வணக்கம்!
நமது அம்மன் கோவில் கட்டும்பணிக்கு என்று தேவையானவை என்ற பதிவை போட்டுருந்தேன். பலர் தங்களின் விருப்பத்தை தெரிவித்து இருந்தனர். ஒரு சிலர் என்னுடைய மற்றும் நான் வேலை செய்யும் அலுவலகத்தில் இருந்தும் வசூலித்தும் பணம் அனுப்பதாக சொல்லிருந்தனர். இந்தளவுக்கு தங்களின் ஈடுபாடு இருப்பது வரவேற்கதக்க ஒன்று.
உங்களின் விருப்பத்திற்க்கு ஏற்றவாறு நான் செயல்புரிவேன். உங்களின் நட்பு வட்டாரம் மற்றும் அலுவலக வட்டாரத்தில் இருந்து வசூல் செய்து அனுப்புவதாக இருந்தால் உங்களுக்கு தேவைப்பட்டால் வசூல் புக்கையும் அனுப்பி வைக்கிறேன். அதிலேயே நீங்கள் வசூல் செய்துக்கொள்ளமுடியும். தேவைப்படுகின்றவர்கள் தொடர்புக்கொள்ளவும்.
அம்மன் சிலை செய்வதற்க்கு என்ற சென்னை நண்பர் வழியாக அங்கு விசாரிக்க சொல்லிருந்தேன். அம்மன் சிலை மற்றும் பரிவார தெய்வங்கள் சிலையே ஒரு பெரிய தொகையாக தான் வருகின்றன. அவர் விசாரித்து சொன்னதில் தெரிகின்றது. அம்மன் சிலை குறைந்தது ஒரு லட்சத்தில் தொடங்கி ஐந்து லட்சம் வரை இருப்பதாக சொன்னார். சிலை செய்யும்பொழுது அதனைப்பற்றி பதிவில் சொல்லுகிறேன்.
ஒரு சிலர் ஒரு பொருளை மட்டும் வாங்கிக்கொடுக்க விருப்பப்படுவார்கள். உதாரணத்திற்க்கு ஒரு லோடு செங்கல் மட்டும் நான் வாங்கிக்கொடுக்கிறேன் என்றால் அவரின் பணத்தில் அந்த பொருளை நான் வாங்கிக்கொடுத்துவிடுகிறேன். நீங்களே ஆர்டர் செய்தும் இதனை வாங்கிக்கொடுக்கலாம். உங்களின் விருப்பம் போல செய்யப்படும்.
ஜாதக கதம்பத்தை படித்த மற்றும் தொடர்ச்சியாக தொடர்பில் இருப்பவர்களும் கண்டிப்பாக இந்த நல்ல பணிக்கு உதவிடுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் ஆரம்பிக்கவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன் மற்றும் உங்களின் உதவியையும் எதிர்பார்த்து இருக்கிறேன். கோவில் கட்டும் பணியை நேரில் வந்து பார்க்கவேண்டும் என்றாலும் வரலாம். உங்களின் ஈடுபாட்டை அதிலும் காண்பிக்க வேண்டுகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு