Followers

Saturday, November 30, 2013

காயத்ரி மந்திர பயிற்சி


வணக்கம் நண்பர்களே!
                     காயத்ரி மந்திரப்பயிற்சியைப்பற்றி நமது ஜாதககதம்பத்தில் எழுதிவருவதில் இருந்து பல நண்பர்கள் இதனை செய்துவருகிறார்கள். இப்பொழுது வளர்பிறை ஆரம்பிப்பது முன்னால் பல பேர்கள் என்னை தொடர்புக்கொண்டு கேட்டுவருகிறார்கள். அந்தளவுக்கு ஈடுபாட்டோடு என்னை தொடர்புக்கொள்வதற்க்கு முதலில் அவர்களுககு நன்றி சொல்லவேண்டும். 

காயத்ரி மந்திரத்தை பல ஆண்டுகளாக பல பேர் செய்துவருகிறார்கள். அதனைப்பற்றி நமது ஜாதககதம்பத்தில் சொன்னவுடன் பலர் முன்வந்து நானும் செய்கிறேன் எனக்கு சொல்லி தாருங்கள் என்று கேட்டார்கள். என் மீது உள்ள நம்பிக்கையில் கேட்கிறார்கள். நானும் சொல்லி தருகிறேன். 

நான் எப்படி இதனை கற்று வந்தேனோ அதனைபோல் தான் உங்களுக்கு காயத்ரி மந்திரத்தை சொல்லிக்கொடுக்கிறேன். இதில் நமது அம்மனின் பங்கு அதிகமாக உங்களுக்கு இருக்கும். மிகப்பெரிய சக்தி உங்களுக்கு கிடைக்கிறது என்பதை மறக்காதீர்கள்.

காயத்ரி மந்திரம் செய்பவர்கள் வரும் 5/12/2013 வியாழக்கிழமையில் இருந்து தொடங்கலாம். குருவின் நாளான வியாழக்கிழமை அன்று தொடங்குவது நல்லது. காயத்ரி மந்திரத்தைப் பயிற்சி புதிதாக தொடங்குபவர்கள் என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

காயத்ரி மந்திர பயிற்சி என்றவுடன் ஏதோ தனியாக வகுப்பு நடத்துவார்கள் என்று நினைக்காதீர்கள். உங்களின் வீட்டில் நீங்கள் செய்யும் ஒரு பயிற்சி மட்டுமே. என்னிடம் இருந்து தகவல் மட்டும் கிடைக்கும்.

மேலே இருக்கும் காயத்ரி தேவி அம்மன். சென்னை காளிக்காம்பாள் கோவிலில் இருக்கும் காயத்ரி தேவி இது. நெட்டில் தேடியபொழுது கிடைத்தது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

சனிக்கு பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                   இன்று சனிக்கிழமை சனியின் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பை சாத்துவதற்பக்கு பல நண்பர்களுக்கு செய்ய சொல்லிருந்தேன். அவர்கள் பல பேர்கள் காலையிலே சாத்திவிட்டு போன் செய்தார்கள். பலர் மாலை நேரத்தில் செய்கிறேன் என்று சொல்லியுள்ளார்கள்.

ஏற்கனவே செய்தவர்களாக இருந்தால் இன்று ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துங்கள். அப்படி முடியவில்லை என்றால் நெய்தீபம் ஏற்றுங்கள். சனிக்கும் சேர்த்து ஒரு நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றிவாருங்கள்.

சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து குளித்துவாருங்கள். சனியின் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அது உங்களை விட்டு விலகுவதற்க்கு சனிக்கிழமை நல்லெண்ணெய் குளியல் அவசியம். 

இப்பொழுது எல்லாம் மக்கள் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது கிடையாது. இதனை பல பேர் மறந்துவிட்டார்கள். இளம் வயதினருக்கும் இதனைப்பற்றி சொல்லி தரவில்லை.

இதனை படிக்கும் நீங்கள் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை உங்களது வாரிசுக்களுக்கு சொல்லி கொடுங்கள். உடலுக்கும் நல்லது மற்றும் சனியின் பாதிப்பில் இருந்து வெளிவருவதற்க்கும் நல்லது.

இதனைப்படித்துவிட்டு உடனே சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். முதலில் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும்பொழுது எண்ணெய் தேய்த்து அதிக நேரம் வைத்துவிட்டு குளிக்காதீர்கள். ஜலதோஷம் பிடித்துவிடும். எண்ணெய் தேய்த்து ஐந்து நிமிடத்தில் குளித்துவிடுங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

குரு தசா பலன்கள் பகுதி 6


வணக்கம் நண்பர்களே!
                     குரு கிரகம் உட்கார்ந்து இருக்கும் இடத்தை கெடுக்கும் என்று சொல்லுவார்கள் ஆனால் குரு கிரக தசாவில் உட்கார்ந்து இருக்கும் இடத்தை அந்தளவுக்கு கெடுப்பதில்லை என்று பல ஜாதகங்களை பார்த்ததில் தெரியவருகிறது.

லக்கினத்தில் குரு கிரகம் அமர்ந்திருந்தால் அதன் தசாவில் நன்றாக இருக்கின்றனர். லக்கினத்தில் குரு அமரும்பொழுது எடுத்த அனைத்தும் தடங்கல் ஏற்படும் என்று சொல்லுவார்கள் ஆனால் குரு கிரகம் பார்க்கும் பார்வையால் அனைத்து தடைகளையும் மீறி வெற்றி கொள்ளவைக்கிறது. 

குரு பார்வை என்பது ஜாதகத்தில் மிகவும் முக்கியமான ஒன்று. உங்களுக்கு குரு தசா நடைபெற்றால் அமர்ந்திருக்கும் வீட்டை வைத்து மட்டும் பலனை கணிக்ககூடாது. அது பார்க்கும் வீட்டில் இருந்தும் பலனை தருகிறது.பார்க்கும் வீட்டின் பலனையும் நாம் கணித்துக்கொள்வது நல்லது.

குருவை பார்க்கும் கிரகத்தின் நிலையையும் நாம் கவனித்துக்கொள்வது நல்லது. தீயகிரகங்களின் பார்வையில் குரு இருந்துவிடகூடாது. அதே நேரத்தில் தீயகிரகங்களோடு சேர்ந்து இருந்துவிடகூடாது.  அப்படி குரு இருந்தால் குருவின் தசாவில் பலன் குறைந்து தரும்.

குருவின் மொத்தபலனும் கெடுதல் கிரகங்களால் அல்லது தீயகிரகங்களின் பார்வையால் போய்விடாது. எப்படி குரு கெட்டாலும் அது உங்களுக்கு பலனை தரும். முழுபலனையும் தராமல் குறைவாக பலனை தரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                        இந்த உலகம் பயப்படுறதுக்கு என்னிக்குமே தயாரா இருக்கு. பயமுறுத்துறதுக்கு தான் ஒரு ஆள்  தேவை என்று ஏதோ ஒரு படத்தில் இந்த வசனம் வரும். மாந்தீரிகத்தால் உங்களை நான் முடக்கிறேன். உங்களை கொல்லுகிறேன் என்று சொல்லுவதும் இப்படிபட்ட ஒன்று.

மாந்தீரிகம் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. ஒருவரை கொல்லுவதற்க்கு அவ்வளவு எளிதில் எந்த தெய்வமும் உடன் வராது. மாந்தீரிகம் செய்பவனும் தான் மாந்தீரிகன் என்று ஒருபோதும் வெளியில் சொல்லமாட்டான். உண்மையான நிலவரம் இப்படி இருக்கும்பொழுது தெருவுக்கு தெரு மாந்தீரிகம் செய்யவர்கள் நான் அந்த வசியம் செய்கிறேன். இது செய்கிறேன் என்று போர்ட் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள்.

ஒரு உண்மையை சொல்லுகிறேன். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மாந்தீரிகம் செய்பவர்கள் மொத்தம் எத்தனை பேர் தெரியுமா ஐந்து பேர் மட்டுமே. அதில் தமிழ்நாட்டில் ஒருவர் வயதாகிவிட்டதால் இப்பொழுது அவர் செய்யாமல் இருக்கிறார். கேரளாவில் நான்கு பேர் மட்டுமே செய்கிறார்கள். இந்த நான்கு பேரும் பணத்திற்க்காக ஒரு போதும் செய்யமாட்டார்கள். 

இவர்கள் எப்பொழுது தன்னைப்பற்றி வெளியில் சொல்லிக்கொள்வதில்லை. நான்கு பேரில் ஒருவர் சந்நியாசியாக வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கிறார். மூன்று பேர் மட்டும் கேரளாவில் இருக்கின்றனர். அப்படி இருக்கும்பொழுது நாட்டில் எவ்வளவு போலிகள் என்று பாருங்கள். இதனை கண்டு நீங்கள் அஞ்சவேண்டியதில்லை. உங்களை பயமுறுத்தி கொல்லுவது மட்டுமே போலி மாந்தீரிகர்களின் வேலை. 

உண்மையாக செய்யும் நான்கு பேரும் ஒரு நாளும் மனிதர்களை கொல்லமாட்டார்கள். மந்திரத்தால் ஒருவரும் சாகமாட்டார்கள். பயத்தால் சாவுகிறவர்கள் அதிகம் பேர்.உண்மையாக செய்யும் நான்கு பேரும் அவர்கள் செய்யும் வழிகள் மற்றும் மூலிகைகளைப்பற்றி எந்த ஒரு தகவலும் புத்தகத்திலும் மற்றும் இண்டர்நெட்டிலும் இதுவரை வரவில்லை.

வடஇந்தியாவில் அதிகபேர் இருக்கின்றனர். அவர்கள் இங்கு வரவதில்லை. பிறமதங்களில் ஒரு சிலர் இருக்கின்றனர். மாந்தீரிகம் செய்து உன்னை கொன்றுவிடுவான் என்று உங்களிடம் சொன்னால் தாராளமாக செய்துக்கொள் என்று சொல்லிவிட்டு வாருங்கள். அவர்களால் ஒன்றும் செயயமுடியாது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

குரு யார்?


வணக்கம் நண்பர்களே!
                     ஒரு சில நண்பர்களை சந்திக்கும்பொழுது அவர்கள் சொல்லும் வார்த்தை. குருவை காட்ட வேண்டியதானே என்று கேட்பார்கள். அவர்களிடம் சொல்லும் ஒரு சில தகவல்களை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

எப்பொழுது நம்மை வெளிக்காட்ட தொடங்குகிறோமோ அப்பொழுது அந்த இடத்தில் ஒரு நோக்கம் இருக்கின்றது என்று அர்த்தம். குரு எதற்கும் ஆசைப்படதா ஒரு ஆள். எந்த இடத்திலும் தன்னை காட்டுக்கூடாது என்ற பிடிப்பில் உறுதியாக இருக்கின்றார். அவரின் விருப்பதால் அவரைப்பற்றி வெளியில் நான் சொல்லுவது இல்லை.

என்னை தேடிவரும் ஒரு சில சாமியார்களை பார்த்து ஒரு சில நண்பர்கள் இவரா உங்களின் குரு என்று கூட கேட்பார்கள். ஒரு சிலர் அந்த சாமியார்களிடம் தனியாக சென்று ஏமாந்தவர்களும் இருக்கின்றனர். நான் பல சாமியார்களிடம் தொடர்பு வைத்திருப்பது எனது தேவைக்காக வைத்திருக்கிறேன். அவர்களை நம்பி நீங்கள் போககூடாது. என்னையும் எனது குருநாதரையும் சேர்த்து பார்க்கவே முடியாது.

எனக்கு ஒரு தேடுதல் இருந்தது அந்த தேடுதலுக்காக நான் அலைந்தேன். அப்பொழுது குலதெய்வத்தின் அருளால் எனக்கு ஒரு குரு கிடைத்தார். குரு வழிகாட்டினார். அந்த தேடுதல் கிடைத்தது. குருவின் பங்கு 1 சதவீதம் மீதி இருக்கும் 99 சதவீதம் என்னுடையது. அனைவருக்கும் இதுபோல் மட்டுமே. எனக்கு தெரிந்தவரை குரு வேறு யார்க்கும் எதனையும் கற்று தரவில்லை என்று நினைக்கிறேன்.அவர் அடுத்தவர்களுக்கு கற்று கொடுத்தாலும் அதனைப்பற்றி கேட்கும் உரிமை எனக்கு கிடையாது.

எனது குரு எந்த ஒரு ஊடகத்திலும் இதுவரை வரவில்லை. அவர்க்கு தெரிந்தவரை கடவுளிடம் மட்டுமே எதிர்பார்ப்பார்.மனிதர்களிடம் அவர் எதையும் எதிர்பார்த்தது கிடையாது. அவர் அப்படி இருக்கும்பொழுது அவர் எப்படி வெளியில் தன்னை காட்டிக்கொள்வார். ஒரு வேளை அவர் விருப்பபட்டு நமது ஜாதக கதம்பத்தில் மட்டுமே வந்தாலும் வரலாம்.

நான் பார்த்தவரை குரு என்பவர்கள் கண்டிப்பாக தானாகவே சென்று கற்றுக்கொடுக்க மாட்டார்கள். நாம் தான் சென்று கற்றுக்கொள்ளவேண்டும். இப்பொழுது எல்லாம் ஆன்மீக சிறப்பு வகுப்புகள் எல்லா ஊர்களிலும் மற்றும் எல்லாம் நாடுகளிலும் நடைபெற்றுவருகின்றது. குருவாக இருப்பவர்கள் தேடி சென்று அனைவருக்கும் கற்றுக்கொடுக்கின்றனர். அந்தளவுக்கு மலிவாக ஆன்மீகம் இருக்கின்றது. 

இன்றைய காலகட்டத்தில் ஒரு உண்மையான குருவை தேடி கண்டிப்பது கடினம்.உண்மையாக இருப்பவன் வெளியில் தெரியமாட்டான். அவன் யாரையும் தேடி போகமாட்டான். ஒரு காலகட்டத்தில் குரு விருப்பபட்டால் நமது ஜாதக கதம்பத்தில் அவரைப்பற்றி செய்தியை தருகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Friday, November 29, 2013

கேள்வி & பதில்


ஸ்ரவாணி said...

பொதுவாக சனி முன்ஜென்ம வினையையும் குரு இந்த ஜென்மத்தில் 
நாம் செய்யும் நற்காரியங்களையும் குறிக்கும் , அதாவது இந்த ஜென்மத்துப் 
பலனையும் தரும் என்று சொல்வர். இதில் குரு எப்படி பூர்வபுண்ணியத்திற்குக் 
காரகம் வகிக்க முடியும் ? அப்படி என்றால் முன்ஜென்மத்தில் பாவம் செய்து இருந்தால் 
சனியும் புண்ணியம் செய்து இருந்தால் குருவும் பலன்களைத் தரும் என்று 
கொள்ளலாமா ? என் நீண்ட நாளைய சந்தேகம் இது. 

தனியாகப் பதிவிட்டு விளக்கினாலும் சந்தோசம் கொள்வேன். நன்றி

தங்களின் கேள்விக்கு நன்றி. முன் ஜென்மத்தில் நாம் செய்த தவறை சரியாக கணக்கு எடுத்து வைத்திருப்பார். அதில் தவறுகள் இருக்கும். குரு நாம் செய்யும் நல்லபலனை தரும் கிரகம். குரு தான் பூர்வபுண்ணியத்திற்க்கு காரகம் வகிக்கிறார். புண்ணியம் என்று வந்தாலே நாம் செய்யும் நல்லது என்று அர்ததம். முன் ஜென்மத்தில் நல்லது செய்திருக்கலாம் அதற்கு இப்பொழுது பலனை தருவதற்க்கு குரு தயாராக இருப்பார். சனி தவறை வைத்து தண்டனை தருவதற்கு இருப்பார்.

குருவின் பார்வையும் எடுத்துக்கொள்ளும்பொழுது ஐந்து மற்றும் ஒன்பதாவது பார்வை என்று வைத்திருக்கிறார்க்ள். பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கியம் என்ற கணக்கில். குருவின் பார்வை நல்லதை செய்யும். சனியின் பார்வை தீயவை செய்யும். 

பூர்வபுண்ணிய அதிபதி கெட்டிருதால் குழந்தை இருக்காது அப்பொழுது என்ன செய்வார்கள் குரு நன்றாக இருக்கின்றதா என்று பார்ப்பார்கள். இது எல்லாம் குரு நன்மையை தரும் என்ற கணக்கில் மட்டுமே.

குரு நன்றாக இருக்கும்பட்சத்தில் குழந்தை இருக்கும். பூர்வபுண்ணியம் என்பதற்க்கு குரு அதிகம் காரத்துவம் வகிக்கிறார். 

தெரிந்ததை சொல்லி இருக்கின்றேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

குரு தசா பலன்கள் பகுதி 5


வணக்கம் நண்பர்களே!
                     பயணங்களை முடித்துவிட்டு இன்று சென்னை வந்துவிட்டேன். தொடர்ந்து பார்க்கலாம். குரு தசா பல நண்பர்களுக்கு நடைபெறுகிறது என்று நினைக்கிறேன். ஏகாப்பட்ட போன்கால்கள் மற்றும் மெயில்கள் வருகின்றன். உங்களின் சந்தேகங்களுக்கு பதிவு வழியாக அனைவரும் பயன்பெறும் வகையில் தருகிறேன்

முதலில் குரு தசா ஒருவருக்கு நடைபெற்றால் அவர்கள் கண்டிப்பாக உணவு பழக்கவழக்கத்தை மாற்றவேண்டும். முடிந்தவரை சைவ உணவு வகைகளை விரும்பி உண்ணுங்கள். பிராமணர்கள் இல்லாதவர்களுக்கு குரு தசா நடைபெறும்பொழுது உணவால் பிரச்சினை ஏற்படுத்தும். சாப்பிடும் உணவு ஜீரணம் ஆகாது.

பொதுவாக குரு ஆறாவது வீட்டில் இருந்தால் ஜீரணத்தில் பிரச்சினை ஏற்படும். குரு எந்த வீட்டில் இருந்தாலும் குரு தசாவில் இந்த பிரச்சினையை சந்திக்க நேரிடும். ராகு தசாவில் இவர்கள் இஷ்டத்திற்க்கு வாரத்தில் ஏழு நாட்களும் அசைவம் சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். குரு தசாவில் இந்த பழக்கத்தை மாற்றவே ஜீரண பிரச்சினையை ஏற்படு்த்தி விடுவார்.

நீங்களே சாப்பாட்டை குறைக்க வேண்டிய நிலையை ஏற்படுத்திவிடுவார்.ஏன் சாப்பாட்டில் கை வைக்கிறார் என்றால் உங்களுக்கு சிந்திக்கும் திறனை அதிப்படுத்துவார். வயிறுமுட்ட சாப்பிட்டால் என்ன நடக்கும் நன்றாக தூக்கம் வரும். தூங்கிக்கொண்டே இருப்பவர்கள் எப்படி சிந்திப்பார்கள். அரைவயிறு சாப்பிடவைப்பார் குரு. மூளையை தூண்டும் விசயத்தில் தான் அதிகமாக குரு தன் பலனை காட்டுவார்.

எனக்கு குரு தசா ஆரம்பித்த நேரத்தில் இருந்து இரண்டு நேரம் மட்டுமே சாப்பிடுவேன். இரவு பயணம் செய்தால் காலை உணவு சாப்பிடுவது வழக்கம் அப்படி இல்லை என்றால் சாப்பிடுவது கிடையாது. இருவேளை உணவு பழக்கம் பிராமணர்களிடம் இருக்கின்றது. இப்பொழுது உள்ள பிராமணர்கள் இதனை கடைபிடிக்கிறார்களா என்று தெரியாது. இருவேளை உணவை மட்டும் சாப்பிடும் பல பிராமணர்களை நான் பார்த்திருக்கின்றேன்.நெய் உணவில் அதிகமாக மனது ஈடுபாட்டை காட்டும். 

இருவேளை உணவை மட்டும் நீங்கள் சாப்பிடவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மூன்று வேளையும் சாப்பிடுங்கள். குறைவாக சாப்பிடுங்கள். நீங்கள் அசைவம் சாப்பிடுவராக இருந்தால் மாதத்திற்க்கு இருமுறை சாப்பிடுங்கள. அதிகமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.

பொது தகவல்.
              தினமும் அதிகமாக நடைப்பயிறசி செய்வது நல்லது. எனக்கு நடப்பதற்க்கு மிகவும் பிடிக்கும். தினமும் அடையாரில் இருந்து பெசன்ட்நகர் பீச் வரை நடந்து சென்றுவிட்டு வருவேன். காலையில் வேலை இருப்பதால் இரவில் செல்வது உண்டு. குரு தசா உங்களுக்கு நடந்தால் குறைந்தபடசமாவது நடைபயிற்சி செய்வது நல்லது.குரு தசா நடைபெற்றால் உணவு பழக்க வழக்கத்தை முதலில் மாற்றுவது நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

பரிகாரம் செய்யும் பொழுது


வணக்கம் நண்பர்களே!
                    பல நண்பர்கள் என்னிடம் சோதிடம் பார்க்கும்பொழுது அவர்களுக்கு என்று ஒரு சில பரிகாரங்களை சொல்லுகிறோம். அப்படி அவர்களுக்கு சொல்லும்பொழுது சார் இதனை நாங்கள் ஏற்கனவே செய்து இருக்கின்றோம் என்று சொல்லுவது உண்டு.

நீங்கள் ஏற்கனவே இதனை செய்தாலும் நான் உங்களுக்கு சொல்லி செய்யும்பொழுது நமது அம்மன் உங்களுக்கு அதனை வழிநடத்திக்கொடுக்கும். பல பேர்க்கு இப்படி தான் பரிகாரம் வெற்றி அடைந்திருக்கின்றது. நீங்கள் ஏற்கனவே செய்யதாலும் நான் சொன்னபிறகு அதனை செய்து பாருங்கள் வித்தியாசம் தெரியும்.

உங்களிடம் நான் சொல்லும் பரிகாரம் அனைத்து சோதிடர்களும் சொல்லுவது போல் தான் இருக்கும். ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால் உங்களால் முடிந்தது அது மட்டுமே மந்திரங்களை நன்றாக கையாள தெரிந்தால் புது பரிகாரம் சொல்லலாம்.

உங்களால் மந்திரங்களை கையாளமுடியாத காரணத்தால் மட்டுமே வழக்கம்போல் பரிகாரத்தை சொல்லுகிறேன். நீங்கள் ஏற்கனவே எந்த ஒரு சோதிடரும் சொல்லி செய்யதாலும் நான் உங்களுக்கு சொன்னவுடன் ஒரு முறை செய்து பாருங்கள். வித்தியாசத்தை நன்றாக உணரலாம்.

நானாக பரிகாரம் உடனே செய்வதில்லை. ஏன் என்றால் நான் வந்தால் உங்களுக்கு செலவு அதிகம் ஆகும் என்பதால் இப்படி பரிந்துரைக்கின்றேன். நீங்கள் இப்படி செய்துக்கொள்வது நல்லது கண்டிப்பாக உங்களுக்கு நடக்கும். அப்படி நடக்கவில்லை எனும்பொழுது என்னை தொடர்புக்கொண்டு செய்துக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Thursday, November 28, 2013

குரு தசா பலன்கள் பகுதி 4


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவில் அனைவருக்கும் நல்லது நடைபெற்று இருக்கும் என்ற சொன்னவுடன் பல நண்பர்கள் எனக்கு நடைபெறவில்லை சார் பிரச்சினை அதிகமாக தந்தது என்று சொன்னார்கள்.

அனைவருக்கும் நல்லதை மட்டும் தரும் என்று சொல்லமுடியாது. ஒரு சிலருக்கு மட்டும் நல்லதை செய்யும். அதோடு நான் பலபேருக்கு சொல்லும் ஒரு வார்த்தை தசாநாதன் நன்றாக இருந்தாலும் கெட்டு இருந்தாலும் தசாநாதனுக்கு ஒரு பரிகாரம் கண்டிப்பாக செய்யுங்கள் என்று சொல்லிருக்கிறேன். பல பேர் இதனைப்பற்றி கண்டுக்கொள்வதில்லை. கண்டிப்பாக செய்யவேண்டும்.

குரு தசாவைப்பொருத்தவரை பூர்வபுண்ணியத்தில் இருந்து எடுத்து உங்களுக்கு நல்லதை செய்யும். அதே நேரத்தில் குரு இந்த ஜென்மத்தில் கொடுக்காமல் அடுத்த ஜென்மத்தில் கொடுத்துவிட்டால் இந்த ஜென்மத்தில் குரு தசாவால் பிரச்சினை மட்டுமே வரும்.

நடப்பு ஜென்மத்திலேயே குரு தன் பலனை தரவேண்டும். அதற்கு மட்டுமே பரிகாரத்தை செய்துவிடுங்கள் என்று சொல்லுவது உண்டு.குரு தசா நடந்தால் அதற்கு தகுந்தமாதிரி நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும். ஆன்மீகத்தில் அதிகமாக ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். பெரியோர்களிடம் மரியாதையாக நடந்துக்கொள்ளவேண்டும். இப்படி பல விசயங்கள் இருக்கின்றது ஒவ்வொன்றாக நாம் பார்க்கலாம்.

குரு கிரகம் ஒரு நேர்மையான கிரகம் நீங்கள் செய்யும் தொழிலும் அதுபோல் இருப்பது நல்லது. பொதுவாக குரு உடல் உழைப்பு இல்லாமல் மூளையை வைத்து மட்டும் வேலையை செய்வது போல் செய்துக்கொடுப்பார். அதேப்போல் நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொழிலும் இருக்கவேண்டும். மூளையை முதலீடாக வைத்து சம்பாதிக்கவேண்டும். 

நமது நண்பர்கள் நல்ல வயதில் தசா வரவேண்டும் என்று சொல்லுவார்கள். அதாவது சம்பாதிப்பதற்க்கு ஏற்றார்போல் தசா வரவேண்டும் என்று சொல்லுவார்கள்.குருவின் விசயத்தில் அதுகிடையாது. ஏன் என்றால் மூளை கடைசி காலத்தில் கூட நன்றாக சிந்திக்க வைக்க செய்பவர் குரு பகவான். 

மூளை தான் முதலீடு என்கின்ற பொழுது அதனைப்பற்றி கவலைப்படுவதில்லை. அடுத்ததாக ஒன்றைச்சொல்லவேண்டும் ஒரு மனிதனுக்கு இரண்டு கட்டம் உண்டு. 35 வயது வரை ஒருவர் நன்றாக வாழ்ந்தால் அதன் பிறகு கஷ்டப்படுவார். 35 வயது வரை ஒருவர் கஷ்டப்பட்டால் 35 வயதுக்கு பிறகு நன்றாக வாழ்வார். இது ஒரு அனுபவம்.

குரு தசாவில் இந்த கணக்கு ஏற்றுக்கொள்ளபடமாட்டாது ஏன் என்றால் குரு தசா எப்பொழுதும் அதனின்பலனை கொடுப்பார். 35 வயதிற்க்குள் நன்றாக வாழ்ந்தவர்கள் அதன் பிறகு எப்படிப்பட்ட தசா வந்தாலும் அவனால் வெற்றி பெறுவது கடினம். அதற்கு விதிவிலக்காக குரு தசா இருக்கும்.

நான் சொன்னது அனுபவம் உங்களின் ஊரில் உள்ளவர்களை ஒரு லிஸ்ட் எடுத்து பார்த்தால் அவர்களின் வாழ்க்கை அதனை காட்டும். சும்மா எடுத்து பாருங்கள். பொதுவாக இளமையில் கஷ்டப்பட்டு இருந்தால் முதுமையில் ஒரு அனுபவமாக அவர்கள் செயல்பட்டு பல தலைமுறைக்கு சொத்து எல்லாவற்றையும் சேர்த்து வைப்பார்கள்.

நமது பதிவுக்கு வரும் குரு தசா நண்பர்கள் அனைவரும் இனி வரும் காலங்களில் உங்களின் மூளையை உபயோகப்படுத்துங்கள். குரு தசா உங்களுக்கு கொட்டிக்கொடுக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Wednesday, November 27, 2013

குரு தசா பலன்கள் பகுதி 3


வணக்கம் நண்பர்களே!
                     பொதுவாக ஒன்றைச்சொல்லுவார்கள் எந்த கோச்சாரப்பலனை சொல்லும்பொழுது குரு தசா நடைபெற்றால் விதிவிலக்கு என்று சொல்லுவார்கள். ஏன் என்றால் எப்படி இருந்தாலும் குரு தசா நல்லதை செய்துவிடும் என்பதால் சொல்லுவார்கள்.

குரு தசாவில் அப்படி என்ன தான் இருக்கும் என்றால் நாம் முன்ஜென்மத்தில் சேர்த்து வைத்திருக்கும் புண்ணியத்தை எல்லாம் தரும் ஒரு தசாவாக இருப்பதால் அப்படி சொல்லுவது உண்டு. அப்படி புண்ணியம் இருப்பதால் மட்டுமே ஒரளவு குரு தசா நல்லதை தரும் என்று நம்பிக்கை பலபேருக்கு உண்டு. குரு தசாவால் கெட்டவர்கள் குறைவாக தான் இருப்பார்கள். ஒரு சிலருக்கு கெடுதலும் செய்திருக்கிறது.

குரு தசாவை பொருத்தவரை புதன் புத்தி வரவேண்டும். புதன் புத்தியில் இருந்து தான் நல்லதை தர ஆரம்பிக்கும்.அதுவரை பொறுமையாக ஆன்மீக விசயங்களில் கவனம் செலுத்தவேண்டும். இது பொதுப்பலன் மட்டுமே ஒரு சிலருக்கு குரு தசா தொடக்கத்தில் இருந்து நன்மை செய்திருக்கும்.

குரு தசா தொடக்கத்தில் நன்மை செய்யவில்லை என்று கவலைப்படதேவையில்லை குரு தசாவில் புதன் புத்தியில் இருந்து நல்லது நடக்க ஆரம்பிக்கும்.குரு என்ன தான் கெட்டாலும் உங்களின் ஊரில் உள்ளவர்களுக்காகவது தெரியும்படி செய்துவிட்டு செல்லுவார். இந்த ஒரு காரணத்தால் குரு கிரகத்தை சுபக்கிரகம் என்று வைத்திருக்கார்கள்.

நாம் இந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்காமல் இருந்தாலும் முன்ஜென்மத்தில் செய்த புண்ணியத்தை வைத்தாவது உங்களுக்கு நல்லதை செய்துவிட்டு போகும்.குரு தசா அல்லது குரு புத்தி நல்லதை செய்யும் என்று நம்புங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Tuesday, November 26, 2013

ஆன்மீக அனுபவங்கள் 136


வணக்கம் நண்பர்களே!
                     ஒரு நண்பர் என்னிடம் தொடர்புக்கொண்டு பைரவரைப்பற்றி கேட்டுருந்தார். கோவில்களில் பைரவர் பூஜை பிரபலமாக இருக்கின்றது நீங்கள் பைரவரை வணங்கவேண்டாம் என்று சொல்லியுள்ளீர்களே என்று கேட்டுருந்தார்.

கோவில்களில் நடைபெறும் பூஜைகளில் நீங்கள் பங்கு பெறலாம் அதனால் எந்த தொந்தரவுக்கும் உங்களுக்கு இருக்கபோவதில்லை. வீட்டில் வைத்து வணங்கும்பொழுது அதனால் பிரச்சினை வரும் என்பதால் சொல்லுகிறேன். தமிழ்நாட்டு மக்கள் நல்லவர்கள் அவர்களை வைத்து விளையாடும் ஆன்மீகவாதிகள் பொல்லாதவர்கள். 

இவர்களின் சொந்த தேவைக்கு தகுந்தார்போல் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு வருவார்கள்.மக்களை அலைகழிப்பார்கள். மக்களை இப்படி தன் இஷ்டத்திற்க்கு செய்வதே மிகப்பெரிய கர்மம் என்பதை தெரியாமல் செய்துக்கொண்டு இருக்கின்றனர்.

ஒரு காலக்கட்டத்தில் பிரதோஷம் என்றால் என்ன என்று கூட தெரியாது. இன்று ஒரு கோவில் விடாமல் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. ஒரு காலக்கட்டத்தில் துர்கை வழிப்பாடு பிரபலமாக இருந்தது. இன்று அது எல்லாம் காணாமல் போய்விடும் என்று நினைக்கின்றேன்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆன்மீகம் என்பது அட்வெர்டையிஸ்மெண்டாக (விளம்பரத்தை) சார்ந்து இருக்கின்றது. மக்களிடம் ஏதாவது ஒன்றைச்சொல்லி வழிப்பாடு செய்ய சொல்லுவது. இதில் கண்டிப்பாக ஒரு உள்நோக்கம் இருக்கும்.

மனது என்ன செய்யும் என்றால் புதுமையை விரும்பும். அது இயற்கையாகவோ அப்படி தான் இருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் வேஷ்டி கட்டிக்கொண்டு இருந்தார்கள் அப்புறம் பேண்ட் சர்ட் வந்தது. இன்று அதில் பல வெரையைட்டியை விரும்புகிறது அல்லவா. இட்லி, வடை ,பஜ்ஜி சாப்பிட்டு இருந்தவனுக்கு பாணிபூரி பேல்பூரி மேல் ஆர்வம் வருவது எல்லாம் இப்படி மனம் புதுமையை விரும்புவதால் மட்டுமே.  தெருவுக்கு தெரு வடை பஜ்ஜி கடையில் நின்றுக்கொண்டிருந்தவர்கள் இன்று பாணிபூரி கடையில் நிற்கிறார்கள். 

குலதெய்வத்தை வணங்கிக்கொண்டு இருந்தவனுக்கு முருகன் கண்ணுக்கு தெரிந்தான். மாலை போட்டு வணங்க ஆரம்பித்தான். முருகனுக்கு மாலை போட்டவன் அப்படியே கேரளாவையும் பார்க்கலாம் என்று சபரி மலை ஐயப்பனுக்கு மாலை போட்டான் இது எல்லாம் புதுமை மட்டுமே. நல்லது நடந்தால் சரி. பழனிக்கு செல்ல ஆயிரம் ரூபாய் செலவாகும் கேரளா செல்ல ஐந்தாயிரம் செலவாகும். கையில் இருந்து பணம் தான் செல்லுகின்றதே தவிர ஒரு பிரச்சினையும் தீராது.

ஆன்மீகவாதிகள் சரியான ஒரு டெக்னிக்கை கையில் எடுத்தார்கள். அற்புத சுகமளிக்கும் கூட்டத்தை அடிக்க என்ன டா வழி என்று யோசித்தார்கள். இந்தியாவே கடனில் இருக்கின்றது மக்களும் கடனில் இருக்கின்றார்கள். அடிடா அங்கு என்று பைரவரை கும்பிட்டால் கடன் போய்விடும் என்றார்கள். மக்கள் இருக்கும் கடனில் விழி பிதுங்கி நிற்கிறார்கள். என்னடா வழி என்று பார்த்தார்கள் பைரவரை பிடித்துக்கொண்டார்கள். ஆனா கடன் அதிகமாக போக போகிறது என்பது மட்டும் உண்மை.

இந்து மதத்தின் ஆணிவேர் கர்மம். அதனை நீ தொலைக்க இப்படி செய்யமுடியாது. செல்லும் பாதையும் தவறு செல்லும் வழியும் தவறு. கர்மத்தை தொலைக்க உன் குலதெய்வம் மனசு வைக்கவேண்டும். உன் முன்னோர்கள் மனசு வைத்தால் மட்டுமே உண்டு.

திருப்பூர் மற்றும் வெள்ளக்கோவில் நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.  28/11/2013 வியாழக்கிழமை அன்று என்னை சந்திக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

குரு தசா பலன்கள் பகுதி 2


வணக்கம் நண்பர்களே!
                     குரு தசா ஆரம்பித்தவுடன் நண்பர்களிடம் இருந்து ஏகா வரவேற்பு இருக்கின்றது. ஏன் குரு தசாவிற்க்கு அதிகமான வரவேற்பு என்றால் ஜாதக கதம்பத்தை படிக்கும் அதிகப்பட்சம் பேர் குரு தசா நடைபெற்றுக்கொண்டு இருக்கும். 

ஒரு ஆள் ஆன்மீகம் சோதிடம் என்பதை எல்லாம் படிக்கவேண்டும் என்றால் குரு தசா நடந்தால அல்லது குரு கிரகம் நன்றாக அமைந்தால மட்டுமே அதிக ஈடுபாட்டோடு படிப்பார்கள்.பிற கிரகங்களின் தசாவில் இதனை படிக்க சொன்னால் தூங்கிவிடுவார்கள். இது எல்லாம் எதற்க்கு என்று கேட்பார்கள்.குரு தசாவிற்க்கு வரவேற்பு இருப்பதன் காரணம் இதனால் மட்டுமே. படிக்கும் அதிகப்பட்ச பேருக்கு குரு தசா நடைபெறுகிறது.

நல்ல ஆன்மீகத்தில் இருப்பவர்கள் மற்றும் உலகவிசயங்கள் புரிந்தவர்கள் அதிகம் விரும்புவது குரு தசாவை மட்டுமே. உலகத்தில் பிரபலமாக வேண்டும் என்றால் அவர்களுக்கு குரு தசா நடைபெற்றால் போதும். ஏதோ ஒரு மூலையில் தெருவில் இருப்பவனை தூக்கிக்கொண்டு கோபுரத்தில் உட்காரவைத்துவிடும்.

மனிதன் புகழ்க்கு மயங்குபவன். அப்புறம் ஏன் குரு தசாவுக்கு ஏங்கமாட்டார்கள்.அப்படி என்ன தான் குரு தசாவில் இருககும் என்றால் ஒருவரது மூளையை நன்றாக வேலை செய்ய வைக்கும். சிந்தனை செய்யும் திறன் அதிவேகமாக இருக்கும். பொதுவாக ஒருவர் முன்னேற்றம் அடையாமல் இருப்பதற்க்கு காரணம் பொதுமான அறிவு திறன் இல்லாத காரணத்தால் மட்டுமே முன்னேற்ற்ம் அடையாமல் இருப்பான்.

அறிவு இருந்தால் போதும் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம்.குரு கிரகம் ஒரு மனிதனுக்கு அதிகமான அறிவை பெற்று தரும். குரு தசா அந்த வேலையை தான் முதலில் செய்யும்.நீங்கள் இதனை சோதனை செய்து பார்க்கலாம். ஒருவருக்கு குரு தசா நடைபெற்றால் அவரின் பேச்சை நாம் ரசிக்கும்படி செய்யும். உலகஞானத்தை தருவதில் குரு தசாவிற்க்கு ஈடுஇணை யாரும் கிடையாது.

தொடர்ந்து பார்க்கலாம்...

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

சவால்


வணக்கம் நண்பர்களே!
                     சோதிடமாக இருக்கட்டும் ஆன்மீகமாக இருக்கட்டும் எப்பொழுதும் மனிதன் கடைசியில் தான் இதனை கையில் எடுப்பான் அதுவரை அவன் இதனை கண்டுக்கொள்ள மாட்டான்.

எப்பொழுது வாழ்க்கையில் அடிவிழுகிறதோ அப்பொழுது இதனை கையில் எடுப்பது மனிதனின் குணம். அடிவிழும் வரை நாத்திகம் பேசிக்கொண்டு இருப்பான் அடி விழுந்த பிறகு ஆன்மீகத்தை தேடஆரம்பித்துவிடுவான். பல பேர்களின் என்னிடம் நாத்திகம் பேசியவர்கள் ஒரு கட்டத்திற்க்கு மேல் என்னிடம் சரணாகதி அடைந்தவர்கள் உண்டு. 

தொழில்களுக்கு உதவது கூட எந்த தொழில் நஷ்டம் அடைந்து இருக்கின்றதோ அந்த தொழிலை பார்த்து தேர்வு செய்து அவர்களுக்கு உதவுகிறேன். அப்படி உதவும்பொழுது மட்டுமே நாம் யார் என்று நிறுபிக்க முடியும்.

புதிய தொழில்களை தேர்ந்தெடுக்கும்பொழுது நாம் உழைக்கின்றோம் அதனால் எனது தொழில் வளர்ச்சி அடைகிறது என்று தான் சொல்லுவார்கள். நான் அவர்களிடம் அதிகமாக வைத்துக்கொள்வது கிடையாது. என்று தொழில் தோல்வி அடைகிறதோ அன்று தான் நம்மை தேடுவார்கள்.

நான் ஒரு சில நேரங்களில் என்னை இப்படி நாடி வருபவர்களை நன்றாக கீழே விழட்டும் அதன் பிறகு காப்பாற்றலாம் என்று இழுத்தடிப்பதும் உண்டு. ஏன் என்றால் அப்பொழுது தானே நமது திறமை தெரியும்.

இது எல்லாம் ஒவர் என்று நீ்ங்கள் நினைக்ககூடும். மனிதனின் மனம் அப்படிபட்டது. நாம் என்ன தான் செய்தாலும் இவன் ஒன்றும் செய்யவில்லை என்று சென்றுவிடுவார்கள். அதனால் இப்படி செய்வது உண்டு.எந்த ஒரு காரியத்தையும் கடைசி நேரத்தில் எடுத்து செய்யும்பொழுது நமக்கு ஒரு சவாலாக இருக்கும். அந்த சவாலை நான் என்றும் விரும்புவேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Monday, November 25, 2013

குரு தசா பலன்கள் பகுதி 1


வணக்கம் நண்பர்களே!
                     இன்று முதல் குரு தசாவை தொடங்குவோம். ஒரு சுபரான கிரகத்தின் தசாவை பார்ப்பது நல்லது அல்லவா. இந்த சுபரினால் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்திக்கொடுக்கின்றது. 

நான் கூட அடிக்கடி சொல்லும் வார்த்தை குரு கிரகம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் மீதி உள்ள கிரகங்கள் கெட்டாலும் குரு கிரகத்தால் ஒரு மனிதன் நன்றாக வாழ முடியும் என்று சொல்லிருந்தேன். அப்படிப்பட்ட குரு தன்னுடைய தசாவில் எப்படி எல்லாம் பலனை தரும் என்பதை பார்ப்பதற்க்காக இந்த குரு தசாவை தேர்ந்தெடுத்தேன்.

ஒரு மனிதனின் ஜாதகமே பூர்வபுண்ணியத்தை வைத்து தான் பலன் தரும் என்று உங்களுக்கு தெரியும். பூர்வபுண்ணியத்தை காட்டக்கூடிய கிரகமான குரு கிரகம் எப்படி அதனுடைய தசாவில் பலன் தரும் என்பதை பார்ப்பதற்க்கு உங்களுக்காக இதனை எழுதுகிறேன்.

குரு கிரகம் ஒரு முழுசுபர் என்று சொல்லுகிறார்கள். இந்த சுபர் அனைவருக்கும் நன்மை தருமா எவர்க்கு நன்மை தரும் என்றும் பார்த்துவிடலாம். சோதிடத்தில் இருக்கும் கிரகங்களில் ஒரே நல்லவன் குரு. அவனே கெடும்பொழுது அவனின் தசா எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்க்கும் இதனை எழுதுகிறேன்.

நீங்கள் அனைவரும் இதனை படிக்கவேண்டும். எனக்கு குரு தசா நடைபெறபோவதில்லை அதனால் இதனை படிக்கதேவையில்லை என்று விட்டுவிடவேண்டாம். அனைத்து கிரகங்களும் சேர்ந்து தான் பலனை தரும். ஒவ்வொருவருக்கும் அதன் அதன் தசாவில் கண்டிப்பாக குரு புத்தியை நீங்கள் சந்திப்பீர்கள். அந்த புத்திக்காலங்களில் தனது பலனை கொடுத்துவிடுவார்.

நான் எழுதபோகும் குரு தசா அனைத்தும் எனது சொந்த அனுபவத்தில் இருந்து எடுத்து எழுதபோகிறேன். எனது அனுபவம் தான் ஜாதககதம்பம். அதேப்போல் குரு தசாவும் அனுபவமே. இந்த அனுபவம் உங்களுக்கு நிச்சயமாக நல்லதை தரும். 

புலிப்பாணி பாடல் மாதிரி பாராப்பா கேளப்பா என்று எல்லாம் இருக்காது. உங்களுடன் சாதாரணமாக உரையாடுதல் போல் தான் இருக்கும். தொடர்ந்து ஆதரவு தரும் நீங்கள் இதற்கும் ஆதரவு தர வேண்டுகிறேன்.


எல்லா வல்ல அங்காளபரமேஸ்வரி துணையோடு தொடங்குவோம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ஆன்மீக அனுபவங்கள் 135


ணக்கம் ண்பர்களே!
                     நீங்கள் அம்மனை எடுப்பதற்க்கு காயத்ரி மந்திரம் போல் எதையாவது செய்து எடுப்பீர்களாக என்று ஒரு நண்பர் கேட்டார். கண்டிப்பாக காயத்ரி மந்திரம் செய்வது போல் செய்து எடுப்போம். எதுவும் பயிற்சி இல்லாமல் செய்யமுடியாது. குரு நினைத்தால் உடனே கொடுக்கலாம். அப்படி கொடுக்கும்பொழுது நம்மிடம் அதிகநாட்கள் ஒரு தெய்வம் நிற்காது.நாம் பயிற்சி செய்து எடுப்பது போல் மட்டுமே செய்ய வேண்டும்.

காயத்ரி மந்திரம் செய்யும்பொழுது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதனை அப்படியே நாங்கள் செய்வோம். முதன் முதலில் ஒரு தெய்வத்தை எடுப்பது மிகவும் கடினமான வேலையாக மட்டுமே இருக்கும்.ரொம்ப கடினமான ஒரு வேலையாக அது இருக்கின்றது. ஏன் என்றால் அவ்வளவு எளிதில் அது நம்மிடம் வந்துவிடாது. 

முதலில் அந்த தெய்வம் நம்மை வந்து பார்க்கும் நம்மோடு வருவதற்க்கு அது ஒத்துழைக்காது.அந்த தெய்வம் நம்மிடம் வரும்பொழுது மட்டுமே நம்மால் அதனை வைத்து வேலை செய்யமுடியும்.ஒரு தெய்வம் வந்தவுடன் அதனை வைத்து வேலை செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று.

ஒரு தெய்வத்தை வைத்துக்கொண்டு நடப்பது மிகவும் கடினமான ஒன்று. ஒரு மனிதன் தனியாக நடப்பதற்க்கு எளிது நம்மோடு ஒரு ஆள் இருந்தால் எப்படி இருக்கும். அது கடினமான ஒரு வேலையாக இருக்கின்றது. அது நம்மிடம் இருந்தால் மட்டுமே நம்மால் நினைத்தவுடன் வேலையை செய்து முடிக்கமுடியும்.

இப்பொழுது வியாபாரத்திற்க்கு என்று முன்பணம் வாங்காமல் செய்வது எல்லாம் இந்த காரணத்தால் மட்டுமே. என்னிடம் மட்டுமே அது நிற்க்கும் நான் சொல்லுவதால் பிறர்க்க உதவி செய்யும். இல்லை என்றால் கண்டிப்பாக அடுத்தவர்களுக்கு வேலை செய்யாது. அடுத்தவர்கள் என்னை கவனிக்கும் வரையில் தான் அங்கு வேலை நடைபெறும் என்று ஏமாற்றும் எண்ணம் வருகிறதோ அன்றே அது என்னிடம் வந்துவிடும். அதனால் தான் முதலில் பணம் வாங்காமல் செய்துக்கொடுத்துக்கொண்டு இருக்கின்றேன்.

நான் எடுத்த சக்தி என்னிடம் விடடு அவ்வளவு எளிதில் போகாது. என்நலன் கருதி எல்லா வேலையும் செய்யும். அதனால் ஒரு தெய்வத்தை எடுப்பது எல்லாம் மிகவும் கடினம். எடுத்துவிட்டால் நமக்கு நல்லது. மனிதன் சுயநலம் கருதி தான் தெய்வத்தை எடுக்கிறான் அதனால் முதலில் கஷ்டப்படவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ராகு தசா பலன்கள் பகுதி 90


ணக்கம் ண்பர்களே!
                     நேற்று ஒரு நண்பர் என்னை வந்து சந்தித்து பேசினார். அவர் பேசும்பொழுது என்னிடம் ஏன் இவ்வளவு தசா இருக்கும்பொழுது ராகு தசாவைப்பற்றி முதலில் எழுதினீர்கள் என்று கேட்டார். அவரிடம் சொன்னதை உங்களிடம் சொல்லுகிறேன்.

ஏதோ ஒரு விதத்தில் தேர்ந்தெடுத்துக்கொண்டு எழுதினேன். நான் பொதுவாக எந்த பதிவும் முன்யோசனை செய்து எழுதுவது கிடையாது. அலுவலகம் வந்தவுடன் கம்யூட்டர் முன் அமர்ந்தால் என்ன வருகின்றதோ அதனை எழுதிவிடுவேன். தயார் செய்துக்கொண்டு எழுதுவது கிடையாது. 

ராகு தசா என்பது அதிக காலம் நடைபெறும் ஒரு தசாவாக இருக்கின்றது. ராகுவால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம் பேர் உள்ளனர். அதனைப்பற்றி எழுதுவிட்டால் அனைவரும் பயன்படும் என்று என் மனது நினைத்திருக்கும் அதனால் முதலில் இந்த தசாவை தேர்ந்தெடுத்து தந்திருக்கிறது.

மனிதன் நேராக செல்லகூடியவன் திரும்பி அதாவது பின்னோக்கி நடக்கமாட்டான். முன்னோக்கி செல்லுவான்.எல்லா கிரகங்களும் முன்னோக்கி சென்றாலும் ராகு கேது பின்னோக்கி செல்லும். நேராக வரும் மனிதனை எதிர்கொள்ளும்பொழுது தாக்கம் அதிகமாக இருக்கும். நேரடியாக மோதிக்கின்றான் அல்லவா அதனால் இருக்கும்.

நிழல் கிரகங்களுக்க எந்த ராசியும் சொந்த வீடு இல்லை என்பதால் இவர்களின் செயல்பாட்டை தீர்மானிப்பது கொஞ்சம் கடினம். முடிந்தவரை ராகு தசாவைபற்றி சொல்லிவிட்டால் நீங்களே எளிதில் தெரிந்துக்கொள்ளலாம் அல்லவா அதனால் ராகு தசாவைப்பற்றி எழுதினேன்.

ராகு தசா அனைத்தும் எனது சொந்த அனுபவத்தை வைத்து எழுதிய ஒன்று. ஜாதக கதம்பத்தில் வரும் அனைத்தும் சொந்த அனுபவம் மட்டுமே. ஒரு பத்து ஜாதகத்தை எடுத்துவைத்துக்கொண்டு ராகு தசா நடைபெறும் ஜாதகத்தை வைத்து நமது பலனை பார்த்தால் மிகசரியாக இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Sunday, November 24, 2013

தொழிலுக்கு உதவி செய்வதும் ஆன்மீகம்


வணக்கம் நண்பர்களே!
                     ஒரு வியாபாரத்தை நாம் நன்றாக நடத்த உதவி செய்கிறோம் என்றால் நாம் ஆன்மீகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கவேண்டும். ஆன்மீகத்தில் நீண்ட நாள்கள் இருந்தால் மட்டுமே ஒருத்தர்க்கு வியாபாரத்தில் ஆன்மீக உதவியை செய்யமுடியும்.

என்னிடம் சில நண்பர்கள் பேசும்பொழுது நீங்கள் வியாபாரத்திற்க்கு மட்டும் உதவி செய்கிறீர்கள். ஆன்மீகத்தில் வேறு எதுவும் தெரியாது என்று கேட்டார். எனக்கு அப்பொழுது சிரிப்பு வந்தது. ஒரு வியாபாரத்திற்க்கு உதவி செய்வது என்றால் பணம் கொடுத்து உதவி செய்வது கிடையாது.

தன்னுடைய ஆத்மசக்தி மூலம் பிரபஞ்ச சக்தியை வைத்து செய்யும் வேலை இது. ஒருவருக்கு வியாபாரத்திற்க்கு உதவி செய்வது என்பது சாதாரணப்பட்ட வேலை கிடையாது. அனைத்து கிரகத்தையும் மீறி செய்யவேண்டும்.அனைத்து கிரகத்தையும் மீறி செய்வது என்றால் சும்மா உட்கார்ந்துக்கொண்டு செய்யும் வேலை கிடையாது.

வியாபாரம் என்று வரும்பொழுது பலதரப்பட்ட பிரச்சினைகள் வரும் அதனை எதிர்க்கொண்டு வியாபாரத்தை நடத்தவேண்டும். வரும் பிரச்சினைகளை எல்லாம் தடைச்செய்து அவர்களுக்கு வெற்றி வாய்ப்பை கொடுப்பதால் மட்டுமே என்னை தேடி வருகிறார்கள். ஒருவருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கவேண்டும். லட்சுமிலை அவர்களிடம் வாசம் செய்ய வைத்து அதிர்ஷ்டத்தை கொடுக்கவைக்கவேண்டும். இது எல்லாம் செய்வது நாம் சிறந்த ஆன்மீகவாதியாக இருக்கவேண்டும்.

சும்மா செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு ஏமாற்றிக்கொண்டு இருக்கமுடியாது அல்லவா. உண்மையில் அவர்களுக்கு மாற்றம்கொடுத்தால் மட்டுமே நம்மை நம்புவார்கள்.வரும் நபர்களுக்கு கண்டிப்பாக மாற்றத்தை ஏற்படுத்திக்கொடுக்கிறேன்.வியாபாரத்திற்க்கு உதவி செய்வதும் ஆன்மீகம் மட்டுமே.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

முதியோர் இல்லங்கள்


ணக்கம் ண்பர்களே!
                     பல வயதானவர்களோடு பேசும்பொழுது பல பேர் அவசரப்பட்டு பேசுகிறார்கள். பொறுமையாக பேசுவதில்லை. உடனே கோபம் வருகிறது.

இளம்வயதில் கோபம் வருவது சரி வயதாகிவிட்ட பிறகு ஏன் கோபம் வரவேண்டும். ஏதோ அவர்களுக்குள் ஒரு தவிப்பு இருக்கதான் செய்கிறது அதற்காக அனைவருரிடமும் கோபபட வேண்டியதில்லை. ஒழுங்கான நிலையில் நீங்கள் வளரவிலலை என்றே தெரிகிறது. ஆன்மீகபக்கம் சென்றதே இல்லை என்று தோன்றுகிறது.

வயதானவர்கள் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கபடதான் செய்யவார்கள். வயதானவுடன் அதனைப்பற்றி கண்டுக்கொள்ளகூடாது. அனைத்தையும் ஏற்க்கும் பங்குவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். யாரையும் புண்படுவது மாதிரி பேசிவிடகூடாது. ஒரு சில பெரியவர்களை நான் பார்த்திருக்கின்றேன். தகாத வார்த்தைகளில் குடும்பத்தில் உள்ளவர்களை திட்டுவார்கள்.ஏன் திட்டுகிறார்கள் என்றால் ஏதோ ஒரு காரணத்தால் திட்டுவார்கள்.

நான் அனைவரையும் சொல்லவில்லை ஒரு சிலர் இப்படி இருக்கின்றார்கள். இப்பொழுது பல பேர் சொல்லுவார்கள் முதியோர் இல்லங்கள் அதிகமாகிவிட்டது. ஒரு பிள்ளையையும் தாய் தகப்பனை கவனிக்கவில்லை என்று சொல்லுவார்கள். உண்மையில் தாய் தகப்பன் முன்னால் செய்த தவறுக்கு இந்நாளில் அவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றே எனக்கு தோன்றுகிறது. இளம்வயதாக இவர்களின் பிள்ளைகள் இருந்தபொழுது ஆன்மீகத்தைப்பற்றி சொல்லிக்கொடுத்திருந்தால் இவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்குமா?

ஆன்மீகத்தின் அடிவேரை தாய் தந்தை குரு கடைசியில் தான் தெய்வம் என்று வைத்தார்கள். ஆன்மீகத்தை கற்று தரும்பொழுது அம்மா அப்பாவை மதிக்கும்பொழுது நல்ல குரு உனக்கு அமைவார். குரு வழியாக தெய்வம் காட்சியளிக்கும். அம்மா அப்பாவை என்று மறந்தாயோ அன்று நீ அனைத்தையும் இழப்பாய் என்று சொல்லிக்கொடுத்து இருந்தால் உங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. தவறு உங்களுடையது. பின்பு கத்திக்கொண்டு இருப்பது ஒன்றும் பிரயோசனம் இல்லை.

இதனை படிக்கும் உங்களுக்கும் இந்த நிலை ஏற்படலாம். அதனால் இளம்வயதில் ஆன்மீகத்தை கற்றுக்கொடுத்துவிடுங்கள். அப்படி கற்றுக்கொடுத்துவிட்டால் முதியோர் இல்லங்களை தேடி நீங்கள் செல்லவேண்டியதில்லை. இளம்வயதில் ஆன்மீகத்தை சொல்லிக்கொடுத்தால் நாட்டில் முதியோர் இல்லங்கள் உருவாகாது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ராகு தசா பலன்கள் பகுதி 89


வணக்கம் நண்பர்களே!
                     ஒரு உதாரண ஜாதகத்தோடு ராகு தசாவை பார்க்கலாம். மகர லக்கினத்தை உடைய ஜாதகம். லக்கினாதிபதி என்னும் சொல்லுக்கூடிய சனி பகவான் எட்டாவது வீட்டில் அமர்ந்து இருக்கிறார். சிம்ம வீட்டில் அமர்ந்து இருக்கிறார். லக்கினாதிபதி எட்டாவது வீட்டிற்க்கு சென்றாலே போராட்டமாக வாழ்க்கை இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும்.

மேஷ ராசியை உடையவர். லக்கினாதிபதி மறைவிடம் சென்றுவிட்டார். ராசி அதிபதி நீசம் ஆகிவிட்டார். கடுமையான போராட்டங்களை சந்திருப்பார் என்று உங்களால் எளிதில் கண்டுக்கொள்ளமுடியும்.பல கிரகங்கள் கெட்டு இருந்தும் இவர் நன்றாக வாழ்ந்தார்.

குரு கிரகமும் பகை பெற்று இருக்கின்றது. குருவாலும் அந்தளவுக்கு முன்னேற்றத்தை கொடுக்கமுடியாது. மிகப்பெரிய கிரகங்கள் முன்னேற்ற்த்தை தரமுடியவில்லை.இவருக்கு ராகு தசா ஆரம்பித்த வருடம் 2005 ஆம் ஆண்டு. ராகு தசா நடைபெற தொடங்கியவுடன் நல்ல வளர்ச்சியை இவருக்கு கொடுக்க ஆரம்பபித்தது. ராகு ஹஸ்த நட்சத்திரத்தில் சென்றுக்கொண்டு இருக்கின்றார். ஹஸ்த நட்சத்திரம் சந்திரனின் நட்சத்திரம். சந்திரனை பாருங்கள் சுகஸ்தானம் என்றும் நான்காம் வீட்டில் இருக்கிறது.

ராகு ஒன்பதாவது வீட்டில் இருந்து தசா நடைபெற்றதால் நல்ல வாழ்க்கையை கொடுத்தது. கன்னி வீட்டு அதிபதியான புதனும் லக்கினத்தில் இருப்பதால் நன்றாகவே ராகு பலனை கொடுத்தது. 

ராகுவோடு சுயபுத்தியும் நன்றாக இருந்தது. குரு புத்தியும் நன்றாக இருந்தது. இடையில் வந்த சனி புத்தி மட்டும் கொஞ்சம் மந்த நிலையை ஏற்படுத்தியது. ரொம்ப கஷ்டப்படுத்தவில்லை.தசாநாதனுக்கு பனிரெண்டில் இருந்ததால் சிறிய மந்த நிலையை ஏற்படுத்தி தந்தது. புதன் புத்தியில் இருந்து நல்ல நிலையில் இருக்கின்றார். 

இந்த ஜாதகத்தை பார்த்தவுடன் நாம் என்ன சொல்லிருக்கமுடியும். அதிகப்பட்சம் கிரகங்கள் சரியான நிலையில் இல்லை அதனால் ராகு தசாவும் சரி இருக்காது என்று சொல்லிருக்ககூடும். இவருக்கு ராகு தசா நல்ல மாற்றத்தை தந்துக்கொண்டு இருக்கின்றது. ராகு தசாவிற்க்கு முன்பு வந்த தசாவில் அந்தளவுக்கு இவருக்கு பலன் கொடுக்கவில்லை. ராகு தசா நல்ல பலனை கொடுத்துக்கொண்டு இருக்கின்றது.

ராகு தசாவை நன்றாக பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றார். ராகுவும் இவருக்கு கொடுத்துக்கொண்டு இருக்கின்றது. இவருக்கு ஒன்பதாவது வீட்டில் ராகு அமர்ந்ததால் இவர் ஒரு கோவிலை தன் பராமரிப்பில் வைத்துக்கொண்டு அதற்கு செய்துக்கொண்டு வருகிறார்.

ராகு ஒன்பதாவது வீட்டில் இருந்தால் நல்ல பக்தியை கொடுக்கும். அதுவும் ராகு தசா நடைபெறும்பொழுது எப்படி இருக்கும். சமுதாயத்தில் நல்ல பெயர் இவருக்கு ஏற்படுத்திக்கொடுத்துவிட்டார் ராகு பகவான்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

நம்பினால் நம்புங்கள்


ணக்கம் ண்பர்களே !
                     நம்பினால் நம்புங்கள் பகுதியை பார்த்து பல நாட்கள் சென்றுவிட்டது. இதனை பல நண்பர்கள் ஆவலுடன் படிப்பதும் இப்பொழுது தெரியவந்து இருக்கின்றது.

ஆன்மீக உலகத்தில் பல விசயங்கள் மறைமுகமாகவே வைத்திருக்கிறார்கள். அதனை வெளியில் சொல்லுவது கிடையாது. ஏன் இப்படி வைத்திருக்கிறார்கள் என்றால் அந்த விசயத்தின் உண்மை அதுவாகவே மறைந்துவிடும் என்பதற்க்காக இப்படி வைத்திருக்கலாம். 

தமிழ்நாட்டில் பல சித்தர்கள் இருக்கின்றனர் அவர்களின் பொக்கிஷங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டு இருக்கின்றனர் என்று சொல்லுகிறார்கள் அல்லவா. அது போல் பல பொருட்கள் மற்றும் இடங்களை கெட்டவர்களிடம் சேரக்கூடாது என்று மறைக்கப்பட்டு இருக்கின்றதை நான் ஒரு சில இடங்களில் பார்த்திருக்கின்றேன்.

இந்தியாவில் ஒரு இடம் இருக்கின்றது அது மலை உச்சியில் இருக்கின்றது. இரண்டு நாட்கள் பயணம் செய்தால் அந்த இடத்தை அடையமுடியும். இரண்டு நாட்கள் பயணம் என்பது மிகவும் கடினமான ஒன்று. அடர்ந்த காட்டு பகுதியில் செல்லவேண்டும்.

மலையின் உச்சியில் ஒரு கல் ஒன்று இருக்கின்றது. கல்லில் பிரதிஸ்டை செய்து இருக்கின்றார்கள் ஒரு அம்மனை. அந்த அம்மனுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் ஒரு மணி வாங்கிக்கொண்டு மேலை செல்லும்பொழுது செல்லவேண்டும். அங்கு உள்ள மரத்தில் அந்த மணியை கட்டி அடித்தால் சிறிய நேரத்தில் நல்ல மழை பெய்யும்.  அந்த மழை தான் நமக்கு அம்மன் கொடுக்கும் ஆசீர்வாதம்.

நம்பினால் நம்புங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Saturday, November 23, 2013

அன்பான வேண்டுகோள்


வணக்கம் நண்பர்களே!
                     பல நண்பர்கள் எனக்கு அவர்களின் வீட்டு விழாக்களுக்கு அழைக்கின்றார்கள். மிகவும் சந்தோஷமாக எனக்கு இருக்கின்றது அதே நேரத்தில் அந்த நாளில் உங்களை நான் வந்து சந்திக்கமுடியாத சூழ்நிலை தற்பொழுது நிலவுகிறது. 

ஒரு சிலர் அவர்களின் திருமண நாளில் கண்டிப்பாக வரவேண்டும்.என்கிறார்கள். அவர்களிடம் நான் உங்களை போல் பல பேர்கள் கஷ்டத்தில் இருக்கின்றனர் அவர்களுக்கு நான் உதவி செய்யவேண்டும் ஆகையால் நேரம் கிடைக்கும்பொழுது மற்றும் உங்களின் ஊர்களுக்கு வரும்பொழுது வருகிறேன் என்று சொல்லியுள்ளேன். உங்களுக்கும் இதனை தெரிப்பது மதித்து பத்திரிக்கை வைத்தோம் வரவில்லையே என்று நினைக்ககூடாது

உங்களின் வீட்டு விஷேசங்களை நல்ல நேரத்தில் வைத்தக்கொள்வது நன்று. அதிகப்பட்சம் வளர்பிறையில் விஷேசங்களை வைத்துக்கொள்ளுங்கள். பல பேர்கள் கெட்ட நேரத்தில் விஷேசங்களை வைக்கிறார்கள். வளர்பிறையாக உங்களின் வீட்டு விஷேசங்கள் இருக்கட்டும்.உங்களின் ஊர் பக்கம் வரும்பொழுது கண்டிப்பாக வருவேன்.

தேய்பிறை நாளில் விஷேசங்கள் வைப்பதாக இருந்தால் விடியற்காலை நான்கு மணியில் இருந்து ஆறு மணிக்குள் வைத்துவிடுவது நல்லது.பிரம்மமுகூர்த்த்தில் நடைபெற்றால் எந்த வித பிரச்சினையும் இருக்காது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

சனி+சந்திரன்


ணக்கம் ண்பர்களே!
                     சனியும் சந்திரனும் சேரும்பொழுது புனர்பூ தோஷம் என்பார்கள். இது ஒருவருடைய ஜாதகத்தில் இந்த தோஷம் ஏற்பட்டால் அவருக்கு என்ன பலன் தரும் என்பதை பார்க்கலாம்.

இந்த நபர்களை சுற்றி இருக்கும் நபர்கள் இவருக்கு துரோகம் செய்துக்கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு அது தெரியும் ஆனாலும் அவர்களை நம்பியே இவர்கள் இருப்பார்கள். பல துரோகங்களை இவர்கள் வாழ்க்கையில் சந்திபார்கள். சனிக்கும் சந்திரனுக்கு ஒற்றுவராது. சந்திரனை வைத்து தானே ஏழரைசனியை சொல்லுகிறார்கள். 

சனியும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் அவர்களுக்கு மனநிலையில் பாதிப்பு மற்றும் சரீர பாதிப்பு ஏற்படும். குடும்பத்தில் உள்ள நபர்களாலேயே இவர்கள் வஞ்சிக்கப்படுவார்கள். இவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது மிகவும் கடினமாக இருக்கும். இவரை பெற்றோர்கள் கூட இவர்களுக்குகாக வருத்தப்படுவார்கள்.

ஒரு சிலருக்கு சந்திரன் சனியின் நட்சத்திரத்தில் இருந்தாலும் அல்லது சனியின் வீட்டில் இருந்தாலும் இந்த பிரச்சினையை அவர்கள் சந்திப்பார்கள். அனைவருக்கும் என்று சொல்லமுடியாது ஒரு சிலருக்கு இப்படி ஏற்பட்டு இருக்கின்றது.

இவர்களுக்கு திருமணம் செய்யும்பொழுது நிச்சயம் செய்தவுடன் உடனே திருமணத்தை நடத்திவிட வேண்டும் அப்படி இல்லை என்றால் நிச்சயாதார்த்ததுடன் திருமணம் நின்றுவிட வாயப்பு இருக்கின்றது.

இவர்களுககு இந்த தோஷம் நீக்கி நல்ல யோக அமைப்பு ஏற்படவேண்டும் என்றால் சிவலிங்கத்திற்க்கு பசுபால் கொண்டு ஒன்பது திங்கள்கிழமை அபிஷேகம் செய்து வரவேண்டும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ராகு தசா பலன்கள் பகுதி 88


ணக்கம் ண்பர்களே!
                                       ராகு தசாவை கண்டு பலர் பயம்கொள்கிறார்கள். பல பேர் எனக்கு இந்த தசா வராது என்றும் சொல்லுகிறார்கள். ஒரு சிலர் எனக்கு ராகு நல்ல இடத்தில் நன்றாக இருக்கின்றது சார் பிரச்சினை இல்லை நல்லது செய்யும் என்றும் சொல்லுகிறார்கள். அவர்அவர்களின் நம்பிக்கை, ராகு தசா நடந்தால் மட்டுமே தெரியும். நமது வேலை அனைத்தையும் சொல்லுவது மட்டுமே. அதனை படித்துவிட்டு உங்களுக்கு எப்படி ராகு தசா இருக்கும் என்பதை நீங்களே தெரிந்துக்கொள்ளலாம்.

ராகு தசா நடந்து முடிந்தவர்களுக்கு அந்த தசாவால் ஏற்பட்ட அனுபவம் இருக்கும். ராகு தசா அனுபவத்தை வைத்தே பல தத்துவங்களை எழுதுலாம். அனைவருக்கும் கெடுதல் செய்திருக்கிறது என்று சொல்லமுடியாது. கெட்ட பலனை கொடுத்தவர்களுக்கு நல்ல அனுபவமாக தான் அது இருக்கும். பொதுவாக இந்த தசாவை நடந்து முடிந்தவுடன் மனிதனுக்கு ஒரு ஏக்கம் இருக்கும். ஒரு நல்ல விசயம் நடப்பது போல் இருக்கும் ஆனால் அது நடந்திருக்காது. அதுவே ஒரு ஏக்கமாக இருக்கும்.

ஒவ்வொரு தசாவிலும் ஏக்கம் இருக்கதான் செய்யும் ஆனால் ராகு தசாவில் அந்த ஏக்கம் அதிகமாக இருக்கும். ஏன் என்றால் இழந்தது பெரிய விசயமாக இருக்கலாம். இழந்தது ஒவ்வொரு மனிதனை பொருத்து அது அமையும். காதலன் காதலியை இழந்திருக்கலாம். கணவன் மனைவியை இழந்திருக்கலாம். மகன் அப்பா அல்லது அம்மா இழந்திருக்கலாம். பணக்காரன் பணத்தை இழந்திருக்கலாம் .ஒவ்வொருவருக்கும் ஒரு இழப்பாக இருக்ககூடும்.

நான் ஏன் ராகு தசாவைப்பற்றி இத்தனை பதிவுகள் தருகிறேன் என்றால் ஒரு மனிதனை நல்ல பண்பு உடைய மனிதனாக மாற்ற இந்த மாதிரி தசாக்கள் தேவைப்படுகிறது. அப்பொழுது மட்டுமே அவன் நல்ல மனிதனாக உருவாகுகின்றான். ராகு தசாவிற்க்கு பிறகு வரும் குரு தசா அவனை மிகச்சிறந்த ஞானியாக அல்லது ஆன்மீகவாதியாக மாற்றிவிடுகிறது.

நல்ல பண்பு என்பது படித்தால் மட்டும் வந்துவிடாது. ஒருவனை போட்டு வாழ்க்கை அடிக்கும் அடியில் இருந்து தான் வரும். அது ராகு தசாவில் மாட்டியவர்களுக்கு தெரிந்திருக்கும்.ராகு தசாவில் ஒருவர் இருக்கிறார் என்றால் அவருக்கு சுயநலம் அதிகமாக இருக்கும். அப்படி சுயநலனுக்காக செய்ய போய் வசமாக மாட்டிக்கொண்டுவிடுவார். சுயநலனில் ஆப்பு வைக்கும்பொழுது அடுத்து வரும் குருதசா பொதுநலனுக்காக நான் வாழ்கின்றேன் என்று வாழவைத்துவிடும்.

நான் சந்திக்கும் ராகு தசா முடிந்தவர்கள் என்னிடம் பெருமூச்சு தான் விடுவார்கள். அவர்களிடம் நான் சொல்லும் வார்த்தை நீங்கள் இந்த பிறவியில் இருந்து விடுபடுவதற்க்கு தயாராகிவிட்டீர் என்று சொல்லுவது உண்டு. குரு தசாவை நன்றாக இவர்கள் பயன்படுத்தினால் கண்டிப்பாக இவர்களால் மனிதபிறப்பை விட்டு செல்லமுடியும்.

ராகு தசா நல்லதை செய்யாது என்று சொல்லமுடியாது. பல நன்மைகளை பலருக்கு வழங்கி இருக்கின்றது. ஒரு சிலருக்கு பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்து கூட வாரி வழங்கி இருக்கின்றது. அந்தந்த ஜாதகத்தை பொருத்து அது அமையும்.

ஒவ்வொரு ஜாதகத்தையும் நன்றாக ஆராய்ந்து ராகுக்கு தகுந்த பரிகாரம் செய்து அதனை நல்ல பலன் தருவதாக நாம் செய்யவேண்டும். எப்படி பார்த்தாலும் பதினெட்டு வருடங்கள் கெடுதல் செய்துக்கொண்டே இருக்கப்போவதில்லை. எப்படியும் ஒரு சில காலகட்டங்களில் நல்லது செய்யும். அதனை பயன்படுத்தும் விதமாக நாம் மாற்றிக்கொள்ள வேண்டியது நமது வேலை.

ஜாதகத்தில் நீங்கள் சம்பாதிக்கவேண்டும் என்று இருக்கும். எவ்வளவு சம்பாதிப்போம் என்பது இருக்காது. நாம் தேர்ந்தெடுக்கும் தொழிலைப்பொருத்து அமையும். சரியான தேர்வு என்பது நமது கையில் தான் இருக்கின்றது. அதனை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் தகவல்கள் நமக்கு எளிதாக கிடைக்கின்றன். சோதிடத்தைப்பற்றி அனைத்தையும் அறிந்துக்கொள்ளமுடியும். எப்படிபட்ட தோஷத்தையும் போராடி வெற்றி காண்பதற்க்கு வழி இருக்கின்றது. ராகு தசாவில் வழி தெரியாமல் மாட்டிக்கொண்டு முழிப்பதைவிட நல்ல வழியை நாம் தேர்ந்தெடுக்கமுடியும்.

மக்கான குழந்தையை கூட நல்ல பள்ளிகூடத்தில் சேர்த்து பெரிய படிப்பை படிக்கவைப்பதில்லையா அப்படி தான் இதுவும். எல்லாம் நம்பிக்கையோடு செய்யும்பொழுது ராகு தசா உங்களுக்கு நல்ல தசாவாக அமையும்.

இப்பொழுது ராகு தசாவைப்பற்றி படிக்கிறீர்கள் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்றால் உங்களுக்கு தெரிந்தவர்கள் இருப்பார்கள் அவர்களின் ஜாதகத்தை எடுத்து பார்த்துவிட்டு உங்களுக்கு இப்படி நடக்கிறது இதற்கு இப்படி செய்யுங்கள் என்று சொல்லுங்கள். அவர்களும் பிழைப்பார்கள் அல்லவா. பிறரை காப்பாற்றிய புண்ணியம் உங்களுக்கு சேரும். ஒரு ஏழைக்கு இந்த தகவலைப்பற்ற சொல்லும்பொழுது அவர்களுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக கூட இருக்கலாம்.

ராகு தசா முடிந்துவிட்டது என்று நினைக்கவேண்டாம். தொடர்ந்து இன்னும் கொஞ்சநாள் இருக்கின்றது. ஒரு சில விசயங்களைப்பற்றி பார்த்துவிட்டு ராகு தசாவை முடித்துக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.