வணக்கம் நண்பர்களே!
2013 ஆம் வருடத்தில் முடிந்தவரை என்னால் உங்களின் ஆத்மதிருப்திக்கு பரிமாறினேன். இந்த வருடத்தின் ஒவ்வொரு மாதத்தையும் நான் பார்த்து வரும்பொழுது அடடா இன்னமும் நிறைய பதிவுகளை நமது நண்பர்களுக்கு கொடுத்து இருக்கலாமே என்று தோன்றுகிறது.
கடந்த வருடம் அம்மனிடம் வேண்டுதல் வைத்திருந்தோம் நிறைய பதிவுகளை இந்த வருடம் தரவேண்டும் என்று அது இருந்தது. அதனை அம்மனும் நிறைவேற்றிக்கொடுத்தது என்பது உண்மை.
பதிவை கொடுத்ததை விட நல்ல நண்பர்களை அம்மன் கொடுத்தது என்பது மட்டுமே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. ஏதோ ஒரு சோதிடரிடம் சென்று ஜாதகத்தை பார்த்தோம் திரும்பி வந்தோம் என்று இல்லாமல் அனைவரும் குடும்பத்தில் உள்ள உறவினர்போல் என்னை ஏற்றுக்கொண்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஜாதககதம்பத்தின் வழியாக வந்த அனைத்து நண்பர்களும் என்னை ஒரு சோதிடராக மட்டும் பார்க்காமல் அதனையும் தாண்டி என்னை பார்த்தவிதம் மிகவும் பெரியது என்று எனக்கு தோன்றும். ஒரு சோதிடம் பார்த்தால் பணத்தை தருவதும் மட்டும் இல்லாமல் தன் கண்ணீரையும் விட்டு அழுதவர்கள் அதிகம். கடவுளிடம் மட்டுமே கண்ணீரை பெரும்பாலும் காணிக்கையாக்குவார்கள் ஆனால் என்னை பார்த்து அழுதவர்கள் இங்கு அதிகம் பேர் இருக்கிறார்கள்.
கண்ணீரை காணிக்கையாக்கிறார்கள் இவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற காரணத்தால் மட்டுமே அம்மனை பொதுவாக மாற்றி உங்களின் கோரிக்கையை தீர்த்து வைத்தேன்.
ஜாதககதம்பத்தில் எழுதப்படும் ஒவ்வொரு பதிவுகளும் எந்தவித முன் ஏற்பாடுகள் இல்லாமல் எழுதப்படுகிறது என்ன வருகிறதோ அதனை அப்படியே எழுதுவேன். ஒரு சிலருக்கு இது எரிச்சல் கூட ஏற்படலாம் என்ன இப்படி எழுதிக்கொண்டிருக்கிறார் என்று தோன்றும். நான் ஏற்பாடு செய்து டைப் செய்தால் அதில் ஒரு செயற்கை தன்மை வந்துவிடும் என்பதால் அப்படியே டைப் செய்து பதிவேற்றுகிறேன்.அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஜாதககதம்பத்தில் சோதிடம் இல்லாத ஆன்மீகபதிவுகள் அனைத்தும் மிகவும் சிக்கலான ஒரு தலைப்பு அதில் உள்ள விசயங்கள் அனைத்தும் நான் செய்து பார்த்துவிட்டு தான் உங்களுக்கு பதிவில் தருகிறேன். அதனை புரிந்துக்கொள்ளுதல் என்பது ஒரு சாதாரணநபருக்கு மிகவும் கடினமான ஒன்று.ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கு கூட புரியாத புதிராக மட்டுமே இருக்கும். அதனை தகுந்த குரு வழியாக மட்டுமே கற்றுக்கொண்டு பயிற்சியில் ஈடுபடுங்கள்.
தினந்தோறும் புதிய நண்பர்கள் வந்துக்கொண்டே இருக்கிறார்கள் அதற்கு காரணம் நீங்கள் தான் அதற்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். உங்களால் எனக்கு புதியவர்கள் அறிமுகம் கிடைக்கிறார்கள்.
தொழில் அதிபர்களைப்பற்றி சொல்லவேண்டும். ஜாதககதம்பத்தை நம்பி முதலில் பணம் போட தயங்கியவர்கள் பல பேர் இருக்கின்றார்கள். இன்று எனது கம்பெனியை எடுத்துக்கொள்ளுங்கள் என்று வருபவர்கள் அதிகம். இன்று புதிய முதலீடு செய்யும்பொழுது அவர்கள் என்னிடம் கேட்கும்வார்த்தை நீங்கள் உதவுகிறீர்கள் என்று சொன்னால் நான் எவ்வளவு பணத்தையும் போடுகிறேன் என்கிறார்கள். அந்தளவுக்கு அவர்களுக்கு நன்மை நடந்துள்ளது என்பதால் மட்டுமே இப்படி வருவார்கள் இல்லை என்றால் வரமாட்டார்கள். அவர்களும் தொடர்ந்து ஆதரவை தரவேண்டும்.
இனிவரும் வருடத்தில் நிறைய பதிவுகள் மற்றும் அனைவருக்கும் நன்மையும் தருவதற்க்கு நமது அம்மன் துணைபுரியவேண்டும். கண்டிப்பாக அது துணைபுரியும் மாதமாதம் அதற்கு பூஜை செய்பவர்கள் அதிகம்பேர் வருவதில் இருந்து தெரிகிறது.
2014 ஆவது வருடம் மிகப்பெரிய மாற்றத்தை அனைவருக்கும் கொடுக்கும். இந்தியாவின் தலைவிதியை மாற்ற ஒரு தேர்தல் வரபோகின்றது. இன்னும் பல நிகழ்வுகள் எல்லாம் நடைபெறும் காலமாக இருக்க போகின்றது. இதுவரை இருந்த மனக்கவலை எல்லாம் விட்டுவிட்டு 2014 ஆம் வருடம் நல்லவாழ்க்கை அனைவருக்கும் அமையும் என்ற நம்பிக்கையில் புதுவருடத்தை எதிர்க்கொள்ளுங்கள்.அம்மனும் உங்களுக்கு நல்லதை செய்யும்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள். நாளை பதிவு வரும் நான் அலுவலகத்தில் தான் இருப்பேன். நாளை மட்டும் சோதிடபலனை கேட்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.