வணக்கம்!
மேலே உள்ள படம் ஒரு உதாரண ஜாதகம். இவர் ஒரு அரசாங்க ஊழியராக இருந்தவர். இவர் ஜாதககதம்பத்தின் வாடிக்கையாளர் கிடையாது. ஒரு நபரால் எனக்கு அறிமுகமானவர் என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன். ஜாதககதம்பத்தில் வரும் ஜாதகங்களை உதாரண ஜாதகமாக எடுத்து பதிவில் எழுதுவது கிடையாது. பழைய பதிவில் சொன்ன விதி உங்களின் ரகசியங்கள் காக்கப்படும் என்பது இதுவரை பின்பற்றி வருகிறேன்.
லக்கினம் ரிஷபம். லக்கனத்தில் சனி மற்றும் மாந்தி அமர்ந்திருக்கிறது. லக்கினாதிபதியான சுக்கிரன் இரண்டாவது வீட்டில் அமர்ந்திருக்கிறார். தனவீடு என்று சொல்லக்கூடிய வீட்டில் இருக்கிறார். சுக்கிரன் ஒன்றாவது வீட்டிற்க்கும் ஆறாவது வீட்டிற்க்கும் அதிபதி அவர் இரண்டில் அமர்ந்திருக்கிறார்.
லக்கினாதிபதியோடு சூரியன் செவ்வாய் மற்றும் புதனோடு அமர்ந்திருக்றார்கள். லக்கினாதிபதி பல வீட்டிற்க்கு தொடர்பு வந்துவிட்டது. தனஸ்தானம் சுகஸ்தானம் பூர்வபுண்ணியம் களத்திரம் மற்றும் விரைய வீட்டு அதிபதியோடு தொடர்பு.
இவர் அரசாங்கவேலை சுக்கிரனின் தசாவில் வாங்கியிருக்கவேண்டும். சுக்கிரன் தசா சூரியபுத்தியில் வாங்கியிருக்கவேண்டும் அதனைப்பற்றி அவரிடம் நான் கேட்கவில்லை. எனது கணிப்பு அது.
இவர் என்ன செய்வார் என்றால் சுக்கிரனின் தசாவில் இவர் அதிகபடியான சொத்துக்களை சேர்த்துவிட்டார். தனவீடு ஆறாவது வீடு சம்பந்தபட்டதால் இவர் சம்பளத்தை விட லஞ்சம் வாங்குவதில் அதிக கெட்டிகாரனாவார்.
திருட்டுபுத்தி எப்படி வந்திருக்கும் என்றால் சனி மற்றும் மாந்தி லக்கனத்தோடு தொடர்பு. சுக்கிரன் ஆறாவது வீட்டு தசாவாகவும் வேலை செய்வார். இதன் வழியாக தான் திருட்டு புத்தி வந்திருக்கவேண்டும். லஞ்சம் என்பது ஒரு வகையில் திருட்டு தானே.
நிறைய பணத்தை சம்பாதித்தார் என்று தான் சொல்லவேண்டும். குரு கிரகத்தை பாருங்கள். எட்டில் அமர்ந்திருந்து சொந்த வீட்டில் இருந்து இரண்டாவது வீட்டை பார்க்கிறது. குரு கிரகம் எட்டாவது வீடு மற்றும் லாபஸ்தான அதிபதியாகவும் இருக்கிறார். பணம் கொட்டு கொட்டு என்று கொட்டும் அல்லவா. மறைவுஸ்தான அதிபதிகளின் பங்கு மிகுதியாக இருக்கின்றது. சம்பந்தமே இல்லாமல் பணம் சம்பாதிப்பது என்றால் மறைவுஸ்தான அதிபதிகளின் ஒத்துழைப்பு அதிகமாக இருக்க வேண்டும். இவருக்கு அதிகமாகவே இருக்கின்றது.
ராகு கிரகத்தை பாருங்கள். ராகு பாக்கியஸ்தான இடத்தில் இருக்கின்றார். கண்டிப்பாக பல மொழிகாரர்களிடம் இருந்தும் பணம் வந்துவிடும். இதனை தோஷம் என்று அழைப்பதை விட நல்ல யோகம் என்று சொல்லலாம்.
கடக ராசியைப்பற்றி சொல்லலேண்டும். கடக ராசிக்கிட்ட பணம் கொடுத்தால் அது திரும்பி வரவே வராது என்பது தான் உண்மை. பணத்தை சுருட்டிக்கொண்டு சென்றுவிடுவார்கள். அவர்களை தேடி கண்டுபிடிப்பதை பெரிய வேலையாக தான் இருக்கும். இவர் கடக ராசி. எத்தனை பேரிடம் வேலை செய்துக்கொடுக்கிறேன் என்று வாங்கினார் என்பது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.
சனியின் பார்வை சந்திரன் மற்றும் கேதுவிற்க்கு. மனக்காரகனுக்கு சனியின் பார்வை கிடைத்தால் குறுக்குபுத்தி வரும். கேதுவிற்க்கு சனியின் பார்வை கிடைத்தால் கோடிஸ்வரயோகம் வரும். இவர்க்கு கோடிஸ்வரயோகம் வந்தது.
பணம் நிறைய வந்தால் ஒருவனை சும்மா இருக்க வைக்குமா ஊரில் உள்ள வில்லகத்தை எல்லாம் இழுத்துக்கொண்டு வருவார்கள். இவர்க்கு சுக்கிரனின் தசா சுகபாேகத்திற்க்கும் குறைவில்லை. போகவீட்டோடு சம்பந்தப்படுவதால் அதற்கும் குறைவில்லாமல் இருந்திருப்பார்.
சுக்கிரனோடு செவ்வாய் சூரியன் சம்பந்தப்படுவதால் கொஞ்சம் அடிதடியும் உண்டு. நில தகராறில் ஒரு அடிதடியும் நடந்தது என்று சொல்லிருக்கிறார். அது பெரியளவில் செல்லலாமல் பஞ்சாயத்து செய்து முடிந்துவிட்டது. புதன் சம்பந்தப்படுவதால் ஏதாவது வில்லங்க டாக்குமெண்டில் இந்த சண்டை சச்சரவு செய்து இருக்கலாம்.
ஒருவரை நல்ல வழியிலும் சரி கெடுதல் வழியிலும் சரி நன்றாக தூக்கிவிடுவதற்க்கு கிரகங்களின் அமைப்பை பொறுத்து தான் இருக்கின்றது. இவருக்கு அமைந்த கிரகத்தை வைத்து சொல்லுகிறேன் இவரின் வாழ்க்கை பெரியளவில் சென்றதற்க்கு ஆறாவது வீட்டு அதிபதியின் நிலை மற்றும் அந்த தசா மிக மிக முக்கியபங்கு வகித்தது.
எனக்கு தெரிந்த சோதிடத்தை வைத்து சொல்லிருக்கிறேன். நன்றாக பார்ப்பவர்கள் நிறைய சொல்லலாம். நாமும் கூட நிறைய சொல்லலாம் நேரத்தை உணர்ந்து இத்தோடு முடிக்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு