வணக்கம்!
காரிய தடையைப்பற்றி நான் அவ்வப்பொழுது எழுதி வருவது உண்டு. காரிய தடைக்கு என்ன காரணம் என்பது பற்றி ஏற்கனவே உங்களிடம் சொல்லிருக்கிறேன். மீண்டும் கொஞ்சம் அதனைப்பற்றி பார்க்கலாம்.
கொஞ்சம் வெளிப்படையாகவே இதனைப்பற்றி சொல்லுகிறேன். நமது தொழில் செய்பவர்களுக்கு என்று நான் ஆன்மீகவழியில் செய்து தருவது நீங்கள் அறிந்த ஒன்று. இதில் வரும் நண்பர்களிடம் நீங்கள் பூஜை செய்யவேண்டும். அதற்கு ஒரு தொகை ஆகும் என்று சொல்லுவேன். அதற்கு அந்த நண்பர்கள் சரி சார் செய்துவிடலாம் என்று சொல்லுவார்கள். அதன் பிறகு அதனைப்பற்றி பேசுவது என்பது இருக்கவே இருக்காது.
இவனோடு தொந்தரவுக்கு ஒரு அளவே இல்லை என்று போனை வைத்துவிடும் நண்பர்களும் உண்டு. இப்படி எல்லாம் நான் சொல்லுவது இவர்களின் பாக்கியஸ்தானம் எந்தளவுக்கு வேலை செய்கிறது என்பதை பார்ப்பதற்க்காக நான் சொல்லுவேன்.
பாக்கியஸ்தானம் என்பது தான தர்மம் ஆன்மீக பணி ஆன்மீகத்திற்க்காக இவர்கள் எடுக்கும் முயற்சி போன்றவற்றை காட்டும் ஒரு இடம். இதில் எல்லாம் ஒருவர் ஈடுபடும்பொழுது பாக்கியஸ்தானம் நன்றாக வேலை செய்யும். பாக்கியஸ்தானம் நன்றாக வேலை செய்தால் காரிய தடை இருக்காது.
பாக்கியஸ்தானத்திற்க்கு குரு காரகன் வகிக்கிறார். நம் ஆட்கள் எனக்கு கொடுக்க பணம் இல்லை என்று ஒரு நாள் தண்ணி போட பத்தாயிரம் செலவு செய்வார்கள். அதாவது ராகுவை துணைக்கு கூப்பிட்டுவிடுவார்கள். ராகு வந்தால் எப்படி பாக்கியஸ்தானம் வேலை செய்யும் காரிய தடையை அவர்களே உருவாக்கிவிடுவார்கள்.
என்னிடம் தான் வந்து பூஜை செய்யவேண்டும் என்பதில்லை தான தர்மம் மற்றும் ஆன்மீக பணி போன்றவற்றை எங்கு வேண்டுமானாலும் செய்துக்கொண்டு உங்களின் காரியதடையை விலக்கிக்கொள்ளுங்கள்.
பணம் சம்பாதிக்கவேண்டும் என்று பல கோடிஸ்வரர்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவதின் நோக்கம். காரிய தடை இல்லாமல் வேலை நடக்கவேண்டும். நாம் தேர்ந்தெடுக்கும் தொழில் அனைத்தும் வெற்றியை தரவேண்டும் என்ற நோக்கத்திற்க்காக மட்டுமே செய்கிறார்கள் என்பதை ஒரு முறை யோசித்து பார்த்தால் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு