வணக்கம் நண்பர்களே! நான் பல பேருக்கு இப்பதிவு மூலம் சோதிடம் சொல்லி இருக்கிறேன். அவர்கள் அனைவரும் கேட்கும் கேள்வி உங்கள் அலுவலகம் எங்கு உள்ளது என்று தான் இருக்கிறது. அனைவருக்கும் நான் சொல்லுவது நான் சோதிட தொழில் செய்தாலும் சோதிடம் பார்க்க தனியாக அலுவலகம் தொடங்கவில்லை.
நான் பிறந்தது தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுக்காவில் உள்ள ஆம்பலாபட்டு என்ற கிராமத்தில் பாலாயிகுடிகாடு என்ற ஊரில் தான். இப்பொழுது வசிப்பது சென்னை அடையார்.
நான் பதிவு உலகத்திற்க்கு வருவதற்க்கு முன்பே சோதிட தொழில் செய்து வருகிறேன். நான் சோதிடம் பார்ப்பது. நான் எங்கு எல்லாம் செல்லுகிறேனோ அங்கு சோதிடம் பார்ப்பேன். என்னுடைய நேரடியான வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் அவர்களில் வீடுகளில் தான் போய் பார்த்து இருக்கிறேன் அல்லது அவர்கள் இருக்கும் பகுதியில் உள்ள கோவில்களில் மற்றும் அமைதியாக உள்ள பொது இடங்களில் சோதிடம் பார்ப்பேன்.
நீங்கள் என்னை சந்திக்க விரும்பினால் உங்கள் ஊர் இருக்கும் இடத்திற்க்கு வரும் போது நான் சொல்லுகிறேன் அப்பொழுது நீங்கள் என்னை சந்திக்கலாம். என்னுடைய வாடிக்கையாளர்கள் பல பேர் எனக்கு அலுவலகம் அமைத்து தருகிறேன் என்று சொன்னார்கள் நான் அதனை மறுத்துவிட்டேன். ஏன் என்று தெரியவில்லை எனக்கு அந்த எண்ணம் வரவில்லை. எதிர்காலத்தில் அந்த எண்ணம் வந்தால் அலுவலகம் தொடங்கலாம்.
உங்களுக்கு இந்த இடத்தில் ஒரு எண்ணம் தோன்றலாம் உனக்கு ஏன் அவர்கள் அலுவலகம் அமைத்து தர வேண்டும். உன் காசில் நீ அமைத்துக்கொள்ள மாட்டியா என்று கேட்க தோன்றும். உண்மை தான் அவர்கள் எனக்கு அலுவலகம் அமைத்து தருகிறேன் என்று சொன்னால் அவர்கள் என்னிடம் எவ்வளவு பயன் அடைந்திருப்பார்கள் என்று பார்க்க வேண்டும்.
என்னை பல பேர் புதிதாக பார்த்துவிட்டு நீங்கள் தான் சோதிடரா என்று கேட்டு இருக்கிறார்கள். இந்த உலகத்தில் ஆன்மிகம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைத்துவிட்டார்கள். அவர்களும் அதனை நம்பி என்னிடமும் அதனை எதிர்பார்க்கிறார்கள். நான் உங்களை போல் தான் ஒரு சாதாரண மனிதன் தான் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்களை போல் அனைத்து ஆசையும் எனக்கும் உண்டு.
நான் அடிக்கடி செல்லுவது சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு Commodity Trading கம்பெனிஅங்கு தான் அதிகபட்சம் இருப்பேன். இரும்பு அடிக்கும் இடத்தில் ஈ க்கு என்ன வேலை என்று கேட்கலாம். அந்த கம்பெனி நடத்துபவர் என்னுடைய நீண்ட கால நண்பர். அவர்கள் செய்யும் உதவிக்கு நான் அவர்களுக்கு சோதிடம் வழியாக Commodity மார்க்கெட்டிங் அறிவுரை வழங்குகிறேன். அங்கு போய் அவர்கள் அலுவலகத்தில் உள்ள கணிணி வழியாக தான் நான் உங்களை தொடர்பு கொள்கிறேன்.
பொதுவாக சோதிட துறைக்கு வருபவர்கள் அவர்களின் முன்னோர்கள் அதவாது அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் யாராவது இந்த தொழில் செய்தால் அவர்கள் இந்த துறைக்கு வருவார்கள் ஆனால் என் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் இந்த தொழிலை செய்தது இல்லை.
நான் வாழ்க்கையில் உள் தேடுதல் காரணமாக தான் இந்த துறைக்கு வந்தேன். பல வருட காலங்கள் பல இடங்களில் அழைந்து எடுத்த தகவல்களை என்னுடைய அனுபவத்தில் உள்ளவற்றையோடு உங்களுக்கு தந்து கொண்டு இருக்கிறேன்.
எனக்கு சோதிடதுறைக்கு என்று குரு அமைத்துக்கொள்ளவில்லை நானாகதான் சோதிடத்தைப் பற்றி படித்து வந்தேன். மந்திர சாஸ்திரத்திற்க்கு என்று குரு நாதர் எனக்கு உண்டு. நான் செய்த பல புண்ணியங்கள் தான் எனக்கு அந்த மாதிரி ஒரு நல்ல குரு நாதர் கிடைத்தார். அவர் மூலம் பல மந்திரங்களை கற்று வருகிறேன்.
அவர் மூலம் பல ஆன்மீக குருநாதர்கள் எனக்கு அறிமுகம் உண்டு. அவர் பெயர் வெளியிட கூடாது என்ற காரணத்தால் வெளியிடாதற்க்கு மன்னிக்க வேண்டும். அவர் பெயரை சொன்னாலும் உங்களுக்கு தெரியபோவதில்லை. அவர் வெளி உலகத்திற்க்கு வருவதில்லை காடுகளில் உள்ள குகையில் தான் அவர் இருப்பார். நீங்கள் நினைப்பது போல அவர் வெளிஉலக சாமியார் கிடையாது.
இந்த மாதிரி பல சாமியார்கள் தொடர்பு எனக்கு ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது அவர்கள் மூலம் பல விபரங்கள் எனக்கு கிடைக்கிறது. அதன் மூலம் பல சோதிட வாடிக்கையாளர்களுக்கு நான் பிரச்சினைகளுக்கு வழிகாட்டுகிறேன்.
என்னை நீங்கள் பார்க்க விருப்பபட்டால் என்னை தொடர்பு கொள்ளலாம். உங்கள் ஊருக்கு வரும் போது உங்களை தொடர்பு கொண்டு சந்திக்கிறேன். நான் ஒரு இடத்தில் இருப்பது இல்லை அனைத்து இடங்களும் சுற்றிக்கொண்டு தான் இருப்பேன். நீங்கள் சந்திக்க விரும்பினால் அந்த வாய்ப்பு கூடிய விரைவில் கூட வரலாம். சென்னையில் நீங்கள் சந்திக்க விரும்பினாலும் தொடர்பு கொள்ளுங்கள். உங்களை சந்திக்கிறேன்.
என்னை உங்கள் வீடுகளில் சந்திப்பது உங்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும் ஏன் என்றால் உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து நல்ல மற்றும் கெட்ட விஷயங்கள் தெரியவரும். அப்பொழுது நான் கொடுக்கும் தீர்வு உங்களுக்கு பயன் உள்ளதாக அமையும்.
என்னைப்பற்றி நான் கொடுத்த தகவல் உங்களுக்கு போதும் என்று நினைக்கிறேன்.
அடுத்த பதிவில் ஆறாம் வீட்டு தசாவைப் பற்றி தருகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.