வணக்கம்!
ஒருவரின் ஜாதகத்தில் சனி சந்திரன் இணைந்து இருந்தால் அது புனர்பூ தோஷம் என்று சொல்லுவார்கள். புனர்பூ தோஷம் என்பதை விட அவர்களின் மனநிலை பாதிப்படையும் என்று சொல்லலாம்.
சனி சந்திரன் ஐந்தாவது வீட்டில் இருந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக மனநிலையில் பாதிப்பை தந்துவிடும். சனி சந்திரன் இருவரும் சேர்ந்து இருக்கும்பொழுது அவர்களுக்கு இயற்கையிலேயே மனநிலை பாதிப்பு ஏற்படுத்தி வயது ஏற ஏற அது முற்றிவிடும்.
மனநிலைக்காரகன் சந்திரன் பூர்வபுண்ணியஸ்தானத்தில் அமர்ந்து அது சனிகிரகத்தோடு இணைந்து இருக்கும்பொழுது அது பூர்வபுண்ணியத்தில் ஏதோ பிரச்சினை இருக்கின்றது என்று அர்த்தம். இது முன்ஜென்மபிரச்சினையாகவே இதனை கருதில் கொண்டு செயல்படவேண்டும்.
சனி சந்திரன் ஐந்தாவது வீட்டில் இருக்கும் ஐாதகர்களுக்கு தாயார் வழியிலும் பிரச்சினை வந்துவிடுகின்றது. பலருக்கு தாயார் இளம்வயதில் இறந்துவிடுகின்றனர். இதனால் மனநிலை பாதிப்புக்குள்ளாகும் நிலையும் ஏற்படுகின்றது.
சனி சந்திரன் ஐந்தாவது வீட்டில் அமைந்த நண்பர்கள் மனநிலை பாதிப்பை நீக்கும் கோவில் வழிபாட்டு தலங்களில் இரவு தங்கி அந்த கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். ஒரு சில கோவில்களில் இதற்க்கு என்று சிறப்பு பூஜைகளை செய்வார்கள் அதில் கூட பங்குக்கொள்ளலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு