Followers

Monday, November 30, 2015

வீண் வம்பு


ணக்கம்!
          தமிழ்நாடு முழுவதும் சுற்றி வரும்பொழுது ஒரு விசயம் கண்ணில் படும் அந்த விசயத்தை ஏற்கனவே நான் சொல்லிருந்தாலும் மேலும் அதனைப்பற்றி சொல்லவேண்டும் என்று ஒரு சில சம்பவங்கள் நடைபெற்றன.

ஒரு விசயத்தை மக்கள் சொல்லுவதை விட பிளக்ஸ் போர்டு அதிகளவில் ஈர்த்து அந்த விசயத்தை பரப்புகின்றது என்று நினைக்கிறேன். எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் அதாவது பிறந்தாலும் வாழ்ந்தாலும் இறந்தாலும் பிளக்ஸ் போர்டு அதிகளவில் பங்குக்கொள்கிறது.

பிளக்ஸ் போர்டு வைத்து அதிகளவில் பிரச்சினைகளை உருவாக்கிகொள்வதை பார்த்திருக்கிறேன். மது பெண்களின் தாலியை அறுப்பதைவிட பிளக்ஸ்போர்டு அதிகளவில் பெண்களின் தாலியை அறுக்கிறது.

பிளக்ஸ் போர்டில் எழுதப்படும் வாசங்களும் அதில் இடம்பெறும் சிங்கம் புலி போன்ற விலங்குகளின் படமும் அதிகளவில் கொலைகளை நடத்த தூண்டுகிறது. இதனை படிக்கும் உங்களுக்கு நன்றாக தெரியும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரியும். இதனைப்பற்றி அதிகம் சொல்லவேண்டாம் என்று நினைக்கிறேன்.

இதனை படிக்கும் நீங்கள் உங்களின் இல்லத்தில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் பிளக்ஸ்போர்டு வைக்கவேண்டாம். ஏன் என்றால் வீணாக வம்பை விலை கொடுத்து வாங்காதீர்கள். நல்ல மகிழ்வோடு உங்களின் குடும்பத்தின் நிகழ்வுகளை நடத்த இது உதவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, November 28, 2015

பாக்கியஸ்தானமும் தீயகிரகங்களும்


வணக்கம்!
          பாக்கியஸ்தானத்தில் தீய கிரகங்கள் இருந்தால் அது பித்ருதோஷம் அதனால் நிறைய கஷ்டப்படுவார்கள் என்று பொதுவான சோதிட தகவலை சொல்லிவிடுவதும் உண்டு. ஒன்பதாவது வீட்டில் தீய கிரகங்கள் அமைந்து நல்ல வாழ்க்கையை வாழ்பவர்களும் உண்டு.

ஒன்பதாவது வீட்டில் தீய கிரகங்கள் அமைந்து மற்ற கிரகங்கள் கொஞ்சம் வலுவாக அமைந்தால் அந்த ஜாதகருக்கு இராஜயோகம் அமைந்து நல்ல வாழ்வை வாழ்வார். ஒரு சிலருக்கு தீயகிரகங்கள் ஒன்பதாவது வீட்டில் அமைந்துமற்ற கிரகங்கள் சரியாக அமையவில்லை என்றாலும் கூட ஒன்பதாவது வீட்டு தசா வரும்பொழுது நல்ல வாழ்வு கிடைத்திருக்கிறது.

ஒன்பதாவது வீட்டில் தீயகிரகங்கள் தன்னுடைய தசாவில் இடுப்பு வலியை ஏற்படுத்தும். ஒன்பதாவது வீட்டில் தீயகிரகங்கள் அதிக பயணத்தை ஏற்படுத்தி அதன் வழியாக கூட இடுப்பு வலியை ஏற்படுத்தியதை பல பேருக்கு நான் பார்த்திருக்கிறேன்.

நம்ம நாட்டில் ஒருவர் பயணத்தை அதிகம் மேற்க்கொள்ளும்பொழுது நம்ம சாலை மற்றும் வாகனத்தின் தரத்தில் கூட இடுப்பு வலி அதிகம் ஏற்படுவது உண்டு. வெளிநாட்டில் இது இல்லாமல் இருக்கலாம். நாட்டிற்க்கு தகுந்தமாதிரி பலனும் மாறுபடலாம்.

இன்று மதியம் காரைக்குடி பயணம். நாளை சிவகங்கை மற்றும் காரைக்குடி சுற்றுவட்டாரபகுதியில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, November 26, 2015

பொறுமை என்னும் பாக்கியம்


வணக்கம்!
          மனிதனுக்கு பணம் வந்துவிட்டால் அவனுக்கு கண் தெரியாது என்பார்கள். தலை கால் புரியாமல் ஆட்டம் போட ஆரம்பித்துவிடுவார்கள். பணம் வந்தால் பொறுமையாக இருப்பதில்லை.

என்னை நாடி வரும் நண்பர்களிடம் நான் சொல்லுவது எல்லாம் நீங்கள் வறுமையாக இருக்கும்பொழுது பொறுமையாக இருப்பது போல் பணம் வந்தபிறகு பொறுமையை கடைபிடியுங்கள் என்று சொல்லுவேன். 

பணம் வந்துவிட்டாலே அவனோடு சேர்ந்து பல பிரச்சினைகளும் வந்துவிடும். இன்றைய நிலையில் இதனை நான் எழுதுவது படித்த நண்பர்களுக்கு கிடையாது. பல கிராமத்து இளைஞர்கள் இப்படி இருப்பதால் இதை எழுதுகிறேன்.

பல இடங்களில் நான் கிராமத்தில் உள்ள இளைஞர்களிடம் இதனை காண்பது உண்டு. அதனால் நமது பதிவில் அடிக்கடி இந்த பொறுமையை வலியுறுத்துகிறேன். ஒருவனுக்கு பணம் வந்துவிட்டால் அந்த பணத்தை அவன் கடைசிவரை பயன்படுத்தவேண்டும் என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன்.

ஒரு சில ஜாதகங்களில் பாக்கியஸ்தானத்தில் செவ்வாய் மற்றும் சனி சேர்ந்து இருக்கும் ஜாதகர்கள் பொறுமையை இழந்து சண்டை போடுபவர்களாக இருக்கின்றார்கள். உங்களுக்கு இப்படி அமைந்து இருந்தால் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. 

எந்த ஒரு அடையாளத்தையும் விரும்பாதீர்கள் அதாவது ஒரு சில ஜாதி பெயரை சொல்லி சண்டை போட சொல்லுவார்கள். அதற்குள் கூட நீங்கள் சென்றுவிடாதீர்கள். உங்களுக்கு வம்பு தேடிவரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, November 25, 2015

கார்த்திகை தீபம்


வணக்கம்!
          தவிர்க்கமுடியாத காரணத்தால் இன்று கார்த்திகை தீபத்திற்க்கு திருவண்ணாமலை செல்லமுடியவில்லை. திருவண்ணாமலை தீபம் ஏற்றும்பொழுது அனைத்து தெய்வங்களும் அங்கு இருக்கும் என்பார்கள். அதாவது அனைத்து தேவதைகளும் அந்த இடத்திற்க்கு வரும் என்பார்கள்.

தீபம் ஏற்றும் நாளில் அங்கு தெய்வசக்தி இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். இன்று சென்று தீபத்தை தரிசனம் செய்பவர்கள் தரிசனம் செய்யலாம். தெய்வசக்தி உங்களுக்குள் நன்றாக வரும்.

திருவண்ணாமலைக்கு செல்லமுடியாதவர்கள் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள். அனைத்து கோவில்களிலும் சொக்கபானை என்ற ஒரு தீபம் ஏற்றுவார்கள் அதனையும் தரிசனம் செய்யலாம்.

மாலை ஆறுமணிக்கு வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். அதிகமாக அகல் தீபம் ஏற்றி வீடு முழுவதும் ஒளிவீச செய்யுங்கள். வாழ்வில் என்றும் ஆனந்த ஒளிவீசம்.



அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, November 24, 2015

பாக்கியஸ்தானமும் செவ்வாயும்


வணக்கம்!
          பாக்கியஸ்தானத்தில் செவ்வாய் ஒருவருக்கு இருந்தால் பெரும்பாலும் அந்த நபர் பெரிய நிர்வாகத்தை நிர்வகித்து அதில் இருந்து நல்ல செல்வவளம் கிடைத்து வாழ்வார்கள். செவ்வாய் அமரும் வீடு உச்சவீடாக இருந்தால் நன்றாக இருக்கும் அல்லது செவ்வாயோடு கெட்ட கிரகங்கள் சேராமல் இருக்கவேண்டும். தீயகிரகங்களின் பார்வையும் படக்கூடாது. 

செவ்வாய் பாக்கியஸ்தானத்தில் இருந்தால் அந்த நபர் தனித்து போய்விடுவார்கள் என்று சொல்லுவார்கள். ஒரு சிலருக்கு அப்படி நடப்பது உண்மை தான் எல்லாேருக்கும் அப்படி நடப்பதில்லை. பாக்கியஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்தால் பங்காளிகள் சண்டை அதிகம் வருகின்றது.

ஒரு சில ஜாதகத்தில் செவ்வாய் ஒன்பதாவது வீட்டில் அமர்ந்த நபர்கள் வெளிநாட்டில் வேலை வாய்ப்பை பெற்று இருக்கின்றார்கள். வெளிநாட்டில் கனரக தொழில் நடைபெறும் இடத்தில் பணிபுரிகின்றனர்.

செவ்வாய் ஒன்தாவது வீட்டில் நீசம் பெற்று அமர்ந்து இருப்பவர்கள் வேலைக்கே கஷ்டப்படுபவர்களாக இருக்கின்றனர். எந்த வேலை கிடைக்காமல் இருக்கின்றனர். அவர்களின் பாக்கியம் அப்படி வேலை செய்கின்றது.

செவ்வாய் உச்சம் பெற்று ஒன்பதாவது வீட்டில் அமர்ந்திருப்பவர்களுக்கு மலை பிரதேசங்களில் உள்ள ஆன்மீகதலங்களை நாடி சென்று அங்கே தங்கியுள்ளனர். ஆன்மீகதலங்களில் ஆன்மீக தொண்டு செய்வதற்க்காக இருக்கின்றனர்.

ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் இருந்து பிரச்சினை தருகின்றது என்று நினைப்பவர்கள் முருகன் கோவிலுக்கு சென்று ஒன்பது வாரம் தீபம் ஏற்றி வாருங்கள். முருகன் கோவிலுக்கு ஏதாவது ஒரு நாள் அன்னதானம் செய்து வாருங்கள். பாக்கியஸ்தானம் முருகன் அருளால் பலப்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


Monday, November 23, 2015

மறுஉலகம்


வணக்கம்!
          பாக்கியஸ்தானத்தை ஆன்மீகத்தோடு அதிக தொடர்புபடுத்தியுள்ளனர். பாக்கியஸ்தானம் நன்றாக இருந்தால் ஒருவருக்கு ஆன்மீகம் நன்றாக வரும் என்று சொல்லியுள்ளனர். ஆன்மீகத்திற்க்கு ஒன்பதாவது வீடு ஆசி வளங்கவேண்டும்.

ஆன்மீகம் என்றவுடன் இந்த பூமி இல்லாமல் வெளியுலக தொடர்பை பற்றியும் ஆராய்ச்சி செய்வார்கள். மறு உலகத்தின் தொடர்பை அதிகம் கொடுப்பது இந்த பாக்கியஸ்தானம் ஆகும்.

உங்களின் ஜாதகத்தில் பாக்கியஸ்தானம் நன்றாக இருந்தால் ஆன்மீகம் உங்களுக்கு நன்றாக வருவதோடு மறு உலகத்தின் ரகசியத்தையும் அதிகம் கொடுக்கும்.

பாக்கியஸ்தானத்தில் வில்லங்க கிரகங்கள் அமர்ந்து கூட ஒரு சிலருக்கு ஆவி ஆராய்ச்சி பற்றி ஆர்வம் ஏற்பட்டு அதனைப்பற்றி தெரிந்துக்கொள்வார்கள். பாக்கியஸ்தானம் நன்றாக இருக்கின்றது என்று நினைப்பவர்கள் மறுஉலகத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்து பாருங்கள் அதனைப்பற்றி தகவல் தெரிய வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, November 22, 2015

பரிகாரம்


ணக்கம்!
          நிறைய பேர்களின் ஜாதகத்தை நான் பார்த்திருக்கிறேன். அதில் தோஷம் உள்ளவர்களின் ஜாதகத்தை பார்க்கும்பொழுது தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் என்று ஏதாவது ஒரு பணத்தை புரோகிதர்களுக்கு கொடுத்த பிறகு தான் அவர்களின் வாழ்வில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது.

பரிகாரம் செய்கிறார்களா அல்லது செய்யவில்லை என்பதைவிட இவர்களிடம் இருந்து பணம் ஒரு தொழில் செய்வர்களுக்கு செல்லும்பொழுது சம்பந்தப்பட்ட நபர்களின் தோஷம் விலகுகிறது. என்னுடைய அனுபவத்தில் நான் நிறைய இதுபோன்று பார்த்திருக்கிறேன்.

உங்களுக்கு தோஷம் இருந்தால் கண்டிப்பாக அதற்கு பரிகாரமாக ஏதாவது ஒன்று செய்யவேண்டும். குறைந்தது சம்பந்தப்பட்ட கிரகத்திற்க்கு ஒரு விளக்காவது ஏற்றும்பொழுது மட்டுமே அவனை கொஞ்சம் விட்டுவைக்கிறது.

ஏதோ ஒரு செயல் அதாவது ஆன்மீகவழியில் ஒன்று நடைபெற்றால் கண்டிப்பாக உங்களுக்கு நல்லது நடைபெறுகிறது. உங்களின் தடை விலகுகிறது. தடை விலகினாலே போதும் நீங்கள் வெற்றி பெற்றுவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மழை


வணக்கம்!
         இன்று தான் எங்கள் பகுதியில் விடியற்காலையில் இருந்து மழை பெய்துக்கொண்டு இருக்கின்றது. உலகம் முழுவதும் பெய்த மழை தஞ்சாவூரில் இல்லை. இன்று பரவாயில்லை காலையில் இருந்து நல்ல மழை.

மழைப்பற்றி நிறைய கருத்துக்களை மீடியாக்கள் பரவவிட்டாலும் ஒரு சாஸ்திரகருத்து என்று ஒன்று உள்ளது. அது மழை பல வருடங்கள் பேயாமல் இருந்தாலும் கடுமையான வறட்சி ஏற்பட்டாலும் அறுபது வருடத்திற்க்கு ஒரு முறையாவது கடுமையான வெள்ளபெருக்கு ஏற்படும் என்று சொல்லியுள்ளார்கள்.

ஆற்றை அல்லது குளத்தை தூற்று நாம் வீடு கட்டினால் அறுபது வருடத்திற்க்கு ஒரு முறையாவது ஆறு இருந்த இடத்தில் தண்ணீர் வந்துவிடும். இயற்கையை எதிர்த்து நாம் வாழாமல் இயற்கையோடு இணைந்து வாழவேண்டும்.

இயற்கையை எதிர்த்து வெல்லமுடியாது இயற்கையோடு செல்லும்பொழுது நம்மை அது அரவணைத்துசெல்லும். நீங்கள் எங்கு வீடு கட்டினாலும் வீடு வாங்கினாலும் நீர் வழிதடங்களை பார்த்துவிட்டு அந்த இடத்தில் ஆறு அல்லது குளம் இல்லாமல் பார்த்து வாங்குங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஆரோக்கிய பாக்கியம்


வணக்கம்!
          ஒருவன் நோய் நொடி இல்லாமல் வாழும் காலம் முழுவதும் வாழ்ந்தாலே அவன் மிகப்பெரிய பாக்கியம் செய்தவனாகிறான். நன்றாக கடைசி வரை எதனையும் ஒதுக்காமல் சாப்பிட்டால் அதனை விட பெரிய பாக்கியம் வேறு எதுவும் இல்லை என்றே சொல்லலாம்.

இன்றைய காலத்தில் எதனை தொட்டாலும் அதில் இருந்து இந்த வியாதி வருகின்றது என்று சொல்லிக்கொண்டு பெரும்பாலான உணவுகளை எடுக்காமலே இருக்கின்றோம். நோயும் அப்படி தான் எதாவது ஒரு விதத்தில் வந்துக்கொண்டே இருக்கின்றது.

ஒரு சில கிராமங்களில் நான் பார்த்திருக்கிறேன். தொண்ணூறு வயதில் உள்ளவர்கள் அனைத்தையும் நன்றாக சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் நன்றாக இருப்பார்கள். ஏதாவது வேலை செய்துக்கொண்டும் இருப்பார்கள்.

கடைசி வரை நன்றாக இருப்பதும் அவன் அவன் செய்த பாக்கியம் தான். இன்றைய உலகத்தில் விளையும் உணவு வகைகள் எல்லாம் கலப்படம் மற்றும் இரசயன உரமாக இருந்தபொழுதிலும் ஒருவன் நன்றாக வாழ்கிறான் என்றால் அவன் செய்த பாக்கியமாகவே இதனை கருதவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, November 21, 2015

அனுபவம்


ணக்கம்!
          நேற்று ஒரு இரத்த சம்பந்தப்பட்ட இறப்பு ஒன்று ஏற்பட்டது. சென்னை வந்துவிட்டு இன்று விடியற்காலை தஞ்சாவூர் வந்துவிட்டேன். நேற்று இறப்பு என்பதால் பதிவை தரமுடியவில்லை.

நமக்கு ஏற்படும் அனுபவத்தை வைத்து தான் ஜாதககதம்பம் எழுதப்படுகிறது. நேற்று அடைந்த ஒரு அனுபவத்தை உங்களுக்கு சொல்லுகிறேன். நம்ம ஆட்கள் வேலை தேடி சென்னை போன்ற நகரங்களுக்கு செல்லுகின்றனர். இப்படி செல்லும் ஆட்கள் சென்னையிலேயே தங்க நேரிட்டாலும் அவர்களின் பூர்வீகத்தை மறக்ககூடாது.

தன்னுடைய வாரிசுகளுக்கு பூர்விகத்தைப்பற்றியும் பூர்வீகத்தின் உறவினர்களைபற்றி நன்றாக தெரிந்துவைக்க ஏற்பாடு செய்யவேண்டும். பல குடும்பங்களின் தந்தையோடு சொந்த ஊர் எது என்று தெரியாமல் இருக்கின்றனர்.

கோடிக்கணக்கான பணம் சம்பாதித்தாலும் ஒருவன் நகரத்தில் இறக்கும்பொழுது அவன் பிச்சைக்காரன் போல் தான். பிணத்திற்க்கு அருகில் அவனின் குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு யாரும் இருப்பதில்லை. இதே இறந்தவனின் சொந்த ஊரில் அவன் இறந்தால் ஆயிரம்பேர் இருப்பார்கள்.

பொதுவாக நமது இந்துக்கள் செய்யும் பெருமையான தவறு இறப்பவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்படுவதில்லை. வேலை காரணம் என்று காட்டி நகரத்திலேயே அடக்கம் செய்கின்றனர் இது பெரிய தவறு. எந்த ஊரில் அவன் பிறந்தானோ அதே ஊரில் அடக்கம் செய்தால் நன்றாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, November 19, 2015

குரு தரும் பாக்கியம்


ணக்கம்!
          குரு ஒன்பதாவது வீட்டில் ஒருவர்க்கு அமைந்தால் அந்த நபர் சிறந்த பாக்கியம் உடையவராக திகழ்வார். ஒரு சில ஜாதகருக்கு இப்படி அமைவது உண்டு. அதாவது ஒன்பதாவது வீடு நட்பு வீடாக அமைந்து தீயகிரகங்கள் பார்வை இல்லாமல் இருக்கும்பொழுது அதிகப்படியான நன்மைகளை வாரி வழங்கும்.

ஒரு சிலருக்கும் ஒன்பதாவது வீட்டில் தனித்து அமர்ந்து இருந்தால் ஒரு சில ஜாதகங்களில் மட்டும் நன்றாக பாக்கியம் அமைவதில்லை அதாவது நல்ல பலனை தருவதில்லை. ஒவ்வொரு ஜாதகமும் ஒவ்வொரு விதத்திலும் வித்தியாசப்படும். அதில் ஒன்று இப்படிப்பட்ட பலன்களை வழங்குகிறது.

குரு ஒன்பதாவது வீட்டில் அமைந்த நப்களுக்கு பொதுவான பலன்களாக அவர்கள் சிறந்த நடத்தையை உடையவர்களாக திகழ்கின்றார்கள். நல்லவர்களாக அதுவும் அனைவருக்கும் பயன்படுபவராக இருக்கின்றனர்.

ஒரு வேலை இப்படிப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைகின்றது என்று நினைக்கிறேன். தந்தை செய்யும் நன்மை கண்டிப்பாக வாரிசுகளுக்கு வரும் என்று நம்பிக்கையோடு சொல்லலாம்.

ஒன்பதாவது வீட்டில் அமர்ந்து குரு தசா அல்லது அதனின் புத்தி நடைபெறும் காலத்தில் சிறந்த பலனை எதிர்பார்க்கலாம். ஒன்பதாவது வீட்டில் குரு அமர்ந்து தசாவை நடத்தினாலும் ஒரு சிலர் மட்டுமே தர்ம காரியங்களில் அதிக நாட்டம் ஏற்பட்டு தர்மம் செய்கின்றனர்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, November 18, 2015

பாக்கியஸ்தானம்


ணக்கம்!
          ஒரு ஜாதகம் உங்களிடம் வருகின்றது என்று வைத்துக்கொள்வோம். அந்த ஜாதகத்தை நீங்கள் பார்க்கின்றீர்கள் ஒன்பதாவது வீட்டு அதிபதி நன்றாக இருக்கின்றது. பாக்கியஸ்தானம் நன்றாக இருக்கின்றது அதனால் இவர் இளம் வயதில் இருந்து நன்றாக வாழ்வார் என்று உடனே சொல்லிவிடகூடாது.

பாக்கியஸ்தானம் நன்றாக இருந்த முக்கால்வாசி ஜாதகத்தை நான் பார்த்திருக்கிறேன். இளம்வயதில் கஷ்டப்பட்டு கொண்டு இருந்திருக்கின்றனர். நடுவயதிற்க்கு பிறகு நல்ல வாழ்க்கை அமைந்திருக்கிறது. அதோடு அவர்களின் வாரிசுகளும் அவர்களும் நன்றாக வாழ்கின்றார்கள்.

ஒரு முறை ஒருவரின் ஜாதகத்தை நான் வாங்கி பார்த்தேன். அதில் ஒன்பதாவது வீட்டு அதிபர் நன்றாக இருந்தது. என்னிடம் இருந்த படித்த புத்தகத்தில் பாக்கியஸ்தான அதிபதி நன்றாக இருக்கின்றது அதனால் நல்ல பாக்கியமுடியவன் நன்றாக வாழ்வான் என்று சொல்லிவிட்டேன். அவருக்கு இருபத்திதைந்து வயது இருக்கும். உண்மையில் அவர் நன்றாக வாழவில்லை. 

அப்பனின் ஜாதகத்தில் பாக்கியஸ்தானம் நன்றாக இருக்கும்பொழுது தான் பையன் இளம்வயதில் நன்றாக வாழ்வான். அவர் அவர்களின் ஜாதகத்தில் பாக்கியஸ்தானம் நன்றாக இருந்தாலும் முப்பது வயதிற்க்கு மேல் நன்றாக வாழ்வார்கள் என்று சொல்லலாம்.

பாக்கியஸ்தானம் நன்றாக இருந்து ஒருத்தர் சம்பாதித்தால் போதும் ஒரு நான்கு அல்லது ஐந்து தலைமுறை நன்றாக உட்கார்ந்துக்கொண்டு வாழலாம். பல இடங்களில் இப்படி தான் நடக்கிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, November 17, 2015

அறிவு இல்லாத பணக்காரர்கள்


ணக்கம் !
          மிகப்பெரிய அறிவாளி எல்லாம் சம்பாதிப்பது கிடையாது. ஏனோ தானோ என்று இருப்பவர்கள் சம்பாதிப்பார்கள். நான் நிறைய பேர்களை பார்த்திருக்கிறேன் அவர்களுக்கு பொதுவான சின்ன விசயம் கூட தெரியாமல் இருப்பார்கள் ஆனால் கோடி கோடி சம்பாதிப்பார்கள்.

பெரிய அறிவாளியாக இருப்பார்கள் அவர்களிடம் ஐந்து நிமிடத்தில் ஐந்து கோடி சம்பாதிக்கும் அறிவை பெறலாம் ஆனால் அவர்களால் ஒரு ரூபாய்க்கு கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள்.

ஜாதககதம்பத்தில் இருந்து கூட நிறைய நண்பர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் நிறைய அறிவாளியாக இருப்பார்கள் ஆனால் அவர்களால் சம்பாதிக்கமுடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள்.

இதனை எல்லாம் நான் கண்காணிக்கும்பொழுது அவர்களின் பாக்கியஸ்தானம் மிக நன்றாக அமைந்தவர்களுக்கு நன்றாக கடவுள் கொடுத்துக்கொண்டிருக்கிறான். பாக்கியஸ்தானம் கெட்டவர்கள் அறிவை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்க்கைக்கு கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

அறிவு இல்லாமல் இருந்தால் கூட பரவாயில்லை பாக்கியஸ்தானத்தை வலுப்படுத்தும் வழிகளை நாம் மேற்க்கொண்டு நல்ல வாழ்க்கையை வாழ்வோம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கார்த்திகை முதல் நாள்


வணக்கம்!
          இன்று கார்த்திகை 1 ஆம் தேதி என்பதால் ஐயப்ப பக்தர்கள் மாலையணியும் விழா. நமது நண்பர்களில் ஐயப்ப பக்தர்கள் இருக்கலாம். அவர்கள் மாலை அணிந்து இருக்கும் நாளிலில் நல்ல பக்தியோடு இருங்கள். 

விரதம் இருக்கும் நாள் மிகவும் முக்கியமான நாளாக கருதுங்கள். உங்களின் பாவத்தை போக்கும் நாளாக இது இருக்கும். பாவத்தை போக்கும் நாளில் பாவத்தை சேர்க்கும் நாளாக மாற்றிவிடுமால் பார்த்துக்கொள்ளுங்கள்.

காட்டுபகுதிக்கு செல்லும்பொழுது காட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று எண்ணம் இருக்கவேண்டும். காடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு செயலும் செய்யாமல் இருக்கவேண்டும்.

சபரிமலைக்கு செல்லும்பொழுது கவனத்தோடு சென்று வாருங்கள். வாகனங்களில் செல்லும்பொழுது பகலில் செல்லுங்கள். இரவு பயணத்தை தவிர்த்துவிடுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, November 15, 2015

அண்ணன் பாக்கியம்


ணக்கம்!
          ஒரு குடும்பத்தில் மூன்று பையன்கள் இருந்தால் அதில் மூத்தவர் நன்றாக இருந்தால் அதாவது சரியான நபராக இருந்துவிட்டால் பிறகு இருக்கும் சகோதர்கள் நன்றாக வளர்ந்துவிடுவார்கள். மூத்த சகோதர் சரியாக இல்லை என்றால் இளையவர்களாக இருக்கும் நபர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள்.

முக்கால்வாசி நபர்களுக்கு மூத்த சகோதர் பிரச்சினையை தருபவர்களாகவே இருப்பார்கள். குடும்பத்தில் இருக்கின்ற சொத்தை எல்லாம் ஆட்டையை போட்டுக்கொண்டு இளைவர்களை சந்தியில் நிற்க வைத்துவிடும் கதையும் நிறைய நடக்கின்றது.

பொறுப்போடு இருந்து குடும்பத்தை நடத்துபவர்களாக இல்லாமல் அவர்களே தன் இஷ்டத்திற்க்கு நடந்துக்கொண்டு தன் மக்களுக்கு மட்டும் நல்லது செய்பவர்களாக இருப்பார்கள். 

ஒருவர்க்கு பாக்கியம் நன்றாக இருந்தால் மூத்தவர் நன்றாக அமைந்து குடும்பத்தை தாங்குபவர்களாக இருப்பார்கள். பாக்கியம் இல்லை என்றால் மூத்தவர்  சரியாக அமைய மாட்டார்கள். பாக்கியஸ்தானம் முக்கால்வாசிப்பேருக்கு நன்றாக அமையவில்லை என்பது கொஞ்சம் வெளியில் சுற்றிப்பார்த்தாலே தெரியும்.

நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அண்ணன்காரன் தம்பியை ஏமாற்றியவர்கள் அதிகம் பேர் இருக்கின்றார்கள். இப்படி ஏமாற்றி அவர்களின் பிள்ளைகள் நன்றாக வாழ்கின்றதா என்றால் கண்டிப்பாக இல்லை என்றே சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, November 13, 2015

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

வணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

வணக்கம் !
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள். அம்மன் அலங்காரம் செய்தவர் ராசிபுரம் இராஜ்குமார் அவர்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

வணக்கம்!
                        இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வேலை வாய்ப்பு


ணக்கம்!
          கல்வியை பற்றி சொல்லும்பொழுது நல்ல பண்பு இல்லை என்று சொன்னேன். நல்ல பண்பு என்பதை விட பல பேருக்கு பொறாமை எண்ணம் அதிகம் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

படித்த இத்தனை பேர் இருக்கும்பொழுது அந்தந்த கிராமங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வழிகாட்டவேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணம் இருந்திருந்தால் இன்றைக்கு பல கிராமங்கள் மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி சென்று இருக்கும்.

ஒவ்வொரு கிராமத்தில் உள்ள இளைஞர்கள் அனைவரும் போராடி ஒரு வேலையை தேர்ந்தெடுக்கின்றனர். அந்தந்த துறையில் இருப்பவர்களே அவர்களின் சொந்த ஊரில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுத்திருக்க முடியும். அடுத்தவர்கள் முன்னேறிவிடுவார்கள் என்ற ஒரு சின்ன புத்தி தான் இது.

ஒருவருக்கு நாம் ஒரு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் அந்த நபரின் குடும்பம் பயன்பெற்றுவிடும் இப்படி நீங்கள் செய்தாலே அதுவே மிகப்பெரிய பாக்கியம். பாக்கியஸ்தானம் எந்தவிதத்திலும் உங்களை தடை செய்யாமல் ஒதுங்கி வழிவிடும். அதாவது தடை ஏற்படாமல் காரிய வெற்றி கிடைத்துவிடும்.

இன்று அம்மன் பூஜை. அம்மன் பூஜை காலை வேலையில் நடைபெறுகிறது. அம்மனிடம் புதிய வேண்டுதலை வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, November 12, 2015

கட்டாய கல்வி


ணக்கம்!
          இன்றைய காலத்தில் அனைவரும் படித்தவர்களாக இருக்கின்றனர். பாக்கியஸ்தானம் அனைவருக்கும் படிப்பை தரவில்லை. காலத்தின் கட்டாயம் அனைவருக்கும் படிப்பை தந்துள்ளது.

இன்றைய காலத்தில் ஒருவர் இரண்டு அல்லது மூன்று டிகிரியை முடித்திருப்பார். மூன்று டிகிரியை முடித்திருந்தால் கூட அவர்களுக்கு நல்ல குணம் என்பது இருக்காது. 

பாக்கியஸ்தானம் நல்ல குணத்தை கொடுப்பதில்லை. படிப்பை முடித்திருந்தால் கூட குணத்தை கொடுப்பதில்லை. எத்தனையோ நன்றாக படித்தவர்களை நீங்கள் பார்த்திருக்ககூடும் அவர்கள் சல்லிதனமாக நடந்துக்கொள்வதை நீங்கள் பார்க்கலாம். ஏன் இப்படி என்றால் நல்ல குணத்தை பாக்கியஸ்தானம் கொடுப்பதில்லை. பாக்கியஸ்தானம் நன்றாக இருந்தால் நல்ல படிப்பையும் நல்ல குணம் கொடுத்திருக்கும்.

இன்றைய காலத்தில் படித்த அனைவர்களுக்கும் நல்ல குணத்தை பாக்கியஸ்தானத்தை கொடுத்திருந்தால் இந்த நாடு என்றே முன்னேற்றம் அடைந்திருக்கும். காலத்தின் கட்டாயத்தில் தான் படிப்பு வருகிறதோ தவிர பாக்கியஸ்தானம் படிப்பை கொடுப்பதில்லை.

நாளை அம்மன் பூஜை நடைபெறுகிறது

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


Wednesday, November 11, 2015

அம்மன் பூஜை


வணக்கம்!
          ஐப்பசி மாத அம்மன் பூஜை வரும் 13/11/2015 வெள்ளிக்கிழமை நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணா அவர்கள்
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்
திருச்சியை சேர்ந்த திரு முத்துக்குமார் அவர்கள்.
கோயம்புத்தூரை சேர்ந்த திரு குமார் அவர்கள்.
திரு சத்திய சீத்தாராமன் அவர்கள்.

வழக்கம்போல் 
திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

நேரில் வந்து பங்கு பெறும் கண்டியூர் இராமசுப்பிரமணியன் அவர்கள்
மற்றும் பல நண்பர்கள் அனுப்பியுள்ளனர்.

அம்மன் பூஜை நடைபெறும் நாளில் அம்மனிடம் புதிய வேண்டுதலை வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பாக்கியஸ்தானமும் கல்வியும்


ணக்கம்!
தீபாவளி நல்வாழ்த்துக்கள் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

ஒருவருக்கு உயர்கல்வியை அளிப்பதும் பாக்கியஸ்தானம் தான். பாக்கிய ஸ்தானம் நன்றாக இருக்கும்பொழுது ஒருவர்க்கு உயர்கல்வி நன்றாக அமைந்துவிடும். ஒருவர் கீழ்நிலை கல்வியில் நன்றாக படிப்பார். கல்லூரி வந்தவுடன் நன்றாக படிக்கமாட்டார். அவரின் ஜாதகத்தில் பாக்கியஸ்தானம் கெட்டுவிடும். மேல்நிலை கல்வி அவருக்கு நன்றாக வராது.

ஒன்பதாவது வீட்டோடு பனிரெண்டாவது வீடும் நல்ல பலனை தரும்பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகர் மேல்நாடு சென்று கல்வி கற்பார். அவரின் பாக்கியம் அப்படி வேலை செய்யும்.

ஒரு சிலருக்கு பாக்கியஸ்தானத்தில் நன்றாக இருந்து பனிரெண்டாவது வீடு ஏதாவது தவறாக வேலை செய்தால் வெளிநாட்டில் படிக்கிறேன் என்று சொல்லி வெளிநாட்டில் வெட்டியாக திரிந்துக்கொண்டிருப்பார்.

ஒரு சிலருக்கு கீழ்நிலை கல்வி நன்றாக இருக்காது. பிடித்து தள்ளிக்கொண்டு வரவேண்டும். படிக்கவே மாட்டேன் என்பார்கள். அதே நபர் கல்லூரிக்கு வரும்பொழுது கோல்டு மெடல் வாங்குவார் எப்படி என்றால் பாக்கியஸ்தானம் அப்படி வேலை செய்யும்.

இன்றைய காலத்தில் அனைவரும் நன்றாக படிக்க ஆரம்பித்தவிட்டனர். குறைந்தது ஒரு டிகிரியாவது கையில் வைத்துக்கொண்டு இருக்கின்றனர். அனைவருக்கும் பாக்கியஸ்தானம் நன்றாக இருக்கின்றதா என்று கேட்ககூடாது. நாகரீக வளர்ச்சியைும் கருத்தில் கொண்டு பலனை சொல்லவேண்டும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, November 10, 2015

நல்வாழ்த்துக்கள்

ணக்கம்!
          தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். அம்மன் அருளால் என்றும் மகிழ்ச்சி உங்களின் குடும்பத்தில் நிலைத்து நிற்க்கும்.



ன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, November 9, 2015

உங்களின் பாக்கியஸ்தானத்தை சோதிக்க வழி


வணக்கம்!
          பாக்கியஸ்தானம் தான் ஒருவருக்கு பொறுமையையும் தரவேண்டும். ஒருவருக்கு பொறுமையை மட்டும் ஆண்டவன் கொடுத்துவிட்டால் அவன் இந்த பூமியை ஆள்வான்.

நமது ஜாதககதம்பத்தில் தொழில் செய்பவர்களுக்கு என்று ஆன்மீகவழியில் உதவி செய்துக்கொண்டிருக்கிறேன் என்பது நீங்கள் அறிந்த ஒன்று. இதில் வருபவர்களுக்கு கூட நான் சொல்லுவது பொறுமையாக இருங்கள் உங்களுக்கு நிறைய செய்து தருகிறேன் என்பேன். அதில் ஒருவரும் அப்படி இருப்பதில்லை.

பொறுமையாக இருப்பது கடினமான ஒன்று தான் அதே நேரத்தில் இருந்துவிட்டால் பெரிய ஒன்று உங்களை தேடி வரும். பொறுமையாக இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஒரு சிலர் வில்லங்கம் செய்துக்கொண்டு இருப்பார்கள். அதுவும் தவறான ஒன்று தான். பொறுமை என்று வரும்பொழுது எந்தவித தீமையான குணங்களை கொண்டவையாக அது இருக்ககூடாது.

ஊரில் பல பேர் பொறுமையாக இருப்பார்கள் ஆனால் ஒரு சில நாட்களில் அவர்கள் செய்யும் வேலை மிகப்பெரிய ஆப்பு வைப்பது போல் அமைந்துவிடும். இப்படியும் இருந்தாலும் ஒரு பயலும் நம்மை ஏற்றுக்கொள்ளமாட்டான்.

ஒரு சில நல்ல கிரகங்கள் ஒன்பது வீட்டில் அமைந்து நமக்கு நல்ல பொறுமையை தந்தால் நமது வாழ்க்கை நன்றாக அமையும். ஒரு கெடுதல் கிரகங்கள் அமைந்தால் நமது வாழ்வில் பொறுமையை இழந்துவிட்டு எல்லாம் போய்விட்டது என்று அல்லல்பட்டுக்கொண்டு இருக்கலாம்.

பாெறுமை பாக்கியஸ்தானம் கொடுக்கும் ஒரு அற்புதமான பாக்கியம். நீங்கள் பொறுமையாக எல்லா இடத்திலும் இருக்கமுடிந்தது என்றால் பாக்கியஸ்தானம் நன்றாக இருக்கின்றது என்று அர்த்தம். பொறுமை இல்லாமல் இருக்கின்றது என்று நினைத்தால் உங்களுக்கு பாக்கியஸ்தானம் பிரச்சினையை கொடுக்கிறது என்று அர்த்தம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, November 8, 2015

பண்டிகையும் நைவேத்தியமும்


வணக்கம்!
          தொடர் மழை காரணமாக நெட்டில் பிரச்சினை ஏற்படுகிறது. தொடர்ச்சியாக பதிவை தரமுடியவில்லை. முடிந்தளவு முயற்சி செய்து பதிவை தருகிறேன்.

நான் பதிவு எழுதுவதே அந்தந்த நேரத்தில் என்ன இருக்கின்றதோ அதனை வைத்து பதிவை எழுதுவேன். தற்பொழுது தீபாவளி பண்டிகை சீசன் சரி அதில் ஒரு விசயம் நமது தெரியவந்தது அதனைப்பற்றி சொல்லலாம் என்று இப்பதிவை தருகிறேன்.

தீபாவளி என்றாலே இனிப்பு மற்றும் கார வகைகள் இல்லாமல் இருக்காது. தீபாவளிக்கு இனிப்பு மற்றும் காரவகைகள் செய்து கடவுளுக்கு படைத்துவிட்டு அதன் பிறகு உண்ணுவார்கள். 

கடவுளுக்கு படைப்பதற்க்கு வீடுகளில் சுவீட்ஸ் தயாரிப்பதே கலைகட்டும். கிராமங்களில் இது பெரிய விமர்சியாகவே நடைபெறும். அனைத்து வீடுகளிலும் இப்படி செய்வதால் தீபாவளி ஒரு பெரிய பண்டிகை என்பது தெரியும்.

தற்பொழுது பல வீடுகளில் சுவீட்ஸ் வகைகளை எல்லாம் கடைகளில் வாங்கிக்கொண்டு அதனை படைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். இப்படி செய்வது தவறான ஒன்று. கடவுளுக்கு படைக்க நமது கையில் இருந்து உணவு வகைகள் தயாராகவேண்டும். சோம்பேறியாக இருந்துக்கொண்டு வெளியில் இருந்து வாங்கி உபயோகப்படுத்தாதீர்கள்.

வெளியில் வாங்கும் உணவு வகைகளை படைக்கும்பொழுது கண்டிப்பாக கடவுள் உங்களுக்கு படி அளக்கமாட்டார். உங்களுக்கு பிரச்சினையை தான் கொடுப்பார்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கடவுள் எனக்கு கொடுத்த பாக்கியம்


வணக்கம்!
          பாக்கியஸ்தானத்தைப்பற்றி பார்த்து வருகிறோம் அதில் எனது சொந்த அனுபவத்தைப்பற்றி சொல்லுகிறேன். நமது தளத்தில் கட்டணசேவையில் சோதிடம் பார்க்கும் வசதியை ஏற்படுத்திய பிறகு பல நண்பர்கள் அதில் சோதிடபலனை கேட்டு தெரிந்துக்கொண்டார்.

சோதிடபலனை கேட்பதற்க்கு நமது நண்பர்கள் ஒரு சிலர் ஏன் பாதிபேர் ஒரு தந்திரத்தை என்னிடம் செய்வார்கள். அவர்களின் பிறந்த விபரத்தை தெரிவித்துவிட்டு அதன் பிறகு கேள்வி எல்லாம் கேட்டு அனுப்புவார்கள். 

நான் உடனே அவர்களுக்கு பலனை போனில் சொல்லிவிடுவது உண்டு. இவர்கள் செய்யும் தந்திரம் என்ன என்றால் உங்களின் வங்கிகணக்கிற்க்கு பணத்தை எனது வங்கிகணக்கில் இருந்து மாற்றுகிறேன் என்று பொய் சொல்லிவிட்டு பலனை கேட்பார்கள்.

ஒவ்வொருவருக்கும் உடனே பலனை நான் சொல்லிவந்தேன். நாளை பணம் உங்களின் வங்கிகணக்கிற்க்கு வந்துவிடும் என்பார்கள். நான் இதனைப்பற்றி எதுவும் கண்டுக்கொள்ளவில்லை. மறுநாள் பார்த்தால் பணம் எனது வங்கிகணக்கிற்க்கு வராது.

ஒரு ஆள் ஏமாற்றும்பொழுது இதனைப்பற்றி எனக்கு நன்கு தெரிந்துவிட்டது. தொடர்ந்து பல நண்பர்கள் இப்படி ஏமாற்றி பார்த்துக்கொண்டு இருந்தனர். அவர்களுக்கு நான் பலனை சொல்லிக்கொண்டு தான் இருந்தேன். 

எனது முக்கால்வாசி கர்மாவை இவர்கள் வழியாக தான் எனக்கு எடுக்க முடிந்தது. ஏன் என்றால் ஒரு சோதிடகாரனுக்கு தட்சணை இல்லாமல் சோதிடம் பார்த்தால் எப்படிப்பட்ட கர்மா வரும் என்பது எல்லாேருக்கும் தெரிந்த ஒன்று. அப்படி இருந்தும் இப்படிப்பட்ட நபர்கள் வந்தார்கள். விளையாட்டாக நினைத்து இதனை என்னிடம் செய்தார்கள். கடவுள் எனக்கு கொடுத்த ஒரு அற்புத பாக்கியமாகவே இதனை நான் கருதினேன்.

தற்பொழுது இதனை நிறுத்திவிட்டேன். நிறுத்தியதற்க்கு காரணம் இன்று நான் இருக்கும் வேலை பளு காரணம் என்று சொல்லலாம். நமது கர்மாவை இப்படி எடுக்க நமக்கு கடவுள் கொடுத்த பாக்கியம் இது. ஒவ்வொருவரும் என்னை ஏமாற்றும்பொழுது நான் நினைத்துக்கொள்வது உண்டு. பல ஜென்ம கர்மாவை இப்படி எடுப்பதற்க்கு ஒரு பாக்கியத்தை ஏற்படுத்திய கடவுளுக்கு நன்றியை சொல்லவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, November 7, 2015

பண்டிகையில் தான தர்மம்


வணக்கம்!
          தற்பொழுது தீபாவளி பண்டிகை வருகிறது. எங்கு பார்த்தாலும் கூட்டமாக இருக்கும். கூட்டமாக இருக்கும்பட்சத்தில் ஏதாவது கூட்டம் நெரிசல் உள்ள பகுதிக்கு சென்று மாட்டிக்கொள்ளாதீர்கள்.

தீபாவளிக்கு ஏழை மக்களுக்கு ஆடை தானம் செய்ய சொல்லிருந்தேன். எத்தனைபேர் செய்தீர்கள் என்று தெரியவில்லை. சொந்தகாரர்களுக்கு செய்வதை தவிர்த்து பிறர்க்கு செய்யுங்கள். குறிப்பாக பெண்கள் குழந்தைகள் போன்றவர்களுக்கு தானம் செய்யுங்கள்.

பல ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களில் மளிகைப்பொருட்கள் வாங்குவதற்க்கு கூட பணம் இல்லாமல் இருப்பார்கள். அந்த மாதிரி நபர்களுக்கு மளிகைப்பொருட்களை கூட நீங்கள் வாங்கிக்கொடுக்கலாம். அவர்களின் மனம் மகிழ்ச்சியாகும்.

இந்து மதத்தில் அதிக பண்டிக்கையை வைத்த காரணமே ஏழை மக்களுக்கு தான தர்மம் செய்யவேண்டும் என்பதற்க்காக தான் அதிக பண்டிக்கையை வைத்திருப்பார்கள். அதனை கடைபிடித்து பண்டிகையின்பொழுது தானம் செய்யுங்கள்.

தற்பொழுது நாம் பார்த்துக்கொண்டு இருப்பது கூட பாக்கியஸ்தானம் தான். பாக்கியஸ்தானத்தின் பொது கருத்தே தான தர்மம் செய்வது தானே. பண்டிக்கையின்பொழுது தான தர்மம் செய்வதும் பாக்கியஸ்தானத்திற்க்கு நாம் செய்யும் ஒரு பரிகாரம்போல் இருக்கும். தாராளமாக செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, November 6, 2015

பாக்கியஸ்தானம்


வணக்கம்!
     பாக்கியஸ்தானம் என்று வந்தவுடனே அது தந்தைப்பற்றி அதிகம் பேசக்கூடிய ஒரு தலைப்பு. தந்தை நல்ல புண்ணியம் செய்து வைத்திருந்தால் அந்த புண்ணியம் நமக்கு எந்த வித தடங்கலும் இல்லாமல் கிடைக்க வழி செய்யும்.

ஒரு சில தந்தை தன்னுடைய காலத்தில் சம்பாதிக்கவேண்டும் என்ற குறிக்கோள் மட்டுமே இலக்காக கொண்டு ஓடிக்கொண்டு இருப்பார்கள். எதற்கு சம்பாதிக்கிறோம் ஏன் சம்பாதிக்கிறோம் என்று தெரியாமலே அதிகம் சம்பாதிக்கவேண்டும் என்று ஓடுவார்கள்.

எப்படியாவது சம்பாதிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு சென்றவர்க்கு சம்பாதித்துவிடுவார் ஆனால் அவரின் மகனுக்கு சேர்த்த சொத்து எல்லாம் சம்பந்தமே இல்லாமல் வேறு ஒருவர் எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். தன் மகன் வேலைக்கு ஆகாதவனாக இருப்பான். ஏன் என்றால் இவர் சம்பாதிக்கிறத்திலேயே கவனத்தை செலுத்திக்கொண்டு இருப்பார். பையன் எப்படி வளர்கிறான் என்பது கூட தெரியாது.

பையனுக்கு சொத்தை சேர்ப்பதோடு கொஞ்சம் அவனை நல்லமுறையில் வளர்க்க என்ன செய்யவேண்டும் என்பதையும் தெரிந்து அது போல் வளர்க்கவேண்டும். நாம் சம்பாதிக்கவேண்டும் என்று நினைப்பது நல்லது. அதே நேரத்தில் நமது வாரிசுக்கும் நல்ல விசயத்தை சொல்லிக்கொடுத்துவிடவேண்டும் அவர்களுக்கு தேவையான புண்ணியத்தை நீங்களே செய்துவைத்துவிடவேண்டும். அப்பொழுது மட்டுமே அவர்களின் வாழ்க்கை நல்லவிதமாக அமையும்.

உங்களின் வாரிசுக்கு நீங்கள் செய்யும் புண்ணிய வேலை எல்லாம் தெரியாமல் செய்தால் கூட அவ்வப்பொழுது உனது நன்மைக்கு இதனை எல்லாம் செய்து வருகிறேன் என்று சொல்லிவையுங்கள். அப்பொழுது தான் அவரின் வாரிசுக்கும் இதனை எல்லாம் செய்ய உங்களின் வாரிசு நினைப்பார்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, November 5, 2015

அம்மன் பூஜை


ணக்கம் !
          நமது அம்மன் பூஜை அடுத்த வாரத்தில் நடைபெறும். தீபாவளி முடிந்த பிறகு அம்மன் பூஜையை வைத்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்து இருக்கிறேன். அம்மன் பூஜைக்கு காணிக்கை அளிப்பவர்கள் அனுப்பி வைக்கலாம்.

ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வேலையை நடைபெறவேண்டும் என்று வேண்டுதல் வைப்பார்கள். எந்த ஒரு வேலையும் தொடங்குவதற்க்கு முன்பு ஒரு பூஜை செய்த பிறகு அந்த வேலையை தொடங்கினால் நல்லதாக அது அமையும்.

உங்களின் புதிய ஒரு வேலை நன்றாக நடைபெறவேண்டும் என்பதற்க்காகவும் பூஜைக்கு காணிக்கை அனுப்பிவைக்கலாம். உங்களின் வேலை நன்றாக நடைபெற அம்மன் உங்களுக்கு உதவும்.

பெரிய வேலையை தொடங்கும்பொழுது எந்த ஒரு பூஜையும் இல்லாமல் செய்யும்பொழுது அந்த வேலையின் பாதிப்பு உங்களின் குடும்பத்தில் உள்ள நபர்களை பாதிக்கும். குடும்ப நபர்களை பாதிக்காமல் இருக்க இப்படிப்பட்ட பூஜைகளில் கலந்துக்கொள்வதும் உங்களுக்கு நல்லதாக அமையும்.

அம்மனிடம் வேண்டுதல் வைத்து அதனை அம்மன் நிறைவேற்றிக்கொடுத்தவர்கள் காணிக்கையை அனுப்பிவைக்கலாம். புதிய வேண்டுதலை அம்மன் பூஜையின் பொழுது வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, November 4, 2015

பாக்கியஸ்தானமும் இலவசசேவையும்


வணக்கம்!
          நமது ஜாதககதம்பத்தில் இலவசசோதிடசேவைப்பற்றி நீங்கள் அறிந்த ஒன்றே. ஜாதககதம்பம் ஆரம்பித்த நாட்களில் இருந்து இலவசசேவை தொடக்கப்பட்ட ஒன்று. அது சமீபகாலமாக நிறுத்தப்பட்டது. 

இந்த சேவை செய்ய தொடங்கிநாட்களில் இருந்து எனக்கு மிகுந்த திருப்தி அளித்தது. ஏன் என்றால் நம்மால் பிறர்க்கு இலவசமாக வழிகாட்டப்படுகிறது. அதனால் அவர்களின் வாழ்க்கை மேம்படுத்தப்படுகிறது.

பாக்கியஸ்தானம் சொன்னபடி இலவசமாக பிறர்க்கு செய்வதால் நமது வாழ்வும் நன்றாக இருந்தது. உண்மையை சொன்னால் அதனை செய்த காரணத்தால் எனது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளமுடிந்தது. 

இலவசசேவை என்பது சோதிடம் தெரியாதவர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் அதனை விட்டுவிட்டு ஒவ்வொருவரும் சும்மா ஏதாவது சந்தேகம் கேட்க தொடங்கிவிட்டனர். அதோடு நக்கலாகவும் அது இருந்த காரணத்தால் அந்த சேவையை நிறுத்திவிட்டேன்.

ஒன்று நன்றாக நடந்தால் அதனை தடுப்பதற்க்கு என்ன செய்யவேண்டுமோ அதனை நம் மக்கள் சரியாக செய்வார்கள். இலவசசேவை செய்த நாட்கள் ஒரு நல்ல பாக்கியம் செய்த நாட்களாகவே இருந்தது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

விளக்கம்


வணக்கம்!
          நேற்று பதிவை பார்த்துவிட்டு பல நண்பர்கள் தகவலை அனுப்பிருந்தார்கள். இதில் என்ன உண்மையான பாக்கியம் என்று தலைப்பை போட்டுள்ளீர்கள் என்றார்கள்.

பெண்ணை பெற்றவர்கள் உண்மையான பாக்கியசாலிகள் என்று சொல்லிருந்தேன். பெண்ணை பெற்றால் அவன் பாவம் செய்தவன் என்று தானே சொல்லிக்கொண்டு இருந்தனர் ஆனால் இன்று நிலைமை தலைகீழ் ஆகிவிட்டது அல்லவா. அதனால் பெண்ணை பெற்றவர்கள் உண்மையான பாக்கியசாலிகள் என்று சொன்னேன்.

பொதுவாக நான் சூரியன் சந்திரன் என்று பதிவை எழுதி வைத்தால் படிக்கின்ற உங்களுக்கு அலுப்பு தட்டிவிடும் என்பதால் கொஞ்சம் மாற்றி இப்படி பதிவை தருகிறேன். 

எனக்கு தெரிந்த ஒரு இடத்தில் அவரின் தந்தைக்கு சாப்பாடு சாப்பிட வழி இல்லாமல் வைத்திருந்தான் அந்த பையன். அந்த பையனின் மாமனார் தினமும் பீர் குடித்துக்கொண்டு இருப்பார். பணம் எல்லாம் இந்த பையனின் பணம். பையனின் தந்தை சாப்பாடு இல்லாமல் இறந்துவிட்டார். உலகம் அப்படி மாறிவிட்டது.

நம்ம ஆளுங்க பணம் சம்பாதிக்கிறத்தில் காட்டுகிற திறமையை பையனை வளர்க்கிறதில் காட்டுவதில்லை. ஆண் குழந்தையை பெண் குழந்தையை வளர்ப்பது போலவே வளர்கிறார்கள். அவன் என்ன செய்வான்.

இன்றைய தேதியில் ஒரு ஆண் ஆண் தன்மையோடு இருந்தால் கூட அவனால் வாழமுடிவதில்லை. அவனுக்கும் அவனின் மனைவிக்கும் ஒத்துக்கொள்ளவதில்லை. பெண் தன் வீட்டு பக்கம் இழுக்கும் விதத்தில் தான் நடந்துக்கொள்கிறார்கள். என்ன செய்வது எல்லாம் கலியுகம் என்று சொல்லவேண்டியது தான்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, November 3, 2015

உண்மையான பாக்கியம் செய்தவர்கள்


ணக்கம்!
          ஒவ்வொருவரும் செய்த பாக்கியம் என்பதற்க்கு ஒரு சில ஊர்களில் ஏன் தற்பொழுது தமிழ்நாட்டில் நடக்கும் ஒரு விசயத்தைப்பற்றி பார்க்கலாம். ஆண்களை பெற்றால் வாரிசு உரிமை வந்துவிட்டது என்ற நிலை இருந்தது. நமக்கு வாரிசு வந்துவிட்டது என்று பெற்றோர்கள் மகிழ்ச்சியோடு இருந்தனர்.

இன்றைய காலத்தில் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றவர் கதி தெருவில் தான் நிற்கவேண்டும். இரண்டு பெண் குழந்தைகளை பெற்றால் அவன் மிகப்பெரிய புண்ணியம் செய்தவன் ஆகிவிடுகிறான்.

திருமணம் ஒரு பெண்ணிற்க்கு செய்துவிட்டால் பையனை பெண்ணின் அப்பா அவரின் கைக்கு கொண்டு வருவதற்க்கு முயற்சி செய்கிறார்கள். பெற்ற அப்பா அம்மா எப்படி இருந்தாலும் பரவாயில்லை நீ நான் சொல்லுவது போல் தான் இருக்கவேண்டும் என்று பெண்ணின் தந்தை முடிவு செய்துவிடுகிறார். 

பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் இன்று பெரிய பாக்கியம் செய்து இருக்கிறார்கள். ஆண் பிள்ளைகளை பெற்றவர்கள் பெரிய பாவத்தை செய்து இருக்கிறார்கள். ஒரு சில இடத்தில் நான் பார்த்து இருக்கிறேன் சொத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு நீ நாங்கள் சொல்வது போல் செய்யவில்லை என்றால் பெண்ணின் வீட்டாரே இருவரையும் பிரித்துவைக்கிறார்கள். உலகம் அப்படி போய்க்கொண்டு இருக்கின்றது.

நீங்களே பல இடங்களில் பரவலாக பார்க்கமுடியும். பெண்ணை பெற்றவர்கள் காரில் சென்றுக்கொண்டு இருப்பார்கள். பையனை பெற்றவர்கள் சாப்பாட்டிற்க்கு வழி இல்லாமல் இருப்பார்கள். கஷ்டப்பட்டு சொத்தை சேர்த்து அடுத்தவர்கள் வாழுவதற்க்கு வழி செய்துக்கொடுத்துவிடுவார்கள். பெண்ணை பெற்றவர்களுக்கு தற்பொழுது நல்ல பாக்கியம் இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, November 1, 2015

இனிய தொடக்கம்


ணக்கம்!
          ஒரு சிலரை பார்த்திருக்கிறேன் அவர்கள் நிறைய உதவியை அடுத்தவர்களுக்கு செய்வார்கள். அவர்கள் அந்தளவுக்கு பெரிய அளவில் உயருவதில்லை. இது எதனால் என்று நன்றாக ஆழ்ந்து அவர்களை பார்த்தால் அவர்களிடம் ஏதாவது பீடை ஏற்படுவது போல் ஒரு காரியத்தை செய்துக்கொண்டு இருப்பார்கள்.

நல்லதை செய்யும்பொழுது நாம் கொஞ்சம் உண்மையாக இருந்துவிடவேண்டும். உண்மையை விட்டு விட்டு நல்லது செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு நாம் நல்லதை செய்தால் கூட நமது நிலையில் இருந்து மாற்றம் வரப்போவதில்லை.

நம்மிடம் இருக்கும் தீயகுணம் என்ன என்று கண்டுபிடித்து அதனை போக்கிக்கொள்ள என்ன வழி என்று பார்க்கவேண்டும். நம்மிடம் உள்ள தீயவிசயத்தை வெளியேற்றிவிட்டு நாம் சரியான முறையில் பாக்கியஸ்தானத்தில் சொல்லப்பட்ட வழிபோல் செய்தால் குறுகிய காலத்தில் வெற்றியை நோக்கி செல்லாம்.

நமக்கு வருகின்ற வாய்ப்பை தட்டிகழிப்பது தான் பாக்கியஸ்தானத்தில் உள்ள குறைபாடு. நமக்கு கொடுப்பதும் அதே பாக்கியஸ்தானம் தான். நாம் பிறர்க்கு கொடுக்கும்பொழுது நமக்கு பாக்கியஸ்தானம் கொடுக்கும்.

உங்களிடம் என்ன தவறு இருக்கின்றது என்பதை பாருங்கள். கண்டிப்பாக ஏதாவது ஒரு தவறு நம்மிடம் இருக்கும். அந்த தவறை படிப்படியாக குறைத்துக்கொண்டு பிறர்க்கு நல்லதை செய்து முன்னேற்றபாதையில் செல்லுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு