வணக்கம்!
பெரும்பாலும் இன்று தான தர்மம் எல்லாம் நிறைய செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். குறிப்பாக நடத்து தர வர்க்கத்தில் இருக்கும் குடும்பங்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுகின்றார்கள். அனைவரும் ஆர்வம் காட்டினாலும் இவர்கள் கொஞ்சம் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர்.
தானம் தர்மம் செய்யும்பொழுது கூட நம்ம ஆட்கள் ஒன்றை சொல்லிருக்கின்றனர். நாம் யார்க்கு கொடுக்கிறோம் அதனால் என்ன பலன் கிடைக்கும் என்பதை அறிந்து நாம் செய்தால் அதிக பலனை நாம் பெறலாம்.
இன்று நமக்கு இருக்கும் திருஷ்டியை போக்கி நாமும் தர்மம் செய்யவேண்டும் என்றால் அதற்க்கு அலிககளை தேர்வு செய்து தான தர்மம் செய்தால் நமக்கு திருஷ்டி நீக்கி நல்ல பலன் நமக்கு கிடைக்கும் அது உங்களுக்கு பலவிதத்திலும் உதவியாக இருக்கும்.
பேருந்து நிலையத்தில் மற்றும் இரயில் நிலையத்தில் எங்கு அலிகளை பார்த்தாலும் உங்களால் முடிந்த பணத்தை கொடுத்து அவர்களிடம் ஒரு ஆசீர்வாதத்தை வாங்கிக்கொள்ளுங்கள். அவர்கள் கொடுக்கும் ஆசீர்வாதம் உங்களின் திருஷ்டியை போக்கும் அதோடு உங்களுக்கு நல்லதும் நடக்கும்.
ஒருவருக்கு புதன் தசா நடந்து அந்த தசா அவர்களுக்கு நல்லதை தரவில்லை என்றால் புதனின் காரத்துவத்தில் இருக்கும் அலிகளிடம் இருந்து ஆசீர்வாதம் வாங்கினால் புதன் தசா அவர்களுக்கு நல்லதை செய்யும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு