Followers

Wednesday, October 30, 2013

பண்டிகையில் பிறர்க்கு உதவுவோம்.


வணக்கம் நண்பர்களே!
                    பண்டிகை காலம் இது. அனைவரும் சந்தோஷத்தோடு இருப்பீர்கள். இந்த சந்தோஷமான நேரத்தில் உங்களின் கர்மவினை குறைத்துக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கின்றது. 

நாம் இப்பிறவி எடுத்ததே நமது கர்மவினையை குறைப்பதற்க்கு தான். இந்து மதத்தில் ஏகாப்பட்ட பண்டிகை வைத்ததன் நோக்கமும் இதற்கு மட்டுமே. பண்டிகை வந்தால் கண்டிப்பாக ஏழைக்கு உதவி செய்வார்கள் என்ற நோக்கத்தில் பண்டிகையை வைத்திருப்பார்கள். பண்டிகை வைத்ததில் உள்ள அர்த்தத்திற்க்காகவது நாம் ஏழைக்கு உதவவேண்டும்.

பண்டிகை நேரத்தில் நாம் சந்தோஷமாக இருந்தால் மட்டும் போதாது நம்மை சுற்றிஇருக்கும் ஏழை மனிதர்களையும் நாம் சந்தோஷமாக வைத்திருக்கவேண்டும்.உங்களை சுற்றி இருக்கும் ஏழைக்களுக்கு உதவுங்கள். உங்களால் முடிந்ததை செய்துக்கொடுங்கள். இது உதவது கூட உங்களின் சுயநலத்திற்க்காக மட்டுமே. அந்த மக்கள் சந்தோஷப்படும்பொழுது உங்களின் கர்மவினை குறைக்கிறது.

கர்மவினை குறைந்தால் உங்களுக்கு நல்லது நடக்கும். ஏழைக்கு கொடுக்கும்பொழுது நமது வாழ்க்கையின் தரம் உயரும்.நீங்களே நினைக்கலாம் நாமே இன்னமும் உயரவில்லை எப்படி பிறர்க்கு உதவமுடியும் என்று தோன்றும். நம்மிடம் பத்து ரூபாய் இருந்தால் போதும் அதில் இருந்து ஒரு ரூபாய் பிறர்க்கு கொடுக்கலாம். இதுவே மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

காயத்ரி மந்திரப்பயிற்சி


ணக்கம் ண்பர்களே!
                    நமது ஜாதக கதம்பம் வழியாக ஆன்மீகத்தை கற்றும் தரும் ஒரு  பயிற்சி தான் காயத்ரி மந்திர பயிற்சி. காயத்ரி மந்திர பயிற்சியை வரும் 6.11.2013 அன்று முதல் தொடங்கலாம். தீபாவளி முடிந்த பிறகு வரும் நாளை பார்த்து சொல்லியுள்ளேன்.

அன்றைய தேதியில் இருந்து பெளர்ணமி முடிய நீங்கள் இந்த பயிற்சியை தொடங்கலாம். நாம் பிறந்து இது வரை ஒரு ஆன்மீகப்பயிற்சியையும் செய்யாமல் இருந்து வந்தால் நாம் பிறந்தர்க்கே அர்த்தம் இல்லை. இது ஒரு சிறிய பயிற்சி இதனையாவது நீங்கள் செய்யுங்கள்.

பல பேர் காயத்ரி மந்திர பயிற்சி என்றவுடன் பயந்துவிடுகிறார்கள். எதற்க்காக பயப்படுகிறார்கள் ஆன்மீகம் என்று போனால் இல்லறத்தில் இருந்துக்கொண்டு செய்யும்பொழுது பிரச்சினை வந்துவிடும் என்றும் நினைக்கிறார்கள். இல்லறத்தில் இருப்பவர்களுக்கு தான் ஆன்மீகம் தேவைப்படும்.

எந்த ஒரு பயமும் தேவையில்லை. நீங்கள் எப்பொழுதும் இருப்பது போல் இருந்துக்கொள்ளலாம். என்ன ஒரு கூடுதல் பயன் என்றால் இறைச்சக்தி நம்மிடம் இருக்கும்பொழுது நமக்கு வரும் பிரச்சினையை சமாளிக்கும் ஆற்றல் உருவாகும் அவ்வளவு தான் வேறு ஒன்றும் கிடையாது.

விபரங்களை தெரிந்துக்கொள்ள உங்களுக்கு பிடித்த மந்திரத்தை எடுத்துக்கொண்டு என்னை தொடர்புக்கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான வழிமுறையை சொல்லிதருகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Tuesday, October 29, 2013

அம்மன் தரிசனம்


வணக்கம் நண்பர்களே!
                     நேற்று இரவில் இருந்து வக்கிரகாளி அம்மனை பார்க்கவேண்டும் என்று மனதில் ஒரு ஈர்ப்பு இருந்துக்கொண்டே இருந்தது. காலையில் எழுந்தவுடன் நேராக கிளம்பி பாண்டிச்சேரி சென்று அங்கிருந்து நேராக திருவக்கரை சென்றேன்.

காலையிலேயே அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது அதன் பிறகு அலங்காரம் செய்து சரியாக 12 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. சரி இதனை பார்க்கதான் என்னை அழைத்திருக்கும் என்று எண்ணி அனைத்தையும் பார்த்துவிட்டு அனைவருக்கும் சேர்த்து வேண்டிக்கொண்டேன். உங்களுக்கும் தாங்க. அம்மனை அப்படியே பாரத்துக்கொண்டே இருக்கலாம். என்ன ஒரு சக்தி வெளிப்படுகிறது! என்ன அழகு! 

பண்டிகை காலங்களில் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் கூடுதலாக அம்மனும் உங்களுக்கு அருளை வழங்கினால் கூடுதல் சிறப்பு அல்லவா.அந்த அருள் அனைவருக்கும் கிடைக்க தான் கோவில் சென்று வழிப்பட்டு வந்தேன்.மேலே உள்ள போட்டோவை கொஞ்சநேரம் பாருங்கள். உங்களின் மனதில் அப்படி ஒரு இன்பம் நிலவும்.

பல நண்பர்கள் தீபாவளி அன்று நமது அம்மனுக்கு பூஜை என்று நினைத்துக்கொண்டு கேட்டார்கள். தீபாவளிக்கு பிறகு தான் பூஜை செய்வதாக திட்டமிட்டுள்ளேன். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Monday, October 28, 2013

இரு குலதெய்வம்


வணக்கம் நண்பர்களே!
                    நமது பதிவில் குலதெய்வவழிப்பாட்டைப்பற்றி சொல்லி கொஞ்சம் நாள் சென்று விட்டது ஒரு நண்பரால் அது மீண்டும் இன்று நினைப்பை ஏற்படுத்தியது. அவருக்கு சொன்ன அந்த பதிலை உங்களுக்கு சொல்லுகிறேன்.

நண்பர் கேட்டுருந்தார் நாங்கள் இதுவரை ஒரு தெய்வத்தை வணங்கிக்கொண்டு இருந்தோம் ஆனால் எங்களின் உறவினர்கள் அது உங்களின் குலதெய்வம் கிடையாது. வேறு ஒரு தெய்வம் தான் குலதெய்வம் என்று சொன்னார். நாங்கள் எதனை வணங்குவது என்று கேட்டுருந்தார். 

நண்பரின் குடும்பத்திற்க்கு நடந்தது மாதிரி பலருக்கு நடைபெற்று இருக்கிறது. இரண்டையும் வணங்கி வரலாம். ஏன் என்றால் ஒரு தெய்வத்தை நீங்கள் வணங்கிக்கொண்டு வருகின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அது உங்களை காத்துக்கொண்டு தான் இருக்கும். திடீர் என புதியதாக ஒரு தெய்வம் என்று நீங்கள் உடனே புதிய தெய்வத்திடம் சென்றால் ஏற்கனவே இருந்த தெய்வம் கோபம் கொண்டு உங்களுக்கு ஏதாவது செய்வதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது அதனால் இரண்டு தெய்வத்தையும் வணங்கிவாருங்கள்.

உங்களுக்கு பிறகு வேண்டும் என்றால் படிப்படியாக அந்த பழைய தெய்வத்தின் வழிப்பாட்டை நீங்கள் குறைத்துக்கொள்ளலாம். இதிலும் அந்த தெய்வத்திற்க்கு உங்களை விட்டால் யாரும் பூஜை செய்வதில்லை என்றால் உங்களின் குடும்பமே அதனை எடு்த்து செய்துவருவது நல்லது.

நீங்கள் கும்பிடும் பழைய தெய்வம் நன்றாக உங்களுக்கு செய்யும் பட்சத்தில் அதனை உங்களின் குடும்பமே பின்பற்றிவருவது நல்லது. இரண்டு குலதெயவத்தை இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் வணங்கிவருவது தப்பில்லை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ஆன்மீக அனுபவங்கள் 128


ணக்கம் ண்பர்களே!
                    எனது நினைப்பு எங்கு இருக்கின்றதோ அங்கு தான் அம்மன் வாசம் செய்யும் இடமாக இருக்கும். நான் எங்கு அடிக்கடி செல்கி்ன்றனோ அங்கு அம்மனின் பார்வை அதிகமாக விழும். இதனால் தான் நான் அடிக்கடி பல இடங்களுக்கு விசிட் செய்வது எல்லாம் உண்டு.  அடையார் மற்றும் கொட்டிவாக்கம் இருக்கும் நமது நண்பர்கள் என்னை விடாமல் பிடித்துக்கொண்டு இருப்பது இந்த காரணத்தால் மட்டுமே. 

நான் அங்கு செல்வதால் அங்கு அம்மனின் வாசம் இருக்கும்பொழுது அவர்களுக்கு பிரச்சினை வராது. அதனாலேயே அந்த நண்பர்கள் விடுவதில்லை. இப்பொழுது தான் பல இடங்களுக்கு நான் சென்று வந்துக்கொண்டு இருக்கின்றேன். நான் சென்ற இடங்கள் நன்மை பெறுவதும் இந்த காரணத்தால் மட்டுமே.

இப்பொழுது என்னிடம் வரும் நண்பர்கள் எல்லாம் ஏதாவது பிரச்சினை என்றால் எனக்கு உடனே போன் செய்வார்கள். நான் உடனே அம்மனை நினைத்துவிட்டு சம்பந்தப்பட்ட நபரை நினைக்கும்பொழுது அவர்களிடம் அம்மன சென்றுவிடும். அப்புறம் அவர்களின் பிரச்சினை தீரும்.இப்படி தான் பிரச்சினையை தற்பொழுது தீர்த்துக்கொண்டிருக்கிறேன்.

இதனை செய்வதற்க்கு என்று தகுந்த பயிற்சியை நாம் எடுக்கவேண்டும் அப்பொழுது மட்டுமே நடைபெறும். இதனை செய்வதற்க்கு அவ்வளவு பாடு பட்டு இதனை கண்டுபிடித்து செய்துக்கொண்டிருக்கிறேன். 

ஒரு அம்மனை நாம் நினைக்கும் இடத்திற்க்கு அனுப்பவேண்டும் என்றால் அவ்வளவு எளிது கிடையாது. நாம் நினைப்பது போல அது நடக்கவேண்டும். நாம் சொல்லுவதை அது செய்யவேண்டும். நான் சொல்லுவதை அனைத்தையும் அது கேட்கும்படி செய்து வைக்கும்பொழுது மட்டுமே காரியம் வெற்றி பெறும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

நீங்களும் பணக்காரர் ஆகலாம் !


ணக்கம் ண்பர்களே!
                    பல பேர் பிறந்த நாள் கஷ்டத்திலேயே இருந்துக்கொண்டு வந்திருப்பார்கள். இப்பொழுதும் அதே கஷ்டத்தை அனுபவித்து வருவார்கள். இவர்களுக்கு ஜாதகத்தில் அப்படிப்பட்ட நிலை இருக்கும். சரி கஷ்டப்பட்டுக்கொண்டே தான் இவர்கள் கடைசி வரை வாழவேண்டும் என்றால் கண்டிப்பாக இல்லை. 

எப்படிப்பட்ட ஜாதகமாக இருந்தாலும் அந்த ஜாதகத்தில் ஏதாவது ஒரு கிரகமாவது நன்மையளிக்கும். அதனை கண்டுபிடித்து அதனை சரிசெய்யவேண்டும். இந்த வழி அனைவருக்கும் சரிப்பட்டு வரவில்லை என்றால் என்ன செய்யவேண்டும் என்றால் ஆன்மீகவாதியாக மாறிவிடுவது நல்லது. 

ஆன்மீகவாதியாக வேண்டும் என்றால் நீங்கள் பெரிய அளவில் ஆன்மீகவாதியாக மாறவேண்டும் என்பது கிடையாது. தினமும் வீட்டில் பூஜை செய்வது. பூஜை அறையில் அமர்ந்து ஒரு பத்து நிமிடம் அமர்ந்து கடவுளிடம் உங்களின் கோரிக்கையை வைத்தாலே போதும் அது நடந்துவிடும். உங்களுக்கு செல்வம் வரவேண்டிய காலத்தில் கொட்டிக்கொடுத்துவிடும். கடவுள் செல்வத்தை தரவேண்டும் என்று மட்டும் நினைப்பார். எவ்வளவு செல்வம் வேண்டும் என்பதை நமது வழிபாடு தான் தீர்மானிக்கும்.

நீங்கள் கடவுளிடம் வேண்டும்பொழுது கூட அது உடனே நடைபெறவில்லை என்றாலும் பரவாயில்லை வழிப்பாட்டை நிறுத்தகூடாது. நீங்கள் செய்யும் வழிபாடு உங்களுக்கு செல்வம் வரும் நேரத்தில் கொட்டிக்கொடுத்துவிடும். நமக்கு வரும் பணம் லட்சமா அல்லது கோடி என்று தீர்மானிப்பது உங்களின் வழிப்பாட்டில் தான் உள்ளது.

பல பணக்காரர்களை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் பூஜை செய்துக்கொண்டே இருப்பார்கள். எதற்காக செய்கிறார்கள் என்று கூட தெரியாது ஆனால் பூஜை அடிக்கடி நடைபெற்றுக்கொண்டு இருக்கும். இந்த பூஜை தான் அவர்களை தாங்கிக்கொண்டிருக்கும் தூண்கள். ஒவ்வொரு பணக்காரர்களுக்கும் பின்னாடி ஆன்மீகவாதி கண்டிப்பாக இருப்பார்கள். அவர்கள் தான் அவர்களின் தலைவிதியை நிர்ணிப்பவர்களாக இருக்கிறார்கள்.

நீங்களும் பணக்காரர்களாக ஆகவேண்டும் என்றால் உடனே நான் சொன்ன இந்த எளிய முறையை பின்பற்றினாலே போதும்.நீங்களும் பணக்காரர் தான்.உடனே நீங்கள் ஆரம்பித்துவிடுவது நல்லது. திராவிடம் எல்லாம் பேசாமல் உடனே ஆரம்பிப்பது நல்லது. என்ன செய்வீர்களா?

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ராகு தசா பலன்கள் பகுதி 62


வணக்கம் நண்பர்களே!
                    ராகு தசாவில் ஒரு உதாரண ஜாதகத்தோடு பார்க்கலாம். இவர் ஒரு ஆணிண் ஜாதகம். இவர் மகர லக்கினத்தை உடையவர். ராசி கன்னி். சூரிய தசாவில் பிறந்திருக்கிறார். 

அனைத்து கிரகங்களுகம் ராகு கேதுக்குள் இருக்கின்றது. காலசர்ப்ப தோஷம் என்பது அனைவருக்கும் தெரிந்து இருக்கும். நாம் என்ன நினைத்துக்கொண்டு இருப்போம் ராகு கேது தோஷம் இருக்கின்றது அதாவது காலசர்ப்ப தோஷம் இருக்கின்றது முப்பத்தைந்து வயதிற்க்கு பிறகு தான் இவருக்கு நல்லது நடைபெறும் அது வரை இவருக்கு பிரச்சினையான வாழக்கை வாழ்ந்துக்கொண்டிருப்பார் என்று நினைத்திருப்போம் ஆனால் நடந்தது வேறு. 

இவருக்கு ராகு தசா 2000 வருடம் ஆரம்பித்தது. ராகு தசா ஆரம்பித்த நாட்களில் இருந்து இவருக்கு மிகப்பெரிய யோகமாக அது மாறியாது. இவருடைய ஜாதகத்தை பாருங்கள் ஆறாவது வீட்டில் ராகு அமர்ந்திருக்கிறது. ராகு சொந்த நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறார். நாம் நினைப்பது ஆறாவது வீட்டு தசா என்பது மிகப்பெரிய பிரச்சினை ஏற்படுத்திவிடும். இவர் வாழ்க்கையில் கஷ்டப்படபோகின்றார் என்று நினைத்துக்கொண்டிருப்போம். இவருக்கு ராகு கொட்டிக்கொடுத்தார் என்று தான் சொல்லவேண்டும்.

காலசர்ப்பதோஷம் ஏற்பட்டாலே இடையில் ராகுவோ அல்லது கேது உடைய தசா வரும்பொழுது அவர்களுக்கு காலசர்ப்ப தோஷம் பெரும்பாலும் அடிப்பட்டுவிடும். அந்த தசாவே அவர்களுக்கு மிகப்பெரிய யோகத்தை தந்துவிட்டு தான் சொல்லும்.

இவருக்கு ராகு தசா ஆரம்பித்தவுடன் நல்ல வாழ்க்கையை இவருக்கு கொடுத்துவிட்டது. இவர் இப்பொழுது அரசியல்வாதியாக இருக்கிறார்.ராகு தசாவில் தான் அரசியல்வாதியாக மாறினார். இளமையிலேயே அரசியல் மீது ஈடுபட்டோடு இருந்து அவர் இருக்கும் பகுதியில் அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார்.

பொதுவாக எந்த தசாவை எடுத்தாலும் வரும் புத்திக்கு தகுந்தவாறு பலனை தரும் என்று சொல்லுவோம் ஆனால் இவருக்கு அனைத்து புத்தியும் நல்லதை செய்தது. அதற்க்கு காரணம் காலசர்ப்பதோஷமும் இருக்கலாம். ராகு சொந்த நட்சத்திரத்தில் அமர்ந்து செல்வதாகவும் இருக்கலாம். புத்திகளை விட தசாநாதன் பலம் பெற்று தசாவை நடத்துவதால் வந்த பலன் இது.

என்ன ஒரு கெட்டதை செய்கிறார் என்றால் மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். ராகு பலன் பெற்றதால் ஒரு சில தவறான நடவடிக்கை இருந்திருக்ககூடும்.பொதுவாக ஆறாவது வீட்டில் ராகு கேது இருந்தால் அந்த நபர்கள் அதிகமாக மதுவுககு அடிமையாகிவிடுவார்கள். அதுவும் நீர் ராசியாக இருந்தால் அதிகமாக விரும்புவார்கள்.

இவருக்கு வந்த ராகு தசா இவரை நல்லவிதமான முன்னேற்றத்தை பெற்றுதந்துக்கொண்டிருக்கிறது. வரும் புத்தியும் இவருக்கு நல்லதை செய்யும். 


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Sunday, October 27, 2013

அம்மனின் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                    நமது அம்மனிடம் வேண்டுதல் வைத்து அது நடத்திக்கொடுத்து இருக்கும். அப்படி நடத்திக்கொடுத்திருப்பவர்கள் தங்களது காணிக்கையை எனது வங்கி கணக்கில் செலுத்தலாம். வரும் தீபாவளிக்கு பூஜை செய்யலாம் என்று கடந்த மாதம் சொல்லிருந்தேன ஆனால் பல காரணங்களால் அதனை மாற்றியமைத்து இருக்கிறேன். அடுத்த மாதம் பத்து தேதிக்குள் நடத்தப்படும். தீபாவளி முடிந்து முதல் வாரத்தில் வைக்கிறேன். ஏன் என்றால் சில நண்பர்கள் பூஜைக்கு வருகிறேன் என்று சொன்னதால் மாற்றியமைத்துள்ளேன்.

நீங்கள் நல்ல நிலைமைக்கு வந்தால் கோவிலுக்கு வாருங்கள் சும்மா கடன் வாங்கிக்கொண்டு எல்லாம் வராதீர்கள். வேண்டுதலை வையுங்கள். அம்மன் உங்களின் வாழ்க்கையை மாற்றியமைத்து தரும் அதன் பிறகு கோவிலுக்கு வரலாம்.

ஏதோ சம்பாதிக்க வேண்டும் என்றால் ஒரு லட்சம் சம்பாதித்துவிட்டு நான் சம்பாதித்துவிட்டேன் என்று வரவேண்டாம். சொந்த காரில் வரவேண்டும் என்று நினையுங்கள். அது தான் வளர்ச்சியின் அடையாளம்.அம்மன் உங்களுக்கு அந்தளவுக்கு உதவி செய்யும்.

வேண்டுதல் வைத்து நடந்து முடிந்தவர்கள் உங்களால் முடிந்த தொகையை அனுப்புங்கள். பணம் அனுப்பமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை. பூஜை தேதியை விரைவில் அறிவிக்கிறேன். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

விதியின் விளையாட்டு


வணக்கம் நண்பர்களே!
                    ஒருத்தருக்கு நாம் நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து தான் நினைக்கிறோம் ஆனால் அவர்களின் விதி அவர்களை தடுக்கிறது. என்னிடம் வந்து சார் அப்படி பிரச்சினை இப்படி பிரச்சினை என்று முதல் தடவை சொல்லிக்கொண்டு இருப்பார்கள். சரி இப்பொழுது தானே முதலில் வந்துள்ளார்கள் முதலில் அவர்களே ஏதாவது பரிகாரம் செய்யட்டும் என்று பரிகாரத்தை சொல்லி அனுப்புவது வாடிக்கை.

அவர்கள் பரிகாரம் செய்கிறார்களா என்று பார்த்தால் அதனையும் செய்வதில்லை சரி மறுபடியும் நம்மை தேடி வரட்டும் அவர்களுக்கு நாமே ஏதாவது நன்மை செய்துவிடுவோம் என்று நினைத்துக்கொண்டு இருப்பேன். ஆனால் அவர்கள் வருவதில்லை.  

அவர்களின் விதி அப்படி அவர்களை திசை திருப்புகிறது. இப்பொழுது அதிகப்பட்சமான பேருக்கு சோதிடம் தெரிகிறது. வரும் பிரச்சினையை தீர்ப்பதற்க்கு வழி தெரியவில்லை. சரி பிரச்சினை தீர்க்கும் சோதிடரையாவது நீங்கள் கையில் வைத்திருக்கவேண்டும். உங்களுக்கு சரியாக செய்யக்கூடிய சோதிடர்களை நீங்கள் மாதம் ஒருமுறையாவது தொடர்புக்கொண்டு உங்களின் சந்தேகங்களை தீர்த்துக்கொள்வது நல்லது. 

அவர்களிடம் நீங்கள் பணம்கட்டி தான் பார்க்கவேண்டும் என்பது கிடையாது. சும்மா ஒரு போன் போட்டு பேசினாலே போதும் அவர்களே உங்களுக்கு கெடுதல் நேரம் இருந்தால் சொல்லிவிடுவார்கள்.

சோதிடர்களிடம் உள்ள பழக்கம் அவர்களின் வாய் சும்மா இருக்காது நீங்கள் இந்த ராசியா இந்த மாதம் புதன் சரியில்லை. சந்திரன் சரியில்லை என்று சொல்லிவிடுவார்கள். இந்த பரிகாரம் செய்யுங்கள் என்று சொல்லிவிடுவார்கள்.

உங்களை காப்பாற்றுவதற்க்கு ஆன்மீகவாதி தயாராக தான் இருப்பார்கள். விதியின் விளையாட்டால் அவர்களிடம் நீங்கள் செல்வதை விரும்பமாட்டீர்கள். எப்படியும் நான் முன்னேற்றம் அடைந்தே தீரவேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக எவ்வளவு இன்னல் வந்தாலும் சந்தித்தே தீருவேன் என்று முடிவோடு தொடர்பை வைத்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Saturday, October 26, 2013

முன்னுரிமை


வணக்கம் நண்பர்களே!
                    நான் கற்ற அனைத்து விசயங்களையும் அதன் பயனாளிகளாக முதலில் இருப்பது ஜாதககதம்பம் வழியாக வரும் நபர்களையே தான் முதலில் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன்.

ஜாதககதம்பம் வழியாக அது நடைபெறும்பொழுது ஒரு பதிவை நாம் படித்தோம் அந்த பதிவு வழியாக நாம் நல்ல பயனைபெற்றோம் என்று இருக்கவேண்டும் என்பதற்க்காக உங்களுக்கு  இதனை நான் செய்துக்கொண்டு இருக்கிறேன்.

தொழில்களுக்கு உதவது கூட அந்த எண்ணத்தில் மட்டுமே. தொழில் உதவுவது வேண்டாம் என்று நினைத்திருந்தேன். நமது நேரிடையான வாடிக்கையாளர் மட்டும் போதும் என்று இருந்தேன். சரி இதன் வழியாக நல்லவர்களும் வந்து பயனடைவார்கள் என்று அந்த அறிவிப்பையம் தந்தேன். இன்று நல்ல நண்பர்கள் அதன் வழியாகவும் வருகின்றனர். அவர்களும் பயன் அடைந்து வருகின்றனர்.

காயத்ரி மந்திரத்தை தவிர வேறு எந்த ஆன்மீகப்பயிற்சியும் தற்பொழுது தருவதற்க்கு வாய்ப்பில்லை என்பதால் வேறு எதுவும் தரவில்லை. வரும் காலங்களில் பார்க்கலாம்.

எப்படி எல்லாம் வரும் நண்பர்களுக்கு உதவி செய்யலாம் என்று பல விதத்திலும் யோசித்துக்கொண்டு இருக்கின்றேன். உங்களுக்கு கண்டிப்பாக ஜாதககதம்பம் ஒரு நல்லவழியை ஏற்படுத்திக்கொடுக்கும்.

ஒரு சில நண்பர்கள் ஏதோ ஒரு பெயரை சொல்லி அந்த பயிற்சியை கற்றுதருவீர்களா என கேட்பார்கள். அவர்களுக்கு சொல்லிக்கொள்வது யாரையும் நான் சொல்லுவதில்லை. பயிற்சி என்று வைத்தால் ஜாதககதம்பத்தில் முதலில் வெளிவரும்.தேவையில்லாமல் கேட்காதீர்கள்.

தொடர்ந்து வரும் நண்பர்களுக்கு பெரிய எதிர்காலத்தை ஜாதககதம்பம் அமைத்துக்கொடுக்கும். அம்மனின் அருளை நீங்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

தீபம் ஏற்றும் முறை


வணக்கம் நண்பர்களே!
                    விளக்கு ஏற்றும் முறையைப்பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்து இருந்தேன். பலபேர்கள் தவறாக விளக்கை ஏற்றுக்கின்றனர். இதனை படித்தபின்பு இனிமேல் இப்படி ஏற்றுங்கள். 

மேலே உள்ள படத்தை பாருங்கள். அம்மன் உங்களை பார்த்துக்கொண்டு இருக்கின்றது. கீழே உள்ள விளக்கு திரி உங்களை பார்த்துக்கொண்டு எரிகின்றது. இப்படி தான் விளக்கை நீங்கள் ஏற்றவேண்டும். தீபஒளியில் அம்மனை நாம் தரிசனம் செய்கின்றோம் என்று அர்த்தம். 

அம்மனும் உங்களை பார்க்கவேண்டும். தீபம் எரியும் திரியும் உங்களை பார்த்துக்கொண்டு இருப்பது போல் வைக்கவேண்டும்.

மாறாக நம்மை அம்மன் தரிசனம் செய்வது போல் வைத்துவிடுகின்றனர். விளக்கு திரி எரிவது அம்மனை பார்த்துக்கொண்டு இருப்பது போல் விளக்கை ஏற்றி வைக்கின்றனர்.அது தவறு.இனி சரியான முறையில் விளக்கை ஏற்றி வழிபட்டு வாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

பகட்டு வாழ்க்கை


வணக்கம் நண்பர்களே!
                     ஒரு சில பணக்காரர்கள் நன்றாக வாழ்ந்து வரும்பொழுது எதிர்பாராதவிதமாக கீழே சென்று விடுகிறார்கள். கிரகநிலைகளின் கோளாறுகளால் கீழே சென்றுவிடுவது உண்டு. அப்படி கீழே செல்பவர்கள் தாங்கள் வாழ்ந்த பகட்டான வாழ்க்கையை உதறி தள்ளமுடியாமல் கடன் வாங்கியாவது வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர்.

கடன் வாங்கி எத்தனை நாளைக்கு தான் குடும்பம் நடத்துவது மேலும் மேலும் கடன்கள் தான் வரும். அதுவே மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும்.  ஒரளவுக்கு மேல் கடனை வாங்ககூடாது. இது பக்கம் இருக்கட்டும்.

எப்படி பணம் இருக்கின்றபொழுது வாழ்ந்தோமே அதைப்போல் பணம் இல்லாதபொழுதும் வாழ்வது மிகப்பெரிய தவறு. சும்மானாலும் பகட்டாக வாழ்வது மனிதர்களை மதிக்காமல் இருப்பது. உண்மையில் மனிதர்களை மதிக்காமல் வாழ்ந்ததால் தான் உங்களை கீழே தள்ளி ஆண்டவன் சோதனை செய்கிறான். மீண்டும் மீண்டும அதே தவறை செய்வது கண்டிப்பாக இந்த ஜென்மத்தில் நீங்கள் மறுபடியும் அந்த நிலைக்கு வருவது கடினம்.

நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அவர்கள் செய்யும் ஆடம்பரம் மற்றும் பேச்சு அடுத்தவர்களுக்கு எரிச்சலைடையவது போல் இருக்கும்.நான் அவர்களின் வீட்டிற்க்கு செல்லும்பொழுது கூட என்னிடமே அவ்வாறு சிலபேர் பேசுகிறார்கள். உங்களின் பிரச்சினைக்கு தீர்வு சொல்லுவதற்க்காக மட்டுமே நான் வந்திருக்கிறேன். நீங்கள் இப்படி பேசினால் நீங்கள் நன்றாக வாழ்கிறிர்கள் என்று நான் திருப்பிவரவேண்டியது தான். உங்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது.

உங்களின் உண்மை நிலை என்ன என்று தெளிவாக விளக்கிவிடுவது நல்லது. உங்களின் ஜாதகத்தை பார்த்தால் தெரிந்துவிடும் இருந்தும் நீங்கள் உங்களைப்பற்றி சொல்லிவிட்டால் உங்களுக்கு என்னால் முடிந்த உதவி கிடைக்கும். 

வாழ்வு மேலே கீழே என்று சென்றுக்கொண்டு தான் இருக்கும். அதனைப்பற்றி கவலைப்படமால் இருக்கின்றவரை சந்தோஷத்தோடு வாழ்வது நல்லது. மனிதர்களை மனிதர்களாகவோ பாருங்கள். வீணான பகட்டு வாழ்க்கை வேண்டாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ஆன்மீக அனுபவங்கள் 127


வணக்கம் நண்பர்களே!
                   திருப்பூரில் என்னை சந்தித்த நண்பர்களிடம் சொன்ன ஒரு விசயத்தை உங்களிடம் சொல்லவேண்டும் என்று நினைத்தேன். அதனைப்பற்றி இப்பொழுது பார்க்கலாம். திருமணம் முடித்தவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபடமுடியாதா உயர்ந்தநிலைககு செல்லமுடியாத என்று தான் பேச்சு நடைபெற்றது. 

திருமணம் முடிந்தவர்களால் கண்டிப்பாக ஆன்மீகத்தில் உயர்ந்த நிலைக்கு செல்லமுடியும். சந்நியாசிகள் மட்டும் தான் செல்லமுடியும் என்று சொல்லுவது எல்லாம் வீண். சந்நியாசிகள் சொல்லுவது கர்மம் பிடிக்கும் என்று சொல்லுவார்கள். அவர்கள் சொல்லும் காரணம் அது மட்டுமே.

எத்தனையோ பேர் திருமணம் முடித்தவர்கள் உயர்ந்த நிலைக்கு சென்று இருக்கின்றனர். புத்தர், முகமது போன்றவர்கள் இருக்கின்றனர். இவர்கள் எப்படி உயர்ந்த நிலைக்கு சென்றனர் என்று நீங்கள் யோசிப்பது கிடையாது. பல பேர் வெளியில் தெரியாமல் இருக்கின்றனர். நீங்கள் திருமணம் செய்தவுடன் நமக்கும் ஆனமீகத்திற்க்கும் ஒற்றுவராது என்று நீங்களாவே சொல்லிக்கொள்கிறீர்களே தவிர வேறு ஒன்றும் கிடையாது.

திருமணம் முடிந்தவுடன் பல வேலைகள் இருக்கும் அதில் எங்கே நாம் ஆன்மீகத்திற்க்கு செல்வது என்ற நினைப்பு தான் உங்களை ஆன்மீகத்தில் செல்லாமல் இருக்கின்றது. திருமணம் முடித்தவர்களுக்கு தான் ஆன்மீகம் தேவை அவர்கள் தான் அதிகப்பட்சமான சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

திருமணம் முடிந்துவிட்டது நாம் ஆன்மீகத்திற்க்கு லாயக்கற்றவர்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்காமல் உடனே ஆன்மீகவாழ்க்கைக்கு தங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

தாரதோஷம்


வணக்கம் நண்பர்களே!
                    இப்பொழுது ஒரு நண்பர் கேட்டார் சார் ஒரு சில ஜாதகங்களில் தாரதோஷம் என்று சொல்லுகிறார்களே அவர்களுக்கு திருமணம் நடைபெறவே நடைபெறாத என்று கேட்டார்.

தாரதோஷத்திற்க்கு முதலாவதாக செவ்வாய் கிரகத்தை சொன்னாலும் ஏழாவது வீடு பாதிப்படையும்பொழுது இந்த தோஷம் ஏற்படுகிறது. இப்படி பாதிப்படையும்பொழுது நமக்கு வரும் துணைவர் இறக்கநேரிடுவர் அல்லது அவர் இருந்தும் இல்லாமல் இருப்பது போல் தான் இருக்கும். நமக்கு வரும் துணைவர் நமது வாழ்வில் உயர்ந்த நிலைக்கு நம்மை இழுத்து செல்வார் என்று எதிர்பார்ப்பார்கள். ஏன் என்றால் அவர்களின் ஜாதகம் நன்றாக இருக்கும்பொழுது நமக்கு அதிர்ஷ்டம் வரும் என்ற நம்பிக்கை.

ஏழாவது வீடு பாதிப்படையும்பொழுது நமக்கு வரும் துணைவர் நமக்கு பிரச்சினையாகிவிடுவார். தாரதோஷம் ஏற்பட்டதால் அவர்களின் வாழ்க்கை பாதிப்படைகிறது. அவர்களுக்கு விடிவு என்ன என்று கேட்பார்கள். அனைவருக்கும் திருமணம் நடைபெறும். என்ன இளமையில் திருமணம் நடைபெறாமல் முப்பத்தி ஐந்து வயதில் திருமணம் நடைபெறும்.

இளமையில் கூட திருமணம் நடைபெற வைக்கமுடியும் தாரதோஷம் ஏற்பட்டவர்கள் நல்ல வழிபாடுகளை பின்பற்ற வேண்டும். ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இருக்கும்பொழுது இளமைகாலத்தில் திருமணம் நடைபெறும். பரிகாரத்தை செய்யவேண்டும். தமிழர்கள் திராவிடத்தை ஆதரிப்பதால் பரிகாரம் எல்லாம் அவ்வளவு எளிதில் நம்பமாட்டார்கள். நம்பி செய்யும்பொழுது உங்களுக்கு எளிதில் திருமணம் நடைபெறும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ராகு தசா பலன்கள் பகுதி 61


வணக்கம் நண்பர்களே!
                    ராகுதசாவை ஒரு உதாரண ஜாதகத்துடன் பார்க்கலாம். இந்த ஜாதகம் ஒரு ஆணின் ஜாதகம். இவருக்கு ராகு தசா இளமையிலேயே வந்துவிட்டது. ராகுவின் பாதிப்பு இவரின் குடும்பத்தை போட்டு தாக்கு தாக்கு என்று தாக்கியது. 

மிதுனராசியை கொண்டவர். துலாம் லக்கினத்தை உடையவர். லக்கினத்தில் நான்கு கிரகங்கள் இருக்கின்றன.எப்பொழுது ஒரு ஜாதகத்தில் மூன்று கிரகங்களுக்கு மேல் இருக்கின்றதோ அந்த ஜாதகர் பாடு பெரும் பாடாக அமையும். இவருக்கு நான்கு கிரகங்கள் அமைந்துள்ளன.குரு கிரகம் உச்சம் பெற்றாலும் அவரோடு மாந்தி கிரகம் அமைந்துள்ளது. சனிக்கிரகம் சிம்மத்தில் அமர்ந்துள்ளது.

சனிக்கிரகம் உச்சவீட்டை பார்த்தாலும் பார்க்கும் வீட்டில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் வேறு அமர்ந்துள்ளார்கள். அடுத்தது ஒன்றை நாம் கவனிக்கவேண்டும்.சுகஸ்தானம் என்னும் நான்காம் வீடு. இந்த வீடு மட்டும் நன்றாக இருந்தால் போதும். எப்படியும் அடுத்தவர்கள் கொடுத்தாவது நாம் முன்னேற்றம் அடைந்துவிடலாம். 

இந்த நான்காவது வீடு கெடும்பொழுது அனைத்து சுகத்தையும் நாம் இழந்துவிடவேண்டும்.இவருக்கு சுகஸ்தானம் கெட்டுவிட்டது என்றே சொல்லலாம்.குருவின் பார்வை இருந்தாலும் நீசவீட்டை தான் பார்க்கிறது. குரு மாந்தியோடு சேர்ந்ததால் குருவால் பலனை தரமுடியவில்லை.

நாம் பார்க்கவேண்டிய இடத்திற்க்கு வந்துவிடலாம். ராகு இந்த ஜாதகருக்கு பனிரெண்டாவது இடத்தில் அமர்ந்திருக்கார். ராகு பனிரெண்டாவது வீட்டில் அமர்நதால் என்ன நடக்கும். போகம் தூக்கம் செலவு இவற்றை காட்டும் இடத்தில் அமர்ந்திருக்கிறார். சின்ன பையன் என்பதால் போகத்திற்க்கு வேலை இல்லை. மீதி இருக்கும் அனைத்திற்க்கும் வேலையை செய்யும் என்று சொல்லலாம்.

ராகு தசாவில் அதிகமான வறுமையை குடும்பத்திற்க்கு கொடுத்துவிட்டது. செலவு அதிகமானதால் வறுமையை அதிகம் கொடுத்தது. இவரின் தந்தைக்கு உடல்நிலை பிரச்சினை என்பதால் அவரின் மருத்துவமனை செலவே அதிகம் வைத்திருக்கிறது.


இந்த பையனுக்கு ராகு தசா ஆரம்பித்ததில் இருந்து இவரின் தந்தைக்கு உடல்நிலையில் பிரச்சினை ஏற்பட்டது. ராகு தசாவில் ஒன்றைச்சொல்லவேண்டும் என்று நினைத்து இருந்தேன் மறந்துவிட்டேன் இப்பொழுது அதனை பார்க்கலாம். ஒருவருக்கு ராகு தசா நடைபெற்றால் அவருடைய தந்தை அல்லது தாயை இழக்க நேரிடும். ராகு தசா நடக்கும்பொழுத நடக்கும் நபரை தனியாக பிரித்து வைப்பது நலம். 

ராகுவே அதிகபட்சம் பிரித்து அனுப்பிவிடுவார். ஒரு சில கிரகநிலை சரியில்லை என்றால் வீட்டிலேயே தங்கவைத்துவிடுவார் அப்பொழுது தந்தை அல்லது தாயை இழக்க நேரிடும். இந்த பையனுக்கு ராகு தசாவின் சூரிய புத்தியில் தந்தை மரணம் அடைந்தார். 

உங்களுக்கு அப்பா, அம்மா இறந்து இருந்தார்கள் என்றால் உங்களின் ஜாதகத்தை எடுத்து பார்த்தால் ராகு தசா நடைபெறற காலங்களில் அது நடந்து இருக்கும். ராகு தசா நடைபெறும்பொழுது சம்பந்தப்பட்ட நபர் வெளியில் சென்றுவிடவேண்டும். குடும்பத்தை விட்டு வெளியில் சென்றுவிடவேண்டும். சிலருக்கு வெளியில் கிளம்ப தயாராக இருப்பார்கள் அந்த நேரம் பார்த்து ராகு அப்பா அல்லது அம்மாவை கொன்றுவிடும்.

கிராமங்களாக இருந்தால் உங்களின் வீட்டில் மாடு அல்லது ஆடு இவற்றை பலிவாங்கும். ராகு தசா நடைபெறும் பொழுது இப்படி நடைபெறும்.சரி நண்பர்களே அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

நம்பினால் நம்புங்கள்


ணக்கம் ண்பர்களே!
                    இன்று சனிக்கிழமை பல நண்பர்கள் ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பு செலுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். சனிக்கிழமை சனிக்கிரகத்தைப்பற்றி ஒரு செய்தியுடன் இன்றைய பதிவினை தொடங்கலாம்.

எங்களிடம் பரிகாரம் செய்ய சொல்லி ஒரு சிலர் பணத்தை கொடுத்துவிடுவார்கள். அவர்களுக்கு என்று நாங்கள் பரிகாரம் செய்துக்கொடுப்பது உண்டு. சம்பந்தப்பட்ட நபரை நாங்கள் பரிகாரம் செய்யும் இடத்திற்க்கு அழைத்துக்கொண்டு செல்வதில்லை. நாங்களே செய்து விடுவோம். அப்படி சனிக்கிரகத்திற்க்கு என்று பரிகாரம் செய்யும்பொழுது சனிக்கிரகத்திற்க்கு எதிராக இறங்கி பரிகாரம் செய்வோம்.

அவருக்கு என்ன என்ன விருப்பமாக இருக்குமோ அதற்கு எதிராக நாங்கள் கொடுத்து பரிகாரம் செய்து விடுவது உண்டு. அப்படி எதிராக பரிகாரம் செய்யும்பொழுது சனியின் மைந்தன் என்று வர்ணிப்பவரான மாந்தியை வைத்து செய்வதும் உண்டு. அது சனிக்கு எதிராக தான் அதிகப்பட்சம் நடக்கும். அப்படி செய்யும்பொழுது சனியின் பாதிப்பு குறைந்துவிடும்

என்ன செய்யும்பொழுது கொஞ்சம் எச்சரிக்கையுடன் செய்வது உண்டு. கொஞ்சம் தவறினாலும் சனிபகவான் நமக்கு பிரச்சினையை கொடுப்பார். அதாவது செய்கின்ற எங்களுக்கு பிரச்சினையை கொடுப்பார்.அதிகப்பட்சம் சூரியனை வைத்து செய்துவிடுவதும் உண்டு.

அனைத்தும் குரு எனக்கு கற்றுக்கொடுத்தது. இது எல்லாம் செய்வது என்பது அதிகம் செலவு ஆகும். என்னிடம் வரும் தொழில் உதவி பெறுபவர்களுக்கு மட்டும் நானே செய்துவிடுவது உண்டு.அப்பொழுது மட்டுமே அவர்களால் நிற்கமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Friday, October 25, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 60


வணக்கம் நண்பர்களே!
                    ராகு தசாவில் ஒன்றைச்சொல்ல மறந்துவிட்டேன். ராகுவைப் பொருத்தவரை விஷம் தான் முதலில் செலுத்தும். இரத்தத்தில் விஷத்தை கக்குவது தான் ராகுவின் முதல் வேலையாக இருக்கும். ராகு தசா வந்தாலே அலர்ஜி உடல் எங்கு வந்துவிடும். 

நேற்று கூட ஒருவர் என்னிடம் கேட்டார். ராகுவின் புத்தியில் என்ன நடைபெறும் என்று கேட்டிருந்தார். எந்த தசா நடைபெற்றாலும் ராகு புத்தி நடைபெறும்பொழுது ராகு தசாவின் காரகதுவம் வந்துவிடும். ராகு தசாவில் என்ன என்ன நடைபெறுகிறதோ அத்தனையும் ராகுவின் புத்தியில் நடைபெற்றுவிடும்.

எந்த தசாவாக இருந்தாலும் ராகுவின் புத்தியில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.அப்படி கவனம் செலுத்தினால் வரும் பிரச்சினையை சமாளித்துவிடலாம்.

ராகுவின் தசாவில் வெள்ளை அணுக்களை குறைப்பதில் அதிகம் கவனம் செலுத்துவார்.வெள்ளை அணுக்களை குறைப்பதால் உடலில் எதிர்சக்தி குறைந்து நோயை ஏற்படுத்துவார். கேன்சர் போன்ற நோய்கள் வருவது கூட ராகுவால் தான் வரும்.

எந்த தசாவாக இருந்தாலும் ராகுவின் புத்தியில் மற்றும் ராகுவின் தசாவில் உடலில் அதிகம் கவனம் செலுத்துவது நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

காலபைரவர்


வணக்கம் நண்பர்களே!
                    நான் எங்கு சென்றாலும் என்னை வந்து சந்திக்கும் நண்பர்கள் ஆன்மீகத்தைப்பற்றி கேட்காமல் இருக்கமாட்டார்கள். திருப்பூரில் நமது நண்பர்கள் சந்தித்தபொழுது காலபைரவரைப்பற்றி கேட்டார்கள். அதனைப்பற்றி பல நண்பர்கள் இன்று மெயில் அனுப்பி கேட்டார்கள். பைரவரைப்பற்றி ஏற்கனவே சொல்லியுள்ளேன். மறுபடியும் கேட்கிறார்கள். சொல்லுகிறேன் படித்து பாருங்கள்.

பைரவரை கோவிலில் சென்று வழிப்படுவது மட்டுமே சிறப்பு. வீட்டில் வைத்து வழிப்படுவது தவறான ஒன்று. நீங்கள் கோவில் சென்று வழிப்பட்டாலும் பிரத்தானமாக இதனை வழிபாடு செய்ய வேண்டியதில்லை. வடக்கில் இருந்து வந்த கபால வழிபாடு தான் காலபைரவ வழிபாடு. 

ஒரு சிலர் பைரவ மந்திரத்தை அல்லது பூஜையை செய்கின்றனர். இது எல்லாம் உங்களுக்கு வேண்டாம் என்று ஏற்கனவே சொல்லியுள்ளேன். ஒருவர் பைரவ வழிப்பாடு செய்யும்பொழுது அவர்களின் குடும்பத்தில் உள்ள தலைவரை பைரவர் காவு வாங்கிவிடுவார். குடும்பத்தில் உள்ள நபர்களை தனியாக பிரிப்பதில் பைரவரின் செயல் அதிகமாக இருக்கும். நன்றாக இருக்கும் குடும்பத்தை ஏன் நீங்களே பிரிக்க உதவவேண்டும். தலைவரை காவு வாங்கிவிட்டால் குடும்பம் சிக்கலில் மாட்டிக்கொள்ளும். அப்புறம் என்ன நடக்கும் என்று நான் உங்களுக்கு சொல்லதேவையில்லை.

இதனை பலபேர்களிடம் நான் சொல்லிருந்தாலும் நீங்கள் கேட்பதில்லை. நீங்கள் நான்கு மாதங்கள் தொடர்ச்சியாக செய்தால் உங்களுக்கு பிரச்சினை வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பலர் பைரவமந்திரத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டு உள்ளனர். அடுத்தவர்களைப்பற்றி குறைச்சொல்ல கூடாது ஆனால் மக்களுக்கு ஒரு அறிவுரை மாதிரி நாம் சொல்லிவிட்டால் அவர்கள் விழிப்போடு இருப்பார்கள் என்பதால் இதனை சொல்லுகிறேன். 

நான் ஏற்கனவே ஒரு மந்திரத்தைப்பற்றி அது தவறான மந்திரம் என்று சொல்லிருந்தேன். அந்த மந்திரத்தை அவர்களே இப்பொழுது விட்டுவிட்டனர். அதனை செய்து நான் அப்படி இருந்தேன் இப்படி இருந்தேன் என்று சொன்னது எல்லாம் கற்பனை என்பது உங்களுக்கு இப்பொழுது தெரிந்துவிட்டது. அதனை போல் பைரவரையும் தவறு என்று சொல்லுகிறேன். காலம் கூடியவிரைவில் அதற்கு பதில் சொல்லும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

எச்சரிக்கை: மேஷம், விருச்சிகம்


வணக்கம் நண்பர்களே!
                    என்ன தான் நாம் சொன்னாலும் ஒருவரும் அதனை பின்பற்றி செய்வதில்லை என்று மட்டும் தெரிகிறது. மேஷம் விருச்சிகம் ராசியினர்க்கு பிரச்சினை ஏற்படுத்தும் காலம் என்பதால் அவர்களுக்கு ஆஞ்சநேயர்க்கு வெண்ணைகாப்பு செய்யுங்கள் என்று சொன்னேன். ஒருவரும் செய்தது போல் எனக்கு தகவல் வரவில்லை.

நான் சொல்லுவது பிரச்சினை வருவதற்க்கு முன்பு அந்த பிரச்சினை வரவிடாமல் தடுத்துக்கொள்வது நல்லது. வந்த பிறகு அந்த பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்றால் அது மிகவும் கடினமான வேலை. வருவதற்க்கு முன்பே ஆயிரம் மட்டும் செலவாகும் வந்த பிறகு அந்த பிரச்சினையை சரிசெய்வதற்க்கு லட்சக்கணக்கில் ஆகிவிடும்.

ஒரு சிலர் இந்த வாரம் சனிக்கிழமை செய்துவிடவேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் அந்த கோவிலுக்கு போவதற்க்கு முன்பே அவர்களுக்கு பிரச்சினை வந்து அவர்களை தடுத்துவிடும். இப்படி பல பேர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு சொல்லுவது எல்லாம் அம்மனை மனதில் நினைத்துக்கொண்டு எப்படியும் இந்த வாரம் செய்துவிடவேண்டும் என்று வேண்டினால் கண்டிப்பாக செய்துவிடலாம்.

மேஷம் விருச்சிகத்தை லக்கினமாக அல்லது ராசியாக கொண்டவர்கள் கண்டிப்பாக ஆஞ்சநேயருக்கு கடன்வாங்கியாவது வெண்ணைகாப்பு செய்துவிடுவது நல்லது.

இந்த ராசியினர் இப்பொழுது படும்பாடு வெளியில் சொல்லமுடியாது. உங்களுக்கு இதுவரை பிரச்சினை வரவில்லை என்றாலும் எதிர்காலத்தில் வரும் வாய்ப்பு உள்ளதால் உடனே காரியத்தில் இறங்கிவிடுங்கள். உங்களிடம் பணம் இருந்து அடுத்தவாரம் பார்க்கலாம் என்றால் கண்டிப்பாக பிரச்சினை மட்டுமே மிஞ்சும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

வணக்கம் சென்னை


வணக்கம் நண்பர்களே!
                    சென்னை வந்து சேர்ந்தாச்சு. இரண்டு நாட்களாக சுற்றுப்பயணம் மேற்க்கொண்டதால் உங்களுக்கு பதிவை தரமுடியவில்லை.சுற்றுப்பயணம் மேற்க்கொண்டாலும் பதிவிற்க்கு வருபவர்களுக்கு இன்று ஒன்றும் தரவில்லையே என்று மனது நினைக்கிறது. முயற்சி செய்து பார்க்கிறேன். வேலை அதிகம் இருப்பதால் எழுதமுடியவில்லை.

நான் ஒவ்வொரு ஊருக்கு செல்லும்பொழுதும் அந்தந்த பகுதியில் இருக்கும் நண்பர்கள் என்னை வந்து சந்தித்து பேசுகிறார்கள். அவர்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 

எழுத்து வழியாகவே தொடர்புக்கொண்டவர்களை நேரில் சந்திக்கும்பொழுது ஒரு வித மகிழ்ச்சியான விசயத்தை அளிக்கிறது. நிறைய நண்பர்கள் நம்மை வந்து சந்திக்கும்பொழுது இவ்வளவு பேர் நமது பதிவை படிக்கிறார்களா என்று கூட வியப்பாக இருக்கின்றது. நான் இன்னமும் நிறைய தகவலை உங்களுக்கு தரவேண்டும் என்று நினைக்கிறேன்.

இப்பொழுது கொடுத்த தகவல் எல்லாம் குறைவாக தான் இருக்கின்றது. நிறைய தகவலை தரும்பொழுது உ்ங்களுக்கு இன்னமும் மனநிறைவை அளிக்கமுடியும். வியாபாரத்திற்க்கு உதவும் வகையில் அதிகமான நண்பர்கள் இப்பொழுது வருகின்றனர். 

ஒரு சில கம்பெனி நஷ்டம் ஏற்பட்டபின்பு வருகின்றனர். நஷ்டம் ஏற்பட்ட கம்பெனியை தூக்கி நிறுத்துவதற்க்கு கொஞ்ச காலம் ஏற்படும். அதுவரை பொறுமையாக இருக்கவேண்டும். நஷ்டம் ஏற்படும் கம்பெனி வருவது தப்பில்லை. நஷ்டம் ஏற்பட்டபின்பு வந்தால் பணம் அதிகம் கேட்பேன். 

உங்களின் கம்பெனி நன்றாக சென்றுக்கொண்டு இருந்தால் நீங்கள் தான் உஷாராக இருக்கவேண்டும். நஷ்டம் கம்பெனிக்கு ஏற்பட்டுவிடகூடாது என்று கூடுதல் கவனத்தோடு இருக்கவேண்டும்.

இப்பொழுது தான் புதிதாக கம்பெனி துவக்கபோகிறேன் என்றாலும் வாருங்கள்.நமது உதவி உங்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும். ஒவ்வொரு நாளும் தெய்வஅருளோடு செயல்படும்பொழுது உங்களின் வியாபாரம் பன்மடங்கு உயரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Tuesday, October 22, 2013

ஆன்மீக அனுபவங்கள் 126


வணக்கம் நண்பர்களே!
                     நேற்று ஒரு இதழை படித்தேன் அதில் ஒரு நடிகை ஆன்மீகத்திற்க்காக தேடி அலைந்து கடைசியில் ஒன்றும் வேண்டாம் என்று  சொந்த வீட்டிற்க்கு திரும்பிருந்தார். அவர் பெயரை மறந்துவிட்டேன்.

அவர் சொன்னது இது தான் அனைத்து இடத்திலும் தேடி ஒன்றும் கிடைக்கவில்லை யாரும் எனக்கு தரவில்லை என்று தான் சொல்லிருந்தார். மடங்களுக்கு சென்று காய்கறி வெட்டுவது தோட்ட வேலை செய்வது இது தான் அங்கு நடந்துக்கொண்டு இருக்கிறது வேறு எதுவும் அங்கு இல்லை. பதினைந்து வருடங்களுக்கு மேலாக அங்குள்ளவர்கள் இதனை மட்டும் தான் செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.அங்கு காய்கறி வெட்டுவதற்க்கு வீட்டிலேயே காய்கறி வெட்டிக்கொண்டு ஆன்மீகத்தை தேடலாம் என்று சொல்லிருந்தார்.

உண்மையான செய்தி தான் அது. தியானகூடங்களில் மற்றும் ஆன்மீகவகுப்புகளில் நடைபெறும் கூத்து இது தான். ஒரு சாமியார் அதிகப்பட்சம் 18 பேர்க்கு மேல் தீட்சை கொடுக்கமுடியாது என்று நான் பழைய பதிவிலேயே சொல்லிருக்கிறேன்.

இப்ப உள்ள மடங்களில் எல்லாம் லட்சக்கணக்கானவர்கள் இருக்கின்றனர். அனைவருக்கும் எதுவும் நடந்து இருக்காது. சும்மா கூட்டத்தை கூட்டுகிறார்கள்.    நீங்கள் ஆன்மீகத்திற்க்கு என்று சென்றால் தனிநபரை தேடித்தான் செல்லவேண்டும். நல்ல சக்தியோடு இருப்பவர்கள் வெளியில் தெரியமாட்டார்கள். அவர்களை நாடினால் ஸ்பார்க் கிடைக்கும். அதனை வைத்துக்கொண்டு நீங்கள் வீட்டில் இருந்தே அனைத்து பயிற்சியும் செய்துவிடமுடியும்.

மந்தையாக இருக்கும் இடத்திற்க்கு சென்றால் மனரீதியாக உங்களை வசியப்படுத்துதல் தவிர அங்கு ஒன்றும் நடைபெறாது. நான் ஒருவரிடம் பயிற்சி பெற்றேன். அவர் என்னை சுதந்திரமாக விட்டு வைத்திருக்கிறார். என் விசயத்தில் எதிலும் தலையிடுவதில்லை. சுதந்திரமாக இருப்பது தான் ஆன்மீகம்.

எதுவும் பந்தப்படுத்தகூடாது. இதனை செய்யவேண்டும் அதனை செய்யவேண்டும் என்றால் கண்டிப்பாக அது ஆன்மீகமடம் கிடையாது. கம்பெனி நடத்திக்கொண்டு இருக்கின்றனர் என்று தான் அர்த்தம்.தனிநபர் சக்தியோடு இருப்பவர்களை தேடிச்சென்று கேட்டால் கிடைக்கும். அதன் பிறகு நீங்களே அனைத்தையும் பெற்றுவிடுவீர்கள்.

23,24-10-2013 புதன், வியாழன் அன்று திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில்  என்னை சந்திக்கலாம். 

தொடர்புக்கொள்ளவேண்டிய எண் 9551155800.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Monday, October 21, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 59

வணக்கம் நண்பர்களே!

                    ராகு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். ஒரு ஜாதகத்தோடு ராகு தசாவைப்பற்றி பார்க்கலாம்.




இந்த ஜாதகம் ஒரு ஆண் மகனின் ஜாதகம். மகர லக்கினம் மேஷ ராசி. குரு சுக்கிரன் மற்றும் சூரியனோடு சேர்ந்து இரண்டாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். சனியும் செவ்வாயும் நேர் பார்வையில் இருக்கின்றனர். 

ராகு அனுஷம் நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறார். சனியின் நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறார்.அமர்ந்திருக்கும் வீடு செவ்வாயின் வீடு. சனி செவ்வாய் இருவருக்கும் பார்வை இருப்பதால் ராகு தசா அந்தளவுக்கு இவருக்கு அதிக நன்மையை செய்துவிடாது.

ராகு லாபத்தில் தான் இருக்கின்றது என்றாலும் அமர்ந்த இடம் அந்தளவுக்கு அதிகபலனை வழங்காது. இவருக்கு வழங்கவும் இல்லை. லக்கினாதிபதியின் நிலையும் சரியில்லை என்றே சொல்லவேண்டும் ஆறாவது வீட்டிற்க்கு சென்றுவிட்டார்.

இவருக்கு ராகு தசா ஆரம்பித்த வருடத்தில் சரியான ஒரு ஏற்றத்தை கொடுத்தது. ராகு தசாவின் சுயபுத்தியில் நல்ல முன்னேற்றம் என்றே சொல்லவேண்டும். 2008 யில் இருந்து 2010  வது வருடம் வரை மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுத்தது. 

ராகுவின் சுயபுத்தியால் நல்லது நடந்தது. எப்பொழுது குரு புத்தி ஆரம்பித்ததோ அன்று முதல் இவருக்கு பலவிதத்திலும் சம்பாதித்த பணத்தை இழந்தார். 2011 முதல் இவருக்கு வாழ்க்கையில் இறக்கம் ஏற்பட்டுவிட்டது. 

குரு மூன்றாவது மற்றும் பனிரெண்டாவது வீட்டிற்க்கு சொந்தகாரர். இரண்டாவது வீட்டில் அமர்ந்திருக்கிறார். குருவோடு சூரியன் சுக்கிரன் என்ற கிரகங்கள் சேர்ந்து அமர்ந்ததால் குருவால் தனகாரத்திற்க்கு உரிய வீட்டோடு பலனை தரமுடியவில்லை. 

குருவை சூரியன் கெடுக்கவில்லை. சுக்கிரன் தான் கெடுத்துவிட்டார். இருவரும் ஒரே நட்சத்திரத்தில் சென்றுக்கொண்டு இருக்கிறார்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் இருகிரகமும் சென்றுக்கொண்டு இருக்கின்றது.

பூரட்டாதி குருவின் நட்சத்திரம் என்றாலும் சுக்கிரன் கூட இருந்ததால் பலனை தரமுடியவில்லை. அவர் காரத்துவம் வகிக்கும் வீடு சரியில்லை என்பதால் அதிகமான விரையத்தை தந்துவிட்டது.

என்ன தான் சொந்த நட்சத்திரமாக இருந்தாலும் அந்த நட்சத்திரத்தில் அவர் தனியாக இருந்தால் பிரச்சினை இல்லை கூட வில்லன் வேறு அமர்ந்து சென்றதால் இந்த நிலை ஏற்பட்டது.

ராகு சுயபுத்தியில் நல்ல பலனை தந்தது. ஒரு தசா சுயபுத்தியில் அதிகமான நன்மையை வழங்குகிறது என்றால் பிறகு வரும் புத்திகள் மிகப்பெரிய கெடுதலை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டியதில்லை.அதன் பிறகு வந்த சனியின் புத்தியும் அந்தளவுக்கு சரியில்லை என்றே சொல்லலாம் இதுவரை இவருக்கு எந்த வித நன்மையும் வழங்கவில்லை. 

லக்கினாதிபதியாக சனிக்கிரகம் இருந்தாலும் அவர் ஆறாவது வீட்டில் போய் அமர்ந்திருக்கிறார். முதல் ம்ற்றும் இரண்டாவது வீட்டிற்க்கு உரிய காரத்துவத்தை தருவார்க என்று எதிர்பார்த்தால். அதே சனி இவரை கெடுக்கிறது.

கோச்சாரரீதியாக இவருக்கு தற்பொழுது கண்டசனியாக வரும் சனி இவரை போட்டு தாக்கிக்கொண்டு இருக்கிறார்.மேஷராசியை கொண்டவர்களுக்கு எந்த வித விஷேச தசா நடந்தாலும் கோச்சார ரீதியாக வரும் சனி அவர்களை போட்டு தாக்கிவிடும்.

சிறிய அளவில் பலனை மட்டும் சொல்லியுள்ளேன். மீதி இருப்பவற்றை ஏற்கனவே ராகு தசாவைப்பற்றி எழுதியுள்ள பலனை வைத்து பார்த்துக்கொள்ளுங்கள்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ஆளும் கிரகங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    நாம் சோதிடப்பலனை சொல்லும்பொழுது நம்மிடம் கேட்கும் கேள்விக்கு வரும் ஜாதகத்தில் இருக்கும் கிரகநிலைகள் மட்டும் வைத்து சொல்லகூடாது. இன்றைய நாள்க்குள்ள கிரகங்களையும் வைத்து சொல்லவேண்டும்.

ஒருத்தர் குழந்தைப்பற்றி கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஐந்தாவது வீட்டு அதிபதியை மட்டும் வைத்துக்கொண்டு பலனை சொல்லிவிடமுடியாது. அவரையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இன்றைய நாள் திங்கள்கிழமை என்றால் சந்திரனையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அடுத்து இன்றைய நட்சத்திரம் கார்த்திகை என்றால் சூரியனையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இப்பொழுது பலனை சொல்லும்பொழுது

ஐந்தாவது வீட்டு அதிபதியின் கிரகம் மற்றும் குரு கிரகம்
சந்திரன்
சூரியன்

என்று நான்கு கிரகத்தையும் வைத்துக்கொண்டு பலனை நாம் சொல்லவேண்டும். இது தான் ஆளும்கிரகம் என்று சொல்லுவார்கள். இன்றைய நாளின் அதிபதி மற்றும் நட்சத்திரஅதிபதி ஆகியவை ஆளும் கிரகத்தின் கீழ் வந்துவிடுவார்கள்.

இதில் இருக்கும் கிரகத்தை கொண்டு ஒரு கிரகம் நன்றாக இருந்தாலும் அவர்களுக்கு குழந்தை இருக்கும் என்று சொல்லிவிடலாம்.அன்றைய காலங்களில் சோதிடரை பார்க்க போவது கூட நல்ல நேரம் பார்த்து தான் செல்வார்கள். ஏன் என்றால் நல்லகிரகங்களின் நேரத்தில் நமக்கு நல்ல பலனை அவரால் சொல்லமுடியும். எதிர்ப்பான நிலையை தவிர்த்துவிடுவார்கள்.

நீங்களும் ஆளும்கிரகத்தின் துணையோடு ஜாதகபலனை சொல்லுங்கள். சரியாக நடக்கும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

கலைதுறையில் சாதிப்பதற்க்கு


வணக்கம் நண்பர்களே !
                    இப்பொழுது சினிமா துறையில் இருப்பவர்கள் அதிகம் பேர் வருகின்றனர். அவர்களுக்கு சுக்கிரனின் ஆதிக்கம் இருந்தாலும் ஒரு சில நேரங்களில் சுக்கிரன் பாதிப்பால் அவர்களின் தொழில் பாதிக்கப்படுவதற்க்கும் வாய்ப்பு அதிகம் இருக்கின்றது.

சுக்கிரன் நன்றாக இருக்கவேண்டும் அப்பொழுது மட்டுமே அவர்களின் தொழில் எந்தவித சிக்கலும் இல்லாமல் சென்றுக்கொண்டு இருக்கும்.சுக்கிரனுக்கு எந்தவித கெடுதல் கிரகங்களின் தொடர்பும் இருக்ககூடாது. அப்படி கெடுதல் கிரகங்கனின் தொடர்பு கிடைத்தால் இவர்கள் கலைதுறைக்கு சென்று அங்கு சிக்கலில் மாட்டிவிடுவார்கள். அதுவே மிகப்பெரிய பிரச்சினையாகிவிடும்.

கலைதுறையினர்  வெள்ளிக்கிழமை அன்று ஏதாவது அம்மன் கோவிலை வணங்கிவரவேண்டும். அம்மன் கோவில் என்றால் அனைத்து அம்மன் கோவிலுக்கும் செல்லகூடாது. பிராமணர்கள் கொண்டு பூஜை செய்யபடாத அம்மனை வணங்கிவாருங்கள். 

பல பேர்க்கு அப்படிப்பட்ட அம்மன் கிடைக்கவில்லை என்று சொல்லுகிறார்கள். நமது அம்மனும் பிராமணர்கள் கொண்டு பூஜை செய்யப்படாத ஒரு அம்மன் தான் நீங்கள் நமது அம்மனையே வணங்கிவருவது நல்லதாக இருக்கும்.

மேலே இருக்கும் போட்டோவை பார்த்து வணங்கி வருவது நல்லது. கலைதுறையினர் வெற்றி பெறமுடியும். உங்களின் வேண்டுதலை கூட இந்த போட்டோவை பார்த்து வையுங்கள். அம்மன் நடத்திக்கொடுக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ஆன்மீக அனுபவங்கள் 125


வணக்கம் ண்பர்களே!
                    ஆன்மீகத்தில் ஒருத்தர் முன்னேற்றம் அடைவதற்க்கு பல வழிகளைப்பற்றி சொல்லிருந்தாலும் ஒரு வழியைப்பற்றி நான் சொன்னது கிடையாது. அந்த வழியை தான் முதலில் ஒருவர் செய்யவேண்டும் அது நடைபயணம். 

எங்கெங்கு கோவில்கள் இருக்கின்றதோ பிரசித்துபெற்ற கோவில் இருக்கின்றதோ அந்த கோவில்கள் எல்லாம் நடைபயணமாக செல்லவேண்டும். அப்பொழுது தான் ஆன்மீகத்தில் மிகஉயர்ந்த நிலைக்கு நீங்கள் செல்லமுடியும். ஒவ்வொரு ஊருக்கும் நடந்து செல்லும்பொழுது பல விசயங்கள் உங்களுக்கு புலப்படும்.

நான் அதிகமான இடங்களுக்கு நடந்து தான் சென்று இருக்கின்றேன். கனவிலும் நினைத்துகூட பார்க்கமுடியாத இடங்களுக்கு குரு அழைத்துக்கொண்டு சென்று இருக்கிறார். அவரோடு பயணம் செய்யும்பொழுது நம்மால் இப்படி எல்லாம் செல்லமுடியுமா என்று நினைக்க தோன்றும் அவ்வளவு விரைவாக அந்த இடத்தை அடைந்திருப்போம். அது எல்லாம் அவர் செய்யும் செயலால் மட்டுமே நிகழ்ந்த ஒன்று.

திருவண்ணாமலை கிரிவலமும் அப்படிதான் உங்களுக்குள் பலவித மாற்றத்தை ஏற்படுத்த அமைக்கபெற்ற ஒன்று தான் அது. அவர்கள் ஏன் அங்கு நடந்து செல்லவேண்டும் என்று சொல்லிருக்கிறார்கள். ஏதாவது ஒரு வண்டியிலேயே செல்ல சொல்லிருக்கலாமே. நடந்து செல்லும்பொழுது மட்டுமே பல அனுபவங்களை ஆத்மா பெறமுடியும் என்று அப்படி வைத்திருக்கிறார்கள்.

உடம்பை வருத்தி செய்யவேண்டும் என்பது கிடையாது ஆனால் முதல் நிலையில் இருப்பவர்கள் உடலை வருத்தி தான் முன்னேற்றம் அடையமுடியும் என்பதால் உங்களை நடந்து சென்று தரிசித்து வாருங்கள் என்று சொல்லுகிறார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

கேள்வி & பதில்


Sudhagar V N said...
ஆச்சர்யமான தகவல்கள் தங்களின் வலைதளத்தில் தொடர்ந்து அணிவகுக்கின்றன. வாழ்த்துகள்.
பொது வாழ்க்கைக்கு பயன்படும் சில மூலிகைகள் பற்றி கூறினால் வாசகர்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமே.
நன்றி!

வணக்கம் இன்றைய காலகட்டத்தில் நெட்டில் தேடிபார்த்தால் கிடைக்காத மூலிகைகளே கிடையாது. இதில வேறு நான் தனியாக எழுதி உங்களை போட்டு குழப்பவேண்டுமா? அனைத்தும் நெட்டில் கிடைக்கும். மூலிகைகள் பயன்படுத்தாமல் எந்த ஒரு ஆன்மீகம் கிடையாது. 

இந்தியாவில் இருக்கும் ஆன்மீகத்தின் சக்தியே மூலிகையை சார்ந்தது தான் இருக்கின்றது. நாம் கோவில் சாமி கும்பிடுகிறோம் கும்பிட்டவுடன் அவர்கள் தீர்த்த நீரை பருகிகிறோம் சிலையின் அடியில் இருக்கும் அஷ்டமருந்தில் பட்டு தான் அபிஷேகநீர் வெளியில் வருகின்றது. அந்த அபிஷேக நீரை எடுத்து தலையில் தெளித்துக்கொள்கிறோம் இது எல்லாம் மூலிகை கலந்த நீர் தான். மூலிகை இல்லாமல் ஆன்மீகம் கிடையாது. 

எந்த மூலிகையும் பயன்படுத்தும் விதத்தில் தான் அதன் சக்தி இருக்கின்றது. ஒவ்வொரு மூலிகையும் பயன்படுத்தும் விதத்தை குரு தான் நிர்ணயம் செய்கிறார்கள். சாதாரணமாக மூலிகையை சுத்தி செய்து தான் எடுப்பார்கள். ஒவ்வொரு மூலிகைக்கும் இத்தனை நாள் என்று கணக்கு இருக்கின்றது. இன்றைய காலகட்டததில் ஒரு செடிக்கு மஞ்சள் தண்ணீரை தெளித்து விட்டு சென்றால் அடுத்த நாள் வந்து சென்று பார்த்தால் அந்த செடியே இருக்காது எவராவது பிடிங்கிக்கொண்டு சென்றுவிடுவார்கள்.

எனது குரு சுத்தி செய்வது எல்லாம் கிடையாது. அப்படியே அவரின் கைப்பட்டு எடுத்துவிட்டால் அது சுத்தி அடைந்துவிடும். சக்தி படைத்த ஆள்களின் நிலை அப்படிப்பட்டது. மூலிகை இல்லாமல் ஆன்மீகம் கிடையாது குருவை பொருத்து மூலிகையை பயன்படுத்தும் விதம் மாறும்.

இன்று நெட்டில் அனைத்தும் கிடைக்கிறது. தேடிபாருங்கள்.ஒருவன் ஆன்மீகத்தை முழுவதும் கற்கவேண்டும் என்றால் அவன் பனிரெண்டு வருடம் ஆன்மீகப்பயிற்சி பெறவேண்டும் அப்பொழுது மட்டுமே அனைத்தும் முழுமைபெறும். ஏன் பனிரெண்டு வருடம் தெரியுமா? பயிற்சிக்கு பனிரெண்டு வருடம் என்று வைத்திருப்பார்கள். காலச்சக்கரத்தில் ஒவ்வொரு ராசியாக குரு அமர்ந்து ஒரு சுற்று சுற்றி முடித்தால் மட்டுமே அவனால் முழுமை பெறமுடியும்.

வாழைப்பழத்தின் தோலை வைத்து கிரகத்தை மாற்றுவிடுவேன். இதனை நீங்கள் நம்பமுடிகிறதா? உண்மை அது தான். மந்திரம் மற்றும் வாழைப்பழத்தின் தோலைக்கொண்டு ஒரு கிரகத்தின் தன்மையை அப்படியே மாற்றிவிடுவோம். 

இப்படி ஏகாப்பட்ட பொருட்கள் வைத்திருக்கிறோம். அதனை எல்லாம் எனக்கு ஒரு சிஷ்யன் வருவான் அவனுக்கு மட்டும் தான் கொடுக்கமுடியும். அனைவருக்கும் கொடுக்கச்சொல்லி எனது குரு கட்டளை இடவில்லை. அதனால் அனைத்தும் மறைக்கப்படுகிறது.ஒரு குருவை நீங்கள் அடைந்துவிட்டால் போதும் அனைத்தும் உங்களுக்கு வசப்படும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Sunday, October 20, 2013

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    நான் எங்கு சென்றாலும் ஒரு சில மூலிகைகளை வைத்து இருப்பேன். இதனைப்பற்றி இன்று தான் உங்களுக்கு சொல்லுகிறேன். அப்படி மூலிகைகளை எடுத்துச்செல்லாமல் சென்றால் வீட்டிலேயே மூலிகைகள் துணைக்கொண்டு பூஜை செய்துவிட்டு செல்வது முதல் கடமை.

எனது பூஜையறையிலும் ஏகாப்பட்ட மூலிகைகள் வைத்து இருக்கின்றேன். ஒரு சில வேலைகள் மூலிகை இல்லாமல் நடைபெறாது.  மூலிகை மற்றும் ஒரு சில மூலிகைகள், மரங்களின் வேர்கள் மற்றும் குச்சிகளை மட்டும் வைத்திருக்கிறேன். இதனைப்பற்றி எந்த விபரமும் தெரியாது. எனது குருநாதர் அனைத்தையும் கொடுத்து வைத்திருக்கிறார்.

நான் ஒரு சில வீட்டுகளுக்குள் ஆத்மாவை வைத்து செல்லும்பொழுது அவர்களின் குலதெய்வம் என்னை தடுக்கும். அதற்காக என்ன செய்வேன் என்றால் ஒரு மூலிகை குச்சியை வைத்துக்கொண்டு தியானம் செய்யதால் எப்பேர்பட்ட குலதெய்வம் வந்தாலும் தடுக்கவே தடுக்காது. நான் என் வேலையை எந்தவித தடங்கலும் இல்லாமல் செய்துவிட்டு வந்துவிடுவேன்.

மை எதுவும் வைத்திருப்பார் என்று நினைக்கவேண்டாம். அது எல்லாம் நாங்கள் பயன்படுத்துவது கிடையாது. பொதுவாக தீயவேலைகளுக்கு இறங்குவது கிடையாது. 

மூலிகைகளுக்கு ஏகாப்பட்ட சக்தி இருக்கின்றது. நம்மிடம் இருக்கும் சக்தியும் மூலிகை துணைக்கொண்டு செய்யும்பொழுது அதிக வீர்யத்துடன் செயல்படும். நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.