Followers

Saturday, February 25, 2012

பலகரை ஆருடம் தொடர்ச்சி 2ஐந்து பலகரை நிமிர்ந்திருந்தால்

அவர் என்ன நினைத்தாரோ அவரையை தேடிவந்து விடும். நடுநிலை வகிப்பவராக இருப்பார். நல்ல அறிவாளியாக இருப்பார். திடிர் திடிர் என்று நல்ல யோசனைகள் இவருக்கு வரும். வீட்டில் களவுபோன பொருள் வந்து சேரும். நண்பர்களிடத்தில் இவர் நல்ல மாதிரியாக பழகுவார். அதனாலே இவருக்கு நிறைய நண்பர்கள இருப்பார்கள்.

நாம செல்போன் நம்பரை கொடுத்தால் அவருடை செல்போனையில் ஏற்றுவதற்க்கு பதில் அவருடைய மூளையிலையே ஏற்றிவிடுவார் அந்தளவுக்கு நினைவாற்றல் இருக்கும். இவர் காதலில் விழுவதற்க்கு அதிகம் வாய்ப்பு உள்ளது. வயதை பார்த்து சொல்லுங்கள் வயதானவராக இருந்தால் காதல் மணமுடித்திருப்பீர்கள் என்று சொல்லுங்கள். நரம்பு சம்பந்தமாக நோய் வரும் என்று சொல்லுங்கள் ஏன் என்றால் அதிகமாக சிந்திப்பார்.

ஆறு பலகரை நிமிர்ந்திருந்தால்

எப்படியாவது நினைத்தது நடைபெறவேண்டும் என்று நினைப்பவர். எவனை காலி செய்தாலும் பணம் கைக்கும் வர வேண்டும் என்று நினைப்பார். சாப்பிடுவதில் பெரும் நேரத்தையும் பணத்தையும் செலவு செய்வார். காமசுகத்தையும் சேர்த்துக்கொள்ளவேண்டியது தான்.

கடவுள் பக்தி என்றால் என்ன என்று கேட்பார். இளமையில் வறுமையில் வாடுபவர் 30 வயதிற்க்கு பிறகு நன்றாக இருப்பார். திருமணம் ஆகாதவராக இருந்தால் திருமணத்தின் மூலம் வாழ்க்கையை ஒட்டி விடலாம் என்ற நினைப்பார் அதாவது திருமணத்தில் வரதட்சிணை என்ற பெயரில் பணத்தை கறந்துவிடுவார்கள். பிறப்புறுப்புகளில் நோய் தொற்று ஏற்படும்.

ஏழு பலகரை நிமிர்ந்திருந்தால்

கண்டிப்பாக தெய்வ அனுகிரகத்துடன் நடைபெறும். மக்களால் மகிழ்ச்சி உண்டு. இவர் செய்யும் தொழிலால் நன்மை அடைவார்கள். சொந்த மதத்தின் மீது தீவிர பற்று இருக்கும். சில நேரங்களில் மிக பெரிய வெற்றிகளை வெகு சாதாரணமாக செய்துவிட்டு அதை பற்றி அலட்டிக்கொள்ள மாட்டார். நல்ல ஆன்மீக சிந்தனை உள்ளவர். தனிமையை அதிகம் விரும்புவர். ஆன்மீக தலங்களுக்கு அடிக்கடி சென்று வருவார்.

காதலில் தோல்வியை தழுவுவார். திருமணத்தில் அதிக ஈடுபாடு இருக்காது. திருமணம் முடிந்தாலும் கணவன் மனைவியுடன் சண்டை சச்சரவுடன் வாழ்க்கைளை நடத்துவார். சன்யாசி யோகம் வாய்க்கும்.

எட்டு பலகரை நிமிர்ந்திருந்தால்

நினைத்த காரியம் நடைபெறாது உடம்பில் நோய் நொடி இருக்கும். சொத்துக்கள் விரையம் ஆகும். ஏதாவது ஒரு குறைபாடு இருந்துக்கொண்டே இருக்கும். கடவுள் பக்தி இருக்காது மனதில் ஏதாவது ஒரு சோகம் இருந்துக்கொண்டே இருக்கும் .

திருமண வாழ்வு நன்றாக இருக்காது திருமணத்தின் மீது வெறுப்பு இருக்கும். திருமணம் நடைபெற்றால் சண்டை தான் இருவருக்கும். விவாகரத்து வரை கொண்டு செல்லும். மொத்தத்தில் 8 ஆம் பலகரை விழகூடாது. சிலபேர் இருப்பார்கள் அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் அது 1000 பேர்களில் ஒருவராக இருக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.Friday, February 24, 2012

பலகரை ஆருடம் தொடர்ச்சி 1இரண்டு பலகரை நிமிர்ந்திருந்தால்

நினைத்த காரியம் சற்று தாமதமாக நடைபெறும். நடைபெறும் காரியம் இரண்டு அல்லது மூன்று மாதத்தில் நடைபெறும். கற்பனை வளம் உள்ளவர். இறைநம்பிக்கை உள்ளவர். எவ்வளவு கடினமான வேலையும் எளிதில் செய்து முடிப்பார்கள். அடுத்தவர்களிடம் எந்த வேலையும் கொடுக்கமாட்டார்கள். அடுத்தவர்களுக்கு அறிவுரை வழங்குதில் முக்கிய வேலையாக இருப்பார். என்ன மனோநிலை ஒரு நிலையில் இருக்கமாட்டார்கள். மாதத்தில் 15 நாள் நன்றாக இருப்பார். மீத 15 நாள் டல்லாகிவிடுவார். எதிரிகள் இருக்கமாட்டார்கள் இவர்களின் எதிரி இவர்களின் சோம்பேறி தனம் தான். மந்திரங்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். மந்திர வித்தை கை கொடுக்கும்.

மூன்று பலகரை நிமிர்ந்திருந்தால்

மத நம்பிக்கை அதிகமாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். நண்பர்களால் சேமித்த பொருள் நாசமாகும். நல்ல தைரியம் இருக்கும். சிறு வயதிலே பல சாதனைகளை செய்வார்கள். இவரின் பேச்சு இனிமையாக இருக்கும். பிறர் இவரை போற்றி பேசவேண்டும் என்று நினைப்பார். இவர்களை உணவு விஷயத்தில் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். பொன் பொருள் விஷயத்தில் பயங்கர கவர்ச்சி இருக்கும். எந்த நேரமும் பணம் இருந்தால் தான் வாழ்க்கையில் ஜெயிக்கமுடியும் என்று எண்ணி பணத்தின் மீது ஒரு கண் இருக்கும்.

நான்கு பலகரை நிமிர்ந்திருந்தால்

நினைத்த காரியம் முடியும். வீடு கட்ட நினைத்திருந்தால் உடனே தொடங்கினால் வெகு சீக்கிரம் முடிவடையும். தாய் வழியில் இவர்களுக்கு உதவி கிடைக்கும். நல்ல கால்நடை செல்வம் கிடைக்கும். நகரத்தில் உட்கார்ந்து கொண்டு நல்ல மாடு கிடைக்கும் என்று சொல்லிவிடாதீர்கள். நல்ல வாகனங்கள் அமையும் என்று சொல்லுங்கள். இடமறிந்து குறி சொல்ல வேண்டும். இவரிடம் ஒரு ரகசியத்தை சொல்லி யாரிடம் சொல்லி விடாதீர்கள் என்று சொன்னால் உங்களிடம் குறி கேட்டுக்கொண்டு சென்ற அடுத்த நிமிடத்தில் உங்கள் ஊரில் அந்த செய்தி தான் தலைப்பு செய்தியாக பரவி இருக்கும். ஓரே ஓப்பன் டைப்பாக தான் இவர் இருப்பார். இவர் தொழிலை அடிக்கடி மாற்றிக்கொண்டு இருப்பார். ஆனால் அந்த தொழிலில் நல்ல ஈடுபாடு இருக்கும்.

நாம பதிவு எழுதுவதே பெரிய விஷயம் இதில் நம்ம ஆபிசில் இண்டர்நெட் கேபிள் இரண்டு நாளாக பிரச்சினை எதற்காகவோ குழி தோண்டி கேபிளை வெட்டிவிட்டார்கள் நான் இருக்கும் ஏரியாவில் கிட்டதட்ட 200 லைன் பிரச்சினை அதான் பதிவும் எழுதமுடியவில்லை பலனும் அனுப்பமுடியவில்லை இத்துடன் முடித்துக்கொள்கிறேன் நாளை பிரச்சினை தீரும் என்று நினைக்கிறேன் பார்க்கலாம்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு.


Thursday, February 23, 2012

பலகரை ஆருடம்ஆருடம் அந்த காலத்தில் கடிகாரம் எல்லாம் இருக்காது மனிதர்களின் நிழல் வைத்து மணி என்ன என்று கூறுவார்கள் அந்த மாதிரி உள்ள காலத்தில் பிறக்கும் குழந்தையின் ஜனன நேரத்தை எடுப்பது மிகவும் கடினம் ஜனன நேரம் இருந்தால் தான் ஜாதகம் எழுதலாம். அப்பொழுது மக்கள் அனைவரும் எப்படி ஜாதக பலன் தெரிந்துக்கொண்டார்கள். அப்பொழுது ஊருக்கு ஊர் சோதிடர்கள் இருந்தார்கள் நீங்கள் எதுவும் எடுத்துக்கொண்டு செல்லதேவையில்லை நீங்கள் சென்றாலே உங்கள் பலன்களை அவர்கள் கூறிவிடுவார்கள் .

அவர்கள் எவ்வாறு பலன்கள் கூறினார்கள் என்று பார்த்தால் அவர்கள் கூறுவது ஆருடம். ஆருடம் என்பது ஒரு முறை நீங்கள் சென்ற நேரம் அல்லது வாங்கி சென்ற வெற்றிலைகளை வைத்து அவர்கள் பலன்கள் கூறுவார்கள் அப்படியை இல்லை என்றாலும் உங்களை சோழி உருட்ட சொல்லி பலன்கள் கூறுவார்கள்.

அந்த வகையில் வந்ததுதான் பலகரை ஆருடம் இதனைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம் ஆருடம் சொல்லுவது நல்ல பக்தியுடன் இருந்தால் தான் ஆருடம் பலிக்கும். சோதிடம் பார்க்க வருபவர்களை அவர்களின் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்தை நினைத்துக் கொண்டு சோழியை உருட்டசொல்லுங்கள் வரும் எண்ணிக்கையை வைத்து ஆருடம் கூறலாம். ஆருடம் பார்க்க வருபவர்கள் ஏதாவது ஒரு செயல் நடைபெறுமா அல்லது நடைபெறாதா என்று தான் கேட்பார்கள். அந்த செயலையும் மனதில் நினைத்து கொண்டு உருட்ட சொல்லுங்கள்.

பலகரையில் 1 என்று வந்தால் அதாவது அந்த காய் ஒன்று மட்டும் நிமிர்ந்திருந்தால் மனதில் நினைக்கும் காரியம் நடைபெறும். உற்றார் உறவினர்கள் விருந்துக்கு வருவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்
கடின உழைப்பினால் முன்னேறுவார்கள். சோம்பேறி தனம் இவரிடம் இருக்காது. நீதி நேர்மையாக இருப்பார் அதனாலே விரோதிகளை சம்பாதிப்பார். இவர் அரசாங்க வேலையில் பணிபுரிய ஏற்றவர். இவர் தவறு செய்யமாட்டார் செய்தால் மாட்டிக்கொண்டுவிடுவார். மருத்துவராகவும் இருக்க வாய்ப்புள்ளது. கண் தலை சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும்.
இப்படி சொல்லுங்கள்.
என்ன நீங்களும் ஆருடத்தில் கலக்க போகிறீர்களா கலக்குங்கள் வாழ்த்துக்கள் மீதி அடுத்த பதிவில் எழுதுகிறேன் அதுவரை பொறுமை.

அடுத்ததாக நாம் இந்த பதிவுகள் பக்கம் வந்ததே நாமும் எல்லாம் பதிவுகளையும் படிப்பதற்க்காகதான் ஒவ்வொரு பதிவையும் பார்த்து படித்ததிலிருந்து நாமும் பதிவுகளை எழுதவேண்டும் என்று எண்ணி பதிவுகளை எழுத தொடங்கினேன்.

இன்று பல பேர் அதாவது 50 பேர்கள் என்னுடைய பதிவுகளை படிக்க தினமும் வருகிறார்கள் அதனை கணக்கில் கொண்டு நானும் தினமும் எழுதவேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் வேலை பளு காரணமாக தினமும் எழுத முடியவில்லை. முடிந்தவரை எழுதுகிறேன்.

இலவச சோதிட ஆலோசனையும் தொடர்ந்து தந்துக்கொண்டு உள்ளேன் நிறைய பேர் என்னுடைய முகவரிக்கு அனுப்புகிறார்கள். வரட்டும் அதில் நான் அனுப்பும் பலன் மிக குறைவுதான். அப்பொழுதுதான் நான் எல்லாருக்கும் பதில் அனுப்ப முடியும். பதில் கிடைக்கவில்லை என்று ஒரு சிலர் எனக்கு 4 அல்லது 5 email க்கு மேல் எழுதி கேட்கிறார்கள் பலன் வரவில்லை என்று கொஞ்சம் பொறுமை காத்திருங்கள். அனைவருக்கும் பலன்களை அனுப்புகிறேன்.

சிலபேர் என்னிடம் தொடர்பு கொண்டு கட்டண சோதிட ஆலோசனை உண்டா என்று கேட்கிறார்கள். கட்டண சோதிட ஆலோசனை உண்டு அதனைப்பற்றி விபரங்களை வேறு சமயத்தில் பார்க்கலாம்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு.

Tuesday, February 21, 2012

சோதிட அட்டவணை 3
தனுசு

சூரியன் : நட்பு
சந்திரன் : சமம்
செவ்வாய் : நட்பு
புதன் : சமம்
குரு : ஆட்சி
சுக்கிரன் : நட்பு
சனி : சமம்
ராகு : நட்பு
கேது : நட்பு

மகரம்


சூரியன் : பகை
சந்திரன் : சமம்
செவ்வாய் : உச்சம்
புதன் : சமம்
குரு : நீசம்
சுக்கிரன் : நட்பு
சனி : ஆட்சி
ராகு : நட்பு
கேது : நட்பு

கும்பம்

சூரியன் : பகை
சந்திரன் : சமம்
செவ்வாய் : சமம்
புதன் : சமம்
குரு : சமம்
சுக்கிரன் : நட்பு
சனி : ஆட்சி
ராகு : சமம்
கேது : உச்சம்

மீனம்


சூரியன் : நட்பு
சந்திரன் : சமம்
செவ்வாய் : நட்பு
புதன் : நீசம்
குரு : ஆட்சி
சுக்கிரன் : உச்சம்
சனி : சமம்
ராகு : நட்பு
கேது : நட்பு


அன்புடன்

ராஜேஷ்சுப்பு.

சோதிட அட்டவணை 2சிம்மம்

சூரியன் : ஆட்சி
சந்திரன் : நட்பு
செவ்வாய் : நட்பு
புதன் : நட்பு
குரு : நட்பு
சுக்கிரன் : பகை
சனி : பகை
ராகு : பகை
கேது : நீசம்கன்னி


சூரியன் : சமம்
சந்திரன் : நட்பு
செவ்வாய் : பகை
புதன் : உச்சம்
குரு : நட்பு
சுக்கிரன் : நீசம்
சனி : நட்பு
ராகு : நட்பு
கேது : நட்புதுலாம்


சூரியன் : நீசம்
சந்திரன் : சமம்
செவ்வாய் : சமம்
புதன் : நட்பு
குரு : பகை
சுக்கிரன் : ஆட்சி
சனி : உச்சம்
ராகு : நட்பு
கேது : நட்பு


விருச்சிகம்


சூரியன் : நட்பு
சந்திரன் : நீசம்
செவ்வாய் : ஆட்சி
புதன் : சமம்
குரு : நட்பு
சுக்கிரன் : சமம்
சனி : பகை
ராகு : நீசம்
கேது : உச்சம்


அன்புடன்

ராஜேஷ்சுப்பு.

சோதிட அட்டவணை 1

வணக்கம் இதுவரை நாம் ஒவ்வொரு வீட்டிலும் கிரகங்கள் இருந்தால் என்ன பலன் என்று பார்த்து வந்தோம் அது முடிவடைந்துவிட்டது அதில் உள்ள பலன்கள் அனைத்தும் பொதுபலன்கள் தான். ஒரு கிரகத்தின் பலனை காண பல விதிகள் உள்ளன அதனை எல்லாம் பார்த்து தான் பலன் சொல்லவேண்டும் அதனால் நான் சொன்ன மாதிரி நடக்கவில்லை என்று குழப்பிக்கொள்ள வேண்டாம். கிருஷ்ணமூர்த்தி பத்ததி இருக்கிறது அதை மறக்கவில்லை கூடிய விரைவில் அந்த பாடம் வரும். இப்பொழுது ஒரு சோதிட அட்டவணை

ராகு கேது உச்சம் நீசம் என்பதை பற்றி பல கருத்துக்கள் உள்ளன இருந்தாலும் நான் தருகிறேன் எடுத்துக்கொள்பவர்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.

மேஷம்

சூரியன் : உச்சம்
சந்திரன் : சமம்
செவ்வாய் : ஆட்சி
புதன் : சமம்
குரு : நட்பு
சுக்கிரன் : சமம்
சனி : நீசம்
ராகு : பகை
கேது : பகை


ரிஷபம்

சூரியன் : பகை
சந்திரன் :உச்சம்
செவ்வாய் :சமம்
புதன் :நட்பு
குரு :பகை
சுக்கிரன் :ஆட்சி
சனி :நட்பு
ராகு :உச்சம்
கேது: நீசம்.

மிதுனம்

சூரியன் : சமம்
சந்திரன் : நட்பு
செவ்வாய் : பகை
புதன் : ஆட்சி
குரு : பகை
சுக்கிரன் : நட்பு
சனி : நட்பு
ராகு : நட்பு
கேது : நட்பு

கடகம்

சூரியன் : நட்பு
சந்திரன் : ஆட்சி
செவ்வாய் : நீசம்
புதன் : பகை
குரு : உச்சம்
சுக்கிரன் : பகை
சனி : பகை
ராகு : பகை
கேது : பகை
அன்புடன்

ராஜேஷ்சுப்பு.

Monday, February 20, 2012

கேது நிறைவு பகுதி

7 ஆம் வீட்டில் கேது இருந்தால் களத்திரதோஷம் ஏற்படும். திருமணத்தில் சண்டை சச்சரவு இருக்கும். இளமை கால வாழ்க்கை நன்றாக இருக்காது. மனைவி அல்லாத பெண்களுடன் தொடர்பு ஏற்படும். திருமண வாழ்க்கையை நினைத்து மனக்கவலை அடையும். உடம்பில் நோய் ஏற்படும்.

8 ஆம் வீட்டில் கேது இருந்தால் திருமண வாழ்வில் பிரச்சினை. ஆயுள் பலம் குறையும். உடம்பில் நோய் தோன்றி புண் வரும். முறை தவறி நடக்ககூடும். தற்கொலை எண்ணம் தோன்றும். பொதுவாக கேது இந்த வீட்டில் இருந்தால் நோய்களை தருவார்.

9 ஆம் வீட்டில் கேது இருந்தால் பித்ரு தோஷம் வாழ்க்கையில் அனைத்து விஷயங்களிலும் தடைகள் ஏற்படும். தந்தையுடன் எல்லா நேரங்களிலும் சண்டை தான் போடுவார். தெய்வ பக்தி இருக்காது. நண்பர்கள் உதவி செய்வார்கள். மனநிலை ஒரே மாதிரியாக இருக்காது. பிற மதத்தவர் உதவி செய்வார்கள்.

10 ஆம் வீட்டில் கேது இருந்தால் கலைகளில் ஈடுபாட்டுடன் இருந்து கலைஞராக இருப்பார். பிறர் மனதை நோகடிக்கமாட்டார். இரக்கமனம் இருக்கும். நல்ல தன்னம்பிக்கையுடன் தொழில் செய்து வெற்றிக்கொள்வார். மதங்களில் ஈடுபாட்டுடன் இருப்பார். தந்தை நலமுடன் இருக்கமுடியாது . தந்தை பணத்திற்க்காக கஷ்டபடுவார்.

11 ஆம் வீட்டில் கேது இருந்தால் சொத்துக்கள் சேரும் செல்வநிலையில் நன்றாக வாழ்வார் நண்பர்களின் உதவி இருக்கும். சுகபோகங்களுக்கு குறை இருக்காது. நல்ல பணவரவு இருக்கும். சமுதாயத்தில் நல்ல மதிப்புடனும் பெயருடனும் இருப்பார்கள். மூத்த சகோதர சகோதரிகளிடம் சண்டை இருக்கும்.

12 ஆம் வீட்டில் கேது இருந்தால் இதுதான் ஜாதகரின் கடைசி பிறவியாக இருக்ககூடும். புண்ணிய தலங்களுக்க அடிக்கடி செல்வார். பணசேமிப்பு இருக்காது அனைத்தும் புண்ணிய காரியங்களுக்கு செலவாகும். இல்லற சுகபோகங்களில் ஈடுபாடு இருக்காது. பாதங்களில் நோய் ஏற்படக்கூடும். நல்ல திறமையாக வாதங்களில் ஈடுபட்டு வெற்றிக்கொள்வார்.


அன்புடன்

ராஜேஷ்சுப்பு.கேது1 ஆம் வீட்டில் கேது இருந்தால் எதிரிகளால் பிரச்சினை உண்டாகும். தொழில் திறமை இருக்கும் உடம்பில் பிரச்சினை உருவாகும். சனியின் வீடுகளான மகரம் கும்பம் வீடுகளில் கேது தங்கியிருந்தால் இந்த நாட்டையை ஆளலாம். செவ்வாய் வீடான விருச்சகத்தில் தங்கி இருந்தாலும் அந்த யோகம் கிடைக்கும் பிற வீடுகளில் இருந்தால் அந்தளவுக்கு இருக்காது கஷ்டத்தில் தான் வாழ்க்கை வாழவேண்டிருக்கும். நான் பார்த்த வரையில் சனியின் வீடுகளில் அல்லது சனியுடன் கேது இருந்தால் அந்த ஜாதகன் பணக்காரகனாகத்தான் இருப்பார்.

2 ஆம் வீட்டில் கேது இருந்தால் தன பிரச்சினை உண்டாகும். குடும்பத்தில் பிரச்சினை உண்டாகும். படிப்பில் அந்தளவுக்கு விருப்பம் இருக்காது. குடும்பத்தில் செய்வினை கோளாறுகள் இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறைந்து இருக்கும். திருமணம் தள்ளிக்கொண்டே போகும். திருமணம் முடிந்தவுடன் குழந்தை பேறும் தடை ஏற்படும்.

3 ஆம் வீட்டில் கேது இருந்தால் தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருக்கமாட்டார்கள் இவர்களால் பிரச்சினை உருவாகிக்கொண்டே இருக்கும். இளைய சகோதர சகோதரிகள் இருக்கமாட்டார்கள். அப்படி இருந்தாலும் பிரச்சினை தான். கல்வியில் விருப்பம் இருக்காது. காமத்தின் மீது தீவிர ஈடுபாடு இருக்கும். நல்ல துணிவுடன் இருப்பார் எந்த காரியத்திலும் தடைகள் இருந்து கொண்டே இருக்கும். பரிகாரம் ராமேஸ்வரம் தான்.

4 ஆம் வீட்டில் கேது இருந்தால் தாய் நலம் கிடைக்கும். தாயாரின் வழியில் பிரச்சினை தான். தாயாரின் உடன் பிறந்தவர்களில் யாராவது ஒருவர் திருமண வாழ்வில் பிரச்சினையில் இருப்பார்கள். தீய எண்ணங்களில் மனது செல்லும். பிறரின் ஆலோசனைகளை ஏற்க மாட்டார்கள். வாகனங்கள் வாங்குவதற்க்கு தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வானங்களால் பிரச்சினை உருவாகிக்கொண்டே இருக்கும். வீடு கோவிலுக்கு அருகில் இருக்கும் அதுவும் பிள்ளையார் கோவிலாக இருக்குகூடும்.

5 ஆம் வீட்டில் கேது இருந்தால் கெட்ட குணம் இருக்கும். புத்தி கூர்மை இருக்காது. வயிற்று வலி ஏற்படும். மனதில் கவலை இருந்துக்கொண்டே இருக்கும். கடுமையான புத்திர தோஷத்தை ஏற்படுத்தும். அப்படியே குழந்தைகள் இருந்தாலும் அந்த குழந்தைகளால் இவர்களுக்கு ஒன்றும் நன்மை நடைபெறாது. விநாயகரை வழிபாட்டு மூலம் இன்பம் காணலாம்.

6 ஆம் வீட்டில் கேது இருந்தால் பகைவர்கள் இருக்கமாட்டார்கள். இளமை காலத்தில் பிரச்சினை இருக்கும். உறவினர் மூலம் நல்ல மரியாதை இருக்கும். நல்ல சுகபோகமான வாழ்க்கை வாழலாம் கடக ராசியாக இருந்தால் மதுபானம் மீது கடுமையான ஈடுபாடு இருக்கும். ஜலதோஷம் அடிக்கடி ஏற்படும். தண்ணீரில் கண்டம் ஏற்படலாம் எச்சரிகை தேவை.


அன்புடன்

ராஜேஷ்சுப்பு.Tuesday, February 14, 2012

ராகு நிறைவு பகுதி7 ஆம் வீட்டில் ராகு இருந்தால் களத்திரதோஷத்தை ஏற்படுத்தும். பல பெண்கள் தொடர்பு ஏற்படும் சிற்றின்பத்தில் ஈடுபாடு அதிகம் ஏற்படும் துணைவரின் நலம் கெடும். துணைவர்களால் திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்படும். இவர்களிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள் இவரை ஏமாற்றுவார்கள். திருமணம் நடைபெறாதவர்களாக இருந்தால் திருமணத்தடை ஏற்படுத்தும் திருமணம் நடைபெற்றவர்களுக்கு வீண் குழப்பங்களை ஏற்படுத்துவார். அதனால் பிரிவினை ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் இல்லையென்றால் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவார்கள்.

8 ஆம் வீட்டில் ராகு இருந்தால் உடம்பில் நோய் ஏற்படுத்துவார். நண்பர்களிடம் தேவையற்ற விவாதம் தவிர்கவும். செல்வ நிலை ஒரே மாதிரியாக இருக்காது. துணைவரிடம் சண்டை சச்சரவு ஏற்படும். விபத்து ஏற்படும். தகுதிக்கு மீறிய பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் வாக்குறுதி தருவது கூடாது. பணவசதி அவ்வளவு சிறப்பாக இருக்காது. இறக்கும் தறுவாயில் படுத்த படுக்கையாக இறக்க நேரிடும். உடலில் புண் ஏற்படும். பாதுகாப்பு குறைவான இடத்தில் தங்காதீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

9 ஆம் வீட்டில் ராகு இருந்தால் கடுமையான பித்ரு தோஷம் ஏற்படும். எடுத்த அனைத்து காரியங்களும் தடை ஏற்படும். பெரியவர்களின் சாபங்கள் இருக்கும். தந்தை நலம் பாதிக்கப்படும். உயர்கல்வி படிக்க இயலாது. ஆன்மீக ரீதியில் புண்ணிய காரியங்கள் செய்வார்கள். சொத்துக்கள் வாங்கும் போது கவனம் தேவை.

10 ஆம் வீட்டில் ராகு இருந்தால் நல்ல தொழில் வாய்ப்பு அமையும். வருமானம் நன்றாக இருக்கும். அன்னியர் மூலம் தொழில் அமையும். ஆன்மீக விஷயத்தில் நாட்டம் அதிகமாகும். தொழில் சார்ந்த வகையில் சந்திக்கும் குறுக்கீடுகளைச் சரி செய்ய கடின முயற்சி தேவைப்படும். கலைதுறையில் நுழைந்து சாதிக்கலாம். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும்.

11 ஆம் வீட்டில் ராகு இருந்தால் நல்ல செல்வ வளம் வரும். வருமானத்தில் குறைவு இருக்காது. மூத்த சகோதர சகோதரிகளிடம் பகை இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். ஆன்மீக பயணம் செல்ல நேரிடலாம். பொருளாதாரத்தில் நல்ல உயர்வைத் தருவார். புதிய புதிய தொழில்கள் ஆரம்பித்துக்கொண்டே இருப்பார்கள்.

12 ஆம் வீட்டில் ராகு இருந்தால் செலவு அதிகமாக இருக்கும். கடுமையாக உழைத்தாலும் வருமானம் அதிகமாக இருக்காது. முழுமையான நித்திரை சுகம் இருக்காது. புத்திர தோஷத்தை ஏற்படுத்துவார். பிள்ளைகளால் செலவு ஏற்படும். பாதங்களில் பிரச்சினை ஏற்படும். எதிர்பாராத செலவுகள் வரலாம். வெளி நாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.


அன்புடன்

ராஜேஷ்சுப்பு.


Monday, February 13, 2012

ராகு1 ஆம் வீட்டில் ராகு இருந்தால் உடல் நிலை நன்றாக இருக்காது. காம உணர்வு அதிகமாக இருக்கும். கீழ்தரமான எண்ணங்கள் இருக்கும். துணைவி மூலம் பிரச்சினை இருக்கும். துணைவியார் உடல்நிலை பாதிக்கப்படும். முகம் ஒழுங்காக இருக்காது. பற்கள் இடைவெளி விட்டு இருக்கும். மனநோய் தாக்கி அவதிப்படலாம்.

2 ஆம் வீட்டில் ராகு இருந்தால் பொய் பேச்சு பேசுவார். தனபாக்கியம் குறையும். புத்திர தோஷத்தை ஏற்படுத்துவார். குடும்ப உறுப்பினர்களில் பெண்கள் அதிகமாக இருக்கலாம். குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் இருக்கும். உணவு பழக்க விஷயத்தில் முறையான வகையில் பின்பற்ற வேண்டும் இல்லையென்றால் உணவு விஷமாகும். விவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும்.

3 ஆம் வீட்டில் ராகு இருந்தால் சிறந்த தைரியசாலியாக இருப்பார்கள். இளைய சகோதர சகோதரிகள் இருக்கமாட்டார்கள். அப்படியே இருந்தால் சண்டை சச்சரவு இருக்கும். நல்ல தீர்க ஆயுள் இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டு வெற்றி பெறுவார். வெளிதொடர்புகள் நன்றாக இருக்கும்.

4 ஆம் வீட்டில் ராகு இருந்தால் தாய் நலம் கெடும். வீட்டிற்க்குள் அடிக்கடி பாம்பு வரும். வீட்டில் அமைதி இருக்காது. குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. தாய்வழி உறவினர்கள் பகை இருக்கும். குடும்ப தேவைக்கான செலவு அதிகரிக்கும். வாகன விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

5 ஆம் வீட்டில் ராகு இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். பெண்களாக இருந்தால் கர்ப்பப் பையில் கிருமி இருக்கும். புத்தி கூர்மை குறைவாக இருக்கும். குழந்தை பாக்கியம் இருந்தாலும் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் நல்ல உறவு இருக்காது.ஐந்தாம் வீடு லெட்சுமி காரமான வீடு சில நேரங்களில் திடீர் பணவரவுகள் வரும். தன்னலம் கருதாமல் இருப்பார்கள்.

6 ஆம் வீட்டில் ராகு இருந்தால் எதிரிகளை வெல்வார் தந்திர வழிகளில் வெற்றிக்கொள்வார். இளம் வயதில் வறுமையில் வாடுவார். கடன் வாங்குவார். நோய் தரும் இடமாக இருப்பதால் உடம்பில் புண் ஏற்படும். உடம்பு வலி ஏற்படும். தாய்வழி உறவினர் பகை ஏற்படும். தொழில் வளர்ச்சியில் புதிய யுக்தி பயன்படுத்தி முன்னேற்றமும் தாராள பணவரவும் இருக்கும்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு.

Wednesday, February 8, 2012

சனி நிறைவு பகுதி

7 ஆம் வீட்டில் சனி இருந்தால் முதுமை தோற்றம் தெரியும். மர்ம பாகங்களில் முடி அதிகமாக தோன்றும்.திருமணம் தள்ளி போகும். துணைவருடன் எப்பொழும் சண்டை சச்சரவு இருக்கும். இளம்வயதில் திருமணம் நடந்தால் துணைவர் இரண்டு அமைவர்.உடம்பில் ஊனம் ஏற்படும். வறுமை இருக்கும். முகத்தில் கவலை தோன்றும். பிறரை ஏமாற்றி பிழைப்பு நடத்துவார்கள். இவர்களுடன கூட்டு சேருபவர்கள் குள்ளமானவராக இருப்பார்கள். தாயாரின் உடல் நிலை கெடும்

8 ஆம் வீட்டில் சனி இருந்தால் அடிமை வேலை செய்ய வேண்டி இருக்கும். நிரம்தரமாக உடலில் நோய் இருக்கும். அதிக வாழ்நாள் இருப்பார். இறக்கும் போது மிகவும் கஷ்டபட்டு நோய்வாய் பட்டு இறப்பார். லக்கினாதிபதி ஆக இருந்து எட்டாம் வீட்டில் இருந்தால் உடல் அடிக்கடி முழு சக்தியையும் இழக்கும். அனைத்துக்கும் கஷ்டபட வேண்டி இருக்கும். சில பேர் இறப்பு சம்பந்தபட்ட தொழில்களில் இருப்பார்கள்.குழந்தை பாக்கியம் ஏற்படாது சில பேருக்கு குழந்தை பாக்கியம் தள்ளி போகும்.

9 ஆம் வீட்டில் சனி இருந்தால் பணவரவு நன்றாக இருக்கும். தந்தையுடன் சண்டை சச்சரவு இருந்துகொண்டே இருக்கும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். சிலபேருக்கு காதல் திருமணம் நடைபெறும். மூத்த சகோர சகோதரிகளிடம் கருத்து வேற்றுமை ஏற்படும். நண்பர்களால் சண்டை வரும் வாய்ப்பு உள்ளது.

10 ஆம் வீட்டில் சனி இருந்தால் தொழில் கொடி கட்டி பறப்பார். பெரும் பணக்காரராக்குவார். சமூகத்தில் பிறர் போற்றும் படி வாழ்வார். மிக பெரும் நிறுவனத்தில் தலைமைபொறுப்பு தேடி வரும். வருமானம் போல செலவும் அதிகமாக இருக்கும். புண்ணிய இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு அமையும்.
சமயம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு இருக்கும். பழைமையை விரும்புவார்கள். மனைவியிடம் சண்டை சச்சரவு இருந்து வரும்.

11 ஆம் வீட்டில் சனி இருந்தால் வருமானம் நிரந்தரமாக இருக்கும். தொழிலில் சிறந்து விளங்குவார். வியாபார சம்பந்தபட்ட விஷயங்களில் ஈடுபட்டு பெரும் பொருள் ஈட்டவைப்பார். இளம்வயதில் நரை தோன்றும். நல்ல ஆயுள் இருக்கும். வருமானம் அதிகமாக வந்தாலும் மனதில் கவலை தோன்ற செய்யும். சிலபேருக்கு உயில் இன்ஸ்சுரன்ஸ் மூலம் வருமானம் வரும்.

12 ஆம் வீட்டில் சனி இருந்தால் வியாபாரத்தில் வீழ்ச்சி வரும். செலவு அதிகமாக இருக்கும். மருத்துவ செலவு அதிகம் ஏற்படும். இளைய சகோதர சகோதரிகளிடம் சண்டை ஏற்படும். தந்தையாரின் உடல் நிலை கெடும். தந்தையின் உறவு நன்றாக இருக்காது. மூத்தவர்களின் சாபத்திற்க்கு ஆளாகலாம். சனி நல்ல நிலையில் இருந்தால் தீமை குறைந்து நல்லது நடக்கலாம். விரைய ஸ்தானமாக இருப்பதால் சுபசெலவுகளும் செய்ய வேண்டிவரும்.


அன்புடன்

ராஜேஷ்சுப்பு.


Tuesday, February 7, 2012

கிருஷ்ணமூர்த்தி பத்ததி
அனைவருக்கும் வணக்கம் இன்று தை பூசம் முருகனுக்கு உகந்த நாள். எப்பொழுதும் செவ்வாய் எதிரி சனிதான் ஆனால் சனியின் வீட்டில் தான் செவ்வாய் உச்சம் பெறுகிறார். சனியின் நட்சத்திரமான பூச நட்சத்திரத்தில் அனைத்து முருகன் கோவிலிலும் விஷேசம். நாம் பார்த்துக்கொண்டு இருப்பது சனி பகவானை தான் அதனால் இந்த நன்னாளில் உங்களுக்கு ஒரு இனிய செய்தி.

நானும் ஒரு புதிய தலைப்பில் பாடம் நடத்தலாம் என்று முடிவெடுத்து K.P.Systems என்று சொல்லக்கூடிய கிருஷ்ணமூர்த்தி பத்ததி யை இனி தொடர் பதிவாக எழுத போகிறேன்.

பழைய பாடங்கள் இருக்கும் போது புதிய பாடங்கள் தேவையா?

சோதிடம் பாடங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கடல். ஒரே கடலே பார்த்துக்கொண்டிருந்தால் அலுத்துப்போய்விடும் அதனால் உங்களுக்கு அடுத்த கடலையும் சுற்றி காட்டலாம் என்று ஆரம்பிக்கிறேன். பழைய தலைப்புகளிலும் பாடங்களும் வரும். இதுவும் வரும். இதன் தலைப்பு கிருஷ்ணமூர்த்தி பத்ததி என்று வரும்.கிருஷ்ணமூர்த்தி யார்?

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி என்னும் அருகில் இருக்கும் கூத்தூர் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் ஒருமுறையை உருவாக்கியுள்ளார். அந்த முறை நட்சத்திரங்களை கொண்டு உருவாக்கியுள்ளார். அனைத்து பலன்களும் நட்சத்திரம் கொண்டுதான் முடிவு செய்யப்படும்.

இதன் சிறப்பு என்ன?

இது நட்சத்திர சோதிடம் அனைத்து பலன்களும் துல்லியமாக நடைபெறும். பரிகாரம் கிடையாது. துல்லியமாக நடைபெறும் என்றால் ஏன் சோதிடம் பார்க்கவேண்டும் என்று நினைக்க தோன்றுகிறதா அவர்கள் சொல்லும் காரணம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நல்லதோ கெட்டதோ நடைபெறும் பொழுது நல்லது நடந்தால் அந்த மனிதன் ஏற்றுக்கொள்கிறான்.

கெட்டது நடந்தால் அவனால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. கெட்டது நடைபெறும் போது இவ்வாறு நடக்கும் என்று தெரிந்தால் அவனால் எளிதில் ஏற்றுக்கொள்ளக்கூடும் அதனால் தான் இந்த சோதிடம். 100 சதவீதம் சோதிடத்தை நிருபணம் செய்யவேண்டும் என்று வேட்கையுடன் கிருஷ்ணமூர்த்தியால் கண்டுபிடிக்கப்பட்ட முறை தான் கிருஷ்ணமூர்த்தி பத்ததி.

நீங்களே உங்கள் வாழ்வில் பார்த்து இருப்பீர்கள் கெட்டது நடக்கும் போது அந்த சோதிடன் சொன்னன் ஐயா இந்த மாதிரி நடக்கும் என்று அந்தமாதிரியே நடந்துவிட்டது என்று சொல்லுவார்கள் அப்பொழுது மனது ஏற்றக்கொள்ளும் நடக்கும் பலன் கண்டிப்பாக நடக்கும் என்று கருத்தில் கொண்டுவரப்பட்டது தான் இந்த கிருஷ்ணமூர்த்தி பத்ததி.

இந்த தொடர் எப்படி எழுதலாம் என்று உங்கள் விருப்பங்களை தெரியபடுத்துங்கள் நான் முதன் முதலில் வலைபதிவில் எழுதும்போது எனக்கு வழிகாட்டி கிடையாது. எப்படி எழுதினால் படிப்பவருக்கு பிடிக்கும் என்று தெரியாது ஆனால் இன்று நானும் எழுதுவேன் என்று வருகிறார்கள் .அனைவரும் சோதிடத்தின் மேல் உள்ள ஆர்வத்தால் வருகிறார்கள்.உங்கள் சோதிட ஆர்வத்தின் மேல் உள்ள ஈர்ப்பால் இந்த புதிய முறையும் கற்று தருகிறேன்.

உங்களுக்கு அந்த பழையமுறை இருக்கும் போது இதனை கற்றால் ஏதும் குழப்பம் வரலாம் என்று நினைக்கலாம் நான் போதுமான அளவு மிக தெளிவாக கற்று தருகிறேன். நீங்கள் பயப்பட தேவையில்லை.

இந்த புதிய பாடத்தைப் பற்றி உங்கள் கருத்துக்களை கூறலாம்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு.

Monday, February 6, 2012

சனி1 ஆம் வீட்டில் சனி இருந்தால் மந்த புத்தி இருக்கும். வறுமை இருக்கும். துணைவர் மூலம் பிரச்சினை உருவாகும். நண்பர்களிடத்தில் சண்டை சச்சரவு இருக்கும். இளைய சகோதர சகோதரிகளிடத்தில் சுமுக உறவு இருக்காது. வாழ்வின் பின்பகுதி நன்றாக இருக்கும். இளம் வயதில் மூத்த வயதுபோல் தோற்றம் இருக்கும். சில நபருக்கு திருமண வாழ்வில் பிரச்சினைகள் 1 ஆம் வீட்டில் சனியால் வருகிறது.

2 ஆம் வீட்டில் சனி இருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. குடும்பத்தில் சண்டை சச்சரவு இருக்கும் தாயாரின் உடல் நலம் கெடும். குழந்தை பாக்கியம் இருக்காது. ஆயுள் நன்றாக இருக்கும். தார தோஷத்தை ஏற்படுத்துவார்.வீட்டில் எப்போதும் ஒரு வெறுப்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். திருமணம் ஆனாலும் தொழில் விசயமாக துணையை விட்டு பிரிந்து சென்று வெளியில் தங்கிவிடுவார். வீட்டின் தொடர்பு மிக குறைவாகதான் இருக்கும்

3 ஆம் வீட்டில் சனி இருந்தால நல்ல தைரியம் இருக்கும். சகோதர்கள் இருக்கமாட்டார்கள். அப்படியே இருந்தாலும் பகையாக இருப்பார். இந்த வீட்டில் சனி இருப்பது நல்லது தான் ஆனால் குழந்தை பாக்கியம் தள்ளி போகும். அண்டை அயலார் வீட்டுடன் சண்டை சச்சரவு இருக்கும். இசையின் மேல் அவ்வளவு ஆர்வம் இருக்காது. கடித போக்குவரத்தால் வில்லங்கம் தான் வரும். பயணம் செல்லும்போது அடிபடும்.

4 ஆம் வீட்டில் சனி இருந்தால் தாயாரின் உடல்நிலை கெடும். சொத்துக்கள் நாசம் ஆகும். வயிற்று வலி ஏற்படும். உடலில் முதுமை தெரியும். பழைய வாகனங்கள் வாங்கினால் யோகம் உண்டு. சிலபேர் பழைய வாகனங்கள் வாங்கி விற்க்கும் தொழில் செய்யலாம். சிலபேர் வீட்டை இடித்து தரும் தொழில்கள் செய்வார்கள். நான்காம் வீடு தங்கி இருக்கும் வீட்டை குறிப்பதால் பழைமையான வீட்டில் தங்கி இருப்பார்கள்.

5 ஆம் வீட்டில் சனி இருந்தால் கடுமையான புத்திர தோஷம் ஏற்படும்.வருமான குறைவு ஏற்படும். மனதில் நிம்மதி இருக்காது. ஐந்தில் சனி இருப்பவர்கள் வில்லங்க பார்ட்டியாக இருப்பார்கள. உணர்ச்சி வசப்படகூடியவர்கள்.

ஐந்தாம் வீடு புத்திர ஸ்தானத்தை குறிப்பதால் புத்திர தோஷம் ஏற்படும். திருமணத்திற்க்கு முன்பும் பின்பும் ராமேஸ்வரம் செல்ல வேண்டும். அப்பொழுது தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தை பிறந்தவுடன் வருடம் ஒருமுறையாவது ராமேஸ்வரம் செல்ல வேண்டும்.

சில நபர்களை நீங்கள் பார்த்து இருக்கலாம். தங்கள் பிள்ளைகளுக்கு கொள்ளி போடுவார்கள் அவர்களின் ஜாதகங்களில் எல்லாம் ஐந்தாம் வீட்டுடன் சனி சம்பந்தப்பட்டு இருப்பார். இதற்கு தகுந்த பரிகாரம் ராமேஸ்வரம் தான். ஐந்தாம் வீடு குலதெய்வத்தை குறிப்பதால் கிராம தேவதையை வணங்கலாம்

6 ஆம் வீட்டில் சனி இருந்தால் பகைவர்கள் இருக்கமாட்டார்கள். நல்ல வேலை ஆட்கள் கிடைப்பார்கள். வேலை ஆட்களால் பிரச்சினை ஏற்படாது. மாமன் வீட்டுடன் சுமூகமான உறவு இருக்காது. கணவன் மனைவியுடன் சிறிய தகராறு வந்து செல்லும். பிறர் பாராட்டும் படியான காரியங்களில் இறங்கி வெற்றி அடைவார்கள். பணவரவு நன்றாக இருக்கும்.காலில் அடிபட வாய்ப்பு உள்ளது.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு.

Saturday, February 4, 2012

சனிஸ்வரன்இந்த பதிவில் நாம் பார்க்க போவது எல்லாம் இடத்திலும் பிரபலமானவர். இவரின் பேரை கேட்டாளே அனைத்து மனிதனும் நடுங்கிவிடுவான். வாழ்க்கை என்ன என்றால் என்று கற்றுகொடுப்பவரைப் பற்றி பார்க்கபோகிறோம். ஒருவன் எவ்வளவு தான் ஆடம்பரத்தில் இருந்தாலும் அவனை துன்பம் என்ன என்றால் என்று உணரவைப்பவனை தான் பார்க்க போகிறோம். அவன் யாரும் அல்ல அவன் தான் ஈஸ்வரன் பட்டம் வாங்கிய சனிஸ்வரன்.

இவர் அரசனை ஆண்டியாகவும் ஆண்டியை அரசனாகவும் மாற்றுபவர். மனிதனுக்கு துன்பம் என்றால் என்ன என்று புரியவைப்பார். மனிதர்கள் எவ்வளவுதான் ஆட்டம் போட்டாலும் ஒரு நேரத்தில் ஜாதகத்தை கையில் எடுப்பதற்க்கும் இவர்தான் காரணம்.

நீங்களே பார்த்து இருப்பீர்கள் பல நாட்டு மன்னர்கள் தன் மக்களிடத்தில் அரசனாக வலம் வந்தவர்கள் அந்த மக்களால் அடித்து கொன்றுபோட்டு இருப்பார்கள் அல்லது வேறு ஏதாவது விதத்தில் துர்மரணம் அடைந்து இருப்பார்கள் அதற்கு எல்லாம் காரணம் வகிப்பவர் சனி பகவான் தான்.

ஒரு மன்னர் எவ்வளவு வசதி வாய்ப்பு உடன் இருந்திருப்பார்கள். எத்தனை வேலை ஆட்கள் எத்தனை பணவசதி பலம் அனைத்து பொருட்களும் தங்கத்தில் இருக்கும் இவ்வளவு வசதி வாய்ப்பு உள்ளவரையும் தெருவில் கொண்டுவந்து விடுபவர் சனிபகவான் தான்.

இவர் அரசனை மட்டும் இல்லை அனைத்து மனிதனையும் தண்டிப்பவர். இவரிடம் எந்த மந்திரியின் சிபாரிசும் எடுப்படாது. மனிதன் பிறப்பு எடுப்பதே கர்மத்தை தொலைப்பதற்க்குதான் அதனால் இவரின் பிடியில் இருந்து யாரும் தப்பமுடியாது. இந்த உலகமே இவரின் பிடியில் தான் உள்ளது.

ஜாதகத்தில் காய்களை நகர்த்துவதில் முக்கிய பங்கு வகிப்பவர் சனிபகவான் தான். ஜாதகத்தில் ராஜகிரகம் என்று அழைப்பவர்களில் ஒருவர் இவர். இவரைப்பற்றி நீங்கள் தெரிந்தாலே 50 சதவீத பலன் முடிந்துவிடும்.

இவரைப்பற்றி இந்த முன்னுரை போதும் என்று நினைக்கிறேன் ஏன் என்றால் இவரை பற்றி தான் பல பதிவில் பார்க்க போகிறோம்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு.


சுக்கிரன் நிறைவு பகுதிகாதலில் ஈடுபட்டு திளைப்பதற்க்கு சுக்கிரன் மிக முக்கிய காரகம் வகிக்கிறார். சுக்கிரன் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் காதல் இனிக்கும் மனோகாரகன் சந்திரனும் நல்ல நிலையில் இருந்தால் சொல்ல தேவையில்லை இப்படிதான் இருக்கும்.

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்தும் மௌனம் பேசும்
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை
கண்டதாலே கண்ணில் ஈரம்

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே
ஒ ஹோ ஹோ ..
கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே
ஒ ஹோ ஹோ ..
இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே
ஒ ஹோ ஹோ ..
ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே
ஒ ஹோ ஹோ ..
சில நேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே ..

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே ..

கருவறை நினைத்தேன் உயிர் வரை இனித்தாயே
ஒ ஹோ ஹோ ..
மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே
ஒ ஹோ ஹோ ..
சிறு துளி விழுந்து நிறை குடம் ஆனாயே
ஒ ஹோ ஹோ ..
அரை கணம் நொடியில் நரை விழ செய்தாயே
ஒ ஹோ ஹோ ..
நீ இல்லா நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தை போல் ஆவேனே ..

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே ..

இந்த மாதிரி பாடிக்கொண்டு இருப்பார்கள்

படம் : நினைத்தாலே இனிக்கும்

சுக்கிரன் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்த்துவந்தோம் அந்த வரிசையில்

7 ஆம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் அழகான தோற்றத்தை உருவாக்குவார். அழகான மனைவி அமையும். காமத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். நல்ல பணக்காரராக இருக்கவைப்பார். பல பெண்களிடத்தில் தொடர்பு ஏற்படும். சுக்கிரன் ஏழில் கெட்டால் சுக்கிர தோஷத்தை ஏற்படுத்துவார். இவரிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் பெண்களாக இருக்கும்.

8 ஆம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் நீண்ட ஆயுள் இருக்கும் எட்டாம் வீட்டில் இருந்து இரண்டாம் வீட்டை சுக்கிரன் பார்ப்பதால் தன வரவு நன்றாக இருக்கும் ஆனால் திருமணத்திற்க்கு தோஷத்தை ஏற்படுத்துவார்.

9 ஆம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் தெய்வ பக்தியில் ஈடுபாடு அதிகமாக இருக்கும். உயர்கல்வியில் சிறந்து விளங்குவார். பணவரவுகள் நன்றாக இருக்கும். தந்தைக்கும் இவருக்கும் உள்ள தொடர்பு நல்லவிதத்தில் இருக்கும். மனைவி மூலம் நல்லது நடக்கும். மொத்தத்தில் வசதியான வாழ்க்கை வாழ சுக்கிரன் துணைபுரிவார்.

10 ஆம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் கலைதுறையில் ஈடுபாடு அதிகமாக இருக்கும். கலைதுறையில் தொழில் தொடங்கலாம். பெண்களால் வருமானம் இருக்கும். கலைதுறையில் போட்டிகளில் சமாளித்து முன்னேறி வர சுக்கிரன் துணைபுரிவார். நண்பர்களால் லாபம் உண்டு.

11 ஆம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் நல்ல லாபம் ஏற்படும் மூத்த சகோதரிகளால் நன்மை ஏற்படும். லாபம் பன்மடங்காக உயரும். பெண்களால் லாபம் ஏற்படும் பல பெண்களிடத்தில் தொடர்பு ஏற்படும். நண்பர்கள் உதவி செய்வார்கள். கலைதுறை மூலம் வருமானம் பெருகும்.

12 ஆம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் பெண்கள் மூலம் பொருள் இழுப்பு ஏற்படும். தொழிலில் முன்னேறுவது கடினம். பணவரவுகள் இருக்கும் ஆனால் பணத்தை போகத்திற்க்கு அதிக செலவு செய்வார்கள். மனைவி சொல்லே மந்திரம் என்று மனைவி பேச்சை கேட்பார்கள்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு.


Friday, February 3, 2012

சுக்கிரன்1 ஆம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் நல்ல தோற்றப்பொழிவை தரும். அனைவரும் கவர்ந்து இழுக்கும் தோற்றம் இருக்கும். ஆண்களாக இருந்தால் பெண்களாலும் பெண்களாக இருந்தால் ஆண்களாகவும் ஈர்க்கப்படுவார்கள். எதிர்பாலினரிடம் நல்ல நட்பு இருக்கும். துணைவியார் அழகாக அமைவார்.

2 ஆம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் நல்ல பேச்சு திறமை இருக்கும். தனவரவுகள் நன்றாக இருக்கும். நல்ல அதிர்ஷ்டசாலியாக இருப்பார். குடும்பத்தில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். செல்வ வளம் நன்றாக இருக்கும்.

3 ஆம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் சிறிய தொலைவு பயணம் அடிக்கடி நடைபெறும் கடித போக்குவரத்து பெண்களிடத்தில் இருந்து வரும். இளைய சகோதரிகள் அதிகம் பேர் இருப்பார்கள். சிற்றின்ப சுகத்தில் மனது அலைபாயும்.

4 ஆம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் நல்ல ஆடம்பரமான வீடு அமையும். நல்ல தோற்றம் அமையும். சுகமான வாழ்க்கை அமையும். வாகனம் அமையும். வாகனத்துறையில் பணிபுரியலாம் அல்லது டிராவல்ஸ் தொழில் நடத்தலாம். உற்றார் உறவினர் மூலம் நல்ல உறவு ஏற்படும். கற்பனை வளம் இருக்கும்.

5 ஆம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் கலைகளில் ஈடுபட்டு வாழ்க்கை வசதிகளை பெறவைப்பார். நல்ல கல்வி ,கற்பனை வளம் இருக்கும். பெண் குழந்தைகள் அதிகமாக இருக்கும். அரசாங்கத்தில் பணிபுரிய வைப்பார். திடீர் வருமானத்திற்க்கு வாய்ப்பு உண்டு. குலதெய்வம் ஏதாவது ஒரு அம்மனாக இருக்கும். லட்சுமியை வழிபடலாம்.

6 ஆம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் செல்வ வளம் குன்றும். எதிரிகள் தொந்தரவு இருக்கும். பெண்களால் பிரச்சினைகள் இருக்கும். மர்ம பாகங்களில் நோய் வரும். பெண்களால் ஏமாற்றப்படுவார். சண்டை என்று வந்தால் முதலில் பெண்கள் வழியில் தான் ஆரம்பம் ஆகும்.


என்னிடம் ஜாதகத்தை அனுப்பி முழு பலனைகளையும் கேட்கிறார்கள் அதற்கு பதில் அளிக்க வேண்டும் என்றால் நேரம் போதவில்லை.என்னிடம் உங்கள் ஜாதகங்களை அனுப்பி உங்கள் எதிர்கால பலன்களை தெரிய விரும்புவர்கள் ஐந்து கேள்விகள் மட்டும் கேட்டு அனுப்புங்கள் பதில் அளிக்கிறேன். உங்கள் ஜாதகங்களை எனக்கு அனுப்பி உங்கள் பலனை தெரிந்துகொள்ளலாம்.

பல சோதிடர்கள் என்னிடம் ஜாதக பலன் கேட்டும் அனுப்புகிறார்கள் அவ்வாறு அனுப்பாதீர்கள் புதியவர்கள் மட்டும் தெரிந்துக்கொள்ளலாம். சோதிட அன்பர்கள் இதனை தவிர்த்தால் சோதிடம் தெரியாதவர்கள் பயன் பெறலாம் . நமது சேவை இந்த சமுதாயத்திற்க்கு தேவை அதனை கருத்தில் கொண்டு சோதிடர்கள் இதனை தவிர்க்க பாருங்கள் நன்றி.


என்னுடைய email id astrorajeshsubbu@gmail.com

அன்புடன்

ராஜேஷ்சுப்பு.