வணக்கம்!
நான் பல ஊர்களுக்கு செல்லும்பொழுது பல பேர்களின் அனுபவத்தை பார்த்தப்பொழுதும் உற்றுநோக்கியதில் ஒரு விசயம் நன்றாக தெரிந்தது அதனைப்பற்றி சொல்லுகிறேன். இதனை நீங்கள் கடைபிடித்தால் நல்லது.
இன்றைக்கு இருக்கும் பணக்காரர்களின் தந்தையை எல்லாம் கவனிக்கும்பொழுது அவர்கள் தன்னுடைய வாழ்ந்த காலத்தில் ஒரு அப்பாவியாக இருந்திருக்கிறார்கள். நிறைய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். இவர்கள் செய்த இந்த வேலை இன்று அவர்களின் வாரிசுகள் நன்றாக இருக்கின்றனர்.
இன்றைக்கு உங்களுக்கு எல்லாம் நன்றாக சோதிடம் தெரியும். இதில் ஒன்றை மட்டும் சொல்லவேண்டும். உங்களுக்கு சோதிடம் தெரிந்த காரணத்தால் தான் ஒன்றை செய்வதே கிடையாது. எந்த ஒரு ஆன்மீக நிகழ்வுகளிலும் கலந்துக்கொள்வதில்லை. நான் புத்திசாலி நான் கெட்டிகாரன் என்ற நினைப்பு உங்களை எந்த ஒரு ஆன்மீக நிகழ்வுகளுக்கும் கலந்துக்கொள்ள வைப்பதில்லை அதற்கு என்று எந்த ஒரு செலவும் செய்வதில்லை.
நான் நிறைய கோவில்களுக்கு சென்று வந்திருக்கிறேன். இதனை எல்லாம் எனக்காக செய்தாலும் தன்னுடைய குடும்பத்திற்க்காக நான் செல்லும் கோவில்களை எல்லாம் வெளிப்படுத்துவது கிடையாது. அதனை அவர்களுக்கு என்று செல்லுகிறேன்.
ஜாதககதம்பத்தில் நிறைய நண்பர்கள் இருக்கின்றனர் அவர்கள் எல்லாம் அதிமேதாவியாகவே இருக்கின்றனர். ஒன்றும் செய்யமாட்டேன் என்று இருக்கின்றனர். உங்களுடைய வாரிசுகள் நன்றாக இருக்கவேண்டும் என்றால் நீங்கள் பல கோவிலுக்கு செல்லவேண்டும். பல ஆன்மீக காரியங்களை செய்யவேண்டும்.
என்னைப்பொறுத்தவை ஒன்று சொல்லுகிறேன். அதிபுத்திசாலி என்பது சொல்லுவதற்க்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும் வாழ்க்கையில் பல சிக்கல் இன்னல்களை அது தோற்றுவித்துவிடும். அறிவாளியாக இருங்கள் அதே நேரத்தில் தன்னுடைய குடும்பத்தின் நலனுக்காக பல நல்லவிசயங்களை வெளியில் தெரியாமல் செய்துக்கொண்டே இருங்கள்.
ஒரு பணக்காரனுக்கு தெரியாத விசயமா உங்களுக்கு தெரிந்துவிடபோகின்றது. சும்மா சோதிடவிதியை படித்துக்கொண்டு நான் இப்படி தான் இருப்பேன் என்று உட்கார்ந்துக்கொண்டு நீங்களும் கெட்டு உங்களின் குடும்பத்தையும் கெடுக்காமல் இருங்கள்.
ஒரு பணக்காரனுக்கு தெரியாத விசயமா உங்களுக்கு தெரிந்துவிடபோகின்றது. சும்மா சோதிடவிதியை படித்துக்கொண்டு நான் இப்படி தான் இருப்பேன் என்று உட்கார்ந்துக்கொண்டு நீங்களும் கெட்டு உங்களின் குடும்பத்தையும் கெடுக்காமல் இருங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு