வணக்கம்!
நாட்டில் GST வரியை கொண்டு வருகின்றனர். இந்த வரிக்கும் சோதிடத்திற்க்கும் என்ன சம்பந்தம் என்று நண்பர் ஒரு மெயில் செய்து இருந்தார்.
பொதுவாக நான் நாட்டின் சோதிடத்தை எல்லாம் கணித்து சொல்லுவதில்லை. தனிப்பட்ட மனிதரின் சோதிடத்திற்க்கு மட்டும் தான் பலன் சொல்லிருக்கிறேன். நண்பரின் கேள்வியில் மக்களுக்கு பிரச்சினை கொடுப்பதற்க்கு தானே இப்படிப்பட்ட விசயங்களை எல்லாம் கிரகங்கள் கொடுக்கிறது என்றார். இந்த வரியால் மக்களுக்கு நல்லதா என்றும் கேட்டார்.
வரி என்றாலே மக்களிடம் இருந்து பணத்தை வாங்குவது தானே. வரியில் என்ன நல்ல வரி கெட்டவரி என்று இருக்கின்றது. மக்களிடம் ஏதாவது ஒன்றை சொல்லி ஏதாவது ஒரு வழியில் பணத்தை வசூலிப்பது தான்.
கிரகபெயர்ச்சி நடக்கும்பொழுத இப்படிப்பட்ட விசயங்கள் நாட்டில் நடப்பது ஒன்று தான். தொடர்ச்சியாக கிரகபெயர்ச்சிகள் இருக்கின்றன. இந்த கிரகபெயர்ச்சிகள் தன்னுடைய மாற்றத்தை ஒவ்வொரு விதத்திலும் காட்டிக்கொண்டு வரும். அதில் ஒன்று தான் தற்பொழுது விதிக்கப்படும் வரியும்.
மக்களுக்கு கஷ்டமா என்றும் கேட்டார். மக்களுக்கு எந்த நாள் தான் கஷ்டம் இல்லாமல் இருக்கின்றது. யார் தலையிலாவது ஒன்றை இறக்கி வைக்க வேண்டும் அதற்கு மக்கள் தான் கிடைத்திருக்கிறார்கள். பொதுவாக பெரிய கிரகங்களின் பெயர்ச்சியில் பெரிளவில் மாற்றம் என்று வரும். அதனை எதிர்க்கொள்ளதான் வேண்டும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு