வணக்கம் நண்பர்களே!
வாங்கி கட்டிய வரம் பகுதியில் கடனைப்பற்றி சொல்லிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவு. கடன் வாங்கினால் கண்டிப்பாக திருப்பிக்கொடுக்கவேண்டும் என்று சொல்லிருந்தேன். அதனை படித்துவிட்டு பல நண்பர்கள் நாங்கள் கொடுத்தே ஏமாந்துவிட்டோம் என்றும் என்னிடம் சொன்னார்கள்.
பல இடத்தில் கொடுத்தவன் தான் கஷ்டப்படவேண்டும். வாங்கியவன் அவன் போகின்ற போக்கில் போய்விடுகிற நிலையும் ஏற்படுகிறது. பொதுவாக ஏழைகளாக இருந்தால் போய் தொலைகிறான் என்று விட்டுவிடுங்கள். பணம் வைத்துக்கொண்டு ஏமாற்றினால் கண்டிப்பாக அவரை விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். நான் சொல்ல வந்த விசயத்திற்க்கு வந்துவிடுகிறேன்.
இன்று வட்டிக்கடை வைத்திருப்பவர்கள் அனைவரும் நல்ல முறையில் இருப்பார்கள். வட்டி வாங்க கூடாது என்று அனைத்து மதங்களும் சொன்னாலும் வட்டி விடுபவர்களை பார்த்தால் மிக மிக நன்றாக இருப்பார்கள். வட்டி விடுபவர்களின் குழந்தைகள் மிக உயர்ந்த பள்ளியில் படிக்க வைப்பார்கள். அவர்கள் தனி வீடு கட்டுவார்கள் அவர்களின் குழந்தைகளுக்கு இளம்வயதில் திருமணம் நடைபெறும். இது எல்லாம் எப்படி சாத்தியமாகிறது என்று பார்த்தால் ஒரு சில விசங்கள் உங்களுக்கு புரியவரும்.
வட்டி வாங்கும் நிலை ஒருவருக்கு ஏற்படும்பொழுது அவன் மிக சிக்கலான அதே நேரத்தில் ஒரு இக்கட்டான ஒரு நிலையில் இருப்பான். அந்த நேரத்திற்க்கு வட்டிக்கொடுப்பவர் பணம் கொடுக்கும்பொழுது அவனை அறியாமலேயே அவன் வாழ்த்துகிறான். அப்பாடா தப்பித்தேன் என்று அவன் உள்ளம் குளிர்கிறது.
ஒரு சில வட்டிக்கடைக்காரர்கள் பாதிப்படைவது பல ஏழைகளை கடுமையாக தாக்கிவிடும்பொழுது பாதிப்படைவார்கள். பணத்தை பல மடங்காக அதாவது மீட்டர் வட்டிப்போல் கேட்கும்பொழுது பாதிப்பு வருவது நடைபெறுகிறது.
வட்டி விடுவது நல்லது என்று நான் சொல்லவில்லை. நடைமுறையில் நடப்பதை மட்டும் சொன்னேன். வட்டி விடுவதை விட பணம் கொடுத்து உதவி செய்வது நல்லது. இன்றைய காலத்தில் அன்னதானத்தை விட பணம்தானம் செய்தால் மிக மிக நல்லது என்று சொல்லுவேன். சரியான நபருக்கு சரியான பணம் தானம் செய்தால் நல்ல புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்.
இந்த பகுதியில் நான் சொல்லவிரும்புவது கடன் பட்டு கஷ்டப்பட்டு இருப்பவர்கள் நல்ல நிலைமைக்கு நீங்கள் வரும்பொழுது நீங்கள் பிறர்க்கு பண உதவி செய்யுங்கள்.
நாளை திருநள்ளார் கோவிலுக்கு சென்று வரலாம் என்று ஒரு ஏற்பாடு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. திருநள்ளார் மற்றும் அதனை சுற்றிய பகுதியில் உள்ள ஒரு சில கோவில்களை தரிசனம் செய்வதாக திட்டம் இருக்கிறது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு