வணக்கம் நண்பர்களே!
பல நண்பர்கள் என்னிடம் புத்தாண்டு பிறக்க போகின்றது ஏதாவது ஒரு நல்ல செய்தியை சொல்லுங்கள் என்று கேட்டார்கள். அனைத்து தளத்திலும் இதனைப்பற்றி சொல்லியிருப்பார்கள். நான் தனியாக சொல்லவேண்டுமா என்று கேட்டேன். அவர்கள் நீங்களும் ஏதாவது ஒரு நல்லதைப்பற்றி சொல்லுங்கள் என்று கேட்டார்கள். நண்பர்கள் கேட்டதால் உங்களுக்கு ஒரு பயனுள்ள ஒரு செய்தியை சொல்லுகிறேன்.
பொதுவாக நான் காடுகளுக்கு மற்றும் தனிமையான ஒரு இடத்திற்க்கு செல்லும்பொழுது நான் செய்வதை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். காடுகளில் உள்ள கோவில்கள் பெரும்பாலும் சித்தர்கள் உருவாக்கி இருப்பார்கள். இந்த கோவில்களில் நானே அபிஷேகம் செய்வேன். குறிப்பாக சிவனுக்கு அபிஷேகம் செய்வேன்.
மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோவிலுக்கு ஐயர் அபிஷேகம் செய்வார்கள். காடுகளில் இருக்கும் கோவிலுக்கு நாம் அபிஷேகம் செய்யலாம்.
அபிஷேகம் செய்வதால் என்ன பயன்?
ஒரு மனிதன் உலகியல் விசயங்களிலும் வெற்றி பெறவேண்டும் ஆன்மீகவிசயங்களிலும் மேலான நிலையை ஒருவன் பெறவேண்டும் என்றால் அவன் கண்டிப்பாக சிவனுக்கு அபிஷேகம் செய்யவேண்டும்.
ஜாதகத்தில் அதிகளவில் தோஷத்தால் பாதிப்படையும்பொழுது நமக்கு வழியே தெரியாது. அப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்யும்பொழுது எப்படிப்பட்ட தோஷமும் விலகி நல்ல வாழ்க்கை அமையும்.
வடநாட்டில் உள்ள கோவில்களில் நீங்களே அபிஷேகம் செய்யலாம் ஆனால் தென்இந்தியாவில் செய்யமுடியாது. நீங்கள் ஒரு கோவிலை அணுகி அங்கு பணத்தை கட்டி தான் செய்யமுடியும்.
பொதுவாக நீங்களே அபிஷேகம் செய்தால் மிக மிக நல்லது. அதற்கு நீங்கள் செய்யவேண்டியது நீங்களே ஒரு மண்ணை லிங்கம் போல் பிடித்து அதற்கு நீங்கள் அபிஷேகம் செய்யுங்கள்.
சிவனுக்குரிய ஏதாவது ஒரு மந்திரத்தை சொல்லி அபிஷேகம் செய்யுங்கள். சிவன் அன்பு மயமானவர் நீங்கள் செய்யும் குறைகளை நிவர்த்தி செய்து நல்லதை செய்வார்.
என்னுடைய தொழில் நண்பர்களுக்கு அவர்கள் கையில் அபிஷேகம் செய்ய சொல்லுவேன். அவர்கள் செய்வார்கள். அவர்கள் எல்லாம் நன்றாக தான் வாழ்க்கையை வாழ்கிறார்கள். நீங்களும் பயமின்றி அபிஷேகம் செய்யுங்கள்.
இதனை செய்து நீங்கள் நன்றாக வாழ என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அன்பே சிவம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு