Followers

Sunday, July 24, 2022

ஆன்மீகம் ஏன்?

 


வணக்கம்

                        ஆன்மீகம் எதற்கு என்று நண்பர் ஒருவர் கேட்டார். அவரிடம் உரிய விளக்கத்தை அளித்தேன். உரையாடலின் ஒரு பகுதியை மட்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

நாம் எது எல்லாம் நம்மை காப்பாற்றும்  என்று ஓடிக்கொண்டிருக்கும் அனைத்தும் நம்மை காப்பாற்றாது. நிறைய சம்பாதித்து விட்டோம். நம்மை சுற்றி நிறைய பேர் உள்ளனர். நமக்கு மரியாதை இருக்கிறது. அரசியல் செல்வாக்கு இருக்கிறது. இப்படி நிறைய இருப்பது அனைத்தையும் மரணம் உங்களை விட்டு பிரித்து விடும். இது எதுவும் உங்களோடு வராது.

நாம் உடலில் துணி இல்லாமல் பிறந்தோம். எதுவும் கொண்டு வரவில்லை. போகும் போது எதுவும் கொண்டு செல்ல போவதில்லை. இந்த உலகில் சேர்க்கும் பொருட்கள் எதுவும் உங்கள் கூட வரப்போவதில்லை. 

நீங்கள் செய்யும் தியானம் அருள் இதனை மட்டுமே உங்களோடு வரப்போகிறது ‌என்று புத்தர் சொல்லி உள்ளார். அழிவு இல்லாத ஒன்றை பெறுவதற்கு ஆன்மீகம் தேவை என்பதால் ஆன்மீகத்தை நாட வேண்டும்.

இந்த உலகில் உள்ள அனைத்து பொருட்களும் இறைவன் நமக்கு தந்தது அதனை பயன்படுத்தி கொள்ளலாம். அது உங்களோடு வராது. 

பொருட்களை எல்லாம் பயன்படுத்தி கொண்டாலும் அதன் மீது ஈர்ப்பு வேண்டாம். உங்களோடு வரும் அருளுக்கு ஆன்மீகம் தேவை.

நன்றி

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


Wednesday, July 20, 2022

குருவை நாடுதல்

 


வணக்கம்!

                        ஜாதககதம்பத்தில் நாம் நிறைய கருத்தை பார்த்து இருக்கிறோம். பலர் விரும்புவது ஜாதக கதம்பத்தில் படிப்பது என்பதை அதிகமாக சொல்லுவார்கள். அவர்களின் விருப்பத்தை நாம் முடிந்த வரை நிறைவேற்றுவோம்.

ஜாதக கதம்பம் படித்து இருப்பீர்கள் ஆனால் எத்தனை பேர் என்னை சந்தித்து இருப்பீர்கள். ஜாதக கதம்பம் எழுத்து வழியாக உங்களை தொடர்பு கொள்ளும் வழியாக இருந்தாலும் என்னை சந்திக்கும் பொழுது உங்களுக்குள் ஆன்மீகம் வளர்வதற்கு வழி வகுக்கும்.

என்னை சந்திப்பதை விட்டு விடலாம் நீங்கள் குருவாக நினைப்பவர்களோடு எத்தனை முறை சந்தித்து இருக்கின்றீர்கள். அடிக்கடி சந்திப்பு நடக்கிறதா என்று எண்ணி பாருங்கள்.

உயிரோடு இருக்கும் குருவை அடிக்கடி சந்தித்தால் உங்களின் உயிர் ஆன்மீகத்தில் நன்றாக வளர்வதற்கு உதவியாக இருக்கும்.

நன்றி
அன்புடன்
ராஜேஷ்சுப்பு