வணக்கம் நண்பர்களே!
அம்மன் பூஜைப்படங்களை அடுத்த பதிவில் தருகிறேன். அம்மன் பூஜைக்கு என்று தயார் செய்வதே எனக்கு இரண்டு நாட்கள் தேவைப்படுகிறது. அந்த நேரத்தில் நான் முழுவதும் அதில் தான் ஈடுபட்டுக்கொண்டு இருப்பேன்.
அனைவரின் பிராத்தனைகளை பூஜையின் பொழுது அம்மனிடம் சேர்ப்பது எனது கடைசி வேலையாக இருக்கும். உடல் உழைப்பு அதிகமாக நான் செய்வது பூஜையின் நேரத்தில் மட்டுமே. அனைவருக்கும் பூஜை நடக்கும்பொழுது போனில் கூப்பிட்டு சொல்லவேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கும். வேலை காரணமாக கூப்பிடமுடியவில்லை.
இன்றைய பூஜைக்கு சென்னையில் இருந்து நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் நான் மற்றும் எனது குடும்பத்தில் உள்ளவர்கள் வேலை செய்வதை பார்த்துவிட்டு கேட்டார். இந்த பூஜைக்கு இவ்வளவு வேலை இருக்கிறதா என்று கேட்டார்.
அம்மன் பூஜைக்கு முழு ஈடுபாட்டோடு வேலை செய்கிறோம். எவ்வளவு வேலை இருந்தாலும் அதனை முழு ஈடுபாட்டோடு செய்வதால் மிகசிறப்பாக வருகிறது. அவ்வளவு நேர்த்தியாக பூஜை செய்படுவதை நீங்கள் போட்டோவில் பார்த்தாலே தெரியும். நேரில் பார்க்கும்பொழுது மிகவும் பரவசமாக இருக்கும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.