Followers

Friday, November 29, 2019

திருமண தடை 1


வணக்கம்!
         திருமணத்தடைக்கு முதல் காரணமாக இருப்பது அவர்களின் ஜாதகத்தில் லக்கனாதிபதி அமர்ந்து இருக்கும் நிலையை ஆராயவேண்டும். லக்கனாதிபதி மறைவுஸ்தானத்தில் ஏறிவிட்டால் அவர்க்கு திருமணம் முப்பது வயதிற்க்கு மேல் நடைபெறும்.

ஒரு சிலருக்கு முப்பது வயதிற்க்கு மேல் சென்றாலும் திருமணம் நடைபெறாமல் சென்றுவிடுகின்றது. ஒரு சிலருக்கு இளம்வயதில் திருமணம் நடைபெற்றாலும் திருமணம் சேபிப்பதில்லை. திருமணத்திற்க்கு தள்ளி போவதற்க்கும் இது ஒரு காரணமாக அமைந்துவிடுகின்றது.

எந்த ஒரு நல்ல விசயம் உங்களுக்கு நடைபெற்றாலும் அந்த நல்ல விசயத்திற்க்கு என்று நீங்கள் நிறைய போராடி பெறவேண்டும் என்பதை லக்கனாதிபதி மறைவுஸ்தானம் ஏறினால் காட்டும். லக்கனாதிபதி மறைவுஸ்தானம் ஏறினால் திருமணமும் போராட்டமாகவே அமைகின்றது.

லக்கானதிபதியை சரி செய்வது என்பது மிகவும் கடினமாக இருக்கும். உங்களின் உடலுக்கும் தேவையான ஊட்டசத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும் அதோடு பரிகாரத்தையும் சேர்ந்து செய்யும்பொழுது இது வெற்றிபெறும்.

பரிகாரம் மட்டும் செய்வதோடு அல்லாமல் உடலுக்கு தேவையான ஊட்டசத்தை நன்றாக எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் நல்ல சக்தியோடு இருப்பதை நீங்கள் உணர்ந்த பிறகு திருமணத்திற்க்கு வரம் தேடினால் விரைவில் அமையும். பல பேர்க்கு இந்த அனுபவத்தை நான் பார்த்து இருக்கிறேன்.

திருமண தடைக்கு என்று சிறப்பு பரிகாரத்தை ஜாதகத்தில் செய்ய இருக்கிறோம். திருமணதடையில் இருப்பவர்கள் உடனே தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, November 27, 2019

அம்மன் பூஜை


வணக்கம்!         
                    இன்று அம்மன் பூஜை நடைபெறுகின்றது. அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள். நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
சிங்கபூரை சேர்ந்த நண்பர் அவர்கள்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள்.

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்.
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள்.
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள். 

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.
பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள்.
மயிலாடுதுறையை சேர்ந்த யுவராஜ் அவர்கள்.
விழுப்புரத்தை சேர்ந்த திரு அசோக்குமார் அவர்கள்.
மதுரையை சேர்ந்த திரு முருகன் அவர்கள்.

 வழக்கம்போல்
                            திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள். அம்மன் பூஜை நடைபெறுவதால் உங்களின் வேண்டுதல்களை வைக்கலாம்.

அன்புடன்  
ராஜேஷ்சுப்பு

திருமண தடை சிறப்பு பரிகார யாகம்



வணக்கம்!
          திருமணம் நடைபெறாமல் இருக்கும் ஜாதககதம்ப நண்பர்களுக்காக சிறப்பு வழிபாட்டை ஒன்றை செய்ய இருக்கின்றோம். திருமணம் நடைபெறாமல் இருக்கும் நண்பர்கள் இந்த வழிபாட்டில் சேர்ந்து தங்களுக்காகவும் வீட்டில் உள்ள நபர்களுக்காகவும் இதில் கலந்து பயன்பெற்றுக்கொள்ளலாம்.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் அவர் அவர்களின் ஜாதகத்திற்க்கு   தகுந்த மாதிரியாகவே இதனை முடிவு செய்யமுடியும். ஜாதகத்தில் மிக கடுமையான தோஷங்கள் இருந்தால் அதற்கு என்று தனியாகவும் மிக சாதாரணமான தோஷங்கள் இருந்தால் அதற்கு என்று தனியாகவும் செய்ய நேரிடும்.

ஒரு சில உதாரணங்களை சொல்லிவிடுகிறேன்.

இராகு கேதுக்களால் பாதிப்படைந்த ஜாதகமாக இருந்தால் கடுமையான காலசர்ப்ப தோஷத்தை தரும் ஜாதகமாக இருந்தால் அதற்கு என்று சிரமப்பட்டு செய்யவேண்டும்.

ஒரு சிலருக்கு குலதெய்வத்தால் தடைப்படும் ஜாதகங்களும் இருக்கின்றன. இதற்கு குலதெய்வத்தை வீட்டிற்க்கு வரவழைத்து அதற்கு என்று தனியாக பூஜை செய்து இதனை செய்யும்படியாக அமையும்.

களத்திர பாவம் என்று சொல்லக்கூடிய ஏழாவது வீடு கடுமையான பாதிப்படைந்திருந்தால் அதற்கு என்று தனியாக பூஜை செய்து அதற்கு தகுந்தார் போல செய்யவேண்டும்.

ஒரு சில ஜாதகங்களுக்கு பாக்கியஸ்தானம் கெட்டு திருமணம் தடைப்பட்டுக்கொண்டே செல்லும் இப்படிப்பட்ட ஜாதகர்களுக்கும் திருமணம் செய்வதற்க்கு என்று பூஜை செய்து கொடுக்கப்படும்.

ஒரு சில ஜாதகங்களுக்கு புனர்ப்பு தோஷம் இருக்கும். திருமணத்திற்க்கு நிச்சயதார்த்தம் செய்து அது பாதியில் நின்றுவிடுவதும் உண்டு. இதற்கும் பூஜை செய்து நிவர்த்தி செய்யப்படும்.

மேலே சொன்னது ஒரு சில உதாரணங்களை மட்டும் சொல்லிருக்கிறேன். நிறைய தோஷங்கள் இருக்கின்றன. திருமணம் நடைபெறாமல் போய்விட்ட அனைத்து நண்பர்களும் இதில் கலந்துக்கொள்ளலாம்.

கட்டணமாக மட்டுமே இதனை செய்யமுடியும். இலவச சேவை செய்யமுடியாத காரணம் இருக்கின்றது. பூஜைக்குரிய செலவு Rs 5000 மட்டுமே கட்டணமாக செலுத்தவேண்டும். 

ஒவ்வொருவருக்கும் தனியாகவே செய்ய வேண்டியிருப்பதால் இந்த செலவு எனக்கு ஏற்படும் என்பதால் இந்த தொகையை கட்டணமாக வைத்திருக்கிறேன். கண்டிப்பாக இதில் நல்லது உங்களுக்கு நடக்கும் என்பதை மட்டும் சொல்லிவிடுகிறேன்.  நீங்கள் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். பத்து பேர் மட்டும் எடுத்து செய்யலாம் என்று இருப்பதால் உடனே என்னை தொடர்புக்கொள்ளவேண்டும்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, November 26, 2019

மாலையணிவது ஏன்?


வணக்கம்!
          சபரிமலை மற்றும் பழனிக்கு மாலையணிவது எல்லாம் என்ன சூட்சமம் இருக்கின்றது என்று நண்பர் ஒருவர் கேட்டார். 

தன்னை சுத்தப்படுத்திக்கொள்வது தான் முதல் காரணியாக இருக்கும். உங்களின் குலதெய்வமே இதனை கொடுக்கும் ஆனால் நாம் அதற்கு என்று தயார்படுத்திக்கொள்ளாமல் சும்மா சாமியை கும்பிடுவீர்கள். நம்முடைய குலதெய்வம் தானே என்ற ஒரு அலட்சியமும் இருக்கும்.

தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு ஒரு சில காலங்கள் ஒழுக்கத்தோடு வாழ்வதற்க்கும் இதனை பயன்படுத்திக்கொள்கின்றனர். பொதுவாக இதற்கு எல்லாம் யாத்திரையாக அதாவது பாதயாத்திரையாக சென்றால் நல்லது.

பாதயாத்திரை செல்லும்பொழுது மட்டுமே சிறப்பான ஒரு அனுபவமும் நமக்கு ஏற்படும். இன்றைக்கு சாலை மார்க்கமாக இருக்கும் பழனி எல்லாம் ஒரு சில காலத்திற்க்கு முன்பு காடு மார்க்கமாக இருந்து இருக்கும். இன்று சபரிமலை மட்டும் கொஞ்சம் காடாக இருக்கின்றது. 

காட்டில் நீங்கள் செல்லும்பொழுது பல அனுபவங்கள் உங்களுக்கு கிடைக்கும் அதோடு நமது ஜாதகத்தில் உள்ள தீய கிரகங்களுக்கு எல்லாம் பரிகாரமாக கூட அது அமைந்திருக்கும் இதனை எல்லாம் கருத்தில் கொண்டு தான் அன்று இதனை ஏற்படுத்தி இருக்கவேண்டும்.

இன்றைக்கு அனைவரும் வாகனத்தில் செல்கின்றனர். இன்று அனைத்தும் சாலைகள் என்பதால் பெரிய அனுபவத்திற்க்கு வழி இல்லை என்பதாலும் வாகனத்தில் செல்லலாம். காடுகளாக இருக்கும் பட்சத்தில் பாதயாத்திரை நன்மை பயக்கும்.

மாலையணிவது என்பது தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு தன்னில் இருக்கும் ஆத்மாவிற்க்கு ஒரு நல்ல சக்தியை ஏற்படுத்துவதற்க்கு என்று தான் ஏற்படுத்தியிருப்பார்கள். இன்றைக்கு அது எந்தளவுக்கு வேலை செய்கின்றது என்பது அவர் அவர்களின் விரதமுறையிலும் பயணங்களிலும் இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, November 25, 2019

சாமி சரணம்


வணக்கம்!
          வருடம்தோரும் சபரிமலைக்கு செல்பவர்களுக்கு என்று ஒரு பதிவை தருவோம். இந்த வருடம் கொஞ்சம் காலம் கடந்து இந்த பதிவை தருகிறேன். சபரிமலைக்கு என்று செல்லும் நண்பர்கள் கடைபிடிக்கவேண்டிய ஒரு சில விசயங்களை மட்டும் பார்க்கலாம்.

விரதமுறையை சரியாக கடைபிடிக்கவேண்டும். பெரும்பாலும் சரியாக கடைபிடித்து வந்தாலும் ஒரு சிலர் இதில் குறை வைத்துவிடுவார்கள். பெருமாளுக்கு எப்படி புரட்டாசி மாதத்தில் எப்படி கடைபிடிக்கின்றார்களே அது போலவே அதனைவிட மிக சுத்தமாக இதனை கடைபிடியுங்கள்.

சபரிமலைக்கு செல்லும் நபர்கள் பெரும்பாலும் அதிகம் பேசாமல்  குறைவாக பேசுங்கள். மவுனத்தால் நிறைய ஆன்மீக சக்திகள் உங்களுக்கு வரும். இதனை வருடம் முழுவதும் உங்களை பாதுகாத்து உங்களின் நிலையை உயர்த்த உதவும்.

மாலையணியும் பக்தர்கள் ஏழைகள் எப்படி வாழ்க்கின்றனர் என்ற புரிதலை தருவதற்க்கு கடுமையான விரதத்தை எல்லாம் வைத்திருக்கின்றனர் என்று நினைத்து அதனை பின்பற்றினால் உங்களால் எளிதில் இதனை பின்பற்றிவிடலாம்.

சபரிமலைக்கு செல்லும் சாமிகள் பகல் நேர பயணத்தை மேற்க்கொள்ளுங்கள். உங்களின் வாகனத்திற்க்கும் மற்றும் வாகன ஓட்டிக்கும் போதுமான ஓய்வை கொடுங்கள். மிதமான வேகத்தில் வாகனத்தை இயக்குங்கள்.

பல இடங்களில் நான் பார்த்து இருக்கிறேன். சாமி தரிசனம் முடிந்த பிறகு நண்பர்கள் விருந்து வைக்க ஆரம்பித்துவிடுவார்கள். இதனை எல்லாம் தயவு செய்து செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கெட்டகாலங்களில்


வணக்கம்!
         ஒருவருக்கு கெடுதல் நேரம் வந்தால் அவர்க்கு நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் உடல்நிலை பாதிப்பு அதனால் மருத்துவசெலவு வாகன விபத்து அல்லது வாகன பழுது அதனால் ஏற்படும் செலவு இறப்பு ஏற்படுதல் அல்லது இறப்பு சம்பந்தப்பட்ட செலவு போன்றவை முக்கியமாக இருக்கும்.

பெரும்பாலும் விரைய வீட்டை சம்பந்தப்பட்டே அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும். எதனை எடுத்தாலும் விரையத்திற்க்கு கொண்டு சென்றுவிடுவது உண்டு. ஏழரைச்சனி என்று சொல்லக்கூடிய காலத்தில் விரைய வீட்டிற்க்கு சனி வரும்பொழுது இது அதிகமாகவே நடைபெறுகின்றது.

அவமானங்களை கொடுக்ககூடிய நிகழ்வுகளும் நடைபெறும் இது எட்டாவது வீட்டை சம்பந்தப்பட்டே நடக்ககூடிய ஒரு நிகழ்வுகளாகவே இருக்கும். இதுவும் அஷ்டமசனி ஏழரைச்சனியிலும் நடக்கும் அதுபோலவே கெட்ட தசாவிலும் நடக்கும்.

இது எல்லாம் கெட்ட நேரத்தில் நடந்தால் நாம் தவிர்ப்பதற்க்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்க தோன்றும். முதலில் எளிமையாக நடந்துக்கொள்ளவேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் தனக்கு இப்படிபபட்ட காலம் இருக்கின்றது அதனால் அனைவரும் பொறுமையாக இருக்கவேண்டும் இந்த காலம் மாறிவிடும் என்று சொல்லவேண்டும்.

பல குடும்பங்களில் ஏழரைச்சனி காலக்கட்டத்தில் பிரிவினையை உருவாக்கிவிடுகின்றது. குடும்பத்தில் பொறுமையை கடைபிடிக்க சொல்லவேண்டும். பத்து வார்த்தைக்கு ஒரு வார்த்தை பேசுவது போன்ற மனநிலை உருவாக்குவது நல்லது.

நீங்கள் சொல்லுவதை யாரும் கேட்க மாட்டார்கள். வாழ்க்கையில் உங்களுக்கு கல்வி கூடங்கள் தராத ஒரு நல்ல கல்வியை கஷ்டகாலங்கள் உங்களுக்கு கற்பித்துக்கொடுக்கும். இதனை உங்களுக்கு நல்ல அனுபவமாக எடுத்துக்கொள்ளலாம்.

வழிபாடுகள் பரிகாரங்கள் பயன் கொடுக்கும். பரிகாரங்கள் செய்வதும் நல்லது உங்களுக்கு ஏற்படும் செலவுகள் குறைவதற்க்கு ஒரு நல்ல வழி இதனால் கிடைக்கும். உங்களின் உடல்நிலையிலும் ஒரு பாதுகாப்பிற்க்கு ஒரு நல்ல வழி என்பதால் இதனையும் மேற்க்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, November 21, 2019

குருவே சரணம்


வணக்கம்!
          இரவில் படுப்பதற்க்கு முன்பு உங்களின் குரு சொன்ன வார்த்தைகளை நினைவுப்படுத்த வேண்டும் அல்லது அவர் எழுதிய புத்தகம் இருந்தால் அந்த புத்தகத்தை எடுத்து பத்து நிமிடமாவது படித்துவிட்டு அதன்பிறகு குருவிற்க்க நன்றி சொல்லிவிட்டு இரவில் படுத்து தூங்க ஆரம்பிக்கவேண்டும்.

இன்றைய காலத்தில் ஒவ்வொவருக்கும் இருக்கும் பிரச்சினையில் இரவில் தூக்கம் என்பது வரவில்லை என்று சொல்லுகின்றனர். பலருக்கு தூக்கம் வருவதில்லை என்பதற்க்காகவே போதை வஸ்துகளுக்கு அடிமையாகிவிடுகின்றனர்.

ஆன்மீகவாதி போதை வஸ்துகளை எடுக்கமுடியாது அதனால் உங்களின் குரு சொன்ன வார்த்தைகளை நீங்கள் நினைவுகளுக்கு எடுத்துக்கொண்டு சென்றால் உங்களின் ஆன்மீகவாழ்க்கையும் உங்களின் மனம் அமைதி அடைந்து தூக்கத்தை வரவழைக்கவும் நன்றாக இருக்கும்.

பல மதங்களில் அவர் அவர்களின் புனித நூலை எடுத்து படித்துவிட்டு அதன்பிறகு தான் தூங்குவதற்க்கு செல்வார்கள். உங்களின் குருவின் வார்த்தையும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். இரவில் நீங்கள் படுப்பதற்க்கு முன்பு எந்த வேலையை செல்கின்றீர்களோ அதுவே அன்றைய இரவு முழுவதும் வேலை செய்யும் படியாக இருக்கும்.

தீயகிரங்களின் பாதிப்பில் இருக்கும் நபர்களுக்கு அடிக்கடி இரவில் கண்விழிக்கும்படியாக இருக்கும். இதனை தவிர்ப்பதற்க்கும் மேலே சொன்ன வழிகளை நீங்கள் பின்பற்றி வரலாம். குருவின் பாதம் சரணம் அடைந்து இருந்தால் அனைத்து பிரச்சினையும் நீங்கி இரவை மிக சரியாக பயன்படுத்தலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, November 20, 2019

தோஷம் வரும் வழி


வணக்கம்!
          தோஷம் வரும் வழியின் தலைப்பில் இன்றைய ஜென்மத்தில் நாம் செய்த தவறு என்ன அதில் இருந்து எப்படிப்பட்ட தோஷம் வரும் என்பதைப்பற்றி பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இன்றைய காலத்தில் அநீதி செய்தால் அதில் இருந்து தோஷம் வரும் அது எப்படி வேலை செய்கின்றது என்பதைப்பற்றி பார்க்கலாம்.

கிராமபுறங்களில் இது அதிகமாக நடைபெறும். ஒரு வியாபாரி ஏதோ ஒன்றை விற்க வருவார் அவரிடம் வீணாக தகறாறு செய்து அதனை பிடுங்கிவிடுவார்கள். இது ஒரு ஊரில் ஒருத்தன் இப்படி செய்வான். வருபவரை சண்டை போடுவது வேலையாகவே வைத்திருப்பார்.

உங்களை நாடி ஒருவர் விற்பனை செய்ய வருகின்றார் என்றால் ஒன்று வாங்கவேண்டும் இல்லை என்றால் அமைதியாக இருந்துவிடவேண்டும். இதனை செய்யாமல் அவரை மிரட்டி அவரின் பொருள்களை வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவருக்கு தோஷம் என்பது ஏற்படும்.

பிற்காலத்தில் சம்பந்தப்பட்ட நபர் நிறைய கஷ்டத்தை அனுபவிப்பார். தீராத நோயும்  அவரை பிடித்துவிடும். இதனை நான் பல இடங்களில் பார்த்து இருக்கிறேன். நோயால் யாரும் கவனிக்காத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு அவர் இறக்கவும் நேரிடும்.

இது நகர்புறங்களில் அந்தளவுக்கு நடைபெறுவதில்லை கிராமபுறங்களில் நிறைய நடைபெறும். கிராமபுறத்தில் நீங்கள் இருந்தால் இதனை செய்யகூடாது செய்கின்ற நபர்களிடம் இதனைப்பற்றி சொல்லி அவர்களை திருத்தலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, November 19, 2019

பித்ருக்களின் சடங்குகள்


வணக்கம்!
          எல்லா சமயங்களிலும் பித்ருக்களுக்கு செய்யவேண்டியதை பெரியதாக செய்வார்கள். அவர் அவர்களின் வழங்களில் படி இது நடைமுறை செய்வார்கள். இதனை செய்யவேண்டும் என்று அனைவரும் வலியுறுத்துவார்கள்.

பித்ருக்களுக்கு செய்தால் அவர்கள் மனம் இறங்கி நல்லதை செய்வார்கள் என்று நானும் சொல்லிருக்கிறேன். நடைமுறை வாழ்க்கையில் இதனை செய்து நன்றாக இருப்பவர்களை விட செய்யாமல் நன்றாக இருப்பவர்கள் அதிகம் என்றே சொல்லலாம்.

நான் பார்த்தவரை எந்த ஒரு சடங்கையும் செய்யாமல் நல்ல நிலையில் இருப்பர்கள் நிறைய இருக்கின்றனர். இவர்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கின்றது என்று நானே பார்த்து வியந்து இருக்கிறேன். 

அவர் அவர்களின் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் அவர்களை உயர்ந்த நிலைக்கு தூக்கிக்கொண்டு சென்றுவிடுகின்றது. அவர்கள் எந்தவித வழிபாடும் இல்லாமலே அவர்கள் மேலே வரவேண்டும் என்று கிரகங்கள் தீர்மானித்து அவர்களை மேல்நோக்கி கொண்டு சென்றுவிடுகின்றது.

இதற்க்காக சடங்குங்களை செய்யவேண்டாம் என்று சொல்லவில்லை. இப்படியும் நடக்கின்றது என்பதை சொல்லுவதற்க்கு சொன்னேன். அவர்களின் கிரகங்கள் அப்படி வேலை செய்கின்றன. நம்முடைய ஜாதகத்தில் அப்படி வேலை செய்யவில்லை அதற்க்காக நாம் சடங்களை எல்லாம் செய்ய வேண்டியிருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, November 18, 2019

ஏழரைச்சனி


வணக்கம்!
          ஒருவருடைய வாழ்வில் அதிகபட்சம் பிரச்சினைகளாக வருவது ஏழரைச்சனி என்ற ஒன்றாக இருக்கும். இது எந்த காலக்கட்டத்திலும் வந்தாலும் அவரை ஒரு வழிப்படுத்திவிட்டு செல்லும் தன்மை உடையது.

ஏழரைச்சனியில் ஒருவருக்கு வரும்பொழுது அது பல அவமானங்களை கொடுத்துவிடுகின்றது. அவர் எந்தவித வம்புக்கும் போகாதவர்களாக இருந்தாலும் சரி அவரையும் ஒரு வழி செய்துவிடும். ஏழரைச்சனி என்றால் அதிகமாக பாதிப்பை தருவது அவமானம் என்ற ஒன்று அதற்க்கு அடுத்தபடியாக மருத்துவசெலவு இவை தான் அதிகமாக நடைபெறுகின்றது.

இதுவரை கடன் என்றால் என்ன என்று கூட தெரியாதவர்களை கூட அவரையும் கடனில் சிக்க வைத்து அவரை போட்டு ஒரு வழி செய்து அவமானப்பட வைத்துவிடும். பிறர் மத்தியில் அவரின் மானம் காற்றில் பறக்க வைத்துவிடும் தன்மை ஏழரைச்சனிக்கு உண்டு.

ஏழரைச்சனி என்றால் அது இரண்டாவது சுற்று பொங்கு சனியாக தானே வேலை செய்யும் என்று சொல்லுவார்கள். பணம் எப்படியும் வந்துக்கொண்டு தான் இருக்கும். பல இடத்தில் ஏழரைச்சனி அவமானம் கடனையும் அதிகமாக கொடுக்கின்றது.

ஏழரைச்சனி தொடங்குகின்றது அல்லது நடந்துக்கொண்டு இருந்தால் நீங்கள் அவமானத்தில் சிக்கும் தன்மையை உருவாக்கும் என்பதால் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருங்கள். எளிமையாக வாழ கற்றுக்கொள்ளுங்கள். கசப்பு தன்மையுடைய உணவை அதிகமாக எடுத்தக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, November 15, 2019

செல்வநிலையில் எச்சரிக்கை


வணக்கம்!
          நம்முடைய மனம் என்ன செய்யும் என்றால் நம்முடைய நிலை நன்றாக இருக்கும்பொழுது நாம் தான் நன்றாக இருக்கின்றோமே நாம் ஏன் சாமியை கும்பிடவேண்டும் சாமியை எல்லாம் கும்பிடவேண்டாம் என்று சொல்லும். 

பொதுவாக நாம் உலகத்தில் உள்ள அனைத்து விசயங்களையும் கேட்டாலும் கடைசியில் நம்முடைய மனம் சொல்லும் கருத்தை தான் ஒவ்வொரு மனிதனும் ஏற்றுக்கொள்வான். இது ஒரு சில வேலைகளில் நல்லது நடந்தாலும் பல வேலைகளில் உங்களை சிக்கலில் மாட்டிவிட்டதற்கும் இது தான் காரணமாக அமையும் என்பதை சிக்கலில் மாட்டிய பிறகு தான் நமக்கு புரியவரும்.

உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் சொகுசு வாழ்க்கையை கொடுப்பது எல்லாம் யார் என்று பார்த்தால் உங்களுக்கு நடக்கும் தீய தசாவாக இருக்கும். தீயகிரகங்கள் நல்ல சொகுசுயை கொடுத்து ஒரு நாெடியில் உங்களை கொண்டு போய்விடும்.

தீயகிரகத்தின் தசா அல்லது தீயகிரகத்தின் குணம் ஒருவருக்கு நல்ல சொகுசுயை கொடுத்து ஒரு பெரிய அடியை கொடுக்கும். நான் பார்த்த நிறைய ஜாதகங்களில் இந்த மாதிரி நிறைய நடந்து இருக்கின்றது. இதனை மனதில் கொண்டு தான் இந்த கருத்தை உங்களிடம் சொல்லுகிறேன்.

நான் நன்றாக இருக்க ஆரம்பித்தேன் சார் திடீர் என்று எங்கிருந்து தான் எமன் வந்தது என்று தெரியவில்லை கொண்டு சென்றுவிட்டது என்று சொல்லுவார்கள். இதனை எல்லாம் நீங்கள் தவிர்க்கவேண்டும் என்று என்றால் பணம் வரும்பொழுது நீங்கள் உஷாராக இருக்கவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, November 14, 2019

தோஷம் வரும் வழி


வணக்கம்!
         நமக்கு வரும் தோஷம் என்பது முன்ஜென்மத்தில் ஏற்பட்டதைவிட இந்த ஜென்மத்தில் ஏற்பட்ட பாவத்தால் தான் நிறைய வரும். இந்த ஜென்மத்தில் இந்த இடத்தில் என்று நான் சொல்லுவது நம்முடைய தந்தை அல்லது தாத்தா இவர்கள் செய்த பாவத்தால் வரும் தோஷம் உங்களை அதிகமாகவே பாதிக்க செய்யும்.

ஒருவருடைய தந்தை தன்னுடைய அண்ணன் அல்லது தம்பிக்கு சொந்த சொத்தை பிரித்து கொடுக்காமல் அவரை ஏமாற்றிக்கொண்டு அதனை அவர் அனுபவித்து இருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். இவரின் வாரிசுகளுக்கு பெரும்பாலும் செவ்வாய் தோஷம் ஏற்பட்டுவிடும்.

வாரிசுகளுக்கு எட்டில் செவ்வாய் அமர்ந்து அவர்களுக்கு மிக கடுமையான தோஷத்தை ஏற்படுத்திவிடும். ஒன்று திருமணம் நடக்காமல் போய்விடுவது உண்டு அல்லது திருமணம் நடந்தாலும் அவர்களின் வாழ்வு நன்றாக இருக்காது.

நான் பார்த்த நிறைய ஜாதகத்தில் இப்படிப்பட்ட தோஷம் இருக்கின்றது. இதனால் பாதிப்புகளும் அதிகமாகவே இருக்கின்றது. இதற்கு தீர்வு என்ன என்று பார்த்தால் பாதிக்கபட்டவனுக்கு நிலத்தை கொடுத்துவிடுங்கள். 

செவ்வாய் தோஷம் நிவர்த்தி செவ்வாய் தோஷத்திற்க்கு பரிகாரம் என்பது எல்லாம் கிடையாது. செவ்வாய் தோஷ நிவர்த்தி இதற்கு என்று நீங்கள் செய்ய முற்பட்டால் அவனின் நிலத்தை கொடுத்தவிடுவது நன்றாக இருக்கும். நிறைய பேர்கள் முருகனுக்கு விரதம் இருங்கள் என்று சொல்லுவார்கள். ஒரு சிலர் முருகன் கோவில் கோவிலாக சுற்றி வருவார்கள் இது எல்லாம் கண்டிப்பாக பரிகாரமாக அமையாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, November 12, 2019

திலாஹோமம்


வணக்கம்!
          ஒரு நண்பர் திலாஹோமம் எப்பொழுது செய்யலாம் என்று கேள்வி கேட்டார்.

திலாஹோமம் எந்தளவுக்கு இன்றைக்கு நடந்துக்கொண்டு இருக்கின்றதுஎன்பது கேள்வி குறியாக தான் இருக்கின்றது. இதற்கு சொல்லப்படும் மந்திரங்களும் எந்தளவுக்கு உண்மை தன்மை இருக்கின்றது என்பதும் ஒரு கேள்வியாக மட்டுமே இருக்கும்.

நம்முடைய கடமை திலாஹோமத்தை செய்வது அதற்கு நாம் செய்யவேண்டும் மந்திரம் சரியாக சொன்னாலும் சரி சொல்லவிட்டாலும் சரி என்று நினைத்து இறங்கினால் அதற்கு முன் நாம் செய்யவேண்டிய கடமை எல்லாம் செய்துவிட்டாேமா என்பதையும் பார்க்கவேண்டும்.

ஒருவரின் வாழ்வின் இறுதியில் இந்த ஹோமத்தை செய்யலாம் ஆனால் இளம்வயதில் உள்ளவர்கள் எல்லாம் இதனை செய்யவேண்டும் என்று நினைக்கின்றனர். உங்களின் வாழ்வில் கடைசி கட்டத்தில் இதனை செய்துக்கொள்ளலாம். 

உங்களின் பெற்றோர்களுக்கு செய்யவேண்டிய கடமை மற்றும் உங்களின் வாரிசுகளுக்கு எல்லாம் செய்யவேண்டிய கடமை எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு இதற்கு இறங்குங்கள். இளம்வயதில் உள்ளவர்கள் எல்லாம் இதனை தற்பொழுதே செய்யவேண்டும் என்று இதில் இறங்கவேண்டாம்.

பெற்றாேர்களுக்கு செய்யவேண்டிய பூர்த்தி சடங்குங்கள் அவர்களுக்கு என்று செய்யவேண்டிய திருமணம் சஷ்டி பூர்த்தி போன்றவற்றை செய்துவிட்டு உங்களின் வாரிசுகளுக்கும் திருமணத்தை எல்லாம் முடித்துவிட்டு நீங்கள் திலாஹோமத்தை செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, November 11, 2019

கேள்வி & பதில்


வணக்கம்!
          கருக்கலைப்பு பற்றி நாம் பதிவில் சொல்லியவுடன் நிறைய பேர்கள் இதற்கு என்று தனியாக பரிகாரம் எதுவும் இருக்கின்றதா அல்லது ஏதாவது வழிபாட்டு முறைகள் இருக்கின்றனவா என்று நிறைய பேர்கள் என்னிடம் கேட்டனர்.

முக்கால்வாசி பேருக்கு இந்த பிரச்சினை இருக்கின்றது என்பது தெரிகின்றது. இங்கு தான் நாம் ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும். நம்முடைய வழிபாடுகள் அனைத்தும் வீணாக போவதற்க்கும் இப்படிப்பட்ட பிரச்சினைகளை நாம் முன்கூட்டியே செய்துவிடுவதால் நமக்கு நாம் செய்யும் பலன் கிடைப்பதில்லை.

நாம் கடவுளுக்கு வருவோம் இராமர் தனக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்க இராமேஷ்வரத்தில் கையால் சிவ லிங்கத்தை பிடித்து அதற்கு பூஜை செய்து அவரின் தோஷத்தை போக்கியுள்ளார். இது தான் நமக்கு கிடைக்கும் ஒரு துடுப்பு சீட்டு மற்றபடி யாரும் இதனை எல்லாம் செய்யவில்லை என்று எனது அறிவுக்கு கிட்டியதை வைத்து சொல்லுகிறேன்.

நேராக இராமேஸ்வரம் செல்லுங்கள். ஒரு ஒதுக்குபுறமான கடற்பரப்பில் அமர்ந்து ஒரு லிங்கத்தை உருவாக்குங்கள். மணலிலேயே செய்யுங்கள். அதற்கு பூ எல்லாம் வைத்து நீங்களே உங்களுக்கு தெரிந்த சிவ மந்திரத்தை ஒதி வணங்கிவிட்டு வரலாம். அதனை அப்படியே கூட விட்டுவிடலாம். கடலில் நீராடுவதும் முக்கியம் அதோடு இராமநாத சுவாமியையும் வணங்கிவிட்டு வாருங்கள். எனக்கு தெரிந்ததை வைத்து நான் சொல்லுகிறேன்.

நீங்கள் இதற்கு மேலும் இப்படிப்பட்ட தவறை செய்யாமல் இருங்கள் மற்றபடி இதற்கு என்று பரிகாரம் செய்வதில்லை. நவ அம்மன் (சண்டி) யாகம் உங்களின் அருகில் எங்கு நடைபெற்றாலும் அதில் கலந்துக்கொள்ளுங்கள். சண்டி யாகத்தில் நிறைய பாவங்களுக்கு பரிகாரம் தேடலாம் அதனால் இதனை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, November 9, 2019

அன்னாபிஷேகம்


வணக்கம்!
          ஐப்பசி பெளர்ணமி அன்று உலக உயிர்களுக்காக இறைவன் உணவை படைத்ததின் காரணமாக அவர்க்கு அன்னாபிஷேகம் நடைபெறும். பெரும்பாலான சிவன் கோவில்களில் இந்த அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும்.

ஒவ்வொரு வருடமும் இதனைப்பற்றி சொல்லி உங்களை அதில் கலந்துக்கொள்ள சொல்லுவது உண்டு அல்லது அன்றைய நாளில் அன்னதானம் செய்ய சொல்லுவது உண்டு. இந்த வருடமும் இந்த நாளில் நான் சொல்லுவது போல செய்யலாம்.

சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று சொல் இந்த அன்னாபிஷேகத்தால் வந்தது. சிவனை அன்னாபிஷேகத்தில் நீங்கள் தரிசனம் செய்யும்பொழுது நீங்கள் சொர்கத்தில் வாழ்க்கின்றீர்களோ இல்லையோ இந்த பிறவியில் கடைசி வரை சோற்றுக்கு கஷ்டம் இல்லாமல் செல்லும் அதனால் அன்னாபிஷேகத்தில் உள்ள சிவனை தரிசனம் செய்யுங்கள்.

பெரும்பாலான சிவன் கோவில்களில் வரும் திங்கள்கிழமை இரவு அன்னாபிஷேகம் நடத்தப்படுவதாக தகவல் இருக்கின்றது. உங்களுக்கு அருகாமையில் உள்ள சிவன் கோவிலை தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள். 

தனிநபருக்காக திங்கள் கிழமை முதல் நவ அம்மன் சண்டி யாகம் நடைபெற இருக்கின்றது. நவ அம்மன் (சண்டி) யாகத்திற்க்கு காணிக்கை செய்து இருப்பவர் சென்னையை சேர்ந்த திரு முத்துகிருஷ்ணன் (உயர்நீதி மன்ற வழக்கறிஞர்) அவர்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

இந்த பிறவியில் பெரிய பாவம்


வணக்கம்!
          தோஷம் வரும் வழியில் சரீர தாேஷத்தைப்பற்றி சொல்லிருந்தேன். சரீர தோஷத்தில் மேலும் ஒரு சரீர தோஷத்தைப்பற்றி பார்க்கலாம். பெரும்பாலும் இந்த தோஷத்தால் மட்டுமே பலர் பாதிப்படைகின்றனர்.

ஒரு சரீரம் உருவாகுவதற்க்கு முன்பே அதனை அழிக்கும் தோஷம் என்பது தான் இருக்கும் தோஷத்திலேயே அதிகமான தோஷமாக இருக்கும். கரு வளர்ந்து ஒரு மாதத்தில் அல்லது அதற்கு மேற்பட்ட மாதத்தில் ஒரு கருவை நாம் அழித்தால் அது பெரிய தோஷமாக உங்களுக்கு வந்துவிடும்.

பெரும்பாலானவர்கள் இந்த விசயத்தில் தவறு செய்துவிடுகின்றனர். இது பெரிய பிரச்சினையை கொடுக்கும் என்று தெரியாமல் தவறு செய்துவிடுகின்றனர். இது தான் பெரிய தோஷமாக உங்களுக்கு வந்துவிடும்.

கருக்கலைப்பு செய்வதால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் சரியாக வளரமாட்டார்கள். குடும்பத்தில் ஏதோ ஒரு பிரச்சினை வந்துக்கொண்டே இருக்கும். எங்கு தவறு இருக்கின்றது என்பது தெரியாமலேயே இருக்கும். இளம்வயதில் அல்லது ஏதோ ஒரு காலக்கட்டத்தில் இதனை செய்துவிட்டு பிற்காலத்தில் கஷ்டபட நேரிடும்.

நான் நிறைய கோவிலுக்கு சென்று இருக்கின்றேன். நான் நிறைய வழிபாடு எல்லாம் செய்து இருக்கிறேன் எனக்கு எதுவும் சரியாக நடக்கமாட்டேன்கின்றது என்பார்கள். அவர்களின் குடும்பத்தில் இப்படிப்பட்ட தோஷம் இருந்தால் அவர்களு்க்கு எல்லாம் இப்படி தான் நடக்கும்.

கருகலைப்பு என்பதை செய்யாதீர்கள். முடிந்தவரை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் இந்த செய்தியை சொல்லுங்கள். முன்ஜென்மத்தில் நீங்கள் செய்த தவறை விட இந்த ஜென்மத்தில் நீங்கள் செய்யும் இந்த தவறால் பெரிய பாதிப்பு உங்களுக்கு மட்டும் இல்லாமல் உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, November 8, 2019

தோஷம் வரும் வழி


வணக்கம்!
          இராமர் போரில் பல உயிர்களை கொன்றதால் அவர்க்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. எதிரியாக இருந்தாலும் அவனும் மனிதன் தான் ஒரு மனிதனின் சரீரத்திற்க்கு ஏற்படுத்திய காயத்தால் அவர்க்கு இந்த தோஷம் ஏற்பட்டது என்று சொல்லுவார்கள். கடவுளின் அவதாரம் என்று சொல்லப்படும் நபர்க்கு இந்த தோஷம் வருகின்றது என்றால் சாதாரண மனிதனின் நிலையைப்பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை.

இந்த காலத்தில் மனிதன் செய்யும் தவறு ஒரு சரீரத்திற்க்கு தீங்கு ஏற்படுத்தினால் அவருக்கு இப்படிப்பட்ட தோஷம் ஏற்படும். இந்த தோஷத்தால் அவனுக்கு நிறைய பிரச்சினை ஏற்படும். இது முதல்தரமான தோஷம் என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு மனிதனை ஏதோ ஒரு ஆயுதத்தால் நீங்கள் காயப்படுத்தினால் தோஷம் உங்களுக்கு ஏற்பட்டுவிடும். இதனால் உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் உங்களுக்கும் பிரச்சினை என்று நீங்கள் எடுத்துக்கொண்டு இந்த மாதிரியான செயலை செய்யக்கூடாது.

இந்த காலத்தில் ஒரு மனிதனை கொலை செய்யும் நபர்கள் தான் அந்த  ஊரில் பெரிய ஆட்களாக இருக்கின்றார்கள். நீங்கள் சொல்லுவது நடைமுறையில் சாத்தியம் இல்லையே என்று நீங்கள் நினைக்கலாம்.

கலியுகத்தில் இப்படிப்பட்ட நிகழ்வு எல்லாம் நடக்கதான் செய்யும் இருந்தாலும் ஒருவரின் தசா அவர்கள் வாழும் வாழ்க்கையை முடிவு செய்யும். தசா முடிந்த பிறகு அவர்களுக்கு அடுத்து வரும் தசா நல்ல வைத்து செய்துவிடும். நீங்களே பார்த்து இருக்கலாம். கொலை செய்து கொஞ்ச நாட்கள் ஆட்டம் போட்டவர்கள் எல்லாம் ஒரு சில வருஷத்திலேயே ஆட்களே இல்லாமல் போய்விடுவார்கள்.

ஒரு மனிதனின் சரீரத்திற்க்கு நீங்கள் எந்த வகையிலும் தீங்கு இழைக்க கூடாது. ஒரு மனிதனின் சரீரத்திற்க்கு தீங்கு இழைத்தால் கண்டிப்பாக உங்களுக்கும் உங்களின் வம்சத்திற்க்கு பெரிய தோஷம் வரும் என்பதால் முடிந்தவரை இதனை தவிர்க்க பாருங்கள்.

அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் அனுப்பி வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, November 7, 2019

கர்மபலன்


வணக்கம்!
         ஒருவருக்கு வரும் கர்மபலன் என்பது மிக மிக குறைவாகவே வரும் ஆனால் நாம் அதனை மொத்தமாக எடுத்துக்கொண்டு அனைத்தும் கர்மா வழியாகவே நடைபெறுகின்றது என்று சொல்லிவிடுகிறோம்.

இந்த பிறவியில் மனிதன் செய்யும் தவறால் அவனுக்கு பிரச்சினை வருகின்றது. நிறைய பிரச்சினையை அவனே உருவாக்கிக்கொள்கிறான் அதன்பிறகு அவன் கர்மாவால் தான் பிரச்சினை வருகின்றது என்று வருந்துகிறான்.

முன்ஜென்மத்தில் இருந்து குறைவாகவே நல்லது மற்றும் கெட்டது வருகின்றது. இந்த நல்லது அல்லது கெட்டதை மனிதன் அதிகப்படுத்திக்கொள்கிறான். கர்மவினை எல்லாம் அந்தளவுக்கு நாம் சொல்லுவது போல நடப்பதில்லை என்பது என்னுடைய கருத்து.

நிறைய நீங்கள் தேடிச்சென்றால் உங்களுக்கே பல விசயங்கள் புலப்படும். ஆன்மீக தேடுதல் என்று இல்லாமல் அனைத்து தேடுதலிலும் இந்த விசயங்கள் எல்லாம் உங்களுக்கு புரியவரும். கர்மாவைப்பற்றி சொல்லுவதைவிட நீங்களே அதனை புரிந்துக்கொள்ள முடியும்.

அறிவு தேடுதலை அதிகப்படுத்திக்கொண்டே இருங்கள். உங்களுக்கு நிறைய புரிய வரும். இந்த பிறவியில் மனிதன் செய்யும் பாவங்களுக்கு தகுந்தார்போலவும் இந்த பிறவியிலேயே அவனுக்கு தண்டனையும் வருகின்றது. பாவம் என்றால் ஒரு சில குறிப்பிட்ட பாவங்கள் மட்டும் தான் அது என்ன என்பதைப்பற்றி வரும் பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, November 4, 2019

சந்திரன்


வணக்கம்!
          ஒவ்வொரு நாளும் நமது மனதை சந்திரன் ஆட்சி செய்து அதன் வழியாக நன்மையும் தீமையும் தருகின்றது என்பது பொதுவாக அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதில் தசாநாதன் கொஞ்சம் ஈடுபட்டு தன்னுடைய பங்கையும் வழங்குவார்.

ஒரு மனிதனின் மனதை அதிகபட்சம் சந்திரனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தான் ஆட்சி செய்கின்றது. சந்திரனின் நகர்வை வைத்து நீங்கள் பார்த்துக்கொண்டு அதற்கு தகுந்தார் போல் நீங்கள் நடந்துக்கொண்டு இருப்பீர்கள்.

சந்திரன் என்றாலே முதலில் பயப்படும் விசயம் சந்திராஷ்டமம் என்பது தெரியும் ஆனால் உங்களுக்கு இழப்பை அதிகமாக வழங்குவது சந்திரன் பனிரெண்டில் செல்லும்பொழுது உங்களுக்கு விரையம் அதிகமாக ஏற்படுவது உண்டு.

மருத்துவசெலவு அல்லது வாகன செலவு என்று ஏதாவது ஒன்றை வைத்துவிடும். பெரிய செலவு இல்லை என்றால் உங்களின் வீட்டில் உள்ளவர்களுக்கு அல்லது உங்களின் வாகனத்திற்க்கு சிறிய அடியாவது பட்டுவிடும். நீங்கள் திருமணமானவர்களாக இருந்தால் பெரும்பாலும் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு தலைவலி மாத்திரையாவது வாங்கிக்கொடுப்பது போல் வைத்துவிடும்.

சந்திராஷ்டமம் என்றாவது ஒரு நாள் தான் வேலை செய்யும் விரைய இராசிக்கு சந்திரன் வரும்பொழுது உங்களுக்கு கண்டிப்பாக செலவு வைத்துவிடும். இதைப்போல் சந்திரன் உங்களின் ஜென்மநட்சத்திரத்திற்க்கு வரும்பொழுது உங்களுக்கு தலைவலியாவது வந்துவிடும் அல்லது உடற்சோர்வு ஏற்பட்டுவிடும். சந்திரனின் ஒவ்வொரு நாள் நகர்வையும் கவனித்து அதற்க்கு தகுந்தார்போல் உங்களின் திட்டத்தை செயல்படுத்திக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, November 3, 2019

ஆன்மீக தேடுதல்


வணக்கம்!
          இன்றைய காலத்தில் இரண்டில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஒன்று சாராயகடை அடுத்தது ஆன்மீக கடை இந்த இரண்டிலும் கூட்டம் அதிகமாக இருக்கும். மனிதன் தேடும் தேடுதலில் இந்த இரண்டும் முக்கியபங்கு வகிக்கும்.

சாராயகடையைப்பற்றி நாம் பேசவேண்டாம். ஆன்மீக கடையைப்பற்றி பார்க்கலாம். ஆன்மீகத்தை நிறைய பேர் தேடிக்கொண்டு இருக்கின்றனர். இந்த தேடுதல் நன்றாக இருக்கலாம் ஆனால் இந்த தேடுதலுக்கு கண்டிப்பாக ஒருவர் வேண்டும். எல்லோரும் தேடுகின்றனர் ஆனால் அதில் குரு என்பவர் இல்லை என்பதால் தான் இதில் முழுமை பெறுவதில்லை.

ஒவ்வொரும் முடிந்தளவுக்கு ஆன்மீகத்தை தேடிச்செல்கின்றனர். கலியுகத்தில் ஒரு மனிதனை உங்களால் அவ்வளவு எளிதில் பிடித்துக்கொள்ளமுடியாது. உங்களின் மனது குருவை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளமுடியாது.

மனிதன் தான் கை பிடித்து கடவுளை காட்ட வேண்டும். இங்கு மனிதனை அவ்வளவு எளிதில் மனம் ஏற்றுக்கொள்ளமுடியாத காரணத்தால் தான் ஆன்மீகத்தை முழுமையாக உணரமுடியாமல் இருக்கின்றது.

நீங்கள் கோவில் கோவிலாக அலைவதை விட ஒரு நல்ல குருவை அடைவதற்க்கு என்ன வழி என்பதை பார்க்கவேண்டும்.  எல்லோரையும் முடிந்தவரை நன்றாக கவனித்து பார்த்தால் அனைத்தையும் தெரிந்துக்கொள்ள பார்ப்பார்கள் ஆனால் ஒரு குருவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, November 2, 2019

இனிய தொடக்கம்


வணக்கம்!
          சூரசம்ஹரத்தின் தொடர்ச்சியாக இதனை தருகிறேன். பெரும்பாலும் நமது ஆன்மீக நண்பர்கள் அனைவரும் தங்களின் சித்தர்களாக மாறுவதற்க்கு என்ன வழியே அதனை பின்பற்றி செல்வார்கள். 

முருகனின் தீவிர பக்தர்களாக இருக்கும் அன்பர்களுக்கு அவர் தன்னுடைய சித்தவித்தையை மானசீகமாக கற்றுக்கொடுப்பார். கந்தசஷ்டி தொடங்கிய நாளில் இருந்தே நமது நண்பர்கள் தங்களின் விரதத்தை தொடர்ந்து செய்து வந்திருப்பார்கள்.

கந்தசஷ்டி தொடங்கிய நாளில் இருந்து ஏதோ ஒரு முருகன் கோவிலுக்கு உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என்று சொல்லிருந்தேன். பல நண்பர்கள் எனக்கு அவர்கள் செய்ததை வாட்ஸ்அப்பில் எனக்கு அனுப்பியிருந்தனர்.

அனைத்து நண்பர்களுக்கு முருகனின் அருள் கண்டிப்பாக கிடைத்து இருக்கும். ஒரு சிலருக்கு காட்சி கூட ஏதோ ஒரு ரூபத்தில் கொடுத்து இருக்கலாம். இதனை எல்லாம் நான் சொல்லுவது ஒரு ஆன்மீகம் என்பதற்க்காக சொல்லவில்லை. நல்ல விசயங்கள் நடக்கவேண்டும் அது நடந்து இருக்கும் என்பதால் பகிர்ந்துக்கொள்கிறேன்.

அடுத்த வரும் ஒரு முருகனின் விஷேசத்தில் நாம் நிறைய செய்ய சொல்லுகிறேன் அதனை பின்பற்றி நீங்கள் செய்துக்கொள்ளுங்கள். முருகனின் சித்தவித்தை உங்களை ஆன்மீகத்தில் மிக முன்னேற்றம் அடைய செய்யும் என்பதால் இதனை செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு