வணக்கம் நண்பர்களே!
நேற்று திருவாதிரை மற்றும் சதயம் நட்சத்திரத்தை எழுதியவுடன் பல நண்பர்கள் போன் செய்து என்னிடம் சார் எங்களைப்பற்றி நிறைய தகவல்களை சொல்லுங்கள் என்று சொன்னார்கள். உங்களைப்பற்றி உங்களுக்கே தெரியவில்லையா என்று கேட்டேன்.
ஒவ்வொரு நட்சத்திரம் மற்றம் ராசியை வைத்தே அனைத்தையும் சொல்லிவிடமுடியும். என்ன செய்வது எல்லாவற்றையும் சொல்லவேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது எனது நேரப்பற்றாக்குறை காரணம் முடியவில்லை. சரி இவர்களுக்கு இந்த பதிவில் மேலும் பல விபரங்களை சொல்லுகிறேன் தெரிந்துக்கொள்ளுங்கள்.
இந்த நட்சத்திரத்தை பொருத்தவரை குழந்தைகள் மாதிரி தான் இருப்பார்கள். இவர் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று தான் சொல்லுவார்கள். அப்படி ஒரு அடம் இருக்கும். என்ன மாதிரி குழந்தை என்றால் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மாதிரி இருப்பார்கள். (special child) ஸ்பெஷல் சையில்டு என்று சொல்லுவார்கள் அல்லவா அது மாதிரி.
special child களுக்கு என்று நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு எல்லாம் நான் சென்றது உண்டு. அப்படி அங்கு செல்லும்பொழுது அவர்களின் கைகளில் களிமண் உருண்டையை கொடுத்து வைப்பார்கள். அந்த குழந்தைகள் கைகள் சும்மா இருக்காது அதனை உருட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதற்க்காக கொடுப்பது உண்டு.
இந்த நட்சத்திரத்தி்ல் பிறந்தவர்கள் கைகளை கவனித்தால் ஆள்காட்டி விரலை வைத்து ஏதாவது செய்துக்கொண்டிருப்பார்கள். கை சும்மா இருக்காது காரணம் மனம் சும்மா இருக்காது. மனம் ஏதாவது செய்துக்கொண்டிருக்கும்.அடுத்ததாக இவர்களின் கண்களும் சும்மா இருக்காது. யாராவது எதையாவது நம்மை செய்துவிடுவார்களோ என்று சந்தேக பார்வை பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.மனதில் ஒருவித பயம் இருந்துக்கொண்டே இருக்கும்.
நான் இருக்கும் பகுதியில் ஒரு பெரியவர் இருந்தார் அவர் திருவாதிரை நட்சத்திரம் அவரும் நானும் கோவிலுக்கு செல்லுவது உண்டு. இது நடந்தது ஐந்து வருடத்திற்க்கு முன்பு அவரோடு கோவிலுக்கு சென்று வந்தால் கண்டிப்பாக நாம் சிரிக்க வேண்டும். ஏன் என்றால் அவர் என்னிடம் ராஜேஷ் இந்த ஐயரை பாரு சும்மா ஏதோ மந்திரத்தை சொல்லுகிறான். அவன் வாயை ஒரே குத்து குத்த வேண்டும் என்பார்.
அவர் ஏதோ சொல்லிவிட்டு போகிறார் உங்களுக்கு என்ன வந்தது என்பேன். இல்லை ராஜேஷ் ஒரு நாள் பாரு என்னிடம் நன்றாக வாங்க போகிறான் என்பார். நான் அந்த நாளில் இருந்து அவரோடு கோவிலுக்கு செல்வதை நிறுத்திவிட்டேன். இதற்கு காரணம் ராகுக்கும் குருவுக்கும் ஒற்றுவராது. ராகுவோடு நட்சத்திரத்தை உடையவர்கள் ஒரு சிலர் கோவிலை இடித்தது எல்லாம் உண்டு.
இவர்களை நாம் குறைச்சொல்ல கூடாது ஏன் என்றால் படைத்த இறைவனின் செயல் அது. இவர்களை குழந்தைகள் போல் சொல்லி சொல்லி தான் திருத்தவேண்டும். இவர்களுக்கு கொடுக்கவேண்டியது நல்ல ஆலோசனை மற்றும் ஆன்மீகசக்திகள் வைத்து இவர்களை முன்னேற்றம் அடைய வைக்கவேண்டும்.
கோபத்தை குறைக்க வழி செய்யவேண்டும். என்னிடம் எத்தனையோ பேர் இந்த நட்சத்திரத்தை உடையவர்கள் வந்து ஆலோசனை செய்துவிட்டு சென்று இருக்கிறார்கள். அவர்களை வைத்து பார்க்கும்பொழுது அவர்களால் இந்த சமுதாயத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்றே தெரிகிறது. சமுதாயத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்றால் என்ன பைத்தியம் தான். இவர்களால் வளைந்து கொடுத்து செல்லமுடியவில்லை.
இவர்களை பற்றி கடைசியாக ஒன்று சொல்லுகிறேன். இவர்கள் தூய்மையான அன்புக்கு ஏங்குகிறார்கள். அதனாலே இவர்கள் காதலில் விழுகிறார்கள். அந்த காதல் இவர்களுக்கு தூய்மையான அன்பு தருகிறதா என்றால் விதி இவர்களை காதலில் தோல்வி அடைய செய்கின்றது. ஒரு குழந்தை போல் கவனிக்கபடவேண்டியவர்கள் இவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இவர்களின் மீது அன்பை நீங்கள் வைத்தால் இவர்களை விதியின் பிடியில் இருந்து தப்பிக்க வைக்கலாம்.
மேலே சொன்ன அனைத்து தகவலும் எனது சொந்த அனுபவத்தில் இருந்து எடுத்த தகவல்கள். ஒருவர் வந்தால் அவரின் உடலை வைத்தே நாம் கணிக்கும் ஆற்றலை பெற்று இருக்கவேண்டும். அப்பொழுது மட்டுமே அவர்களுக்கு அனைத்து தீர்வையும் நாம் தரமுடியும்.
நன்றி நண்பர்களே !