Followers

Thursday, February 28, 2019

சமையல்அறை தரும் லட்சுமி கடாட்சம்


வணக்கம்!
          ஒருவரின் வீட்டில் உள்ள சமையலறையில் அந்த வீட்டின் பெண் சமைக்க செல்லும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக செல்லவேண்டும். சமையல் அறைக்கு செல்லும்பொழுது சமையல் செய்யும் நபர் மகிழ்ச்சியாக சென்றால் அந்த வீடு சிறந்து விளங்கும்.

ஒருவரின் வீட்டில் உள்ள சமையலறை மிக மிக முக்கியபங்கு வகிக்கும். ஒருவரின் வீட்டில் செல்வசெழிப்பு சிறந்து விளங்குவதற்க்கும் செல்வம் வந்துக்கொண்டே இருப்பதற்க்கும் சமையலறை மிக முக்கியபங்கு வகிக்கும். சமையலறையில் சமைக்க செல்லும் நபர்கள் அதனைவிட முக்கியமானவர்களாக கருதப்படுவார்கள்.

சமையறைக்கு செல்லும்பொழுது நமது வீட்டில் உள்ளவர்களுக்கு நம் கையால் நல்ல உணவை கொடுக்கவேண்டும். அவர்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் இதற்கு நாம் காரணமாக இருக்கிறோம் என்று சமைக்க செல்லும் நபர்கள் புரிந்துக்கொண்டு செயல்படவேண்டும்.

சமையலறைக்கு செல்லும்பொழுது அழுதுக்கொண்டு சென்றால் கண்டிப்பாக வீடு உருப்படாது. வீட்டிற்க்கு பீடை தான் பிடிக்கும். பீடை போக்க வீட்டில் உள்ள தலைவர் கோவில் கோவிலாக சென்றாலும் சமைக்கும் நபர் அழுதுக்கொண்டு சமைக்க சென்றால் அவர் கோவில் கோவிலாக சென்றது வீண் என்று தான் அர்த்தம்.

வீட்டில் யார் சமைத்தாலும் பரவாயில்லை அவர்கள் இன்முகத்தோடு சமையற்கட்டுக்கு செல்லுங்கள். உங்களின் வீடு சிறந்து விளங்கும். இதுவரை செய்யாமல் இருந்தாலும் பரவாயில்லை இனிமேல் மகிழ்ச்சியோடு செல்லுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, February 27, 2019

கிரகபாதிப்பில் இருந்து விடுபட


வணக்கம்!
          ஒருவருக்கு தொடர்ச்சியான வழிபாடு மற்றும் பரிகாரம் தேவைப்படுமா என்ற ஒரு கேள்வி எழும். இதனை சொல்லவேண்டும் என்று எனக்கு தோன்ற வைத்ததும் எனக்குள் நடக்கும் ஒரு சில காரணத்திற்க்காக இதனை சொல்லுகிறேன்.

ஒருவருக்கு ஏழரைச்சனி நடக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். இந்த நேரத்தில் மிக கடுமையான தொல்லை தரும் நிலையில் சனிபகவான் இருந்துக்கொண்டு இருந்தால் கண்டிப்பாக அவர்க்கு தொடர்ச்சியான வழிபாடு மற்றும் பரிகாரம் தேவைப்படுகின்றது.

ஒரு கிரகம் அதிகப்பட்ச தண்டனையை கொடுக்கின்றது என்றால் அதற்க்காக நாம் சில தொடர்ச்சியான வழிபாட்டை மேற்க்கொண்டே ஆகவேண்டும். அதே போல ஒரு சிலருக்கு உயிர்க்கு ஆபத்து அல்லது மனிதபிறவியின் குணம் மாறும்பொழுது தொடர்ச்சியான பரிகாரத்தை மேற்க்கொள்ளவேண்டும்.

ஏழரைச்சனி காலக்கட்டத்தில் நிறைய வேலைகளை செய்தே ஆகவேண்டும். ஏழரை வருடங்களில் பலருக்கு பிரச்சினையை தரும் நிலையிலேயே செயல்படுவதால் அவர்கள் தொடர்ச்சியான வழிபாட்டை மற்றும் பரிகாரத்தை செய்துக்கொள்ளவேண்டும்.

ஒரு சிலருக்கு ஒரு சில தசாக்கள் மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் இதற்கும் வழிபாட்டை செய்யவேண்டும். ஒரு சிலர் தசாவின் காலத்தில் அவர்களின் வாழ்க்கையில் இருந்து விலகி சென்றுவிடுவார்கள். அதாவது ஒரு மோசமான வாழ்க்கையை வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதற்கும் வழிபாட்டை செய்து தான் ஆகவேண்டும்.

ஒரு சில கஷ்டம் என்பது அனுபவிக்கும் நபர்க்கு மட்டுமே தெரிந்த ஒன்று அதில் கஷ்டப்படும் நபர்களுக்கு தான் கஷ்டம் என்றால் என்ன என்பது புரியும். இதனை தெரிந்துக்கொண்டு தொடர்ச்சியான வழிபாட்டை மேற்க்கொள்ளவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, February 26, 2019

முயற்சியால் வெற்றி


வணக்கம்!
          ஒரு காரியம் நடைபெறுவதற்க்கு ஆயிரம் தடவை முயற்சி செய்து தான் அந்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கமுடியும். ஒரு தடவையிலேயே அந்த காரியத்தை முடிக்கவேண்டும் என்றால் நமது பூர்வபுண்ணியம் நன்றாக இருக்கவேண்டும்.

பெரும்பாலும் ஜாதகங்கள் காரியத்தை நடக்கவிடாமல் தான் தடுக்கும். மனிதனின் பெரும் முயற்சியால் தான் அனைத்து காரியமும் நடைபெறும். மனிதனின் முயற்சி மட்டும் இல்லை என்றால் எந்த காரியமும் நடைபெறாது.

ஒரு காரியத்தை முடிந்தவரை அது முடியும் என்ற நம்பிக்கையோடு நாம் செயல்படவேண்டும். கடைசி நேரத்தில் அது முடியாமல் போனால் கூட நாம் சிறப்பாக தான் செய்தோம் கடவுளின் அனுக்கிரகம் அவ்வளவு தான் என்று இருக்கலாம். நம்முடைய செயல்பாட்டை நூறு சதவீதம் போட்டுவிடவேண்டும் அதன்பிறகு கடவுளிடம் விட்டுவிடவேண்டும்.

கடமையை ஒழுங்காக செய்தால் கண்டிப்பாக வெற்றி என்பது நம்மை நோக்கி தான் வரும். கடமையை ஒழுங்காக செய்யாமல் வெற்றி வரவில்லை என்று சொல்லிக்கொண்டு இருந்தால் நன்றாக இருக்காது.

ஒரு மனிதன் பிறக்கிறான் என்றால் நிறைய தோஷத்தோடு தான் பிறக்கிறான். தோஷத்தை எதிர்த்து செயல்படும்பொழுது மட்டுமே வாழ்க்கை நன்றாக அமைக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, February 25, 2019

உடலும் பயிற்சியும்


வணக்கம்!
          உடலுக்கு தேவையான உணவைப்பற்றி கடந்த பதிவில் சொல்லிருந்தேன். அதனை தொடர்ந்து ஒன்றை சொல்லவேண்டும் என்று இந்த பதிவு. இன்றைய காலத்தில் பள்ளிகளில் பாடத்தை சொல்லி தருகின்றார்களோ இல்லையோ கராத்தே கற்றுத்தருகிறேன் பரதம் கற்றுத்தருகிறேன் என்று சொல்லுவார்கள்.

நாமும் இதனை எல்லாம் நமது குழந்தைகள் கற்றுக்கொள்ளட்டும் என்று கற்றுக்கொடுக்க நமது குழந்தைகளை அனுப்புவோம். ஒரு காலக்கட்டத்திற்க்கு பிறகு இதனை எல்லாம் விட்டுவிடுவார்கள். பாடத்தில் கவனத்தை கொண்டு சென்றுவிடுவார்கள். கராத்தே எல்லாம் வேண்டாம் பாடம் மட்டும் போதும் என்று விட்டுவிடுவோம்.

பெரும்பாலும் ஒரு கலையை விட்டுவிட்டால் அதன்பிறகு உடல் மாறிவிடும். தேவையற்ற இடங்களில் எல்லாம் சதை வளர ஆரம்பித்துவிடும். கராத்தே கற்றுக்கொடுப்பது நல்லது என்று நாம் நினைப்போம் அனுபவத்தில் கராத்தே கற்றுக்கொண்டு அதில் இருக்கும் நபர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது கொஞ்சம் கடினமாகவே இருக்கும்.

உடலை கட்டுக்கோப்போடு வைத்திருக்கும் நபர்களுக்கு பெரும்பாலும் குழந்தை பாக்கியம் இருப்பதில்லை என்பதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். இதனை நான் அனுபவத்தில் தான் சொல்லுகிறேன். பெரும்பான்மையான நபர்களுக்கு இருப்பதில்லை என்பதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்.

உடலுக்கு தேவையான உடற்பயிற்சியை வேண்டுமானால் செய்யலாம். ஒரு வித்தையை கற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைப்பது வாழ்க்கைக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக மாறிவிடுகின்றது என்பதை மட்டும் உணர்ந்துக்கொண்டு செயல்படுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, February 23, 2019

உணவும் கிரகங்களும்


வணக்கம்!
          கிரகங்கள் இளமையான வயதில் இருக்கும்பொழுது ஒருவருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஒரு சில கெட்ட காலக்கட்டங்கள் இருந்தால் தான் இளமையான வயதில் கொஞ்சம் பாதிப்பை கொடுக்கும் மற்றபடி முக்கால்வாசி பேருக்கு நல்லதை தரும்.

இளமை வயதை தாண்டிவிட்டால் அந்த ஜாதகருக்கு பிரச்சினை மேல் பிரச்சினையை கொடுக்க ஆரம்பித்துவிடுகின்றது. இளமை வயதில் தாய் தந்தை அரவணைப்பில் இருந்தாலும் அதனையும் தாண்டி அவர்களின் உடலில் நல்ல சக்தி இருப்பதால் கிரகங்களால் பெரிய பாதிப்பை கொடுக்கமுடிவதில்லை.

உடலில் சக்தி குறைய குறைய கிரகங்களின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்துவிடுகின்றது. மெல்ல மெல்ல உடலில் ஆதிக்கத்தை அதிகரிக்க செய்துவிடுகின்றது. கிரகங்களுக்கு தக்க மாதிரி உங்களின் உடல் வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.

வாழ்க்கை சூழல் நாம் ஓட தான் வேண்டும் அதே நேரத்தில் உடலுக்கு தேவையான சக்தியை சரியாக பராமரித்து வரவேண்டும். சக்தி வேண்டும் என்றால் ஏதோ சக்தி மாத்திரை போட்டுக்கொண்டு உடலை வளர்க்கவேண்டும் என்பதில்லை நல்ல உணவை எடுத்துக்கொண்டு வந்தாலே போதுமானது.

உணவு விசயத்தில் நானே தவிரவிட்டுவிட்டதால் தான் உங்களிடம் இதனை வலியுறுத்தி வருகிறேன். நல்ல உணவு எது என்று பார்த்து நல்ல ஆலோசனை பேரில் உணவை எடுத்து வந்தால் அது உங்களுக்கு நல்ல சக்தியை கொடுக்கும்.

உணவு விசயத்தில் நல்ல அக்கறை காட்டி உங்களின் உடலுக்கு எடுத்து வந்தால் கண்டிப்பாக உங்களுக்கு கிரகங்களின் தாக்கம் பெரியளவில் இருக்காது. நீங்கள் பிரச்சினையே இல்லாமல் உங்களின் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, February 22, 2019

பாக்கியஸ்தானம் கெடுதல் நல்லது எப்பொழுது?


வணக்கம்!
          பாக்கியஸ்தானம் எனும் ஒன்பதாவது வீடு ஒருவருக்கு நன்றாக இருக்கவேண்டும் என்று சொல்லுவது உண்டு. பாக்கியஸ்தானம் நன்றாக இருந்தால் தான் அவர்களுக்கு அனைத்தும் எளிதில் கிடைக்கும் என்று சொல்லுவார்கள். 

என்னைப்பொறுத்தவரை பாக்கியஸ்தானம் கெடுவது ஒரு விதத்தில் நல்லது என்று சொல்லுவேன். என்ன பாக்கியஸ்தானத்தைப்பற்றி நிறைய எழுதிவிட்டு இதனை சொல்லுகின்றீர்கள் என்று கேட்கலாம். பாக்கியஸ்தானம் எனும் வீடு நன்றாக இருந்தால் அவர்களுக்கு அவர்களின் தந்தை வழி சொத்து நிலைத்து இருக்கும்.

தந்தை வழி சொத்து நிலைத்திருந்தால் அவர்களின் வாரிசு சரியாக இருக்காது. இதற்கு தான் பாக்கியஸ்தானம் கெடவேண்டும் என்று சொல்லுகிறேன். தந்தை வழி சொத்தை வைத்து பிள்ளைகள் ஒழுங்காக பராமரிப்பது கிடையாது. பிள்ளைகள் ஒன்றும் தெரியாமல் வளர்ந்துவிடுகின்றனர்.

பாக்கியஸ்தானம் கெட்டால் கண்டிப்பாக கடுமையான போராட்டத்திற்க்கு பிறகு அவர்கள் நன்றாக சம்பாதித்துவிடுகின்றனர். பாக்கியஸ்தானம் கெட்டால் நிறைய போராட்டம் பெற்று அவர்கள் சம்பாதிப்பதால் அந்த சொத்து கெடுவதில்லை.

உங்களின் வாரிசுகளுக்கு பாக்கியஸ்தானம் கெட்டால் அதனைப்பற்றி கவலைப்படமால் இருந்துவிடுங்கள். நீங்கள் சொத்து சம்பாதிக்கவில்லை என்றாலும் அவர்கள் போராட்ட வைத்து அதனை சம்பாதிப்பார்கள்.பல வாரிசுகளை நான் பார்த்து இருக்கிறேன் சம்பாதிக்காமல் அப்படியே அப்பன் சொத்து தருவான் அதனை விற்று நாம் பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்கின்றனர். 

அப்பன் சொத்து வைத்திருப்பது ஒரு ஆராேக்கியமான ஒரு விசயம் தான் ஆனால் அதனை எப்படி தக்க வைத்துக்கொள்வது என்பதை அந்த வாரிசுகள் புரிந்து இருந்தால் அது நன்றாக இருக்கும். பல வாரிசுகள் அனைத்தையும் இழந்துவிடுவதால் இதனை சொல்லுகிறேன்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, February 20, 2019

லக்கன சம்பந்தம் இராகு & கேது



வணக்கம்!
          இராகு லக்கனத்தில் இருந்து செயல்பட்டால் எப்படிப்பட்ட பலனை எதிர்பார்க்கலாம் என்று ஒரு நண்பர் கேள்வி கேட்டுருந்தார். இராகு லக்கனத்தில் இருந்து செயல்பட்டால் நல்லது. இராகு கிரகம் அவர்க்கு நல்ல வாய்ப்பை வெளிநாட்டில் உருவாக்கிக்கொடுப்பார்.

இராகு கேது தசா நடந்தால் அந்த ஜாதகர் வெளிநாடுகளில் சுற்றும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். உள்ளூர் ஆட்களில் தொடர்பை விட வெளியூர் ஆட்களில் தொடர்பு அதிகமாக இருக்கும். வெளியூர் ஆட்கள் வழியாகவே அவர்க்கு நல்லது நடந்துக்கொண்டே இருக்கும்.

இராகு கேது தசா நடக்கும்பொழுது அந்த கிரகத்தோடு சம்பந்தப்பட்ட கிரகம் எது என்று பார்க்கவேண்டும். அதனோடு சேரும் கிரகம் சரியில்லை என்றால் அதனால் ஜாதகருக்கு அந்த கிரகத்தின் தன்மை உள்ள பிரச்சினையை ஜாதகர் சந்திக்க நேரிடும்.

உதாரணமாக ஆறாவதுவீட்டு அதிபதி இராகுவோடு அல்லது கேதுவோடு சம்பந்தப்பட்டு தசா நடந்தால் அந்த ஜாதகருக்கு பிரச்சினை என்பது சண்டை சச்சரவு அதனால் வழக்கு சந்திக்க நேரிடும். ஏழாவது வீட்டில் சம்பந்தமும் இதற்க்கு வருவதால் துணை சரியாக இருக்காது.

இவர்க்கு அவரின் துணை ஒத்து போகமாட்டார்கள். ஒரு சிலருக்கு வழக்கு போட்டு அவர்களை நீதிமன்றத்திற்க்கு இழுத்துக்கொண்டு இருப்பார்கள். துணை பிரச்சினை இல்லை என்றால் அந்த கிரகத்தின் காரத்துவம் உடைய வேறு ஏதாவது ஒரு பிரச்சினையை ஜாதகர் சந்திக்க நேரிடும்.

இராகுவோடு அல்லது கேதுவோடு தீயகிரகங்கள் சம்பந்தம் இல்லை என்றால் அவர்க்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கும். இராகு கேதுவால் நன்மை என்றே சொல்லலாம். நான் சந்தித்த ஜாதகர்களில் இராகு கேது லக்கனத்தில் அமர்ந்தால் அவர்களின் துணைவியார் வழியாக தான் நிறைய பிரச்சினையை சந்திக்கின்றார்கள்.

நாற்பது வயதிற்க்கு மேல் உள்ள ஜாதகர்கள் தங்களின் உடல்நலனில் அதிக அக்கறை காட்டிக்கொண்டு இருந்தால் நல்லது. இராகு கேதுவால் உடல் பிரச்சினையை சந்திக்க நேரிடும். மருத்துவர்களின் ஆலோசனையில் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

இராகு கேது செல்லும் நட்சத்திரமும் மிக முக்கியமானது. இராகு கேது செல்லும் நட்சத்திரத்தின் தன்மையிற்க்கு தகுந்தமாதிரி பலன்கள் இருக்கும். உதாரணத்திற்க்கு இராகு செவ்வாய் நட்சத்திரத்தில் சென்றால் ஜாதகர் அடிக்கடி சண்டை சச்சரவில் சிக்கும் வாய்ப்பு உருவாகும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, February 19, 2019

கோவில் கட்டும் பாக்கியம்


வணக்கம்!
          ஜாதககதம்பம் எழுதிய நாட்களிலேயே மிக அதிகமாக கஷ்டப்பட்டு ஓடும் நாட்களாக தற்பொழுது இருந்து வருகின்றது. அடிக்கல் நாட்டுவிழா ஏற்பாடு நடந்துக்கொண்டு வருகின்றது அதற்குள்ள வேலையை செய்யும்பொருட்டு ஓடிக்கொண்டு இருக்கிறேன். 

அனைத்து நண்பர்களின் உதவியும் இதற்கு தேவை அவர் அவர்கள் தங்களால் முடிந்தளவுக்கு இதற்கு நிதியுதவி அளியுங்கள். முதலில் அடிக்கல் நாட்டுவிழாவிற்க்குள்ள நிதியுதவியை அளியுங்கள் அதன்பிறகு கோவிலுக்குள்ள நிதியை அளிக்கலாம்.

கோவில் கட்டும்பணி கிடைத்தது ஒரு அற்புதமான ஒரு வாய்ப்பு என்று கருதுகிறேன். நம்மிடம் பணம் இருந்தால் கூட இதனை எல்லாம் செய்வதற்க்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகவே இருக்கும். ஏன் என்றால் நாம் செய்த புண்ணியம் தான் நமக்கு இப்படிப்பட்ட வாய்ப்பு எல்லாம் கிடைக்கின்றது.

ஒவ்வொருவரும் நல்ல எண்ணத்தோடு செயல்படுங்கள். நல்ல எண்ணம் தான் நமக்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுகின்றது. எதிர்மறையான எண்ணங்கள் நல்ல திறமைசாலி என்பதை உங்களுக்கு கொடுத்துக்கொண்டே இருக்கும் ஆனால் உங்களுக்கு நல்ல வாய்ப்பை கொடுக்காது.

நல்ல வாய்ப்பு உங்களுக்கு வரும்பொழுது உங்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.  உங்களின் பிறப்பு ஒரு நல்லவிதமாக அமையவேண்டும் என்றால் நல்ல வாய்ப்பை உருவாக்கும் செயலில் மட்டும் அதிக கவனம் செலுத்தவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, February 18, 2019

ஜாதக பலன் கணிப்பு



வணக்கம்!
          பொதுவாகவே நாம் ஜாதகம் பார்க்கும்பொழுது இராசி கட்டம் மற்றும் நவாம்சம் மட்டும் பார்த்து ஜாதகப்பலனை சொல்லிவிடுவது உண்டு. முக்கால்வாசி சாேதிடர்கள் ஜாதகபலனை சொல்லும்பொழுது இதனை வைத்து ஜாதகபலனை சொல்லிவிடுகின்றனர்.

ஒரு ஜாதகத்தை எழுத சொல்லி அந்த புத்தகத்தை அல்லது நாம் கணிக்கும் சாப்ட்வேர் தரும் விபரத்தை முழுவதும் படித்துவிட்டு பலனை சொன்னால் நன்றாக பலனை கொடுக்கலாம். அனைத்தையும் படித்துவிட்டு சொல்லுகிறேன் என்று சொன்னால் வரும் வாடிக்கையாளர் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

ஜாதகத்தை முழுமையாக படிப்பதால் என்ன கிடைக்கும் என்று கேட்கலாம். ஜாதகத்தை படித்தால் அவர் பிறந்த நாள் எப்படிப்பட்டது பிறந்த தேதி மற்றும் பிறந்த திதி இதனைப்பற்றி எல்லாம் நாம் பார்த்து அதற்கு தகுந்தார் போல் பலனை நாம் சொல்லலாம்.

அமாவாசை திதி அன்று பிறந்தால் பெரும்பாலும் கிரகங்களுக்கு பலன் இருக்காது. நாம் இராசிக்கட்டத்தை பார்த்து சொல்லும்பொழுது கிரகத்தை பார்த்து சொல்லிக்கொண்டு இருப்போம். அமாவாசை திதியை ஜாதக விபரத்தில் தான் தெரிந்துக்கொள்ளமுடியும்.

உங்களுக்கு ஒரு உதாரணத்தை சொல்லுவதற்க்கு இந்த திதியை எடுத்துக்கொண்டு சொன்னேன். இதைப்போல் பல விசயங்கள் விபரத்தில் இருக்கும். இதனை எல்லாம் நாம் பார்த்து வரும் ஜாதகருக்கு பலனை சொன்னால் சரியான ஒரு பலனையும் அதற்கு தகுந்த மாதிரியான பரிகாரத்தையும் சொல்லலாம்.

ஒவ்வொருவரும் ஜாதகத்தை கணிக்கும்பொழுது அத்தனை விபரத்தையும் படித்துவிட்டு அதன்பிறகு பலனை நாம் பார்த்தால் நன்றாக இருக்கும். பல விபரங்கள் முழுமையான தகவல்களில் இருக்கின்றன அதனையும் பாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, February 16, 2019

விழா பத்திரிக்கை


அம்மன்கோவில் அடிக்கல் நாட்டுவிழா


வணக்கம்!
          நமது அம்மன் கோவில் கட்டுவதற்க்கு திருப்பணி ஆரம்பிக்கபோகிறோம்.  வரும் மார்ச் மாதம் 6 ஆம் தேதி மாசி மாதம் 22 ஆம் நாள் அடிக்கல் நாட்டுவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. அனைவரும் பங்குக்கொள்ளுங்கள்.

அடிக்கல் நாட்டுவிழா பத்திரிக்கை அடித்து அதனை கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். பத்திரிக்கையை வாட்ஸ்அப்பிலும் வெளியூர் நண்பர்களுக்கு அனுப்பிக்கொண்டு இருக்கிறேன். என்னால் முடிந்தவரை உங்களுக்கு நேரில் கொடுத்துவிடுகிறேன். 

அடிக்கல்நாட்டுவிழாவிற்க்கு சிறப்பான அன்னதானமும் ஏற்பாடு செய்யபட இருக்கின்றது. புதிய கோவில் கட்டுவதால் தங்களால் முடிந்தபொழுது இதில் பங்குக்கொண்டு அதற்க்கு உதவலாம். அடிக்கல்நாட்டு விழா அன்னதானதிற்க்கும் அத்தாேடு நடைபெறும் நிகழ்வுக்கும் காணிக்கை செலுத்த விரும்புவர்கள் செலுத்தி வையுங்கள்.

சிறப்பான முறையில் இதனை செய்யவேண்டும் என்று இத்தனை நாட்கள் பல ஊர்கள் சென்று பல நண்பர்களை சந்தித்து இதனைப்பற்றி சொல்லி அவர்களின் உதவியையும் பெற்று இதனை செய்துக்கொண்டு இருக்கிறேன்.

வரும் நாட்களிலும் பயணங்களில் உங்களை சந்தித்து இதனைப்பற்றி உங்களிடம் சொல்லுகிறேன். இதனை நேரிடையான அழைப்பாக ஏற்றுக்கொண்டு அனைவரும் பங்குக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, February 15, 2019

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

வணக்கம்!
                      அம்மன் பூஜை நடைபெற்றபொழுது எடுத்த புகைப்படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

வணக்கம்!
          அம்மன் பூஜை நடைபெற்றபொழுது எடுத்த புகைப்படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

வணக்கம்!
          அம்மன் பூஜை நடைபெற்றபொழுது எடுத்த புகைபடங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, February 13, 2019

அம்மன் பூஜை


வணக்கம்!
          இன்று அம்மன் பூஜை நடைபெறுகின்றது. அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.  
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
சிங்கபூரை சேர்ந்த நண்பர் அவர்கள்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள்.  
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள்.    

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்.
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள்.    
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள்.      

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.  
பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள்.  
மயிலாடுதுறையை சேர்ந்த யுவராஜ் அவர்கள்.
விழுப்புரத்தை சேர்ந்த திரு அசோக்குமார் அவர்கள்.

 வழக்கம்போல்            
                               திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

அம்மன் பூஜை நடைபெறுவதால் உங்களின் வேண்டுதல்களை வைக்கலாம்.

சென்னையில் சந்திக்க விரும்புவர்கள் என்னை தொடர்புக்கொள்ளவும்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, February 12, 2019

இராகு கேது தரும் சாபம்


ணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் கொலை பாவம் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அவரின் செயல்பாடு அல்லது அந்த குடும்பத்தின் செயல்பாடு எப்படி இருக்கும் என்றால் அவர்கள் எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் தடையை உருவாக்குவார்கள்.

குடும்பம் வளர்ச்சியை நோக்கி செல்லவே செல்லாது. அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் அதிகமாகவே இருக்கும். அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களே அவர்களுக்கு எதிரியாக செயல்படுவது நடக்கும். இப்படிப்பட்ட நிலையில் ஒரு குடும்பம் இருந்தால் அந்த குடும்பத்திற்க்கு கொலை பாவம் இருக்கின்றது அர்த்தம்.

கொலை பாவத்தை அதிகமாக பிரதிபலிப்பது இராகு கேது கிரகங்கள். இந்த இரண்டு கிரகத்தின் செயல்பாடுகள் கொலை பாவம் இருப்பதை உறுதி செய்யும். இராகு திசையில் பலருக்கு மேலே சொன்ன மாதிரி நடந்திருக்கும்.

நான் கொஞ்சம் அதிகமாகவே சென்று அவர்களின் வாழ்க்கையில் ஆன்மீகம் துணைக்கொண்டு ஆராய்ந்து பார்த்தால் ஏதோ ஒரு ஆத்மாவின் சாபம் அவர்களை பின் தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றது என்பது மட்டும் தெரிகின்றது. இதனை சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் ஆனால் அது தான் உண்மையாகவும் இருக்கின்றது.

பரிகாரத்திற்க்காக இதனை சொல்லவில்லை. இவர்களுக்கு பரிகாரம் செய்யவேண்டும் என்றால் அவ்வளவு எளிதில் எல்லாம் வரமாட்டார்கள் என்பதும் நமக்கு தெரியும். ஏன் என்றால் அவர்களுக்கு தான் எதுவும் நடக்ககூடாது என்ற கொலைபாவம் சுற்றிக்கொண்டே வருகின்றதே.

இவர்களுக்கு என்ன தான் செய்யலாம் என்று கேட்கலாம். ஒரு குடும்பத்திற்க்கு இப்படிப்பட்ட பாவம் இருக்கின்றது என்றால் அந்த குடும்பத்திற்க்கு வந்த மருமகள் அந்த குடும்பத்தை இழுத்துக்கொண்டு செல்லவேண்டும். மருமகள் வழியில் ஏதாவது நன்மை நடந்தால் தான் அந்த குடும்பம் ஏதோ ஒரு வளர்ச்சியை நோக்கி செல்லலாம். ஜாதகத்தில் இராகு கேது என்ற இரண்டு கிரகங்கள் தான் கொலை பாவத்தை கொண்டு வருகின்றது.

இராகு கேது என்ற இரண்டும் ஆத்மா வழியில் அவர்களின் குடும்பத்தை  நாசம் செய்ய ஆரம்பிக்கும். இப்படிப்பட்ட தோஷம் இருந்தால் கண்டிப்பாக நீங்கள் புரிந்துக்கொண்டு செயல்பட்டால் ஏதாவது ஒரு வழியில் இதற்க்கு விடைகிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, February 11, 2019

இராகு & கேது


வணக்கம் !
          இராகு கேதுவை எந்த விதத்தில் நமது வாழ்க்கையை பாதிப்படைய செய்யும் என்பதை சொல்லுகிறேன். இதனை கண்டிப்பாக நன்றாக சிந்தித்து பார்த்தால் உங்களுக்கு புரியவரும். பொதுவாகவே ஆன்மீகத்தை ஏன் மக்கள் நாடுகின்றனர் என்றால் நமது மூளையை தெளிவாக மாற்றி நல்ல சிந்தனையை மேலோங்க தான் ஆன்மீகம் பயன்படுகின்றது.

பெரும்பாலானவர்கள் மற்ற கருத்தை சொன்னாலும் முதலில் உங்களின் மூளையின் ஆற்றலை அதிகரிக்க செய்து நல்ல சிந்தனையை வளர்த்துக்கொள்ள ஆன்மீகம் பயன்படுகின்றது. இதனை பெரும்பாலும் நாம் சிந்தித்து பார்ப்பதில்லை உண்மையில் நல்ல சிந்தனையை கொடுக்கும்.

தோஷம் என்பது உங்களின் மூளையை மழுங்க அடித்து உங்களுக்கு எதுவும் புரியாத ஒரு வகையில் உங்களை சிக்க வைப்பது தான் தோஷத்தின் முதல் வேலை என்று சொல்லலாம். இராகு கேது இதனை நன்றாக செய்யும் எப்படி என்றால் உங்களின் செயல்பாட்டை மாற்றிவிடும் தன்மை அதற்கு உண்டு.

ஒவ்வொருவம் ஒவ்வொரு கருத்தை இராகு கேதுவிற்க்கு சொன்னாலும் உங்களின் மூளையை மழுங்க அடிப்பதில் இராகு கேதுவிற்க்கு அதிக பங்கு இருக்கின்றது. இராகு கேது தோஷம் உடையவர்களை நாம் பார்த்தால் கூட அவர்கள் யாருடைய பேச்சையும் கேட்கவே மாட்டார்கள் அவர்கள் வாழவும் மாட்டார்கள்.

இராகு கேது பிடித்தவர்களின் நிலை ஒரு பைத்தியக்கரத்தனமான வேலையாகவே இருந்துக்கொண்டு இருக்கும். ஊர் ஊராக சுற்றி வருவார்கள் ஆனால் அவர்களால் சாதிக்கமுடியாது என்று சொல்லலாம். இராகு கேதுவின் பிடியில் இருந்து  நம்மை விடுவித்தால் மட்டுமே நமது எண்ணம் நன்றாக உயர்ந்து நல்ல வாழ்க்கை கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, February 10, 2019

சோதிடமும் வாஸ்துவும்


வணக்கம்!
          நமது நண்பர் ஒருவர் கேள்வி கேட்டுருந்தார் வாஸ்துவிற்க்கும் சோதிடத்திற்க்கும் தொடர்பு உண்டா என்று கேட்டுருந்தார். நான் பெரும்பாலும் வாஸ்து பார்ப்பதில்லை இதனை தொழிலாக கொண்டவர்கள் அவர்களின் வழியில் இதனை சரி என்று சொல்லுவார்கள். சோதிடத்தை பார்ப்பவர்கள் சோதிடம் தான் சரி என்பார்கள். இரண்டும் மக்களுக்கு நல்லதை செய்வதால் அந்த வகையில் இது தொடர்பாக இருக்கலாம்.

சாதாரணமானவான இந்த இரண்டையும் பார்க்கும்பொழுது ஒருவரின் ஜாதக பலன் மிக அதிகமாக வேலை செய்யும். ஜாதகத்திற்க்கு தகுந்தமாதிரி அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான வீட்டை அமைத்துக்கொடுக்கும். இந்த வகையில் சோதிடத்திற்க்கும் வாஸ்துவிற்க்கும் தொடர்பு இருக்கும்.

ஜாதகத்தில் நடைபெறும் தசாவிற்க்கு தகுந்தமாதிரியே வீடும் அமைந்துவிடும். ஒரு சிலருக்கு அவர்களின் சுய ஜாதகத்தில் எப்படிப்பட்ட கிரக நிலை இருக்கின்றதோ அந்த நிலைக்கு தகுந்தமாதிரியே வீடு அமைகின்றது. எப்பேர்பட்ட வாஸ்து நிபுணர்களாலும் ஒரு சிறப்பான ஒரு வீட்டை அமைத்துவிடமுடியாது. அவர்களின் ஜாதகத்தை ஒட்டி வீடு அமையும்.

வாஸ்துவிற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கட்ட வேண்டியதில்லை. ஒரளவு பார்த்துக்கொண்டு வீட்டை அமைத்துக்கொண்டால் போதுமானது அதன் பிறகு உங்களின் பூஜையின் தன்மையை பொறுத்து அந்த வீடு நன்றாக இருக்கும்.

ஒரு வீடு நன்றாக இருப்பது அங்கு வசிக்கும் நபர்கள் அந்த வீட்டிற்க்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த வீட்டை பராமரிக்கின்றார்கள் என்பதை பாெறுத்து அமையும். நன்றாக பராமரித்தால் கண்டிப்பாக எப்படிப்பட்ட வீடும் உங்களை காப்பாற்றும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, February 8, 2019

இராகு & கேது


வணக்கம்!
          பெரும்பாலும் மனிதர்கள் தன்னை மேலும் மேலும் உயர்த்திக்கொண்டே செல்ல தான் நினைப்பார்கள். அவர்களின் எண்ணத்தில் மண்ணை போட்டு அவர்களை சிக்கலில் சிக்க வைப்பதில் இராகு கேது அதிக பங்கு வகிப்பார்கள்.

இராகு கேதுவின் நகர்வு ஒருவரை நன்றாக தூக்கிவிடவும் செய்யும் அதே நேரத்தில் பள்ளத்தில் போட்டு தள்ளவும் செய்கின்றது. இராகு கேதுவின் நகர்வை உற்று நோக்கி ஒருவரின் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லுவது உண்டு.

இராகு என்பவரை அவ்வளவு எளிதில் நாம் எடைபோட்டுவிடமுடியாது. இராகுவின் பிடியில் மாட்டியவர்களுக்கு தான் இராகு என்றால் எப்படி இருக்கும் என்பது தெரியும். இராகுவின் பிடியில் மாட்டியவர்களை யாராவது ஒரு ஆன்மீக குரு வந்து அதில் இருந்து இழுத்தால் தான் உண்டு இல்லை என்றால் அதிலேயே சிக்கி வாழ்க்கையை இழக்கவேண்டியது தான் அதில் இருந்து அவர்களால் மீள முடியாது.

கேதுவும் நாம் அவ்வளவு எளிதில் எடைபோட்டுவிடமுடியாது. கேது முடிந்தளவுக்கு உடலில் விளையாடிவிடுவார். உடலில் என்ன செய்கின்றார் என்பது தெரியாது ஆனால் நிறைய செய்துவிடுவார். கேதுவால் உடல் நலனை இழந்தவர்கள் அதிகம் என்று சொல்லலாம்.

இராகு கேதுவைப்பற்றி நிறைய ஏற்கனவே எழுதியிருந்தாலும் இதனை சொல்லுவதற்க்கு காரணம் மீண்டும் மீண்டும் இதனை நினைவுப்படுத்திக்கொண்டே இருந்தால் தான் உங்களுக்கு நல்லது நடக்கும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, February 7, 2019

அறிவின் துணைக்கொண்டு சோதிடம்


வணக்கம்!
          அறிவு இருந்தால் எதிலும் வெற்றி பெற்றுவிடலாம் இதில் சோதிடத்தை துணைக்கொண்டு எப்படி செயல்படுத்துவது என்று நண்பர் ஒருவர் கேள்வி கேட்டார். 

சோதிடத்தை பின்பற்றுபவர்கள் அனைவரும் அறிவு இல்லையா என்று கேட்கலாம். ஜாதக கதம்பத்தில் இருப்பவர்கள் கூட யாரையும் குறைந்து மதிப்பிடமுடியாது அனைவரும் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் தான் அவர்களுக்கு எல்லாம் அறிவு இல்லை என்பது அர்த்தமில்லை.

அறிவு ஒரு அளவுக்கு தான் கை கொடுக்கும் மறைமுகமாக பல விசயங்கள் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இருக்கின்றது. அதனை எல்லாம் அறிவு துணைக்கொண்டு செயல்படுத்த முடியாது சோதிடம் வழியாக தான் செயல்படுத்த முடியும் அதனால் தான் அனைவரும் சோதிடத்தை பின்பற்றிக்கொண்டு இருக்கின்றனர்.

சோதிடம் வழியாக எப்படி செயல்படுத்துவது என்றால் நல்ல நேரத்தில் அதனை மிகசிறப்பாக கையாள வேண்டும். நல்ல நேரத்தில் அதிவேகமாக செயல்பட்டு நிறைய வேலைகளை முடித்துக்கொள்ளவேண்டும். 

ஒரு கெட்ட நேரம் வருகின்றது என்றால் அந்த நேரத்தில் பொறுமையாக வேலையை செய்யவேண்டும். மிக நிதானமாக செயல்படவேண்டும். இந்த நேரத்தில் உங்களின் முழு அறிவையும் பயன்படுத்தி உங்களின் கெட்ட நேரத்தில் தவறான வேலையை செய்யாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

இன்றைய காலத்தில் சோதிடம் பார்க்காமலே பல விசயங்களை நீங்கள் தெரிந்துக்கொள்ளமுடியும். உங்களின் இராசியை வைத்தே பல விசயங்களை தெரிந்துக்கொள்ளலாம். இந்த இராசிக்கு கெடுதல் என்று பல இடத்திலும் சொல்லிவிடுவார்கள். அப்பொழுது நீங்கள் உஷாராகிவிடலாம்.

அறிவையும் பயன்படுத்தவேண்டும் அதே நேரத்தில் சோதிடத்தில் கிரகங்களின் நிலையும் நன்றாக உற்று நோக்கவேண்டும். அப்பொழுது தான் உங்களுக்கு நிறைய விசயங்கள் தெரியவரும். உங்களால் முடிந்தளவுக்கு தவறான விசயத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

இன்று திருவண்ணாமலை செல்கிறேன். சோதிடபலனுக்காக காத்திருப்போரை நாளை தொடர்புக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, February 6, 2019

உங்களின் கடமை


வணக்கம்!
          இன்றைய இளம் தலைமுறையினர் நிறைய முன்னேற்றம் அடைந்துக்கொண்டு இருக்கின்றனர். ஒரு சில காலக்கட்டங்களில் இவர்கள் பணி என்று சொல்லிக்கொண்டு சொந்த ஊரை விட்டுவிட்டு வெளிநாடு சென்றுவிடுகின்றனர்.

இன்றைய காலத்தில் வேலை முக்கியமான ஒன்று அதே நேரத்தில் அந்த வேலையை பார்த்துக்கொண்டு கடமையில் இருந்தும் தப்பித்துவிடகூடாது. அதாவது உங்களின் பெற்றோர்களுக்கு நீங்கள் செய்யும் கடமையை செய்யவேண்டும்.

உங்களின் வேலை அதிகமாக இருந்தாலும் அட குறைந்தது அவர்களின் உணவிற்க்காகவது நீங்கள் ஏற்பாடு செய்யவேண்டும். உணவு அவர்களுக்கு கிடைக்கும் வகையில் நீங்கள் செய்துவிட்டால் போதும் உங்களின் கடமையை நன்றாக செய்கின்றீர்கள் என்று அர்த்தம்.

பெற்றோர்களின் உணவை நீங்கள் கொடுத்துவிட்டு அவர்கள் முடியாத ஒரு நிலை வரும்பொழுது அவர்களுக்கு உதவி செய்ய ஒரு ஆளையாவது போட்டு அவர்களுக்கு உதவி செய்யவேண்டும். இது பெரிய பாக்கியமாகவே உங்களுக்கு கிடைக்கும்.

மேலே சொன்ன விசயத்தை நீங்கள் செய்துவிட்டால் உங்களுக்குள்ள பெரிய தோஷம் எல்லாம் அடிப்பட்டு போய்விடும். அதன்பிறகு உங்களுக்கு ஜாதகம் பார்க்கவேண்டும் என்பது கூட வேண்டியதில்லை. அனைத்தும் உங்களை தேடி வந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பாதகாபதி


வணக்கம்!
         ஒருவரின் ஜாதகத்தில் பாதகாபதி என்பவர் எந்த இடத்தில் இருந்தாலும் அவரின் வழியாக சில பிரச்சினைகளை ஜாதகருக்கு அந்த தசா இல்லை என்றாலும் கொடுத்துக்கொண்டே இருப்பார். பாதகாபதி தன்னுடைய தசாவில் தான் பலனை கொடுக்கவேண்டும் என்பதில்லை அவ்வப்பொழுது கொடுத்துக்கொண்டு இருப்பார்.

ஒருவரின் ஜாதகத்தில் பாதகாபதி என்பவர் ஏழாவது வீட்டில் இருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். ஏழாவது வீடு துணைவரை காட்டக்கூடிய ஒரு இடம் அந்த இடத்தில் பாதகாபதி என்பவர் அமர்ந்தால் அவரால் பிரச்சினை வரும்.

பிரச்சினை எப்படிப்பட்டது என்றால் மனைவி கோபம் உடையவராக இருக்கலாம். பாதகம் என்றாலே அது சண்டை தானே முதலில் உருவாகும். இருவருக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படுத்திக்கொண்டு இருப்பார்.

மாமியார் வீட்டில் நிறைய அசிங்கப்படுபவர்களுக்கு எல்லாம் பாதகாபதி ஏழாவது வீட்டோடு தொடர்பை வைத்துக்கொண்டு இருப்பார். இதற்கு என்ன செய்யலாம் என்று கேட்கலாம் அல்லவா.  நீங்கள் மனைவியோடு சண்டை சச்சரவு வைத்துக்கொள்ளகூடாது.

மாமியார் வீட்டிற்க்கு சென்றால் அங்கு தங்ககூடாது. உங்களின் மனைவியை கொண்டு சென்றுவிட்ட பிறகு உடனேயே வந்துவிடுவது உங்களுக்கு நல்லதை தரும். முதலில் எச்சரிக்கையோடு இருந்துவிட்டால் போதும் அதன்பிறகு வழிபாட்டை மேற்க்கொள்ளலாம்.

உங்களின் தந்தையை காட்டக்கூடிய ஸ்தானத்தில் பாதகாபதி அமர்ந்து இருந்தால் உங்களின் தந்தை அல்லது தந்தையின் உடன்பிறப்புகள் உங்களுக்கு வஞ்சகத்தை மட்டுமே செய்துக்கொண்டு இருப்பார்கள். அவர்களை விட்டு தள்ளி இருப்பது நல்லது என்பதை புரிந்துக்கொண்டு இருங்கள்.

ஜாதகத்தில் பாதகாபதி எங்கு அமர்கிறாரோ அந்த இடத்தில் உள்ள காரத்துவத்தை எல்லாவற்றையும் தெரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார் போல் உங்களின் செயல்பாட்டை தீர்மானியுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு 

Tuesday, February 5, 2019

வாழ்க்கை எங்கு முடங்கும்??



வணக்கம்!
          நாம் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டு இருந்தால் தான் அது நமது ஜென்மம் எடுத்தற்க்கு ஒரு நல்ல விசயமாக இருக்கும். சுறுசுறுப்பாக என்று சொல்லுவது கூட மந்த மனநிலைக்கு சென்றுவிடாமல் சுறுசுறுப்பாக இயங்கினால் தான் ஒவ்வொரு நாளையும் அர்த்தமுடியதாக நாம் மாற்றலாம்.

பலருக்கு நல்ல வாய்ப்பு இருந்தும் அதனை நன்றாக பயன்படுத்தாமல் அப்படியே சென்றுவிடுகின்றார்கள். ஏதோ ஒரு மந்த நிலைக்கு சென்றுவிடுவது உண்டு. இதற்கு தான் ஆன்மீகத்தில் இருக்கவேண்டும் என்று சொல்லுவது. ஆன்மீகம் இந்த மந்தநிலையை போக்கி நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்க்கு வாய்ப்பு அளிக்கும்.

இன்றைய காலத்தில் பலர் முடங்கி கிடக்கின்றார்கள். முடங்கி கிடப்பதற்க்கு சோதிடத்தில் காரணம் இருந்தாலும் அதனை மீறி உங்களின் உடலில் வேலை செய்து அதனை போக்கிவிடலாம். யோகா தியானம் போன்ற பயிற்றுவிப்பு நிலையங்கள் எல்லாம் இதனை செய்வார்கள்.

வாழ்க்கை முடங்குவதற்க்கு மனித உடலில் உள்ள சக்கரங்கள் தான் மிக மிக முக்கிய காரணமாக இருக்கின்றது. உடல் சக்கரங்கள் என்ற இடம் பாதிக்கப்படும்பொழுது கண்டிப்பாக உங்களின் செயல்பாடு குறைந்து  வாழ்க்கை முடங்கிவிடும்.

சோதிடம் வழிக்கொண்டு உங்களின் உடலிலும் வேலை செய்யும்பொழுது எந்த ஒரு இடத்திலும் முடக்கம் என்பது ஏற்படவே ஏற்படாது. இதனை நன்கு சிந்தித்து உங்களின் வாழ்க்கையை செலுத்துங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு