிசுகள் சொத்தை விற்றுவிடுகிறார்கள்.

உங்களின் குடும்பத்தில் சொத்தை பிரிக்கும் செயல் நடைபெற்றால் சரிசமமாக பிரித்துக்கொடுங்கள். அடுத்தவர்களின் சொத்தை வாங்கி வைத்திருந்தாலும் உடனே அதனை சம்பந்தப்பட்டவர்களிடம் சொத்தை கொடுத்துவிடுங்கள். உங்களின் வாரிசுகளுக்கு நல்லதை செய்துவிட்டு செல்லுங்கள்.

சென்னை நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும். உங்களை விரைவில் சந்திக்கிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, July 20, 2015

மனை


வணக்கம்!
          மனையைப்பற்றி சொல்லி வந்தேன். இப்பதிவில் மேலும் தகவல்களை பார்க்கலாம். ஒரு மனையை நாம் தேர்ந்தெடுக்கும்பொழுது அந்த மனை ஆண்களுக்கு சரிப்பட்டு வருமா என்று பார்த்தும் தேர்ந்தெடுக்கவேண்டும்.

ஒரு சில மனைகளில் ஆண்களை தங்க வைக்காது. ஆண் வாரிசு பிறக்காது. ஆண்கள் இருந்தால் ஆண்கள் இறந்துபோகவும் வாய்ப்பு அதிகம். 

நான் இதனை அனுபவ பூர்வமாக பார்த்திருக்கிறேன். ஒரு மனையில் வீடு கட்டி குடி சென்றார். அந்த மனையை வாங்கிய உரிமையாளர் வெட்டுப்பட்டு இறந்தார். அதன் பிறகு அந்த மனையை பிறர் ஒருவருக்கு விற்றுவிட்டு சென்றுவிட்டார்கள்.

மனையை வாங்கிய நபரின் குடும்பத்தில் உள்ள ஆண் வாரிசு எல்லாம் வியாதியால் இறந்தார்கள். அவரும் அந்த மனையை அப்படி போட்டுவிட்டு சென்றுவிட்டார். 

பல இடத்தில் நீங்களே அனுபவபூர்வமாக இதனை பார்த்து இருக்கலாம். அதனால் நீங்கள் வாங்கும் மனையையாக இருந்தாலும் வீடாக இருந்தால் பல தடவை அதனை சோதனை செய்த பிறகு வாங்குவது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, July 19, 2015

விளக்கம்


வணக்கம்!
          நேற்று பதிவு போட்ட நேரத்தில் இருந்து பல போன்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன. இந்த சந்தேகத்தை எல்லாம் நிவர்த்திக்கொண்டு இருக்க என்னால் தற்பொழுது முடியாது. எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. 

பணம் சம்பாதிக்கவேண்டும் என்றால் பணம் செலவு செய்தால் மட்டுமே சாத்தியப்படும். பணத்தை செலுத்திவிட்டு வழி கேட்டால் வழி பிறக்கும்.

பொதுவாக இந்த மாதிரி செயல்கள் எல்லாம் பெரிய அளவில் சம்பாதிக்கவேண்டும் என்ற வெறி உள்ளவர்கள் மட்டும் இப்படி எல்லாம் செய்வார்கள். சும்மா ஏதோ சம்பாதித்தால் போதும் என்று நினைப்பவர்களுக்கு இது எல்லாம் தேவையில்லை.

இந்த பரிகாரத்தை ஒரு அரசியல் தலைவருக்கு தான் நான் முதலில் சொல்லிக்கொடுத்தேன். அவர் பெரிய அளவில் இதனை பயன்படுத்தி வெற்றி கண்டார். அதன் பிறகு ஒவ்வொரு நண்பர்களாக பரிந்துரை செய்து இதனை கொடுத்து வெற்றி கண்டேன்.

ஒருவன் வெற்றி பெறவேண்டும் என்றால் என்னை நம்பி வரும் நண்பர்களுக்கு எது வேண்டுமானாலும் செய்துக்கொடுப்பேன். அது எந்த வழியாக இருந்தாலும் பரவாயில்லை என்று வழி செய்துக்கொடுப்பது எனது வேலை. இப்படி இருப்பதால் மட்டுமே என்னை தேடி ஆட்கள் வந்துக்கொண்டே இருக்கிறார்கள்.

உங்களின் உடல் உடலறவுக்கு பிறகு தூக்கம் அதிகம் வருகிறது என்றால் உங்களின் உடலுக்கு தேவையான சரியான சாப்பாட்டை கொடுங்கள். உங்களின் உடல் மேம்பட்டவுடன் இதனை செய்துக்கொள்ளலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, July 18, 2015

செல்வவளம் கட்டண சேவை


ணக்கம்!
          செல்வவளத்தில் ஒரு புதுமையான விசயத்தை அதே நேரத்தில் அதனை கட்டணத்தோடு ஒன்றைச்சொல்லலாம் என்று இந்த பதிவை தருகிறேன். இந்த பரிகாரம் என்னோடு நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் இதனை கொடுத்து இருக்கிறேன். முதன் முறையாக பதிவில் சொல்லுகிறேன்.

காமம் வழியாக செல்வவளத்தை சொல்லுகிறேன். இது நூறு சதவீதம் இதன் வழியாக நீங்கள் செல்வந்தராக மாறிவிடுவீர்கள். திருமணம் ஆன தம்பதிகள் இதனை செய்து வந்தால் எந்த காலத்திலும் பணம் வந்துக்கொண்டே இருக்கும். இளைஞர்கள் இதனை இப்பொழுது இருந்தே தெரிந்துக்கொள்ளலாம். உங்களை தயார் செய்துக்கொள்ள இது நன்றாக உதவி புரியும்.

உடலுறவில் ஒருவர் ஈடுபட்டால் உச்சம் அடைந்த பிறகு ஒருவருக்கு குறைந்தது இரண்டு மணி நேரமாவது பரவசமாக இருக்கவேண்டும். அப்பொழுது தான் உடல் நன்றாக இருக்கின்றது என்று அர்த்தம். உச்சம் அடைந்த பிறகு தூக்கம் என்பது வராது. உற்சாகமாக இருக்கும். உங்களுக்கு உச்சம் அடைந்த பிறகு தூக்கம் வந்தால் உங்களின் உடல்நிலை சரியில்லை என்று அர்த்தம்.

உடலறவு மாதத்தில் நான்கு முறை வைத்தால் கூட இந்த நிலையில் உடல் இருக்கும். அவர் அவர்களின் உடல்வாகுப்படி இதன் நிலை இருக்கும். உடலறவு முடிந்த பிறகு உங்களுக்கு உற்சாகமாக இருக்கிறது என்றால் நீங்கள் இந்த வழிகாட்டிற்க்கு தகுதியானவர். உடல் உற்சாகமாக இல்லை தூக்கம் வருகிறது என்றால் உங்களின் உடல்நிலையை மேம்படுத்த வேண்டும்.

இதனை வைத்து ஒரு வழிபாட்டை சொல்லி தருகிறேன். இந்த வழிபாட்டிற்க்கு மந்திர உபதேசம் இருக்கின்றது. அந்த மந்திரத்தையும் நான் கொடுக்கிறேன். குரு தட்சணையாக பணம் கட்டவேண்டும். இதற்கு கட்டணமாக ஐந்தாயிரம் கட்டவேண்டும். வாழ்க்கை முழுவதும் இந்த கட்டணம் உங்களுக்கு மிகப்பெரிய அளவில் பயன்படும். மாதம் ஒரு முறை கூட இதனை நீங்கள் செய்யலாம்.அற்புதமான பலனை நீங்கள் பெறலாம்.

பணம் வேண்டுமானால் நீங்கள் கொஞ்சம் செலவு செய்து தான் ஆகவேண்டும். ஒருவருக்கு மட்டும் பணத்தை கட்டிவிட்டு அதனை பலருக்கு நீங்கள் கொடுக்கவேண்டும் என்றால் அது வேலை செய்யாது ஏன் என்றால் குரு வழியாக மந்திர உபதேசம் பெறும்பொழுது மட்டுமே வேலை செய்யும்.

வெட்கப்பட்டுக்கொண்டு இதனை நீங்கள் தவறவிடவேண்டாம். அனைவரும் மனிதர்களே அனைவருக்கும் அனைத்தும் உண்டு. தற்பொழுது வளர்பிறை நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. நன்றாக பயன்படுத்தலாம். உங்களுக்கு என்னோடு பேசுவதற்க்கு கஷ்டமாக இருந்தால் மெயில் வழியாக அனுப்புகிறேன். அதன் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்டு செய்யலாம். கட்டணத்தை எனது வங்கிகணக்கில் அனுப்பிவிட்டு சொல்லுங்கள். செல்வவளத்தை உங்களின் வழியில் மேம்படுத்திக்கொள்ளலாம்.

இந்த வழியில் நான் சொல்லிக்கொடுத்து மிகப்பெரிய கோடீஸ்வரர்களாக ஆனாவர்கள் பல பேர் இருக்கின்றனர். நீங்களும் கண்டிப்பாக மாறலாம். அற்புதமான ஒரு வழி இது. தவறவிடவேண்டாம். உடனே எனது வங்கி கணக்கில் ஐந்தாயிரம்(5000 Rs) பணத்தை செலுத்திவிட்டு தொடர்புக்கொள்ளுங்கள். பணத்தை KVB வங்கியில் மட்டும் செலுத்துங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்


வணக்கம்! 
                   முஸ்லீம் நண்பர்களுக்கு இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

சென்னையில் உள்ள நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளலாம் விரைவில் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, July 17, 2015

அம்மன் அருள்


ணக்கம்!
          ஆடி மாதம் என்றாலே அது அம்மன் மாதமாக தான் கருதவேண்டும். அந்தளவுக்கு ஆடிக்கும் அம்மனுக்கும் தொடர்பு இருக்கிறது. இன்று முழுவதும் அம்மனின் நினைப்பில் சென்றுவிட்டது. உங்களுக்கு பதிவை தருவதிலும் காலம் தாழ்த்திவிட்டேன். இந்த பதிவை கொடுத்துவிட்டு மீண்டும் அம்மன் கோவிலுக்கு செல்லவேண்டும். 

சக்தியை எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எல்லாம் இந்த மாதத்தில் அம்மனை நன்றாக வழிப்பட்டாலே போதும். உங்களின் பகுதியில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு தினமும் சென்று வழிபட்டுக்கொண்டு வாருங்கள். அதோடு நமது அம்மனையும் மனமுருகி வழிபட்டு வாருங்கள்.

ஒரு அம்மனின் சக்தி மட்டும் உங்களுக்கு கிடைத்தாலே போதும் உங்களின் வாழ்க்கை நிறைவு பெற்ற வாழ்க்கையாகிவிடும். அனுபவத்தில் கண்ட உண்மை இது.

ஒரு சிலர் ஆடி மாத வெள்ளிக்கிழமை அன்று விரதமும் இருப்பார்கள். உங்களால் முடிந்தால் ஆடி வெள்ளிக்கிழமை அன்று முழுமையான விரதம் இருந்து அம்மனை வேண்டிக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, July 16, 2015

ஆடி மாத சிறப்பு பூஜை


ணக்கம்!
         நாளை முதல் ஆடி மாதம் ஆரம்பம் ஆகின்றது. அம்மனுக்கு ஆடி மாதம் உகந்த நாள். நமது அம்மனுக்கு நாளை முதல் சிறப்பு பூஜைகள் செய்ய ஆரம்பித்துவிடுவோம். 

ஆடி மாதத்தில் நடைபெறும் அம்மன் பூஜைக்கு பதிவுக்கு வரும் அனைவரையும் பங்கு பெற அழைப்பு விடுப்பது உண்டு. அதனைப்பற்றி விபரம் பிறகு அறிவிக்கிறேன்.

ஒரு சில நண்பர்கள் தங்களுக்கு என்று தனியாக பூஜை செய்து தாருங்கள் என்று கேட்பார்கள். அவர்களுக்கு ஆடி மாதத்தில் பூஜை செய்யவிருக்கிறேன். தனி நபருக்கு ஆடி மாதத்தில் சிறப்பு பூஜை செய்ய விருப்பம் இருக்கும் நண்பர்கள் இதில் பங்கு பெறலாம். இதற்க்கான கட்டணம் பத்தாயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்தவேண்டும்.

நீங்கள் விரும்பும் நாளில் இந்த பூஜை செய்துக்கொள்ளலாம். முழுபணத்தையும் செலுத்தி முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மனை


ணக்கம்!
          ஒவ்வொருவருக்கும் வீடு அமையவேண்டும் என்று பல்வேறு கருத்துக்களை சொல்லிக்கொண்டு வருகிறேன். அதில் ஒன்றைப்பற்றி சொல்லுகிறேன்.

மனையை தேர்ந்தெடுப்பது என்பது மிக மிக முக்கியம். ஒரு மனையை பொறுத்து தான் அதில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையும் அமையும். மனையில் பிரச்சினை என்றால் வீட்டில் நிம்மதி கிடையாது.

ஒரு மனையை நீங்கள் தேர்ந்தெடுக்கும்பொழுது அருகில் உள்ளவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொண்டு வாங்குவது நல்லது. ஒரு சில மனை கோவில்களின் இடமாகவும் இருக்கும். ஒரு சில இடத்தில் ஏதாவது ஒரு சாமியாரின் சமாதி அமைந்த இடமாகவும் இருக்கும்.

ஒரு சில மனையில் ஓட்டம் என்று சொல்லுவார்கள். ஏதாவது ஒரு தேவதை அந்த மனையின் வழியாக சென்று வருவதை தான் ஓட்டம் என்பார்கள். ஓட்டம் இருக்கும் மனையை வாங்கினாலும் பிரச்சினை தான் இருக்கும்.

நல்ல விசாரித்துவிட்டு அதோடு ஒரு ஆன்மீகவாதியை அழைத்து மனையை பார்ப்பதும் நல்லது.நல்ல ஆலாேசனை செய்துவிட்டு மனையை தேர்ந்தெடுத்து வீடு கட்டிக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, July 15, 2015

செல்வ வளம்


ணக்கம்!
          இன்று நமது நண்பரின் மெயில் இந்த பதிவை எழுத தூண்டியது. அத்துடன் ஒரு வாரத்திற்க்கு முன்பு மதுரை சென்று இருந்தேன். நண்பர் ஒருவர் ஒரு புத்தகத்தை படிக்க சொன்னார். மதுரையில் இருந்து அதனை வாங்கி வந்தேன். அதில் உள்ள கருத்தும் நண்பரின் கேள்வியும் ஒன்றாக இருந்ததால் இந்த பதிவை தருகிறேன்.

நண்பரின் கேள்வி என்னிடம் நிறைய பேர் கடன் கேட்கின்றனர் என்றார். எப்பேர்ப்பட்ட பாக்கியம் செய்து இருக்கவேண்டும் நமது நண்பர். பணம் இருப்பதால் தானே கடன் கேட்கின்றனர்.

ஒருவர் தன்னால் முடிந்தளவுக்கு பிறர்க்கு கொடுத்தால் இந்த பிரபஞ்சம் அவருக்கு நிறைய கொடுத்துக்கொண்டே இருக்குமாம். பிறர்க்கு கொடுப்பதை நிறுத்திவிட்டால் அவருக்கு பிரபஞ்சம் கொடுப்பதை நிறுத்திவிடும் என்று சொல்லியுள்ளனர்.

உங்களால் முடிந்தளவுக்கு பிறர்க்கு கொடுங்கள் அது உங்களை மேலும் மேலும் உயர்த்தும் இது பணத்திற்க்கு மட்டும் அல்ல. எல்லாவற்றிக்கும் இது பொருந்தும்.

மேலே படத்தில் இருப்பது மகாலட்சுமி. கொஞ்ச நேரம் அதனை பாருங்கள். அனைத்து செல்வமும் உங்களை தேடிவரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, July 14, 2015

மகர ராசியினர்க்கு


ணக்கம்!
          ஒவ்வொருவரும் சொந்த வீடு கட்டி வாழவேண்டும் என்று கடந்த பூஜையில் ஒரு வேண்டுதலை அம்மனிடம் வைத்தேன். கண்டிப்பாக அதற்கு முயற்சி செய்யும் நபர்களுக்கு அது அம்மன் அருளால் நடக்கும்.

கோச்சாரப்படி குரு பகவான் எட்டாம் வீட்டில் இருக்கும் மகரராசி நண்பர்கள் தற்பொழுது எட்டாம் வீட்டில் இருக்கும் குருவால் வீடு கட்டும் முயற்சியில் இறங்கினால் உடனடியாக அதற்கு வாய்ப்பு அமைந்துவிடும்.

குரு எட்டாவது வீட்டில் அமர்ந்தால் பிரச்சினை என்று மட்டும் நினைக்கவேண்டாம். குரு பகவான் உங்களின் ராசிக்கு மூன்றாவது வீடு மற்றும் பனிரெண்டாவது வீட்டிற்க்கு அதிபதி. அவர் மறைவு ஸ்தானத்தில் அமர்வது நல்ல யோகம் தான். அதனால் நீங்கள் தாராளமாக எல்லா விதமான நல்ல முயற்சிகளையும் மேற்க்கொள்வது நல்லது.

குறிப்பாக வீடு கட்ட தொடங்கினால் எளிதில் வீடு கட்டிவிடலாம். கையில் காசு இல்லை எப்படி கட்டுவது என்று நினைக்கவேண்டாம். கடவுள் அருளால் உங்களுக்கு நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

செல்வவளம்


ணக்கம்!
          காலையிலேயே செல்வவளத்திற்க்கு என்று ஒரு பதிவை பார்த்துவிடலாம். இதனைப்பற்றி ஏற்கனவே சொல்லிருந்தாலும் மீண்டும் நினைவூட்ட இந்த பதிவு.

ஒவ்வொருவரும் நான் சந்திக்கும்பொழுது என்னிடம் சொல்லும் வார்த்தை சார் கடன் அதிகம் இருக்கின்றது அதற்கு ஒரு வழி செய்யுங்கள் என்று சொல்லுவார்கள். கடன் வாங்கியவர்களிடம் நீங்கள் சொல்லும் வார்த்தை கண்டிப்பாக உங்களின் பணத்தை திருப்பிக்கொடுத்துவிடுகிறேன் என்று மட்டும் ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள்.

கடன் நமக்கு கொடுத்தவர்கள் இவன் கடனை திருப்பிக்கொடுக்கமாட்டேன்கிறான் என்று கடவுளிடம் வேண்டினால் நாம் என்ன தான் முயற்சி செய்தாலும் நமது முயற்சி அனைத்தும் தோல்வியை நோக்கி சென்றுவிடும்.

பத்து பேர்களிடம் கடன் வாங்கிவிட்டு பத்து பேரும் கடவுளிடம் முறையிட்டால் நம் கதி அதோ கதி தான். பத்து பேரின் நினைப்பும் நம்மை வெப்பன் போல தாக்கிக்கொண்டே இருக்கும். கடன் வாங்கியவர்களிடம் கடன் நான் திருப்பி தந்துவிடுவேன் என்று மட்டும் சொல்லிவிடுங்கள்.

செல்வவளம் என்பதை சொல்லிவிட்டு கடனை பற்றி சொல்லுகின்றார் என நினைக்கவேண்டாம். கடனை அடைத்தால் தானே செல்வம் சேரும் அதனால் சொன்னேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, July 13, 2015

ஆறாவது வீடு அனுபவம்


ணக்கம்!
          கடவுள் ஒவ்வொரு மனிதனுக்கு ஒரு பலத்தை கொடுத்து இருப்பார். அவன் அவன் பலம் என்ன பலகீனம் என்ன என்பதை புரிந்துக்கொண்டால் வாழ்வில் வெற்றி பெற்றுவிடலாம்.

சோதிடத்தில் ஆறாவது வீட்டில் தீய கிரகங்கள் இருந்தால் மிகப்பெரிய பலசாலியாக ஆகிவிடுவார்கள். பல கோடிகளை வைத்திருக்கும் நபர்களின் ஜாதகத்தை எல்லாம் நான் வாங்கி பார்த்து இருக்கிறேன் அவர்களுக்கு ஆறாவது வீட்டில் தீயகிரகங்கள் அமர்ந்து இருக்கும்.

பெரும்பாலும் ஆறாவது வீடு பலமாக இருக்கும் நபர்களுக்கு பணம் அதுவாகவே வந்து சேரும்.சாதாரண மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சின்ன ஒரு சொடுக்கில் இந்த நபர்கள் சம்பாதிப்பார்கள். இவர்களின் கிரகம் அப்படி வேலை செய்கிறது.

ஆறாவது வீடு பலமாக இருக்கும் நபர்களிடம் நாம் சின்ன பிரச்சினையை செய்தால் கூட அவர்களின் கிரகங்கங்கள் நம்மை துரத்தி அடிக்கும். அவர்கள் சின்ன செயலிலேயே நம்மை தோற்கடித்துவிடுவார்கள்.

ஆறாவது வீட்டில் உங்களுக்கு தீயகிரகங்கள் இருந்தால் அது நல்லது என்றே நீங்கள் நினைத்துக்கொள்ளுங்கள். உங்களால் எதுவும் சாதிக்கமுடியும் என்பதை வாழ்வில் தெரியவரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, July 12, 2015

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

ணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள். சென்ற மாதமும் இன்றைய மாதமும் அம்மன் அலங்காரம் செய்தவர் இராசிபுரம் இராஜ்குமார் அவர்கள்.







அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

ணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

ணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

உங்களின் வேண்டுதல்


வணக்கம்!
          இன்று அம்மன் பூஜை. மாலை நேரத்தில் பூஜை செய்யப்படும். அதற்க்கான வேலை நடந்துக்கொண்டு இருக்கின்றது. அந்த வேலைக்கும் நடுவே உங்களுக்கு ஒரு பதிவை கொடுத்துவிடுகிறேன்.

அம்மன் பூஜை நாளான இன்று மாலை நேரத்தில் அம்மனிடம் நீங்கள் வேண்டுதல் வைக்க உகந்த நேரமாக இருக்கும். அதே நேரத்தில் நியாயமான வேண்டுதலாக இருந்தால் அதனை கண்டிப்பாக நடத்திக்கொடுத்துவிடும்.

நியாயமான வேண்டுதல் என்றால் வேண்டுதல் வைத்த விசயம் அதற்கு வழி இருக்கின்றது ஆனால் நடைபெற தடை ஏற்படுகிறது என்றால் வேண்டுதல் வைத்த உடனே நடைபெற்றுவிடும்.வேண்டுதல் வைத்த விசயத்திற்க்கு வழியே இல்லை என்றால் காலம் தாழ்த்தி நடைபெறும். எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக நடைபெறும். காலம் மட்டும் வித்தியசப்படலாம்.

அனைவருக்கும் வீடு அமைய வேண்டும் என்று ஒரு சிறப்பு பிராத்தனையும் இன்று நான் அம்மனிடம் வைக்கிறேன். உங்களின் வேண்டுதலில் வீடு அமையவேண்டும் என்பதையும் வையுங்கள்.

நிறைய நண்பர்கள் அவர்களின் பிரச்சினையை எனக்கு சொல்லி இதற்கு வேண்டுதல் நீங்களும் வையுங்கள் என்று சொல்லியுள்ளனர். அவர்களுக்கும் மற்றும் அனைவரின் பிரச்சினையும் தீரவேண்டும் என்று வேண்டுதல் வைக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, July 10, 2015

அம்மன் பூஜை


வணக்கம்!
          அம்மன் பூஜை 12/07/2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். நமது நண்பர்களின் வேண்டுகளுக்கு இணங்க ஞாயிற்றுக்கிழமை அன்று வைக்கப்பட்டுள்ளது.

நமது அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்

சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்
சென்னையை சேர்ந்த இராஜ்கண்ணன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு செல்வகுமார் அவர்கள்

நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்
மயிலாடுதுறையை சேர்ந்த திரு யோகராஜ் அவர்கள்
தூத்துக்குடியை சேர்ந்த திரு கலைராஜன் அவர்கள்

சென்னையை சேர்ந்த திரு இராமசந்திரன் அவர்கள்
இராசிபுரத்தை சேர்ந்த திரு இராஜ்குமார் அவர்கள்
கோயம்புத்தூர் சேர்ந்த திரு  மருதபாண்டியன் அவர்கள்

கண்டியூர் சேர்ந்த திரு இராமசுப்பிரமணியன் அவர்கள்
திரு சத்திய சீத்தாராமன் அவர்கள்

வழக்கம்போல்

திரு கிருஷ்ணப்ப சரவணன் அவர்கள்.

மற்றும் பல நண்பர்கள் பணம் அனுப்பியுள்ளனர். குறிப்பாக பெண்கள் பணம் அனுப்புவர்களின் பெயர்களை பதிவில் வெளியிடுவதில்லை. பல பெண்களும் பணம் அனுப்புகின்றனர்.

பூஜை நடைபெறும் நேரத்தில் அம்மனிடம் புது வேண்டுதலை வைத்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, July 9, 2015

சொந்த வீடு


ணக்கம்!
          நமது வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு செல்லும்பொழுது அவர்களின் வீடுகளை நான் பார்ப்பது உண்டு. பெரும்பாலும் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். 

ஒவ்வொருவரின் வாழ்க்கை லட்சியமாக சொந்த வீடு அமைய வேண்டும் என்று நமது அம்மனிடமும் உங்களின் குலதெய்வத்திடமும் வேண்டிக்கொள்ளுங்கள். சொந்த வீடாக இருந்தால் மட்டுமே பல வசதிகளை நீங்கள் செய்துக்கொள்ளமுடியும்.

எனக்கு என்ன பிரச்சினை என்றால் உங்களுக்கு சொந்த வீடு அமைந்தால் என்னால் நிறைய விசயங்களை உங்களுக்கு செய்து தரமுடியும்.வாடகை வீடு என்றால் அதில் பூஜை கூட செய்ய வீட்டின் உரிமையாளர் அனுமதி தரமாட்டேன்கிறார்.

வீட்டின் உரிமையாளரின் அனுமதி பெற்று செய்வதற்க்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. எப்படியாவது உங்களுக்கு ஒரு சொந்த வீட்டை அமைத்துக் கொண்டுவிட்டால் உங்களின் வாழ்க்கை மிக உயர்ந்த இடத்திற்க்கு இட்டு செல்ல முடியும்.

இந்த மாதம் அம்மன் பூஜை செய்யும்பொழுது நமது நண்பர்களுக்கு ஒரு வீடு அமைய வேண்டும் என்று நான் பிராத்தனை வைக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, July 8, 2015

கேள்வி & பதில்


வணக்கம்! 
          நண்பர் ஒருவர் வேண்டுதல் தன் பிள்ளைக்காக வைக்கலாமா என்று கேட்டுருந்தார். அவர் காயத்ரி மந்திரம் செய்துக்கொண்டு வருபவர் அதனால் அந்த கேள்வி அவரிடம் இருந்து வந்தது.

சக்தியை எடுக்கும் நிலையில் இருப்பவர்கள் பிறர்க்காக வேண்டுதல் வைக்க வேண்டாம் என்று ஒரு பதிவில் சொல்லிருந்தேன். தன் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு என்று வரும்பொழுது நீங்கள் வேண்டுதல் வைக்கலாம். பொதுவாக நமது கர்மா நம்மை விடாமல் துரத்திக்கொண்டே வரும். நம்மை சோதனை செய்யவே பல தடைகளை ஏற்படுத்தும்.

நான் சக்தியை எடுக்கும்பொழுது என்னுடைய அம்மாவிற்க்கு ஒரு பிரச்சினையை கொடுத்தது ஆனால் நான் அதற்க்காக வேண்டுதல் வைக்கவில்லை. பிறகு அதுவாகவே பிரச்சினை தீர்ந்து போய்விட்டது. 

நமக்கு நிறைய சோதனை வரும் நாம் மனம் கலங்காமல் இருந்தால் அந்த சக்தியே நமது பிரச்சினையை தீர்க்கும். நான் இதுவரை எனது சொந்த பிரச்சினைக்கு என்று வேண்டுதல் வைத்தது கிடையாது. அம்மனே பார்த்து எனக்கு செய்து கொடுக்கும்.

நமக்கு என்ன வேண்டும் என்பது நமது சக்திக்கு தெரியும். அப்படி அது தெரிந்தும் கொஞ்சம் ஆட்டம் காண்பிக்கும் அதன் பிறகு அதுவே தீர்த்துவைக்கும். உங்களின் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு மட்டும் நீங்கள் வேண்டுதல் ஒன்றை வைத்துவிடுங்கள்.

இன்று மதியம் திருப்பூர் செல்லுகிறேன். திருப்பூர் நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, July 7, 2015

பட்டவன்


வணக்கம்!
          முன்னோர்கள் வழிபாட்டைப்பற்றி சொல்லிருந்தேன். கிராமபுறங்களில் பட்டவன் என்று ஒரு தெய்வ வழிபாட்டை செய்வார்கள். கிராம் கோவில்களில் இந்த பட்டவன் தெய்வத்திற்க்கு என்று ஒரு இடம் ஒதுக்கி வழிபாட்டை செய்துவருவார்கள்.

பட்டவன் என்று இருக்கும் கோவில் எல்லாம் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள முன்னோர்கள் வழிபாடு தான். இளம் வயதில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் நல்ல பலசாலியாக இருந்து இறந்து போயிருப்பார். அவரை பட்டவன் என்று சொல்லி வழிபாடு நடத்துவார்கள்.

பட்டவன் என்று சொன்னாலே பெரும்பாலும் முன்னோர்கள் இறந்ததை வைத்து தான் வழிபாடு நடத்தப்படும். பெரிய வீரனாக இருந்தவர் இறந்தால் அவரை பட்டவனாக வைத்து வழிபாடு நடத்துகிறார்கள். இதன் செயல்பாடும் வீரதனமாக தான் இருக்கின்றது.

எனக்கு தெரிந்த அறிவை வைத்து இதனை சொல்லுகிறேன். நீங்களும் பட்டவன் வழிபாடு செய்யலாம்.  பட்டவனை பற்றி தெரிந்தை எனக்கு எழுதி அனுப்புங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

செவ்வாய் வருவாய்


வணக்கம்!
          செவ்வாய் வருவாய் என்று சொல்லுவார்கள். செவ்வாய்கிழமை அன்று மட்டும் நமது வேண்டுதலை எந்த தெய்வத்திடமும் வைத்தாலும் அந்த வேண்டுதலை உடனே நிறைவேற்றிக்கொடுக்கும்.

செவ்வாய் கிழமைக்கு என்று ஒரு வேகம் உண்டு. வாரத்தில் எந்த கிழமையும் செவ்வாய்கிழமை போல் வேகமாக இருக்காது. எந்த ஒரு பரிகாரத்தையும் செய்து நமக்கு எதுவும் நடைபெறவில்லை என்றால் செவ்வாய்கிழமை அன்று பரிகாரம் செய்தால் அதற்கு பலன் கிடைக்கும்.

ஒவ்வொருவருக்கும் நான் சொல்லுவது செவ்வாய்கிழமை அன்று விரதம் இருந்து வாருங்கள் நல்லது நடக்கும் என்று சொல்லுவேன். செவ்வாய்கிழமை அன்று ஒரு பொழுது விரதம் இருந்து வந்தால் ஒன்பது வாரத்தில் உங்களுக்கு நல்லது நடக்கும்.

வியாபாரம் செய்பவர்கள் கண்டிப்பாக செவ்வாய் வழிபாட்டை செய்து வந்தால் வியாபாரம் பெரிய அளவில் விருத்தி செய்யலாம். நல்ல தைரியத்தை கொடுத்து நாம் எடுத்து வைக்கும் எல்லா வியாபாரமும் வெற்றியை தரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, July 6, 2015

சனி தசா பலன்கள்


வணக்கம்!
          விருச்சிகத்தில் சனி அமர்ந்து தன்னுடைய தசாவை நடத்தினால் எப்படி பலனை தரும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

செவ்வாயோடு வீட்டில் சனி அமர்ந்து தசா நடத்துவதால் பாதிப்பு வரும் என்று நினைக்கவேண்டாம். பெரிய அளவில் நல்லதை தருவார். பெரிய தொழிலை நிர்வகிக்கும் பண்பை உருவாக்குவார் செவ்வாய். செவ்வாயின் வீட்டில் அமருவதால் சனி பகவான் தன்னுடைய தசாவில் அதே போல் தருவார்.

விருச்சிகத்தில் சனி அமர்ந்தால் திருமணத்திற்க்கு பிறகு நல்லதை எதிர்பார்க்கலாம்.உங்களுக்கு சனி தசாவில் திருமண யோகத்தை கூட கொடுப்பார். திருமணத்தில் இருவருக்கும் கொஞ்சம் சண்டை சச்சரவுகளை உருவாக்கினாலும் காலமாற்றத்தில் அது குறைந்து நல்ல வாழ்வை கொடுப்பார்.

லாட்டரியில் யோகம் அடிக்காதா என்று நினைப்பவர்களுக்கு சனி தசாவில் இப்படி திடீர் யோகங்களை வாரி வழங்குவார். பெரிய அளவில் தொழிலையும் கொடுப்பார். விவசாயத்தொழிலை இந்த காலகட்டத்தில் நீங்கள் தொடங்கினால் பெரிய நிலபுலங்களை வைத்து விவசாயம் செய்ய வைக்கும்.

சனி தசாவில் என்ன பிரச்சினை என்றால் திடீர் சண்டை சச்சரவுகளை அவ்வப்பொழுது விருச்சிகத்தில் இருந்து ஏற்படுத்தவார். செவ்வாய் அவசரம் என்பதால் கொஞ்சம் அமைதியாக இருந்து அனைத்திலும் அமைதி கடைப்பிடித்தால் இந்த சனி தசா நல்ல தசாவாகவே அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

முன்னோர் வழிபாடு


வணக்கம்
          காலையில் அனுபவம் என்ற ஒரு பதிவில் பார்த்த கருத்தைப்பற்றி தான் இந்த பதிவு. நமது முன்னோர்களை வழிபடுவது ஒரு கடமையாகவே நமது வழக்கத்தில் வைத்திருப்பார்கள்.

நமது மதத்தில் கூட புண்ணிய நதிகளுக்கு சென்று நீராடுவது மற்றும் அவர்களுக்கு புண்ணிய நதிகளில் பூஜை செய்வது எல்லாம் முதன்மையாகவே வைத்திருப்பார்கள்.

நமது முன்னோர்கள் அனைவரும் மிக மிக நல்லவர்களாக வாழ்ந்து மறைந்தவர்கள். அவர்களின் ஆசி நமக்கு கிடைத்தால் நமது வாழ்வு நன்றாக இருக்கும் என்று எண்ணி அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வைத்திருப்பார்கள்.

இன்றைய காலத்தில் ஒரு ஊரில் ஒருவர் நல்லவர் என கண்டுபிடிப்பதே அவ்வளவு அரிது. அவர்களுக்கு பெரிய அளவில் கோவில் கட்டி வழிபாடு நடத்துவது எல்லாம் ஒரு அந்தஸ்தை காட்டுவது போலதானே தவிர அதில் ஒன்றும் மக்களுக்கு கிடைக்காது. 

உங்களின் முன்னோர்களுக்கு நீங்கள் கோவில் கட்டி நீங்கள் மட்டும் வழிபட்டால் நல்லது. அடுத்தவர்களை வழிபட சொன்னால் அதுதான் பிரச்சினை. உங்களின் முன்னோர்கள் உங்களுக்கு மட்டுமே வழிகாட்டுவார்கள் அடுத்தவர்களுக்கு அல்ல.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அனுபவம்


ணக்கம்!
          பல இடங்களுக்கு நான் சென்று வந்து இருக்கிறேன். இனிமேலும் செல்லுவேன். ஒவ்வொரு ஊரிலும் உள்ள மக்களோடு நான் பழகி இருக்கிறேன். ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு அனுபவத்தை பெற்று இருக்கிறேன்.

ஒவ்வொரு ஊருக்கும் செல்லும்பொழுது ஒன்றை காண்பேன். அதனைப்பற்றி தான் இப்பதிவில் சொல்லுகிறேன். பல இடங்களில் ஒருவர் செல்வாக்கு உடையவராக வாழ்ந்தார் என்றால் அவரின் சந்ததிகள் அவருக்கு ஒரு சமாதியை வைத்து அதன் மேல் சிவலிங்கத்தை வைத்து கோவிலாக கட்டி விடுகிறார்கள்.

செத்தவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. ஊரில் இருக்கின்ற அனைத்து அயோக்கியதனத்தை எல்லாம் செய்துவிட்டு பல குடும்பங்களை கெடுத்துவிட்டு அவர்கள் இறக்கிறார்கள். அவர்களுக்கு அவரது வாரிசுகள் கோவில் கட்டுகிறார்கள். இவர்களை வழிப்பட்டால் எப்படி இருக்கும்.

இன்றைய காலத்தில் கட்டப்படும் கோவில் எல்லாம் தவறான வழியில் சம்பாதித்து கட்டப்படும் கோவிலாகவே இருக்கின்றது. அதற்கு நீங்கள் வீட்டிலேயே உங்களின் பூஜையறையிலேயே அமர்ந்து நன்றாக சாமி கும்பிட்டுவிட்டு செல்லலாம்.

இன்று மதுரை செல்லுகிறேன். மதுரையில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, July 5, 2015

விழிப்புணர்வு


ணக்கம்!
          எந்த ஒரு கிரக பெயர்ச்சியாக இருந்தாலும் அது நன்மையை தந்தாலும் தீமையை தந்தாலும் நாம் விழிப்போடு இருந்தால் எதுவும் நமக்கு தீமை செய்து விடாது. நாம் விழிப்போடு இல்லாமல் இருக்கும்பொழுது மட்டுமே நாம் சிக்கலில் மாட்டிக்கொள்வோம்.

எந்த ஒரு பாதிப்பை தரும் கிரகமும் நமது மூளையில் ஒரு மந்த நிலையை உருவாக்கி அதன் பிறகு தான் காரியத்தை செய்யும். நமது மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள பல பயிற்சிகளை செய்யும்பொழுது கிரகபாதிப்பு வராது. கோச்சாரப்பலன்களை பொறுத்தவரை மனதுக்கு காரகன் என்று சொல்லப்படும் சந்திரனை வைத்து தான் சொல்லப்படுகிறது.

நான் ஆன்மீகத்திற்க்கு வருவதற்க்கு முன்பே எனக்கு கோச்சாரப்பலன்கள் சரியில்லை என்ற காலத்தில் சுறுசுறுப்போடு அதிக வேலைகளை செய்தேன். கோச்சாரப்பலன்கள் காலத்தில் நிறைய வேலைகளை எடுத்து செய்து இருக்கிறேன்.

கோச்சாரப்பலன்கள் நமக்கு சரியில்லை என்று ஒதுங்கிக்கொள்ளாமல் விழிப்புணர்வோடு செயல்பட்டால் கோச்சாரப்பலன்களை பார்த்து நாம் பயம்கொள்ள தேவையில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, July 4, 2015

கோச்சாரப்பலன்


வணக்கம்!
          நேற்று ஒரு நண்பர் ஒரு கேள்வியை கேட்டு அனுப்பிருந்தார். எனக்கு கோச்சார பலன் மட்டும் தான் பலன் நடைபெறுகிறது. எப்படி நீங்கள் ஐந்து சதவீதம் தான் கோச்சாரப்பலன் நடைபெறும் என்று சொல்லுகின்றீர்கள் என்று கேட்டுருந்தார்.

கோச்சாரப்பலன் மட்டும் ஒருவருக்கு நடைபெற்றால் அவரின் ஜாதகத்தில் தசாநாதன் வேலை செய்யவில்லை என்று அர்த்தம் கொள்ளவேண்டும். தசாநாதன் நன்றாக இருந்தால் கோச்சாரப்பலனுக்கு வேலை இல்லாமல் செய்துவிடும்.

பல ஜாதகங்களில் கோச்சாரப்பலன் மட்டும் பலன் தருவதை நானும் பார்த்து இருக்கிறேன். கோச்சாரப்பலன் மட்டுமே ஒருவருக்கு நடைபெற்றால் அவரின் வாழ்க்கை ரொம்ப கஷ்டமாக போய்விடும். நான் வேலை செய்யும் தொழில் நண்பர்களுக்கு கூட கோச்சாரப்பலன் மட்டும் ஒரு சிலருக்கு வேலை செய்கிறது. அதனை எல்லாம் கட்டு போட்டு தசாநாதனை வேலை செய்ய வைத்திருக்கிறேன். 

கோச்சாரப்பலன் மட்டும் உங்களுக்கு நடைபெற்றால் தசாநாதனுக்கு நல்ல பரிகாரத்தை செய்யுங்கள். தசாநாதனை நன்றாக வேலை செய்ய வைத்துவிட்டாலே போதும். எனக்கு கோச்சாரப்பலன் ஒரு சதவீதம் கூட வேலை செய்வதில்லை. தசாநாதன் நன்றாக வேலை செய்கிறது. 

சொந்த அனுபவத்தில் கூட என்னுடைய தொழில் நண்பர்களுக்கு கோச்சாரப்பலனை வேலை செய்யாமல் செய்துவிடுவது உண்டு. கோச்சாரப்பலன் வேலை செய்தால் ஒருவரால் ஒரு தொழிலை நடத்தவே முடியாமல் போய்விடும். குடும்பத்திலும் பல பிரச்சினையை கிளப்பிவிட்டுவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, July 3, 2015

சனி தசா பலன்கள்


ணக்கம்!
          துலா இராசியில் சனிக்கிரகம் அமர்ந்து தன்னுடைய தசாவை நடத்தினால் எப்படி பலன் இருக்கும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம். உச்ச வீட்டில் சனி இருந்து தசாவை நடத்துவதால் பெரும்பாலும் நற்பலன்களை வழங்குவார்.

பெரும்பாலும் சனி தசா நடக்கும்பொழுது இருந்த இடத்தை விட்டு வெளி இடங்களுக்கு செல்ல வைக்கும். ஒரு ஊரில் இருந்து அடுத்த ஊரில் வாழவைக்கும். ஒரு சிலருக்கு நாடு கடத்த வைக்கும்.

துலா ராசியில் இருந்து சனி தசா நடத்தும்பொழுது நல்ல வருமானம், பிறர்களால் மதிக்கப்படுவது, பெரிய பதவி வாய்ப்பு, நிலங்களை வாங்குவது போன்ற நல்ல விசயங்களை செய்ய வைப்பார்.

வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை எல்லாம் இந்த தசாவில் பெறவைப்பார் , நேர்மையான வழியில் சம்பாதிக்க வைப்பார். உச்ச வீட்டில் சனி இருந்து தசாவை நடத்துவதால் தசா முழுமையும் யோகத்தை வாரி வழங்குவார்.

துலாத்தில் சனி இருந்து தசாவை நடத்தும்பொழுது பெரும்பாலும் நல்லதையே தரும். சனியின் பகை கிரகங்களின் சேர்கை அல்லது பார்வை பட்டால் மட்டும் பலன்கள் குறைவதற்க்கு வாய்ப்பு இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு