Followers

Monday, March 31, 2014

நல்வாழ்த்துக்கள்

வணக்கம் நண்பர்களே!
                    யுகாதி பண்டிகை கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துக்கள்.



நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

காயத்ரி மந்திரப்பயிற்சி


ணக்கம் ண்பர்களே!
                    வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் கஷ்டம் என்று புலம்புவர்களின் தான் அதிகம் பேர் இருக்கின்றனர். கஷ்டம் என்று வந்தவுடன் ஆன்மீகம் தான் முதல் வழி என்று தேர்ந்தெடுக்கின்றனர். ஆன்மீகத்தை தேர்ந்தெடுப்பது தவறு இல்லை. ஆன்மீகவாதிகளை தேடி நாம் செல்லவேண்டியதில்லை மாறாக ஆன்மீகவாதிகளாகவே மாறிவிடுவது நல்லது.

ஒவ்வொரு நாளும் நமக்கு பிரச்சினை வந்துக்கொண்டு தான் இருக்கபோகின்றது. ஒரு கிரகப்பெயர்ச்சி சாதகமாக அமைந்தாலும் அடுத்த கிரகப்பெயர்ச்சி நமக்கு ஆப்பு அடிக்கும் விதமாக தான் அமையும். இது இயற்கையின் நியதி. தினமும் நமக்கு பிரச்சினை என்று வரும்பொழுது நாம் ஆன்மீகவாதியாக மாறிவிடுவது தவறு இல்லை. ஆன்மீகவாதியாக மாறுவதற்க்கு பல பேரும் பல வித விசயங்களை ஆன்மீககருத்துகளை வழங்கியபொழுதும் நமது ஜாதககதம்பமும் ஒரு பயிற்சியை உங்களுக்கு தருகிறது அது தான் காயத்ரி மந்திரப்பயிற்சி.

உங்களுக்கு இந்த காயத்ரி மந்திரத்தைப்பற்றி ஏற்கனவே தெரிந்து இருந்தாலும் அல்லது இதனை செய்துக்கொண்டும் இருப்பீர்கள். நமது ஜாதககதம்பம் வழியாக இதனை நீங்கள் செய்யும்பொழுது அம்மனின் அருள் உங்களுக்கு கிடைக்கும்.

காயத்ரி மந்திரப்பயிற்சி என்பது நான் தனியாக வகுப்பு ஒன்றும் எடுப்பதில்லை நீங்களே உங்களின் வீட்டில் இருந்தபடி செய்யும் ஒரு பயிற்சி தான். உங்களை நீங்களே மேம்படுத்திக்கொள்ள ஒரு நல்ல வழி என்று சொல்லலாம்.

வரும் புதன்கிழமை முதல் இதனை நீங்கள் தொடங்கி செய்யலாம். விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்புக்கொண்டு எனது ஆலோசனை பெற்று செய்யலாம். மிகஎளிமையான அதே நேரத்தில் சக்தி வாய்ந்த பயிற்சியை ஆரம்பிக்க நல்ல தருணம் அமைந்துள்ளது. வாய்ப்பை நன்றாக பயன்படுத்துங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Sunday, March 30, 2014

குரு


ணக்கம் ண்பர்களே !
                    குருவைப்பற்றி ஒரு நண்பர் கேள்வி அனுப்பி இருக்கிறார் அவருக்கு பதில் அளிக்கும் விதமாக உங்களுக்கும் ஒரு விசயத்தைப்பற்றி தெரியப்படுத்துகிறேன்.

இப்பொழுது உள்ள மக்களுக்கு எல்லாம் கார்ப்ரேட் சாமியார்களை குருவாக ஏற்றுக்கொள்வது மிகவும் பிடித்தமானதாக இருக்கின்றது அதற்கு காரணம் அவர்கள் விளம்பரம் செய்யும் விதம் அப்படிப்பட்டது அதனை நாம் குறைச்சொல்லகூடாது. குரு என்பவர் உங்களோடு எந்த நேரத்திலும் தொடர்புக்கொள்பவராக இருக்கவேண்டும். பெரிய சாமியாரை போய் குருவாக ஏற்றுக்கொண்டால் அவரை நாம் எந்த நேரத்திலும் தொடர்புக்கொள்ளமுடியுமா?

ஒரு நல்ல குரு என்பவர் ஒரு சிஷ்யனை உருவாக்கமாட்டார். ஒரு நல்ல குருவை தான் உருவாக்குவார். நீங்கள் சொல்லும் குரு எல்லாம் எத்தனை குருவை உருவாக்கியுள்ளார்கள் என்பதை நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்.

நீங்கள் ஒரு கார்ப்பரேட் சாமியாரிடம் சென்றால் உங்களை அடிமையாக்குவார். அது தான் நடைபெறும். கார்ப்பரேட் சாமியார்களின் முதல் வேலை எந்த நேரமும் பேசிக்கொண்டே இருப்பார்கள். மக்களின் மனதை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள். மக்களின் மனது ஏதாவது பேசிக்கொண்டே இருக்கவேண்டும் அல்லது யாராவது பேசிக்கொண்டு இருந்தால் அதனை கேட்டுக்கொண்டு இருக்கவேண்டும் இதனை நன்றாக புரிந்துக்கொண்டு அவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். நீங்களும் கேட்டுக்கொண்டே இருப்பீர்கள். ஒரு நாளும் ஒன்றும் நடைபெறாது.

இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு கார்ப்பரேட் சாமியார்கள் லட்சம் பேர்களுக்கு மேல் தீட்சை அளிக்கிறார்கள். இந்த லட்சத்தில் யாராவது போய் தனியாக நின்று ஒரு ஆசிரமம் அமைத்து அவர்கள் பிறர்க்கு தீட்சை கொடுத்தார்களா என்று ஒரு நாள் நீங்கள் சிந்தித்து பார்த்தீர்கள் என்றால் கண்டிப்பாக இருக்காது. 

ஒரு நாளும் அவர்கள் செய்யமாட்டார்கள். உங்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பது தான் அவர்களின் வேலை. பொதுவாக நீங்கள் பெரிய சாமியார்களிடம் சென்றால் அவர்களின் ஆசிரமத்தை விட்டு வெளியில் கூட வரமுடியாது. சந்நியாசி தீட்சை வாங்கிவிட்டால் அவர்களின் ஆசிரமம் தான்  உலகம் என்று இருக்கவேண்டியது தான். இந்தியாவில் உள்ள ஆசிரமங்கள் அடிமைகளின் கூடாரமாக விளங்குகிறது.

ஒரு குருவிடம் நீங்கள் கற்றுக்கொண்டுவிட்டால் நீங்கள் கொஞ்ச காலத்தில் நீங்களும் குருவாக மாறிவிடுவீர்கள் என்பதை புரிந்துக்கொண்டுவிட்டால் போதும். இந்தியாவில் உள்ள சாமியார்கள் எதனை செய்துக்கொண்டு இருக்கின்றனர் என்பது நன்றாக புரியும்.

ஒரு நல்ல குருவை கண்டுபிடிப்பது எளிது அவரிடம் நீங்கள் சென்று உட்கார்ந்துவிட்டால் உங்களின் மனதில் கேள்வியே எழாது. அப்படியே அமைதி அடைந்துவிடும். அவர் தான் நல்ல குரு.  

இந்தியாவில் எத்தனையோ சாமியார்கள் மிகப்பெரிய அளவில் சக்தி படைத்தவர்களாக இருந்து இருக்கிறார்கள் அவர்கள் இந்த உலகத்தையே இழுத்து இருக்கமுடியும் ஆனால் அவர்கள் அதனை செய்வதில்லை. கடந்த பத்து வருடங்களாக இருக்கும் சாமியார்களுக்கு மிகப்பெரிய சக்தி எப்படி வந்து இருக்கும். அவர்கள் செய்யாதை இவர்கள் செய்கிறார்கள் என்றால் எல்லாம் மீடியா செய்யும் வேலை. இதனை நீங்கள் புரிந்துக்கொண்டாலே போதும்.

நீங்களே மிகப்பெரிய சக்தி படைத்தவர்கள் தான் இதனை நீங்கள் உணரவில்லை இதனை நீங்கள் உணர்ந்தால் போதும். சாமியார்களை எல்லாம் நீங்கள் தேடிபோகவேண்டியதில்லை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Saturday, March 29, 2014

அம்மன் தரிசனம்



ணக்கம் ண்பர்களே!
                    காலையிலேயே எழுந்து சென்று பாண்டிச்சேரி சென்றுவிட்டு அங்கிருந்து பெரும்பாக்கம் சென்று திருவக்கரையை அடைந்தேன். அம்மனை நன்றாக தரிசனம் செய்தேன். அம்மனே என்னை ஈன்ற அன்னையே என்று சரணாகதி அடைந்தேன். நான் அங்கு செல்வது  பல காரணங்கள் இருந்தாலும் ஒரு சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

அம்மனை பார்த்தால் மனதிற்க்கு அமைதி கிடைப்பது ஒரு பக்கம் இருந்தாலும் அங்கு அம்மன் என்னை வரவழைப்பதே ஒருவித நல்ல காரியங்களை செய்வதற்க்கு என்று நான் நினைத்துக்கொள்வேன். அம்மன் கோவிலில் வேலை செய்யும் அதாவது சுத்தம் செய்யும் பெண்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு மாத வருமானம் குறைவாக தருவார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்த பணஉதவியை கொடுக்கிறேன். நான் கொடுக்கிறேன் என்று சொல்லுவதைவிட நீங்கள் அனுப்பும் பணத்தில் இருந்து கொடுக்கிறேன் என்று சொல்லிவிடுவது நல்லது.

எப்பொழுதும் இதனை செய்துவருகிறேன். இதனை பதிவில் சொல்லாமல் இருந்து வந்தேன். தற்பொழுது அதற்க்கான நேரம் வந்ததால் சொல்லிவிட்டேன். அங்கு இருக்கும் முதியோர்களுக்கு பண உதவியை செய்து உண்டு.

திருநங்கைகளைப்பற்றி தனிப்பதிவாகவே போடவேண்டும் என்று நினைத்து இருந்தேன். இதிலேயே சொல்லிவிடுகிறேன். எனது பாவத்தை முன்ஜென்ம கர்மாவை எடுத்தது குருவாக இருந்தாலும் பாதி இவர்களை தான் சேரும். சின்ன வயதில் இருந்தே எனக்கு இந்த பழக்கம் இருந்து வந்தது என்பதை சொல்லவேண்டும். திருநங்கைகளுக்கு உதவி செய்வது அவர்கள் கேட்க நினைக்கும் பணத்தை விட அதிக பண உதவியை நான் செய்வேன். இந்த கோவிலுக்கு செவ்வாய் வெள்ளிக்கிழமை அன்று அவர்கள் வருவார்கள். அவர்களுக்கு பண உதவியை செய்வது உண்டு.

வடமாநிலத்தவர்கள் திருநங்கைகளை அழைத்து அவர்களுக்கு வேண்டிய உதவியை செய்து அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவார்கள். நம் ஆட்களுக்கு இதனை எல்லாம் செய்வதற்க்கு நேரம் இல்லை. நான் எங்கு சென்றாலும் அவர்களை பார்த்தால் என்னால் முடிந்த அதிகப்பட்ச உதவியை செய்வது உண்டு.

நான் ஆன்மீகத்தில் வெற்றி பெறுவதற்க்கு காரணம் இவர்களுக்கும் ஒரு சதவீதம் சாரும் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன். ஏன் என்றால் இவர்களின் ஆசீர்வாதம் இருந்தால் நம்மால் எவ்வளவு பெரிய ஆன்மீகவாதியையும் எதிர்த்து நின்று வெற்றி பெறமுடியும். 

இதனை எல்லாம் ஏன் பெருமையாக சொல்லுகிறேன் என்று நினைக்கலாம். இதுவரை நீங்கள் அனுப்பிய பணத்தை எல்லாம் நல்லவழியில் கொண்டு சென்று இருக்கிறேன் என்பதை காட்டுவதற்க்கும் அதே நேரத்தில் வேறு ஒன்றைச்சொல்லிக்கொள்ளவும். நம் பணத்தை எடுத்து ஒருத்தருக்கு தானமாக கொடுத்தால் அதனை வாங்கிக்கொண்டார்கள் என்றால் அது தான் நாம் செய்த பெரிய பாக்கியம். நமது கர்மத்தை வாங்குவதற்க்கு ஒருவரை கடவுள் காட்டி இருக்கிறானே என்று கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும்.

திருவக்கரை அம்மனின் கோவிலில் இப்படி மாதம் மாதம் நான் செல்லும்பொழுது செய்வது உண்டு.

உங்களுக்காக ஒன்றை சொல்லுகிறேன். திருநங்கைகளிடம் ஆசீர்வாதம் வாங்குங்கள். அவர்கள் நிறைய பணம் வைத்திருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கவேண்டாம் அவர்களுக்கு ஒரு நாள் தேவைக்கு அதிகமாக பணத்தை சேர்க்கமாட்டார்கள். உங்களின் குழந்தைகளிடம் பணத்தை அவர்களுக்கு கொடுத்து ஆசீர்வாதம் வாங்குங்கள். அதே நேரத்தில் கோவிலில் வேலை செய்யும் சுத்தம் செய்பவர்களுக்கும் உதவி செய்யுங்கள். இதனை எல்லாம் நீங்கள் செய்தாலே போதும் உங்களுக்கு அனைத்து செல்வமும் கிடைக்கும்.

நமது புண்ணிய கணக்கை பொருத்து தான் கடவுள் சக்தி வருவது எல்லாம் நடக்கும் நண்பர்களே. நான் இப்படி ஏகாப்பட்டதை செய்து இருக்கிறேன். அதனை எல்லாம் உங்களிடம் சொல்லிக்கொண்டு வருகிறேன். நீங்களும் இதனை எல்லாம் செய்யும்பொழுது உங்களின் குடும்பம் சிறக்கும் அடுத்த ஜென்மமும் சிறக்கும்.
 
நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ஆன்மீகபயிற்சியின் பொழுது


ணக்கம் ண்பர்களே!
                    என்னை சந்திப்பவர்கள் பெரும்பாலும் நானும் ஆன்மீகவாதியாக மாற வேண்டும் என்று கேட்கிறார்கள். ஒரு சில பயிற்சிகளை நாம் செய்ய சொல்லுவேன். இதனை கடைபிடித்தும் வருகிறார்கள். அதில் ஒரு தகவலைப்பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்து இருந்தேன் அதற்கான பதிவுதான் இது.

ஆன்மீகவாதியாக நாம் முதலில் மாறவேண்டும் என்றால் நாம் ஆன்மீகவாதி என்று பிறர் நம்மை கண்டுபிடிக்கமுடியாதபடி இருக்கவேண்டும். ஏன் இதனை சொல்லுகிறேன் என்றால் பிறரின் கண்கள் நம்மீது படும்பொழுது அது தடங்கலாக மாறிவிடும். நாம் நினைத்தை அடையமுடியாது. நம்மில் பலர் ஆன்மீகவாதியாக மாறமுடியாதற்க்கு முதல் காரணம் இது மட்டுமே. 

நாம் உடுத்தும் உடையில் இருந்து வைக்கும் திருநீரு கூட பூஜையில் இருந்து வெளியில் வரும்பொழுது மாற்றிவிடவேண்டும். சாதாரணமான ஆளாக இருக்கவேண்டும். நாம் ஒரு உயர்ந்த சக்தியை அடைய முயற்சி செய்கிறோம் அதனால் பிறரின் தவறான மனதின் ஒட்டம் நம்மை தாக்காமல் பார்த்துக்கொள்வது உங்களின் பொறுப்பு.

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால் ஒரு கோவில் சென்று வந்தவுடன் அங்கு எடுக்கப்பட்ட விதவிதமான போட்டோவை முகநூலில் பகிர்ந்துவிடுகிறீர்கள். பார்க்கும் நபர்கள் உங்களை ஆன்மீகவாதியாக நினைக்கவேண்டும் என்று நினைப்பது தவறு. நாம் நினைத்ததை அடைந்த பிறகு வெளியில் காட்டிக்கொள்ளலாம். நமக்கு தான் ஆன்மீகமே தவிர ஊருக்கு கிடையாது.

ஆன்மீகப்பயிற்சியின் பொழுது நான் அதனை செய்து தருகிறேன் இதனை செய்து தருகிறேன் என்று ஆன்மீகவழியில் ஏமாற்றகூடாது. ஆன்மீகவழியில் சம்பாதிக்ககூடாது. பயிற்சியின் பொழுது இதனை செய்தால் நம்மை நெருங்கி வந்துக்கொண்டிருகிற சக்தி திரும்பிவிடும். ஒருபொழுதும் நாம் சக்தியை பெறமுடியாது என்பதை முதலில் நினைவில் வையுங்கள்.

நான் பயிற்சியின் பொழுது மிகவும் கட்டுபாடு உடன் இருந்தேன். மிகவும் எச்சரிக்கையாக அனைத்து விசயத்திலும் இருந்தேன். இதனை தான் குருவும் விரும்புவார்கள். முதலில் உனக்கு கிடைக்கட்டும் அதன் பிறகு அதனை வைத்த எதை வேண்டுமானாலும் செய்துக்கொள் என்பார்.பயிற்சியின் பொழுது நீங்களும் இதனை கடைபிடித்துவந்தால் விரைவில் நீங்கள் அடைந்துவிடலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Friday, March 28, 2014

சோதிட அனுபவம்


ணக்கம் ண்பர்களே!
                    ஜாதகத்தில் நாம் எந்த கிரகம் பிரச்சினை தராது என்று நினைத்துக்கொண்டிருக்கிறோமோ அந்த கிரகம் நமக்கு மிகபெரிய அளவில் பிரச்சினையை தந்துவிடும். அனைத்து கிரகத்தையும் நாம் பார்த்துவிடவேண்டும். அப்பொழுது தான் நாம் பிரச்சினையை கண்டுபிடிக்கலாம். 

ஒருவருக்கு ஒரு தசா நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். உதாரணத்திற்க்கு சுக்கிரன் தசா நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். சுக்கிரன் என்றால் நமக்கு சுகமான வாழ்வை தரவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருப்போம் ஆனால் நமக்கு அந்த தசாவில் சுகமான வாழ்வு தரவில்லை என்றால் நாம் தசா ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று இருந்துவிடகூடாது. சுக்கிரன் நோயில் இழுத்துக்கொண்டு விட்டுவிடுவார்.

நான் அனைவருக்கும் தசா நாதனுக்கு ஒரு பரிகாரம் செய்துவிடுங்கள் என்று சொல்லுவேன். ஏன் என்றால் நல்லது தரவில்லை என்றாலும் பிரச்சினையில் கொண்டுவிட்டுவிடகூடாது. பொதுவாக தசாநாதனுக்கு முக்கியதுவம் கொடுத்தால் மட்டுமே நாம் ஏதாவது வாழ்க்கையில் முன்னேற்றத்தை பார்க்கமுடியும்.

ஒவ்வொரு தசாநாதனுக்கும் விதவிதமான பரிகாரம் இருக்கின்றது அதேப்போல் புத்திநாதனுக்கும் பரிகாரம் இருக்கின்றது. அதனை எல்லாம் அவ்வப்பொழுது பதிவில் சொல்லிவருகிறேன். ஒரு சில பரிகாரத்தை வெளியில் சொல்லுவதில்லை. பொதுவில் வைக்ககூடாது என்பதால் வைத்து இருக்கிறேன். என்னை சந்தித்து ஆலோசனை கேட்கும்பொழுது அதனை உங்களுக்கு தருகிறேன்.

கிரகங்கள் வேலை செய்யாமல் இருக்கவே இருக்காது. தவறான பலனை கொடுக்ககூடாது. அதற்கு நாம் பரிகாரம் செய்துக்கொள்ளவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அம்மன் தரிசனம்


ணக்கம் ண்பர்களே!
                    நமக்கு அம்மனை பார்க்கவேண்டும் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. விதவிதமாக அலங்கரித்து அம்மனை வழிப்பட்டவன் அந்த காரணத்தால் அம்மன் மேல் தனி பிரியம் என்று சொல்லலாம். இன்று மாலை காளிக்காம்பாளை பார்க்க செல்லவேண்டும். 

நீண்ட நாட்களாக திருவக்கரை வக்கிரகாளியம்மனை பார்க்கவில்லை அதனால் நாளை சனிக்கிழமை அன்று அங்கு சென்று வணங்கி வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன். நாளை அம்மன் கூப்பிடுகிறதா என்று பார்க்கவேண்டும்.

நமது பிரச்சினைக்கு இந்த கலியுகத்தில் ஒரு நல்ல சக்தி நம்மை ஆசீர்வதித்தால் மட்டுமே நாம் நன்றாக இருக்கலாம். அப்படிப்பட்ட சக்தியின் ஆசீர்வாதத்தை வாங்குவதற்க்கு நாளை கண்டிப்பாக செல்லவேண்டும். நம்மிடம் அம்மன் இருந்தாலும் அலங்காரத்தில் அம்மனை ஒரு முறை நேரில் சந்திப்பதற்க்கு நன்றாக இருக்கும். அந்த மனநிறைவுக்காக செல்லுவது உண்டு.

நீங்களும் இப்படிப்பட்ட வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. அம்மனின் சக்தியை உணர்ந்தவர்களுககு தான் அதன் அருமை புரியும். அதனை உணரவேண்டும் என்பதற்க்கு பல பதிவில் அதனைப்பற்றி எழுதுகிறேன். இன்று மற்றும் நாளை உங்களுக்காகவும் வேண்டிக்கொள்கிறேன். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

புதிய அலுவலகம்


ணக்கம் ண்பர்களே!
                    ஒரு சில நண்பர்கள் நேரில் சந்திக்கவேண்டும் என்று ஆவல்கொள்கிறார்கள். அவர்களின் ஆவலை தீர்க்கவேண்டும் அல்லவா. அதனால் ஒரு ஏற்பாட்டை செய்தேன்.

அலுவலகம் இல்லாமல் வெளியில் பிரஸ்சிங் சென்டரில் இருந்து பதிவை உங்களுக்கு தந்துக்கொண்டு இருந்தேன். நான் அலுவலகம் இருக்கும்பொழுதே அதிக நாட்கள் அலுவலகத்தில் இருப்பதில்லை வெளியில் பயணம் செய்துக்கொண்டே இருப்பதால் புதிய அலுவலகம் தேவையில்லை என்று இருந்துக்கொண்டு இருந்தேன்.

இந்த நேரத்தில் நமது தளத்தின் வழியாக பழக்கப்பட்டவர் மதிப்புக்குரிய லண்டனை சேர்ந்த கந்தையா ஐயா அவர்கள் உங்களுக்கு ஒரு அலுவலகத்தை வைத்துக்கொள்ளுங்கள் என்று பணம் அனுப்பியிருந்தார். ஐயா அவர்கள் எனக்கு பல காலங்களாக பழக்கம். பழகுவதற்க்கு எளிமையானவர். ஐயா அவர்களை நேரில் சந்தித்து இருக்கிறேன். அவர்கள் சொன்னதால் சரி ஒரு அலுவலகத்தை பார்த்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்.

நேற்று கொட்டிவாக்கத்தில் பழக்கப்பட்ட நண்பர் ஒருவர் கூப்பிட்டு என்னிடம் ஒரு அலுவலகம் இருக்கிறது அதனை பயன்படுத்திக்கொள் என்று சொன்னார். சரி என்று நானும் ஏற்றுக்கொண்டுவிட்டேன். சென்னையில் இருக்கும்பொழுது கொட்டிவாக்கத்தில் என்னை சந்திக்கலாம்.

அலுவலகத்தில் எந்த ஒரு விளம்பரபலகையும் நான் வைப்பதில்லை. அதனையே இந்த அலுவலகத்திலும் கடைபிடித்து வருகிறேன். என்னை சந்திப்பதாக இருக்கும் நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டுவிட்டு வந்து சந்தியுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

உங்களை காக்கும் உறவுகள்


ணக்கம் ண்பர்களே!
                    இன்றைய காலத்தில் உலகம் சுருங்கிவிட்டது என்று சொல்லுவார்கள். உலகம் சுருங்கியதோ இல்லையோ மக்களின் மனம் சுருங்கிவிட்டது. இன்றைய மக்கள் பணம் நிறைய சம்பாதிக்கிறார்கள் உறவுகளை சம்பாதிக்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

பணத்தை சேமிப்பதற்க்காக உறவுகளை இழந்துவிட்டார்கள். உறவுகளை இழந்ததால் இவர்களுக்கு பிரச்சினை அதிகம் வருகிறது. எப்படி பிரச்சினை அதிகம் வருகிறது என்றால் இவர்களின் ஒரு பொதுகாரியத்திற்க்கு ஒரு ஆள் கூட வருவதில்லை.

சென்னையில் ஒரு சில திருமணத்தை நான் பார்த்து இருக்கிறேன். அந்த திருமணத்தின் பொழுது பத்து நபருக்கு குறைவாக ஆள் இருப்பார்கள். ஒரு கிராமத்தில் திருமணம் நடைபெற்றால் குறைந்தது பத்து கிராமத்தின் ஆட்கள் ஒரு இடத்தில் கூடுவார்கள்.

சென்னையில் நான் இருக்கும் பகுதியில் பெசன்ட்நகர் மின்மயானம் செல்லும் வழி இருக்கின்றது. ஒருவர் இறந்து சென்றாலே மூன்று நபருக்கு மேல் செல்லமாட்டார்கள்.  எதிர்காலத்தில் ஒருவர் இறப்பதாக இருந்தால் அவரே நேராக சுடுகாட்டிற்க்கு சென்று படுத்துக்கொள்ளவேண்டிய நிலை உருவாகலாம்.

கூட்டம் குறைந்தால் செலவு குறைவு தானே என்று நினைக்கதோன்றும். அப்படி இல்லை நீங்கள் வாழ்நாளில் செய்யவேண்டிய செலவு எந்த ரூபத்திலாவது வந்தே தீரும். அதற்கு செய்யவில்லை என்றால் மருத்துவசெலவு இப்படி ஏகாப்பட்டதை செய்ய வேண்டும்.

எங்களுக்கு நண்பர்கள் இருக்கின்றார்கள் பிறகு எதர்க்கு உறவினர்கள் என்று கேட்கதோன்றும். நண்பர்கள் எல்லாம் ஒரு எல்லை வரை தான் இருப்பார்கள். எத்தனை நாட்கள் உங்களோடு அவர்கள் இருப்பார்கள். அலுவலகம் செல்லவேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள். உறவுகள் அப்படி கிடையாது உங்களின் நல்லது மற்றும் கெட்டது என்று எது வந்தாலும் முன்னாடி நிற்பவர்கள். உறவினர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

இந்த காலத்தில் அண்ணன் தம்பிக்கு கூட பேசாமல் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர். அட நீங்கள் தான் இப்படி வளர்ந்துவிட்டீர்கள் உங்களின் தலைமுறையாவது நன்றாக இருக்கட்டுமே

இன்றைய காலகட்டத்தில் கோச்சாரசனியின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதற்க்கு காரணம் இப்படி உறவுகளை நீங்கள் இழந்தது தான் காரணம். உங்களி்ன உறவுகளை கூப்பிட்டு அவர்களுக்கு ஒரு விருந்து ஏற்பாடு செய்து கொடுத்தால் உங்களுக்கு சனியின் தாக்கம் குறையும். 


பணம் பணம் என்று செல்லாமல் உறவுகளும் வேண்டும் என்று நினைத்து உங்களின் உறவுகளை தேடிப்பிடித்து உங்களின் குலதெய்வ கோவிலில் ஒரு விருந்து ஒன்றை கொடுங்கள். உங்களின் வாழ்க்கை தரம் எப்படி உயர்கிறது என்று நீங்களே பார்த்து  தெரிந்துக்கொள்ளலாம்.

உங்களின் குலதெய்வத்தை வணங்கியது போலவும் இருக்கும் அதே நேரத்தில் உங்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது போலவும் இருக்கும். என்ன நண்பர்களே உடனே விருந்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அம்மன் அருள்


ணக்கம் ண்பர்களே!
                    பொதுவாக என்னிடம் ஏதாவது பிரச்சினை வைத்தால் நான் விலகி செல்வது வழக்கம். நான் எங்கு சென்று வம்பு செய்தாலும் அம்மனை எல்லாம் ஒருபொழுதும் தவறான வழியில் பயன்படுத்துவது கிடையாது. ஒரு மாத காலம் அம்மனை எந்த வேலையும் இல்லாமல் வைத்திருந்தேன். பல பேர்களுக்கு நெருக்கடி ஆரம்பித்துவிட்டது.

தொழில் செய்பவர்களுக்கு என்று செய்து வந்தது கூட நிறுத்தி இருந்தேன். பல தொழில் அதிபர்கள் சிக்கலில் சிக்கி விட்டார்கள். அவர்கள் என்னிடம் போன் செய்து என்ன சார் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

நான் யாருக்கும் எதிராக செய்வதில்லை. அம்மனை வைத்து நான் செய்துக்கொண்டிருக்கும் நல்ல விசயங்கள் அவர்களை விட்டு வெளியில் வந்தவுடன் அவர்களுக்கு தோல்வி அதுவாகவே ஏற்பட்டுவிடுகிறது. உங்களின் தொழில் நன்றாக இருக்க நான் இங்கு இருந்து செய்கின்ற வேலை தடைப்பட்டவுடன் உங்களின் தொழில் தோல்வியை சந்திக்கிறது.

உங்களின் தொழில் வெற்றி அடைந்தர்க்கு காரணம் அம்மனின் சக்தி மட்டுமே. அம்மன் சக்தி இல்லை என்றால் தொழில் பிரச்சினையை சந்திக்கிறது. அம்மனின் சக்தி வேண்டும் என்பவர்கள் தொடர்புக்கொள்ளலாம். பணம் இல்லாமல் சக்தி வராது. எனது வளர்ச்சி மற்றும் பொதுசேவைக்கு பணம் தேவைப்படுவதால் இப்படி மாற்றிவிட்டேன்.

என்னால் முடிந்தளவு சேவை செய்துவிட்டேன் இனி சேவை வேறு மாதிரி செய்யவேண்டும் என்பதால் திடீர் ஏற்பாடு செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. பல நண்பர்கள் இதனால் பாதிப்படைந்திருப்பார்கள் என்ன செய்வது சம்பாதிப்பது அனைத்தும் வீட்டிற்க்கே எடுத்து செல்லவேண்டும் என்றால் உட்கார்ந்து வேலை செய்வனின் நிலைமை மோசமாகிவிடும்.

பணம் என்றவுடன் எனக்கு வாடிக்கையாளர்கள் இப்பொழுது அதிகரித்து உள்ளனர். செய்துவிட்டு வாங்கிக்கொள்கிறேன் என்றவுடன் அது வேறு மாதிரி நினைக்க தோன்றியது. நாங்கள் கொடுக்கும் பணத்திற்க்கு நீங்கள் செய்தால் போதும் என்று சொல்லுகிறார்கள். நானும் அதுபோல் செய்துக்கொண்டு உள்ளேன்.

நாங்கள் இதனை கற்கும்பொழுதே குருவின் கட்டளை வரும் நபர்களிடம் பணத்தை வாங்கினால் மட்டுமே அவர்களின் கர்மாவை குறைக்கமுடியும். அப்படி குறைக்கும்பொழுது மட்டுமே அவர்களின் வேலை நடைபெறும் என்பார். இது உண்மையான ஒன்று. கர்மாவை குறைக்க ஒரு வழியை ஏற்படுத்திவிட்டு அதன் பிறகு செய்தால் வேலை உடனடியாக நடந்துவிடும்.

ஒரு வேலையை இலவசமாக செய்துவிட்டு அவர்களிடம் இருந்து அம்மனை வைத்து பணத்தை வாங்கலாம் ஆனால் அது தவறான வழியில் சென்றுவிடும் என்பதால் அதனை செய்வதில்லை. அம்மனின் கோபத்திற்க்கு ஆளாகிவிட்டால் மறுபடியும் சாதாரண நிலைக்கு திரும்பிவருவது கடினம் என்பதால் செய்வதில்லை. காரியம் நடைபெற வேண்டும் என்று நினைப்பவர்கள் பணத்தை கொடுத்து சாதித்துக்கொள்ளலாம்.

நமது ஜாதககதம்பத்தில் புதியதாக வரும் நபர்கள் கவலைப்படுகின்றனர். நான் என்ன செய்வது கொடுத்துவைத்தது அவ்வளவு தான் என்று இருந்துவிடவேண்டியது தான் என்ன செய்வது மனிதனின் குணங்கள் அப்படி இருக்கின்றன.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Thursday, March 27, 2014

பித்ரு தோஷம் & பரிகாரம்


ணக்கம் ண்பர்களே!
                    எப்பேர்பட்ட தோஷத்தையும் நாம் நீக்கிவிடலாம். அதாவது நாம் கஷ்டப்பட்டு பாேராடி வழிப்பட்டு நீக்கிவிடலாம் ஆனால் பித்ரு தோஷத்தையும் நீக்குவது அவ்வளவு சுலபம் இல்லை. ஒவ்வொரு தோஷமும் கடவுளால் நமக்கு தண்டனை வழங்கப்படுகிறது. பித்ரு தோஷம் பிறர்க்கு நாம் செய்த தீவினையால் நமக்கு வரும் ஒரு தாேஷம்.

பிறர் என்று வரும்பொழுது ஒரு ஆத்மாவால் நமக்கு வருவது. ஆத்மா நம்மை பலிவாங்க நினைக்கும். அதாவது ஒரு வேலை என்று நாங்கள் செல்லும்பொழுது மட்டுமே அந்த வேலையில் எப்பேர்ப்பட்ட பிரச்சினை வரும் என்று தெரியும்.

பித்ரு தோஷம் இருப்பவர்களுக்கு நாம் வேலை செய்யும்பொழுது அந்த வேலை காரணமாக நமக்கு பிரச்சினை வரும். எப்படிப்பட்ட பிரச்சினை என்றால் நமக்கு அடிப்படும் அப்படி அடிப்பட்டால் அது வேறு ஒரு ஆத்மாவால் வருகின்றது என்று அர்த்தம்.

உடலில் நல்ல அடிப்படும். அப்பொழுதே தெரிந்துவிடும் சம்பந்தப்பட்ட நபர் எங்கோ சென்று வாங்கி வந்து இருக்கிறான் என்று புரிந்துவிடும். சம்பந்தப்பட்ட நபரை கூப்பிட்டு உனக்கு பித்ரு தோஷம் இருக்கின்றதா என்று கேட்போம் அப்பொழுது அவர்களின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்கும்.

பித்ருதோஷத்திற்க்கு நிவர்த்தி செய்ய சொல்லுவோம் அதன் பிறகு அவர்களுக்கு நாம் செய்துக்கொடுப்பது பழக்கம். இதில் ஒரு பிரச்சினை என்ன என்றால் பித்ருக்களுக்கு திதிக்கொடுக்க அவர்களின் பெற்றாேர்கள் உயிரோடு இல்லாமல் இருக்கவேண்டும். அப்பொழுது சம்பந்தப்பட்ட நபர் திதி கொடுக்கலாம். 

மூன்றாவது வீட்டில் வழியாக வரும் பித்ரு தோஷத்திற்க்கு பெரும்பாலும் அவர்களின் பெற்றோர்கள் உயிரோடு இருப்பார்கள். உயிரோடு இருப்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட நபர் கொடுக்கமுடியாது. சம்பந்தப்பட்ட நபர் அவர்களின் பெற்றோர்களை கூப்பிட்டு திதி கொடுங்கள் என்று சொன்னாலும் அவர்கள் சண்டைக்கு வந்துவிடுவார்கள். அங்கும் பெரிய பிரச்சினை உருவாகிவிடும். நான் செல்லமுடியாது என்று சொல்லுவார்கள். நாமே தான் அதனை சரிசெய்யவேண்டும்.

கர்மா என்று இருந்துவிடமுடியாது எப்படியாவது இந்த பிறவியில் அதனை நீக்கவேண்டும். இந்த மனித பிறவி எடுத்ததின் நோக்கம் அதனை சரிசெய்வதற்க்கு தான். அனைத்து காரணிகளும் அடைபடும் நேரத்தில் நாம் என்ன செய்யமுடியும்.

ஒரு ஏழைக்கு பசுமாட்டை நாம் தானம் செய்தால் இந்த பிரச்சினையில் இருந்து நாம் தப்பிக்கலாம். பசுமாட்டை குலதெய்வத்திற்க்கும் நாம் தானம் செய்யலாம். கோவிலுக்கு என்று தானம் செய்தால் அந்த மாட்டை பராமரிக்கும் செலவையும் நாம் சேர்த்து தானம் செய்வது நல்லது. ஒரு சிலர் பிராமணர்களுக்கு பசுமாட்டை தானம் செய்யலாம் என்று சொல்லுவார்கள். ஏழை பிராமணர்களாக இருந்தால் நல்லது.

பசுமாட்டை தானம் செய்யும்பொழுது பசு மாடு மற்றும் அது ஈன்ற கன்றுக்குட்டியையும் சேர்த்து தானம் செய்யப்படவேண்டும் அது தான் பழக்கம்.

நான் ஏழையாக இருக்கின்றேன் என்னால் பசுமாட்டை தானம் செய்ய பணம் இல்லை என்பவர்களுக்கு என்று தனியாக பரிகாரம் இருக்கின்றது அதனை சந்தர்ப்பம் வரும்பொழுது உங்களுக்கு சொல்லுகிறேன்.

ஒரு சில ஆன்மீகவாதிகள் அந்த ஆத்மாவிற்க்கு பரிகாரம் செய்து தருகிறேன் என்று சொல்லுவார்கள். ஆத்மாவிற்க்கு பரிகாரம் செய்வது அவர்கள் அவர்கள் தான் செய்யவேண்டுமே தவிர ஆன்மீகவாதிகள் அல்ல. நீங்கள் தான் பரிகாரம் செய்யவேண்டும்.



நீங்கள் செய்த பாவம் உங்களால் கரைக்கப்படவேண்டும் என்பது விதி. நீங்களே அனைத்திற்க்கு வழியை காணவேண்டும். பிறரை நம்பி இந்த மாதிரி காரியங்களை செய்யகூடாது. கடுமையான பித்ருதோஷம் இருப்பவர்கள் உடனே இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

பெரிய பாவம்


ணக்கம் ண்பர்களே!
                    இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் பேராசைக்காக பல தவறான காரியங்களில் இறங்கி தன்னுடைய கர்மாவின் கணக்கில் கூடுதலாக ஏற்றிக்கொள்கிறார்கள். கர்மாவின் கணக்கு அதிகமாகி ஒவ்வொரு நாளும் பிரச்சினை பிரச்சினை என்று சிக்கலில் சிக்கி தவிக்கிறார்கள்.

மனிதனுக்கு இன்று சொகுசாக வாழவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுவிட்டது. சொகுசு வாழ்க்கை வாழவேண்டும் என்றால் அதற்கு பணம் வேண்டும். அதனை சம்பாதிக்க பல வழிகளை பின்பற்றி சம்பாதிக்கிறார்கள். ஒரு சிலர் தவறான பாதையை கையில் எடுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். விளைவு பிரச்சினை வந்துவிடுகிறது.

பழைய காலத்தில் உள்ள மனிதர்கள் சொல்லுவார்கள் நீ தவறு செய்தால் உன் குழந்தைகள் கஷ்டப்படுவார்கள் என்று சொல்லுவார்கள். இந்த காலத்தில் யார் தவறு செய்தாலும் அவரே கஷ்டப்படுவார். அவன் அவன் செய்த பாவம் அவனே அனுபவிக்கவேண்டும்.

நீங்கள் ஒரு தவறு செய்து இருந்தால் பிறகு அதே மாதிரி நமக்கு பிறர் வழியாக தொந்தரவு வரும். அப்படிப்பட்ட ஒன்றை நாம் பார்க்கலாம். நாம் பிறரிடம் பணத்தை ஏமாற்றி வாங்கினால் அது மிகப்பெரிய பாவம். ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட உழைப்பின் வேர்வையால் வரும் பணத்தை நாம் திறமையாக ஏமாற்றினால் அவர்களின் ஆத்மா நம்மை சும்மா விட்டுவிடாது.

என்னை இப்படி ஏமாற்றிவிட்டானே என்று நினைக்கும்பொழுது எல்லாம் அவர்களின் ஆத்மா பல வேதனைகளை பெறும். அந்த வேதனைகள் நமக்கு தேடி நாம் எங்கு இருந்தால் வந்து நம்மை பலிவாங்க ஆரம்பித்துவிடும். அதனால் பிறரை ஏமாற்றிவிடாதீர்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

விழிப்புணர்வு


வணக்கம் நண்பர்களே!
                                    நாம் என்ன தான் விழிப்புணர்வோடு வெளியில் சென்று தேடினாலும் அதற்கு முன்பே பல பேர் அதில் ஈடுபட்டது தெரியவரும். அப்படி ஒன்றை நேற்று எனது நண்பர் ஒருவர் பகிர்ந்துக்கொண்டதை உங்களிடம் தெரியப்படுத்துகிறேன்.

உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் அனைத்து தோஷமும் நீங்குவதற்க்கு அனாதை பிணத்தை அடக்கம் செய்யவேண்டும் என்று சொல்லிருந்தேன் அல்லவா. அதனைப்படித்துவிட்டு நமது நண்பர் ஒருவர் இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார். ஏதாே நம்மால் முடிந்த உதவியை செய்யலாம் என்று தேடி பார்த்து இருக்கிறார். 

அவர் தேடியது மின்மயானங்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட இடத்தில் போய் விசாரிக்கும்பொழுது தான் தெரிந்து இருக்கிறது. பல பேர் அதற்கு முன்பதிவு செய்து வைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

நாம் ஒரு விசயத்தை சொல்லுவதற்க்கு முன்பு பல பணக்காரர்களுக்கு அந்த செய்தி அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் ஆன்மீகவாதிகள் சொல்லிவிடுகிறார்கள். அவர்கள் தயார் நிலையில் இருந்துவிடுகிறார்கள். 

அனாதை பிணங்கள் என்று வரும்பொழுது அதற்கு காவல்துறை உதவி தேவைப்படும் அதனை செய்துவிட்டு தான் நீங்கள் காரியம் செய்யப்படவேண்டும்.  அதனை முறையாக பெற்று நீங்கள் செய்யுங்கள். தேடினால் கண்டிப்பாக எப்படியாவது உங்களுக்கு வாய்ப்பு வரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    மாதத்தில் முதல் வாரத்திலேயே அம்மனுக்கு பூஜை வைத்துவிடுவார் இந்த மாதம் மட்டும் மாதகடைசியில் பூஜையை வைத்து இருந்தார் என்ன காரணம் என்று தெரியவில்லையே என்று பல பேர் குழம்பிபோய் இருக்கலாம்.

பதிவு கூட குறைந்தளவு தான் கொடுத்துக்கொண்டிருந்தேன். இதற்க்கு காரணம் நமது ஊரில் நமக்கு உறவினர் ஒருவர் இறந்து இருந்தார். அந்த காரணத்தால் அனைத்தையும் தாமதப்படுத்தினேன். இறந்த அன்று ஒரு நாள் மட்டும் தான் நமக்கு விலக்கு என்றாலும் பூஜை செய்வது நாம் என்பதால் முப்பது நாள் செல்லட்டும் என்று இருந்தேன்.

நமது அம்மனுக்கு எந்த தீட்டும் கிடையாது. ஊரில் இறந்து கிடந்தாலும் கோவிலில் பூஜை செய்துக்கொண்டு இருக்கலாம். பூஜை செய்வது நாம் என்பதால் செல்லாமல் இருந்தேன். அங்காளபரமேஸ்வரி எங்கு இருந்தாலும் அதன் அருகில் சுடுகாடு இருக்கும். சுடுகாட்டு அருகில் இருந்தால் மட்டுமே அம்மன் அந்த இடத்தில் இருக்கும். அப்படி இல்லை என்றால் அம்மன் அங்கு இருக்காது.

நமது அம்மனின் கோவில் அருகில் சுடுகாடு அமைந்துள்ளது. அம்மனுக்கு மதியம் அல்லது இரவு நேரம் என்று கணக்கு கிடையாது எந்த நேரத்திலும் பூஜை செய்துக்கொண்டே இருக்கலாம். அம்மனின் சக்தி அப்படிப்பட்டது என்பதால் நேரம் காலம் கிடையாது. 

இனி வழக்கம்போல் சோதிடம் மற்றும் ஆன்மீகபதிவுகள் நிறைய கொடுக்கிறேன். சோதிட ஆலோசனைகள் பாதி அப்படி நின்றுக்கொண்டு இருக்கிறது அதற்க்கும் நேரம் ஒதுக்கி சொல்லிவிடுகிறேன். உற்சாகத்தோடு இனி தொடங்கிவிடலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Wednesday, March 26, 2014

பிரச்சினையும் தீர்வும் பகுதி 24

 
ணக்கம் ண்பர்களே!
                    பெரும்பாலும் நம்மிடம் இருப்பவர்கள் ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு தொந்தரவை தருகிறார்களே என்று நினைக்க தோன்றும். என்னிடம் சோதிடம் பார்ப்பவர்களும் கேட்கும் கேள்வி எனக்கு ஏன் இந்த நபரால் பிரச்சினை வருகிறது என்று இருக்கும்.

இவர்களுக்கு ஒரு வரியில் நான் பதில் சொல்லுவது என்றால் அனைத்தும் பூர்வபுண்ணியத்தால் வரும் பிரச்சினை. நாம் முன்ஜென்மத்தில் ஒருவருக்கு செய்த தீயபலன்கள் இந்த ஜென்மத்தில் நமக்கு திரும்பிவருகிறது. அதுவும் சம்பந்தப்பட்ட நபரால் வரும்பொழுது மட்டுமே வருகிறது. நாம் அதிகப்பட்சம் முன்ஜென்மத்தில் உள்ள நபர்களை தேடி பிடிக்கவேண்டியதில்லை. உங்களுடன் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கின்றனர். என்ன அவர்கள் உங்களை தொந்தரவு செய்வதால் அவர்களை உங்களுக்கு பிடிக்கவில்லை.

இப்படிப்பட்ட நபர்கள் உங்களை தாக்குவதாக இருந்தால் அவர்களிடம் வீண் சண்டை போடாமல் நீங்களே விலகிச்செல்வது நல்லது. ஏன் என்றால் அவர்களுக்கு நாம் முன்ஜென்மத்தில் பிரச்சினை கொடுத்தோம். இந்த ஜென்மத்தில் அவர்கள் நமக்கு பிரச்சினை கொடுக்கிறார்கள்.

அவர்களை நாம் எதிர்த்துக்கொண்டு நமது காலத்தை வீணாக்காமல் நாம் நம் வழியில் செல்வது நல்லது. நான் அவர்களை எதிர்த்து தான் வாழவேண்டும் என்றால் நீங்கள் இழக்க தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம். சம்பந்தமே இல்லாமல் ஒருவர் உங்களை பிரச்சினையில் மாட்டிவிடுகிறார் என்றால் அவர் தான் பூர்வபுண்ணிய எதிரி என்று அர்த்தம். பிரச்சினையை அமைதியாக கையாளுவதும் ஒரு தனிக்கலை. 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அம்மனின் பூஜை படங்கள்

வணக்கம் நண்பர்களே!
                                            நேற்று நடைபெற்ற  அம்மனின் பூஜை படங்கள்.







படங்கள் கண்டியூர் ராமசுப்பிரமணியன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Tuesday, March 25, 2014

ஆன்மீகவாதியாக மாறிவிடுங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    இன்றைக்கு மக்கள் இருக்கும் பிரச்சினையில் ஆன்மீகவாதிகளை தேடிச்செல்லுகின்றனர். மக்கள் ஆன்மீகவாதிகளை தேடிச்செல்வது தவறு இல்லை. அதே நேரத்தில் ஆன்மீகவாதிகளே கதி என்று நீங்கள் இருந்துவிடகூடாது.

நீங்களும் மனிதர்கள் தான் ஆன்மீகவாதிகளும் மனிதர்கள் தான் ஆனால் ஆன்மீகவாதிகள் தங்களை உணர்ந்துவிட்டார்கள் நீங்கள் உணரவில்லை. நீங்கள் உணரவேண்டும் அது மட்டும் தான் மீதி. நீங்கள் உணர்ந்துவிட்டால் போதும்.

ஒரு பிரச்சினைக்காக தன்னை ஆன்மீகவாதியாக மாற்றிக்கொள்ள வேண்டுமா என்று நினைக்க தோன்றும்.அந்த பிரச்சினையை ஏற்படுத்தி இயற்கையின் காரணம் நீங்கள் ஆன்மீகவாதியாக மாறவேண்டும் என்பதற்க்காக மட்டுமே ஏற்படுத்தி இருக்கிறது. அந்த பிரச்சினையை அடுத்த நபரிடம் நீங்கள் தீர்த்துக்கொண்டால் அடுத்த பிரச்சினை தயாராக உங்கள் முன்னாடி நிற்க்கும்.

பிரச்சினை வந்துக்கொண்டே இருக்கும் நீங்கள் ஒரு நாள் ஆன்மீகவாதியாக மாறிவிட்டால் கண்டிப்பாக அடுத்த நாளிலில் இருந்து பிரச்சினை உங்களை நெருங்கி வராது.

 நீங்கள் என்று ஆன்மீகவாதியாக மாறுகின்றீர்களோ அன்று முதல் உங்களின் வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் எதிர்க்கொள்ளும் திறமை வந்துவிடும். இன்றைய கலியுகத்தில் நிமிடத்திற்க்கு ஒரு முறை பிரச்சினை வந்துக்கொண்டே இருக்கும். அதற்கு தீர்வு நீங்கள் ஆன்மீகவாதியாக மாறிவிடுங்கள். ஆன்மீகவாதியை தேடிச்செல்லவேண்டியதில்லை. ஆன்மீகவாதியாக மாறிவிடுங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, March 24, 2014

பணம் என்ற கடவுள்


வணக்கம் நண்பர்களே !
                    ஆன்மீகத்தில் நாம் கொஞ்சம் சாதிக்கவும், நமக்கு கடவுள் பக்தி கிடைக்கவும் முதலில் பணம் என்பது வேண்டும். பணத்தை வைத்திருந்தால் எமன் கூட உங்களை நெருங்காது. என்னடா ஆன்மீகவாதி இப்படி சொல்லுகிறார் என்று நினைக்கதோன்றும். 

கொஞ்சம் கையில் பணம் இருந்தால் மட்டும் தான் ஆன்மீகத்தில் ஏதாவது பூஜை செய்து நம்மை காப்பாற்றிக்கொள்ளமுடியும். இன்றைக்கு பூஜை செய்வதற்க்கு பணம் நிறைய தேவைப்படுகிறது. அதற்கு நம்மிடம் பணம் இருக்கும்பொழுது நாம் நம்மை இந்த வழியில் காப்பாற்றிக்கொள்ளமுடியும்.

ஒருத்தன் ஏழையாக இருந்தால் ஏழையாக தான் இருப்பான் அவனின் மனநிலை நாம் ஏழையாக தான் நாம் வாழவேண்டும் என்ற மனநிலை உருவாகிவிடும் அவனின் மனநிலையே அவனை கீழே இருந்து மேலே உயராமல் தடுக்கிறது.

நான் ஏழையாக இருக்க பிறந்தவன் கிடையாது பணம் சம்பாதிக்க பிறந்தவன் என்று உங்களின் மனநிலையை மாற்றிவிட்டால் போதுமான ஒன்று. உங்களை தேடி பணம் வந்தவிடும்.

கொஞ்சம் பணம் வந்தவுடன் நீங்கள் உங்களை மேம்படுத்திக்கொள்ள ஆன்மீகவழியை நாடினால் போதுமானது. பணம் நிறைய வேண்டும்பொழுது ஆன்மீகவழியை மேம்படுத்திக்கொள்ளவேண்டும். ஆன்மீகவழியை மேம்படுத்தும்பொழுது உங்களுக்கு பணம் வந்துக்கொண்டே இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Sunday, March 23, 2014

குரு தசா பலன்கள் பகுதி 95


ணக்கம் ண்பர்களே!
                   குரு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். குரு தசாவைப்பற்றி பார்க்கும்பொழுது ஒருவருக்கு குருவும் சனியும் சேர்ந்து இருந்து ஒருவருக்கு குரு தசா நடைபெற்றால் அவருக்கு குரு தசா எப்படி பலனை தரும் என்பதைப்பற்றி பார்க்கலாம்.

குரு நன்றாக இருந்து பலனை கொடுத்தாலும் சனியோடு சேர்ந்து பலனை தரும்பொழுது ஒரு சில தொந்தரவையும் கொடுக்கும். குரு நல்ல பலனை தரும் சனி கெட்ட பலனை தரும். ஒரு நல்ல விஷேசத்திற்க்கு நாம் வேலை செய்துக்கொண்டிருப்போம் அந்த நேரத்தில் ஒரு கெட்ட செய்தி வரும்.

சனியின் இயல்பு அப்படிப்பட்டது. குரு நல்ல விசயத்திற்க்கு கூட்டத்தை சேர்த்தார் என்றால் சனிக்கிரகம் கெட்ட விசயத்திற்க்கு கூட்டத்தை சேர்த்துவிடுவார்.

இப்படி குரு தசா பலனை கொடுக்கும்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது அதாவது பரிகாரம் ஊரில் எங்கு இறப்பு நடந்தாலும் அங்கு சும்மா சென்று வந்துவிடுங்கள். உங்களின் வீட்டிற்க்கு இந்த மாதிரியான கெட்ட செய்தி அடிக்கடி வராது. முழுமையான குருவின் பலனை அனுபவிக்கமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Saturday, March 22, 2014

அம்மனின் பூஜை


ணக்கம் ண்பர்களே!
                    இந்த மாதம் அம்மனின் பூஜை வரும் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும். இந்த மாதத்தில் முதலில் நடைபெறவேண்டிய பூஜை மாதக்கடைசியில் நடைபெறுகிறது. உலகத்தை காக்கும் அன்னைக்கு எப்பொழுது தனக்கு பூஜை வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறதோ அப்பொழுது தான் வைத்துக்கொள்ளும். இந்த மாதம் மாதகடைசியாக சென்றுவிட்டது. இந்த மாதம் பூஜைக்கு என்று பணம் அனுப்பியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திருமதி சித்ராகிருஷ்ணன் அவர்கள்.
திருப்பூரை சேர்ந்த சந்திரசேகர் அவர்கள்.
சிங்கபூரை சேர்ந்த திரு செந்தில்குமார் அவர்கள்.
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
மஸ்கட்டை சேர்ந்த திரு கரிகாலன் அவர்கள்.

வழக்கம்போல் மாதம்தோறும் பங்களிப்பை அளிக்கும் திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

மாதம்தோறும் நேரில் வந்து பங்களிப்பை அளிக்கும் திரு ராமசுப்பிரமணியன் அவர்கள்.

மற்றும் பல நண்பர்கள் பணம் அனுப்பியுள்ளனர். செவ்வாய்கிழமை அன்று அம்மனின் பூஜை நடைபெறும் நாளில் அம்மனை நினையுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

காவல் தெய்வம்


வணக்கம் நண்பர்களே!
                    இந்த பதிவை திருப்பூரில் இருந்து எழுதுகிறேன். நான் எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரில் உள்ள காவல்தெய்வத்தை வணங்குவது எனது பழக்கம் இதனை ஏன் இப்படி செய்கிறேன் என்றால் அந்த ஊரில் நமக்கு எந்தவித தொந்தரவும் வரகூடாது என்று செய்வது வழக்கம்.

இந்த தகவலை நான் ஏற்கனவே உங்களுக்கு சொல்லியுள்ளேன் இருந்தாலும் மறுமுறையும் சொல்லுவது பல பேர்கள் உங்களின் சொந்த ஊரை விட்டு வந்து இருப்பீர்கள் வெளியூரில் வந்து வேலை செய்வீர்கள். நீங்கள் வெளியூரில் இருக்கும்பொழுது அந்த ஊரில் உங்களுக்கு எந்த வித தொந்தரவும் இருக்ககூடாது.

நகரத்தில் எப்படிப்பட்ட பிரச்சினை இருந்தாலும் அந்த ஊரில் உள்ள காவல்தெய்வத்தை நீங்கள் வணங்கிவிட்டால் உங்களுக்கு எந்தவித தொந்தரவும் ஏற்படாது. இதனை நான் என் அனுபவத்தில் இருந்து சொல்லுகிறேன்.

நீங்கள் உங்களின் குலதெய்வத்தையும் வணங்குங்கள் அதே நேரத்தில் நீங்கள் எந்த ஊரில் இருக்கின்றீர்களோ அந்த ஊரின் காவல் தெய்வம் எது என்று பார்த்து வணங்கி வாருங்கள். உங்களுக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாது.

நான் இப்படி தான் செய்கிறேன். என்னை போல் நீங்களும் செய்து வாருங்கள். உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராமல் காவல்தெய்வம் காக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

சித்தர்கள்


வணக்கம் நண்பர்களே!
                    சித்தர்களைப்பற்றி பார்த்தோம் அல்லவா. அதில் உடலை பாதுகாக்க மூலிகைகளை பயன்படுத்துகிறார்கள் என்று சொன்னேன் அல்லவா. அப்பொழுது உடல் இந்த பூமியில் இருக்கவேண்டும் அல்லவா. கண்டிப்பாக இந்த பூமியில் ஒரு இடத்தில் பாதுகாப்பாக இருக்கின்றது. அனைவராலும்  அந்த உடலை பார்த்துவிடமுடியாது.

சித்தர்களின் ஜீவசமாதி என்று சொல்லுகிறோம் அந்த இடத்தில் சித்தர்களின் உடல் இருக்கின்றது என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். நம் மக்களைப்பற்றி அவர்களுக்கு தெரியாமல் இருக்கமுடியாது. மனிதன் கையில் கிடைத்தால் அவன் என்ன செய்வான் என்று அவர்கள் புரிந்துக்கொண்டு இருப்பார்கள். ஜீவசமாதி என்று சொல்லிவிட்டு ஏதாவது ஒரு சக்தியை வைத்துவிட்டு அவர்களின் உடலை வேறு இடத்தில் மறைத்து வைத்திருப்பார்கள்.

எப்படி நீங்கள் சொல்லுவதை நாங்கள் நம்புவது என்று உங்களின் மனம் கேட்கதோன்றும். ஒரு மனிதனுக்கு ஒரு இடத்தில் சமாதி வைக்கவேண்டும். ஒரு சித்தர்க்கு இப்பொழுது பல இடத்தில் ஜீவசமாதி இருக்கிறது. அப்பொழுது எப்படி ஒரு உடலை பிரித்து பல இடத்தில் வைத்திருப்பாரா என்று நாம் நினைக்கவேண்டாமா. பல இடத்தில் ஜீவசமாதியை வைத்ததின் நோக்கம் மனிதனை குழப்பவேண்டும் அதே நேரத்தில் எங்கு ஜீவசமாதி என்று அழைக்கிறார்களே அங்கு சக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்து வைத்திருக்கிறார்கள்.

அவர்களின் உடல் மறைக்கப்பட்ட இடம் வெளியில் தெரியாமல் இருக்க பல வழிகளை வைத்து அவர்கள் மறைத்து வைத்திருக்கின்றனர். உலகம் முழுவதும் சாட்டிலைட்டில் படம் எடுத்து வைத்திருக்கிறோம் என்று நாம் அறிவியலை கண்டு மெய்சிலிர்க்கலாம். எந்த அறிவியல் கருவியாலும் கண்டுபிடிக்க முடியாத படி மறைத்து வைத்து இருக்கின்றனர்.
 
ஒரு இடத்தை அவர்கள் சொல்லிவிட்டு வேறு இடத்தில் அவர்களின் உடலை பாதுகாப்பாக வைத்து இருக்கின்றார்கள். அந்த இடத்தை மனிதன் செல்லமுடியாதபடி அதே நேரத்தில் எந்த கருவியாலும் கண்டுபிடிக்காதபடி மறைத்து வைத்து இருக்கின்றனர். எப்படி நம்புவது என்று நீங்கள் நினைக்கலாம். நீங்கள் ஒரு நல்ல குருவிடம் ஆன்மீகம் படிக்கும்பொழுது அவர்கள் காட்டிக்கொடுப்பார்கள். 

ஆன்மீகவாதிகளால் கண்டுபிடிக்கமுடியும். அதனால் தான் நான் நீங்கள் சித்தர்களை தரிசனம் செய்யவேண்டியதில்லை நல்ல குருவை தேடினால் போதும். குரு அனைத்தையும் உங்களுக்கு காட்டுவார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Friday, March 21, 2014

குருவின் வார்த்தை


ணக்கம் ண்பர்களே!
                    ஒரு சில நண்பர்கள் ஆன்மீகத்தில் ஆவலை தூண்டிவிடுகிறீர்கள் ஆனால் வழியை சொல்ல மாட்டேகிறீர்கள் என்று கேட்டனர். எத்தனையோ பதிவுகளில் வழியை சொல்லியுள்ளேன் கவனிக்காமல் விட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு குருவை அடைந்து கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளேன்.

ஆன்மீகத்தை குருவோடு இருந்து கற்றுக்கொள்ளவேண்டும். குருவின் பார்வையில் நீங்கள் இருக்கும்பொழுது மட்டுமே அனைத்தும் சாத்தியப்படும் என்று சொல்லியுள்ளேன். அனைத்தும் செய்முறை வழியில் கற்பது போல் தான் இருக்கும்.

குருவோடு இருந்து கற்கும்பொழுது நாம் தெளிவாக அனைத்தையும் இந்த உலகத்தையும் கற்கமுடியும். ஒரு முறை நானும் எனது குருவும் ஒரு கம்பெனி வழியில் சென்றுக்கொண்டிருந்தோம். அப்பொழுது அந்த கம்பெனியில் இருந்து பெண்கள் வெளியில் வந்துக்கொண்டிருந்தார்கள். எனது புத்தி அவரை வைத்துக்கொண்டே அவர் பேசிக்கொண்டு வருவதை கவனிக்காமல் விட்டுவிட்டு அந்த பெண்களை பார்த்துக்கொண்டு ம் மட்டும் சொல்லிக்கொண்டு வந்தேன். உடனே குரு ஒரு வார்த்தை சொன்னார். கறந்த இடத்தை கண் தேடுது, பிறந்த இடத்தை மனம் நாடுகிறது என்று சொன்னார். 

நான் எங்கு பால் குடித்தேனோ அங்கு எனது கண் தேடுகிறது. நான் பிறந்த இடத்தை எனது மனது நாடுகிறது என்ற சித்தரின் பாடல் வழியாக எனக்கு புரியவைத்தார். இது தான் செய்முறையில் கற்பது. எத்தனையோ விசயம் குருவோடு இருக்கும்பொழுது நாம் கற்றுக்கொள்ளமுடியும்.
 
வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் அந்த நாளில் நடக்கும் விசயத்தைவைத்து நமக்கு ஆன்மீகத்தை கற்றுக்கொடுப்பார். அதனால் தான் ஒரு குருவை நாடி கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லுகிறேன். குருவோடு இருக்கும் நாள் தான் நமக்கு அற்புதமான நாள்களாக இருக்கும்.

அந்த வார்த்தையை கேட்டுவிட்டு உடனே நான் புரிந்துக்கொண்டேன். இனிமேல் அவரை வைத்துக்கொண்டு நாம் பார்க்ககூடாது என்று தீர்மானித்துவிட்டேன். வில்லங்க சிஷ்யன் என்பது இதில் இருந்தே புரிந்துக்கொள்ளமுடியும்.  

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Thursday, March 20, 2014

குரு தசா பலன்கள் பகுதி 94



வணக்கம் நண்பர்களே!
                    ஒருவருக்கு குரு எட்டாவது வீட்டில் இருந்து குரு தசா நடைபெற்றால் அவருக்கு கண்டிப்பாக முன்னோர்களின் வழியில் உள்ள சொத்துக்கள் கிடைத்துவிடும். அரசாங்கத்தில் சேமிப்பில் உள்ள பணமும் கிடைத்துவிடும். அதே நேரத்தில் கையில் பணம் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

முன்னோர்களின் சொத்துக்கள் கிடைத்தாலும் பெரியோர்கள் சிலர் உங்களை வைத்து வேலை வாங்கிக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் உங்களை திட்டிக்கொண்டு வேலை வாங்குவார்கள். பெரியோர்களுக்கும் உங்களுக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கும்.

மரணத்தை காட்டும் இடத்தில் குரு அமர்ந்து தசா நடைபெறுவதால் உங்களுக்கு அடிக்கடி உடல்நிலையில் பிரச்சினை ஏற்படும். பேசிக்கொண்டு இருக்கும்பொழுதே திடீர் என்று மயக்கநிலைக்கு சென்று திரும்புவீர்கள். மரணம் ஏற்படாது ஆனால் நோய்வாய்ப்படும். ஒரு சிலருக்கு குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் உடல்நிலையில் நோய் ஏற்படும். நோயால் செலவு அதிகம் ஏற்படும். மருத்துவசெலவு வைக்கும்.

வேலையில் இருப்பவர்களுக்கு வேலை போய்விடும் அல்லது வேலையில் இருந்துக்கொண்டு இருந்தாலும் உங்களுக்கு பெரிய அலுவலகர்களால் உங்களுக்கு பிரச்சினை வந்துக்கொண்டே இருக்கும்.

எனக்கு தெரிந்த ஒரு பிராமணர் இருந்தார் அவர்க்கு குரு எட்டாவது வீட்டில் இருந்தார். அவருக்கு குரு தசா ஆரம்பித்த நாளில் இருந்து கருமாதிக்கு மட்டும் புரோகிதர் வேலை செய்துக்கொண்டு வருகிறார். வேறு வேலைக்கு செல்வதில்லை. அவர் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருக்கிறார். குரு அமையும் வீட்டை பொருத்து பலன்களை தரும்.
 
நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.