வணக்கம்!
குரு பெயர்ச்சியில் முதல் இராசியை நாம் எடுத்துக்கொள்வோம். காலச்சக்கரத்தில் முதலாவதாக வரும் மேஷ இராசியை நாம் எடுத்துக்கொள்ளலாம்.
மேஷ இராசி
உங்களின் இராசிக்கு எட்டாவது இடத்தில் இருந்து ஒன்பதாவது இடத்திற்க்கு செல்கின்றார். தனுசுயில் இருந்து உங்களின் இராசியை ஐந்தாவது பார்வையாக பார்க்கின்றார். இராசிக்கு குருபகவானின் ஐந்தாவது பார்வை கிடைப்பது புண்ணியம் என்று சொல்லலாம்.
உங்களி்ன் மனதில் தெளிவு ஏற்படும். குழப்பமான மனநிலையில் இருந்து நல்ல மனநிலைக்கு வருவீர்கள். இதுவரை பிச்சைகாரர்களுக்கு கூட ஒரு பைசா கொடுக்கமுடியவில்லை என்ற நிலையில் இருந்து இனிமேல் கொடுக்கும் மனநிலையில் நீங்கள் வருவீர்கள். உங்களின் அனைத்து வேலையும் இந்த ஒரு வருடகாலத்திற்க்கு நீங்கள் எடுக்கலாம்.
குரு கிரகம் ஒன்பதாவது வீட்டிற்க்கு வருவதால் இந்த இடம் ஒரு பாக்கியஸ்தானம் என்று எடுத்துக்கொள்ளலாம். தெளிவான மனநிலை மற்றும் ஆன்மீகத்தோடு தொடர்பு ஆகியவற்றை காட்டக்கூடிய ஒரு இடம் என்பதால் நீங்கள் கோவில் கட்டுவதற்க்கு கூட உதவமுடியும்.
ஆன்மீக பெரியோர்களின் ஆசியை பெறவைக்கும். உங்களின் குரு உங்களுக்காக நிறைய செய்வார். அவரின் ஆசியை பெறலாம். அவரால் உங்களுக்கு நிறைய பயன் உண்டு. உங்களால் அவர் பயன்பெறுவது உங்களின் கையில் தான் இருக்கின்றது. அவரிடம் கொடுத்து நீங்கள் நிறைய எடுத்துக்கொள்ளலாம்.
இதுவரை நிலவி வந்த காரியதடை எல்லாம் நீங்கி அனைத்து காரியத்திலும் வெற்றி என்பது உங்களை தேடிவரும். வீட்டில் தூங்கிக்கொண்டு இல்லாமல் அனைத்திலும் முயற்சி செய்யுங்கள். இதுவரை இல்லாத ஒரு பெரிய பொருளாதார வளர்ச்சியை நோக்கி நீங்கள் செல்லலாம்.
தனுசில் குரு அமர்ந்து ஏழாவது பார்வையாக மிதுனஇராசியை பார்க்கின்றார். உங்களின் இராசிக்கு மூன்றாவது வீடாக மிதுனஇராசி வருகின்றது. உங்களின் இளைய சகோதர் உங்களுக்கு சேரவேண்டிய சொத்தை அவர் பிடிங்கி வைத்துக்கொண்டு இருப்பார். தற்பொழுது அவரிடம் நீங்கள் இந்த சொத்தை எனக்கு கொடு. எனக்கு பத்திரம் செய்து கொடுத்துவிடு என்றால் அவர் சம்மதம் தெரிவித்து உங்களுக்கு எழுதிக்கொடுப்பார்.
பக்கத்துவீட்டுகாரன் உங்களின் வீட்டின் நிலத்தை ஆக்கரமித்துக்கொண்டு இது என்னுடையது என்று சொல்லிக்கொண்டு இதுவரை இருந்து இருப்பார். இந்த காலத்தில் நீங்கள் அதற்கு முயற்சி செய்தால் அந்த நிலம் உங்களுக்கு கிடைக்கும்.
உலகத்தில் உள்ள அண்ணன் அனைவரும் தன்னுடைய தம்பிக்கு திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று நினைப்பதில்லை. அவர்களும் வாழவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் இந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம்.
எழுத்துப்பூர்வமாக உள்ள விசயங்களை எல்லாம் நீங்கள் எடுத்துக்கொண்டு அதனை எல்லாம் உங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ள ஒரு நல்ல காலக்கட்டமாக இதனை எடுத்துக்கொள்ளலாம். ஆதார் கார்டு கட்டாயமாக எடுக்கவேண்டும் என்று அரசாங்கம் சொல்லுகின்றது அல்லவா இதுவரை எடுக்கவில்லை என்றால் இதனையாவது எடுக்கலாம்.
ஒன்பதாவது பார்வையாக குரு சிம்மஇராசியை பார்க்கின்றது. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை என்பவர்களுக்கு இந்த வருடகாலத்தில் கிடைக்கும். குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். குலதெய்வ கோவிலை நீங்கள் கட்டலாம்.
லாட்டரி சீட்டு யோகம் மற்றும் குதிரை பந்தய யோகம் எல்லாம் உங்களுக்கு கிடைக்கும். வெளிமாநில லாட்டரி சீட்டு அல்லது வெளிநாடுகளில் உள்ள லாட்டரி சீட்டை எல்லாம் வாங்கி பாருங்கள். உங்களுக்கு லாட்டரி யோகம் கிடைக்கும்.
பரிகாரம்
ஒன்பதாவது வீடு என்பதால் மிகுந்த யோகத்தை பெறுவதற்க்கு நீங்கள் பரிகாரத்தையும் செய்துக்கொள்ளலாம். குருவாக இருப்பவர்களுக்கு பணத்தை கொடுங்கள். குரு பகவானை வணங்கி வாருங்கள்.
ஜாதக கதம்பத்தில் குரு பெயர்ச்சி பரிகாரம் யாகம் நடைபெற இருக்கின்றது. விரும்பம் இருப்பவர்கள் தங்களின் இராசி மற்றும் நட்சத்திரத்தை சொல்லி உங்களுக்கு விருப்பமான கட்டணத்தை செலுத்தி வைக்கலாம்.
தொடர்புக்கு : 9551155800, 8940773309 What'sApp Number: 9551155800
அன்புடன்
ராஜேஷ்சுப்பு