வணக்கம் நண்பர்களே!
வக்கிர கிரகங்களைப்பற்றி ஏற்கனவே பதிவில் சொல்லிருந்தாலும் இன்று இதனைப்பற்றி எழுதவேண்டும் என்று ஒரு ஜாதகம் தூண்டியது அதனால் இதனை எழுதுகிறேன்.
ஏதாவது வில்லங்கம் செய்தால் அவனுக்கு வக்கிரபுத்தி டா என்று சொல்லுவார்கள் அல்லவா. அதுபோல் தான் வக்கிரகிரங்களின் செயல்பாடும். ஒரு கிரகம் வக்கிரத்தில் செல்லுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த கிரகம் தன்னுடைய முழுமையான தன்மையில் இருந்து விலகி வேறு மாதிரியாக செயல்பாடு அடைகிறது என்று அர்த்தம். ராகு கேதுவை கண்டு பயப்படுவதற்க்கு காரணம் அது பின்னோக்கி செல்லுகிறது என்ற அர்த்ததால் மட்டுமே. அதுபோல் ஒரு கிரகம் வக்கிரமாக போகும்பொழுது அது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவிடுகிறது.
ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் வக்கிரமாக இருந்தால் பரவாயில்லை. இரண்டு கிரகங்கள் வக்கிரமாக இருந்தால் ஒரளவு நன்மை ஏற்படும். மூன்று கிரகங்கள் ஒருவர்க்கு வக்கிரங்கள் ஏற்பட்டால் மிகப்பெரிய ஆபத்து. எப்படி ஆபத்து என்று கேட்கிறீர்களா அவர்களுக்கு ஆபத்தைவிட பிறர்க்கு ஆபத்து என்பதே உண்மை.
உலகத்தில் உள்ள மிகப்பெரிய தீவிரவாதிகள் மற்றும் சர்வாதிகாரிகளுக்கு எல்லாம் மூன்று கிரகங்களுக்கு மேல் வக்கிரமாகி இருக்கும் என்றும் சொல்லுகின்றனர். இரண்டு கிரகங்களுக்கு மேல் வக்கிரங்கள் உள்ள நபர்களிடம் மோதி வெற்றி பெறமுடியாது. அதேப்போல் இவர்கள் செய்துவிட்டு சென்ற செயல்கள் எல்லாம் பலகாலங்கள் பூமியில் நிலைத்து நிற்க்கும். சூப்பர் பவர் மேன் என்று சொல்லுகிறார்கள் அல்லவா அது எல்லாம் இவர்களாக தான் இருக்கும்.
உங்களின் ஜாதகத்தில் கிரகங்கள் வக்கிரங்கள் அடைந்தால் நீங்கள் வணங்கவேண்டிய தெய்வம் வக்கிரகாளி. திருவக்கிரகாளியை வாழ்நாட்கள் முழுவதும் வணங்கும் பொழுது உங்களுக்கு நல்லது நடக்கும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.