Followers

Monday, February 28, 2022

சிவராத்திரி

 

வணக்கம்!

                      ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் தினமும் சக்தியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் அதனோடு அந்த சக்தியை உயர்நிலைக்கு எடுத்துக் கொண்டு செல்ல சிவராத்திரியும் ஒரு நல்ல நாளாக எடுத்து கொண்டு அந்த நாளை நன்றாக பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு நாளும் நிறைய தவறுகள் செய்துவிட்டு சிவராத்திரி அன்று மட்டும் கண்முழித்து சிவன் அருள் வேண்டும் என்பது தவறான வழியில் செல்கிறோம் என்பதாக எடுத்து கொள்ளலாம்.

இந்தியாவை பொறுத்தவரை இது ஆன்மீக பூமி. இந்த நாட்டில் எந்த நாளும் எந்த நேரத்திலும் ஆன்மீக சக்தியை பெறுவதற்கு உள்ள நாடு. இதனை நீங்கள் எந்த நாளும் எடுத்து கொள்ள முடியும். சிவராத்திரி அன்று கூடுதலாக உங்களுக்கு கிடைக்கும். 

சிவராத்திரி அன்று தரிசனம் செய்ய கூடாதா என்று கேட்கலாம். நீங்கள் தரிசனம் செய்யுங்கள் அதில் இருந்து முழு ஆன்மீகவாதியாக மாறி விடுங்கள். 

ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும் போது உங்களின் கர்மா போகும் அதனோடு நல்ல சக்தி வாய்ந்த ஒரு நபராக உருவாகிவிடுவீர்கள்.

நன்றி

அன்புடன்
ராஜேஷ்சுப்பு