வணக்கம்!
ஒவ்வொரு வருடமும் ஆண்டின் இறுதியில் இப்படி முடித்தால் தான் நமக்கும் ஒரு உத்வேகத்தோடு வருகின்ற ஆண்டில் எழுதமுடிகின்றது. இந்த வருடத்தில் நிறைய சம்பவங்களை நான் பார்த்து இருந்தாலும் பல நல்ல விசயங்களும் நடந்தன. நிறைய புதிய நட்புகள் எனக்கு கிடைத்தன. தொடர்ந்து பல நட்புகளை நாம் பெற்றுக்கொண்டே இருக்கிறோம். வரும் ஆண்டும் நிறைய பேர் என்னை சந்திக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
எங்களின் பகுதியில் அடித்த புயல் புரட்டிபோட்டது. இது ஒன்று தான் கொஞ்சம் துயரமான சம்பவம் என்றாலும் அதில் இருந்து மீண்டு வந்துக்கொண்டு இருக்கிறோம் மற்றபடி அனைத்தும் நல்லவையாகவே சென்றுக்கொண்டு இருக்கின்றன.
இந்த வருடத்தில் ஒரு புதிய முயற்சியை கடந்த ஒரு மாத காலமாக எடுத்துக்கொண்டு இருக்கிறேன். இதனை இந்த ஆண்டு கொடுத்தற்க்காக இறைவனிடம் நன்றியை தெரிவித்துக்கொண்டு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம். என்ன புதிய முயற்சி என்பதை வரும் ஆண்டில் அது முழுவடிவம் பெறும்பொழுது சொல்லுகிறேன் அது வரை அது இரகசியமாகவே இருக்கட்டும்.
ஜாதக கதம்பத்தைப்பற்றி அடுத்தவர்களிடம் சொல்லும் நட்புகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வரும் ஆண்டில் நிறைய பதிவுகளை கண்டிப்பாக கொடுக்கவேண்டும் என்ற உத்வேகத்தோடு இருக்கிறேன். தொடர்ந்து நல்ஆதரவை கொடுக்கும் அனைத்து நட்புகளுக்கும் நன்றி நன்றி நன்றி.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு