Followers

Saturday, March 31, 2012

இலவச சோதிட சேவை




இந்த மாதம் கொஞ்சம் சொந்த வேலை இருப்பதால் இலவச சோதிடம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. 






இலவச சோதிட சேவைக்கு நீங்கள் வருவதை வரவேற்கிறேன். உங்களுக்கு சேவை செய்வதில் பெரும் புண்ணியத்தை அடைகிறேன். 

நீங்கள் செய்ய வேண்டியது நம்முடைய Blog யில் Member ராக பதிவு செய்துக்கொண்ட பிறகு என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

உங்களுடைய பிறந்த தேதி,பிறந்த நேரம் மற்றும் பிறந்த ஊர் மற்றும் அருகில் இருக்கும் நகரத்தின் பெயர் உங்களைப் பற்றிய சிறிய விபரங்களை எனது email முகவரிக்கு அனுப்பினால் உங்களுக்கு சோதிட பலன்களை ஒரு வார காலத்தில் போன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். 

உங்களிடம் ஜாதக நகல் இருந்தாலும் எனக்கு அனுப்புங்கள். அனுப்பும் போது உங்களுக்கு தேவையான கேள்விகளை கேட்டு அனுப்புங்கள்.

போன் மூலம் கேட்பதாக இருந்தால் மட்டும் வெளிநாட்டு நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம். டைப் செய்வதற்க்கு நேர பற்றாக்குறையால் போன் மூலம் பலனை தருகிறேன்.



அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அனுபவம்



வணக்கம் நீண்ட நாட்களாக பதிவு எழுதவில்லை தினமும் வந்தவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன். எனக்கு மிகவும் வேண்டப்பட்டவர் ஒருவருக்கு திடிர் என்று உடல்நிலை சரியில்லை. அவருக்கு ஆப்பிரேஷன் செய்தார்கள். நானும் கூட இருக்க வேண்டியதாகிவிட்டது. நாம் தான் சோதிடராக இருப்பதால் எந்த ஒரு நிகழ்வையும் சோதிட கண்னோட்டத்தில் பார்க்கும் ஆளாக இருப்பதால் என்ன நடந்தது என்று பார்த்தேன்.

ஆப்பிரேஷன் செய்து கொண்டவர் ராசி மீன ராசி அவருக்கு ஒரு பையன் ஒரு பெண் இரண்டு பேரும் இரட்டையர்கள் இருவருக்கும் கன்னி ராசி.

மீன ராசிக்கு அஷ்டமசனி சனி பகவான் வக்கிரமாக இருப்பதால் ஏழில் சனி பகவான் என்று வைத்துக்கொள்வோம். லக்கினமும் மீனம் தான். ஏழில் சனி இருந்து நேரடியாக ராசிக்கு விழுவதால் உடல்நிலையில் மிகவும் பிரச்சினை செய்துவிட்டது. பிள்ளைகளின் ராசிப்படி தந்தை ஸ்தானத்தை காட்டும் இடத்தில் கேது பகவான் அமர்ந்துள்ளார்.

அதனால் தந்தைக்கு பிரச்சினையை ஏற்படுத்தி விட்டார். இருந்தாலும் ஆப்பிரேஷன் நன்றாக முடிந்துவிட்டது ஆனால் பிள்ளைகளின் ராசிப்படி கன்னி ராசிக்கு ஒன்பதாம் வீட்டிற்க்கு குரு வரபோகிறார். அதனால் தந்தைக்கு பிரச்சினை வரவாய்ப்பு உள்ளது.

எப்பொழுதும் குடும்ப சனி வந்தால் அதாவது இரண்டாம் வீட்டிற்க்கு வந்தால் குடும்பத்தில் ஏதாவது ஒருவர் இறப்பார். குடும்பத்தில் கூட்டத்தை கூட்ட நினைப்பார். அது நல்ல நிகழ்ச்சியாகவும் இருக்கலாம் அல்லது துக்க நிகழ்ச்சியாகவும் இருக்கலாம்.

ஏழரை சனி நடக்கும் நேரத்தில் ஒருவருக்கு மரணம் ஏற்படுவது மிக குறைந்த பட்சம் தான் அப்படி மரணம் ஏற்படுதல் என்பது சனிக்கு தீய கிரகம் சேர்க்கை ஏற்பட்டால் உண்டாகும். இப்பொழுது ஏழரை சனி நடப்பவர்கள் இந்த ஆண்டு இறுதியில் ராகு சனி உடன் சேருகிறார் . சனியுடன் செவ்வாய் ஜூன் மாதத்தில் இருந்து 45 நாட்கள் இருப்பார் அந்த நாட்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கு வேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Sunday, March 11, 2012

கோச்சார பலன் சூரியன்



சந்திரன் நின்ற ராசிக்கு சூரியன் வரும்போது அதாவது உங்கள் ராசிக்கு (முதல் வீட்டிற்க்கு) பொருட்செலவு ஏற்படும். குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும். நோய்கள் குணமாகும். உடம்பில் உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வரும் அதில் மட்டும் கவனம் தேவை. மாதத்தில் பாதி நாட்களுக்கு மேல் பலன்கள் மாறுபடும்.

சந்திரன் நின்ற ராசிக்கு அதாவது இரண்டாவது வீட்டிற்குச் சூரியன் வரும்போது மனநிம்மதி குறையும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சண்டை சச்சரவு இருக்கும். வருமானம் குறைவாக இருக்கும். துணைவியாருடன் சண்டை சச்சரவு ஏற்படும். பொறுமை காப்பது நல்லது. அரசாங்கத்தில் ஏதாவது உங்களுக்கு வேலை நடக்க வேண்டி இருந்தால் தள்ளி வைப்பது நல்லது.

மூன்றாம் இடத்திற்க்கு சூரியன் வரும்போது நல்ல பணவரவு இருக்கும். மனதில் இனபுரியாத மகிழ்ச்சி இருக்கும். இளைய சகோதர சகோதரிகள் ஆதரவு தருவார்கள். அரசாங்கத்தில் வேலையை ஏதும் இருந்தால் இந்த நேரத்தில் முயன்றால் எளிதில் அந்த வேலை நடைபெறும். நண்பர்கள் உதவி இருக்கும்.

நான்காம் வீட்டிற்க்கு சூரியன் வரும்போது நல்ல வருமானம் வரும் அதைபோல் செலவும் இருக்கும். மனதில் வீண் கவலை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். தாய் மனைவி மூலம் நல்ல உதவி கிடைக்கும். பயணம் மூலம் நல்லது நடக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சி நடக்கும். வண்டி வாகனங்களால் வருமானம் இருக்கும்.

ஐந்தாம் வீட்டிற்க்கு சூரியன் வரும்போது அரசாங்க வழியில் தொல்லை இருக்கும். குழந்தைகள் மூலம் செலவு ஏற்படும். பணத்தட்டுப்பாடு இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். குல தெய்வம் அருளினால் வெற்றி பெறலாம். ஷேர் மார்கெட்டால் பண இழப்பு ஏற்படும்.

ஆறாம் வீட்டிற்க்கு சூரியன் வரும்போது எடுத்த வேலை தடையின்றி நடைபெறும். நண்பர்கள் மூலம் நன்மை நடைபெறும். விரோதிகள் மூலம் வருமானம் இருக்கும். மனைவியின் மூலம் மகிழ்ச்சி இருக்கும். வேலையாட்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். செய்தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


Friday, March 2, 2012

கோச்சார பலன்கள்



வணக்கம் இப்பொழுது நாம் பார்க்கபோவது கோச்சார பலன்கள். கோச்சார பலன்கள் ஜாதகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கோச்சார பலன்கள் தற்போது கிரகங்கள் எங்கு இருக்கிறது அதாவது எந்த ராசியில் சென்று கொண்டு இருக்கிறது அதனால் ஜாதகருக்கு என்ன பலன் என்று பார்ப்பது கோச்சார பலன்கள் என்கிறோம்.

இதனை வைத்துதான் சனிப்பெயர்ச்சி குரு பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி என்று சொல்லுகிறார்கள். ஒவ்வொரு கிரகமும் எத்தனை நாட்கள் ஒரு ராசியில் தங்குகின்றன என்று வைத்து பலன்கள் கணித்து தரப்படுகிறது. சிலபேர் இந்த கோச்சார நிலையை மட்டும் கணக்கில் கொண்டு பலன்கள் கூறிவருகிறார்கள். அதனால் கோச்சார பலன்களும் நீங்கள் தெரிந்துக்கொள்ளுங்கள்.

இனிவரும் பதிவுகளில் ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு வீட்டிற்க்கு வரும் போது என்ன பலன்கள் என்று பதிவு வரும்.

கிருஷ்ணமூர்த்தி பத்ததி ஏன் இன்னும் பதிவு வரவில்லை என்று கேட்டுள்ளார்கள். மிகவும் எளிய முறையில் உங்களுக்கு புரியும் வகையில் தரவேண்டும் என்ற ஆசையால் தான் தாமதம் ஆகிறது. கவலையை விடுங்கள் கூடிய விரைவில் பதிவை தருகிறேன்.

நான் இருப்பது சென்னையில் இங்கேயே கரண்டுக்கு திண்டாட வேண்டியுள்ளது. மற்ற ஊர்களில் சொல்லவே வேண்டாம். அலுவலகத்தில் INVERTER வசதி இருப்பதால் சமாளிக்கமுடிகிறது. அதனால் தான் என்னால் பதிவு தரமுடிகிறது மற்ற பதிவர்கள் எல்லாம் எப்படி சமாளிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Thursday, March 1, 2012

பலகரை ஆருடம் நிறைவு பகுதி



ஒன்பது பலகரை நிமிர்ந்திருந்தால்

ஓடிவிட்டது உன் தொல்லை. தந்தை வழியில் நல்லது நடக்கும். நினைத்த காரியம் நடைபெறும். தந்தை வழி உறவினர்கள் உதவி உண்டு. வழக்கில் வெற்றி வாய்ப்பு உண்டு. பணம் வருவதால் உறவினர்கள் ஓடி வருவார்கள். குலதெய்வ அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். உயர் படிப்பு கிடைக்க வழி ஏற்பட போகிறது. அயல்நாட்டு மூலம் பணவரவு கிடைக்கும். மொத்தத்தில் பொன்னான வாய்ப்பு கிடைக்கபோகிறது.

பத்து பலகரை நிமிர்ந்திருந்தால்

நினைத்த காரியம் அதிக பொருள் கொண்டு அதாவது செலவு செய்து கிடைக்கும். பணமும் சமயத்தில் கிடைக்காது அதற்க்காகவே அதிக செலவு செய்யவேண்டும். தந்தைக்கு பணப்பிரச்சினை ஏற்படும். அண்டை அயலாரின் தொந்தரவுக்கு ஆளாகலாம். தினமும் ஏதாவது ஒரு கோவிலுக்கு செல்ல வேண்டும் அப்பொழுதுதான் பிரச்சனைகள் முடிவடையும்.

பதினோறு பலகரை நிமிர்ந்திருந்தால்

நினைத்த காரியம் நடைபெறும். நல்ல லாபம் உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உயர்பதவிகள் தேடிவரும். சகோதர சகோதரி வழியில் முழு உதவி கிடைக்கும். வெளிதேச பயணங்கள் செல்லலாம். தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். நிம்மதியான வாழ்க்கை வாழ வழி பிறந்துவிட்டது என்று சொல்ல வேண்டும். அம்மன் அருள் உண்டு.

பன்னிரண்டு பலகரை நிமிர்ந்திருந்தால்

நினைத்த காரியம் நடைபெறாது. வீட்டில் உள்ள பொருளோ அல்லது கையில் உள்ள பொருளோ களவு போகும். பெண்கள் மூலம் செலவுகள் ஏற்படும். அடிக்கடி மருத்துவனை செல்ல நேரிடும். அண்டை அயலார் உடன் சண்டை ஏற்பட்டு போலீஸ் ஸ்டேஷன் செல்ல நேரிடும். மொத்தத்தில் பன்னிரண்டு பலகரை விழுவது நல்லதல்ல. நடக்கமுடியாமல் அவஸ்திபட நேரிடும்.

இத்துடன் பலகரை ஆருடம் முடிவடைகிறது பொறுமையாக படித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் ஆருடம் கூறுவது நல்ல தெய்வ பக்தி தேவை அப்பொழுதுதான் நீங்கள் சொல்லும் பலன் நிச்சயமாக நடைபெறும். நானும் ஆருடம் கூறுகிறேன் என்று மாட்டிக்கொள்ளாதீர்கள்.

ஆருடத்தில் பல வகையான ஆருடம் இருக்கிறது. ஆருடத்தின் மூலம் மிகத்துல்லியமாக பலன் கூறிவிடமுடியும் பிரச்சினைகளுக்கு தீர்வும் கிடைக்க வழி செய்யமுடியும். அனைத்து ஆருடத்தைப் பற்றியும் எனக்கு நேரம் கிடைக்கும் போது கற்று கொடுக்கிறேன். அதுவரை பொறுமை தேவை. அடுத்த பதிவில் வேறு ஒரு பாடத்துடன் பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.