Followers

Sunday, May 30, 2010

இராகு
இராகு சூரியனை ஒரு முறை சுற்றிவர 18 1/2 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். இராகுக்கு என்று சொந்த வீடு கிடையாது. தான் அமர்ந்த வீட்டையே சொந்த வீடாக எடுத்துக்கொள்ளும். பாட்டன்,பைத்தியம்,பேய்,விஷம்,குடல் சம்பந்தமான நோய்,பித்தம்,பிறரை கெடுத்தல்,விதவையை சேர்தல்,குஷ்டம்,மாந்தீரிகம்,அன்னிய பாஷை அறிதல்,மறைந்து வாழ்தல்,விஷ பூச்சிகள்,புத்திர தோஷம் ஆகியவற்றிருக்கு இராகு காரணம் வகிக்கிறார்.இராகு தான் அமர்ந்த இடங்களையே சொந்தமாக கொள்வதால் அந்த வீட்டின் அதிபதிகளின் தன்மைக்கு ஏற்றவாரே பலன் தரும். இராகு,கேதுவிற்க்கு இடையில் லக்கினம் முதல் அனைத்து கிரகங்களும் அகப்பட்டுக்கொண்டால் அதற்கு கால சர்ப்ப தோஷம் என அழைக்கப்படும். அகப்பட்ட கிரகம் வலுவிழந்துவிடும்.

நிறம்-கருப்பு
மலர்-மந்தாரை
வாகனம்-ஆடு
ஆட்சி-இல்லை
உச்சம்-விருச்சகம்
நீசம்-ரிஷபம்
நட்சத்திரங்கள்-திருவாதிரை,சுவாதி,சதயம்
பால்-பெண்
கோசார காலம்-1 1/2 வருடம்
நட்பு-சனி,சுக்கிரன்
பகை-சூரியன்,சந்திரன்,செவ்வாய்
சமம்-புதன்,குரு
உலோகம்-கருங்கல்

Saturday, May 29, 2010

சனி

சனி கிரகம் சூரியனுக்கு சுமார் 88,66,000 மைல்கள் அப்பால் இருந்து சூரியனை சுற்றி வருகிறது. ஒரு தடவை சுரியனை சுற்றி வர 29 வருடகாலம் ஆகிறது. சனி ஆயுள்காரகன் என அழைக்கப்படுகிறார். அளவற்ற துன்பங்களுக்கு இவரை காரணம் ஆகிறார். சனி பகவான் நிறைய துன்பங்கள் கொடுத்தாலும் இவர் சிறந்த நீதிமான் ஆவார். அளவற்ற துன்பத்தை அளிப்பது போலவே அளவற்ற நன்மையும் செய்வார். சனி கொடுத்த செல்வத்தை அவராலே கூட பிடுங்க முடியாது அந்த அளவுக்கு நன்மையை தருவார். சனிபகவானுக்கு 3,7,10 என்ற பார்வை உண்டு. இரவில் வலிமை,எருமை,யானை,அடிமை வாழ்வு,எண்ணெய்,வீண்கலகம்,கள்ளத்தனம்,கருநிறமுள்ள தானியம்,இரும்பு,கல்,மண்,சுடுகாடு, மதுகுடித்தல்,கஷ்டகாலம்,சிறைவாழ்வு ஆகியவற்றுக்கு காரணம் ஆகிறார்.

நிறம் - கறுப்பு
உலோகம் - இரும்பு
தானியம்- எள்
திசை- மேற்க்கு
பால்-அலி
நட்பு-புதன்,சுக்கிரன்,இராகு.கேது.
பகை- சூரியன்,சந்திரன்.செவ்வாய்
சமம்-குரு
திசைகாலம்-19 வருடங்கள்
மலர்-கருங்குவளை
நட்சத்திரங்கள்- பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி.

Friday, May 14, 2010

சுக்கிரன்
சுக்கிரன் இது சூரியனுக்கு 6,70,00,000 அப்பால் சுற்றி வருகிறது. இது சூரியனை 225 நாட்களில் சுற்றி வருகிறது. இது 23 1/2 மணி நேரத்தில் தன்னைத்தானே சுற்றி வருகிறது. இவர் களத்திர காரகன் என அழைக்கப்படுகிறார். அசுர குரு சுக்கிரன் ஆவார். உலக இன்பங்களுக்கும் ஆடம்பரமான வாழ்விற்க்கும், அமோகமான வாழ்விற்க்கும் சுக்கிரன் தான் காரணமாகிறார். காமஇச்சை,வாகனம்,ஆடைகள் ஆபரணங்கள்,அலங்காரம்,வாசனை திரவியங்கள்,சங்கீதம்,அழகு,வியாபாரம்,நடனம்,நடிப்பு ஆகியவற்றுக்கு காரணம் ஆகிறார். இவருக்கு 7 ஆம் பார்வை மட்டுமே உண்டு.

நிறம்- வெண்மை
வாகனம்-கருடன்
உலோகம்-வெள்ளி
தானியம்-மொச்சை
பால்-பெண்
திசைகாலம்-20 வருடங்கள்
கோசர காலம்-1 மாதம்
நட்பு-புதன்,சனி,ராகு,கேது
பகை-சூரியன்,சந்திரன்
சமம்-செவ்வாய்,குரு
நட்சத்திரம்-பரணி,பூரம்,பூராடம்

குரு
குரு இது சூரியனுக்கு சுமார் 48,00,00,030 KM தூரத்திற்க்கு அப்பால் இருந்த சூரியனை சுற்றி வருகிறது இது தன்னைத்தானே 9 மணி 55 நிமிடங்களில் சுற்றுகிறது. குரு புத்திரகாரன் என அழைக்கப்படுகிறது. மந்திரம்,ஞாபகசக்தி,வேதமந்திர சாஸ்திர அறிவு,யானை,குதிரை போன்ற வாகன அந்தஸ்த்து,பணம்,பிராமண உபசாரம் இது அனைத்திற்க்கும் காரகன் ஆகிறார். குரு பார்வை கோடி புண்ணியம். இவரின் பார்வையால் அனைத்து தோஷமும் நீங்கும்.ஆனால் குரு அமர்ந்த இடம் கெட்டுவிடும்.

நிறம்-மஞ்சள்
உலோகம்-பொன்
தானியம்-கொண்டை கடலை
பால்-ஆண்
திசை காலம்-16 வருடங்கள்
கோசார காலம்- 1 வருடம்
நட்பு-சூரியன்,சந்திரன்,செவ்வாய்
பகை-புதன்,சுக்கிரன்
சமம்- சனி,ராகு,கேது
உபகிரகம்-எமகண்டன்
நட்சத்திரம்-புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி

Wednesday, May 12, 2010

புதன்
புதன் வித்யாகாரன் என்று அழைக்கப்படுகிறார். இது சூரியனை சுற்றி வருகிறது சூரியனுக்கு சுமார் 1,60,00,000 KM அப்பால் இருந்து சுற்றி வருகிறது. இது தன்னைத்தானே 24 மணி நேரத்தில் சுற்றி வருகிறது. 88 நாட்களில் சூரியனை சுற்றி வருகிறது. புதன் கல்வி,மாமன், அத்தை,மைத்துனர்களை பற்றி அறிந்து கொள்ள புதன் உதவி செய்பவர். புதன் ஒரு அலிக்கிரகம் எனப்படும். கல்வி,வித்தை,மாமன்,அத்தை,மைத்துனர்,நண்பர்கள்,கணிதம்,கபடம்,கதைகள், சிற்பம்,சித்திரம்,நுண்கலைகள்,நடிப்பு,சாஸ்திர ஞானம் ஆகியவற்றிக்கு காரணம் ஆகிறார்.

நிறம் - பச்சை
வாகனம்- குதிரை
தானியம்-பச்சைப் பயறு
ஆட்சி- மிதுனம்.கன்னி
உச்சம்-கன்னி
நீசம்-மீனம்
திசைகாலம்- 17 ஆண்டுகள்
பகை-சந்திரன்

Tuesday, May 11, 2010

செவ்வாய்செவ்வாய் இது தன்னைத்தானே 24 மணி 37 நிமிடம் 23 விநாடிகளில் சுற்றி வரும். சூரியனை 687.9 நாட்களில் சுற்றி வருகிறது. செவ்வாய் சகோதரன் காரகன் ஆகிறார். மேஷத்தில் செவ்வாய் இருக்கும் போது வெறித்தனமாகவும். விருச்சகத்தில் உள்ள போது வேகம் குறைவாகவும் இருக்கிறார். திருடு,வெட்டுக்காயம்,தீ காயம்,எதிரிகள்,பேராசை,அதிக காமம்,போலீஸ்,துணிச்சல்,அரசியல் தொடர்பு ஆகிய குணங்கள் ஆகும்.

செவ்வாய்க்கு 4,7,8 ஆகிய பார்வைகள் உள்ளன. 1,4,7 இருப்பது நல்லதல்ல. 2,4,7,8,12 ஆம் இடங்கள் இருப்பது நல்லதல்ல. இந்த இடங்களில் இருந்தால் தோஷம் ஆகும்.

நிறம்- சிகப்பு
அணிகலன்-பவளம்
வாகனம்-அன்னம்
தானியம் -துவரை
காரகம்- பூமி,சகோதரன்,வீடு
கடவுள் - முருகன்
சுவை-துவர்ப்பு
உச்சம- மகரம்
நீசம் - கடகம்
திசைகாலம்- 7 ஆண்டுகள்
நட்பு- சூரியன்
பகை-புதன்,ராகு,கேது
சமம்-சுக்கிரன்,சனி
உபகிரகம்-துமன்
கோவில்-வைத்தீ்ஸ்வரன் கோவில்

Monday, May 10, 2010

சந்திரன்
இது பூமியில் இருந்து 2738800 KM துரத்தில் சுற்றி வருகிறது . இது பூமிக்கு உபகிரகம். இது தன்னைத் தானே சுற்ற 27 நாட்கள் 8 மணி நேரம் ஆகிறது. இது பூமியை 29 நாட்கள் 12 மணி 44 விநாடிகளில் சுற்றி வருகிறது. சந்திரன் மனதுக்கு காரகம் ஆகிறார். தாயாருக்கும் காரகம் ஆகிறார்.சந்திரன் இரட்டை நிலை பண்பு கொண்டது. வளர்பிறை.தேய்பிறை என்ற இரண்டு நிலைப்பாடு உண்டு. அதற்கு ஏற்றதுப்போல் தான் பலன்கள் தரும்.

சந்திரனை கொண்டு ராசி கணக்கிடப்படுகிறது. சந்திரனுடன் கெட்ட கிரகங்கள் இணைவது நல்லது கிடையாது. முக அழகு, பெண் வழியில் லாபம், நீர் சம்பந்தமான பொருட்கள். சந்திரன் பார்வை 7ம் பார்வை மட்டும் உண்டு. அதைப்போல் சந்திரன் எட்டில் அமரும் போது வாழ்க்கை சோதனை ஆகிவிடும். ஏழில் தனித்து அமரும் போது காதல் மணம் தருகிறார்.

நிறம் - வெண்மை
இரத்தினம்- முத்து
உலோகம்-ஈயம்
ஆட்சி- கடகம்
உச்சம்-ரிஷபம்
நீசம்-விருச்சகம்
இனம்-பெண்
நட்பு-சூரியன்
பகை-இராகு
சமம்-செவ்வாய்,வியாழன்.சனி.சுக்கிரன்
தானியம்-பச்சரிசி
திசைகாலம்- 10 ஆண்டுகள்

Friday, May 7, 2010

சூரியன்

இதுவரை நாம் ராசிகளை பற்றி பார்த்து வந்தோம். இனி கிரகங்களை பற்றி பார்ப்போம். 
ஒரு நெருப்பு கோளம் ஆகும். இதை நாம் கிரகம் என்று அழைக்கிறோம். ஆனால் சிலர் இதனை நட்சத்திரம் என்று அழைக்கின்றனர். ஆனால் ஜோதிடத்தில் நாம் கிரகம் என்றே அழைக்க வேண்டும். இந்த கிரகத்தை மையமாக வைத்தே அனைத்து கிரகங்களும் இயங்கி வருகிறது. சூரியன் வான்வெளியில் தன்னைத் தானே சுற்றி வருகிறது. இது நமது பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு சுமாராக 9,20,30,000 KM ஆகும். சூரியன் தன்னைத்தானே ஒரு தடவை சுற்றி வர ஒரு மாதம் காலம் ஆகிறது. 12 ராசியையும் சுற்றி வர 365 நாள் 15 நாழிகை 32 விநாடிகள் ஆகிறது. இது தான் நாம் ஒரு வருடம் என்கிறோம். இவர் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் தங்கி இருப்பார். இவர் அடுத்த ராசிக்கு செல்லும் போது அடுத்த மாதம் பிறக்கும்.

சூரியன் ஆத்ம காரகன் என்று அழைக்கப்படுகிறார். இவரே உடம்புக்கு உயிர் தருபவர். சூரியனை வைத்தே லக்கினம் கணக்கிடப்படும். சூரியனை வைத்து தகப்பனார்,உடல்பலம்,ஆண்மை,பரிசுத்தம்,அரசியல் தொடர்பு தகப்பனார் உடன் பிறந்தவர்கள், புகழ் அனைத்தும் பார்க்க வேண்டும்.இவர் ஐந்தில் வந்து அமரும் போது புத்திர தோஷத்தை தருகிறார். ஏழில் வந்து அமரும் போது களத்திர தோஷத்தை தருகிறார்.

நிறம் - சிவப்பு
மலர் - தாமரை
தேசம் - கலிங்கம்
தானியம் - கோதுமை
வாகனம் - தேர்
நட்பு கிரகம் - சந்திரன்.வியாழன்.செவ்வாய்
பகை கிரகம் - சுக்கிரன்.சனி.ராகு.கேது
நட்சத்திரம் - கார்த்திகை,உத்திரம்,உத்திராடம்
இனம் - ஆண்
நீசம் - துலாம்
உச்சம் - மேஷம்

Thursday, May 6, 2010

ராசிகளின் பொது பலன் - 4


மகரம்


மகரத்தில் பிறந்தவர்கள் அனைவரும் கவரகூடிய தோற்றத்தை பெற்றிருப்பார்கள். தோற்றத்தை வைத்து அனைவரையும் கவர்ந்து விடுவார்கள்.ஓயாமல் உழைப்பார்கள்.மென்மையான உள்ளம் உடையவர்கள். பிறந்த இடத்தை விட்டு வெளி ஊர்களில் வாழ்வார்கள்.பயந்த சுவாசத்துடன் வாழ்வார்கள். இவர்களுக்கு வாயு தொந்தரவு இருக்கும்.மனைவியிடம் அளவு கடந்த அன்புடன் இருப்பார்கள்.திருமணத்தின் போது மிகவும் எச்சரிக்கையுடன் பொருத்தம் பார்த்து திருமணம் செய்யபட வேண்டும்.

கும்பம்

கும்பத்தில் பிறந்தவர்கள் உடம்பு பித்த சரீரமாக இருக்கும். சிவந்த கண்களாகவும் சிலருக்கு இருக்கும்.நண்பர்களை ஏமாற்றி பிழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். குறைந்த கல்வி அறிவு இருக்கும். செய்த நன்றியை மறப்பார்கள். ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களுக்கு வாயு சம்பந்தமான வியாதிகள் வரும்.


மீனம்

மீனத்தில் பிறந்தவர்கள் அழகான பார்வை இருக்கும். கல்வி நன்றாக கற்பார்கள். செல்வந்தர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு வரும் மனைவி அழகு இல்லாமல் இருக்கும். இவர்கள் நன்றாக சாப்பிடுவார்கள். இவர்கள் எந்த விசயத்திலும் முன் எச்சரிக்கையுடன் இருப்பார்கள். இவர்களுக்கு காச நோய் வரும்.

Tuesday, May 4, 2010

ராசிகளின் பொது பலன் - 3


துலாம்

துலாம் பிறந்தவர்கள் செல்வந்தவர்களாகவும் மக்கள் செல்வம் உடையவராகவும் இருப்பார்கள். உயர்ந்த நாகரிகத்தை விரும்புவராகவும் ஆடம்பரமாகவும் இருப்பார்கள். அதைப்போல் நல்ல ரசனைமிக்கவராகவும் இருப்பார்கள். நண்பர்களிடத்தில் மிகுந்த மரியாதை உடையவராகவும் இருப்பார்கள். இவர்களுக்கு இவர்களின் வளர்ச்சியை கண்டு எதிரிகள் உருவார்கள். இவர்கள் குடும்பத்தை விட்டு அடுத்த குடும்பத்தில் தலையிட மாட்டாரகள்.வண்டி வாகனம் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிகத்தில் பிறந்தவர்கள் படி படியாக முன்னுக்கு வருபவர்கள்.எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.தைரியமாக எந்த செயலையும் செய்வார்கள். பெரிய வேலைகளை தந்திரத்துடன் செய்வார்கள். அடுத்தவர்களிடம் அன்பாக பழகுவார்கள். வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் நிறைந்து காணப்படும்.காய்ச்சல் அடிக்கடி வரலாம்.

தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்கள் சிவந்த உடம்புடனும்,அழகிய கண்களுடன் இருப்பார்கள்.தனுசு ராசியின் அதிபதி குரு என்பதால் இவர்கள் திருடபவர்களையும், ஏமாற்றுபவர்களையும் எளிதில் அடையாளம் கண்டுபிடிப்பார்கள். இவர்கள் வாழ்க்கையில் நடுத்தர வயதில் கஷ்டபடுவார்கள். இவர்களுக்கு சிறுவியாதிகள் வரலாம்.புத்திர பாக்கியம் குறைவு இருக்காது. நறுமண பொருட்கள் மீது நாட்டம் அதிகமாக இருக்கும்.


Monday, May 3, 2010

ராசிகளின் பொது பலன் - 2


கடகம்

கடகத்தில் பிறந்தவர்கள் சிகப்பான கலருடனும்.அங்கலட்சணனுத்துடன் இருப்பார்கள்.கல்வி அறிவு இருக்கும். பெற்றோரை பேணி காப்பவராகவும் இருப்பார்கள். பிறரை ஏமாற்றும் குணம் இவர்களிடம் இருக்கும்.தன்னைத்தானே புகழ்ந்து கொள்வார்கள்.பிறரிடம் அன்பு கொள்வதுபோல் கொண்டு நடிப்பார்கள். பிறரை ஏமாற்றுவதால் இவர்களுக்கு இவர்கள் இருக்கும் ஊர்களில் இவர்களுக்கு மரியாதை குறைவு ஏற்படும்.தன் குழந்தையிடம் அன்புடனும் பிறர் குழந்தைகளிடம் அன்பு இருப்பதுபோல் நடித்துக்கொண்டு இருப்பார்கள். சருமம் சந்தப்பட்ட நோய்கள் வரலாம்.குறைந்த வயதில் மரணம் ஏற்படலாம்.ஒரு சிலருக்கு மட்டுமே இதுமாதிரி வரலாம்.

சிம்மம்

சிம்மத்தில் பிறந்தவர்கள் சிவந்தமேனியுடன் இருப்பார்கள்.நேர்மையுடன் நடப்பவர்களாகவும் இருப்பார்கள்.அரசாங்கத்தில் வேலை செய்பவர்களாகவும் அல்லது அரசாங்க உதவி பெறுபவராகவும் இருப்பர்.அநீதிகளை கண்டு எதிர்பார்கள்.நன்றாக சாப்பிடுவார்கள். எந்த காரியத்திலும் வெற்றி பெறனும் என்ற எண்ணங்கள் உடையவர்கள். இவர்கள் எந்த தவறுகளும் செய்யமாட்டார் அப்படி தவறு செய்தால் மாட்டிக்கொள்வார்கள். வியாதிகள் அதிகம் வராது. சிறுவியாதிகள் வரும்.அப்படி சிறுவியாதிகள் வந்தாலும் உடனே போய்விடும். இவர்கள் அதிக கோபம் வரும்.

கன்னி

கன்னியில் பிறந்தவர்கள் சுமாரான அழகு இவர்களுக்கு இருக்கும்.பிறரை ஏமாற்றி பிழைக்கும் எண்ணம் இருக்கும்.வாழ்க்கையில் இளமையில் வறுமையுடனும் பிறகு செல்வந்தர்களாகவும் இருப்பார்கள் திருமணத்திற்க்கு பிறகு நல்ல வாழ்க்கை அமையும்.சமுகத்தை பற்றி நன்றாக அறிந்து வைத்திருப்பார்கள். இவர்கள் பேச்சுகளால் அடுத்தவரை மயக்குவார்கள்.இவர்களுக்கு வயிற்றுவலி.அம்மை போன்றவை ஏற்படலாம்.


ராசிகளின் பொது பலன் - 1மேஷம்

மேஷத்தில் பிறந்தவர்கள் அழகான உடம்பை பெறுவர்.பூமி நிலங்கள் கிடைக்கும்.விவசாய சம்பந்தப்பட்ட தொழிலில் லாபம் பெறுவர்.எதையும் சாதித்து காட்ட வேண்டும் என்ற துடிப்பு மனத்தில் இருக்கும்.அரசாங்கத்தில் மதிப்பு கிடைக்கும்.தெய்வீக வழிப்பாட்டில் ஈடுபடுவர். அதிலும் முருகன் மேல் அதிக ஈடுபாடு இருக்கும்.இவர்கள் பரம்பரையில் இதுவரை யாரும் முருகன் வழிபாட்டில் இல்லை என்றாலும் இவர்கள் முருகனை வழிபாடு செய்வார்கள்.இவர்களிடம் வேலை ஆள்கள் அதிகம் பேர் வேலை செய்வார்கள். இவர்களுக்கு சிறுவயதில் தீக்காயங்கள் ஏற்படலாம்.

ரிஷபம்

ரிஷபத்தில் பிறந்தவர்கள் குண்டனா உடம்பையும்.கம்பீரமான தோற்றத்தை உடையவராகவும் இருப்பார்கள்.தெய்வபக்தி உடையவராகவும் இருப்பார்கள்.நல்ல கல்வி அறிவு இருக்கும்,கல்வி.சாஸ்திரம்.கணிதம்.வேதியியல் கற்றவராகவும் இருப்பார்கள்.ஆடம்பரமான ஆடைகளை விரும்பி அணிவர்.சிலர் வேடிக்கையாகவும் பேசுவார்கள்.வண்டி வாகனத்துடன் வாழ்வார்கள்.குழந்தைகளிடம் அன்பாக இருப்பார்கள். சில சமயம் தன் சகோதர,சகோதரிகளுக்காக எதையும் விட்டுதருபவர்களாக இருப்பார்கள்.இவர்களுக்கு சிறு சிறு வியாதிகள் வந்து தொந்தரவு செய்யும்.

மிதுனம்

மிதுனத்தில் பிறந்தவர்கள் கருப்பு உடம்புடனும். சிரித்து பேசும் முகத்துடனும் இருப்பார்கள்.உள்ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்களாக இருப்பார்கள். பேச்சில் தந்திரம் இருக்கும்.சுயநலம் இருக்கும்.கலைத்துறையில் ஆர்வம் மிகுதியாக இருக்கும். தன் முன்னேற்றத்தால் வாழ்வில் வெற்றி பெறுவர்.இவர்களுக்கு தீ,ஆயுதம் ஆகியவற்றால் தீங்கு ஏற்படும்.ஒரு சிலருக்கு பித்தம்.கண் நோய்கள் ஏற்படலாம். பகைவரால் தீங்கு ஏற்படலாம்.
...

Sunday, May 2, 2010

ராசிகளின் குணங்கள்நாம் இப்பொழுது ராசிகளின் குணங்களை பற்றி பார்ப்போம்.
ஆண் ராசிகள்
மேஷம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம் ஆகிய ராசிகள் ஆண் ராசிகள் ஆகும்.
பெண் ராசிகள்
ரிஷபம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,மீனம் ஆகிய ராசிகள் பெண் ராசிகள் ஆகும்.
நெருப்பு ராசி
மேஷம்,சிம்மம்.தனசு ஆகிய ராசிகள் நெருப்பு ராசி ஆகும்.
ராசிகளின் திசைகள்
மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி ஆகிய ராசிகள் வடக்கு திசை ராசிகள் ஆகும்.
துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம் ஆகிய ராசிகள் தெற்கு திசை ராசிகள் ஆகும்.
காற்று ராசி
மிதுனம்,துலாம்,கும்பம் ஆகிய ராசிகள் காற்று ராசி ஆகும்.
ஜலராசி
கடகம்,விருச்சிகம்,மீனம் ஆகிய ராசிகள் ஜலராசி ஆகும்.
வறண்ட ராசிகள்
மேஷம்,மிதுனம்,சிம்மம்,கன்னி ஆகிய ராசிகள் வறண்ட ராசிகள்.
முரட்டு ராசிகள்
மேஷம்,விருச்சிகம் ஆகிய ராசிகள் முரட்டு ராசிகள் ஆகும்.
சர ராசிகள்
மேஷம்,கடகம்,துலாம்,மகரம் ஆகிய ராசிகள் சர ராசிகள் ஆகும்.
ஸ்திர ராசிகள்
ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் ஆகிய ராசிகள் ஸ்திர ராசிகள் ஆகும்.
உபய ராசிகள்
மிதுனம்,கன்னி,தனுசு,மீனம் ஆகிய ராசிகள் உபய ராசிகள் ஆகும்.
ஊமை ராசிகள்
கடகம்,விருச்சிகம்,மீனம் ஆகிய ராசிகள் ஊமை ராசிகள் ஆகும்.
நான்கு கால் ராசிகள்
மேஷம்,ரிஷபம்,சிம்மம்,மகரம் ஆகிய ராசிகள் நான்கு கால் ராசிகள் ஆகும்.
இரட்டை ராசிகள்
மிதுனம்,தனுசு,மீனம் ஆகிய ராசிகள் இரட்டை ராசிகள் ஆகும்.