Followers

Saturday, March 31, 2018

ஏழரைச்சனி


ணக்கம்!          
                    ஏழரைசனி காலக்கட்டங்களில் ஒருவர் தன்னுடைய உடலுக்கு என்று மருத்துவசெலவை செய்யவேண்டிய கட்டாயத்தை உருவாக்கிவிடும். ஒருவர்க்கு சனியின் இரண்டாவது சுற்று சுற்றும்பொழுது இது கொஞ்சம் அதிகமாகவே செலவை வைத்துவிடுகின்றது.

பலரின் வாழ்க்கையில் உற்று நோக்கும்பொழுது இது கண்டிப்பாக நடந்தே தீரும் என்பது மட்டும் தெரிகிறது. ஏழரைசனியின் காலத்தில்  தொழில் செய்வது அல்லது ஒரு வேலையில் இருக்கும்பொழுது இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

ஏழரைச்சனியின் காலக்கட்டத்தில் சனியின் பலன் குறைவதால் அது உடலுக்கு தேவையான சக்தியை கொடுப்பதில்லை அதனால் உடல் நோய்வாய்படுகின்றது. ஏழரைச்சனியின் காலக்கட்டத்தில் எந்த வேலையும் இல்லாமல் சும்மா இருந்தால் ஒரளவு நமக்கு சனியனின்  பலன் கிடைக்கும்.

இந்த காலக்கட்டத்தில் நாம் வேலை செய்யாமல் இருக்கமுடியாது என்பதால் கொஞ்சம் பாதிப்பும் அதிகமாகவே இருக்கின்றது. என்ன தினமும் மாத்திரை உட்க்கொண்டுவிட்டு வேலையை பார்ப்பது போல அமைந்துவிடும்.

ஒருவரின் சுயஜாதகத்தில் சனி அமர்ந்த நிலைக்கு தகுந்தவாறு தான் ஏழரைசனியின் காலத்திலும் இது பலனை தருகின்றது. அதற்கு தகுந்தமாதிரி பலனை கண்டுக்கொண்டு செயல்படுங்கள்.

ஜாதககதம்பத்தின் கட்டண சேவைக்கு தங்களை தயார்படுத்திக்கொண்டு அதில் இணைந்துவிடுங்கள். உங்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த பல பதிவுகள் தருவதற்க்கு தயார்படுத்திக்கொண்டு வருகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, March 30, 2018

சிறப்பு பதிவு 4


ணக்கம்!
         முதலில் நாம் எந்த பாதையில் செல்லபோகிறோம் என்று தீர்மானித்துவிடவேண்டும். அதன்பிறகு உங்களின் வாழ்க்கையை அதனை நோக்கி கொண்டு செல்லவேண்டும். எதிர்காலம் என்ற காற்று ஒருவரை எப்படி வேண்டுமானாலும் மாற்றும் சக்தி படைத்தது. எதிர்காலம் மாற்றினாலும் நம்மால் பல ஒரளவு அதனை தீர்மானித்து கொண்டு செல்லமுடியும் என்று நம்பிக்கையை வைக்கவேண்டும்.

முதலில் ஆன்மீகமா அல்லது நாத்திகமாக என்பதை கூட தீர்மானித்துவிடுவது நல்லதாகவே இருக்கும் என்ற பல நண்பர்களிடம் நான் சொன்னது உண்டு. ஒரு சில நண்பர்கள் நாத்திக கருத்தின் சிந்தனையோடு இருப்பார்கள். உங்களுக்குள் என்ன இருக்கின்றதோ அதனை கொண்டு சென்றுவிடுங்கள் என்று சொன்னது உண்டு.

உங்களுக்கு நேரம் சரியில்லை அதனால் தான் உங்களுக்கு திருமணம் நடக்க மாட்டேன்கிறது அல்லது வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் வருகின்றது என்பதை நான் அதிகம் சொல்லுவதில்லை. உங்களின் பொருளாதார வளத்தை எப்படி மேம்படுத்திக்கொள்ளலாம் என்ற ஒரு அடிப்படை சிந்தனையை நிறைய பதிவில் சொல்லிருக்கிறேன்.

இன்றைய காலத்தில் உங்களின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்யாமல் உங்களின் வாழ்க்கை கொண்டு செல்வது என்பது நடக்கவே முடியாத ஒரு காரியமாகவே இருக்கும். பொருளாதார தேவையை பூர்த்தி செய்துவிட்டால் அதன்பிறகு வரும் பிரச்சினை மிக மிக குறைவாகவே இருக்கும்.

முதலில் பொருதாரதேவையை பூர்த்தி செய்துவிட்டு அதன்பிறகு உள்ள விசங்களை பார்த்துக்கொள்ளலாம். ஒரு சோதிடர் சொல்லும் பலனை தவறு என்று சொல்ல ஆயிரம் விதிகள் இருக்கலாம் ஆனால் அதனால் நமக்கு என்ன பயன் என்று பார்க்கவேண்டும். எதுவாக இருந்தாலும் சரி உங்களின் வாழ்க்கைக்கு அது எந்தவிதத்தில் பயன்படும் என்ற நோக்கம் இருந்தால் கண்டிப்பாக உங்களால் எளிதில் ஒரு அற்புதமான வாழ்க்கையை வாழலாம்.

கடந்த பதிவில் அமாவாசைப்பற்றி சொல்லிருந்தேன். அமாவாசையை நாம் எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை தான் சொல்லிருந்தேன். அமாவாசைப்பற்றி விவாதம் செய்தால் அதுவும் அறிவியில் ரீதியில் விவாதம் செய்தால் அது ஆயிரம் பதிவுகளுக்கு மேல் சென்றுவிடும். அதனை செய்வதற்க்கு நம்முடைய வாழ்க்கை கிடையாது. உலகத்தில் உள்ள அனைத்து விசயத்தையும் உங்களின் வாழ்க்கைக்கு எப்படி உதவவைக்கலாம் என்பதை தான் சொல்லுகிறேன்.

ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஜாதககதம்பத்தில் மது குடித்தால் உங்களின் உடலுக்கு நல்லது என்று சொல்லிருக்கிறேன். உண்மையில் எந்த ஒரு ஆன்மீகவாதியும் சரி சோதிடர்களும் சரி இந்த விசயத்தை பொதுவில் சொல்லவே மாட்டார்கள் ஆனால் நான் சொல்லிருந்தேன். தீமையாக இருந்தால் கூட அதில் நன்மை கிடைக்கும் என்றால் கண்டிப்பாக அதனை செய்யுங்கள் என்று சொல்லிவிடுவேன்.

ஒருவர் தேர்ந்தெடுக்கும் பாதை அல்லது தேர்ந்தெடுத்த பாதை சரியா தவறா என்பது சோதிடத்தில் உள்ள பொதுகருத்தை வைத்தே சொல்லிவிடலாம். அவர்களின் ஜாதகத்தை வைத்து மிகச்சரியாக நாம் கணித்து சொல்லிவிடலாம்.

ஒன்றை மட்டும் உங்களிடம் சொல்லுகிறேன் பாருங்கள். சோதிட பொதுவிதியை வைத்து சொல்லுகிறேன். ஒருவருக்கு சுக்கிரதசா நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம் அவர்க்கு அந்த தசாகாலத்தில் அவர் ஒரு வங்கியில் காசாளராக இருந்தால் அவர்க்கு அந்த தசா வீணாகவே செல்லும் என்று சொல்லிவிடலாம்.

சுக்கிரதசா பணபுரள வைக்கும் ஆனால் அந்த பணம் அவருக்கு சொந்தம் கிடையாது அல்லவா. இதுவே அவர்க்கு பணம் வருவது போல ஒரு தொழில் செய்தால் அந்த பணம் அவர்க்கு கிடைக்கும். இந்த இடத்தில் தான் சோதிடத்தின் தேர்ந்தெடுக்கும் விதி வேலை செய்கிறது.

உங்களின் வாழ்க்கையை இப்படி கொண்டு செல்லலாம் என்பதை நிறைய சோதிடகருத்தோடு பதிவில் சொல்லபோகிறேன். அதனை எல்லாம் படித்துவிட்டு நீங்கள் உங்களின் வாழ்க்கையில் அந்த விசயத்தை செலுத்தி பார்க்கலாம்.



பெளர்ணமியைப்பற்றி நாம் கொஞ்சம் பார்க்கலாம். ஒருவர் ஏழ்மையாக இருந்துக்கொண்டு இருந்தால் அவர் பெளர்ணமியை மட்டும் தொடர்ச்சியாக கடைபிடித்து வந்தால் அந்த பெளர்ணமி உங்களுக்கு ஒரு அற்புதமான வாழ்க்கையை கொடுக்கும். பெளர்ணமி அன்று உங்களால் முடிந்தது ஒரு கோவிலை தேர்ந்தெடுத்து பெளர்ணமி நாளில் வலம் வந்துவிடுவது மட்டுமே நீங்கள் செய்யவேண்டியது அது உங்களை உயர்த்தும்.

கோவிலை வலம் வருவதோடு கொஞ்சம் என்னால் செலவு செய்யமுடியும் என்ற ஒரு நம்பிக்கை இருந்தால் உங்களுக்காக நீங்களே ஒரு பூஜையை பெளர்ணமி அன்று உங்களின் வீட்டிலேயே செய்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்த ஒரு பூஜையை செய்துக்கொண்டு வருவது நல்லது.

பெளர்ணமி அன்று கிரகத்தின் சக்தி அதிகமாகவே கிடைக்கும். பெளர்ணமியை தேர்ந்தெடுத்து நீங்கள் ஒரு வழிபாடு அல்லது பூஜையை செய்துவரும்பொழுது உங்களை அது உயர்த்தும். தன்னை ஒழுங்குப்படுத்த அதனை செய்து வந்தால் போதுமானது.

கோவிலுக்கு செல்லமுடியாது வழிபாடு செய்யமுடியாது பூஜையும் செய்யமுடியாது என்று சொல்லுபவர்களும் இருப்பார்கள். பெளர்ணமி அன்று உங்களின் மொட்டைமாடிக்கு சென்று அமைதியாக நிலவை ஒரு அரைநேரம் பார்த்துவிட்டு இருங்கள். நன்றாக ரசித்துவிட்டு வாருங்கள்.

உங்களால் நீர்நிலைகள் இருக்கும் இடத்திற்க்கு செல்லமுடியும் என்றால் அந்த இடத்திற்க்கு சென்று நிலவை இரசியுங்கள். நான் சென்னையில் இருக்கும்பொழுது பெசன்ட்நகர் பீச்சிற்க்கு சென்று பெளர்ணமி அன்று நீண்டநேரம் நிலவையும் கடலையும் இரசித்துவிட்டு வருவேன். ஒரு சில காலங்களுக்கு பிறகு தான் திருவண்ணாமலை சென்று வந்திருக்கிறேன்.

நம்மால் என்ன முடியும் என்பதை தெரிந்துக்கொண்டு அதனை செய்துவிட்டால் போதுமானது. நல்ல பலனை உங்களின் வாழ்க்கையில் வருவதை நீங்களே அனுபவபட வைக்கும். என்ன ஒன்று என்றால் தொடர்ச்சியாக நீங்கள் செய்துவரவேண்டும்.

வளர்பிறையில் நாம் நல்ல தெய்வங்களை எல்லாம் கும்பிட்டு நமக்கு பணம் வருவது போல செய்துக்கொள்ளவேண்டும். தேய்பிறையில் நமக்கு வரும் கர்மாவை போக்கும் வழியை மேற்க்கொள்ளவேண்டும். தேய்பிறையில் கிரகசக்திகளின் நிலை கொஞ்சம் குறைவாக தான் இருக்கும்.

கர்மாவை எடுக்கும் விசயம் என்பது நாம் பூசும் திருநீரு. இந்த திருநீரு தற்பொழுது கடைகளில் வாங்கி நாம் பயன்படுத்துகிறோம் ஆனால் கிராமபுறங்களில் இதனை தயார் செய்துவிட்டு அதனை வைத்து பயன்படுத்துவார்கள். திருநீரு தயார் செய்வது தேய்பிறையில் தான் செய்வார்கள். எல்லாம் ஒரு கணக்கு என்பது இதன் வழியாக தெரியவரும்.

சித்தர்களின் வழிபாடு எல்லாம் அதிகப்பட்சம் பெளர்ணமி அன்று தான் வைத்திருப்பார்கள். இதனை ஏன் அமாவாசை அன்று வைக்கவில்லை என்றால் அவர்கள் பித்ரு உலகத்திற்க்கு செல்லமாட்டார்கள். இந்த பூமியிலேயே தங்கி அவர்கள் இந்த மக்களை காப்பாற்றி வருகின்றனர் என்று சொல்லுவார்கள் அதனால் தான் சித்தர்களுக்கு பெளர்ணமி அன்று வழிபாடு செய்வார்கள். அதிகபட்சம் அனைத்து சித்தர்களுக்கும் பெளர்ணமி வழிபாடு தான் சிறந்த ஒன்று.

அமாவாசை அன்று ஒரு சில அம்மனை தவிர மற்ற தெய்வங்களை கும்பிடுவது கொஞ்சம் நல்லதல்ல தான் ஆனால் பெளர்ணமி அன்று அனைத்தையும் நாம் கும்பிடலாம். அமாவாசை பித்ருக்களுக்கு என்று உள்ளதால் இதனை தவிர்க்க சொல்லுவார்கள்.

பெளர்ணமி வழிபாடு நல்லது தான் அதே நேரத்தில் பெளர்ணமி அன்று எந்த நட்சத்திரம் வருகின்றது என்பதை பார்த்து அதன்பிறகு அந்த வழிபாட்டை மேற்க்கொள்வது நல்லது. ஒரு சில நட்சத்திரம் வரும் நாளில் பெளர்ணமி வந்தால் அது நல்லதல்ல என்று சொல்லுவார்கள்.  பெளர்ணமியை பற்றி பல நல்ல தகவல்களை பிறகு பார்க்கலாம்.

ஜாதககதம்பத்தின் கட்டண சேவை பதிவுக்கு பலர் தங்களை இணைத்துக்கொண்டு வருகின்றனர். உடனே நீங்களும் இணைத்துக்கொள்ளுங்கள்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800  

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, March 29, 2018

கட்டண விபரம்


ணக்கம்!
          ஜாதக கதம்பம் கட்டண சேவைக்கான கட்டண விபரத்தைப்பற்றிய பதிவு. கட்டண விபரத்தை வெளிப்படையாகவே சொல்லிவிடலாம். ஏன் இதில் மறைமுகமாக வைக்கவேண்டும் என்று நண்பர் கேட்டார். இதனை வெளியில் சொல்லுவதில் எந்த வித தயக்கமும் கிடையாது.

ஒரு ஆண்டு முழுவதும் பத்தாயிரம் ரூபாய்(Rs 10000 ) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த கட்டணத்தை சொன்னவுடன் பலர் தவணை முறையில் கட்டலாமா என்று கேட்டனர். ஒரே தவணையில் செலுத்தவேண்டும் என்று தான் சொல்லிருக்கிறேன்.

ஒரே தவணையில் செலுத்தினால் மட்டுமே அதனை வைத்து நான் பயன்படுத்தமுடியும். தவணை முறையில் செலுத்தினால் இதனை வைத்து தினச்செலவுக்கு தான் பயன்படுத்தலாம் அதனால் எந்த வித பயனும் எனக்கு இருக்காது.

எதிர்காலத்தில் இதற்கு எந்த வித ஆஃபர் கொடுக்கபடமாட்டாது. இதற்கு உங்களுக்கு ஒரு அம்மன் ஹோமம் செய்துக்கொள்ளலாம். இந்த கட்டணத்தில் நீங்கள் கேட்கும்நாளில் செய்துக்கொடுக்க இருக்கிறேன். ஹோமத்திற்க்கு உள்ள செலவு எல்லாம் பத்தாயிரம் கட்டணத்திலேயே செய்யப்படும்.

நான் பூஜை என்று சொன்னாலே அதற்கு நிறைய பணம் கேட்பேன். நீங்கள் செலுத்தும் பணத்திற்க்கு செய்யும் பூஜை நல்ல பலனை கொடுக்கும். அதனை நீங்கள் இலவசமாக செய்துக்கொள்ளலாம். அதனோடு ஆண்டு முழுவதும் சிறப்பு பதிவுகளை படித்துக்கொண்டு நல்ல பயன்பெறலாம். நிறைய கருத்துக்களை சொல்லஇருக்கிறேன்.

உடனே கட்டணத்தை செலுத்திவிட்டு என்னை தொடர்புக்கொள்ளுங்கள். உங்களின் வாழ்க்கைக்கு இந்த பத்தாயிரம் பல நல்ல மாற்றங்களை கொடுக்கும்.

வங்கி கணக்கு விபரம்:

KVB Bank :  Karur Vysya Bank 
Branch : Pattukkottai 
Name : RAJESH S 
Account Type : Savings account. 
A/C Number : 1623155000063470 
IFSC Code : KVBL0001623 

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, March 28, 2018

சிறப்பு பதிவு 3


ணக்கம்!
          நட்சத்திர கூட்டத்தில் முதல் நட்சத்திரமாக இருப்பது அஸ்வினி நட்சத்திரமாகும். அஸ்வினி நட்சத்திரம் கேதுவின் நட்சத்திரமாக இருக்கின்றது. கேதுவின் வழிபாட்டிற்க்கு பெரும்பாலும் நம்ம ஆட்கள் விநாயகரை முன்வைப்பார்கள். கேது தசா அல்லது கேதுவின் நட்சத்திரம் வருகின்றதா அதற்கு விநாயகர் வழிபாட்டை மேற்க்கொள்ளுங்கள் என்று சோதிடர்கள் அடித்துவிடுவார்கள்.

முதல் நட்சத்திரமாக கேதுவின் நட்சத்திரம் வருகின்றது. முதல் நட்சத்திரம் கேதுவின் நட்சத்திரம் நாம் எதனை செய்தாலும் விநாயகர் வழிபாட்டை மேற்க்கொண்டு தான் வழிபாட்டை ஆரம்பிப்போம். விநாயகர் வழிபாட்டை மேற்கொள்வதற்க்கு காரணமாக இருப்பது காரியம் தடை இல்லாமல் செல்வதற்க்கு வழிபாட்டை மேற்க்கொள்வோம்.

மனிதர்களுக்கு முக்கால்வாசி பேருக்கு மேல் திருமணத்திற்க்கு பிறகு தான் ஒரு படி மேலே செல்வார்கள். பலரை பார்த்தால் அப்படி தான் இருக்கும். வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் அனைத்திற்க்கும் காரணமாக இருப்பது ஆன்மீகத்தில் மூலாதாரம் என்ற சக்கரத்தை காட்டுவார்கள்.

மூலாதார சக்கரம் நன்றாக இருந்தால் அதாவது வேலை செய்தால் அவர்களுக்கு தடைகள் அதிகம் ஏற்படாது. ஆன்மீகத்தில் நீங்கள் முதலில் இந்த சக்கரத்தை தான் இயக்க வைப்பார்கள். நாம் விநாயகர் வழிபாட்டை மேற்க்கொண்டு இதனை இயக்க வைப்போம். திருமணத்திற்க்கு பிறகு இது பலருக்கு அதுவாகவே வேலை செய்ய ஆரம்பிக்கும்.  பலரின் வாழ்க்கை திருமணத்திற்க்கு பிறகு நன்றாக இருப்பதற்க்கும் இது தான் காரணமாக இருக்கும்.

கேது தடைகளை ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே மூலாதாரம் நன்றாக வேலை செய்தால் அவர்கள் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்துவிடுவார்கள். வேலை செய்யவில்லை என்றால் அவர்கள் வாழ்க்கை மிகுந்த போராட்டமாக இருக்கும். ஒரு சிலருக்கு திருமண வாழ்க்கை நன்றாக அமையாதற்க்கு காரணமாக இருப்பதும் இந்த நட்சத்திரத்தில் தான் நடக்கிறது.

பொதுவாக சொல்லுகிறேன் அனைத்து மனிதர்களுக்கும் மூலாதாரம் நன்றாக வேலை செய்தால் மட்டுமே அந்த மனிதன் நல்ல வளர்ச்சியை நோக்கி செல்வான். மூலாதாரம் தடைப்பட்டால் அவனால் வளர்ச்சியை நோக்கி செல்லவே முடியாது.

பெரும்பாலும் இந்த சக்கரம் வேலை செய்ய விநாயகர் வழிபாட்டை மேற்க்கொண்டாலும் ஒரு சிலர் யோகா தியானம் போன்றவற்றை செய்து இதனை திறப்பார்கள். பலருக்கு இயற்கையிலேயே இந்த சக்கரம் திறந்து இருந்தாலும் அவர்களுக்கு சக்கரத்தில் இருந்து சக்தி வெளியே வராது. அதாவது மூலாதாரத்தில் சக்தி இல்லாமல் இருக்கும்.

யோகா மற்றும் தியானம் செய்தும் மூலாதாரம் வேலை செய்யவில்லை என்றால் நீங்கள் இதற்கு தெரபி எடுக்கவேண்டும். நல்ல தெரபியை கொடுத்து இதனை வேலை செய்ய வைக்கவேண்டும். 

ஒரு சில இடத்தில் இதற்கு தெரபி கொடுத்து வேலை செய்ய வைப்பார்கள். இவர்களிடம் இதற்கு நீங்கள் காசு கொடுத்து தான் இதனை சரி செய்யவேண்டும். இதனை சரிசெய்துவிட்டால் உங்களுக்கு ஏற்படும் அனைத்து தடைகளும் நீங்கிவிடும்.

நெட்டில் நீங்கள் தேடினால் கூட இந்த சக்கரத்தை இயக்க வழி சொல்லுவார்கள். அதனை முயன்று பாருங்கள். பணம் கொடுத்து இதனை செய்யமுடியவில்லை என்றால் விநாயகர் வழிபாட்டை தொடர்ந்து மேற்க்கொண்டு வாருங்கள்.

பெரும்பாலான வணிகர்கள் அந்த காலத்தில் செட்டியார்களாக இருந்து இருக்கின்றனர். செட்டியார்கள் அதிகம் விரும்பும் கடவுளாகவே விநாயகர் இருந்தர்க்கும் காரணமாக மூலாதாரத்தை சுத்தம் செய்து பணவசதியை பெருக்கி கொடுப்பார் என்ற காரணத்தால் அவர்கள் விநாயகர் வழிபாட்டை மேற்க்கொண்டுள்ளனர்.

இன்றைய காலத்தில் பலர் விநாயகர் வழிபாட்டை மேற்க்கொண்டு வருகின்றனர். கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மட்டும் அல்லாமல் அனைத்து நட்சத்திரகாரர்களும் இந்த வழிபாட்டை மேற்க்கொள்வது நல்லது. அனைவரும் கண்டிப்பாக மேற்க்கொள்ளுங்கள்.

சோதிடம் சொல்லுவது அஸ்வினி தலையையும் மூளை பாகத்தையும் வேலை செய்ய வைப்பது என்று சோதிட சாஸ்திரத்தில் சொல்லிருக்கின்றனர். ஒருத்தருக்கு மூளையும் தலையும் நன்றாக இருந்தால் தான் அவர்கள் நல்ல வரமுடியும் என்றாலும் இதனை ஒழுங்காக வேலை செய்ய வைப்பது மூலாதாரத்தின் வேலையாக இருக்கும்.

மனிதர்கள் பிறந்தால் அனைவரும் வெற்றியை பெற்றுவிடுவதில்லை. நம்மிடம் இல்லாத ஒன்றை நாம் பெறுவதற்க்கு உள்ள வழிகளைப்பற்றி தான் இந்த பதிவுகளில் சொல்லிவருகிறேன். நம்மிடம் இல்லாதவற்றை எந்த வழியில் முயற்சித்தால் அது நமக்கு கிடைக்கும் என்பதற்க்கு ஒரு சில கருத்துக்களை மட்டும் உங்களிடம் முன்வைத்திருக்கிறேன்.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்ற பழமாெழி இருக்கின்றது. நம்மிடம் இல்லாதவற்றையும் பெறுவதற்க்கு என்ன வழி என்று கொஞ்சம் சிந்தனை செய்து அதனை பெற்றுவிடவேண்டும். கண்டிப்பாக இது எளிதான காரியம் தான் முயற்சி செய்யவேண்டும். 

அஸ்வினி நட்சத்திரத்தைப்பற்றி பழைய பதிவில் சொல்லிருக்கிறேன். கூடுதலாகவும் இந்த தளத்தில் பல விசயங்களைப்பற்றி ஆராய்ந்து அதனை தெளிப்படுத்த இருக்கிறோம்.  அதனை எல்லாம் நீங்கள் பின்பற்றி வாருங்கள்.

நட்சத்திரத்திற்க்கு ஏன் இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றால் அனைத்து கிரகங்களும் நட்சத்திரத்தில் தான் பயணம் செய்துக்கொண்டு இருக்கின்றன. நட்சத்திரத்தை சரி செய்தாலே போதும் கிரகங்களிடம் இருந்து நல்லபலனை எதிர்பார்க்கலாம்.

ஒரு நட்சத்திரம் நல்ல நட்சத்திரம் என்று நமக்கு தெரியவந்தால் அந்த நட்சத்திரத்தின் அதிதேவதையின் உபசாகராக நாம் இருந்தால் கூட அந்த நட்சத்திரத்தின் முழுபலனையும் நாம் பெற்றுவிடமுடியும். அனைத்தும் நாம் செய்யும் திட்டமிடலில் தான் இருக்கின்றது.

ஜாதக கதம்பத்தின் கட்டண சேவைக்கு பலர் என்னை தொடர்புக்கொண்டு கேட்டு வருகின்றனர். அவர்களிடம் அதனைப்பற்றி சொல்லிவருகிறேன். நம்முடைய அனைத்து நண்பர்களும் இதனை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். 

கட்டண சேவையில் ஒன்றை என்னுடைய விருப்பத்திற்க்காக செய்துக்கொடுக்கிறேன். அதாவது ஏதாவது ஒரு பூஜையை நீங்கள் செய்துக்கொள்ளலாம் என்பதையும் சொல்லிவிடுகிறேன். உடனே தொடர்புக்கொள்ள அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நவ அம்மன் பொது யாகம் நிறைவு


வணக்கம்!
         இன்றோடு நவஅம்மன் பொது யாகம் முடிவடைந்துவிட்டது. நவஅம்மன் பொது யாகம் சிறந்த முறையில் செய்து இருக்கிறேன். உங்களின் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். சிறந்த முறையில் செய்து இருக்கிறேன் என்பது உங்களுக்கு அனுப்பிய புகைப்படங்களை பார்த்தே தெரிந்துக்கொள்ளமுடியும்.

நவஅம்மன் பொது யாகம் முடிவடைந்தது ஒரு திருவிழா முடிந்தது போலவே எனக்குள் இருந்தது. அம்மனின் வெளிப்பாடு அந்தளவுக்கு ஒரு சக்தியை வாரி வழங்கியது என்றே சொல்லலாம். சிறந்த முறையில் அதன் சக்தி உங்களுக்கு கிடைக்கும்.

நவஅம்மன் யாகத்தில் கலந்துக்கொண்டவர்கள் தங்களின் வேலையை துரிதப்படுத்துங்கள். உங்களின் செயல்பாட்டை பொறுத்து உங்களுக்கு அம்மன் நல்லதை கொடுக்கும். அனைத்தையும் விரைவில் கொடுக்கும் என்று நம்புங்கள். அம்மன் அருளால் சாத்தியப்படும்.

ஒரு சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் நவஅம்மன் பொதுயாகம் நடத்தலாம். தற்பொழுது எந்த வித பொது பரிகாரம் மற்றும் யாகம் கிடையாது. மாதம் தோறும் நடக்கும் அம்மன் பூஜை மட்டும் நடைபெறும். தனிநபர்களுக்கு நடைபெறும் பூஜைகள் மற்றும் யாகம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.

ஜாதகத்தை அனுப்பி தங்களின் பிரச்சினைக்கு தீர்வு காண விளையும் நண்பர்கள் தங்களின் ஜாதகத்தை அனுப்பலாம். பலர் நவ அம்மன் பொதுயாகம் முடிவடைந்தவுடன் சொல்லுங்கள் ஜாதகத்தை அனுப்புகிறேன் என்று சொன்னார்கள் அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, March 27, 2018

சிறப்பு பதிவு 2


வணக்கம்!
          ஒரு பதிவுக்கே நல்ல வரவேற்பு இருக்கின்றது. இதேப்போல அனைத்து பதிவுகளும் இருக்கும்.  கட்டண பதிவில் அனைவரும் சேரவேண்டும் என்ற வேண்டுகோளை அன்போடு உங்களிடத்தில் வைக்கிறேன்.

நீங்கள் செலுத்தும் கட்டணம் உங்களின் ஜாதகத்திற்க்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஒரு பூஜை இலவசமாக நடத்திக்கொடுக்கபடும். ஆப்பர் கொடுத்து சேரவைக்கும் முயற்சி என்பதைவிட பதிவுகளில் சொல்லப்படும் விசயத்திற்க்கு கண்டிப்பாக அதற்கு நீங்கள் இதனை செய்யவேண்டும் என்று வரும்பொழுது அது பயன்படும் என்பதற்க்காக இதனை அறிவிக்கிறேன்.

இராமனா அல்லது இராவணனா என்று சொல்லுவதைவிட இரண்டையும் எடுத்துக்கொண்டு செல்லவேண்டும் என்று சொல்லிருந்தேன். ஒரு ஊருக்கு சென்று அந்த ஊரில் யார் மிகவும் நல்லவராக இருக்கின்றார் என்று கேளுங்கள். அந்த ஊரில் யாராவது ஒருவரை அடையாளம் காட்டுவார்கள். அவரை நீங்கள் பார்த்தால் ஒன்றும் இல்லாத ஆண்டியாக இருப்பார்.

நல்லவன் என்றால் கண்டிப்பாக அந்த ஊரில் அவர் சம்பாதித்திருக்க மாட்டார். ஏன் இப்படி சொல்லுகிறேன் என்றால் நல்லவனுக்கு சம்பாதிக்க தெரியாது. அதனால் சம்பாதிக்கிறவன் அனைவரும் கெட்டவனாகவும் சொல்லவில்லை. நல்லவன் என்றால் அப்பாவியாக இருப்பார். அவரிடம் அனைத்தையும் பிடுங்கி எதற்க்கும் லாயக்கில்லை என்றவாறு ஒதுக்கி வைத்திருக்கும் இந்த சமூகம்.

நான் சொல்லவந்த விசயம் கிரகங்களில் பாதி நல்லது செய்தால் பாதி கெடுதல் செய்யும். ஒன்று நேர்மையான வாழ்க்கைக்கு உத்திரவாதம் கொடுத்தால் ஒன்று மறைமுகமான வாழ்க்கைக்கு ஆதரவு கொடுத்து கொண்டு இருக்கும். மனிதன் என்றால் இரண்டு பக்கமும் சேர்ந்த ஒன்றாகவே இருக்கின்றான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மறைமுகமான ஒரு முகம் இருக்கின்றது அல்லவா. அந்த மறைமுகமான பக்கத்திற்க்கு கெடுதல் கிரகங்கள் தங்களின் பங்களிப்பை கொடுத்துக்கொண்டு இருக்கின்றன. எப்படி என்றால் அவர்களின் மறைமுகவாழ்க்கை எப்படி நடந்துக்கொண்டு இருக்கின்றது என்பதை துல்லியமாக செய்துக்கொண்டு இருக்கும். நேர்மறை மற்றும் எதிர்மறை இரண்டையும் சேர்ந்தவன் தான் மனிதன். இரண்டும் சமநிலையில் இருந்தால் நல்லது. ஏதாவது ஒன்று அதிகரித்தாலும் பிரச்சினை வந்துவிடுகின்றது. 

அமாவாசையைப்பற்றி சொல்லிருந்தோம். அமாவாசை அன்று கிரகங்களில் பலன் குறையும் சமயத்தில் தான் தீயசக்திகளின் ஆதிக்கம் மேலோங்கி வருகின்றது. அமாவாசை அன்று தீயசக்திகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள தான் அம்மன் வழிபாடு எல்லாம் செய்யப்படுகின்றது.

மனிதன் இரண்டையும் சரி செய்துக்கொண்டு செல்லவேண்டும் என்பதற்க்காக தான் அமாவாசை அன்று பூசணிக்காய் உடைப்பது மற்றும் இதரபூஜைகளை எல்லாம் செய்வது எல்லாம் தீயசக்திகளுக்கு ஒரு உணவை கொடுக்கவேண்டும் என்பதற்க்காக கொடுத்திருக்கிறார்கள்.

பூசணியை நீங்கள் உடைத்தால் அது தீயசக்திகளுக்கு உணவாக கொடுக்கும் பழக்கம். இதனை ஜாதககதம்பத்தில் பழைய பதிவில் சொல்லிருப்பேன். முதலில் நீங்கள் தீயசக்திகளுக்கு ஒரு பூஜை போட்டபிறகு நல்ல சக்திகளுக்கு பூஜை செய்தால் அந்த பூஜையில் எந்தவித தீங்கும் உங்களுக்கு வராது. அதாவது நீங்கள் செய்யவேண்டிய பூஜை தடை இல்லாமல் செல்லும் என்று சொல்லிருக்கிறேன். பலர் இதில் பயன் அடைந்து வந்திருக்கின்றனர்.

ஒருவர் தங்களின் உடலில் நல்ல உணர்வோடு இருந்தால் அமாவாசை ஆரம்பிக்கும் நேரத்தை பஞ்சாங்கம் இல்லாமல் சொல்லிவிடுவார்கள். எப்படி என்றால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். அப்பொழுதே அமாவாசை வந்துவிட்டது என்று சொல்லிவிடலாம். இன்னும் சக்தி நிலையில் இருப்பவர்களுக்கு எல்லாம் இதனை மிக துல்லியமாகவே கணிக்கிட்டு சொல்லிவிடுவார்கள்.

அமாவாசை கெட்டநாள் என்பதைவிட அது நல்ல நாளாகவே நாம் எடுத்துக்கொள்ளலாம். நமக்கு ஒரு நல்ல வாய்ப்பை எல்லாம் வழங்ககூடிய ஒரு நாள் என்று சொல்லலாம். அமாவாசை கெட்டநாள் என்றால் நம்முடைய பித்ருக்கள் எல்லாம் கெட்டவர்களாக மாறிவிடுவார்கள்.

பித்ருக்களுக்கு செய்கின்ற காரியம் எல்லாம் அமாவாசை அன்று தானே நாம் செய்கிறோம். பித்ரு உலகத்தோடு நாம் தொடர்புக்கொள்வதற்க்கு ஒரு எளிமையான வழி என்பதை கண்டுபிடித்து அமாவாசை அன்று செய்து இருக்கின்றனர்.

அமாவாசை அன்று மட்டுமே பல ஆத்மாகளோடு தொடர்புக்கொள்ளமுடியும். அமாவாசை அல்லாத நாட்களில் பித்ருஉலகத்தில் உள்ள ஆத்மாவோடு தொடர்புக்கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மிகுந்த சக்தி படைத்தவர்கள் மட்டுமே தொடர்புக்கொள்ளமுடியும்.

எளிமையான மக்களும் தொடர்புக்கொள்ள ஒரு நாளை தன்னுடைய ஞானத்தால் கண்டுபிடித்து வைத்திருக்கின்றனர் என்றால் நம்முடைய முன்னோர்களின் ஞானம் என்பது அப்பேர்பட்ட ஒன்று. அமாவாசைக்கு ஏன் இவ்வளவு முக்கியம் என்பதை இதன் வழியாகவே சொல்லுவதற்க்காக இதனைப்பற்றி சொன்னேன்.

பஞ்சாங்கம் சொல்லுவது எந்த நாள் கெடுதல் என்று இருக்கின்றதோ அந்த நாளில் கிரகங்களின் சக்தி மிக குறைவாகவே பூமிக்கு கிடைக்கின்றது அன்றைய  நாளில் நமக்கு தேவையான விசயத்தை நாம் செய்துவிடவேண்டும்.

இன்னமும் சொல்லபோனால் பஞ்சாங்கத்தில் சொன்ன கெட்ட நாள்கள் என்பதையும் விட இந்தியாவில் உள்ளவர்களுக்கு கிரகங்களின் சக்தி மிக மிக குறைவாகவே கிடைக்கின்றன என்பது நான் இங்கு சொன்னால் உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது. பல வருடங்கள் ஆன்மீகத்தில் இருந்தவர்களுக்கு இது புரியவரும். இந்தியாவில் கிரகங்களின் சக்தி குறைவாகவே கிடைக்கின்றன என்பதை மட்டும் சொல்லிவிடுகிறேன்.

அமாவாசை என்று சொன்னீர்கள் அடுத்தது கெட்டநாள் என்றீர்கள் அதற்கு பிறகு எதுவும் கிடைக்கவில்லை என்று சொல்லுகின்றீர்கள் என்று உங்களின் மனது கணக்கு போடும். உங்களின் மனதிடமே இதனை விட்டுவிடுகிறேன். கிரகத்தின் சக்தியில் இருப்பவன் வெற்றியை எளிதில் பெற்றுவிடுவான். கிரகத்தின் சக்தி குறைவாக இருப்பவன் போராடி தோற்றுபோவான்.

கிரகத்தின் சக்தியை கிரகத்தின் சக்தி இல்லாத நாளில் என்ன செய்தால் கிரகத்தின் சக்தி கிடைக்கின்ற நாளில் அதனை பெறலாம் என்பதற்க்காக மேலே சொல்லிருக்கிறேன். இதனைப்பற்றி போட்டு குழப்பிக்கொள்ள தேவையில்லை.

ஜாதக கதம்பம் கட்டண பதிவுகளுக்கு தங்களை அன்போடு அழைக்கின்றேன். சோதிடம் என்பது எப்படி எல்லாம் தன்னுடைய வாழ்க்கையில் பயன்படுத்தலாம் அதனை ஆன்மீகவழியில் எப்படி கொண்டு செல்லலாம். என்ன செய்தால் எப்படி மாற்றம் வரும் என்பதை நிறைய விளக்கத்தோடு தெரிந்துக்கொள்ளலாம். உடனே என்னை தொடர்புக்கொண்டு இணைந்துக்கொள்ளுங்கள். 

ஜாதக கதம்பத்தின் கட்டண பதிவுகளுக்கு எத்தனை பேர் வருவார்கள் என்பதை கொண்டு அந்த தளம் எப்படி நடத்தலாம் என்பதை திட்டமிடலாம். கட்டணம் மிக மிக குறைவாகவே அது தீர்மானிக்கப்பட்டு இருக்கின்றது.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஜாதக அனுபவம் :: பாக்கியஸ்தான அதிபதி


வணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் லக்கினாதிபதி பூர்வபுண்ணியாதிபதி நன்றாக இருந்தால் அவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று சொல்லிருந்தேன் அதோடு பாக்கியஸ்தான அதிபதியும் நன்றாக இருந்தால் மிக சிறப்பான ஒரு வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்துவிடுவார்கள்.

ஒருவர் வாழ்கின்றார் என்றால் அவர் எடுத்த முடிவு எல்லாம் அவர்க்கு சாதகமாக அமைந்த காரணத்தால் மட்டுமே அவர் சிறந்த வாழ்க்கையை வாழ்கின்றார் என்று அர்த்தம். அவர் எடுத்த முடிவுக்கு எந்த வித தடைகளும் குறுக்கே வராமல் இருந்த காரணத்தால் தான் அவர்க்கு நல்லது நடந்து இருக்கின்றது என்று அர்த்தம்.

ஒருவர் எடுத்த அனைத்து காரியமும் தடையை ஏற்படுத்தினால் அவர்க்கு வாழ்க்கையே வெறுப்பாக அமைந்துவிடும் அல்லவா. ஒருவர்க்கு அதிக தடைகளை ஏற்படுத்துவது பாக்கியஸ்தானமாக இருக்கும்.

பாக்கியஸ்தானம் கெட்டுவிட்டால் ஒருவர்க்கு எதுவும் நல்லதாக நடக்காது. நல்லது நடக்கிறது போல இருக்கும் கடைசியில் அது கை நழுவி போய்விடும். இப்படிப்பட்டவர்களுக்கு பாக்கியஸ்தானம் கெட்டு இருக்கின்றது அர்த்தம்.

பாக்கியஸ்தானம் நன்றாக இருந்துவிட்டால் அவர் வாழ்வது மட்டும் அல்லாமல் பிறர்க்கும் நல்லது செய்வார். பாக்கியஸ்தானம் நன்றாக இருந்தால் அவரால் ஊரில் உள்ளவர்களும் வாழ்வார்கள். பாக்கியஸ்தானத்திற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது இந்த காரணத்தால் மட்டுமே கொடுத்து இருக்கின்றனர்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, March 26, 2018

சிறப்பு பதிவு 1

வணக்கம் !
        ஜாதக கதம்பத்தின் கட்டண சேவைக்காக எழுதப்பட்ட பதிவை உங்களுக்கு தந்திருக்கிறேன். உங்களை தூண்டில் போட்டு இழுக்க இதனை செய்வில்லை. கோவிலாக இருந்தாலும் அதற்கு மணி என்று ஒன்றை வைத்து அடித்து விளம்பரம் என்பதை செய்து இருக்கின்றனர். 

புதிய கட்டண பதிவில் அப்படி என்ன இருக்கும் என்பதை நீங்களும் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்க்காக சிறப்பு பதிவு என்ற தலைப்பில் தந்திருக்கிறேன். தொடர்ச்சியாக பல பதிவுகள் தருகிறேன் உங்களுக்கு பிடித்து இருந்தால் அதில் இணைந்துக்கொள்ளலாம். கண்டிப்பாக அனைவரும் இணையவேண்டும் என்பதை அன்போடு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். 



வணக்கம்!
          சோதிடக்கலை என்ற தெய்வீகலையை பல முன்னோர்கள் கண்டுபிடித்து அதனை மனிதனுக்கு பயன்படும் விதத்தில் எழுதி வைத்து அதனை பாதுகாத்து தற்பொழுது வரை அனைவருக்கும் பயன்பட்டு வருகின்றது என்றால் அந்த கலையின் இருக்கும் உண்மையே அதற்கு ஒரு பெரிய அங்கீகாரமாக இருக்கின்றது.

மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மட்டும் இன்றி இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அதனை பயன்படுத்தும் விதமாக தான் உருவாக்கி இருக்கின்றனர். மனிதர்கள் தனக்கு மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். எங்களின் ஊர் பகுதியில் ஒரு மாடு சினை பட்டால் கூட அதற்கு பிறக்கும் கன்று இப்படி தான் இருக்கும் என்று சொன்ன சோதிடம் எல்லாம் இருக்கின்றது.

பூமியில் பிறக்கும் மனிதன் மட்டும் அல்லாமல் அனைத்திற்க்கும் சோதிடம் கணித்து சொல்லமுடியும். காலத்திற்க்கு தகுந்தார்போல மனிதனுக்கு மட்டும் இது அதிகப்பட்சம் பயன்படுகின்றது. ஒரு காலத்தில் மனிதன் திருமணத்திற்க்கு என்று ஜாதகத்தை எடுத்த காலம்போய் இன்று அனைத்திற்க்கும் சோதிடத்தை கையில் எடுக்க ஆரம்பித்துவிட்டான்.

கடந்த காலத்தில் ஒரு மனிதனை காப்பாற்ற அவனுக்கு பல குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர். ஒரு மனிதனுக்கு ஒரு பிரச்சினை வந்தால் அதனை தீர்க்க ஒரு ஊரே வந்து நிற்க்கும் இன்று ஒரு மனிதனுக்கு பிரச்சினை வந்தால் அவனை காப்பாற்ற நெருங்கிய உறவாக இருக்கும் மனைவி மகன்கள் கூட வருவதில்லை. மனிதன் நாகரீக வாழ்க்கை வாழ்கிறேன் என்று எண்ணி பிரச்சினையை அதிக வளர்த்துக்கொண்டுவிட்டு அதற்கு சோதிடத்தை ஆராய்கிறான். சோதிடமும் அவனுக்கு ஒரு தீர்வை கொடுக்கின்றது.

சோதிடம் மனிதனின் பிரச்சினைக்கு மட்டும் தீர்வு கொடுக்கும் ஒரு கலை மட்டும் அல்ல ஒவ்வொரு மனிதனும் எப்படிப்பட்ட வாழ்க்கை அமையும் அவனுக்கு வாழ்க்கை எப்படி செல்லும். முன்ஜென்மம் எப்படிப்பட்டது இந்த ஜென்மம் எப்படி இருக்கும் அடுத்த ஜென்மம் எப்படி அமையும் என்பதை எல்லாம் சொல்லக்கூடிய ஒரு கருவி. 

மனிதன் எப்படிப்பட்ட உயிரில் இருந்து உயிர் எடுத்து இருக்கிறான். அவனின் இந்த ஜென்மம் எப்படி அமையும். இந்த ஜென்மத்தில் அவன் எப்படி மரணம் எய்துவான். அவனின் உடல் எப்படி கதி அடையும். என்பதை எல்லாம் சொல்லக்கூடிய ஒன்று. 

மனிதன் எடுத்த பிறவி எப்படிப்பட்டது. மனிதனுக்கு ஆறு அறிவு என்றாலும் எல்லா மனிதனுக்கும் அந்த ஆறு அறிவையும் கொடுத்துவிடுவது இல்லை. மனிதனுக்கு கொடுத்த ஆறு அறிவையும் பயன்படுத்த என்ன வழி என்பதையும் சொல்லும் சோதிடமும் இருக்கின்றது. அறிவு என்ன பெரிய விசயம் அறிவை தாண்டி ஞானத்தை அடைய என்ன வழி என்பதையும் சொல்லும் ஒரு கருவி தான் சோதிடம்.

மனிதனுக்கு ஒவ்வொரு நொடியும் எப்படி அமையும் என்பதையும் சொல்லக்கூடிய ஒரு கருவியாக தான் இருக்கின்றது. சோதிடம் நிறைய கருத்துக்களை உள்தாங்கி நிற்கின்றது. சாேதிடர்கள் குறைந்த கருத்துக்களோடு பலனை சொல்லிக்கொண்டு இருக்கின்றோம். 

சோதிடத்தில் அனைத்தையும் கற்று நாம் சொல்லுவதற்க்குள் நம்முடைய இந்த ஜென்மம் சென்றுவிடும் என்றாலும் ஒரளவு நன்றாக தெரிந்து இருந்தால் நம்முடைய வாழ்க்கைக்கு பயன்படும் விதத்தில் அதனை அமைத்துக்கொள்ளமுடியும்.

ஒரு சோதிடரிடம் நூறு ரூபாய் கொடுத்து பலனை தெரிந்துக்கொண்டு வாழ்ந்தால் என்ன என்று நம்முடைய மனம் நினைக்காமல் இருக்காது. ஒவ்வொரு நாெடியும் எந்த சோதிடர்களும் சொல்லுவதில்லை. ஒவ்வொரு நொடியும் உங்களுக்கே தெரிந்துவிட்டால் உங்களின் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் எந்த காரியமும் அது தோல்வியை சந்தித்துவிடாது. வெற்றி அல்லது தோல்வியை விடுங்கள். உங்களிடம் இருந்து எதனையும் காலம் பறித்துவிடாது. அதுவே மிகப்பெரிய வெற்றிகரமான ஒரு வாழ்க்கை. 

ஒவ்வொரு நொடியும் சொல்லக்கூடிய ஒரு சோதிடத்தை நாம் மீறி நம்மால் என்ன செய்துவிடமுடியும் என்று மனம் கேட்காமல் இருக்காது. ஒரு மனிதனின் மேல் செலுத்தும் கிரகங்களின் சக்தியையும் மீறி ஒரு மனிதனால் செயல்படமுடியுமா என்றால் கண்டிப்பாக செயல்படமுடியும்.

ஒரு அமாவாசை அன்று அனைத்து கிரகங்களும் தன்னுடைய பலத்தை இழந்துவிடும். உண்மையை சொல்லபோனால் அமாவாசை அன்று கிரகங்களின் இருந்து வரும் கிரகசக்தி வருவதில்லை என்பது உண்மையான ஒன்று. அமாவாசை அன்று நீங்கள் உங்களின் புத்தி என்ற சக்தியை வைத்து வருகின்ற நாளில் இதனை தான் செய்யவேண்டும் என்று திட்டமிட்டுவிட்டால் கூட உங்களை மீறி செயல்படுவது வெறும் ஐந்து சதவீதம் கூட இருக்காது. 

நான் சொல்லுவது அமாவாசை என்பது ஒரு உதாரணத்திற்க்காக சொல்லுகிறேன். பல சாதகமான நல்ல காலம் எல்லாம் மனிதனுக்கு கொடுத்துக்கொண்டு இருக்கின்றது அதனை நாம் சரியாக பயன்படுத்துவதில்லை பயன்படுத்த தெரிந்தவன் பிழைத்துக்கொள்வான் தெரியாதவன் மாட்டிக்கொள்கிறான்.

உங்களின் ஜாதகத்தை பல முறையில் பயன்படுத்த முடியும். நல்ல வழியை கொண்டும் செல்லமுடியும். தீயவழியையும் கொண்டு செல்லமுடியும். உதாரணமாக குருவின் வழியில் நின்றால் நேர்மையான வழியில் செல்லலாம். குரு கிரகத்தின் காரத்துவத்தை பிடித்துக்கொண்டு செல்லுவது. ராகுவின் வழியிலும் செல்லலாம். ராகுவின் காரத்துவத்தை வைத்துக்கொண்டு செல்வது.

தேர்ந்தெடுக்கும் முறையில் பயன்படுத்தமுடியும் என்பது ஜாதகத்தில் உள்ளது. நாம் முடிந்தவரை அதனை தேர்ந்தெடுத்துக்கொண்டு செல்லமுடியும். ஒரே கிரகத்திற்க்கு வேண்டியதை செய்துக்கொண்டே இருந்தால் நாம் ஒரு சில காலக்கட்டங்களிலேயே நாம் அதன் வழியில் நிற்பது தெரியவரும்.

இராமனா அல்லது இராவணனா என்பதையும் விட இரண்டையும் பயன்படுத்திக்கொண்டு கூட வாழ்க்கையில் செல்பவர்கள் இருக்கதான் செய்கின்றனர். ஒரே நல்லவனாக இருந்தாலும் இந்த உலகம் அழித்துவிடும் ஒரே கெட்டவனாகவும் இருந்தாலும் அழித்துவிடும். சமநிலையில் நின்றுகூட வெற்றிபெறமுடியும். இதனை எல்லாம் வரும்காலங்களில் நீங்கள் தெரிந்துக்கொள்வீர்கள்.

நல்ல கிரகம் என்ற ஒன்று இருந்தால் தீயகிரகங்களும் இருக்கதானே செய்கின்றது. ஒரு மனிதனில் நல்ல குணங்களும் இருக்க செய்கின்றன தீய குணங்களும் இருக்க செய்கின்றன. இதனை எப்படி ஜாதகத்தின் வழியில் உள்ள கிரகங்களை பயன்படுத்தினால் வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக்கொள்ளலாம் என்பதையும் தெரிந்துக்கொள்ளலாம்.

ஜாதக கதம்பத்தின் சிறப்பு தளத்தில் இணைய விரும்பம் இருப்பவர்கள் என்னை தொடர்புக்கொள்ளுங்கள். முன்கூட்டியே தொடர்புக்கொண்டுவிட்டால் தளத்தை எப்படி அமைக்கலாம் அதில் எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பதை எல்லாம் செய்யலாம்.

நீங்கள் செலுத்தும் கட்டணம் உங்களின் வாழ்வில் நல்ல மாற்றத்தை கண்டிப்பாக செய்யும் என்பது மட்டும் இந்த நேரத்தில் நான் உறுதியளிக்கிறேன்.பதிவுகள் அனைத்தும் பெரிய பதிவாக நிறைய கருத்துக்களை தாங்கி நிற்க்கும் பதிவுகளாக இருக்கும்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஜாதக அனுபவம் :: அடிப்பட்ட கிரகங்களின் தசா


வணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் கிரகங்கள் சரியில்லை என்றால் அவர்கள் எடுக்கும் முடிவு எல்லாம் சரியாகவே இருக்காது. அவர்களின் போக்குக்கு அவர்கல் முடிவு எடுப்பார்கள். அதனால் அவர்களின் வாழ்க்கை நிலை இல்லாமலேயே இருக்கும்.

ஜாதகத்தில் ஏன் அப்படி கிரகங்கள் அமைகின்றன என்று கேட்கதோன்றும் என்ன செய்வது எல்லாம் நமது முன்ஜென்மத்தை காட்டவேண்டியதாகிவிடுகின்றது. கிரகங்கள் சரியில்லை என்றாலும் நாம் நடந்துக்கொள்ளும் வழியில் இதனை சமாளிக்கலாம். நமக்கு ஒரு நல்ல ஆலோசகரை வைத்துக்கொண்டு அதன் வழியாக நாம் சமாளிக்கலாம்.

பெரும்பாலம் ஒருவருக்கு வாழ்க்கை முழுவதுமே கஷ்டக்காலம் என்பது இருக்காது. அவ்வப்பொழுது வரும் கோச்சாரப்பலன் மற்றும் தசாநாதன் வழியாக நன்மையும் நடக்கும் அதுவும் அவர்களின் முன்ஜென்மத்தின் வழியாக தான் நன்மை நடக்கிறது என்று சொல்லலாம்.

ஒருவருக்கு குறைந்தபட்சம் நாற்பது வருடங்களுக்கு கஷ்டத்திலேயே அவர் வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருக்கின்றார் என்றால் கண்டிப்பாக அவரின் ஜாதகத்தை நன்கு அலசி ஆராய்ந்து அதற்கு என்ன வேண்டுமே அதனை செய்யவேண்டும்.

பெரும்பாலும் வாழ்க்கை சரியில்லாமல் அதிக காலம் சென்றால் அவர்களுக்கு நடக்கும் தசா சரியில்லை என்று தான் சொல்லவேண்டும். தசாநாதனால் அவர்களுக்கு ஒரு நல்ல பலனை கொடுக்கமுடியவில்லை. நன்றாக அடிப்பட்ட கிரகங்களின் தசா தொடர்ச்சியாக நடைபெறுகிறது என்று அர்த்தம்.

அடிப்பட்ட கிரகங்கள் ஜாதகத்தில் எப்படி செல்கின்றன. அதற்கு எப்படி பரிகாரம் செய்தால் ஜாதகரை காப்பாற்றமுடியும் என்பதை தெரிந்துக்கொண்டு அதற்க பரிகாரம் செய்யவேண்டும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, March 25, 2018

ஜாதக அனுபவம்


வணக்கம்!
          நாம் எந்த காரியம் செய்தாலும் சந்திரனை கணக்கில் கொண்டு செய்தால் அந்த காரியம்  வெற்றியை தந்துவிடும். சந்திரன் நமக்கு சாதகம் இல்லாமல் செல்லும் நாட்களில் நாம் செய்யும் காரியம் ஒரளவு தான் பயன்தரும்.

நவஅம்மன் பொது யாகத்திற்க்கு அனுப்பிய ஜாதகத்தில் எல்லாம் முதலில் சந்திரன் சரியாக செல்லாத நாட்களாக இருந்தால் அவர்களுக்கு முதலில் அதற்கு பூஜையை செய்த பிறகு தான் நவஅம்மன் பொதுயாகத்தை தொடங்குகிறேன்.

சந்திராஷ்டமம் வருகின்ற நாட்களில் அவர்களுக்கு செய்யும் பூஜைகள் முழுபலனையும் கொடுக்காது. முழுபலனும் நாம் செய்யும் யாகத்தில் இருந்து கிடைக்க வேண்டும் என்பதற்க்காக அந்த பூஜையை முடித்தபிறகு செய்தேன்.

உங்களின் ஒவ்வொரு நாளிலும் நீங்கள் செய்கின்ற காரியத்திற்க்கு முதல்நாள் உங்களுக்கு சந்திரன் என்ன பலன் கொடுக்கின்றது என்பதை பார்த்து தெரிந்துக்கொண்டு அதன்பிறகு அதற்க்கு தகுந்தார் போல் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்.

சந்திரனால் ஒரு செலவு உங்களுக்கு இருக்கின்றது என்றால் மாதத்தில் நீங்கள் வாங்குகின்ற உங்களின் வீட்டிற்க்கு தேவையான சாமான்களை அன்றைய தினத்தில் வாங்கி வீணான செலவுகளை குறைத்துவிடலாம். ஒரளவு நம்முடைய திட்டத்தில் நமது ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் செல்வது போல செய்யலாம்.

மனிதனால் அனைத்தையும் கணக்கிட்டு வாழ்க்கையை செலுத்துவிடமுடியாது. ஒரளவு நாம் கணித்து அதற்கு தகுந்தார்போல் செயல்படும்பொழுது நம்மால் நிறைய விசயங்களை தன்னுடைய ஆளுமைக்கு கீழ் கொண்டு வந்துவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, March 24, 2018

அன்பான அழைப்பு


வணக்கம்!
           ஜாதக கதம்பம் கட்டண சேவையில் ஒரு புதிய தளத்தை உருவாக்க உள்ளது. ஜாதக கதம்பத்தில் இருந்து மேம்படுத்தப்பட்ட ஒரு தளமாகவே அது உருவாகும். சோதிடத்தைப்பற்றி அதிகமான பதிவுகளை அதில் கொடுக்க உள்ளேன். ஜாதககதம்பத்தில் உள்ள விசயங்களை விட பலமடங்கு கூடுதல் தகவல் அதில் இடம்பெறும். உங்களுக்கு மிகவும் பயன்படும் விதத்தில் அது உருவாக்கப்பட்டு வருகின்றது.

ஜாதககதம்பம் எட்டு ஆண்டுகள் நிறைவு செய்து ஒன்பதாவது ஆண்டில் விரைவில் அடி எடுத்து வைக்க உள்ளது. அதனை முன்னிட்டு இந்த தளம் ஆரம்பிக்கப்படும். கட்டணத்தில் பாதி அளவுக்கு ஒரு பூஜை உங்களுக்காக செய்யப்படும். அது நீங்கள் விரும்பும் தேதியில் நடத்திக்கொடுக்கப்படவும் இருக்கிறேன். நீங்கள் தரும் கட்டணம் இந்த பூஜைக்கே போதும் பதிவுகளை இலவசமாகவே படிக்கிறேன் என்று நீங்கள் பின்வரும் நாளில் சொல்லலாம். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பூஜையாகவே அது இருக்கும்.

ஒரு வருடத்திற்க்கு அந்த தளம் இயங்கும். தன்னுடைய தனிப்பட்ட செலவுக்கு என்று பயன்பட்டும் என்று இந்த தளத்தை உருவாக்குகிறேன். உங்களிடம் இலவசமாக பணம் கொடுங்கள் என்று கேட்கமுடியாது அதனால் இந்த தளத்தை உருவாக்கி அதில் இருந்து வரும் பணத்தை வைத்து தனிப்பட்ட செலவு செய்யலாம் என்று இதனை உருவாக்குகிறேன்.

தற்பொழுது ஜாதககதம்பத்தில் வரும் பதிவுகளை விட அதில் அதிகம் இருக்கும். ஒரு வருடத்திற்க்கு 300 பதிவுகள் அதில் வரும் ஆனால் ஜாதககதம்பத்தில் உள்ள பத்து பதிவுகளுக்கு அதில் வரும் ஒரு பதிவு போதும். நிறைய கருத்துக்கள் ஒவ்வொரு பதிவுகளிலும் கொடுக்கிறேன். 

ஜாதக கதம்பத்தில் நிறைய நண்பர்கள் தங்களின் பங்களிப்பை தந்து இருக்கின்றனர். ஏன் இதனை தனியாக ஆரம்பிக்கவேண்டும் என்று நீங்கள் கேட்க நினைக்கலாம். தனிப்பட்ட செலவுகள் அதிகரிக்கின்றன. அதனை கேட்கமுடியாது நம்முடைய திறமையை கொடுத்து அதில் இருந்து பெறலாம் என்ற நோக்கத்தில் தான் இதனை ஆரம்பிக்கிறேன். நமது நண்பர்கள் முடிந்தவரை இதில் இணைய அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கட்டணவிபரங்கள் வரும் பதிவுகளில் சொல்லுகிறேன். உங்களின் தனிப்பட்ட கருத்துக்கள் இருந்தால் என்னிடம் தெரிவிக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஜாதக அனுபவம் :: பணவரவு


ணக்கம்!
          பொதுவாக ஒரு ஜாதகத்தை வைத்து வேலை செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. வருடக்கணக்கில் என்னோடு பயணிப்பவர்களுக்கு மட்டும் அதனை அவ்வப்பொழுது செய்துக்கொண்டு இருப்பேன். கண்டிப்பாக நான் என்ன செய்கிறேன் என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்கும். வருடக்கணக்கில் இருப்பவர்களுக்கு அதனை செய்தால் தான் அவர்களும் வாழ்வில் முன்னேற்றம் காண்பார்கள்.

ஒரு முறை ஒரு ஜாதகத்தில் கடுமையான பணத்தொல்லை தற்சமயம் இருந்துக்கொண்டு இருக்கின்றது அது கொஞ்சம் பிரச்சினையாக இருக்கின்றது என்று அந்த நபர் சொல்லியிருந்தார். சரி செல்லுங்கள் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டேன்.

அவரின் லக்கினம் கடகம் அவரின் இரண்டாவது வீட்டில் செவ்வாய் அமர்ந்திருக்கின்றது. மகம் நட்சத்திரத்தில் செவ்வாய் சென்றுக்கொண்டு இருக்கின்றார். சூரியனை நாம் கைவைத்தால் சரியாகாது செவ்வாயை கேதுவின் நட்சத்திரத்தில் செல்கின்றது பாம்புவின் நட்சத்திரம் மகத்தை சரி செய்துவிடலாம் என்று வேலை செய்துவிட்டேன்.

உண்மையில் அவர்க்கு சொந்த ஊரில் ஏதோ ஒரு நிலம் ஏற்கனவே விலைபேசிவிட்டு பணத்திற்க்காக இழுத்து அடித்து இருக்கிறார்கள். நாம் செய்த நேரத்தில் அவர்க்கு அந்த பணம் கிடைத்துவிட்டது. நாம் நினைத்தது கொஞ்சமாக பணம் வந்தாலும் தொடர்ச்சியாக வரட்டும் என்று செய்தேன். அவர்க்கு கொஞ்சம் அதிகமாகவே கிடைத்துவிட்டது.

இரண்டில் உள்ள செவ்வாய் பணத்தை கொடுத்ததோடு அவர்களின் குடும்பத்தில் சண்டையை உருவாக்கிவிட்டது. பணத்தை பங்குகொள்வதில் அண்ணன் தம்பியோடு பிரச்சினை வந்தது. அவர் என்னிடம் போன் செய்து விசயத்தை சொன்னார். மறுபடியும் அந்த செவ்வாயை சரி செய்து அதனை நிறுத்தினேன். ஏன் சொல்லுகிறேன் என்றால் ஒரு சில இடத்தில் ஒரு சில பிரச்சினையும் கொடுக்கும்.

ஒவ்வொருவரையும் நல்ல முறையில் வரசெய்து இருக்கிறேன் என்றால் கண்டிப்பாக அவர்களின் பின்பு இப்படிப்பட்ட வேலைகளை நிறையவே செய்து இருக்கிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, March 23, 2018

ஜாதக அனுபவம்


வணக்கம்!
          ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் சக்தியை மட்டும் அதிகமாக வெளிக்கொண்டு வந்தால் அதனால் தீமை வராதா என்று ஒரு கேள்வி வந்திருந்தது. கண்டிப்பாக வரும் அதற்கு தான் நமக்கு வழிகாட்ட ஒரு குரு ஒருவர் வேண்டும் என்று சொல்லுவது உண்டு.

ஒரு ஜாதகத்தில் சனிக்கிரகம் ஒரு வீட்டிற்க்கு அதிபதியாக இருப்பார். அதே சனிக்கிரகம் ஒரு இடத்தில் அமர்ந்து இருப்பார். உதாரணமாக ஒன்றைச்சொல்லுவோம். சனிக்கிரகம் இரண்டாவது வீட்டிற்க்கும் மூன்றாவது வீட்டிற்க்கும் அதிபதியாக இருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். அவர் நான்காவது வீட்டிற்க்கு சென்று அமர்ந்திருந்தால். தற்பொழுது மூன்று வீட்டிற்க்கு பொறுப்பாக இருக்கிறார்.

மூன்று வீட்டின் பலனை கொடுப்பாரா அல்லது நாம் எதிர்பார்க்கும் பலனை கொடுப்பாரா என்று கேட்டால் அதற்கு தான் நாம் அந்த விசயத்தை ஆரம்பிக்கும் முன் நமது குருவின் முழுஆசியும் பெற்று அதன்பிறகு ஆரம்பிக்கவேண்டும்.

நாம் கேட்கின்ற பலனை கொடுக்ககூடிய ஆற்றலை நமது குரு தான் பார்த்து செய்யவேண்டும். குருவின் அருளோடு நாம் செய்யும் காரியம் நமக்கு தேவையான பலனை கொடுத்துவிடுகிறது. இரண்டாவது வீட்டின் வழியாக நமக்கு பணப்புழக்கம் அதிகமாக வரவேண்டும் என்று வைத்துக்கொண்டால் குருவின் அருளால் நமக்கு அது சாத்தியப்படும்.

ஒரு கிரகம் ஐம்பது சதவீதம் நன்மையும் ஐம்பது சதவீதம் தீமையும் தரும். நாம் நன்மையை தான் தரும் என்று நினைத்துக்கொண்டு அதன் சக்தியை உரு ஏற்றினால் அதனால் தீமையும் வரும். கண்டிப்பாக வரும் என்பது தான் உண்மை. அதற்கு நம்முடைய குருவின் அருள் இருந்தால் தீமை இல்லாமல் நன்மையை பெறலாம்.

நமக்கு தேவையானவற்றை நம்முடைய விடாமுயற்சியால் பெற முடியும். அதனால் தான் நான் சொன்னேன் எந்த கிரகத்தின் ஆற்றலையும் பெறலாம் ஆனால் அதனை குருவின் அருளோடு பெறுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, March 22, 2018

தெய்வம் அன்றே கொல்லும் அரசன் நின்று கொல்வான்


வணக்கம்!
          தெய்வம் நின்று கொல்லும் அரசன் அன்றே கொல்லுவான் என்பது தானே பழமொழி. இது என்ன மாறி தெய்வம் அன்றே கொல்லும் அரசன் நின்று கொல்லுகிறான் என்று உங்களுக்கு தோன்றும்.

இன்றைய காலத்தில் நாம் செய்யும் பாவம் எல்லாம் நாமே அனுபவிக்கும்படியாகவே இருக்கின்றது. அந்த காலத்தில் சொல்லுவார்கள் தாத்தா என்ன பாவம் செய்தாராே இவனுக்கு இப்படிப்பட்ட கஷ்டம் வந்திருக்கிறது என்பார்கள். இன்று இவன் என்ன பாவம் செய்தானோ இவனுக்கு இப்படி வந்திருக்கின்றது என்று சொல்லுகின்றனர்.

நாம் தற்பொழுது வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற வாழ்க்கையில் நாம் செய்த பாவம் அனைத்தும் நமக்கு உடனே வந்துவிடுகிறது. அதனால் தான் தெய்வன் அன்றே கொல்லுகின்றது என்று சொன்னேன். 

நாம் ஒரு பிரச்சினை ஒரு வம்பு வந்து இருக்கின்றது என்று அரசாங்கத்தை நாடினால் அது உடனே தண்டனை கிடைக்காது. காலம் தாழ்த்தி தான் தற்பொழுது எல்லாம் தண்டனை கிடைக்கிறது அதுவும் கடினம் என்றே சொல்லாம் ஆனால் தெய்வம் உடனுகுடன் தண்டனை கொடுத்துவிடுகிறது.

நான் சிறுவயதில் இருக்கும்பொழுது எல்லாம் ஒருவர் மரணம் அடைகிறார் என்றால் அது அவ்வளவு எளிதில் நடைபெறாது. அவர் படுத்து படுக்கையாக இருந்து அவர்க்கு மாதக்கணக்கில் கதை படிப்பார்கள். கதை என்றால் இராமாயணம் மகாபாரதம் விஷ்ணு புராணம் என்று இறப்பை நோக்கி அவர்கள் பயணப்பட்டு மோட்சத்தை அடைய இதனை செய்வார்கள்.

தற்பொழுது உடனுகுடன் மரணம் வந்துவிடுகிறது. இப்பொழுது தான் அவரிடம் பேசிக்கொண்டு வந்தேன் அதற்குள் இறந்துவிட்டார் என்று சொல்லுகின்றனர். தற்பொழுது நான் பார்க்கும் இடம் எல்லாம் திடிர் மரணம் தான் நடக்கிறது. ஒருவருக்கு கூட மேலே சொன்ன கதை படிப்பதில்லை. அந்தளவுக்கு நாட்டில் அநியாயம் தலைதூக்கிவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அதாவது மனிதன் நீதியாக நடப்பதில்லை.

நாம் மனரீதியாக நிறைய தவறு செய்வதால் தான் நிறைய பிரச்சினை வருகின்றது. மனரீதியாக பிரச்சினை இல்லாமல் இருந்தாலே நன்றாக இருக்கும். அதோடு வில்லங்கமாகவும் செயல்படகூடாது முடிந்தவரை நல்லவனாக இருப்பதற்க்கு முயற்சி செய்யலாம்.

நவஅம்மன் பொதுயாகத்திற்க்கு கொடுத்தவர்களுக்கு வாட்ஸ்அப்பில் புகைப்படம் வரவில்லை என்றால் உடனே தொடர்புக்கொள்ளவும். நவஅம்மன் பொதுயாகம் சிறந்த முறையில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800  

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

குலதெய்வம்


வணக்கம்!
          ஜாதகத்தில் பூர்வபுண்ணியத்தைப்பற்றி பார்த்தோம். ஒருவரின் பூர்வபுண்ணியம் சரியில்லை என்றாலும் அவர்களின் குலதெய்வத்தை தொடர்ந்து வணங்கி வந்தால் இதனை சரிசெய்யமுடியும். 

குலதெய்வத்தை தொடர்ந்து வணங்குவதற்க்கு தடைகள் வரும். பூர்வபுண்ணியம் சரியில்லை எனும்பொழுது அவர்களின் குலதெய்வம் மட்டும் அவ்வளவு எளிதில் இடம்கொடுத்துவிடாது. குலதெய்வத்தை கும்பிடும்பொழுது அந்த கோவிலுக்கு தொடர்புடையவர்களை அழைத்துக்கொண்டு சென்று வந்தால் உங்களுக்கு நல்லது.

உங்களுக்கு வருகின்ற தடைகளை எல்லாம் உங்களின் குலதெய்வத்தை ஏற்கனவே வணங்கி வந்தவர்கள் உங்களோடு வரும்பொழுது அந்த தடைகள் வராது என்பதற்க்காக அவர்களை அழைத்துக்கொண்டு செல்லலாம்.

உங்களின் குலதெய்வத்திற்க்கு உங்களின் குருவிடம் சொல்லிவிட்டு அல்லது குருவை அழைத்துக்கொண்டு சென்று அந்த குலதெய்வத்திற்க்கு அபிஷேகம் செய்தால் உங்களின் குலதெய்வத்தின் அருளை நீங்கள் பெறலாம்.

குலதெய்வத்தின் பார்வை உங்களின் மேல் பட ஆரம்பித்துவிட்டால் அதன்பிறகு பூர்வபுண்ணியம் சரியாகிவிடும். உங்களுக்கும் நல்லது நடக்க ஆரம்பித்துவிடும். பூர்வபுண்ணியம் சரி செய்வதற்க்கு இது ஒரு வழி அதன்பிறகு தொடர்ச்சியாக பச்சைப்பரப்புதல் செய்து வந்தால் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் அது அருளை கொடுத்துக்கொண்டே இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, March 21, 2018

கேள்வி & பதில்


வணக்கம்!
          வக்கிரசக்தி அம்மன் எங்கு எல்லாம் உள்ளது என்று சொல்லுங்கள் என்று நண்பர் கேள்வி அனுப்பியிருந்தார். வக்கிரசக்தி அம்மன் என்பது அவர் அவர்களின் பக்கத்தில் எந்த கோவில் நடைசாத்தாமல் இருக்கின்றார்களோ அதாவது பகலில் கூட நடை சாத்த மாட்டார்கள். ஒருவேளை நடைசாத்தும் அம்மனாக இருந்தாலும் அந்த கோவில் கிரகணம் காலங்களில் நடைதிறந்து இருக்கும்.

நான் வக்கிரகாளி அம்மனை வணங்குவேன். அவர்களில் அருகில் மேலே சொன்னமாதிரி இருந்தால் அதனை வணங்கி வந்தால் உங்களுக்கு போதுமானது. அதனை விட கொஞ்சம் ஆன்மீகவாதியாக இருந்தால் இதனை எளிதில் கண்டுபிடிப்பார்கள்.

வக்கிரசக்தி அம்மன் என்பது அந்த கோவிலுக்கு அருகில் ஒரு சுடுகாடு இருக்கும். சுடுகாட்டில் இருந்து அந்த கோவிலுக்கு சக்தி கிடைக்கும். அந்த தெய்வம் கண்டிப்பாக வக்கிரசக்தியுடைய அம்மனாக இருக்கும்.

ஒரு சில கோவில்களில் மதியம் ஒரு மணிக்கு சாமி கும்பிடுவார்கள். ஒரு சில கோவில்களில் இரவு நேரங்களில் சாமி கும்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். இப்படிப்பட்ட கோவில்கள் எல்லாம் வக்கிரசக்தி உடைய அம்மனாக இருக்கும்.

மேலே சொன்ன விசயத்தை வைத்து நீங்களே வக்கிரசக்தியுடைய அம்மனை பார்த்து வணங்கிக்கொள்ளலாம். உங்களுக்கு அருகில் இப்படிப்பட்ட தெய்வம் இருக்கும். 

நல்ல வருமானம் வருகின்றது என்று ஒரு சில பெருமாள் கோவில் மற்றும் சிவன் கோவில் எல்லாம் பகலில் நீண்ட நேரம் மற்றும் இரவிலும் நீண்டநேரம் தற்பொழுது திறந்து வைத்திருக்கின்றார்கள் அதனை எல்லாம் நீங்கள் நம்பவேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஜாதக அனுபவம் :: பூர்வபுண்ணியாதிபதி



வணக்கம்!
          லக்கினாதிபதி நன்றாக இருந்தால் ஒருவருக்கு நல்லவாழ்க்கை அமையும். லக்கினாதிபதிக்கு அடுத்தபடியாக பூர்வபுண்ணியாதிபதி எப்படி இருக்கிறார். பூர்வபுண்ணியம் நன்றாக இருக்கின்றதா என்று பார்த்தால் அவர்க்கு எப்படி வாழ்க்கை அமையும் என்பது தெரியும்.

லக்கினாதிபதி நன்றாக இல்லை என்றாலும் பரவாயில்லை பூர்வபுண்ணியாதிபதி நன்றாக இருந்தால் போதும் அவர் நல்ல முறையில் வாழ்ந்துவிடுவார். பூர்வபுண்ணியம் அந்தளவுக்கு ஒருவர்க்கு உதவி செய்யும்.

பூர்வபுண்ணியம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக அவரின் குலதெய்வம் அவர்க்கு நல்லமுறையில் அருளை வழங்கி அவர்கள் சிறந்த ஒரு வாழ்க்கையை வாழ்வார் என்று சொல்லலாம். பூர்வபுண்ணியம் நன்றாக இருந்தால் அதிர்ஷ்டம் உடையவர் என்று சொல்லலாம். எதனை தொட்டாலும் நன்றாக விளங்கும்.

ஒருவருக்கு அதிர்ஷ்டம் மட்டும் இல்லை என்றால் அவர் எதனை தொட்டாலும் அது தடையை கொடுத்துவிடும். பூர்வபுண்ணியத்திற்க்கு காரகமாக குருவை வைத்தார்கள். குருவின் பார்வையில் பார்வை அல்லது குலதெய்வத்தின் அருள் நம்மீது இருந்தால் நாம் அதிர்ஷ்டக்காரன் என்று சொல்லலாம்.

லக்கினாதிபதியும் அடிப்பட்டு பூர்வபுண்ணியமும் அடிப்பட்டால் நாம் சாபம் தான் வாங்கியிருக்கிறோம் என்று அர்த்தம் கொள்ளவேண்டும். நம்மை வைத்து பிறர் செய்துவிடுவார்கள். அடுத்தவர்களுக்கு அடிமாடாக வேலை செய்யவேண்டிய நிலை உருவாகிவிடும்.

பூர்வபுண்ணியம் நன்றாக இருந்தால் பிரச்சினை இல்லை. பூர்வபுண்ணியம் சரியில்லை என்பவர்கள் ஒரு குருவை நாடி அவர்களின் பார்வையில் நாம் இருந்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டிக்கொள்ளலாம். பூர்வபுண்ணியாதிபதியும் லக்கினாதிபதியும் கெட்டவர்கள் பெரும்பாலும் அடுத்தவர்கள் சொல்லுவதை காதுக்கொடுத்து கேட்டு அதன்படி நடக்கமாட்டார்கள். இது தான் நமது குறை என்று தெரிந்துக்கொண்டு நடந்தால் முன்னேற்றம் கண்டுவிடலாம்.

குருவை நாடமுடியவில்லை என்பவர்கள் அவர் அவர்களின் குலதெய்வத்திற்க்கு மாதந்தோறும் சென்று வாருங்கள். கொஞ்சகாலத்திற்க்கு பிறகு அனைத்தும் சரியாகும். முதலில் கடினமாக இருந்தாலும் கொஞ்சகாலத்திற்க்கு பிறகு நிலைமையை சரியாகிவிடும்.

பூர்வபுண்ணியவாதி செல்லும் நட்சத்திரம் எது என்று கண்டுபிடித்து அந்த நட்சத்திரத்திற்க்கு உரிய தேவதையை வழிபட்டாலும் ஒரளவு சரியாகிவிடும். அவர் அவர்களின் ஜாதகத்தை பார்த்து அதனை முடிவு செய்யவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, March 20, 2018

சோதிடதொழில்


வணக்கம்!
          ஒரு நண்பர் ஒரு கேள்வி கேட்டார். கிரகங்களைப்பற்றி எல்லாம் சொல்லுகின்றீர்கள் சோதிட தொழில் எவ்வாறு செய்வது என்பதை சொல்லுங்கள். 

தொழில் இரகசியத்தை வெளியில் சொல்லக்கூடாது என்பார்கள். கேள்வி கேட்டுவிட்டீர்கள் அதற்கு உண்மையான பதிலை தந்துவிடுகிறேன் அனைவருக்கும் பயன்படும். சோதிடத்தில் அனைத்தையும் தெரிந்துவிட்டாலும் விதிகள் எல்லாம் இருந்தாலும் திறன்பட அந்த தொழிலை செய்வது என்பது மிகுந்த சவாலான ஒன்று.

ஒரு சோதிடன் அவன் சொல்லும் பலன் மற்றும் அவனின் பரிகாரம் அவனுக்கு பெருமை சேர்க்கும். நாம் சொல்லுகின்ற பலன் ஒருவருக்கு நடக்கும்பொழுது மட்டுமே நம்மை நம்புவார்கள் அதேப்போல வருகின்றவர்களுக்கு நாம் கொடுக்கும் பரிகாரமும் வேலை செய்யவேண்டும்.

சோதிடபலன் தவறாக இருக்கும்பொழுது ஒரு சோதிடன் அவன் தப்பிக்க ஏதாவது ஒன்றை அடித்துவிடுவான். பரிகாரம் வேலை செய்யவில்லை என்றாலும் ஏதாவது ஒரு சாக்கு சொல்லுவது உண்டு. முழுபொறுப்பும் சோதிடக்காரனை மட்டுமே சேரும் என்பதை ஒரு சோதிடக்காரன் நன்றாக அறிந்துக்கொள்ளவேண்டும்.

நம்மை தேடிவரும் வாடிக்கையாளர்களை பற்றி நாம் எந்தவிதத்திலும் குறைச்சொல்லவே முடியாது. நாம் சொல்லுகின்ற பலன் மற்றும் பரிகாரம் அவர்களுக்கு நடந்துவிட்டால் கண்டிப்பாக வாழ்க்கை முழுவதும் நம்மோடு பயணம் செய்வார்கள். 

நாம் இயற்கையைப்பற்றி ஆராய்ந்து அதனை பலனாக சொல்லுகின்றோம். இயற்கைக்கு எதிராக நாம் செயல்படகூடாது அதாவது நம்மிடம் சோதிடம் பார்க்கின்றவர்களை நாம் ஒருநாளும் குறைச்சொல்லவே கூடாது.

நமது பலன் சரியில்லை என்றாலும் நாம் கொடுத்த பரிகாரம் நடைபெறவில்லை என்றால் கண்டிப்பாக வாடிக்கையாளர்கள் நமக்கு எதிராக கருத்து கூறுவார்கள். அவர்களிடம் நீங்கள் கோபபடவாய்ப்பு இருக்கும் அவர்களிடம் அல்லது உங்களின் மனதில் வன்மத்தை ஏற்படுத்திவிடகூடாது. வரும் வாடிக்கையாளர்கள் எந்த காலத்திலும் நன்றாகவே வாழவேண்டும் என்ற பிராத்தனை மட்டுமே இருக்கவேண்டும்.

நம்மை நாடி வந்து பலன் கேட்பவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்ற மனது உங்களிடம் இருந்தால் நம்மை நாடி வருபவர்களுக்கு உங்களால் பலன் இல்லை என்றாலும் புதிய புதிய ஆட்கள் உங்களை நாடி வருவதற்க்கு இயற்கை துணை புரியும்.

எந்த தொழில் செய்தாலும் அந்த தொழில் தான் அவர்களுக்கு எமனாக அமையும். இந்த தொழில் கொஞ்சம் அதிகமாகவே எமனாக அமையும் என்பது தான் உண்மை. அடுத்தவர்களின் கர்மாவை பார்க்கும் மனிதனுக்கு அளவுக்கு அதிகமாக கர்மா சேரும். இதனை கருத்தில் கொண்டு இந்த தொழிலை செய்யலாம்.

என்னுடைய சொந்த அனுபவத்தை நான் சொல்லிருக்கிறேன். அனைத்திற்க்கும் நானே பொறுப்பு ஏற்று அதனை ஏற்றுக்கொள்வேன். எப்படி என்னுடைய திறமையை வரும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கவேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவது உண்டு. உங்களுக்கு இந்த பதில் ஏற்றுக்கொள்ளும் விதமாக இருந்தால் நீங்களும் பின்பற்றலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, March 19, 2018

ஜாதக அனுபவம் :: லக்கினாதிபதி


வணக்கம்!
          லக்கினாதிபதி மறைவுஸ்தானத்தில் இருந்தால் உடல்நிலையில் எப்படி பிரச்சினையை கொடுக்கும் என்று கொஞ்சம் விளக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும் என்று நண்பர் கேட்டுருந்தார்.

லக்கினாதிபதி என்பது ஒருவரின் உடல்நிலையை காட்டக்கூடிய ஒரு நிலை. மறைவுஸ்தானம் என்கிறபாெழுது அவர்களின் உடலில் ஏதாவது ஒரு குறையை இயற்கையாகவே அமைத்துவிடுகின்றது. ஒரு சிலருக்கு ஊனமாக கூட அமையும் நிலை இருக்கின்றது.

இயற்கையாகவே பிரச்சினை இல்லாதபொழுது அவர்களின் பிரச்சினை என்ன என்றால் அவர்கள் காமத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். காமத்தின் மீது ஈடுபாடு இருப்பதால் மனரீதியாக பிரச்சினை ஏற்படகூடும்.

ஒரு சிலர் சுயஇன்ப பழக்க வழக்கத்தால் அவர்களின் உடலில் உள்ள அனைத்து சக்தியும் வீணாகி அவர்களின் உடல் கொஞ்சநாளில் கெட்டு நிறைய பிரச்சினையை கொடுத்துவிடுகிறது. அதனால் அவர்களின் உடல் கெடும்.

ஒரு சிலருக்கு என்ன காரணம் என்பதை தெரியாமல் உடல்நிலை கெட்டு அதனால் அவர்களால் ஒழுங்காக செயல்படமுடியாது. உடல் வேலை செய்ய மறுக்கும்பொழுது ஒன்றும் செய்யமுடியாது அல்லவா அதனால் லக்கினாதிபதி மறைவுஸ்தானத்திற்க்கு செல்லகூடாது என்று சொல்லுவார்கள்.

நாளை நவஅம்மன் (சண்டி) பொது யாகம் நடைபெறுகிறது. கலந்துக்கொள்பவர்கள் உடனே தங்களைப்பற்றியை விபரத்தை அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, March 18, 2018

நவஅம்மன் (சண்டி) பொதுயாகம்


வணக்கம்!
          நவஅம்மன் (சண்டி)பொதுயாகம் வருகின்ற செவ்வாய்கிழமையில் இருந்து துவங்கின்றது. செவ்வாய்கிழமை காலையில் யாகம் நடைபெறும். யாகத்தில் கலந்துக்கொண்டவர்களுக்கு தங்களின் வாட்ஸ்அப் எண்ணிற்க்கு புகைப்படம் அனுப்பி வைக்கப்படும்.

நவஅம்மன் (சண்டி) பொதுயாகத்திற்க்கு ஜாதகம் வேண்டுதலை அனுப்பியவர்களை தொடர்புக்கொண்டு பேசியிருக்கிறேன். பலரை  தொடர்புக்கொள்ளமுடியவில்லை அவர்கள் அனைவரும் என்னுடைய எண்ணை தொடர்புக்கொண்டு பேசுங்கள்.

நவஅம்மன் (சண்டி) பொதுயாகத்திற்க்கு மாதம்தோறும் அம்மன் பூஜைக்கு காணிக்கை அனுப்புவர்கள் அவர்களின் வேண்டுதலை என்னுடைய வாட்ஸ்அப் அல்லது மெயிலுக்கு அனுப்பி வைக்கலாம். நீங்கள் கட்டணம் அனுப்ப தேவையில்லை. உங்களுக்கும் வாட்ஸ்அப்பில் புகைப்படம் அனுப்பி வைக்கப்படும்.

நாளைக்குள் புதியதாக கட்டணம் செலுத்தவிருப்பவர்கள் செலுத்தி வைக்கலாம். உங்களின் வேண்டுதல் என்ன என்பதையும் உடனே தெரிவித்துவிடுங்கள்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800  

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நல்வாழ்த்துக்கள்


ணக்கம்!
          தெலுங்கு வருடபிறப்பை கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய தெலுங்கு வருடபிறப்பு (யுகாதி) நல்வாழ்த்துக்கள்.
நன்றி!

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, March 17, 2018

ஜாதக அனுபவம்:: லக்கினாதிபதி


வணக்கம் !
          ஒருவரின் ஜாதகத்தில் லக்கினாதிபதி என்பவர் நன்றாக இருக்கவேண்டும் என்று சொல்லுவார்கள். இது அனுபவத்திலும் உண்மையாகவே இருக்கின்றன. லக்கினாதிபதி மறைவு ஸ்தானத்திற்க்கு சென்றால் அவர்களின் வாழ்க்கை மிகுந்த போராட்டத்திற்க்கு உள்ளாகும்.

லக்கினாதிபதி மறைவு என்பது அவர்களின் உடல்நிலையிலும் கஷ்டத்தை கொடுத்துவிடும். பிறர் வேலை செய்வது போல இவர்களால் வேலையை செய்யமுடியாது. ஒரு அலுவலகத்தில் தொடர்ந்து வேலை செய்யமுடியாத ஒரு நிலையை உருவாக்கிவிடும். ஏதோ ஒரு காரணத்திற்க்கு இவர்கள் பலியாக நேரிடும்.

லக்கினாதிபதி மறைவு என்பது ஏதோ ஒரு வழியில் வாழ்க்கையில் கஷ்டம் இருந்துக்கொண்டே இருப்பது போல செய்துவிடுகிறது. எதுவும் இல்லை என்றாலும் கடன் வந்துக்கொண்டே இருக்கும். கடனை அடைக்கமுடியாத ஒரு நிலையை உருவாக்கிவிடுவார்.

அதிகமான கஷ்டத்தை ஒருவர் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றார் என்றால் அவர்களுக்கு முதலில் நாம் பார்ப்பது லக்கினாதிபதி எப்படி இருக்கின்றார் என்பதை தான் பார்க்கவேண்டும்.  அவர்களின் லக்கினாதிபதி மறைவுஸ்தானத்தில் இருந்துக்கொண்டு அவர்களை போட்டு தாக்கிக்கொண்டு இருப்பார்.

மறைவுஸ்தானத்தில் இருந்துக்கொண்டு பிரச்சினை கொடுக்கின்றது என்றால் அவர்கள் வேலையை தேர்ந்தெடுப்பது கொஞ்சம் பொதுநலனாக இருக்கும்படி பார்த்து செய்யவேண்டும். பத்து பேருக்கு வேலை செய்துவிட்டு இரண்டு பேரிடம் காசு பார்ப்பது போல செய்துக்கொள்ளலாம்.

வாழ்க்கையில் மிகுந்த கஷ்டமான ஒரு வேலையை தேர்ந்தெடுத்து அதில் சென்று மாட்டிக்கொள்ளகூடாது. அனைத்தும் எளிமையாக இருப்பது போல இருந்தால் தான் உங்களின் உடலுக்கும் நல்லது வருமானத்திற்க்கும் நல்லதாக இருக்கும்.

லக்கினாதிபதி மறைவுஸ்தானத்தில் இருக்கும் நபர்கள் பேச்சையும் கொஞ்சம் குறைவாக பேசுங்கள். உங்களின் பேச்சு பல நேரத்தில் உங்களுக்கு பிரச்சினையை கொடுக்கும். பொறுமையாக அமைதியாக அனைத்தையும் கையாள கற்றுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கேள்வி & பதில்


வணக்கம்!
          நவஅம்மன் யாகத்திற்க்கு வேண்டுதல் அனுப்ப கடைசி நாள் வரும் திங்கள்கிழமையோடு முடிவடைகிறது. திங்கள்கிழமைக்கு பிறகு வரும் வேண்டுதலை ஏற்றுக்கொள்ளபடாது. 

ஒரு நண்பர் கேள்வி ஒன்றை அனுப்பியிருந்தார். வக்கிரசக்தி உடைய அம்மனை வணங்கிக்கொண்டு வரும்பொழுது பிற தெய்வங்களை வணங்கலாமா என்று கேள்வி அனுப்பியிருந்தார்.

பிற மதங்களில் இல்லாத ஒன்று நமது மதத்தில் இருக்கின்றது. நமக்கு என்ன தேவையோ அந்த தேவைக்கு என்று ஒரு தேவதையை உருவாக்கி அதனை மட்டும் வணங்கி வந்தால் உங்களுக்கு அந்த தேவதை உங்களுக்கு நீங்கள் கேட்டதை கொடுக்கும் என்று வைத்திருக்கிறார்கள்.

நீங்கள் எல்லாவற்றையும் வணங்கிக்கொண்டு இருக்க தேவையில்லை. ஒரே குழப்பமாக இருந்துக்கொண்டு வாழகூடாது முதலில் நீங்கள் உங்களின் வாழ்க்கைக்கு தேவையானது எது என்று தெரிந்துக்கொண்டு அதன்பிறகு வணங்கினால் நல்லது.

வக்கிரகிரக சக்தி உடைய அம்மனை வணங்க ஆரம்பித்துவிட்டால் அது மட்டுமே போதும். அதன்பிறகு அனைத்தும் அந்த அம்மனை உங்களை பார்த்துக்கொண்டு விடும்.  முதலில் நீங்கள் எந்த பாதையில் செல்லவேண்டும் என்பதை தெரிந்துக்கொண்டு அதன்பிறகு செயல்பட ஆரம்பியுங்கள்.  எல்லா பாதையிலும் பயணிக்கமுடியாது. பாதை எது என்பதை தீர்மானித்துவிட்டு அதன்பிறகு செயல்பட ஆரம்பியுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, March 16, 2018

ஜாதக அனுபவம்


வணக்கம்!
         ஒவ்வொருவருக்கும் ஜாதகம் பார்க்கும்பொழுது அவர்களின் ஜாதகத்தில் தோஷம் இருந்தால் அதனால் அவர்களுக்கு பிரச்சினை வரும் என்று தெரிந்தால் மட்டுமே அவர்களுக்கு வழிபாட்டு முறைகளை பின்பற்ற சொல்லுவது உண்டு. நல்ல இருக்கும் ஜாதகத்தில் எதுவும் தேவையில்லை என்று சொல்லுவது உண்டு.

பல ஜாதகர்கள் ஜாதகத்தின் பலனை சொல்லியவுடன் எனக்கு பரிகாரம் சொல்லுங்கள் அதனை செய்கிறேன் என்பார்கள். அவர்களுக்கு எதுவும் தேவையில்லை எனும்பொழுது அவர்களே விருப்பட்டு பரிகாரம் கேட்பார்கள். எதுவும் தேவையில்லை என்று சொல்லுவேன். எந்த வழிபாட்டை மேற்க்கொள்ளலாம் என்று கேட்பார்கள். அதற்கும் எதுவும் தேவையில்லை என்று சொல்லுவது உண்டு.

ஒருவரின் ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தால் அவர்களுக்கு எதுவும் தேவையில்லை. அந்த கிரகங்கள் அவர்களுக்கு தேவைப்பபடும் அனைத்தையும் கொடுத்துவிடும். அவர்கள் வழிபாடு செய்து பெறதேவையில்லை அனைத்தையும் கொடுத்துவிடுகிறது. 

ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் அதிகம் பாதிப்படையும்பொழுது மட்டுமே ஒருவருக்கு பிரச்சினை வருகின்றது. அவர்கள் தான் வழிபாடு கோவில் குளம் மற்றும் பரிகாரம் என்று சுற்றிக்கொண்டு இருக்கவேண்டும்.

ஒரு குடும்பத்தில் ஒருவரின் ஜாதகம் மட்டும் கொஞ்சம் நன்றாக இருந்தால் போதும் அனைவருக்கும் அந்த ஜாதகரின் பலனை வைத்து நன்றாக வாழ்ந்துவிடலாம். ஒட்டுமொத்த குடும்பஉறுப்பினர்களின் ஜாதகமும் கெடும்பாெழுது தான் பிரச்சினை அதிகமாக வந்துவிடுகிறது.

ஒரு ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் அதிகப்பட்சம் இரண்டு அல்லது மூன்று கிரகங்கள் ஆட்சி பரிவர்த்தணை பெற்று இருந்தால் போதும் நல்ல பலனை கொடுக்கும். ஒரு சில விதிகளும் இருக்கின்றன அதனை எல்லாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

நவஅம்மன்(சண்டி) யாகத்திற்க்கு அனுப்புவர்கள் உடனே அனுப்பிவைக்கவும். ஒவ்வொருவரையும் நாளை முதல் தொடர்புக்கொள்கிறேன்.  

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, March 15, 2018

வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்வது?


ணக்கம்!
          ஜாதகத்தை பல வருடங்களுக்கு முன்பு திருமணத்திற்க்கு தான் கையில் எடுக்க ஆரம்பித்தார்கள். இன்று அப்படி அல்ல ஒரு சின்ன பிரச்சினை வந்தாலே ஜாதகத்தை எடுத்து எதற்க்காக இந்த பிரச்சினை வந்தது என்று நோண்டி எடுக்கும் நிலையில் மக்கள் வாழ்க்கின்றனர்.

சோதிடர்களுக்கு தெரியாத விசயங்கள் கூட வரும் வாடிக்கையாளர்களுக்கு தெரிகிறது என்பது தான் உண்மையாக இருக்கின்றது. சோதிடத்தின் மீது அந்தளவுக்கு மக்கள் ஈடுபாடு வைத்துக்கொண்டுள்ளனர் என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஜாதகம் பார்க்கவேண்டும் என்பதைவிட உங்களின் மனதில் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழவேண்டும் என்பதை முதலில் தீர்மானித்துவிட்டு அதற்கு உங்களின் ஜாதகத்தில் இடம் இருக்கின்றதா என்பதை பாருங்கள். ஜாதகத்தில் வேறு விதமாக இருந்தால் அப்பொழுது உங்களின் ஆசை நிறைவேறாது.

உங்களின் ஆசைக்கு எப்படிப்பட்ட வழியில் பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் செய்தால் அது கிடைக்கும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து அதனை செய்துக்கொண்டு இருந்தால் கூடுமானவரை அதனை பெற்றுக்கொடுக்கும்.

எல்லாம் முடிந்தபிறகு சோதிடத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது. பலர் வாழ்க்கை முழுமையாக முடிந்த பிறகு தான் சோதிடத்தை எடுத்து பார்க்க ஆரம்பிக்கின்றனர். அது தவறான ஒன்று என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும்.

நான் நிறைய கோவில்கள் எல்லாம் சென்று இருக்கிறேன். ஒரு குருவின் வழிகாட்டுதல் வந்த பிறகு தான் வாழ்க்கை மிக சரியாக தீர்மானித்து செல்லமுடிந்தது. ஒரு ஆன்மீககுருவின் டச் இல்லாமல் வாழ்க்கை கண்டிப்பாக நன்றாக இருக்காது என்பது என்னுடைய கருத்து.

குரு இல்லாமல் செய்யும் வழிபாடு பரிகாரங்கள் மற்றும் எது இருந்தாலும் அது உங்களை கரை சேர்க்காது என்பதை புரிந்துக்கொண்டு ஒரு ஆன்மீககுருவை நாடி அதன்படி வாழ்க்கை அமைத்துக்கொள்ளவேண்டும்.

சூழ்நிலையை உருவாக்குவது என்பது மிக மிக கடினம். ஏழ்மையாக இருந்துக்கொண்டு இருந்தால் அது ஒரு சூழ்நிலையில் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றீர்கள் என்று அர்த்தம். பணக்கார சூழ்நிலை என்பது வேறு. நீங்கள் இருக்கும் சூழ்நிலையில் இருந்து வேறு ஒரு சூழ்நிலைக்கு நீங்கள் மாறவேண்டும் என்றால் நிறைய கஷ்டப்படவேண்டும்.

சூழ்நிலையை உருவாக்கமுடியாது என்றால் அந்த சூழ்நிலையிலேயே வாழகற்றுக்கொள்ளுங்கள். சூழ்நிலையை உருவாக்கவேண்டும் என்றால் அதற்கு குரு கண்டிப்பாக தேவை என்பதை புரிந்துக்கொண்டு செயல்படுங்கள். 

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, March 14, 2018

ஜாதக அனுபவம் :: வக்கிரகிரக சக்தி


வணக்கம்!
          பின்லேடனின் ஜாதகத்திலும் மூன்று கிரகங்கள் வக்கிரம் என்று கலைராஜன் ஐயா அவர்கள் சொல்லிருந்தார். உலகத்தில் உள்ள பெரிய ஜாம்பாவன் என்று சொல்லக்கூடியவர்கள் அனைவருக்கும் மூன்று கிரகங்கள் வக்கிரமாக இருக்கும்.

வக்கிரம் என்பது ஒரு சாதாரணமான மனிதன் சிந்தனை செய்வதைவிட இவர்கள் அதிகமாக சிந்தனை செய்யக்கூடியவர்கள். குறுக்குவழியை சிந்தனை செய்து அதனை செயல்படுத்தி வெற்றி காண்பவர்களாக இருப்பார்கள்.

கிரகங்கள் வக்கிரம் அடையாத நபர்கள் அதே சக்தியை பெறுவதற்க்கு உள்ள வழியை தான் நான் வக்கிரமாக இருக்கும் அம்மனை கும்பிட்டு அந்த சக்தியை பெறலாம் என்று சொல்லிருந்தேன். முதலில் நீங்கள் உங்களுக்கான வழியை தேர்ந்தெடுத்துக்கொண்டு இப்படிப்பட்ட அம்மனை வழிபட்டு வந்தால் கண்டிப்பாக வெற்றி பெறலாம்.

ஏதோ வாழ்ந்தால் போதும் என்று நினைப்பவர்கள் இப்படிப்பட்ட அம்மனை எல்லாம் கும்பிடவே வேண்டியதில்லை. அதிக சக்தியை நாம் பெற்று அதனை பயன்படுத்த வேண்டும் என்றால் இப்படிப்பட்ட அம்மனை வழிபட்டு வெற்றி பெறலாம்.

ஒரு சில ஜாதகர்களுக்கு வக்கிரம் பெற்றும் சும்மா இருப்பார்கள். ஏதும் செட் ஆகவில்லை என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். இவர்களும் வக்கிரமாக இருக்கும் அம்மனை கும்பிட்ட பிறகு தான் அந்த கிரகத்தின் ஆற்றலை பெறமுடியும். 

எனக்கு வக்கிரமாக இருக்கின்றது ஒன்றும் நடக்கவில்லை என்றால் பலதடவை சென்று வக்கிரமாக இருக்கும் அம்மனை கும்பிட்டால் கண்டிப்பாக நன்றாக இருக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு