Followers

Friday, October 31, 2014

குலதெய்வ வழிபாடு


வணக்கம் நண்பர்களே!
                      ஆத்மாவைப்பற்றி எழுதி நீண்ட நாட்களாகிவிட்டது. இப்பதிவில் பார்க்கலாம். ஒருவரின் வீட்டில் ஆத்மாவின் தொந்தரவு இருந்தால் அந்த வீட்டில் இருப்பவர்கள் நிம்மதியாக இருக்கமுடியாது. 

இறந்தவர்களின் ஆத்மா அந்த வீட்டில் தங்கி வரும் நபர்களுக்கு பிரச்சினையை கொடுத்துக்கொண்டே இருக்கும். வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு தான் இந்த பிரச்சினை இருக்கும். சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு எப்பொழுதாவது யாராவது வழியாக வீட்டிற்க்குள் துர் ஆத்மாக்கள் நுழைய வாய்ப்பு இருக்கிறது.

நீங்கள் தொடர்ச்சியாக வீட்டில் தீபம் ஏற்றி வழிப்பட்டு வந்தால் பிரச்சினை இருக்காது. ஒரு சில நாட்கள் வழிபாடு நடத்தாமல் இருந்துவிட்டால் கூட வீட்டில் துர்ஆத்மாக்கள் நுழைந்துவிடும் ஆபத்து இருக்கிறது. நீண்ட நாட்கள் வழிபாடு இல்லாமல் நடத்தாமல் இருந்தால் வீட்டில் நீங்கள் மறுமுறை நீங்கள் வழிபாடு நடத்த துவங்கும்பொழுது அந்த பூஜையை நடத்தவிடாமல் துர்ஆத்மாக்கள் தடையை ஏற்படுத்தும். 

இதற்கு நீங்கள் செய்யவேண்டியது தொடர்ச்சியாக குலதெய்வ வழிபாட்டை செய்யுங்கள். பச்சைப்பரப்புதலை தொடர்ச்சியாக கடைபிடியுங்கள். மூன்று மாதத்திற்க்கு ஒரு முறை நீங்கள் பச்சைப்பரப்புதல் செய்தாலே போதும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு. 

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பொருட்கள்


வணக்கம் நண்பர்களே!
                      பல பதிவுகளில் நான் இயற்கையாக விளையும் பொருட்களை நீங்கள் சாப்பிடுங்கள் என்று சொல்லியுள்ளேன். அதாவது எந்த ஒரு இரசயான உரங்கள் இடாமலும் வளர்க்கப்படும் பயிர் வகையில் இருந்து உருவான பொருட்களை வாங்கி சாப்பிடுங்கள் என்று சொல்லியுள்ளேன்.

நாம் என்ன தான் ஓடி ஓடி பணம் என்று உழைத்தாலும் நல்ல உடல் நலத்தோடு இருக்கும்பொழுது மட்டுமே நாம் சம்பாதித்த பணத்தை வைத்து நன்றாக வாழமுடியும். 

இன்றைக்கு கடைகளில் விற்க்கும் பொருட்களை வைத்து சமைத்து உண்டு வருவதால் உடல் நலம் கெட்டு வருகிறது.நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை மருத்துவமனைக்கே கொடுக்கும் அவலம் இருக்கிறது.

நான் ஒவ்வொரு முறையும் எழுதும்பொழுது ஒரு சில நண்பர்கள் மட்டும் எங்களுக்கு இயற்கையான முறையில் தயாரிக்கும் பொருட்களை ஏற்பாடு செய்து தாருங்கள் என்று கேட்டார்கள். நானும் பல இடங்களுக்கு செல்லும்பொழுது எல்லாம் இதனைப்பற்றி விசாரித்துக்கொண்டு வருவேன். 

ஒரு இடத்தில் இப்படி சுத்தமான அதே நேரத்தில் இயற்கையான முறையில் தயாரிக்கும் பொருளை நான் பார்த்தேன். அவரிடம் நீங்கள் கொடுக்கமுடியுமா என்று கேட்டேன். அவரும் அதற்கு சம்மதித்தார். எல்லா பொருட்களையும் அவரால் இப்பொழுது செய்யமுடியாது படிப்படியாக தருகிறேன் என்று சொன்னார்.  அவரே இயற்கையான முறையில் பயிர் செய்து தரவேண்டும் என்பதால் அவர்க்கு காலம் தேவைப்படுகிறது. நானும் சம்மதித்தேன். 

விரைவில் அவரின் தயாரிப்புகளை நமது ஜாதககதம்பத்தில் கொடுக்கிறேன். விருப்பம் இருப்பவர்கள் வாங்கிக்கொள்ளலாம். இது எனது வியாபாரத்திற்க்கு என்று நான் கொடுக்கவில்லை. இயற்கையான பொருட்களை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்க்காக இதனை தருகிறேன். இதனை தயாரிப்பவரே உங்களுக்கு கொடுக்க இருப்பதால் நம்பிக்கையுடன் வாங்கி பயன்படுத்துங்கள். நல்ல உடல் நலத்தோடு வாழுங்கள்.

விரைவில் ...

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு. 

கடவுளுக்கே பெண்கள் தேவை


வணக்கம் நண்பர்களே!
                      திருப்பூரில் எனது அறையில் காலையில் டிவியை ஆன் செய்து பார்த்தேன். அதில் பார்த்தால் அனைத்தும் ஆன்மீகம் சம்பந்தமாக எல்லா சேனலிலும் ஒளிப்பரப்பு செய்கிறார்கள். என்னடா உலகத்தில் அவ்வளவு பக்தி இருக்கின்றது என்று பார்த்தால் அதில் ஒரு உண்மை தெரியவந்தது. அதனைப்பற்றி சொல்லவேண்டும் என்று இப்பதிவை எழுதினேன்.

என்னோடு இருந்த ஒரு நண்பர் ஒரு சேனலை நான் மாற்றியே பொழுது அதிலேயே வையுங்கள் என்று சொன்னார். அந்த சேனலில் சிவன் கோவிலைப்பற்றி ஒரு பெண் சொல்லிக்கொண்டிருந்தார். நான் அவரிடம் சிவன் கோவில் என்றால் உங்களுக்கு பிடிக்குமா என்று கேட்டேன். 

சிவனை யார் கண்டது அந்த பெண் அழகாக இருக்கிறார். அந்த பெண்ணை பார்க்க தான் அந்த சேனலை வைக்க சொன்னேன் என்றார். என்னபா இது என்றேன். அவர் சொன்னார் கடவுளை பற்றி சொல்லுவதற்க்கே இங்கு பெண் தான் தேவைப்படுகிறார் என்றால் நமது ஆன்மீகம் எப்படிப்பட்டது என்று நீங்கள் பாருங்கள் என்றார்.

பல சாமியார்கள் நடத்தும் கோவிலில் கூட இப்படி தான் பெண்களை வைத்து ஆராத்தி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர். நமது ஆட்களுக்கு எதிலும் ஒரு கவர்ச்சி வேண்டும் என்று நினைப்பார்கள் என்றார். 

இவர்கள் கடவுள் என்கின்ற பெயரில் பொம்பளை தான் காட்டுகிறார் என்றார். கிருத்துவ சேனல் ஒன்று உள்ளது அதில் பெண்களின் குத்தாட்டம் பார்க்க வேண்டும் என்றால் அதில் தான் நீங்கள் பார்க்க வேண்டும் என்றார். கடவுளுக்கே பெண்கள் இருந்தால் தான் வியாபாரம் நடக்கும் இல்லை என்றால் ஒரு கூட்டமும் வராது என்றார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு. 

முன்னேற்றம்


வணக்கம் நண்பர்களே!
                      என்னிடம் வரும் நபர்களை எப்படியும் முன்னேற்றம் என்பதை மிக குறுகிய காலத்தில் காட்டிவிடலாம். குறைந்தது ஆறு மாதக்காலம் இருந்தாலே போதும் ஒரளவு அனைத்தையும் கொடுத்துவிடலாம். 

அம்மனை வைத்து வேலை செய்யும்பொழுது சம்பந்தப்பட்ட நபர் முன்னேற்றப்பாதையில் செல்ல ஆரம்பிப்பார். பல வருடங்களில் விரல் விட்டு என்ன கூடிய நபர்கள் மட்டும் தான் என்னிடம் பயன்பெறுகிறார்களே தவிர பல பேர் வருவதும் போவதுமாக இருக்கின்றனர்.

ஆறு மாதக்காலத்தில் முன்னேற்றத்தை காட்டமுடியும் என்கிறேன். இதுநாள் வரை பல பேரை நாம் உருவாக்கியிருக்க முடியும் ஏன் முடியவில்லை என்றால் மனிதனின் திருட்டு புத்தியை இதற்கு காரணம் காட்டலாம.

நான் ஒருத்தருக்கு வேலை செய்கிறேன் என்று சொன்னால் கண்டிப்பாக  வேலை செய்வேன். நான் செய்த வேலைக்கு ஒருத்தர் ஒழுங்கான முறையில் பணம் செலுத்தும்பொழுது மட்டுமே அவருக்கு தொடர்ந்து நல்ல வாய்ப்பை கொடுக்கமுடியும்.

நம்ம ஆட்கள் வருவது எதையாவது ஒன்றை பெற்றுவிட்டால் உடனே ஒடிவிடுவதுமாக இருப்பார்கள். அவர்களுக்கு எப்படி வேலை செய்யமுடியும். நான் பல பேர்களிடம் சொல்லுவேன். ஒரு வாய்ப்பை மட்டும் பெற்றுக்கொண்டு ஒடிவிடாதீர்கள். என்னிடம் நிறைய விசயங்கள் இருக்கின்றது நீங்கள் மிகப்பெரிய அளவில் செல்லலாம் என்பேன். என்ன செய்வது அவர்களின் விதி அவர்களை விடுவதில்லை.

புதியதாக வருவது தவறு இல்லை ஆனால் கண்டிப்பாக எனக்கு சேரவேண்டியதை கொடுக்காமல் நீங்கள் சென்றால் கண்டிப்பாக உங்களால் இந்த ஜென்மத்தில் முன்னேற்றம் என்பதே கிடையாத அளவிற்க்கு அம்மன் செய்துவிடும்.

மிகப்பெரிய அளவில் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக என்னை தேடி வரலாம். நான் கண்டிப்பாக உங்களை ஆறு மாதத்திற்க்குள் ஒரு நல்ல நிலையில் வைத்துவிடுவேன். நான் ஒடமாட்டேன். நீங்கள் ஒடாமல் இருந்தால் போதும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு. 

மனிதனை ஆட்டி வைக்கும் கிரகங்கள்


வணக்கம் நண்பர்களே!
                      ஒரு சில நண்பர்களே பார்த்து இருக்கிறேன். அவர்கள் ஏதாவது ஒரு தொழில் செய்துக்கொண்டு இருப்பார்கள். அவர்களின் தொழிலை பார்த்து நான் நினைப்பேன் இதில் எப்படி இவர் வெற்றி பெறுவார். இது புதுமையாக இருக்கிறதே என்று நினைப்பேன் ஆனால் அந்த தொழிலில் அவர் குறுகிய காலத்தில் வெற்றி பெறுவார்.

ஒரு சில கிரகங்கள் ஒரு சிலரை அந்த தொழிலில் வெற்றி பெறச்செய்கிறது. அந்த தொழிலின் மீது ஆர்வத்தை தூண்டுவதே அந்த கிரகங்கள் தான். அவருக்கு விவரமே தெரியாத தொழிலை அவருக்கு கற்றுக்கொடுத்து அவரை அதில் ஈடுபடவைப்பது அந்த கிரகத்தின் வேலையாக இருக்கிறது.

பல நேரங்களில் நான் சிந்தித்துக்கொண்டு இருப்பேன். எப்படி இது எல்லாம் சாத்தியமாகிறது என்று சிந்திப்பேன். மனிதனை ஆட்டிவைக்கிறது கிரகங்கள் என்றால் நூறு சதவீதம் உண்மையாகவே இருக்கிறது. கிரகங்களுக்கு இவர்கள் வேலை செய்கிறார்கள் அது தான் உண்மை.

கிரகங்களின் கையில் மனிதன் சிக்கி ஒன்று வெற்றி பெறுகிறான் அல்லது அவன் வீழ்கிறான். கிரகங்கள் கொடுக்கும் வாய்ப்பை மனிதன் சரியாக பயன்படுத்தும்பொழுது வாழ்வில் வெற்றி கிடைக்கிறது. கிரகங்களை சாந்தப்படுத்தி கிரகங்கள் கொடுக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு. 

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                      ஒரு நண்பர் கேட்டார். அவருக்கு என்னைப்பற்றி நன்றாக தெரியும்.  நீங்கள் எந்த ஊரில் நிரந்தரமாக தங்குவீர்கள் என்று கேட்டார்.

எனக்கு நிரம்தரமான ஒரு இடத்தில் தங்குவது என்பது பிடிக்காத ஒன்று. சொந்தமான இடம் தஞ்சாவூரில் இருப்பதால் அங்கு மாதத்திற்க்கு ஒரு முறை சென்று வருவேன். அதோடு அங்கு அம்மன் கோவிலும் இருப்பதால் அங்கு சென்று வருவது உண்டு.

நிரம்தரமான ஒரு இடத்தில் நீங்கள் தங்கிக்கொண்டு இருக்கும்பொழுது உங்களுக்கு அந்த இடத்திலேயே ஒரு பிடிப்பு வந்துவிடும். அது அதிகமாக அதிகமாக அதனை விட்டு வெளியில் நீங்கள் வருவதற்க்கு பிடிக்காத ஒன்றாக மாறிவிடும். கடைசி காலத்தில் உயிர் பிரியும் நிலையில் அதிகமான வலியை அது தந்துவிடும்.

நான் இப்பொழுது பல ஊர்களுக்கு சென்று வருகிறேன். அப்படி செல்லும்பொழுது என்னையும் வளர்த்துக்கொள்ளமுடியும். வாழ்க்கையும் மிக எளிதாக எடுத்துக்கொள்ள வசதியாக இருக்கிறது. நீங்களும் அடிக்கடி வெளியூர் செல்லமுடியாமல் இருந்தால் கூட வருடத்திற்க்கு ஒரு முறையாவது ஒரு பத்து நாட்கள் வெளியில் சென்றுவாருங்கள்.

உங்களின் சொந்த ஊரில் வீடுகட்டிக்கொள்ளுங்கள் அதே நேரத்தில் பல இடங்களுக்கு நீங்கள் சென்றுவரும்பொழுது உங்களின் அறிவும் வளரும். நீங்களும் வளர்வீர்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு. 

அம்மன் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                      இன்றைய மாதத்தில் பதிவுகள் குறைந்த காரணத்தால் ஒரு சில நண்பர்கள் என்னிடம் பூஜை செய்வீர்களா என்று கூட கேட்டார்கள். எனது ஊரில் நெட் இணைப்பு கிடைக்கவில்லை அது மட்டும் தான் காரணம். நெட் இருந்து இருந்தால் தொடர்ச்சியாக பதிவு வந்துக்கொண்டு இருந்திருக்கும்.

ஜாதககதம்பம் இல்லாத நேரத்தில் கூட எனக்கு கிடைத்த பொருளை வைத்து பூஜை செய்து இருக்கிறேன். அதனால் எந்த காரணத்தாலும் பூஜை நிறுத்த மாட்டேன். தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.

எப்பேர்பட்ட சூழ்நிலையில் நீங்கள் வாழ்ந்தாலும் அம்மனை நினைக்காமல் மட்டும் இருந்துவிடாதீர்கள். திக்கற்றவர்களுக்கு அம்மன் கண்டிப்பாக வழி வெட்டுவாள். பல இக்கட்டனா சூழ்நிலையில் நான் வாழ்ந்து வந்து இருக்கிறேன். அப்பொழுது எல்லாம் என்னிடம் இருந்தது அம்மன் மேல் உள்ள நம்பிக்கை மட்டுமே. அந்த நம்பிக்கையை வைத்த காரணத்தால் மட்டுமே இன்று உங்களுக்கு ஜாதக கதம்பத்தை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

அம்மன் நமக்கு நல்லது செய்யும் என்று நம்பிக்கையை வையுங்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் உங்களுக்கு வந்து நமது அம்மன் உங்களுக்கு உதவுவாள்.இது நான் கண்ட உண்மை.

இந்த மாதம் பூஜை அடுத்த வாரத்தில் நடைபெறும் நமது அம்மனிடம் வேண்டுதல் வைத்து அது நடைபெற்று இருந்தால் வேண்டுதலுக்கான உங்களின் காணிக்கையை செலுத்தலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு. 

இயற்கையான இடம்


வணக்கம் நண்பர்களே!
                       சொந்த ஊரில் இருந்து இன்று திருப்பூர் வந்துவிட்டேன்.கடந்த சில நாட்களாக பதிவை தொடர்ந்து தரமுடியவில்லை. எனது சொந்த வேலை இருந்தது இடையில் மதுரை சென்று வந்தேன். பல நண்பர்கள் ஏன் பதிவை தொடர்ந்து எழுதுவில்லை என்று போன் செய்து கேட்டார்கள். சொந்த வேலை மட்டும் தான் காரணம்.

அம்மன் கோவிலில் தினமும் பிராத்தனை செய்தேன். ஒரு சில பூஜைகளும் செய்தேன். என்னை புதுப்பித்துக்கொள்ளவும் இந்த இடைவெளி நன்றாக எனக்கு இருந்தது. 

எப்பேர்ப்பட்ட ஆன்மீகவாதியும் சென்னையில் தொடர்ந்து இருந்தால் அவர் கொஞ்ச காலத்தில் அவரின் ஆன்மீகசக்தி கீழே சென்றுவிடும். ஏன் என்றால் சூடு இருக்கும் இடத்தில் ஆின்மீகம் வேலை செய்வது கடினம். அப்படி இருந்தும் அந்த ஊரில் பல வருடங்கள் இருந்தேன். எப்படிப்பட்ட நிலையிலும் ஆன்மீகத்தில் இருக்கமுடியும்.

பொதுவாக இயற்கையான இடத்தில் இருந்துக்கொண்டு தான் நீங்கள் முதல் முதலில் ஆன்மீக பயிற்சிகளை எடுக்கவேண்டும். இயற்கையில் இருந்து ஆன்மீகப்பயிற்சி எடுக்கும்பொழுது உங்களின் மனம் அதற்கு இணைந்துக்கொடுக்கும். இனிமேல் ஆன்மீகப்பயிற்சியை நீங்கள் எடுத்தால் இயற்கையான இடங்களுக்கு செல்லுங்கள். இயற்கை மிக உன்னதமான விசயத்தை உங்களுக்கு கற்றுக்கொடுக்கும்.

காேயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதியில் உள்ள நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால என்னை தொடர்புக்கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையில் திருப்பூரில் இருப்பேன். 

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு. 

Tuesday, October 28, 2014

பெயர்


வணக்கம் நண்பர்களே!
                    ஒவ்வொரு மனிதனுக்கும் அடையாளம் அவனின் பெயர். பெயரைப்பற்றி பல சோதிடர்கள் சொல்லி உள்ளதை அனைவரும் அறிந்த ஒன்று தான். அதனை நான் பாடமாக எடுக்கவில்லை. எந்த பெயரை வைக்க கூடாது என்பதை மட்டும் இப்பதிவில் கொஞ்சம் பார்க்கலாம்.

முதலில் பெண்களுக்கு ஆரம்பிக்கலாம். அமுதா சாந்தி மாலா என்ற பெயரை ஒரு பெண்ணுக்கு வைத்தால் வாழ்க்கையில் அந்த பெண் அதிகமாக போராட்டதை சந்திக்க நேரிடும். வாழ்க்கை அழகாக இருப்பதில்லை.

இந்த பெயரை கொண்டவர்கள் நீங்களாக இருந்தால் பெயரை மாற்றிவிடுங்கள். உறவினர்களாக இருந்தாலும் அவர்களிடம் சொல்லி மாற்றிவிடுங்கள். 

பெண்களுக்கு THI, THY என்று முடியும் பெயரிலும் பெயரை வைக்காதீர்கள். அவர்களும் வாழ்வில் பிரச்சினையை சந்திப்பார்கள். இது அனைத்தும் எனது அனுபவத்தில் இருந்து எழுதுகிறேன். என்னுடைய அனுபவத்தில் இதனை பார்த்து இருக்கிறேன்.

பெயரை மாற்றிவிட்டு அனைவரிடமும் இப்படி என்னை கூப்பிடுங்கள் என்று சொல்லிவிடுங்கள். அவர்கள் உங்களை கூப்பிட கூப்பிட உங்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு. 

கிரகங்களின் விளையாட்டு


வணக்கம் நண்பர்களே!
                    பல கிராமங்களில் நான் பார்த்து இருக்கிறேன். ஊரில் உள்ள பொதுவான இடத்தில் அல்லது அரசாங்கத்திற்க்கு சொந்தமான கட்டடத்தில் வேலையில்லாத இளைஞர் அமர்ந்துக்கொண்டு சீட்டு ஆடுவதை பார்த்து இருக்கிறேன். கிராமபுறங்களில் இது நடந்துக்கொண்டு தான் இருக்கிறது.

இளைஞர்கள் பல பேர்கள் நாளை பொழுதுபோக்காவே கழித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு செயலும் நடக்க கிரகங்கள் தான் வழி செய்கின்றன. ராகு கிரகம் தன் ஆதிக்கத்தை அதிகமாகவே இப்பொழுது காண்பித்துக்கொண்டு இருக்கிறது.

எனக்கு தெரிந்த ஒரு நண்பர் ஒருவர் கிளப்புகளில் சீட்டு ஆடுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார். அவர் எப்பொழுது சீட்டு ஆட்டத்தில் வெற்றி பெற்றுக்கொண்டு தான் இருப்பார். வாரத்தில் ஒரு நாள் தோற்பார். அந்த நாள் வியாழக்கிழமை.

குரு கிரகம் அவருக்கு தோல்வியை தந்துவிடும். அந்த நாள் மட்டும் அவர் சீட்டு விளையாடமாட்டார்.ஒரு சிலருக்கு தீய கிரகங்கள் அவர்களுக்கு நல்லதை செய்யும். தீயகிரகங்கள் ஆதிக்கம் பெறும்பொழுது நல்ல கிரகங்களின் நாளில் அவர்களுக்கு தீங்கு செய்துவிடும். நல்லவன் கெட்டவன் இருவரில் யார் வெற்றி பெறுகிறார் என்பது தான் வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் அனுபவிக்கிறான். 

கிரகங்கள் ஆடும் ஆட்டத்தில் மனிதன் படுகிறான் என்பது தான் உண்மை. கிரகங்கள் தன் திருவிளையாடலை நடத்திவிடுகிறது. மனிதன் அதற்கு கிடந்து வேலை செய்கிறான்.

தெய்வ வழிபாடுகளில் தன் மனதை செலுத்தி கிரகங்களை மனிதன் வென்றால் அது மிகப்பெரிய வெற்றி. கிரகங்களை வெல்ல வேண்டும் அதற்கு வழிபாடு ஒன்று மட்டுமே தீர்வாக இருக்கமுடியும்.

நாளை சென்னை வருவதாக இருந்தேன். கொஞ்ச வேலை காரணமாக மதுரை செல்கிறேன். நாளை மதுரையில் என்னை சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு. 

Monday, October 27, 2014

சோதிடமும் வாழ்வும்


வணக்கம் நண்பர்களே!
                   வாழ்க்கையில் ஒருவர் முன்னேற்றம் காணவேண்டும் என்றால் அவர் முதலில் அவர் இந்த உலகத்தில் புரிந்துக்கொள்ளவேண்டியது யார் சத்ரு யார் மித்ரு என்பதை தான் முதலில் தெரிந்துக்கொள்ளவேண்டும்.

சோதிடம் சொல்லும் வாழ்க்கையும் இது தான். எந்த கிரகம் உங்களுக்கு சத்ருவாக இருக்கிறது எந்த கிரகம் உங்களுக்கு மித்ருவாக இருக்கிறது என்பதை பார்த்து தெரிந்துக்கொண்டால் போதும். உங்களின் ஜாதகத்தில் நல்ல கிரகம் என்பதின் சாரத்தில் நீங்கள் வாழ்ந்து வெற்றி பெறமுடியும்.

எந்த கிரகம் உங்களுக்கு நல்லது செய்கிறது என்று பார்த்து அந்த கிரகத்திற்க்கு மட்டும் நீங்கள் நல்ல முறையில் பரிகாரம் செய்துக்கொண்டு இருந்தால் போதும் அதன் வழியாக உங்களுக்கு அனைத்தையும் நல்ல விதமாக அமைந்துவிடும். 

உங்களுக்கே தெரியும் பொதுவாக எல்லா கிரகங்களும் நம்மை அடித்து காலி செய்ய தான் வந்து இருக்கிறது என்று நன்றாக புரியும். அப்படி இருக்கும்பொழுது எது நமக்கு நல்லது செய்கிறது என்று பார்த்து அந்த கிரகத்தின் நிழலில் வாழ்ந்துவிடலாம்.

உதாரணத்திற்க்கு செவ்வாய் கிரகம் உங்களுக்கு நல்லது செய்கிறது என்று வைத்துக்கொண்டால் செவ்வாய் கிரகத்தை மட்டும் நம்பி நாம் வணங்கிவரும்பொழுது செவ்வாய் நமக்கு தேவையானதைபெற்றுக்கொடுத்துவிடுவார்.

உங்களின் இயல்பான வாழ்விலும் யார் உங்களுக்கு நல்லது செய்வார் யார் உங்களுக்கு தீங்கு செய்வார் என்பதை புரிந்துக்கொள்வதில் தான் உங்களின் வாழ்வின் வெற்றி இருக்கிறது. இதனை புரிந்துக்கொண்டால் போதும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு. 

Sunday, October 26, 2014

குலதெய்வம்


வணக்கம் நண்பர்களே!
                    சொந்த வேலையில் இருந்ததால் உங்களுக்கு பதிவை தரமுடியவில்லை. சிரமத்திற்க்கு வருந்துகிறேன். தீபாவளி வாழ்த்தை சொல்லிய அனைவருக்கும் நன்றி. புதன்கிழமை அன்று சென்னை திரும்பிவிடுவேன் அதன் பிறகு தொடர்ச்சியாக உங்களுக்கு பதிவை தந்துவிடுகிறேன். சொந்த ஊரில் நெட் பிரச்சினை உள்ளது அதனால் பதிவு தருவதற்க்கு சிரமமாக இருக்கிறது. இனிமேல் தினமும் பதிவை தருவதற்க்கு முயற்சி செய்கிறேன்.

குலதெய்வத்தைப்பற்றி நான் நிறைய பதிவில் உங்களுக்கு சொல்லியுள்ளேன். மேலும் ஒரு புதிய கருத்தை இப்பதிவில் பார்க்கலாம். உங்களின் ஊர் கிராமத்தில் இருந்தால் உங்களுக்கு கிராம எல்லை காக்கும் தெய்வம் என்று ஒன்று இருக்கும். அதற்கு கீழ் உங்களின் குலதெய்வம் இருக்கும். அப்படி இருக்கும்பொழுது எல்லை தெய்வத்தை வைத்து உங்களுக்கு ஒருவர் தீங்கு செய்ய முற்பட்டால் அவர்களின் எண்ணம் நடைபெறாது.

எல்லை தெய்வத்திற்க்கு கட்டுப்பட்டு குலதெய்வம் இருந்தாலும் எல்லை காக்கும் தெய்வம் உங்களை தாக்க முற்படாது. ஏன் என்றால் குலதெய்வத்தை அந்த எல்லைக்காக்கும் தெய்வம் காப்பாற்றவேண்டும் என்ற காரணத்தால் எல்லை காக்கும் தெய்வத்தை வைத்து உங்களுக்கு தீங்கு செய்ய முடியாது.

இது அந்த காலத்தில் இயற்கையாகவே அமைந்த ஒரு விசயம். நீங்கள் குலதெய்வத்தை மட்டும் வணங்கி வந்தாலே போதும். உங்களுக்கு அனைத்தையும் செய்துக்கொடுத்துவிடும். பச்சைப்பரப்புதல் செய்து வருவதை தொடர்ச்சியாக செய்துக்கொண்டு வாருங்கள். பல பேர் இதனை செய்வதில்லை என்று நினைக்கிறேன். அனைவரும் செய்யுங்கள் அது ஒன்றே போதும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு. 

Wednesday, October 22, 2014

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வணக்கம் நண்பர்களே!
                      அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தங்களின் குடும்பத்தில் என்றும் சந்தோஷம் மற்றும் செல்வம் நிறைந்து இருக்க அம்மன் உங்களுக்கு அருள் புரியும்.


நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு. 


Monday, October 20, 2014

ஊன் உருக உயிர் உருக


வணக்கம் நண்பர்களே!
                               திருப்பூரில் ஒரு நண்பர் என்னிடம் எப்படி இதனை எல்லாம் நீங்கள் கற்றீர்கள் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். இதற்கு பதிலை நான் பலமுறை பதிவில் சொல்லிருந்தாலும் கொஞ்சம் வித்தியாசமாக இதில் பார்க்கலாம்.

ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே என்று ஒரு பாடல் வரி வரும். இதனை தான் அவருக்கு சொன்னேன். உன்னுடைய உடலும் ஆத்மாவும் உருகினால் கண்டிப்பாக ஆன்மீக தேனை நாம் பருகலாம். 

ஆன்மீகத்தில் தன்னை இணைத்துக்கொள்வது என்பது அவ்வளவு எளிதான வேலை கிடையாது. தன்னுடைய தேவைகளை முடித்துவிட்டு அதன் பிறகு தன்னை உருக்கும்பொழுது மட்டுமே அது நமக்கு வாய்க்ககூடிய ஒன்றாக இருக்கும்.

உண்மையில் மனது அதற்கு தான் நாடுகிறதா அல்லது பணம் பார்க்கலாம் என்று தெய்வீகத்தை நாடுகிறதா என்று அறிந்துக்கொண்ட பிறகு நாம் ஆன்மீகத்தை முடிவு செய்யவேண்டும். மனது அதனை விரும்பாமல் நீங்கள் சென்றால் பிரச்சினையில் தான் முடியும்.

கிரகநிலைகளும் அதற்கு ஒத்துழைக்கின்றதா என்று பார்த்துக்கொண்டு அதன் பிறகு செல்லவேண்டும். மனது கண்டிப்பாக அதனை தான் விரும்புகிறது என்றால் ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக்கொள்ளமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு. 


Saturday, October 18, 2014

ஒரு தெய்வ வழிபாடு


வணக்கம் நண்பர்களே!
                      நான் பல ஊர்களுக்கு சென்று வருகிறேன். அப்படி சென்று வரும்பொழுது நான் பார்க்கும் அனுபவம். எப்படியாவது பிறரிடம் ஏமாந்து பணத்தை விடுபவர்களாகவும் அல்லது ஒழுங்கான பணம் மேலான்மை இல்லாமல் பணத்தை இழந்தவர்களாக அதிகம் பேர் இருக்கின்றார்கள்.

நமக்கு நடக்கும் தசா புத்திகளை நன்றாக ஆராய்ந்து பார்த்துவிட்டு பணத்தை நாம் கையாள வேண்டும். ஒரு தசா முதலில் பணத்தை தருவதாகவும் ஒரு சிலருக்கு இருக்கிறது. அடுத்து வரும் புத்தியில் பணத்தை இழக்கவும் வைக்கிறது.

நாம் ஜாதகத்தை தான் பார்க்கவில்லை என்றாலும் ஏதாவது ஒரு தெய்வத்தை நூறு சதவீதம் நாம் நம்பி பிராத்தனை செய்து வந்தால் நமது பிராத்தனையின் பலனாக நமக்கு வரும் பணம் தேவையில்லாமல் நம்மிடம் இருந்து செல்லாது.

ஒவ்வொரு தசாவிலும் வரும் ஒவ்வொரு புத்தியும் கண்டிப்பாக நமக்கு மாற்ற மனநிலையை கொடுத்தாலும் நாம் நம்பிக்கை வைக்கும் தெய்வம் அந்த புத்தியின் தீயவை எல்லாம் போக்கி நமக்கு நல்ல மனநிலையை தரும்.

இன்றைய காலத்தில் வாரத்தில் ஏழு நாட்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்தை அல்லது ஒவ்வொரு தெய்வத்தை வணங்கி வருபவர்களை பலரை நான் பார்த்து இருக்கிறேன். இப்படி எல்லாம் வணங்கி வராமல் நீங்கள் ஒரு தெய்வ வழிபாட்டை மட்டும் செய்து வாருங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு. 

சோதிட அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                       என்னிடம் ஒரு தொழில் செய்யும் நபர் இருந்தார். அவர் ஒரு துணி வியாபாரம் செய்யும் நபர். அவருடைய தொழில் நன்றாக தான் சென்றுக்கொண்டிருந்தது. அவர் எதிர்பார்த்து என்னிடம் வந்தது பெரிய அளவில் சம்பாதிக்க வேண்டும் என்று தான் வந்தார். அந்த தொழில் ஒரு குறிப்பிட்ட அளவிற்க்கு மேல் சம்பாதிக்க முடியவில்லை.

அவர் படிக்காதவர். அவரின் ஜாதகத்தை வாங்கி பார்த்தேன் அவரின் நட்சத்திரம் சதயம். நான் அவரிடம் இந்த தொழிலும் செய்யுங்கள் அதே நேரத்தில் நீங்கள் கம்யூட்டர் தொழிலில் இறங்குங்கள் என்று சொன்னேன். அதாவது சாப்ட்வேர் தொழிலில் இறங்குங்கள் என்று சொன்னேன். 

என்னிடம் அவர் எனக்கு படிக்ககூட தெரியாது எப்படி அதில் நான் இறங்கமுடியும் என்று சொன்னார். உங்களால் முடியும் என்று நான் சொல்லி ஒரு சில விசயங்களை சொல்லிக்கொடுத்தேன்.கண்டிப்பாக செய்கிறேன் என்று சொல்லி அந்த தொழிலில் இறங்கினார். 

ஆறு மாத காலங்களாக நல்ல முறையில் முயற்சி செய்து அனைத்து வேலையும் செய்து முடித்து இன்னமும் ஒரு சில மாதங்களில் அவரின் கம்பெனி திறப்பதற்க்கு ஆயத்தம் ஆகிவிட்டது. மிகப்பெரிய அளவில் அவரின் கம்பெனி நடைபெறுவதற்க்கு நான் தான் அவருக்கு ஆன்மீக விசயங்கள் செய்கிறேன். அந்த கம்பெனி திறந்தவுடன் அதனைப்பற்றி உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் ஒரு விஷேசம் இருக்கும். அதனை நாம் தெரிந்துக்கொண்டு அந்த வழியை நாம் தேர்ந்தெடுக்க சொல்லிவிட்டால் அந்த தொழிலில் எந்த தகுதியும் இல்லை என்றாலும் அந்த தொழிலில் அவர் வெற்றி பெறமுடியும்.

சதயம் நட்சத்திரம் ராகுவின் நட்சத்திரம் என்பதால் தகவல் தொடர்பு தொழிலில் வெற்றி பெறமுடியும் என்பதால் அவரை இந்த தொழிலை தொடங்க சொன்னேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு. 

Thursday, October 16, 2014

கலவை


வணக்கம் நண்பர்களே!
பைரவர் வழிபாட்டை தொடர்ந்து செய்தால் வீடு நடுத்தெருவுக்கு வந்துவிடும் என்று சொல்கிறீர்கள். சமீப காலமாக பைரவர் வழிபாடு பிரபலமாகி வருகிறது. சில வலைத் தளங்களில் பைரவர் வழிபாடு ஒன்றையே நோக்கமாக கொண்டு எழுதுகிறார்கள். அசைவத்தை முழுமையாக கைவிட்டால்தான் பலன் தரும் என்றும் சொல்கிறார்கள். சொர்ணாகர்ஷன பைரவரை வழிபடலாமா? இல்லை எந்த பைரவரையுமே வழிபடக்கூடாதா? 

கடவுள் என்பவர் காப்பாற்றுவதற்குத்தானே. அப்படியிருக்க பைரவர் வழிபாடு எப்படி குடும்பத்தை பிரிக்கும்?மேலும் பைரவர் சனி பகவானின் குரு . சனி பகவானின் பாதிப்புகள் குறைய அவரைத்தானே வணங்க வேண்டும். கோவிலில் வைத்து வணங்கலாம் அல்லவா? அப்பொழுது மட்டும் பாதிப்பு ஏற்படாதா?

வணக்கம் பிறமதங்களில் ஒரே கடவுள் வழிபாடு மட்டும் தான் இருக்கும். இந்து மதத்தில் ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு தேவதைகளை உருவாக்கி வைத்திருக்கின்றனர். இது முட்டாள் தனம் கிடையாது. நமது தேவை என்னவோ அதனை பெறுவதற்க்கு சரியான இடத்திற்க்கு சென்று நீங்கள் பெற்றுக்கொள்ளமுடியும் என்று வைத்திருக்கிறார்கள். இது ஒரு அற்புதமான விசயம்.

ஒரு கம்பெனியில் பலவேறு தொழில்கள் இருக்கின்றன. நமக்கு தேவையான ஒரு வேலையை அந்த துறையில் மட்டும் கேட்கும்பொழுது மட்டுமே நமக்கு வேலை நடக்கும். சம்பந்தமே இல்லாத துறையில் நீங்கள் சென்று கேட்டால் என்ன நடக்கும்?

வலைதளங்களில் அனைவரும் சொல்லுகின்றனர் என்று சொல்லுகிறீர்கள். சுயஅறிவோடு எழுதும் தளங்களில் இதனை சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். அனைத்தும் கடன் வாங்கி செய்யும் செயலில் நம்பகதன்மை என்பது சுத்தமாக இருக்காது.

இன்றைக்கு ஆன்மீகம் எப்படி இருக்கிறது என்று நான் பழைய பதிவிலேயே சொல்லியிருக்கிறேன். அதனை மறுபடியும் உங்களிடம் சொல்லுகிறேன். பெண்களால் மோட்சம் அடையமுடியாது என்று சொன்ன புத்தரை விட ஒரு ஞானி இந்த உலகத்தில் இருந்துவிடமுடியாது. அவர் பெண்களுக்கு என்னால் எதுவும் கற்றுதரமுடியாது என்று சொன்னார். ஆனால் நம்ம சாமியார்கள் பெண்களை வைத்து அடிக்கும் கூத்தை நீங்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறீர்கள். இந்த மாதிரி ஆட்கள் ஆன்மீகத்தை சொன்னால் அதில் நம்பகதன்மை எப்படி இருக்கும்.

என்னிடம் தொழில் செய்பவர்கள் என் பேச்சை நம்பி செய்வார்கள். உங்களுக்கு பைரவரை பிடித்து இருந்தால் நீங்கள் வழிபட்டுக்கொள்ளுங்கள். சொல்லவேண்டும் என்று நினைத்தேன். சொல்லிவிட்டேன். செய்வதும் செய்யாததும் உங்களின் விருப்பம். 

தொழில் செய்பவர்களுக்கு மட்டும் தான் நான் கட்டளை இடுவேன். உங்களிடம் எல்லாம் பகிர்ந்துக்கொள்வதோடு சரி நீங்கள் கடைபிடித்தாலும் சரி கடைபிடிக்காவிட்டாலும் சரி. நான் சொல்லும் ஆன்மீகத்திற்க்கும் இப்பொழுது ஆன்மீகத்தை சொல்லும் ஆன்மீகவாதிக்கும் அதிக வித்தியாசம் இருக்கும்.பிறர் சொல்லும் ஆன்மீகத்தைவிட நான் சொல்லும் ஆன்மீகம் முற்றிலும் வேறுபடும். பிடித்தால் எடுத்துக்கொள்ளுங்கள் இல்லை என்றால் விட்டுவிடுங்கள்.

நம்பினால் நம்புங்கள்

சாய்பாபா கடைசிவரை அசைவத்தை உண்டு வாழ்ந்தவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்!

படிப்பதற்க்கும் உண்மையில் நடப்பதற்க்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது.படிப்பது போல் நிஜத்தில் கிடையாது.

அசைவம்

         நீங்களும் நானும் பலமுறை சென்னையில் உள்ள உணவங்களில் அசைவம் சாப்பிட்டு இருக்கிறோம். இந்த அசைவம் சாப்பிடுகிறவன் தானே உங்களின் ஆத்மாவை உணரவைத்தவன்.

அசைவத்தை விடுங்கள் என்று சொன்ன ஆன்மீகவாதிகள் உங்களுக்கு ஆத்மாவை பற்றி காட்டிக்கொடுத்தார்களா?

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

Wednesday, October 15, 2014

செல்வ வளம்


வணக்கம் நண்பர்களே!
                    என்னுடைய தொழில் நண்பர்களுக்கு என்று நான் சொல்லும் ஒரு விசயத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். தொழில் அதிபர்களின் நோக்கம் மிகப்பெரிய அளவில் செல்வவளத்தை சேர்க்கவேண்டும் என்று நினைப்பார்கள்.

செல்வவளத்தை நீங்கள் சேர்க்கவேண்டும் என்றால் சிவன் பெருமாள் வழிபாட்டை நீங்கள் செய்யகூடாது என்று சொல்லுவேன். அதனை நீங்களும் கடைபிடித்து வந்தால் போதும். 

இந்து மதத்தை பலரும் விரும்புவதற்க்கு காரணம் சிவன் மற்றும் பெருமாள் வழிபாடு. சிவன் மற்றும் பெருமாள் முக்திக்கு மட்டும் தான் வழி செய்வார்கள். முக்தியை நாடி வருபவர்களுக்கு இந்துமதம் வழிகாட்டும். இதில் உள்ள மிகப்பெரிய சிறப்பு முக்தியை அடைய அனைத்து வழியும் சொல்லும் செல்வவளத்திற்க்கு என்று தனி வழிபாடு உண்டு.

இப்பொழுது பைரவர் வழிபாடு அனைத்து இடத்திலும் சிறப்பாக நடைபெறுகிறது. பைரவரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களின் குடும்பத்தை பார்த்தால் குடும்பம் சீர்கெட்டு போய்விடும். குடும்பத்தில் உள்ளவர்கள் தனித்தனியாக சென்றுவிடுவார்கள்.

பெருமாள் சிவன் வழிபாடு எல்லாம் அளவாேடு இருக்கவேண்டும். அதே கதி என்று கிடந்தால் உங்களை ஆண்டியாக மாற்றிவிடும். கண்டிப்பாக தொழில் செய்யும் நண்பர்களுக்கு இந்த வழிப்பாட்டை செய்ய சொல்லமாட்டேன்.




திருப்பூரில் வரும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையில் என்னை சந்திக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

வெற்றி பெறுவதற்க்கு வழி


வணக்கம் நண்பர்களே!
                    பதிவை எழுத தொடங்கலாம் என்று சிஸ்டத்தை தொட்டேன். நண்பர் ஒருவர் போன் செய்திருந்தார் அவரை தொடர்புக்கொள்ளும்பொழுது அவர் கேட்ட கேள்விக்கு பதிலை தந்தேன். உங்களுக்கு அதனை தருகிறேன்.

விடியற்காலையில் எழவேண்டும் என்று சொல்லுகிறீர்கள். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லிவிடுங்கள் கேட்டார். நான் சொல்லதான் முடியும். நான் வந்து உங்களை எழுப்பமுடியாது அல்லவா. 

ஒன்றை மட்டும் நினைத்துக்கொள்ளுங்கள். ஒருவன் வெற்றி பெறவேண்டும் என்றால் அவனுக்குள் மிகப்பெரிய வேகம் இருக்கவேண்டும். அந்த நெருப்பு இல்லை என்றால் ஒருத்தனால் வெற்றி பெறுவது கடினம். நாம் நினைத்த இடத்திற்க்கு செல்லவேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது அதற்கு நாம் நம்மை தயார் செய்யவேண்டும்.

கோபம் உள்ளவனுக்கும் காமம் உள்ளவனும் அதிகம் தூக்கம் வராது. அந்த காரணத்தால் மட்டுமே உங்களிடம் நான் சொன்னது நீ வெற்றி பெறவேண்டுமானால் கோபம் மற்றும் காமம் வேண்டும் என்று சொன்னேன்.

விடியற்காலையில் எழவேண்டுமானால் முன்கூட்டியே தூங்கசென்றால் போதும். விடியற்காலையில் உங்களின் உடல் அதுவாகவே எழுந்துவிடும். இரவு பனிரெண்டு மணிக்கு தூங்கினால் காலை பத்து மணிக்கு தான் உடல் எழும்.

ஆன்மீகமாக இருந்தாலும் சரி வாழ்க்கையாக இருந்தாலும் சரி உனக்குள் வெறி வேண்டும். நாம் ஜெயிக்க பிறந்தவன் என்று உங்களின் உள்மனதில் எந்த நேரமும் சிந்தனை இருந்தால் போதும் கண்டிப்பாக உங்களை தேடி நல்ல வாழ்க்கை வந்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

Tuesday, October 14, 2014

மாற்றம்


வணக்கம் நண்பர்களே!
                    எத்தனை பிறவி எடுத்தாலும் நாம் செய்ய வேண்டியதை செய்ய தொடங்கினால் மட்டுமே இப்பிறவியில் இருந்து விடுபடலாம். பரிகாரங்களை நான் எழுதிக்கொண்டு வந்தாலும் அதனை செய்யும்பொழுது மட்டுமே உங்களுக்கு நல்லது நடக்கும்.

பரிகாரங்களை செய்வதைவிட நாம் வாழ்க்கை முறையை கொஞ்சம் மாற்றினாலும் நாம் நினைத்தை அடையமுடியும். நமது பழக்கவழக்கங்களால் நாம் கட்டுப்பட்டு கிடப்பதால் நமது பிரச்சினையை தீர்க்கமுடிவதில்லை. 

மூச்சுப்பயிற்சி செய்யவேண்டும் என்று அனைவரும் சொல்லுகிறார்கள் இதனை செய்யாமல் வேறு வழி இருக்கிறதா என்று பார்த்தால் அதற்கும் இயல்பாகவே ஒரு வழி இருக்கிறது. விடியற்காலை மூணரை மணிக்கு நீங்கள் எழுந்துவிட்டால் மூச்சுப்பயிற்சி செய்யவேண்டியதில்லை. விடியற்காலையில் எழுவதில் அவ்வளவு விசயம் இருக்கிறது.

பரிகாரத்தை பூஜை முறையில் நாம் செய்துக்கொண்டிருப்பதைவிட நமது பழக்கவழக்கத்தில் சின்ன மாற்றத்தை கொண்டுவந்தும் நாம் நினைப்பதை அடைந்துவிடமுடியும். மாற்றத்தை நாம் கொண்டுவந்துவிட நாம் முதலில் விழித்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தால் கண்டிப்பாக மாற்றம் உண்டு.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

தீபாவளி ஸ்பெஷல்


வணக்கம் நண்பர்களே!
                      தீபாவளி நெருங்கி வருவதால் அனைவரும் பிஸியாக இருப்பீர்கள். இந்த நேரத்தில் உங்களின் கர்மத்தை குறைத்து நல்ல வாழ்க்கை வாழ்வதற்க்கு ஒரு வழியை ஏற்படுத்தி தருவதற்க்கு ஒரு சில கருத்தினை உங்களுக்கு சொல்லுகிறேன். முடிந்தால் செய்து பாருங்கள்.

உங்களின் அருகில் அல்லது தெரிந்தவர்கள் ஏழையாக இருந்தால் அவர்களுக்கு ஆடைகளை தானமாக எடுத்து தரலாம். தீபாவளி செலவுக்கு என்று அவர்களுக்கு பணம் கொடுத்து உதவலாம். ஏதாவது அவர்களுக்கு விருப்பட்டதை வாங்க நினைப்பார்கள் அதற்கு பணம் தேவைப்படும் அதனால் கொடுத்து உதவுங்கள்.

ஏழை பெண்களாக இருந்தால் நல்ல தரமான சேலைகளை வாங்கி கொடுங்கள்.குறிப்பாக சேலைகளை கொடுப்பது மிகப்பெரிய செல்வவளத்தை உங்களுக்கு கொடுக்கும். அண்ணன் ஸ்தானத்தில் இருந்து கொடுப்பதாக இது இருக்கவேண்டும்.

பண்டிதனுக்கு உதவுவது மிகப்பெரிய அளவில் உங்களின் கர்மத்தை குறைக்கும். அதாவது பண்டிதன் என்பவன் சோதிடம் பார்ப்பவன் கோவிலுக்கு பூஜை செய்பவன் இவர்கள் அனைவரும் பண்டிதன் கணக்கில் வரும். இவர்களில் போதிய வருமானம் இல்லாதவர்களாக பார்த்து உதவுங்கள். எனக்கு அனுப்பிவிடாதீர்கள்.

இதனை செய்யும்பொழுது முடிந்தவரை முன்கூட்டியே செய்துவிடுவது நல்லது. ஏன் என்றால் இவர்கள் கடன்வாங்கி இதனை செய்வதற்க்கு முன் செய்துவிடுவது நல்லது.

ஒரு சில ஏழை குடும்பங்களில் இனிப்பு வகைகளை செய்வதற்க்கு அவர்களுக்கு தேவையான மளிகைப்பொருட்களை வாங்க கையில் பணம் இல்லாமல் இருப்பார்கள். அவர்களுக்கு மளிகைப்பொருட்களை வாங்கிக்கொடுத்துவிடுவதும் நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

Monday, October 13, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    நண்பர் ஒருவர் என்னிடம் பேசும்பொழுது சொன்னார். உங்களின் பதிவுகளில் அதிகமாக சொல்லும் விசயம் பணமாக இருக்கிறது பணம் தான் ஆன்மீகமாக என்று கேட்டார்.

சோற்றுக்கு வழியின்றி தெருவில் உட்கார்ந்தால் அது ஆன்மீகம். பணத்தோடு நல்ல இருந்துக்கொண்டு சென்று கடவுளை வணங்குங்கள் என்று சொன்னால் தவறாக இருக்கிறது.

ஒருத்தருக்கு கூட அவ்வளவு எளிதில் ஞானம் கிடைத்துவிடாது. ஞானம் வேண்டும் என்றால் நீங்கள் நல்ல முறையில் வாழ்ந்து இருக்கவேண்டும். அப்படி வாழ்ந்து இருந்தால் மட்டுமே அடுத்த இலக்கான ஆன்மீகத்தை நோக்கி பயணம் அமையும்.

இந்தியாவில் தவறாக சோற்றுக்கு வழி இல்லாதவனை பார்த்து ஆன்மீகவாதிகள் என்று சொல்லிவிட்டார்கள். நல்ல சொகுசாக முதலில் வாழ்வதற்க்கு ஆன்மீகத்தை பயன்படுத்திக்கொள்வதற்க்கு நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

பணம் மட்டுமே ஆன்மீகம் கிடையாது அதனை தாண்டி நிறைய இருக்கிறது ஆனால் முதலில் நீங்கள் பணத்தை வைத்து அனுபவிக்க தெரிந்துவைத்திருக்கவேண்டும் அதன் பிறகு ஆன்மீகத்தை பார்த்துக்கொள்ளலாம்.
.
நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

பயணங்கள்


வணக்கம் நண்பர்களே!
                   ஒரு சில நண்பர்கள் என்னிடம் கேட்டனர் சார் நீங்கள் வெளியில் உள்ள கோவிலுக்கு செல்லும்பொழுது எங்களையும் அழைத்துக்கொண்டு செல்லுங்கள் என்று கேட்டனர்.

பொதுவாக நான் வெளியில் செல்லும்பொழுது எனது சொந்த வேலைக்காக வெளியில் செல்லுவேன். அந்த பயணங்களில் எல்லாம் எனது சொந்த தேவை இருக்கிறது. லாபம் அற்ற பயணங்கள் செல்லும்பொழுது ஆன்மீக தேவை என்று செல்லும்பொழுது உங்களிடம் தெரிவிக்கிறேன்.

ஒரு மனிதனின் நேரத்தை நமது சொந்த தேவைக்காக வீணடிக்ககூடாது என்பதில் மிகுந்த கவனத்தை நான் எப்பொழுதும் எடுத்துக்கொள்வேன். உங்களுக்கு நேரம் இருக்கும்பொழுது நான் அந்த இடங்களுக்கு எல்லாம் சென்று வாருங்கள். நேரத்தைப்பற்றி எனக்கு தெரிந்த காரணத்தால் மட்டுமே அம்மன் பூஜைக்கு கூட உங்களை நான் கூப்பிடுவதில்லை.

நான் திட்டமிட்டு செல்லும் பயணங்களைப்பற்றி பதிவில் சொல்லிவிடுகிறேன். அந்த நேரத்தில் நீங்கள் ஒய்வாக இருந்தால் என்னோடு வாருங்கள்.

தொழில் அதிபர்கள் வருகின்றார்கள் என்றால் அவர்கள் நல்ல சம்பாதித்து வைத்துள்ளார்கள். அதனால் அவர்கள் என்னோடு வருகிறார்கள். அவர்களுக்கும் லாபமாக பயணங்கள் அமைக்கின்றன.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

Sunday, October 12, 2014

ஏழைகளின் திமிர்


வணக்கம் நண்பர்களே!
                      இன்றைய காலத்தில் பல பேர் ஏழையாக இருப்பதற்க்கு அவர்களின் திமிரும் ஒரு காரணமாக இருக்கும். பல வாய்ப்புகள் இருந்தும் ஒரு சிலர் தன்னுடைய திமிரால் முன்னேற்றம் அடையாமல் இருக்கின்றார்கள்.

ஒரு சிலர் நல்ல வாழ்க்கை வாழ்ந்து இருப்பார்கள் அவர்கள் திடீர் என்று ஏதாவது ஒரு வகையில் கீழே விழுந்து இருப்பார்கள். அவர்கள் தன்னுடைய கெளரவத்தை விட்டுக்கொடுக்கமாட்டார்கள். இது ஒரு வகையில் நன்றாக இருந்தாலும் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து கீழே இறங்கி சென்று பிறரை நாடினால் அவர்களின் குடும்பம் மேலே வரமுடியும்.

ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் வலுத்து இருந்தால் அவர்கள் கொஞ்சம் திமிராக இருப்பதற்க்கு வாய்ப்பு அதிகம் இருக்கும். சனிக்கிரகம் இவர்களை கீழே தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கும்.  செவ்வாய்கிரகத்தின் காரத்துவம் இவர்களை தூக்கி நிறுத்துவதால் இவர்கள் தைரியத்தோடு அனைத்தையும் எதிர்க்கொள்பவராக இருப்பார்கள்.

ஏழைகளாக இருந்துக்கொண்டு தனியாக வசித்து வந்தால் இது பிரச்சினை இல்லை. குடும்பத்தை வைத்துக்கொண்டு வீண் வம்பு தேவையில்லை. நமது ஜாதகத்தில் செவ்வாய் வலுத்த ஆட்கள் நிறைய பேர் இருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன். அதனை எல்லாம் மாற்றிக்கொண்டு வாய்ப்பை தேடி நல்ல வாழ்க்கை வாழுங்கள்.
நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.



Saturday, October 11, 2014

சனி என்ற நீதிமான்


வணக்கம் நண்பர்களே!
                    சமீபத்தில் திருப்பூர் சென்று இருந்தபொழுது நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது அதுவும் நாட்டுநடப்பைப்பற்றி பேசிக்கொண்டு இருக்கும்பொழுது அவர் சொன்னார் சனிக்கிரகம் ஒருவருக்கு வலுத்து இருந்தால் அவர் நேர்மையானவராக இருப்பார் என்றார்.

ஒருவருக்கு சனிக்கிரகம் வலுத்து இருந்தால் அவரிடம் நீங்கள் நேர்மையாக இருந்தால் மட்டுமே அவரிடம் நீங்கள் பழககூட முடியும். அவரை நீங்கள் என்ன விலை கொடுத்தாலும் வாங்கவே முடியாது.

நான் இப்படிப்பட்ட நண்பர்களின் ஜாதகத்தை பார்த்து இருக்கிறேன். அவர்கள் நேர்மையானவராக இருப்பார்கள். எதாவது காரியம் செய்ய கீழே இறங்கி வாருங்கள் என்று கேட்டால் கூட அவர்கள் நான் எல்லாம் அப்படி செய்யமுடியாது அவன் என்ன வேண்டுமானாலும் செய்துக்கொள்ளட்டும் நான் இப்படி தான் இருப்பேன் என்பார்.

அரசாங்க வேலையில் ஒரு சிலர் இப்படி கூட இருக்கிறார்கள். அவர்கள் யாரிடமும் வலைந்து போகமாட்டார்கள். சனி கிரகம் பாேல் நீதி தவறாமல் செய்வது வேறு கிரகம் கிடையாது என்றே சொல்லவேண்டும். தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக நீதியாக செய்யகூடிய ஒரே கிரகம் சனிக்கிரகம் மட்டுமே.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

கடல் குளியல்



வணக்கம் நண்பர்களே!
                    கோவளம் பீச்சிற்க்கு சென்று வந்து இருந்தேன். அதனைப்பற்றி உங்களிடம் சொன்னேன் அந்த பீச்சில் நான் குளிக்கவில்லை. சரி அதில் என்ன விஷேசம் இருக்கிறது. 

இராமேஸ்வரத்தில் உள்ள கடலில் நீங்கள் குளித்துவிட்டு பிறகு நீங்கள் தீர்த்தத்தில் குளிக்க சொல்லுவார்கள். கடலில் குளிக்கும்பொழுது உங்களின் சூட்சம உடல் சுத்தப்படுத்தப்படும் என்பதற்க்காக இந்த மாதிரி முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். 

கடலில் உள்ள உப்பு நீர் உங்களின் சூட்சமசரீரத்தை நல்லபடியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. அதனால் நீங்கள் மூன்று மாதத்திற்க்கு ஒரு முறை அல்லது வருடத்திற்க்கு ஒரு முறையாவது கடலில் சென்று குளித்துவிட்டு வாருங்கள். 

நான் ஒவ்வொருவரையும் வாழ்க்கையில் ஒருமுறையாவது இராமேஸ்வரம் சென்று விட்டு வாருங்கள் என்று சொல்லுவேன். அதனையும் கடைபிடியுங்கள் அதே நேரத்தில் கடலில் குளிப்பதையும் கடைபிடித்து வாருங்கள். கடல் குளியல் கர்மத்தை கண்டிப்பாக நீக்கும் சக்தி உள்ளது

கடலில் குளிக்கும்பொழுது எச்சரிக்கையுடன் குளியுங்கள். நமது நோக்கம் கடலிக் குளித்துவிட்டு வருவது மட்டுமே ஆழமான பகுதிக்கு செல்லாமல் கரைபகுதியில் குளித்துவிட்டு வந்துவிடுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு சோதிடரிடம் நீங்கள் சென்றால் ஒரு பரிகாரத்தை செய்துக்கொண்டு வந்துவிடுவீர்கள். அவர்களும் பரிகாரத்தை செய்துக்கொடுத்துவிட்டு உங்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு உங்களை அனுப்பிவிடுவார்.

பரிகாரம் வேலை எல்லாம் எப்படி இருக்கும் என்றால் ஒரு பூஜையை செய்து அனுப்பிவிடுவார்கள் அது நடக்கலாம் நடக்காமலும் இருக்கலாம்.

நான் பதிவுகளில் கொடுத்த பரிகாரத்தை நீங்களே செய்தால் போதும் உங்களின் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள முடியும்.  நான் நிறைய பரிகாரங்களை எளிய முறையில் உங்களுக்காக சொல்லியுள்ளேன். அதனை மட்டும் நீங்கள் கடைபிடித்தால் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி உங்களுக்கு தானாகவே வந்துவிடும்.

பரிகாரம் செய்கிறேன் என்று வெளியில் சென்று ஏமாந்துவிடவேண்டாம் என்பதற்க்காக இதனை சொன்னேன். 

ஒவ்வொரு மாதமும் ஒரே வாடிக்கையாளரிடம் இருந்து பணம் வாங்கவேண்டும் என்றால் அது சாதாரணமான காரியமாக இருக்காது. மாதம் மாதம் பணம் எனக்கு கொடுக்க கூடிய நிலை வரும்பொழுது என்னிடம் நீங்கள் வந்தால் போதும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.