Followers

Thursday, November 29, 2012

பூர்வ புண்ணியம் 1



வணக்கம் நண்பர்களே !

மனிதன் முற்பிறவியில் செய்த நல்வினை தீயவினைகளின் தன்மைகளைப் பார்த்து அதற்கு தக்கப்படி ஒவ்வொரு பிறப்பும் ஏற்படுகிறது என்பது ஜாதகத்தின் அடிப்படை விதி ஒவ்வொரு ஜாதகத்திலும் முதலில் எழுதப்படும் வாசகம் கீழே உள்ளது

ஜெனனீ ஜென்ம ஸெளக்யானாம் வர்த்தனி குலசம்பதாம் பத்வீபூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா.

இதன் பொருள் பிறப்பின் மகிழ்ச்சியை உண்டாகுவதும் குலச்செல்வத்தை விருத்தி செய்வதும் முன் நல்வினையின் வழியாக ஜெனன பத்திரிக்கை எழுதப்படுகிறது என்பது இதன் பொருள்.

சோதிடமே முன்பிறவியில் ஏற்பட்ட பாவத்திற்க்கும் நல்ல செயலுக்கும் ஏற்பட்ட பிறப்பு என்று கூறுகிறது அதனால் முற்பிறவி உண்டு என்று தீர்மானிக்கலாம். இந்து மதம் முற்பிறவி உண்டு என்று சொல்லுகிறது.

மனிதன் மூன்று நிலைகளில் வாழ்பவன்.

நனவுலக வாழ்க்கை,கனவுலக வாழ்க்கை, நனவுலக கனவுலக இல்லாத வாழ்க்கை இந்த மூன்று நிலையில் மனிதனின் வாழ்க்கை இருக்கிறது.

நனவுலக வாழ்க்கை என்பது முழுவதும் விழித்திருக்கும் நிலை இந்த உடல் என்னுடையது நான் என்பது எனது உடல் தான் என்று எண்ணிக்கொண்டு இந்த உடலுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொண்டு வாழ்கிறான்.

கனவுலக வாழ்க்கை என்பது நாம் உறங்கும் போது இந்த உடலை சார்ந்து மற்றும் பிறவி வாசனையுடன் ஏதாவது கனவு கண்டுக்கொண்டு வாழ்கிறான்.

நனவுலக கனவுலக அற்ற வாழ்க்கை என்பது இந்த உடம்பு அல்லாத புத்திகள் அற்ற வாழ்க்கையில் வாழ்வது   ஆழ்ந்த உறக்கம்.

இந்த மூன்று நிலையிலும் யாரோ ஒருவர் மட்டும் இருக்கிறார் அது நான் என்று கூட இருக்கலாம். நாம் விழித்திருக்கும் போது நனவுலக அனுபவங்களையும் கனவு கானும் போது கனவுலக அனுபவங்களையும் ஆழ்ந்து உறங்கும் போது அனுபவங்கள் அற்ற நிலையிலும் மனிதன் வாழ்கிறான்.

நனவுலக வாழ்க்கை

நான் ராஜேஷ் நான் பிளாக் எழுதுகிறேன் நான் படிக்கிறேன் நான் பேசுகிறேன் என்று நானை மட்டும் சார்ந்து விழித்துக்கொண்டிருக்கும் போது செய்யும் அனைத்து செயலையும் செய்கின்ற செயல் நனவுலக வாழ்க்கை இதில் உங்கள் உடலை மற்றும் மனதை வைத்து அனைத்து செயலிலும் ஈடுபடுவது நனவுலக வாழ்க்கை

கனவுலக வாழ்க்கை

நாம் படுத்து துங்குகிறோம் கனவு வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த கனவில் என்ன நடைபெறுகிறது இதுவரை நாம் கண்களால் பார்க்காத இடங்களையும் கேள்விபடாத இடங்களையும் மற்றும் உருவங்களையும் பார்க்கிறோம். பல சுகதுக்க அனுபவங்களையும் அனுபவிக்கிறோம். நாம் உறங்கிகொண்டு இருக்கிறோம் ஆனால் நாம் கனவு காணும் போது ஏதோ ஒரு இடத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறோம் அந்த இடத்தை நமது உடலில் இருக்கும் கண்கள் வழியாக நாம் பார்க்கவில்லை. நாம் படுக்கையில் இருந்தாலும் நாம் அந்த இடத்தைவிட்டு அசைவது கூட இல்லை ஆனால் நாம் ஓடுகிறோம் நடக்கிறோம் பல இடங்களுக்கு பயணம் செய்கிறோம்.

நாம் உறங்கும் போது நமது உடல் உறுப்புகள் ஓய்ந்து இருக்கிறது ஆனால் நாம் கேட்கிறோம் பார்க்கிறோம் நடக்கிறோம். வாசனையை உணர்கிறோம். நண்பர்களே இந்த இடத்தில் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும்.

நமது உடல் உறுப்புகள் ஓய்ந்து இருக்கிறது ஆனால் அதன் வழியாக நடைபெறும் செயல்களை நாம் அனுபவிக்கிறோம் அப்பொழுது அதனை செய்கின்ற ஒரு சக்தி மட்டும் எந்த நிலையிலும் விழிப்புடன் இருக்கிறது. உள்ளில் யாரோ ஒருவர் இதனை கவனித்துக்கொண்டு இருக்கிறார். சில நேரங்களில் உள்ளே நடைபெறும் இந்த செயல் வெளியில் உள்ள புலன்களையும் இயக்கிவிடுகிறது. தூக்கத்தில் சிறுநீர் கழிப்பது வாயால் பாட்டு பாடுவது மற்றும் நடப்பது கூட நடைபெறுகிறது.

நமது உடலில் உள்ள உறுப்புகள் வழியாக வெளியில் இருக்கும் விசங்களை உள்வாங்கிறது. உள்வாங்கும் செய்திகள் மற்றும் சூட்சமாக உடலில் இருக்கும் செய்திகளையும் கலந்து கனவாக வருகிறது, நாம் பார்த்திராத கேள்விபடாத இடங்கள் செய்திகள் வருவது நமது சூட்சம உடலில் உள்ள செய்திகள் தான். இந்த சூட்சம உடல் என்பது ஆத்மா தான். இந்த ஆத்மா பல பிறவி வாசனையை அப்படியே உள்ளே வைத்திருக்கிறது என்று தான் அர்த்தம் கொள்ளவேண்டும்.

நமது மனது இருக்கிறதே அது மிகப்பெரியது எப்படி சொல்லுகிறேன் என்றால் நாம் கண்களால் பார்க்கமுடிகிற இந்த உடம்பை கண்களால் பார்க்கமுடியாத இந்த மனது எப்படி ஆட்டி படைக்கிறது.

நமது மனதில் எண்ணங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. எண்ணங்கள் தோன்றிக்கொண்டே இருந்தால் சும்மா அப்படி இருந்துவிடுவீர்களா அதற்கு தகுந்தவாறு நாம் செயல்பட நினைப்போம். இந்த எண்ணங்கள் எப்படி தோன்றுகின்றன என்றால் முற்பிறவியில் நாம் செய்த கர்மங்களால் தோன்றுகின்றன. நாம் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கான பலனை நாம் அனுபவிக்க வேண்டும். அதற்கு வகை செய்யும் வண்ணமே எண்ணங்கள் தோன்றுகின்றன. அந்த எண்ணங்களில், இப்பிறவியில் நாம் தேடிக் கொண்ட அனுபவங்கள், வளர்த்துக் கொண்ட குணங்களின் பாதிப்பும் இருக்கும். ஆனாலும், பழைய வாசனைகளை அனுசரித்தே மனதில் எண்ணங்கள் தோன்றுகின்றன. ஆக, நம்மை, புதிதாய் காரியங்கள் செய்யத் தூண்டும் எண்ணங்களுக்கு ஆதாரமான வாசனைகளின் தொகுப்பு நமது முற்பிறவி.

இந்த எண்ணங்களை தூண்டசெய்வது நமது கிரகங்களாக கூட இருக்கலாம். இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு கேள்வி தோன்றும் இந்த எண்ணங்களை தூண்டசெய்யாமல் இருந்தால் என்ன நடக்கும் என்று கேள்வியை கேட்கலாம்.

அப்பொழுது நீங்கள் புரிந்துகொள்வீர்கள் சோதிடம் என்பது மாயை என்று தெரியவரும்.என்ன ராஜேஷ் நீங்கள் இப்படி சொல்லுகிறீர்கள் நீங்கள் சோதிடர் தானே என்று கேள்வி கேட்க தோன்றும் என்ன செய்வது நான் காட்டு கத்து கத்தி ஆன்மீக அனுபவங்களை எழுதினாலும் ஒரு ஆட்கள் கூட தேறவில்லை அதில் நீங்கள் தேறிவிட்டால் எனக்கு வேலை இல்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.



Wednesday, November 28, 2012

திருவண்ணாமலை தீப அனுபவம்



வணக்கம் நண்பர்களே !

நேற்று பதிவு எழுதமுடியவில்லை காரணம் திருவண்ணாமலை தீபத்தில் கலந்துக்கொண்டதால் எழுதமுடியவில்லை நான் அதிகாலையிலேயே எழுந்து சென்றுவிட்டேன் அதனால் எழுதமுடியவில்லை.

நேற்று பார்த்து நிறைய நண்பர்கள் எனக்கு போன் செய்து பேசினார்கள். நான் திருவண்ணாமலையில் இருக்கிறேன் என்று சொன்னவுடன் நீங்கள் பதிவில் திருவண்ணாமலை செல்வதாக சொல்லிருந்தீர்கள் என்றால் நாங்களும் வந்து இருப்போம் என்று சொன்னார்கள். 

என்னை பொருத்தவரை நான் எங்கு சென்றாலும் தனியாக தான் செல்வேன். யாரையும் கூப்பிடுவதில்லை நான் மற்றும் எனது குரு மட்டும் செல்வது வழக்கம்.

நீங்கள் நினைக்கலாம் இது சுயநலம் நீங்கள் மட்டும் செல்லுவது எப்படி என்று கேட்க தோன்றும். என்னுடன் நீங்கள் வரும்போது என்ன நினைப்பீர்கள் ஒரு சோதிடர்வுடன் செல்லுகிறோம் கண்டிப்பாக கூடியவிரைவில் முன்னேறிவிடுவோம் என்று நினைப்பீர்கள் என்னால் உங்களுக்கு எதுவும் நடக்காது அப்படி இருப்பதால் ஏன் தேவையற்ற வேலை. 

நான் உங்களுக்கு சித்தர்களை மற்றும் தெய்வங்களை காட்டும் அளவுக்கு நான் இன்னும் வளர்ச்சி அடையவில்லை. நான் அந்தளவுக்கு வளர்ச்சி அடைந்தபிறகு உங்களை எல்லாம் கூப்பிட்டு செல்லுகிறேன்.

உங்களை கூப்பிட்டு ஜாதக கதம்பம் இத்தனை நபரை கூப்பிட்டு இருக்கிறது என்று வீண் ஜம்பம் அடித்துக்கொள்ள விரும்பவில்லை. சும்மா வருவதாக இருந்தால் வரலாம் அடுத்தடவை நான் எங்கேயாவது செல்லும் போது கூப்பிடுகிறேன். 

திருவண்ணாமலை தீபத்தை பார்த்தது எல்லையற்ற ஆனந்தத்தை தந்தது. எனக்கு குரு அமைவதற்க்கு முன்னர் திருவண்ணாமலை சென்று தீபத்தை பார்த்து இருக்கிறேன் அப்பொழுது எனக்கு ஒரு எண்ணம் தோன்றும் என்னடா அக்னி தலம் என்று செல்லுகிறார்கள் அக்னி அதுவாகதானே எரியவேண்டும் இவர்களாவே பற்ற வைக்கிறார்கள் என்று நினைத்தது உண்டு. 

இயற்கையாகவே தீபம் எரிந்தால் தானே அக்னி தலத்திற்க்கு பெருமை என்று நினைத்தேன். செயற்கையாகவே மனிதர்கள் தீபத்தை ஏற்றுவது என்ன பெருமை என்று என் மனதில் தோன்றும். குரு அமைந்த பிறகு இந்த எண்ணம் தோன்றவில்லை. இப்பொழுதும் செயற்கையாகவே தான் ஏற்றுக்கிறார்கள் ஆனால் என் மனதிற்க்கு இயற்கையாகவே ஏற்றுவது போல் தோன்றுகிறது எல்லாம் குரு செய்த வேலை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Monday, November 26, 2012

ஆன்மீக அனுபவங்கள் 28



வணக்கம் நண்பர்களே !
                         என்னுடன் பேசிய நண்பர்கள் ஒரு மந்திரத்தை தவறு என்று சொல்லுகிறீர்கள் நீங்கள் அதனை செய்து பார்த்துவிட்டு தானே நீங்கள் சொல்ல வேண்டும் நீங்கள் அதனை செய்து பார்த்தீர்களா என்று என்னிடம் கேட்டார்கள்.

இவர் கேட்பதில் இருந்து தெரிகிறது. 108 நாட்கள் ஒரு மந்திரத்தை சொல்லுவது அடுத்த 108 நாட்கள் அடுத்த மந்திரத்தை எடுத்து சொல்லுவது இப்படியே போய்கொண்டு இருக்கிறது இவர்களின் மந்திர வாழ்க்கை. நான் சொல்லுவது என்ன என்றால் ஒரு மந்திரத்தை எடுத்துக்கொண்டு 108 நாட்கள் செய்தால் அந்த மந்திரத்தின் துணைக்கொண்டு நீங்கள் செய்ய சொல்லுவதை அது செய்யவேண்டும் அப்பொழுது தான் அது மந்திரபயிற்சி அப்படி இல்லை என்றால்அது பொய். இதனை செய்வதற்க்கு பதிலாக நீங்கள் சும்மா இருக்கலாம்.

நான் என்னுடைய சீடனுக்கு இதனை கற்று தருவதாக இருந்தால் ஒரு மந்திரத்தை மட்டுமே உபதேசம் செய்வேன் அந்த மந்திரசக்தியை வைத்துக்கொண்டு அனைத்து தெய்வத்தையும் எடுக்க முடியும். அந்த தெய்வங்கள் மூலம் வேலையை வாங்கவும் முடியும். சும்மா மந்திரங்கள் என்று சொல்லிக்கொண்டு இருப்பதில்லை. செயலில் இறங்கி அதனை செய்து முடித்தால் தான் மந்திரங்கள் உரு ஏறி இருக்கிறது என்று தெரியவரும். 

நீங்கள் நினைப்பது போல் சும்மா அந்த மந்திரத்தை செய்து பாருங்கள் இந்த மந்திரத்தை செய்து பாருங்கள் என்று சொல்லுவது இதனைப்பற்றி புரியாமல் சொல்லுகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஒருவருக்கு ஒரு தெய்வத்தை எடுத்தாலே போதுமானது. 

அதனை வைத்துக்கொண்டு அனைத்தையும் நீங்கள் செய்து முடித்துவிடலாம் என்பதை முதலில் நினைவில் வையுங்கள்.

ஒரு நல்ல ஆன்மீகவாதியாக இருந்தால் நீங்கள் அவரை பார்க்க சென்றால் நீங்கள் ஆன்மீகத்தில் உயர்ந்தவரா என்று அவர்களால் எளிதில் கண்டுபிடிக்கமுடியும். என்னிடம் வருபவர்கள் ஒரு மந்திரத்தை ஆறு மாதம் காலம் செய்தவர்கள் வருகிறார்கள் அவர்களிடம் அதற்க்கான ஒரு துளி முன்னேற்றம் கூட அவர்களிடம் இல்லை. 

நீங்கள் உங்கள் ஊரில் இருக்கும் ஆன்மீகவாதிகளிடம் சென்று கேட்டுப்பாருங்கள் இது உண்மை என்று தெரியவரும். என்னை நேரில் பார்க்கும் போது உங்களால் ஒன்றும் கண்டுபிடிக்கமுடியாது. என்னை நேரில் பார்ப்பவர்கள் ஆன்மீகத்தில் உள்ளவர்களிடம் இருக்கும் ஒரு அடையாளம் கூட இல்லை என்று தான் சொல்லுவார்கள் இதையே ஆன்மீகத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள் பார்த்தால் என்னை எளிதி்ல் அடையாளம் கண்டுபிடித்துவிடுவார்கள். 

நான் ஏன் இதனை  சொல்லுகிறேன் என்றால் நீங்கள் மந்திர உரு ஏற்றினால் உங்களிடத்தில் அந்த தெய்வம் இருப்பதை ஆன்மீகத்தில் இருப்பவர் அடையாளம் கண்டுபிடிக்கமுடியும். வருபவன் சாதாரணமான ஆள் கிடையாது என்று தெரியவேண்டும் அப்பொழுது தான் அது மந்திரப்பயிற்சி. இந்த ஆன்மீக அனுபவத்தில் நான் எழுதுவது மந்திர பயிற்சியில் ஒரு சதவீதம் தான் எழுதுகிறேன். சோதிடம் ஒரு கடல் என்றால் மந்திரங்கள் ஒரு கடல்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


பரிகாரம் ஏன் வேலை செய்வதில்லை?



வணக்கம் நண்பர்களே !
                                  பரிகாரம் இவ்வளவு செய்தும் ஏன் பலன் ஒன்றும் நடக்கவில்லை நாங்கள் எவ்வளவு பரிகாரம் தான் செய்வது என்று பல பேர் என்னிடம் கேட்கிறார்கள் அவர்களாக இப்பதிவை எழுதுகிறேன்.

பல பிறவியை எடுத்துதான் மனித பிறப்பு வருகிறது அந்த ஆத்மாவில் பல பிறவிகள் செய்த பாவம் ஒன்று கலந்து இந்த பிறவியில் மனிதனாக வந்து கஷ்டபடுகிறது அப்படி இருக்கும் போது நாம் செய்யும் பரிகாரம் அதற்கு சரியான பரிகாரமாக அமைவதில்லை. நாம் அனைத்து பிறவிக்கும் சேர்த்து செய்யவேண்டியுள்ளது.

நம் உடம்பில் ஒரு சொட்டு விஷம் சென்றால் அதனை எடுப்பதற்க்கு அவ்வளவு கஷ்டபடவேண்டும் அந்த விஷம் இறங்குவதில் அவன் அந்தளவு படவேண்டும் அப்பொழுது மட்டுமே அந்த விஷம் இறங்கும் அதுபோல் தான் நம் ஆத்மாவில் ஒரு பாவம் ஏற்படும் போது அதனை போக்க நாம் அவ்வளவு பரிகாரம் செய்யவேண்டும்.

இந்த ஒரே காரணத்தால் தான் நாம் செய்யும் பரிகாரங்கள் வேலை செய்யாமல் போட்டு இழுத்தடிக்கிறது. விஷத்திற்க்கு விஷம் தான் மருந்து. நீங்கள் மாந்தீரீகம் துணை கொண்டு செய்யும் போது அந்த விஷம் இறங்கும்.

பொதுவாக செய்யும் பரிகாரம் எல்லாம் அந்த ஆளை வைத்து செய்வார்கள் பெரிய பூஜை செய்து பரிகாரத்தை செய்யும் போது அந்த நபருக்கு ஒரு மனநிறைவு ஏற்படும்.

மாந்தீரீகத்தில் அதை செய்பவர் மட்டும் பரிகாரத்தை அவர் இருக்கும் இடத்தில் இருந்து செய்வார். மாந்தீரீகம் செய்பவர் பணம் ஏகாபட்டது கேட்பார்கள் இது ஆயிரக்கணக்கில் வாங்குவார்கள் சில பேர் லட்சகணக்கில் வாங்குவார்கள் அது மாந்தீரீகம் செய்பவர்களை பொருத்து வேறுபடும்.

நல்ல மாந்தீரீகம் செய்பவர்கள் செய்தால் உடனே பலன் கிடைக்கும். நான் ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லிருந்தேன் நீங்கள் பரிகாரத்திற்க்கு பணத்தை கொடுக்கும் போது ஆயிரத்தை தாண்டவேண்டாம் என்று சொல்லிருந்தேன். நீங்கள் மாந்தீரீகம் துணை கொண்டு செய்யும் போது அவர்கள் கேட்கும் பணத்தை நீங்கள் கொடுத்து தான் ஆகாவேண்டும்.

மாந்தீரிகத்தில் நீங்கள் பரிகாரம் செய்தால் அவர் நன்றாக செய்வாரா என்று பார்த்து செய்துக்கொள்ளுங்கள்.பலபேர் இதில் ஏமாற்றுகிறார்கள் அதனால் உங்களுக்கு நம்பகமானவராக இருந்தால் செய்துக்கொள்ளுங்கள்.

என்ன இவர் போய் மாந்தீரீகத்தில் பரிகாரம் செய்ய சொல்லுகிறாரே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது என்ன செய்வது உடனடி தீர்வுக்கு ஹவி டோஸ் தேவைப்படுகிறது அப்படி தேவைப்படும் நேரத்தில் செய்துக்கொள்ளலாம்.

பொறுமையாக நடக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் வழிபாட்டு முறையை பின்பற்றலாம். நன்றி நண்பர்களே.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.




Sunday, November 25, 2012

கோ தானம்



வணக்கம் நண்பர்களே !

                                          என்னிடம் ஒரு நண்பர் இன்று காலையில் தொடர்புக்கொண்டு பேசினார் அப்பொழுது அவர் நீங்கள் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வாக ஒரு பரிகாரத்தை சொல்லுங்கள் என்று கேட்டார் அவரிடம் சொன்னதை உங்களுக்கும் சொல்லுகிறேன் உங்களால் முடிந்தால் வாழ்க்கையில் ஒரு தடவையாவது இதனை செய்யுங்கள்.

நமக்கு வரும் இன்னல்கள் முக்கால்வாசி நமது முன்ஜென்ம வினையில் இருந்து தான் வருகிறது அதனையும் தீர்க்க வேண்டும் அதே போல் இந்த ஜென்மத்திலும் அறிந்து மற்றும் அறியாத செய்த பாவத்தில் இருந்து நம்மை விடுவித்து நாம் நல்ல நிலையை அடையவேண்டும். 

தானம் அளிப்பது தான் சிறந்த வழி. தானங்களில் பல வகை தானங்கள் இருக்கின்றன இப்படி பலவகை தானங்கள் இருந்தாலும் கோ தானத்திற்க்கு ஈடு இணையாக வேறு எந்த தானமும் இருக்கமுடியாது. 

கோ தானம் செய்தால் நம் முன்னோர்களை மோட்சத்திற்க்கு அனுப்புவதாக சொல்லியுள்ளார்கள் அவ்வாறு தானம் செய்யும் போது நம் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கிறது. சோதிடத்தில் ஏற்பட்ட எப்பேர்பட்ட தோஷமும் இதனால் கரையும். பசுவை தானம் செய்யும் போது அதனை நன்கு பராமரிப்பவர்களாக பார்த்து தானம் செய்யவேண்டும் ஒரு வருட காலத்திற்க்கு தேவையான பராமரிப்பு செலவு மற்றும் உணவை அதை பெறுபவர்களிடம் நீங்கள் கொடுத்தால் இன்னும் வெகுசிறப்பு.

அன்னதானம் மற்றும் வேறுவகை தானமாக இருந்தால் இல்லாதவர்களுக்கு நீங்கள் கொடுக்கலாம் ஆனால் நீங்கள் பசு தானம் செய்தால் அவர்களுக்கு அதை பராமரிக்க சக்தி அவர்களுக்கு இருக்கிறதா என்று பார்த்து தானம் செய்யவேண்டும்.

நம்ம ஆட்கள் எந்த ஒரு செயலிலும் வித்தியாசமாக திறமையாக இருப்பார்கள் பசு தானம் என்று சொன்னவுடன் வயதான அல்லது பால் கறவை இல்லாத அல்லது கன்று இல்லாத பசுவாக வாங்கி கொடுத்துவிடுவார்கள் அவ்வாறு செய்வது தவறு. பசு தானம் செய்ய என்று முடிவு எடுத்துவிட்டால் நல்ல பசுவாக கன்றுடன் கூடிய பசுவை தானம் செய்யவேண்டும்.

பசுவை தானம் செய்தால் ஒருவர் தனது முன் ஏழு பின் ஏழு தலைமுறையினர் மோட்சத்திற்க்கு போக வழி செய்கிறார் நாம் அறியாமல் செய்த பாவங்களும் விலகுகிறது.

என்ன நண்பர்களே நீங்களும் கோ தானம் செய்து நல்ல பயனை பெறுங்கள். நன்றி நண்பர்களே.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ஆன்மீக அனுபவங்கள் 27



வணக்கம் நண்பர்களே !
 நான் அடிக்கடி ஆன்மீகத்தில் நல்ல நிலையில் இருப்பவர்களே சந்திக்க வெளியூர் செல்வது உண்டு பல நாட்களாக அப்படி செல்லவில்லை இப்பொழுது தான் அவர்களை சந்திக்க சென்றேன் அவர்களை சந்தித்ததில் நல்ல மன நிறைவை பெற்றேன். 

ஒரு குறை உங்களுக்கு பதிவை எழுதாமல் விட்டுவிட்டேன் ஒரு நாள் மட்டும் எழுதமுடிந்தது. பிறகு மலைகளில் ஏறவேண்டியதால் உங்களை சந்திக்கமுடியவில்லை நமது நண்பர்கள் இஷ்டதெய்வத்தை எடுப்பதைப்பற்றி நிறைய நண்பர்கள் தொடர்ந்து போன் செய்துக்கொண்டிருந்தார்கள். 

அவர்களுக்கு தெளிவான விளக்கத்தை கொடுப்பதற்க்காக இப்பதிவை எழுதுகிறேன்.

நண்பர்களே நீங்கள் ஆன்மீகத்தில் உயரவேண்டும் என்றால் ஏதாவது ஒரு தெய்வத்தை எடுப்பது நல்லது, ஏன் அவ்வாறு நான் சொல்லுகிறேன் என்றால் நீங்கள் அனைவரும் இல்லறவாழ்க்கையில் இருப்பவர்கள் உங்களுக்கு தினமும் பிரச்சினைகள் வந்து கொண்டு இருக்கும். அந்த பிரச்சினைகளை சமாளிக்க இது உதவும். 

நீங்கள் யோக தியானம் கற்கலாம் தவறு இல்லை அப்படி கற்றுக்கொள்ளும் போது உங்களின் உடல் நிலை நன்றாக இருப்பது போல் தோன்றும் ஆனால் உங்களின் பிரச்சினைக்கு அது தீர்வாகாது. இன்று அனைவரும் வெளியில் சொல்லும் போது நான் யோகா செய்துக்கொண்டு இருக்கிறேன் என்று வெளியில் ஆடம்பரமாக சொல்லிக்கொள்கிறார்களே தவிர உண்மையில் முழுமையாக யோகாவைப்பற்றி தெரிந்துக்கொள்ளவில்லை என்று தான் தோன்றுகிறது. 

இந்த யோகாவை பயிற்றுவிப்பவர்களும்  பணத்தை தான் சம்பாதிக்கிறார்களே தவிர உண்மையான யோகாவின் அனுபவத்தை தருவதில்லை என்று தான் சொல்லவேண்டும் யோகாவை கண்டுபிடித்த பதஞ்சலி எப்படி இருந்திருப்பார் என்று நினைத்து பார்த்தால் அவர் ஏதாவது ஒரு காட்டில் கஷ்டப்பட்டு இதனை கண்டுபிடித்து கொடுத்திருப்பார்.

நம் ஆட்கள் அதனை வியாபாரம் செய்து கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்துக்கொண்டு சொசுகு வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள் இதனை ஏன் உங்களுக்கு சொல்லுகிறேன் என்றால் உண்மையை சொல்லிக்கொடுக்கும் போது அதற்கு எவரும் பணத்தை வாங்கிக்கொண்டு செய்யமாட்டார்கள் பொய்யை கலந்தால் தான் வியாபாரம் செய்யமுடியும்.

ஒரு நண்பர் பேசும்போது சொன்னார் ஏதோ ஒரு ஊரில் மந்திரபயிற்சி கற்று தருகிறார்கள். அவர்கள் கட்டணத்தையும் சொல்லியுள்ளார்கள் ஒரு நாள் பயிற்சி என்றும் அதற்கு நோட் எல்லாம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றும் சொல்லியுள்ளார்கள் நான் போகாலாமா என்று கேட்டார். 

ஒரு நாள் முதல்வர் மாதிரி ஒரு நாள் குருவாக இருந்து உங்களுக்கு சொல்லிதரவுள்ளார். கண்டிப்பாக இதில் எந்தவித முன்னேற்றமும் இருக்காது உங்களின் பணம் மற்றும் நேரம் தான் விரையம் ஆகும். இது உங்களை ஏமாற்றும் வேலை எச்சரிக்கையாக இருங்கள்.

நான் பலமுறை சொல்லியுள்ளேன் எந்த ஒரு கொடுர அம்மனை அல்லது சிவனை எடுக்காதீர்கள் என்று சொன்னேன் ஆனால் நீங்கள் அதனை மறந்து காளியை எடுக்கிறேன் காலபைரவரை எடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள் ஒரு சாந்தமான அம்மனை எடுத்துக்கொள்ளுங்கள்.

நல்ல குரு இல்லாமல் செய்வது கடினம் ஏன் இதனை பலமுறை சொல்லுகிறேன் என்றால் அவர் தான் உங்களுக்கு எல்லாம் என்று தான் சொல்லவேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வைத்தார்கள் ஏன் தெரியுமா மாதா உங்களை பெற்றவள் அவளால் தான் இந்த பூமிக்கு வந்தீர்கள் அவளை ஒருபோதும் நீங்கள் மறக்கமுடியாது. தொப்புள் கொடி உறவு அது. அது இல்லை என்றால் நீங்கள் இல்லை. மாதா இது தான் உன் தந்தை என்று சொன்னால் தான் அது உனக்கு உறவு. இரண்டாவது இடத்தில் பிதா. மூன்றாவது இடத்தில் குரு. குரு உங்களை தயார்படுத்தி இது தான் உலகம் இது தான் கடவுள் என்று காட்டினால் தான் நீங்கள் கடவுளை அடையமுடியும். 

நான் உங்களுக்கு சொல்லியுள்ளேன் குருவை பார்த்து தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன் ஆனால் குருவை தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் கண்டிப்பாக அவரைப்பற்றி தெரிந்துகொள்வது கடினம். ஏன் சொல்லுகிறேன் என்றால் உங்களால் அவருக்கு ஒன்றும் ஆகாபோறதில்லை அவரால் தான் உங்களுக்கு நல்லது நடக்கும். நீங்கள் அவரை சோதனை செய்கிறேன் என்று ஏதாவது கேட்டுக்கொண்டு இருந்தீர்கள் என்றால் அவர் நீ உன் வழியை பார்த்து போய்கொண்டு இரு நான் என்வழியை பார்த்துக்கொண்டு செல்கிறேன் என்று உங்களை அனுப்பிவிடுவார். 

ஒரு குரு என்பவர் உங்களுக்கு அவ்வளவு எளிதில் மாட்டமாட்டார் அவர் மாட்டிவிட்டார் என்றால் நீங்கள் கொடுத்துவைத்தவர் தான் என்ன நண்பர்களே நான் சொன்னது சரிதானே?.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.





Thursday, November 22, 2012

ஆன்மீக அனுபவங்கள் 26


வணக்கம் நண்பர்களே!
                                        ஆன்மீக விசயமாக வெளியூரில் இருக்கிறேன் இங்கு ஏதோ ஒரு நெட் சென்டரில் இருந்து உங்களை தொடர்புக்கொள்கிறேன். உங்களை இப்பொழுது ஒரு நாள் கூட ஏமாற்றகூடாது என்று நினைக்கிறேன் அதனால் வேலையின் இடையில் தேடி இந்த இணைப்பை பெற்றேன் கூடிய விரைவில் சென்னை வந்துவிடுவேன் அங்கு வந்து பூர்வபுண்ணியத்தைப்பற்றி எழுதுகிறேன் அதுவரை பொறுமை காக்கவேண்டுகிறேன்.

நான் வெளியூரில் இருந்தாலும் தொடர்ந்து போன்கால்கள் வந்து கொண்டு இருக்குகிறது. அவர்களில் மந்திரத்தைப் பற்றி சில பேர் கேட்டார்கள் அதற்காக இந்த அவசர பதிவு நீங்கள் மந்திரங்கள் கற்றுக்கொள்ளுவது தவறு இல்லை ஆனால் நீங்கள் அனைவரிடமும் பாசத்துடன் நடந்துக்கொள்ள வேண்டும் ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால் இதை கற்பதற்க்கு நீங்கள் பல வழிகளிலும் முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறீர்கள் இதில் பேசிய நபர்கள் என்னிடம் சொல்லும் போது அனைத்து நபர்களும் ஏதோ ஒரு பயங்கரசக்தியுள்ள அம்மனை எடுக்கிறேன் என்று சொன்னார்கள் இது தவறான தேர்வு என்று தான் சொல்ல வேண்டும் ஏன் என்றால் நீ்ங்கள் குடும்பவாழ்க்கை வாழ்பவர்கள் இதனை எடுத்துக்கொண்டு உங்களால் குடும்பத்தை நடத்தமுடியாது அதை போல் நீங்கள் சொல்லும் குருக்கள் எல்லாம் எந்தளவுக்கு உங்களுக்கு உதவி செய்வார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

என்னை பொருத்தவரை நீங்கள் என்ன தான் திட்டினாலும் எனக்கு கோபம் வராது என்னிடம் அன்பை மட்டும் தான் நீங்கள் பார்க்கலாம் அதனால் என்னிடம் கற்பவர்கள் எத்தனை கோபபட்டாலும் அவர்களை தன் வசம் ஆக்கி அவர்களுக்கு நல்ல வழியை காட்டிவிடுவேன் ஆனால் நீங்கள் சொல்லும் குருக்கள் எந்தளவு அன்பை செலுத்துவார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. நீங்கள் அனைவரிடமும் அன்பு செலுத்தமுடியும் என்றால் எங்கு வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளுங்கள்.

இதனை கற்பதற்க்கு முதல் தகுதி அனைவரிடமும் அன்பு செலுத்தவேண்டும் இந்த ஒன்று மட்டும் அடிப்படை தகுதி உங்களுக்கு இருந்தால் நீங்கள் எந்த தெய்வத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இந்த செயல் அனைத்தும் குருவிடம் தான் இருக்கிறது ஏதாவது காசு வாங்கிக்கொண்டு செய்பவர்கள் கண்டிப்பாக உங்களை காப்பாற்ற மாட்டார்கள் என்பதை இப்பதிவில் வழியாக சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன்.

நீங்கள் கோபபட்டு குரு அன்பு வடிவமாக இருந்தால் கண்டிப்பாக உங்களை காப்பாற்றுவார். இதைப்பற்றி சென்னை திரும்பியதும் விளக்கமாக பதிவை போடுகிறேன். நன்றி நண்பர்களே

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Wednesday, November 21, 2012

பூர்வ புண்ணியம்



வணக்கம் நண்பர்களே !
                                   இரு தினங்கள் முன்பு என்னிடம் ஒரு நண்பர் பேசினார். அப்பொழுது அவர் நான் மிகப்பெரிய சோதிடபரம்பரையில் இருந்து வந்தவன் நான் ஒரு பெரிய கம்பெனியில் வேலை செய்து இன்று அந்த வேலை பிடிக்காமல் அதை விட்டுவிட்டேன். இப்பொழுது சோதிடத்தின் மீது எனக்கு அளவுகடந்த விருப்பம் வந்துவிட்டது என்றும் சொன்னார்.

நண்பர் பேசிக்கொண்டு இருக்கும் போது நான் பல புத்தகங்கள் படித்து இருக்கிறேன் ஆனால் பூர்வ புண்ணியத்தைப்பற்றி யாரும் அந்தளவு எழுதவில்லை ஒரளவுக்கு தான் எழுதியுள்ளார்கள் என்றும் சொல்லிருந்தார். அப்பொழுதே நான் அவரிடம் நான் அடுத்து அதனைப்பற்றி தான் எழுத உள்ளேன் என்று சொல்லிருந்தேன். அவரும் நீங்கள் எழுதுங்கள் என்றும் சொன்னார்.

எனது ஆஸ்திரிலியா நண்பர் ஒருவரும் கேட்டு இருந்தார் எப்படி பூர்வபுண்ணியத்தைப்பற்றி சொல்லுகிறீர்கள் அதனை எப்படி பார்ப்பது என்றும் கேட்டு இருந்தார் அவரின் விருப்பத்தையும் அவர்கள் மூலம் உங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றலாம் என்று பூர்வபுண்ணியத்தைப்பற்றி எழுத உள்ளேன்.

பூர்வபுண்ணியத்தை நான் பார்க்கும் போது அந்த வீட்டை பார்த்தவுடனே என் மூளையில் தானாகவே தோன்றிவிடும். அதனை வைத்து நான் பலன் பார்க்கிறவர்களுக்கு சொல்லிவிடுவேன். பொதுவாக முன்பிறவியி்ல் அப்படி இருந்தீர்கள் இப்படி இருந்தீர்கள் என்று சொல்லமாட்டேன்.

பூர்வபுண்ணியத்தைப் பார்த்து இப்பொழுது இந்த மாதிரி பிரச்சினை வரும் என்று சொல்லிவிட்டு பூர்வபுண்ணியத்திற்க்கு தகுந்தமாதிரி பரிகாரத்தை செய்ய சொல்லுவேன் என்னுடைய பரிகாரங்களே பூர்வபுண்ணியத்தில் ஏற்பட்ட பாவத்திற்க்கு வடிகாலாக தான் இருக்கும். அப்பொழுது அவர்களுக்கு பிரச்சினைகள் குறையும்.

பொதுவாக நேரடி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இது சாத்தியப்படும் ஏன் என்றால் இந்த பூர்வபுண்ணியத்தை பற்றி பார்க்கும் போது அந்த நபர் நமக்கு எதிராக அமரும் போது சரியாக வரும்  என்பதால் நேரடி வாடிக்கையாளருக்கு இது சாத்தியப்படும். தொலைபேசியில் பேசும் போதும் சொல்லலாம் ஆனால் அது கொஞ்சம் கடினமாக இருக்கிறது.

பூர்வபுண்ணியத்தை பொருத்தவரை ஐந்தாம் வீட்டை வைத்து தான் பார்க்கிறோம் அப்படி பார்க்கும் போது நான் நினைப்பது சரி தானா என்று நினைப்பேன் அப்பொழுது எனது குருநாதர் அல்லது என்னுடைய இஷ்டதெய்வம் அல்லது குலதெய்வம் அதற்கு உறுதிகொடுக்கும் நீ நினைத்தது சரிதான் என்று சொல்லும் அதை நான் சொல்லும் போது 100 சதவீதம் உண்மையாக இருக்கும். 

இதனைப்பற்றி நான் வெளியில் சொல்லுவதில்லை. எனக்கு தெரியும் அவர்களுக்கு நான் கொடுக்கும் பரிகாரம் சரியாக இருக்கும். நீங்கள் அனைவரும் சோதிடத்தின் மீது அதிகமான விருப்பத்துடன் படிக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். பொதுவாக சோதிடத்தில் பலனை சொல்லி அதனை அடுத்தவருக்கு நடக்கும்போது மட்டுமே நமக்கு தெரியவரும் நாம் எந்தளவுக்கு போய்கொண்டு இருக்கிறோம் என்று தெரியும்.

சோதிடத்தை தொழிலாக செய்யும் போது உங்களுக்கு நல்ல திறமை இருக்கவேண்டும் அப்பொழுது மட்டுமே வெற்றி பெறலாம். நீங்கள் தமிழ்நாட்டில் மட்டும் சோதிடத்தை பார்ப்பதாக இருந்தால் சோதிடத்தை சும்மா படித்துவிட்டு பலனை சொல்லலாம் ஆனால் சோதிடத்தை வெளிமாநிலங்களில் நீங்கள் சொல்லும் போது உங்களுக்கு அதிக திறமை வேண்டும்.

கல்கத்தாவில் மட்டும் ஒருவன் ஒரு வருடம் சோதிட தொழில் செய்தால் அவனை எங்கும் எவனாலும் வெல்லமுடியாது அந்தளவுக்கு அறிவு வரும் ஏன் என்றால் கல்கத்தா மாந்தீரிகத்திற்க்கு பெயர் போன நகரம் நீங்கள் சாதாரணமாக அங்கு சென்று தொழில் செய்யமுடியாது. உங்களிடம் மிகப்பெரிய சக்தி இருந்தால் அங்கு நிலைக்கமுடியும். 

இதை எல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால் உங்களுக்கு பூர்வ புண்ணியத்தைப்பற்றி அதிக தெரிவதற்க்கு உங்களிடம் நல்ல குரு வேண்டும் உங்களிடம் இஷ்டதெய்வம் நல்லமுறையில் இருக்கவேண்டும் குலதெய்வ அருள் வேண்டும் அப்பொழுது மட்டுமே சாத்தியப்படும்.

ஒரு சிலர் ஆழ்நிலை தியானத்தில் இதனை கண்டுக்கொள்வார்கள். இது நமக்கு ஒத்துவராது. ஏன் என்றால் வாடிக்கையாளரை வைத்துக்கொண்டு தியானம் செய்து சொல்கிறேன் என்றால் ஒருவரும் வரமாட்டார்கள். நமக்கு எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் சொல்கிற திறமை வேண்டும்.

பூர்வத்தைப்பற்றி சொல்லமுடியாது என்று அனைவரும் சொல்வார்கள் ஆனால் அதனை சொல்லமுடியும்.  அதற்கு நீங்கள் கடுமையான பயிற்சி செய்து இருக்கவேண்டும். 

பூர்வபுண்ணியம் உண்டா என்ற சந்தேகம் வருகிறது. பூர்வபுண்ணியத்தை பற்றி இந்து மதத்தில் என்ன சொல்லியுள்ளார்கள் என்று நாம் அறிவதற்க்கு முன்னால் ஆன்மீகத்தைப்பற்றி நன்றாக தெரிந்துக்கொண்டு இந்த ஐந்தாம் வீட்டை பார்த்தால் நன்றாக உங்களுக்கு புரியும்.


நான் வெளியூர் செல்வதால் சனிக்கிழமை வரை பதிவுகள் எழுதமுடியாது என்று நினைக்கிறேன். நான் செல்கின்ற ஊரில் நெட் வசதி இருக்கும் பட்சத்தில் அந்த ஊரில் இருந்து பதிவுகளை தருகிறேன். நன்றி நண்பர்களே.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


Tuesday, November 20, 2012

சுய ஜாதக குறிப்பேடு



வணக்கம் நண்பர்களே !
                     அனைவருக்கும் பிறந்த நேரத்தில் ஒரு சோதிடரை வைத்து ஜாதகம் எழுதி இருப்பீர்கள் அந்த ஜாதகத்தை நீங்கள் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் ஏன் என்றால் உங்களின் ஜாதகத்தில் கடுமையான தோஷம் ஏற்படும் போது அந்த ஜாதகத்தை எடுத்துக்கொண்டு பரிகாரம் செய்யும் போது அதனை நீங்கள் எந்த கோவிலாக இருந்தாலும் அந்த கோவில் மூலவரின் காலில் வைத்து வணங்கும்போது உங்களின் வேண்டுதல் நிறைவேறும்.

இப்பொழுது அனைவரும் கம்யூட்டரில் ஜாதகம் கணிக்கிறார்கள் தவறு இல்லை ஆனால் அதனை பிரிண்ட் எடுக்காமல் அதனை நீங்கள் கையில் எழுதிக்கொள்ளுங்கள் ஏன் அவ்வாறு சொல்லுகிறேன் என்றால் கையில் எழுதும் போது அந்த ஜாதகத்திற்க்கு உயிர் இருக்கும்.

இப்பொழுது அனைவரும் திருக்கணித பஞ்சாங்கத்தை வைத்து ஜாதகத்தை எழுதிக்கொள்கிறார்கள் ஒரு சிலர் வாக்கிய பஞ்சாங்கத்தை வைத்து எழுதுகிறார்கள் உங்களுக்கு நடப்பில் எது நடக்கிறதோ அதனை வைத்து எழுதிக்கொள்ளுங்கள் கோவில்களில் வாக்கிய பஞ்சாகத்தை வைத்து தான் திருவிழாகள் கிரகங்களின் பெயர்ச்சிகள் நடத்துகிறார்கள் எது உண்மை என்று ஆராய்வதை விட்டுவிட்டு உங்களுக்கு எது ஒத்து வருகிறதோ அதனை வைத்து எழுதிக்கொள்ளுங்கள். 

நான் ஷேர்மார்க்கெட் கணிப்பதற்க்கு திருக்கணித பஞ்சாங்கத்தை வைத்து தான் கணித்துக்கொள்கிறேன். து்ல்லியமாக வருகிறது. ஏன் இதை நான் சொல்லுகிறேன் என்றால் பங்கு மார்க்கெட்டை பொருத்தவரை ஒவ்வொரு நொடியும் முக்கியமானது. பங்கு மார்க்கெட் பல வழிகளிலும் கணிப்பார்கள். நான் ஷேர்மார்க்கெட்டுக்கு திருக்கணிதத்தை பயன்படுத்துகிறேன்.

உங்களின் ஜாதகத்தை உயிரோட்டமாக வைத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் போது அந்த ஜாதகத்தை உங்களின் குலதெய்வத்தின் காலடியில் வைத்து வேண்டினால் உங்களின் பிரச்சினை தீரும்.

நீங்கள் கம்யூட்டரில் பிரிண்ட் எடு்த்து இருந்தாலும் அதனை ஒரு நோட்டில் நீங்கள் எழுதிவைத்துக்கொள்வது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


ஆன்மீக அனுபவங்கள் 25



வணக்கம் நண்பர்களே !
                         
சோதிடம் வழியாக இப்பதிவில் ஆன்மீக அனுபவங்களை பார்க்கலாம்.

பொதுவாக எந்த ஒரு ஜாதகத்திற்க்கும் லக்கனாதிபதி என்பவர் முக்கியமாகபடுகிறார் அவர் நல்ல நிலையில் இருக்கும் போது அனைத்தும் கிடைத்து விடும் அப்படி அவர் நல்ல நிலையில் இல்லை என்றால் அவர்கள் போராட்டமான வாழ்க்கை வாழவேண்டிவரும்.

நாம் பார்க்கபோவது லக்கனாதிபதி எட்டில் இருந்தால் ஆன்மீக வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்க்க போகிறோம். சாதாரண வாழ்க்கைக்கு லக்கனாதிபதி நல்ல இருக்க வேண்டும் ஆனால் ஆன்மீக வாழ்க்கைக்கு லக்கனாதிபதி கெட்டு இருக்க வேண்டும். லக்கனாதிபதி எட்டில் இருப்பவர்கள் ஆன்மீக வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்திற்க்கு செல்வார்கள்.

நான் பல சந்தியாசிகள் மற்றும் மகான்களின் ஜாதங்களை ஆராய்ந்து பார்க்கும் போது அனைவருக்கும் லக்கனாதிபதி எட்டாவது வீட்டில் அமர்ந்து இருப்பதை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். 

எட்டாவது வீடு என்பது நமக்கு வரும் மரணத்தை சுட்டிக்காட்டும் இடம் என்பதால் அதில் லக்கானதிபதி அமரும்போது அவர்கள் மரணத்தை வெல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள்.அதனால் அவர்கள் இந்த வழியில் சென்று மிக உயர்நத நிலையை அடைக்கிறார்கள். 

எட்டாவது வீடு என்பது மறைப்பொருளைப்பற்றி தெரிவிக்கும் இடம் என்பதால் அவ்வாறு நிகழ காரணமாக இருக்கிறது. யாருக்கும் தெரியாததைப்பற்றி இவர்கள் தன் ஆராட்சியால் கண்டுக்கொள்கிறார்கள்.

இவர்கள் சொல்லும் ஆன்மீக வழி 100 சதவீதம் உண்மையாக இருக்கும் நான் கூட பல சந்சியாசிகளின் ஜாதகங்களை பார்த்து இருக்கிறேன். ஓஷோவின் ஜாதகத்தில் கூட லக்கினாதிபதி எட்டில் அமர்நது இருக்கிறார்.

சில சாதுக்கள் சுடுகாட்டில் நின்று கொண்டு தவம் செய்வார்கள் அவர்களின் ஜாதங்களிலும் லக்கனாதிபதி எட்டில் சம்பந்தபட்டு உள்ளது. இதை நான் பல பேர்களி்ன் ஜாதங்களை கேட்டு அறிந்துக்கொண்டேன்.

லக்கனாதிபதி எட்டில் இருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு சுடுகாடு சம்பந்தம் இருக்கும். என்ன லக்கனாதிபதி எட்டில் இருப்பவர்களுக்கு அவர்களின் முகத்தில் பொழிவு இருக்காது ஏதோ சோகத்தில் இருப்பவர்கள் போல் இருப்பார்கள் அவர்கள் ஆன்மீகவாழ்க்கைக்கு வந்த பிறகு அப்படி ஒரு கடவுள் தன்மையை அவர்களின் முகத்தில் நீங்கள் பார்க்கலாம்.

நண்பர்களே லக்கனாதிபதி எட்டில் இருப்பவர்கள் வாழ்க்கையில் சிறு கஷ்டம் ஏற்பட்டாலும் அவர்கள் ஆன்மீகத்தில் சொர்க்கத்தை அனுபவிக்க பிறந்தவர்கள். உங்களின் வாழ்க்கையை எளிதில் மாற்றிக்கொள்ளலாம்.

நீங்களே நான் சொன்னதை ஆராய்ச்சி செய்து பார்த்தால் தெரியும். லக்கனாதிபதி எட்டில் இருப்பவர்கள் அடுத்தவருக்கு ஆனந்தத்தை தருவதற்க்கு படைக்கப்பட்டவர்கள். இவ்வளவு ஏன் லக்கனாதிபதி எட்டில் இருப்பவர்கள் என் இதயத்தில் இருப்பவர்கள். ஏன் சொல்லுகிறேன் தெரியுமா உண்மையான ஆன்மீகம் என்ன என்று இவர்களுக்கு தான் தெரியும்.

நன்றி நண்பர்களே


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.



தெய்வம் இருப்பது எங்கே?



வணக்கம் நண்பர்களே!
                                      நேற்று ஒரு நண்பர் என்னிடம் பேசினார் இருவரும் பல கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம். 

இருவரும் பேசிக்கொள்ளும் போது அவர் என்னிடம் சொன்னார் நீங்கள் ஆன்மீகத்தைப்பற்றி எழுதுகிறீர்கள். நீங்கள் கடவுளை பார்த்தது உண்டா என்று கேட்டார். அதற்க்கு நான் ஆமாம் பார்த்து இருக்கிறேன் என்றேன். அப்படியானால் அவர் எப்படி இருப்பார் என்றார் அவர் எங்கு இருக்கிறார் என்று கேட்டார். என் நண்பருக்கு குழந்தை இருக்கிறது உன் குழந்தையாக உன் வீட்டில் இருக்கிறார் என்றேன். உடனே அவர் ஒத்துக்கொண்டார். 

அவர் என்னை விடவில்லை குழந்தைகள் இல்லாத வீட்டில் எப்படி இருப்பார் என்று கேட்டார் அந்த வீட்டில் உள்ளவர்கள் குழந்தை போல் மாறினால் கடவுள் இருப்பார் என்றேன். 

உங்களும் இது தான் தகவல் உங்களின் குழந்தைகள் தான் கடவுள். மேலே இருக்கும் புகைபடத்தில் எனக்கு கடவுள் தெரிகிறார். உங்களுக்கு தெரிகிறதா என்று பார்த்துச்சொல்லுங்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
 

Monday, November 19, 2012

ஓலைச்சுவடிகள்



வணக்கம் நண்பர்களே !
                                          நாம் எல்லோரும் சோதிடர்கள் நமக்கு ஓலைச்சுவடிகள் பற்றி சிறிது அறிவு இருக்கவேண்டும். அந்த காலத்தில் ஜாதகம் எல்லாம் ஓலைச்சுவடிகளில் தான் எழுதி வைத்தார்கள். 

ஓலைச்சுவடிகளில் உள்ள ஜாதகத்தை இன்னும் சில கிராமங்களில் வைத்திருக்கிறார்கள் அதை எல்லாம் நான் பார்த்து பலன் சொல்லியுள்ளேன். இந்த காலத்தில் அனைத்தும் கம்யூட்டர் ஜாதகம் தான் இருந்தாலும் ஒரு சில சோதிட நுல்கள் எல்லாம் ஓலைச்சுவடிகளில் உள்ளன. நீங்களும் ஓலைச்சுவடிகளைப்பற்றி அறிந்துக்கொள்ளுங்கள். 

தமிழ்நாடு அரசு ஓலைச்சுவடிகளை பாதுகாப்பாக வைத்து பராமரித்து வருகிறது. ஓலைச்சுவடிகள் கருத்து அரங்கையும் ஏற்பாடு செய்து சான்றிதழ் வழங்குகிறது. இது எல்லாம் அவ்வப்போது செய்திகளை வெளியிடும். அதில் நீங்கள் கலந்துக்கொண்டு நீங்களும் பயன் அடையுங்கள். அடுத்தமுறை நடைபெறும் போது உங்களுக்கு அறிப்பை தருகிறேன் நீங்களும் கலந்துக்கொண்டு சான்றிதழ் பெற்று சிறந்த ஓலைச்சுவடிகள் நிபுணராக ஆவதற்க்கு எனது வாழ்த்துக்கள். 

ஓலைச்சுவடிகளைப்பற்றி வலைதளத்தில் படிப்பதற்க்கு இந்த தளத்தை கிளிக் செய்து பாருங்கள் 



சுவடிக் காட்சியகத்தை(Manuscript Gallery) கிளிக் செய்தால் சுவடிகள் தலைப்பு வரும் அதில் உங்களுக்கு விருப்பட்டதை தேர்ந்தெடுத்து படியுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
 

ஆன்மீக அனுபவங்கள் 24



வணக்கம் நண்பர்களே !
                   நமது நண்பர்கள் அனைவரும் குரு கிடைக்கவில்லை என்று சொல்லிருந்தீர்கள். எனக்கும் அது கவலையாகதான் இருந்தது அதனால் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அதனை உங்களிடம் பகிர்த்துக்கொள்ள விருப்படுகிறேன்.

திருவண்ணாமலையில் இந்த மாதம் கார்த்திகை தீபம் வருகிறது. இந்த தீப திருநாள் அன்று ஏகாப்பட்ட பக்தர்கள் வருவார்கள். இதில் கலந்துக்கொள்வதற்கே புண்ணியம் செய்து இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இந்த தீபத்திற்க்கு மக்களோடு மக்களாக பல சாமியார்களும் வருகிறார்கள். அவர்களை நீங்கள் தொடர்புகொண்டால் நீங்கள் தேடிய குரு அங்கு கிடைக்கலாம்.

பொதுவாக அவ்வளவு எளிதில் அவர்களை நீங்கள் அடையாளம் காண்பது அரிது ஆனால் அந்த அண்ணாமலையான் புண்ணியத்தில் உங்களுக்கு கிடைப்பதற்க்கு வாய்ப்பு இருக்கிறது.

நீங்கள் பக்தியுடன் அந்த அண்ணாமலையாரை அணுகும் போது உங்களுக்கு அந்த அண்ணாமலையார் ஏதாவது ஒரு நல்லவழியை காட்டுவார். நம்பிக்கையுடன் தேடுங்கள் அதற்க்கான வழி அங்கு இருக்கிறது. எனக்கு தெரிந்த பல சாதுக்கள் அங்கு செல்லுவதாக சொல்லியுள்ளார்கள்.

நீங்கள் குருவை அடைவதற்க்கான பல வழிகளை நான் ஆன்மீக அனுபவத்தில் சொல்லியுள்ளேன். அதனை நீங்கள் கருத்தில் கொண்டு தேடும்போது கண்டிப்பாக குரு உங்களுக்கு கிடைப்பார்.

உங்களுக்கு ஒரு குரு கிடைத்துவிட்டாலே போதும் நீங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை சந்திக்கலாம். உங்களின் பிரச்சினை தீர்ந்து விடும். ஏதோ நான் சந்தியாச வாழ்க்கைக்கு குரு தேடுங்கள் என்று சொல்லவில்லை உங்களின் அன்றாட பிரச்சினைக்கு தேடுங்கள்.

"உங்களுக்கு குரு கிடைப்பதற்க்கு எனது வாழ்த்துக்கள்"

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.




சமையலும் சுக்கிரனும்



வணக்கம் நண்பர்களே !
                                       சமையலும் சுக்கிரனும் என்ற தலைப்பில் இப்பதிவில் சில தகவல்களை பார்க்கலாம். என்னடா இது சமையல் எல்லாம் சொல்லுகிறார் என்று நினைக்க வேண்டாம். சோதிடம் என்பது அனைத்தும் உள்ளடங்கிய ஒரு பொக்கிஷம்.

திருமணத்தில் சுக்கிரன் பங்கு முக்கியமானது. இவர் சுபதன்மையில் இருந்தால் திருமணம் இளம் வயதில் நடைபெறும். இவர் ஆண்களுக்கு முக்கிய பங்கு வகிக்கிறார். இவர் கெட்டால் குழந்தை பாக்கியமும் தடைப்படும்.

நல்ல ருசியான சமையலுக்கு இவர் தான் காரணம். தம்பதிகளுக்குள் ஒற்றுமையை வளர்ப்பதில் சமையல் முக்கிய பங்கு வகிக்கிறது. தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் மனைவி நல்ல சமைத்து அதனை கணவனுக்கு கொடுக்கும் போது அதனை சாப்பிட்டால் அவன் மனம் மாறி அவளை விரும்புவான். தாம்பத்திய வாழ்க்கையிலும் சமையல் என்பது இன்றிமையாதது.

இன்று இருக்கும் அவசர வாழ்க்கையில் இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். பெரும்பாலும் இருவரும் சாப்பிடுவது ரெஷ்டாரண்ட்டுகளின் தான். இது இருவருக்கும் பாசத்தை உருவாக்காது. ஏதோ ஒரு நாட்கள் என்றால் பரவாயில்லை தினமும் இப்படி சாப்பிடும் ஏதாவது சிறு சண்டை வந்தாலே போதும் இருவரும் சம்பாதிக்கிறோம் அப்புறம் எதற்கு இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று பிரிந்துவிடுவார்கள். 

கடந்த காலங்களில் மனைவியின் வேலை சமையல் செய்வது தான் இன்று அப்படி இல்லை இது ஏன் அப்படி அந்த காலத்தில் வைத்திருப்பார்கள் என்றால் ஒன்று இவர் செய்வார் வேறோன்றை அவர் செய்வார் என்று பிரித்து வைத்தார்கள். 

கணவனின் தேவையை மனைவி பூர்த்தி செய்யவேண்டும் மனைவியின் தேவையை கணவன் பூர்த்தி செய்யவேண்டும். கணவன் சம்பாதிப்பான் மனைவி சமையல் செய்வாள். இன்று இது அப்படியே மாறிவிட்டது மனைவி சம்பாதிப்பாள் கணவன் சமைப்பான் என்ற நிலை வந்துவிட்டது அல்லது இருவரும் வேலைக்கு சென்று உணவங்களில் சாப்பிடுகிறார்கள். 

நான் சமையலை கற்றுக்கொள்ளும் போது என்னுடைய அம்மா டேய் சமையலை கற்றுக்கொள்ளாதே அப்புறம் பொண்டாட்டியின் அருமை தெரியாது என்று சொல்லுவாங்க அது உண்மை தான்.

பல பெண்களுக்கு சமைக்க தெரியவில்லை என்று தான் சொல்லவேண்டும். நான் ஒரு சில நேரங்களில் நண்பர்களின் வீடுகளில் சாப்பிடுவது உண்டு அல்லது உறவினர்களின் வீடுகளில் சாப்பிடுவது உண்டு அப்படி சாப்பிடும் போது ஏன்டா சாப்பிட்டோம் என்ற நிலை ஏற்படும் அவ்வளவு கொடுமையாக அந்த சாப்பாடு இருக்கும். இது எதனால் என்றால் அந்த பெண்ணிற்க்கு சுக்கிரன் கெட்டுவிட்டது என்ற அர்த்தம் தான் வேறு ஒன்றும் இல்லை.

பொதுவாக அம்மாவின் சமையல் ருசியாக இருக்கும் அது ஏன் என்றால் அம்மா சமைக்கும் போது பாசத்தோடு சமைப்பாள். இப்பொழுது கணவனுக்கு சமைப்பது எல்லாம் வெறுப்போடு சமைக்கிறார்கள் அதனால் தான் அனைத்தும் கெடுகிறது.

ஒரு பெண்ணை திருமணத்திற்க்கு பொருத்தம் பார்க்கும் போது சுக்கிரனின் நிலைமையும் கூர்ந்து கவனித்து பொருத்தத்தை சேர்க்க வேண்டும். சுக்கிரன் கெட்ட பெண்களுக்கு என்ன செய்யவது கணவன் சமையலை கற்றுக்கொள்ள வேண்டியது தான். நன்றி நண்பர்களே.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Sunday, November 18, 2012

தசா என்ன செய்யும் ?


வணக்கம் நண்பர்களே !
                                      ஒரு தசா எப்படி எல்லாம் வேலை செய்யும் என்பதை என் வாழ்வில் நடந்தை வைத்து சொல்லியுள்ளேன் படித்து பாருங்கள்.

நான் என்ன படித்து இருக்கிறேன் என்று உங்களுக்கு எல்லாருக்கும் நன்றாக தெரியும். எனக்கு ராகு தசா ஆரம்பித்த நாட்கள் இருந்து எனக்கு கம்யூட்டர் மீது ஒரு தீராத காதல் என்றே சொல்ல வேண்டும். அந்தளவுக்கு ஒரு வெறிதனமாக அனைத்தையும் கற்க வேண்டும் என்று எண்ணினேன். அதை போல் நானாகவே அதனை கற்றேன்.

எனது நண்பர் ஒருவர் அயல்நாட்டில் இருக்கிறார் அவர் அங்கு மென்பொருள் கம்பெனியை தனியாக நடத்திவந்தார் அவர் என்னை தொடர்பு கொண்டு அங்கு உள்ள மென்பொருளை செய்து தரச்சொல்லி கேட்டார் அதற்காக ஒத்துக்கொண்டு சென்னையில் பல கணிணி நண்பர்களை சேர்த்துக்கொண்டு இங்கு இருந்து செய்து அனுப்பினேன். அத்தனை மென்பொருள்களும் மிக உயர்ந்த கம்பெனிகளுக்கு சப்ளை செய்யப்பட்டது.

இன்றைக்கும் அத்தனை மென்பொருள்களும் அந்த கம்பெனியில் இன்றைக்கும் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள் இத்தனைக்கும் நான் பள்ளிபடிப்பை முடிக்காதவன். இதனை செய்ய வைத்தது ராகு தசா தான் என்பதை மறக்ககூடாது.

இதில் என்ன சுவராசியமான தகவல் என்றால் சென்னையில் இதனை செய்ய ஆட்களை நான் தேடினேன் அப்பொழுது அவர்கள் எல்லாரும் இங்கு உள்ள கம்பெனியில் வேலை செய்பவர்கள் அவர்களின் ஒய்வு நேரத்தில் செய்து தர ஒப்புக்கொண்டார்கள். அதைப்போல் இதனை செய்தார்கள் ஆனால் குறித்த நேரத்தில் செய்து முடிக்கவில்லை ஏன் என்றால் ஒரு சிலர் வேலை காரணம் என்று சொன்னார்கள் கடைசி நேரத்தில் வேறு ஆட்களை வைத்து இதனை செய்து முடித்து அனுப்பினேன். அதன் பிறகு வரும் மென்பொருள்களின் ஆர்டர்களை மிகசிறந்தவர்களை கம்பெனியில் வேலை செய்யாத ஆட்களை வைத்து தேர்ந்தெடுத்து செய்தேன்.

இதனை நான் செய்ய சொல்லும் போது தான் எனக்கு தெரிந்தது இங்கு வேலை பார்ப்பவர்கள் எல்லாம் 2+2=4 என்று ஒரே குப்பையை அடித்துக்கொண்டு இருப்பவர்கள் என்று தெரிந்தது ஏன் என்றால் ஒரு சாப்ட்வேரை தவிர அடுத்த சாப்ட்வேர் இருக்கிறதா என்ன என்று கூட தெரிந்து வைத்துக்கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். அடுத்த கொடுமை என்ன என்றால் ஒரு டோமைனை தவிர அடுத்த டோமைனை பற்றி சிறிதும் அறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று அப்பொழுது தான் எனக்கு தெரிந்தது.

நான் முதலில் நாடியது தமிழ் நண்பர்கள் தான் அவர்களை என்ன சொல்லுவது என்றே எனக்கு தோன்றவில்லை எந்த வேலையும் எனக்கு குறித்த நேரத்தில் செய்து தரவில்லை. நம்ம ஆட்களிடம் ஒரு ஆர்டரை கொடுத்தால் அவர்களுக்கு நான் புரிய வைப்பதற்க்குள் என் தலை வெடித்துவிடும். அதன் பிறகு நான் நாடியது ஆந்திராவில் உள்ள நண்பர்களை தான் சும்மா சொல்லகூடாது கையில் காசு வாங்கினால் குறித்த நேரத்தில் வேலையை முடித்துக் கொடுப்பார்கள். எந்த தொந்தரவும் செய்யமாட்டார்கள் எவ்வளவு பிரச்சினையும் எளிதில் முடிப்பவர்கள். சில Embedded Systems ப்ராஜட்டுகளை ஐஐடியில் உள்ளவர்களை வைத்து முடித்து இருக்கிறேன்.

நண்பர்களே உங்களை குறை சொல்லவில்லை நான் தேடியபோது நம்ம ஆட்கள் திறமையானவர்கள் என் கண்ணில் படாமல் இருந்து இருக்கலாம் ஆனால் ஆந்திராவில் இருந்து பல பேர் வெளிநாடுகளில் போய் தனியாக நின்று ஜெயிக்கிறார்கள் அவர்களே கம்பெனியில் நேரடியாக சென்று நான் செய்து தருகிறேன் என்று வாங்கி செய்கிறார்கள் இதனாலேயே பல ப்ராஜ்ட்கள் இந்தியாவிற்க்கு வருவதில்லை.

நீங்கள் நினைக்கலாம் என்ன ப்ராட்ஜ்ட்கள் என்றால் ஐந்தாயிரம் பத்தாயிரத்திற்க்கு எடுத்து செய்து இருப்பார்கள் என்று நினைக்கலாம் பல லட்சங்கள்கொண்ட ப்ராஜட்கள் அவ்வளவு கடினமான சிஸ்டம் என்னால் செய்து முடிக்கப்பட்டது.

இன்றைக்கு பல நண்பர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி இது தான் நீ ஏன் இப்படி இருக்கிறாய் என்று தான் கேட்பார்கள் என்னுடன் சென்னையில் இருப்பவர்களுக்கு தெரியும் அப்பொழுதும் சோதிடம் சைடில் சென்று கொண்டு இருந்தது. ராகு தசா சிறுவயதில் என்னை அந்தளவுக்கு உயர்த்தியது, ராகு தசா முடிந்தது அனைத்து தொடர்புகளும் அறுந்தது. குரு தசா வந்தது  அத்தனையும் சென்றது. குரு தசாவில் உங்களை சந்தித்தேன்.

ஏன் இதனை சொல்லுகிறேன் என்றால் ஒரு தசா என்ன என்ன செய்யும் என்று உங்களுக்கு புரியவைப்பதற்க்காக தான் மேலை சொன்னது அனைத்தும் உண்மையான தகவல் எனது நண்பர்களை நீங்கள் கேட்டால் உண்மையை சொல்லுவார்கள்.

இன்றைக்கும் அத்தனை அறிவும் என்னிடம் இருக்கிறது ஆனால் அதில் ஈடுபட மனது வரவில்லை. அத்தனை தொடர்புகளும் நானாகவே தொடர்பை துண்டித்தேன் என்று தான் சொல்லவேண்டும்.

என்னிடம் தொடர்புகளில் இருந்தவர்கள் மிகப்பெரிய கம்பெனியில் இருப்பவர்கள். வெளிநாடுகளில் அரசியலில் மிகப்பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள் தொடர்புகள் என்னிடம் இருந்தது ஆனால் இன்று ஒருவரையும் நான் தொடர்புகொள்வதில்லை.

இன்று அனைத்து தொடர்புகளும் ஆன்மீகவாதிகள் தான். ஒரு சில நேரங்களில் பழைய நினைப்பு வரும். ஏன் அப்படி வருகிறது என்றால் சனி ,ராகு, கேது தசா முடிந்த பிறகு அனைவருக்கும் ஒரு ஏக்கம் வரும்.

சோதிடம் வழியாக இன்று மிகப்பெரிய அளவில் தொடர்புகள் இருக்கிறது.நீங்கள் மென்பொருள் துறையில் இருந்தால் உங்கள் அறிவை நன்றாக வளர்த்து கொள்ளுங்கள் சும்மா ஏதோ மாதம் மாதம் சம்பளம் வருகிறது என்று உட்கார்ந்துக்கொண்டு இருக்காமல் அடுத்தது என்ன என்று யோசித்து முன்னேற வழியை பாருங்கள். நீங்கள் நினைக்கலாம் நம்மால் ஆர்டர்களை பெறமுடியாது அது எல்லாம் பெரிய கம்பெனிகள் தான் செய்யமுடியும் என்று உண்மை அது அல்ல நீங்கள் நல்ல தொடர்புகளை வைத்திருந்தால் எளிதில் ஆர்டர்களை பெறமுடியும்  என்ன குறித்த நேரத்தில் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் உடனே கோர்ட்க்கு தான் போவார்கள். நம்ம கோர்ட்டாக இருந்தால் சமாளித்துவிடலாம் அங்கு முடியாது.

நல்ல புதிய கண்டுபிடிப்பு இருந்தால் வெளிநாட்டு அரசாங்கத்திடமே நீங்கள் நேரிடையாக பேசி செய்து கொடுக்க முடியும். பல கோடிகள் லாபத்தை பெறலாம். நான் சொன்னது எல்லாம் உங்களுக்கு தெரியும் இருந்தாலும் என்னிடம் உள்ள அனுபவத்தை உங்களுக்கு தருகிறேன்.

குரு தசா ஆரம்பித்தது இதில் எல்லாம் சுத்தமாக நாட்டம் இல்லாமல் போனது. அதிலும் குரு தசா சுயபுத்தியில் பட்ட கஷ்டம் இருக்கிறதோ இப்ப நினைத்தாலும் வாழ்க்கையே வெறுத்துவிடும். எப்பொழுதுமே சுயபுத்தி கெடுதல் அதிகம் செய்வது நல்லது தான்.

நான் எப்படிபட்ட உயரந்த நிலையில் இருக்கும் போதும் ஒரு சாதாரணமான ஆட்கள் போல் தான் வாழ்ந்தேன். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் எளிமை என்பது எனக்கு பிடித்த ஒன்று. இன்று அனைத்து மனிதர்களையும் ஒரே மாதிரியாகதான் பார்க்கிறேன், அவனிடம் காசு இருக்கிறதா அல்லது காசு இல்லையா அவன் உயர்ந்தவனா அல்லது தாழ்ந்தவன என்று பார்ப்பதில்லை.

இப்பொழுது நான் நினைப்பேன் இது எல்லாம் என்னால் எப்படி செய்யமுடிந்தது என்று நினைத்து பார்ப்பேன். எல்லாம் தசா செய்த லீலைகள்.நான் சொன்னது அனைத்தும் உண்மை.

நன்றி நண்பர்களே அடுத்த பதிவில் பார்க்கலாம்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Saturday, November 17, 2012

ஜாபால உபநிஷதம்




வணக்கம் நண்பர்களே !
                                   ஜாபால  உபநிஷதம் அதர்வ வேதத்தை சேர்ந்தது இது. ஒவ்வொரு உபநிஷத்திலும் நிறைய கருத்துக்கள் உள்ளன ஆனால் அதை எல்லாவற்றையும் எழுதமுடியாது. அதில் இருந்து ஒரு சில கருத்துக்களை மட்டும் எடுத்து உங்களுக்கு எளிய முறையில் தருகிறேன்.

இந்த உபநிஷதம் எல்லாம் ஏன் நாம் படிக்க வேண்டும் என்று கூட நினைக்கலாம். இதை எல்லாம் நாம் படித்தால் நமது மனது பக்குவபடும். மனது பக்குவபட்டாலே போதும். பயிற்சியில் வராததை படிப்பதால் பெறலாம்.

இந்த உபநிஷத்தில் துருவாசர், ஜடபரதர் போன்றோர் வெளித்தோன்றா இயல்புகளும் வெளித்தோன்றா வாழ்க்கை வழிகளும் உடையவர்களாவார்கள். இவர்கள் பித்து பிடித்தது போல் இருந்தார்கள் ஆனால் இவர்கள் திரிதண்டம் கமண்டலம் சிகை போன்று ஏதுவும் இல்லாமல் இருந்தார்கள்.

நீங்கள் நினைக்கலாம் இது எல்லாம் இருந்தால் தான் சாமியாராக இருக்கமுடியுமா என்று கேட்கலாம் சிவனடியாராகி சாமியாராக இருப்பவர்களுக்கு என்று சட்டங்கள் இருக்கின்றன். என்ன என்றால் அவர்கள் அதிகாலையில் எழ வேண்டும். காலை 4 மணியில் இருந்து 6 மணிக்குள் அவர்களின் கடமையை முடித்து இருக்க வேண்டும்.

காலையில் குளிக்கும் போது ருத்ராட்சத்தை கழட்டி வைப்பதற்க்கு ஒரு மந்திரம் சொல்ல வேண்டும் அந்த ருத்ராட்சத்தை மீண்டும் போட்டுக்கொள்வதற்க்கு மந்திரம் தண்டத்தை எடுப்பதற்க்கு ஒரு மந்தரம் சொல்ல வேண்டும். கமண்டலத்தில் நீரை நிரம்பும் போது 18 நதிகளையும் அந்த கமண்டலத்தில் கொண்டு வருவதற்க்கு ஒரு மந்திரம் கோவணத்தை கட்டிக்கொள்வதற்க்கு மந்திரம் என்று ஏகாப்பட்ட மந்திரங்கள் இருக்கின்றன.

இப்படி தான் இருக்க வேண்டும் என்று வரையறுத்து இருக்கின்றார்கள் ஆனால் இன்று அப்படி இல்லை சாமியார்களும் மாடர்ன் வாழ்க்கைக்கு தகுந்தவாறு தங்களை மாற்றிக்கொண்டுவிட்டார்கள்.

நேரம் கிடைக்கும் போது ஒவ்வொரு மதங்களிலும் சந்தியாசிகளைப்பற்றி தெரிந்துக்கொள்ளலாம். இப்பொழுது இது போதும்.

இரண்டு பேரும் ஆத்மா ஒன்றையே தேடினர். பிறவியின்போது இருந்தது போல் ஏதுமில்லா உருவந்தாங்கி எவ்வித பற்றுகளும் உடைமைகளும் இல்லாமல் தூய இதயத்தோடு பிரம்ம பாதையில் நடந்தவர்கள்.

இவர்கள் வாழ்ந்த இடம் எது தெரியுமா?

ஏகாந்த இல்லம் அல்லது கோயில் புல்வெளி மலை குகை யாருமில்லாத இடத்தில் ஓடும் ஓடை போன்ற இடங்களில் தான் வசித்து இருக்கிறார்கள்.  நான் எனும் எண்ணமின்றி உயிருள்ளத்தில் நிறுத்திய தியானத்தில் நிலை பெற்றுப்பார்கள்.

இந்த உபநிஷத்தில் சொல்லுகின்ற கருத்து தனிமை தான் வேறு ஒன்றும் இல்லை. 

தனிமை ஒரு அழகு தான் ஆனால் அது தொடர்ந்த இருந்துகொண்டே இருக்ககூடாது. தனிமையான இடங்களுக்கு செல்லும் போது மனதில் ஒரு ஆனந்தம் பிறக்கும். அதனை அனுபவிக்க வேண்டும்.

நாம் என்ன செய்வோம் எங்கேயாவது ஒரு இயற்கையான இடங்களுக்கு செல்லும் போது அந்த இடத்திற்க்கு போய் போன் பேசிக்கொண்டு இருப்போம் அல்லது அந்த இடத்திற்க்கு போய் கேமராவில் படம் பிடித்துக்கொண்டு இருப்போம். அங்கு சென்றால் அந்த இயற்கையை ரசிப்பதை விட்டு விட்டு அதனை படம் பிடிப்பது தவறு இயற்கையை இயற்கையாக தான் ரசிக்க வேண்டும் அதை படம் பிடித்து எடுத்து வந்து வீட்டில் ரசிக்ககூடாது.

தனிமையில் போய் தான் ரசிக்க வேண்டும் என்பது இல்லை உங்களின் துணைவரையும் அழைத்துக்கொண்டு போய் ரசிக்கலாம் ஒன்றும் தவறு இல்லை.  

உங்களின் பாதி உங்களின் துணைவர் அவரும் அதனை ரசிக்க நீங்கள் வழி செய்ய வேண்டும். நம்மில் பல பேர் இருக்கிறார்கள் நண்பர்களோடு மட்டும் தான் வெளியில் டூர் போவது மனைவியை வீட்டிலேயே விட்டுவிட்டு செல்வார்கள் அப்படி செய்யாதீர்கள் அவர்களையும் அழைத்துக்கொண்டு அந்த ஏகாந்தத்தை அனுபவியுங்கள் .

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.



Friday, November 16, 2012

திருமணமும் புதனும்



வணக்கம் நண்பர்களே திருமணத்தில் புதனின் பங்களிப்பு என்ன என்று இப்பதிவில் பார்க்க போகிறோம்.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற பழமொழி இருக்கிறது. ஒரு நாளில் புதன் காலை நேரத்தில் பலம் பெற்று விளங்குகிறார். காலை 6 மணி முதல் 10 மணிவரை புதனுக்கு அதிக பலன் உண்டு. 

புதன்கிழமை 6 மணி முதல் 7 மணி வரை வருகின்ற புதன் ஒரையும் வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் 8 மணி வரை வருகின்ற புதன் ஓரையும் நல்ல விசேஷ தன்மை உடையவை எந்தவொரு சுப காரியங்களுக்கும் புதன் அதிக பலம் பெற்று இருக்கின்ற காலை 6 மணியில் இருந்து 10 மணிக்குள் செய்து முடித்தால் நல்லது.

திருமணத்தில் பெண்களுக்கு புதன் முக்கிய பங்கு வகிக்கிறார். பெண்களின் விநது சோணிதம் எனப்படும். புதன் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் நன்றாக அமைந்தால் அந்த பெண்ணிற்க்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். புதன் கெட்டால் கூட பெண்களுக்கு திருமண வாய்ப்பு இல்லாமல் போகும். 

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் புதன் 1,2, 7, 8 ,11 ஆம் இடங்களில் இருந்தால் அந்தப் பெண் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் அதிக அக்கறை காட்டுவாள். இவ்வாறு இருந்தால் அந்த பெண்ணிற்க்கு பொறுமை அதிகமாக இருக்கும். இல்லறத்தில் நல்ல ஈடுபாடு இருக்கும். கணவனின் பேச்சை கேட்டு நடப்பாள். 

ஒருவருக்கு லக்கனத்தில் புதன் இருந்தால் ஆயிரம் குறைகளை நீக்கும் என்று சோதிட நூலில் இருக்கிறது. எப்படிப்பட்ட தோஷத்தையும் நீக்கும் என்பார்கள்.

புதன் ஏழாவது வீட்டில் சனியோடு இருந்து இரண்டு கிரகங்களும் கெட்டால் அந்த ஜாதகர் அலியாக மாறுவதற்க்கும் வாய்ப்பு இருக்கிறது. உங்களுக்கு துணையாக வருபவர் இந்த மாதிரி கிரக நிலைகளில் இருந்தால் அவரை விலக்குவது நல்லது.

கணவன் மனைவிக்குள் தூக்கத்தில் இருவருக்கும் சுகமான கனவு வர வேண்டும் என்றால் அவர்களுக்கு புதன் நல்ல முறையில் இருந்தால் வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.



ஆன்மீக அனுபவங்கள் 23



வணக்கம் நண்பர்களே ஆன்மீக அனுபவத்தில் இப்பதிவில் சோதிடத்தை வைத்து ஒரு கருத்தை சொல்லுகிறேன் பாருங்கள்.

ஒருவர் ஆன்மீக வாழ்க்கையில் உயரவேண்டும் என்றால் சோதிடத்தில் குரு கிரகம் நல்ல நிலையில் இருக்கவேண்டும். நீங்கள் நினைத்துக்கொண்டு இருப்பீர்கள் ஞானத்திற்க்கு கேது தானே முக்கிய கிரகம் இவர் என்னடா என்றால் குரு கிரகத்தை சொல்லுகிறார் என்று நினைக்கலாம்.

கடைசி நேரத்தில் தான் ஞானம் கி்டைக்கும் முதல் நிலை பயிற்சிக்கு எல்லாம் குரு கிரகம் நன்றாக இருந்தால் தான் உங்களுக்கு ஆன்மீக விசயத்தில் ஈடுபட வாய்ப்பே கிடைக்கும். பொதுவாக குரு திசை ஆரம்பித்தால் நீங்கள் இதுவரை பார்க்க கோவில் எல்லாத்தையும் பார்த்துவிடலாம். 

ஆன்மீக வாழ்விற்க்கு அடித்தளத்தை அமைத்துக்கொடுப்பதற்க்கு குரு கிரகம் மாதிரி வேறு எந்த கிரகமும் கிடையாது. ஒருவருக்கு குரு கிரகம் மட்டும் நன்றாக அமையும் பட்சத்தில் குருவே உங்களை தேடிவருவார். குரு கிரகம் பூர்வபுண்ணியம் என்ற ஐந்தாம் வீட்டிற்க்கும் பாக்கியஸ்தானம் என்னும் ஒன்பதாம் வீட்டிற்க்கும் காரகம் வகிக்கிறார்.மிக உயர்நத வீடுகளுக்கு காரகம் வகிக்கிறார்.

குரு கெட்டால் ஒருவர் ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபடுவதற்க்கு தடைகள் ஏற்படும். ஆன்மீக வாழ்க்கையில் அவரை இழுத்து அல்லல்படவைக்கும். ஏன் இவ்வாறு செய்கிறது என்றால் எதில் உங்களை கெடுக்கமுடியுமோ அதி்ல் கொண்டு வந்து ஈடுபடுத்தி அலைச்சலை கொடுக்கும்.

நான் யாராவது ஒருவரை கொண்டுவந்து ஆன்மீக விசயத்தில் ஈடுபட வைத்து அவர்களை முன்னேற்ற வேண்டும் என்று நினைப்பேன் அவ்வாறு நினைத்து அவர்களை தேர்ந்தெடுக்கும் போது குரு கெட்டவரை எடுப்பேன் ஏன் அவ்வாறு ஒருவரை தேர்ந்தெடுக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றால் இல்லாதவனுக்கு ஒன்றை கொடுக்கும் போது அவன் சந்தோஷத்துடன் அதனை எடுத்துக்கொண்டு வாழ்வான் என்று நினைப்பேன். யாருக்கும் கிடைக்காததை நமக்கு கொடுக்கிறார் இதனை நாம் நல்லமுறையில் பயன்படுத்தி வாழவேண்டும் என்று நினைப்பான்  என்று இந்த மாதிரி ஆட்களை தேர்ந்தெடுப்பேன்.

இதனை அவர்கள் ஒத்துக்கொள்ளுவார்கள் ஆனால் அவனை கூப்பிட்டால் ஆயிரம் கேள்வி என்னை கேட்பான் நீங்க எதற்கு இதனை என்னிடம் கொடுக்க வேண்டும் அப்ப என்னிடம் நீங்கள் ஏதோ எதிர்பார்க்கிறீர்கள் உங்களுக்கு நான் என்ன தரவேண்டும். நீங்கள் யார் உங்களின் குரு யார் எதற்கு அவ்வாறு நீங்கள் தரவேண்டும் என்று கேட்பார்கள். இந்த வார்த்தையை ஏன் அவ்வாறு அவர்கள் பேசுகிறார்கள் என்றால் குரு கிரகம் அவ்வாறு பேச வைக்கும்.

நீங்களே இதனை சோதனை செய்து பாருங்கள் யாருக்காவது குரு நீசமாக அல்லது குரு பகையாக இருப்பவர்களை தேர்ந்தெடுத்து உனக்கு ஆன்மீக விசயத்தை சொல்லிதருகிறேன் என்று கூப்பிட்டு பாருங்கள் அவர் உங்களிடம் பேசும் போதே நீங்கள் நினைப்பீர்கள் ஏன்டா இவனை போய் தேர்ந்தெடுத்தோம் என்று நினைக்க தோன்றும்.

குரு பகையாக இருப்பவரிடம் பேசி பாருங்கள் கோவிலாவது சாமியாவது கோவிலை இடிக்கவேண்டும் என்று சொல்லுவார்கள்.நீங்கள் இந்த மாதிரி சோதிடத்தை சோதனை செய்து பாருங்கள் அப்பொழுது அதன் உண்மை நிலை தெரியும் அதற்காக நாம் அவர்களிடம் கோபம் கொள்ளகூடாது சோதிடம் அவ்வாறு பேச சொல்லுகிறது என்று நினைத்துக்கொண்டு அவர்கள் பூர்வ புண்ணியத்திலாவது திருந்துவார்களா என்று பார்த்து இருக்க வேண்டியது தான்.

குரு நீசமாக இருப்பவர்கள் நல்ல குரு கிடைத்தாலும் அவரை அவர்களே நீ எல்லாம் வேண்டாம் என்று ஒதுக்கிவிடுவார்கள். குரு பகையாக இருப்பவர்கள் குருவிடம் சண்டை போட்டு குருவை விட்டு பிரிவார்கள். குரு கெட்டால் குருவை எதாவது வம்பில் மாட்டிவிடுவார்கள். 

ஆன்மீக வாழ்க்கைக்கு குரு கிரகம் எவ்வளவு செயல் செய்கிறது என்று பார்த்தீர்கள். பொதுவாக சோதிடத்தை நன்றாக பார்க்க தெரிந்தவன் யார் மீதும் கோபம் கொள்ளமாட்டான் ஒவ்வொருவரும் ஏன் இப்படி நடந்துக்கொள்கிறார்கள் என்று அவனுக்கு தெரியும் அதனால் நீங்களும் இதனை மனதில் கொண்டு ஒவ்வொரு மனிதன் மீது அன்பை செலுத்துங்கள் சோதிடத்தை புரிந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


Thursday, November 15, 2012

திருமணமும் பித்ருதோஷமும்



வணக்கம் நண்பர்களே !
                                      இப்பதிவில் திருமண வாழ்வில் பித்ரு தோஷம் ஏற்பட்டால் எப்படி பிரச்சினை உருவாக்கும் என்பதை பார்க்கலாம்.

மூன்றாம் வீட்டில் ராகு இருந்தால் ஒன்பதாம் வீட்டில் கேது இருப்பார். மூன்றாம் வீட்டில் கேது இருந்தால் ஒன்பதாவது வீட்டில் ராகு இருப்பார் இப்படி இருந்தால் கடுமையான பித்ரு தோஷத்தை ஏற்படுத்தும்.

பாக்கிய ஸ்தானத்தில் ஒரு தீயகிரகம் இருந்தால் பித்ரு வழியில் அதாவது தந்தை வழியிலும் பிரச்சனையை திருமணத்தில் ஏற்படுத்தும் அமைப்பாக இருக்கிறது. 

உங்களின் தந்தை கெட்டுவிடுவார் அல்லது தந்தை இறந்துவிடுவார். தந்தை மூலம் உங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது. தானே முயன்று திருமணத்தை நடத்துவது என்பது எவ்வளவு கடினமான ஒன்றாக தானே இருக்கும் அதனால் இதனை சொல்லிருப்பார்கள். 

இந்த தோஷம் இருந்தால் ஒன்று உங்களின் தந்தையை கெடுக்கும் அப்படி இல்லை என்றால் உங்களின் எந்த செயலுக்கும் தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் நீங்கள் எந்த முயற்சி செய்தாலும் அதில தடை ஏற்பட்டு மனதில் எரிச்சலை ஏற்படுத்தும் அதனால் திருமண வாழ்வில் பாக்கிய ஸ்தானம் என சொல்லக்கூடிய ஒன்பதாவது வீடும் கெடுதல் அடைதல் கூடாது.

நமக்கு இருக்கும் பாக்கியத்தை காட்டக்கூடிய வீடாக இருப்பதால் திருமண வாழ்வும் நமக்கு கிடைத்த பாக்கியம் தானே எத்தனையே பேர் திருமண வாழ்வு கிடைக்கவில்லை என்று ஏங்குகிறார்கள் அல்லது திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துவிடுகிறார்கள் அதனால் பாக்கியஸ்தானம் எனும் ஒன்பதாவது வீடும் திருமண வாழ்வில் முக்கியமாக பார்க்க வேண்டிய ஒன்று. 

பித்ரு தோஷம் ஏற்பட்டால் அந்த பித்ருக்களுக்கு தோஷ நிவர்த்தி செய்துக்கொண்டு திருமண வாழ்வில் இணையுங்கள் .பித்ரு தோஷத்திற்க்கு  இராமேஷ்வரம் சென்றால் கூட நல்ல பரிகாரம் தான் திருமணத்திற்க்கு முன்பு ஒரு முறை இராமேஷ்வரம் செல்லுங்கள் திருமணம் நடந்து முடிந்த பிறகு  தம்பதிகளாக இராமேஷ்வரம் சென்று தரிசித்துவிட்டு வாருங்கள் திருமண வாழ்க்கை நன்றாக அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.



பாவம் தீர பரிகாரம்



வணக்கம் நண்பர்களே!
                            இன்று பல பேர் வாழ்க்கையில் அதிகமாக பிரச்சினை இருக்கிறது என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கேட்கிறார்கள் எவ்வளவோ சோதிடர்களை சந்தித்து பரிகாரங்களை கேட்டு செய்தாலும் பலன் இல்லை என்ன செய்வது என்று புலம்புகிறார்கள் அதற்க்காகவோ இந்த பதிவு.

தானம் செய்வதால் உங்களின் பாவங்களை குறைக்கமுடியும் என்று சொல்லுகிறார்கள் நமது மதத்தில் நீ படுக்கையை விட்டு எழுந்தவுடனே தானம் செய்வது போல் தான் நமது முன்னோர்கள் வைத்திரு்கிறார்கள் ஆனால் நாம் அதனை எல்லாம் விட்டுவிட்டு தினமும் பாவத்தை ஏற்றிக்கொண்டு அல்லல்படுகிறோம்.

அந்த காலத்தில் காலையில் எழுந்தவுடன் வீட்டை வாசலை பசுவின் சாணத்தை கொண்டு சுத்தம் செய்து அரிசி மாவினால் கோலமிடுவார்கள். பசுவின் சாணம் கிருமி நாசினி வீட்டிற்க்குள் எந்த கிருமியும் வராது. அரிசின் மாவினால் கோலமிட்டால் அந்த கோலத்தை எறும்புகள் வந்து தின்றும் அதனால் நமது பாவங்கள் குறையும். நீங்கள் எழுந்தவுடனே ஒரு தர்மத்தை செய்து கொண்டுவிட்டீர்கள் உங்களுக்கு அந்த நாள் முழுவதும் நல்லது நடக்கும் அதனை கருத்தில் கொண்டு அந்த காலத்தில் இதனை வைத்தார்கள்.

இன்று நாம் படுக்கையை விட்டு எழுவதே காலம் தாழ்த்தி தான் அப்படியே எழுந்துவிட்டாலும் கோலம் எல்லாம் யார் போடுகிறார்கள். அந்த கோலமும் அரிசி மாவினால் போடுவது கிடையாது. உங்களின் பாவங்களின் கணக்கு கூடிக்கொண்டே செல்லுகிறது.

இன்று வீடுகள் எல்லாம் நல்ல முறையில் கட்டப்படுகிறது பசுவின் சாணத்தை போடமுடியாது அதற்கு என்ன செய்யலாம் உங்களின் வீட்டின் வாயிலில் தண்ணீரில் மஞ்சளை கலந்து தெளித்து அரிசி மாவினால் கோலம் போடுங்கள். மஞ்சள் கிருமி நாசினி அரிசி மாவினால் கோலம் போடும் போது அதனை எறும்புகள் வந்து தின்றும் இதனால் உங்களின் பாவங்கள் வெகுவாக குறைக்கப்படும். இதனை நீங்கள் தினமும் உங்களின் வீடுகளில் கடைபிடியுங்கள்.இதனை கொஞ்ச காலங்கள் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் நல்ல வாழ்க்கை அமையும்.

எழுந்தவுடனே தர்மம் செய்து எவ்வளவு உயர்ந்த செயல் உங்களின் பாவங்கள் தீர ஒரு நல்லவழியை சொல்லிருக்கிறேன். தர்மம் செய்து உங்களின் வாழ்வை உயர்த்திக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Wednesday, November 14, 2012

சோதிட அனுபவம்



நித்தின் கட்காரி இவரைப்பற்றி பல நாளிதழ்களில் செய்தி வருவதற்க்கு காரணம் என்ன என்று அவருடைய ஜாதகத்தை வைத்துக்கொண்டு பார்க்கலாம்.

நித்தின் கட்காரிக்கு சொந்தமான நிறுவனங்களில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

இவருடைய லக்கினம் ரிஷபம். அதன் அதிபதி சுக்கிரன் லக்கனத்தில் அமர்ந்துள்ளார். இவரது ராசி மேஷம். அவருடைய ராசிக்கு ஏழில் சனி சென்றுக்கொண்டுள்ளது அது கண்டசனியாக செல்லுகிறது. இதுவும் பிரச்சினையை ஏற்படுத்தும். இவருக்கு பிரச்சினை வந்தது இவரின் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு.

வழக்கு என்று வநதால் அது ஆறாவது வீட்டு அதிபதி இல்லாமல் வருமா இவருக்கு இப்பொழுது நடைபெறுவது ராகு தசாவில் சுக்கிரன் புத்தி ஆரம்பம். ரிஷப லக்கனத்திற்க்கு ஆறுக்குடையவன் சுக்கிரன் லக்கனத்தில் அமர்நதுள்ளார். அவரின் புத்தியில் பிரச்சினை ஆரம்பம் எப்படி பிரச்சினை என்றால் ஆறுக்குடைய சுக்கிரன் சூரியனோடு அமர்நதுள்ளார் அரசாங்கத்தின் மூலம் இவர் பிரச்சினையை சந்திக்க வேண்டும்.

தசாநாதனாக இருப்பவன் ராகு. தசாநாதன் ராகுவும் ஆறாவது வீட்டில் அமர்நதுள்ளார் அப்புறம் என்ன பிரச்சினையை சந்தி்க்க வேண்டியது தான். இப்பொழுது அரசாங்கத்தின் வழியாக தான் பிரச்சினையை சந்தித்துக்கொண்டு இருக்கிறார்.


சனியின் பார்வையில் சூரியனும் சுக்கிரனும் இருக்கிறது கண்டிப்பாக பிரச்சினையை ஏற்படுத்தகூடிய அமைப்பு.

லக்கினாதிபதியாகவும் சுக்கிரன் வருகிறார் ஆறாவது வீட்டு அதிபதியாகவும் சுக்கிரன் வருகிறார் கண்டிப்பாக இவருக்கு ஏதாவது ஒரு நோய் இவருக்கு இருந்துக்கொண்டு இருக்கும். இவருக்கு பிரச்சினை என்பது சனி ஏழில் இருக்கிறது அதே நேரத்தில் சுக்கிரனின் புத்தியில் தான் பிரச்சினை வந்திருக்கிறது. 

லக்கினாதிபதியான சுக்கிரனே இவருக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது பாருங்கள். இந்த புத்தி முடிய இவர் பிரச்சினையை சந்திக்க வேண்டியது தான் நண்பர்களே எனக்கு தெரிந்த தகவல்களை வைத்து சிறியதாக தந்துவிட்டேன். உங்களின் பார்வையில் இந்த ஜாதகத்தின் பலனை தாருங்கள் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.