வணக்கம்!
ஒரு எளிய பயிற்சியை நாம் மேற்க்கொள்ளலாம் அதுவும் என்ன என்றால் இதுவரை நாம் பார்த்த விசயத்தில் இருந்தே இதனை நாம் தொடங்கலாம். உங்களின் பூஜை அறை அல்லது உங்களுக்கு பிடித்த அமைதியான இடத்தில் அமர்ந்துக்கொள்ளுங்கள். தரையில் அமர்ந்துக்கொண்டு இதனை செய்யலாம்.
ஓம் என்ற மந்திரத்தை உங்களுக்கு தெரியும். ஓம் என்று மட்டும் உங்களுக்குள் சொல்லி பாருங்கள். ஓம் என்று சொல்லுவது உங்களின் வாயில் ஆரம்பித்து அது உங்களின் வயிற்றின் அடி வரை அந்த ஓசை செல்வதும் போல இருக்கவேண்டும். ஓம் என்ற வார்த்தையை நீங்கள் வாயை மூடிக்கொண்டு கூட சொல்லலாம் அப்படி சொல்லும்பொழுது அந்த வார்த்தையை நாம் நன்றாக கவனித்தால் நமது வயிறு வரை செல்லுவதை நீங்கள் உணரமுடியும்.
நான் பழைய பதிவில் சொல்லிருக்கிறேன். உங்களின் மூச்சு காற்று உங்களின் அடி வயிறு வரை செல்லும்பொழுது மட்டுமே அது நன்றாக இருக்கும் என்று சொல்லிருக்கிறேன். இந்த மந்திரத்தை நீங்கள் சொல்லும்பொழுது கூட அது உங்களின் அடிவயிறு வரை செல்லும். இந்த இரண்டும் ஒன்றாகவே வேலை செய்வதை நீங்கள் கவனிக்கமுடியும்.
astrovanakam.blogspot.com