Followers

Tuesday, January 24, 2012

சோதிட அனுபவ தொடர் நிறைவுபகுதி



நான் இந்த ஜாதகத்தை தொட்டவுடன் பதிவு நீண்டு கொண்டே செல்கிறது அதனால் சுருக்கமாக இந்த பதிவிலேயே முடித்துக்கொள்கிறேன். ஒரு மனிதனின் வாழ்க்கையை சொல்லவேண்டும் என்றால் ஆயிரம் பக்கங்கள் கூட போதாது. நீண்டு கொண்டே செல்லும் உங்கள் பொறுமை கருதி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

எட்டாம் வீட்டு அதிபதி ஆறாம் வீட்டில் இருக்கிறார் ஆறாம் வீடு நோய் ஸ்தானம் இவருக்கு உடம்பு மெலிந்து காணப்படுகிறது. எந்த எந்த விதத்தில் உடல்நிலை பாதிக்கப்படும் என்பதிலேயே எண்ணங்கள் வந்துகொண்டே இருக்கும். யாராவது எதிரி என்று வந்துவிட்டால் அவரை பாடாதபாடு படுத்துவார்கள்.

ஒன்பதாம் வீடு என்று சொல்லக்கூடிய பாக்கியஸ்தானத்தைப் பற்றி பார்க்கலாம் அதன் அதிபதி ஐந்தாம் வீட்டில் இருக்கிறார் அதுவும் ராகுவுடன் சேர்ந்து அமர்ந்துள்ளார். இவரின் தந்தை உயிருடன் இல்லை. பாக்கியஸ்தான அதிபதி ஐந்தில் நிற்பது நல்லது தான் ஆனால் இவருக்கு அமைந்த கிரகம் இரண்டும் கெடுதல் தரும் கிரகம் அதனால் நடந்த பலன் எல்லாம் கெடுதல் ஆக அமைந்தது.

ரிஷப ராசி பத்தாவது வீடாக வருகிறது அதன் அதிபதி சுக்கிரன் அவர் களத்திர ஸ்தானத்தில் இருக்கிறார். இவர் மனைவி மூலம் நல்ல வாழ்க்கை முன்னேற்றத்திற்க்கு துணையாக இருப்பார் ஆனால் இவருக்கு திருமணம் நடைபெறவில்லை. இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்துவந்தார் ஆனால் இப்பொழுது வேலையில் இல்லை.

லாப ஸ்தானம் வைத்து பார்க்கும் மிதுன ராசியாக வருகிறது. அதன அதிபதி புதன் அவர் மீனராசியில இருக்கிறார். 8 ஆம் வீட்டில் இருக்கிறார். உயில் இன்சுரன்ஸ் மூலம் பணம் வரும். இவர்களுது வாழ்க்கையில் ஏற்றதாழ்வுகள் சர்வ சாதாரணம் மோசடி பேர்வழிகளால் இவர் ஏமாற்றபடுவார். எனவே மொத்தத்தில் இவர் எச்சரிக்கையாக பணம் விஷயத்தில் இருக்கவேண்டும்.

கடைசியாக விரயஸ்தானம் கடக ராசியாக வருகிறது அதன் அதிபதி சந்திரன். அவர் களத்திர ஸ்தாகனத்தில் இருக்கிறார். மனைவி மூலம் விரைய செலவுகள் ஏற்படும். ஆனால் இவருக்கு திருமணவாழ்வில் ஈர்ப்பு ஏற்படாது. இவரிடம் நான் கேட்டதற்க்கு எனக்கு திருமணமே பிடிக்கவில்லை என்று சொன்னார்.

இவர் வேலை செய்துக்கொண்டு இருக்கும் போது தலையில் அடிபட்டது அதனால் இவர் சுயநினைவு இல்லாமல் இருந்தார். பெரிய மருத்துவமனை எல்லாம் பார்த்தார்கள் இப்பொழுது இவர் கொஞ்சம் தேறி வருகிறார். இவருக்கு தலையில் அடிப்பட்டது குரு தசை நடக்கும் போதுதான் குரு இவருடைய ஜாதகத்தில் ஆறாம் வீட்டில் இருக்கிறது.

நான் இவருக்கு சொன்ன ஜாதக பலன்களில் ஒரு 10 சதவீதம் தான் இந்த தொடர்பதிவில் எழுதினேன். மீதி எழுதவில்லை ஏன் என்றால் புதியவர்கள் கருத்தில் கொண்டு எழுதவில்லை.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு

குரு முடிவு பகுதி



குரு எப்பொழுதும் சொந்த மதத்தை குறிப்பவர். அவர் அவர்களின் மதங்களை பின்பற்றினாலே குரு நல்லது செய்கிறது. என்னிடம் சோதிடம் பார்க்க வந்தார் ஒருவர் . அவர் சென்னையில் ஒரு கட்டிடத்தை கட்டி அதை வாடகைக்கு விட்டு வந்தார்.

அவரின் கட்டிடத்தில் குடியிருபவர்கள் பெரும்பாலும் மாற்று மதத்தினர். இவருக்கு மூன்று பையன்கள் இருக்கிறார்கள். மூத்த பையன் காதல் திருமணம் நடக்க இருக்கிறது. அடுத்த பையனும் காதல் திருமணம் செய்ய இருக்கிறார். அவர் என்னிடம் வந்து கேட்ட கேள்வி நான் இவர்களை கஷ்டபட்டு வளர்த்து இவர்கள் இஷ்டம்போல் வெளியில் திருமணம் செய்வதற்கா என்று கேட்டார்.

என்னடா இது இந்த விஷயத்திலும் கிரகங்கள் பிரச்சினை செய்கிறதா என்றால் கண்டிப்பாக செய்கிறது. என் அனுபவத்தில் நிறைய பேருக்கு குரு இந்த மாதிரி பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்.

ஒருவருக்கு திருமணம் நடைபெறுவதற்க்கு காரகம் வகிப்பவர் குரு பகவான். ஒழுங்கான திருமணம் நடைபெற வேண்டும் என்றால் குரு பகவான் நல்ல நிலையில் இருந்தால் மட்டும் தான் நடைபெறும்.

குரு ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்த்துவருகிறோம் அந்த வரிசையில்

7 ஆம் வீட்டில் குரு இருந்தால் நல்ல மனைவி அமையும். குரு லக்கினத்தை பார்ப்பதால் உடல் நிலை நன்றாக இருக்கும். சமுதாயத்தில் நல்ல புகழ் கிடைக்க வழி செய்வார். மனைவியாக வருபவர் ஆன்மிக சம்பந்தப்பட்ட குடும்பமாக இருக்கும். மனைவியும் ஆன்மிக விஷயங்களில் நாட்டம் உள்ளவராக இருப்பார். இவர்களிடம் தொடர்பு வைத்துருப்பவர்கள் நல்ல மதகுருமார்களாக இருக்க வாய்ப்பு உண்டு.

8 ஆம் வீட்டில் குரு இருந்தால் மனைவி அமைவது கஷ்டமாக இருக்கும். திருமணம் முடிந்தால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படும். செல்வ நிலை இருக்கும். சோதிடத்துறையில் நல்ல அறிவு ஏற்படும். மரண வீட்டை குறிப்பதால் உயிர் வாதை இல்லாமல் உடனே போகும்.

9 ஆம் வீட்டில் குரு இருந்தால் நல்ல பாக்கியம் கிடைக்கும். மிக உயர்ந்த பதவியில் இருப்பார். ஆன்மிகத்தில் சிறந்து விளங்குவார். மிகப்பெரிய மடாதிபதிகளின் தொடர்பு ஏற்படும். மிக உயர்ந்த படிப்புகள் எல்லாம் படிப்பார்கள். வெளிநாடுகள் செல்ல வைப்பார். வெளிநாட்டு தொடர்பு மூலம் பணவரவுகள் இருக்கும். குலதெய்வ அருள் இருக்கும். மந்திர வித்தை நன்றாக இருக்கும்.

10 ஆம் வீட்டில் குரு இருந்தால் நல்ல தொழில் அமையும். செல்வ நிலை உயரும். அரசாங்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அவரை சுற்றிய வட்டாரங்களில் மதிப்பு இருக்கும். வருமானத்தை பெருக்குவார். கோவில் சம்பந்தப்பட்ட இடங்களில் வேலைக்கு அமர்த்துவார்.

11 ஆம் வீட்டில் குரு இருந்தால் தொழிலில் நல்ல வருமானம் இருக்கும். மூத்த சகோதர சகோதரிகள் மூலம் நன்மை நடக்கும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். வாகன வசதிகள் ஏற்படும். எந்த வேலையை எடுத்தாலும் வருமானத்திற்க்கு குறைவு இருக்காது. குழந்தை பாக்கியம் இருக்கும்.

12 ஆம் வீட்டில் குரு இருந்தால் ஒழுகத்தை கடைபிடிக்க மாட்டார். புண்ணிய இடங்களுக்கு அடிக்கடி செல்ல வைப்பார். குழந்தை பாக்கியத்தில் குறை இருக்கும். சில பேர் பக்திமான்கள் போல் நடிப்பார்கள். கோவில் கட்டுதல் ஆறு குளம் வெட்டுதல் போன்றவற்றில் ஈடுபட வைப்பார். பணவிரையம் ஏற்படும்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு



Saturday, January 21, 2012

விளக்கம்



குருவைப்பற்றி பாடத்தை பதிவு இட்டபிறகு ஏகப்பட்ட கேள்விகள் வந்தன. அனைவரும் அவர்கள் ஜாதகங்களை எனக்கு அனுப்பி கேள்விகள் கேட்டுள்ளார்கள் அனைவருக்கும் நான் பதில் தருகிறேன். நேரம் கருதி சில நாட்கள் சென்று உங்களுக்கு பதில் தருகிறேன். அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள்.

குருவைப்பற்றி கேள்விகள் வந்தன. குரு ஆலங்குடியில் இருக்கிறா அல்லது திருச்செந்தூர் இருக்கிறா இப்படி கேள்விகள் வந்தன. நான் என்னிடம் வரும் வாடிக்கையாளருக்கு கொடுக்கும் பரிகாரம் என்னுடைய அனுபவத்தில் நல்ல பலனை தந்தால் மட்டும் தான் கொடுப்பேன்.

அந்த வகையில் ஆலங்குடி சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. குருவுக்காக நான் கொடுத்த பரிகாரம் ஆலங்குடி சென்று வந்தவர்கள் நல்ல பலனை அனுபத்தில் உணர்ந்திருக்கிறார்கள்.அதனால் தான் பதிவில் கொடுத்திருந்தேன்.

கோவிலுக்கு செல்லும்போது இவர் இங்கு இருப்பார அல்லது வேற ஊரில் உள்ள கோவிலில் இருக்கிறா என்று சந்தேகத்துடன் சென்றால் கண்டிப்பாக உங்களுக்கு ஒன்றும் நடக்காது.

இப்பொழுது கோவிலுக்கு சென்றால் அங்கு சில மக்கள் நடந்துக்கொள்ளும் விதத்தை பார்த்தாலே நீங்கள் சாமி கும்பிடுவதையே நிறுத்திவிடுவீர்கள் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் இருந்தால் தான் உங்களால் சாமியை தரிசிக்கமுடியும்.

உங்களுக்கு உங்கள் அருகில் இருக்கும் குரு கோவில் நல்ல பலன் தரும் என்று அனுபவம் வாய்ந்தவர்கள் சொன்னால் அந்த கோவிலையை வணங்குங்கள். எந்த தவறும் இல்லை வெளிநாட்டில் உள்ளவர்கள் ஆலங்குடி வருவது என்பது மிகவும் கஷ்டம்தான் அங்கு உள்ள கோவிலையை வணங்கலாம்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு


Thursday, January 19, 2012

சந்தேகங்கள்



என்னிடம் சில கேள்விகள் வந்தன அதற்காக ஒரு பதிவு

ஆகமக்கடல்

ஒருவருக்கு குரு லக்னம் மற்றும் ராசி அதிபதியாக இருக்கார்.ஆனா இரண்டாமிடமான மகரத்தில் நீசமாக உள்ளார்.லக்னாதிபதியே நீசமாக உள்ளார்.இதன் பலன் மற்றும் பரிகாரம் என்ன?

நான் எழுதுவது பொதுபலனைத்தான் எழுதுகிறேன். ஒரு ஜாதகத்துக்கு பலன் முடிவு செய்வது என்பது அந்த ஜாதகத்தை பல விதத்திலும் அலசி ஆராய்ந்த பிறகு தான் முடிவு சொல்ல வேண்டும். சிறு தகவல்களை வைத்து சொல்லமுடியாது. நீங்கள் கேட்டுவிட்டீர்கள் அதனால் சிறு தகவல் வைத்துக்கொண்டு பலன் சொல்லுகிறேன்.

தனசு லக்னம் தனுசு ராசி . ராசி அதிபன் குரு இரண்டாம் வீட்டில் இருக்கிறார். குரு இரண்டாம் வீட்டில் இருந்தால் என்ன பலன் என்று நான் பதிவில் இட்ட பலன்கள்

2 ஆம் வீட்டில் குரு இருந்தால் நல்ல பேசுவார்கள் இவர்களின் வாக்குக்கு சமுதாயத்தில் மதிப்பு இருக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கையிருப்பு பணம் எந்த நேரமும் வந்து கொண்டே இருக்கும். வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். இவருடன் சேரும் வியாபார நண்பர்களும் நல்ல முறையில் இருப்பார்கள்.

ஆனால் மகரத்தில் குரு நீசமாக இருக்கிறார். இவருக்கு சொன்ன பலன்களில் ஏதாவது ஒன்று பாதிக்கும். இரண்டாம் வீட்டை பார்க்கும் போது இரண்டாம் அதிபதி நிலை முக்கியமாக எடுத்துக்கொள்ளவேண்டும். இரண்டாம் வீட்டை பார்க்கும் கிரகத்தின் நிலையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.குரு மகரத்தில் இருந்தால் உடனே நீசம் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. குரு எந்த நட்சத்திரத்தில் செல்கிறார் என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். அப்பொழுது தான் பலன்கள் சரியாக வரும்.

நீங்கள் கேள்வியை கேட்கும்போது பரிகாரத்தை சொல்லுங்கள் என்று கேட்டுள்ளதால் கண்டிப்பாக இரண்டாம் வீடு பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

குருவுக்கு உரிய பொதுவான பரிகாரத்தை சொல்லுகிறேன்.

ஆலங்குடி செல்லலாம். வியாழன் தோறும் விரதம் இருந்து கொண்டைகடலை மாலை அணிவித்து குரு பகவானை வணங்கி வாருங்கள்.

sujindhiran

hai sir
7m veedu 6m veedu parivarthanai
ulladhu .laknam rishabam
2m veedu guru irukkirar
manaivi patri sollunga sar.

இப்படி கேள்வி கேட்பதற்க்கு பதிலாக என்னிடம் முழு ஜாதகத்தையும் கொடுங்கள் பதில் தருகிறேன்.

என்னுடைய email id astrorajeshsubbu@gmail.com


அன்புடன்

ராஜேஷ்சுப்பு.

குரு





குருவை பற்றி பார்க்கலாம் நவகிரங்களில் முழு சுபர் என்று அழைக்கப்படுபவர் குருபகவான் தான். இவர் ஒருவர் நல்ல நிலைமையில் இருந்தாலோ போதும் எவ்வளவு பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் நிலை கிடைக்கும். இவர் காரகம் வகிக்கும் செயல் குழந்தை பாக்கியம் திருமணம் நல்ல முறையில் பணவரவுகள் ஆகியவை ஆகும். இவரின் கருணை இருந்தால் தான் வீட்டில் மங்கல நிகழ்ச்சி நடைபெறும்.

1 ஆம் வீட்டில் குரு இருந்தால் நல்ல தோற்றம் இருக்கும். நல்ல ஆயுளுடன் இருப்பார்கள். சிறந்த மனைவி அமையும். இவருடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் நல்ல ஆன்மிகவாதிகளாக இருப்பார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வ புண்ணிய பாக்கியம் கிடைக்கும். இவர்களின் குழந்தைகள் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கையில் இவர் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தந்தை இவருக்கு உதவி புரிவார்.

2 ஆம் வீட்டில் குரு இருந்தால் நல்ல பேசுவார்கள் இவர்களின் வாக்குக்கு சமுதாயத்தில் மதிப்பு இருக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கையிருப்பு பணம் எந்த நேரமும் வந்து கொண்டே இருக்கும். வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். இவருடன் சேரும் வியாபார நண்பர்களும் நல்ல முறையில் இருப்பார்கள்.

3 ஆம் வீட்டில் குரு இருந்தால் பக்தியில் ஈடுபாடு இருக்கும் இளைய சகோதரர் நல்ல முன்னேற்றம் இருக்கும் அவர் மூலம் இவருக்கு நன்மை கிடைக்கும். எதிர்பாலினரிடம் மோகம் இருக்கும். அளவோடுதான் மகிழ்ச்சி இருக்கும்.

4 ஆம் வீட்டில் குரு இருந்தால் தாய் நல்ல நலத்துடன் இருப்பார். குழந்தை பாக்கியம் தாமதமாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல விஷயங்கள் நடக்காது. பகைவர்கள் உண்டாகுவார்கள். விவசாய சம்பந்தபட்ட குடும்பமாக இருந்தால் விவசாயம் மூலம் நல்ல வருமானம் இருக்கும்.

5 ஆம் வீட்டில் குரு இருந்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும். புத்திரக்களால் நல்ல நிலைக்கு வரலாம். நுண்ணிய அறிவு இருக்கும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். திடீர் பணவரவுகள் இருக்கும்.

6 ஆம் வீட்டில் குரு இருந்தால் பகைவரை வெற்றி கொள்ளலாம். சமுதாயத்தில் மதிப்பு இருக்காது. குழந்தை பாக்கியம் தடை ஏற்படுத்துவார். மங்கலகரமான நிகழ்ச்சிகள் நடைபெற தாமதம் ஆகும். உடம்பு பலம் இழந்து காணப்படும்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு.

Saturday, January 14, 2012



அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


அன்புடன்

ராஜேஷ்சுப்பு.

Tuesday, January 10, 2012

சோதிட அனுபவ தொடர் 4




பித்ரு தோஷத்திற்க்கு பரிகாரம் என்ன என்று கடந்த பதிவில் கேட்டு இருந்தேன்.

திரு வேலு அவர்கள் சொன்ன பரிகாரம்

காளஹாஸ்தி சென்று பரிகாரம் செய்யலாம். பூர்வ புண்ணியம் கெட்டு இருப்பதால் ராமேஸ்வரம் காசி மற்றும் கய சென்று வரலாம்.
குலதெய்வ வழிபாடு அமாவாசை அன்று செய்யலாம்.

என்று சொன்னார் .

இந்த 5 ஆம் வீட்டை தொட்டவுடன் பதிவு ஒரே நீண்டு கொண்டு செல்கிறது இருந்தாலும் பார்க்கலாம் பித்ரு தோஷத்தை பொருத்தவரை முற்பிறவி பற்றிதான் அதிகமாக பேச வேண்டியுள்ளது.

ஒருவர் முற்பிறவியில் கெடுதல் செய்தால் இப்பிறவியில் கண்டிப்பாக அனுபவித்து தீரவேண்டும். இந்த தோஷத்திற்க்கு நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம் இராமேஸ்வரத்தில் பித்ரு கடனை தீர்ப்பது தான். அல்லது ஒவ்வொரு அமாவாசையும் விரதம் இருப்பது. முன்னோர்களுக்கு தர்பனம் கொடுக்கலாம்.

தர்பனம் கொடுப்பதில் இரண்டு வகை உண்டு ஒன்று நம் முன்னோர்களுக்கு கொடுப்பது அடுத்தது காருணிய தர்பனம். நம்முடன் வாழ்ந்த உயிர்களுக்கு அதாவது உங்களுக்கு பாடம் சொல்லி தந்த ஆசிரியர்களுக்கு உங்களுடன் வாழ்ந்த அண்டை அயலார் மற்றும் உயிரினங்களுக்கு என அனைத்துக்கும் தர்பனம் தருவது தான் காருணிய தர்பனம் எனப்படும். அனைத்து உயிர்களுக்கும் கொடுப்படவேண்டும் என்பது எவ்வளவு உயர்ந்த செயல் என்று பாருங்கள்.

தர்பனம் செய்வதில் ஒரு சிக்கல் உள்ளது அது என்ன என்றால் ஒருவர் தர்பனம் செய்யவேண்டும் என்றால் அவருக்கு தாய் அல்லது தந்தை ஒருவர் உயிரோடு இருக்ககூடாது. இருவரும் உயிரோடு இருக்கும் பையனுக்கு என்ன செய்வது?

உங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.

நீங்கள் ஒரு ஜாதககத்ததை எடுத்தாலே போதும் உங்கள் வீட்டில் அனைவருக்கும் போதுமான பலன்களை சொல்லிவிடலாம். ஏன் உங்கள் பக்கத்து வீட்டில் இருப்பவருக்கும் சொல்லலாம்.

இந்த சமுதாயத்தில் வாழ்பவர்கள் ஒன்றோடு ஒன்றாக பிணைந்து இருப்பதாக ஜாதகங்கள் தெரிவிக்கின்றன. உங்களுடைய ஜாதகத்ததை எடுத்தாலே உங்கள் வீட்டில் உள்ளவர்களின் ஜாதகங்களில் உள்ள பலன்கள் தெரியவரும். ஏன் அடுத்த வீட்டை பற்றி கூட சொல்லாம். ஜாதகங்கள் தெரிவிப்பது அடுத்தவருக்கு தீமை செய்தால் கண்டிப்பாக பாவங்கள் ஏற்படும்.

ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அடுத்தவருக்கு பலன் சொல்லுவது எப்படி என்று எதிர்காலத்தில் பார்க்கலாம்.

இவருடைய ஜாதகத்தில் செவ்வாய் ஐந்தாம் வீட்டில் இருந்து எட்டாம் வீட்டை பார்க்கிறது.இரத்த காயத்தை வரவழைக்கும். இதனால் பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
ஐந்தாம் வீட்டின் பலன்களை இவருடைய ஜாதகத்தை வைத்து போதுமான அளவு பார்த்துவிட்டோம்.


ஆறாம் வீடு சத்ரு ஸ்தானம் என அழைக்கப்படுகிறது.ஆறாம் வீட்டு அதிபதி பத்தாம் வீட்டில் இருப்பதால் இவருடைய எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இவர் இருக்கவேண்டும். ஆறாம் வீட்டில் குரு நீசமாக இருக்கிறார் அதனால் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெற தடை ஏற்படுகிறது. பொதுவாக கெட்ட அல்லது மறைவு ஸ்தானத்தில் சுபகிரகங்கள் நிற்பது அவ்வளவு நல்லதல்ல. வேலையாட்களை வைத்து வேலை வாங்கலாம்.

களத்திர ஸ்தானம் என அழைக்கப்படுகிற 7 ஆம் வீட்டு பலன். 7 ஆம் வீட்டு அதிபதி 10 ஆம் வீட்டில் இருக்கிறார். 7 ஆம் வீட்டு அதிபதி சனி. சனியின் வீட்டில் சூரியன் சந்திரன் மற்றும் சுக்கிரன். 7 ஆம் வீட்டில் சூரியன் இருந்தாலே மணவாழ்க்கை பிரச்சினையை தரும் மூன்று கிரகம் ஒரு வீட்டில் இருக்கிறது அதுவும் ஏழாம் வீட்டில் இருக்கிறது இவருக்கு இதுவரை திருமணம் நடைபெறவில்லை. இப்பொழுது இவர் எனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறுகிறார்.

**********************************************************************************
திரு மணி அவர்கள் சில கேள்வி கேட்டார்

கேள்வி

தாங்கள் தொழில்முறை ஜோதிடரா? பல ஜாதகங்களில் ஜோதிட விதிகளை நாம் அப்ளை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. விதிகள், விதிவிலக்குகள் என்று எவற்றிற்கும் புலனாகாத ஜாதகங்களும் உண்டு.

உதாரணமாக குழந்தை பாக்கியத்திற்கு நாம் 5ம் வீட்டை கொண்டு கணக்கிடுகிறோம்.

சில ஜாதகங்களில் 5 ம் மிடம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஆனாலும் வேறு சில விதிகளால் குழந்தைபாக்கியம் இருக்கும், சில ஜாதகங்களில் இருவருக்கும் யாதொரு பாதிப்பும் இருக்காது. ஆனாலும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும்.

இது போன்ற சமயங்களில் நாம் தடுமாறி ஏழரை சனி, குருபெயர்ச்சி முதலியவற்றை வைத்து சமாளிக்க வேண்டிய நிலை.

உங்கள் அனுபவத்தில் இதை தவிர்க்க எதாவது வழிமுறைகளை கண்டிருக்கிறீர்களா? நண்பரே.

பதில்

நான் தொழில்முறை சோதிடர் தான்.

நீங்கள் சொல்லுவது போல் இருக்கலாம். நானும் இந்த மாதிரி தவறுகளை செய்கிறேன். அந்த நேரத்தில் நான் நினைப்பது நான் இன்னும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு எனது தேடுதல் வேட்டை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

அனைத்து விதிகளையும் போட்டு கணித்துபார்க்க எவ்வளவு நேரம் ஆகும் அது வரை சோதிடம் பார்க்க வந்தவர்கள் பொறுமையாக இருப்பார்களா? நீண்ட நேரத்தை செலவிட நாம் தான் தயாராக இருக்கிறோமா? அப்படியே பார்த்தாலும் அதற்கு தேவையான பணத்தை அவர்கள் கொடுப்பதற்க்கு தயாரா இருப்பார்களா ?
இந்த மாதிரியான பிரச்சினைகளும் உள்ளன.

ஆனால் சோதிடத்தில் நமது முன்னோர்கள் கணித்தது அனைத்தும் சரியாகவே இருக்கிறது. இன்று அமாவாசை பௌர்ணமி என்று கூறுகிறார்கள் அனைத்தும் சரியாக அவர்கள் சொல்லும் நேரத்தில் நடைபெறும் போது நமது பலன்கள் மாறுவது ஏன்?

நாம் செய்யும் கணக்கீடு தான் தவறுதலாக இருக்கிறது. ஏதோ ஒரு சில புத்தகங்களை மட்டும் படித்துக்கொண்டு சோதிடம் பார்க்க வந்துவிடுகிறோம்.
சோதிடத்தில் பல பிரிவுகள் உள்ளன அனைத்து பிரிவுகளையும் நாம் படிப்பது இயலாத காரியம் அல்லது மேலோட்டமாகவும் படித்து இருக்க வேண்டும்.அப்பொழுது நாம் கணிக்க முடியும்.

99 % பலன்கள் சரியாக சொல்லமுடியும். ஏன் 100% எழுத வேண்டியது தானே என்று நினைக்கலாம். அந்த 1% கடவுள் நம் மூலம் சொல்ல வைப்பார். சோதிட கலையில் தெய்வபலன் மிக முக்கியம் அது இல்லையேன்றால் சோதிடம் 100 % சொல்லுவது கஷ்டம் தான். நீங்கள் சோதிடம் பார்ப்பதில் புதியவர் என்றால் இந்த பதில் திருப்தி அளிக்காது. அனுபவத்தில் இதை நீங்கள் நன்கு உணரலாம்.

எங்கள் ஊர் பகுதியில் (எங்கள் ஊர் தஞ்சாவூர்). சில சோதிடர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் நீங்கள் இறந்தவரின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு காட்டி பலன் கூறுங்கள் என்று காண்பித்தால் அவர்கள் உடனே இவர் இறந்துவிட்டார் என்று ஜாதகத்தை திருப்பிகொடுத்துவிடுவார்கள். இதை நான் ஏன் கூறுகிறேன் என்று சொன்னால் தெய்வபலத்திற்க்கு ஒரு எடுத்துக்காட்டு இது எனது அனுபவ உண்மை.

நானும் இந்த முழுமையான தெய்வ பலனை பெற முயற்சி செய்கிறேன் இன்னும் கிடைக்கவில்லை.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு


Monday, January 9, 2012

சோதிட அனுபவ தொடர் 3



ஒரு நாள் முழுவதும் எத்தனை ஜாதகங்கள் பார்த்தேன் தெரியுமா ?

1474 ஜாதகங்களைப் பார்த்தேன்.என்ன இது இத்தனை ஜாதகங்கள் எடுத்து வெறும் ஐந்து ஜாதகங்கள் மட்டும் தான் நல்ல இருந்ததா என்று கேட்க தோன்றும். மீதி ஜாதகங்களில் உள்ள பெண்களுக்கு திருமணம் ஆகாதா என்று கேட்கலாம் ஆகும் ஆனால் திருமணத்திற்க்கு உரிய வயதில் திருமணம் ஆகாது. அப்படியே திருமணம் ஆனாலும் திருமண நடைபெற்ற பின் குழந்தை பிறக்க தாமதம் ஆகும்.

பொதுவாக பெண்களின் ஜாதகத்தில் 5 ஆம் வீடு 7 ஆம் வீடு 8 ஆம் வீடு சுத்தமாக இருந்தால் நல்லது. திருமணத்தை தடுத்து நிறுத்துவதில் 5 ஆம் வீடு முக்கிய பங்கு ஏற்கிறது. அந்த வீடு கெட்டாலும் திருமணத்தில் சிக்கல் தான்.

இப்படி எல்லாம் திருமணம் பார்த்து செய்வது என்றால் நீங்கள் 21 வயதில் இருந்து ஆரம்பித்தால் தான் திருமணம் சரியான வயதில் நடைபெறும் இல்லை நான் 30 வயதில் இந்த மாதிரி கண்டிஷன் போட்டு திருமணத்திற்க்கு பெண்ணே அல்லது மாப்பிள்ளையோ பார்ப்பேன் என்றால் இந்த ஜன்மத்தில் திருமணம் நடைபெறாது.அதை கவனத்தில் கொண்டு பார்க்க வேண்டும்.

இவருடைய ஜாதகத்தில் செவ்வாய்யும் ராகுவும் புத்திர தோஷத்தை ஏற்படுத்துகிறது. முதலில் நாம் செவ்வாய் எடுத்துக்கொள்வோம் செவ்வாய் ஐந்தாம் வீட்டில் இருந்தால் இவரிடம் ரொம்ப ஜாக்கிரத்தையாக பழக வேண்டும். வில்லங்க பேர்வழி. எடுத்தவுடனே கோபம் வரும். ராகு ஐந்தில் இருப்பதால் இவரும் கடுமையான புத்திரதோஷத்தை தருவார்.

ராகு ஐந்தில் நின்றதால் ஏற்படும் தோஷத்தைப்பற்றி பார்க்கலாம்?

20 வருடத்திற்க்கு முன்பு சோதிடர்களிடம் சென்றால் ராகு தோஷத்திற்க்கு அவர்கள் சொல்லும் காரணம் பாம்பை அடித்ததால் ஏற்பட்ட தோஷம் என்ற கூறுவார்கள். 20 வருடத்திற்க்கு முன்பு பாம்பை அடிக்காதவர்கள் ஒரு கிராமத்தில் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள். பாம்பை அடிக்கவில்லை என்றால் இவர்கள் உயிருடனே வாழ்வது சாத்தியமில்லை. பாம்பினால் இந்த தோஷம் ஏற்பட வழி குறைவுதான்.

ராகு ஐந்தில் நின்றால் கடுமையான பித்ரு தோஷத்தை ஏற்படுத்தும். பித்ரு தோஷத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவர்களில் வாழ்வு மிகவும் கடுமையாக பாதிக்கப்படும். எடுத்த காரியங்கள் அனைத்தும் தடைகளாக தான் இருக்கும்.வீட்டை விட்டு வெளியில் ஒரு கடைக்கு செல்லவேண்டும் என்றாலும் கூட தடைகள் ஏற்படும். இது எதனால் ஏற்படுகிறது என்றால் முன்ஜென்மத்தில் நாம் செய்த பாபங்களில்தான் ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள்.

அவர்கள் எப்படி வாழ்க்கையை எதிர்நோக்குவது ?

இதற்கு பரிகாரம் சொல்ல வேண்டும் என்றால் என்ன சொல்லுவீர்கள் ?


அன்புடன்

ராஜேஷ்சுப்பு


Saturday, January 7, 2012

சோதிட அனுபவ தொடர் 2



வணக்கம் சோதிட அனுபவம் தொடரில் ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டு பார்த்து வருகிறோம்.

சென்ற பிறவியைப் பற்றி எப்படி தெரிந்துகொள்வது?

சென்ற பிறவியில் பாவம் செய்திருக்கிறா என்று பார்க்கலாம் ஆனால் எந்த மாதிரி பிறப்பு எடுத்திருக்கறார் என்று பார்ப்பது மிக கடினம். ஒரு சிலர் மட்டும் கூறுவதிற்க்கு வாய்ப்பு இருக்கிறது சாதாரான சோதிடர்களால் முடியாத காரியம். ஜாதகம் என்பதே சென்ற பிறவியில் என்ன செய்து இப்பிறவியில் பிறப்பு எடுத்திருக்கிறார் என்று பார்க்கதானே.

பூர்வ புண்ணியஸ்தானம் என அழைக்கப்படுகிற 5 ஆம் வீட்டைக்கொண்டும். பாக்கிய ஸ்தானம் என அழைக்கப்படுகிற 9 ஆம் வீட்டைக்கொண்டும் அறியலாம். நாம் இப்பொழுது இந்த ஜாதகத்தில் பார்க்கபோவது 5 ஆம் வீடு. இந்த வீடு தனுசு வீடாக வருகிறது இதன் அதிபதி குரு. அவர் 6 ஆம் வீட்டில் போய் அமர்ந்திருக்கிறார் எப்படி என்றால் நீசமாக இருக்கிறார்.

5 ஆம் வீட்டு அதிபதி 6 ஆம் வீட்டில் இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். ஏதோ நல்ல திசையில் இருந்து புத்திரபாக்கியம் கிடைத்தாலும் இவர்களுக்கு எதிரி வேறு யாரும் இருக்கமுடியாது இவரின் பிள்ளைகள் தான் இவருக்கு எதிரி.

பூர்வ புண்ணிய வீடாக இருப்பதால் பெரியவர்களிடம் எதிரியாக இருப்பார்கள். அறிவு சம்பந்தப்பட்ட வீடு ஐந்தாம் வீடாக இருப்பதால் ஞாபகம் மறதி இவர்களிடம் இருக்கும். இது அனைத்தும் இவருடைய ஜாதகத்தில் இருக்கிறது. நடைமுறை வாழ்க்கையிலும் இவர் இப்படி தான் இருக்கிறார்.

ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் கிரகத்தைப் பற்றி பார்க்கலாம். இவருடைய ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் செவ்வாய் ராகு கூட இணைந்து அமைந்துள்ளது. பொதுவாக 5 ஆம் வீட்டில் ஒரு கிரகமும் இருக்ககூடாது. திருமண ஜாதக பொருத்தம் பார்க்கும் போது 5 ஆம் வீட்டில் நிலையை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெண்களின் கர்ப்ப பயை குறிக்கும் வீடு 5 ஆம் வீடு. 5 ஆம் வீடு சுத்தமாக இருக்க வேண்டும். திருமணம் நிகழம் போது வெறும் திருமண பொருத்தத்தை மட்டும் பார்க்க கூடாது ஜாதகத்தையும் பார்க்க வேண்டும் அப்பொழுது தான் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

இப்பொழுது எல்லாம் சோதிடர்களிடம் சென்றால் மாப்பிள்ளை மற்றும் பெண் எந்த நட்சத்திரம் என்று கேட்பார்கள் உடனே இத்தனை பொருத்தம் இருக்கிறது திருமணம் செய்யலாம் என்று சொல்லிவிடுவார்கள். அவ்வாறு பார்ப்பது தவறாகும்.

ஜாதகத்தை பார்க்க வேண்டும்.முழுமையாக ஆராய்ந்து பார்த்தால் தான் அனைத்து தகவலும் தெரியவரும். இப்பொழுது உள்ள ஜாதகங்களில் பலபேருடைய ஜாதகங்கள் 5 ஆம் வீடு கெட்டு உள்ளது. இப்பொழுது எல்லாம் இந்த துறையில் மருத்துவம் படித்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது தெருவிற்க்கு தெரு ஒரு மருத்துவமனையாவது இத்துறையில் இருக்கிறது. அப்படி என்றால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். 5 ஆம் வீடு கெட்டும் குழந்தை பாக்கியம் இருக்கும். அது வேறு கிரகங்களை வைத்து இருக்கும். என்ன ஒரு குறையென்றால் தாமதமாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இந்த மாதிரி ஒரு வாரத்திற்க்கு முன்பு ஒரு ஜாதகர் என்னிடம் வந்து தன் மகனுக்கு ஒரு வரன் பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு பிரபல Matrimony யின் ID யை என்னிடம் கொடுத்தார். அதில் எந்த ஜாதகம் நல்ல இருக்கு என்று பார்த்து அவரிடம் நான் அந்த ஜாதகியின் விபரங்களை எடுத்துக்கொடுக்க வேண்டும். நான் அதிகாலையில் இருந்து கணினியின் முன்பு உட்கார்ந்து பெண்ணின் ஜாதகத்தை பார்த்துதேன்.ஒரு நாள் முழுவதும் அவருக்காக கணினியின் முன்பு உட்கார்ந்து தேடினேன். பையனின் தகப்பனார் அடுத்த நாள் காலையில் என்னை பார்க்க வந்தார். நான் அவரிடம் 5 பெண்ணின் ஜாதகங்களை மட்டும் கொடுத்தேன்.



ஒரு நாள் முழுவதும் எத்தனை ஜாதகங்கள் பார்த்தேன் தெரியுமா ?

அடுத்த பதிவு வரை காத்திருங்கள் ...

நாம் பார்த்துக்கொண்டு இருப்பதை தவிர்த்து எங்கையோ பாடம் செல்கிறது என்று நினைக்க வேண்டாம். பாடத்துடன் சம்பந்தபட்ட விஷயம் அதனால் தான்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு.

சனி பெயர்ச்சி



வணக்கம் அனைத்து தளத்திலும் சனிபெயர்ச்சி பலன்கள் வந்தன நாமும் பலன்கள் எழுதகூடாது என்று முடிவெடுத்து பரிகாரம் கூறலாம் என்று நினைத்தேன்.

சனிபெயர்ச்சி பார்த்து அனைத்து பேரும் ஏதாவது ஒரு விதத்தில் பயந்தார்கள். இந்த ராசிக்கு நல்லது அல்ல கெட்டது நடக்கும் என்று ஒவ்வொரு நாளிதழிலும் தளத்திலும் பயமுறுத்திருப்பார்கள் அதனைப் பற்றி எல்லாம் கவலை படாதீர்கள் இறைவனிடம் சரண் அடைந்து மக்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கு உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் நல்லது செய்தால் சனி பகவான் கெடுதல் செய்யமாட்டார். நல்லதே தான் செய்வார்.

எவரிடம் சரண் அடையலாம் ?

இந்த உலகில் எட்டு திசையில் இருந்து நன்மை தீமை என்று அனைத்திற்க்கும் காரணமாக இருப்பவர்கள் அஷ்டதிக்பாலகர்கள். இவர்கள் இந்த பூலோகத்தில் வந்து வணங்கிய ஸ்தலம் திருவண்ணாமலை அருணாசல ஈஸ்வர். அஷ்டதிக்பாலகர்களே இவரை வணங்கினால் இவர் யார் என்று உங்களுக்கு கூற தேவையில்லை.

அதனால் உங்களுக்கு எந்த சனி பிடித்திருந்தாலும் அல்லது விட்டுருந்தாலும் திருவண்ணாமலை வந்து இவரிடம் சரண் அடையுங்கள். நீங்கள் நினைத்தது நடக்கும் இது அனுபவ உண்மை. எவ்வளவு பிரச்சனைகள் உடன் வந்து என்னை சந்திப்பவர்களுக்கு நான் கூறும் பரிகாரம் திருவண்ணாமலை கிரிவலம்.

சனிபெயர்ச்சி முடிந்து முதல் பௌர்ணமி வரும் 8-1-2012 அன்று வருகிறது கிரிவலம் நேரம் 8-1-2012 பகல் 1:19 ஆரம்பித்து 9-1-2012 பகல் 1:41 க்கு முடிகிறது. கிரிவலம் ஞாயிறு அன்று நடைபெறுகிறது. இந்த 2012 ஆங்கில வருடம் முதல் கிரிவலமும் இதுதான் அதனால் அனைத்து பேரும் கலந்துகொள்வோம். அண்ணாமலை அருளை பெறுவோம்.

இன்னும் சிறப்பு என்னவென்றால் ஞாயிறு அன்று ஆருத்ரா தரிசனம் இருக்கிறது. ருத்திரனின் உண்மையான இயல்பு தீ அல்லது நெருப்பு. அக்னி ஸ்தலம் ஆன அண்ணாமலையில் இருக்க எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதனால் திருவண்ணாமலை வாருங்கள் புண்ணியத்தை கர்ம கணக்கில் கூட்டுங்கள்.

ஓம் நமசிவாய ஓம்


அன்புடன்

ராஜேஷ்சுப்பு.

Wednesday, January 4, 2012

சோதிட அனுபவ தொடர் 1



திரு. மணி அவர்கள் எனக்கு பின்னோட்டம் இட்டார் உங்கள் சோதிட அனுபவத்தை எழுதுங்கள் என்று அவர்களின் சோதிட ஆர்வத்தை நிறைவேற்றவும் அத்துடன் நீங்களும் தெரிந்துகொள்ளலாம் என்று ஒரு ஜாதகத்தை தருகிறேன்.

என்னிடம் சில தினங்களுக்கு முன்பு வந்த ஜாதகத்தை தருகிறேன்.


பிறந்த தேதி: 03-03-1973
பிறந்த நேரம் 5 :30 மாலை
பிறந்த ஊர்: விழுப்புரம்.


வாழ்க்கையை வெறுத்து இருப்பவரின் ஜாதகம் கிரகங்கள் இவரின் வாழ்க்கையில் விளையாடிய தாண்டவத்தை பாருங்கள்.

இவரின் ஜாதகம் கீழே



லக்னம் சிம்மம். சிங்கம் போன்ற சிம்ம லக்கினத்தை பெற்றவர் எதற்கும் அஞ்சா நெஞ்சம் வீரமும் இவரிடம் இருக்கிறது. எந்த மாதிரியான பிரச்சினை என்றாலும் யாரையும் பொருட்படுத்தாமல் செயலில் இறங்கி வெற்றியை காண்பவர். லக்கினாதிபதி களத்திரஸ்தானம் ஆன ஏழாம் வீட்டில் அமர்ந்துள்ளார்.

லக்கினாதிபதி சூரியன் இவர் சனியின் வீடாகியா கும்பத்தில் அமர்ந்திருக்கிறார். லக்கினாதிபதி ஏழாம் வீட்டில் அமர்ந்தால் மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ்பவராக இருப்பார்கள் ஆனால் லக்கினாதிபதி சூரியன் 7 ஆம் வீட்டில் இருப்பதால் இவருக்கு திருமணமே நடைபெறுவில்லை.

லக்கினாதிபதி சூரியன் இவர் சனியின் வீடாகியா கும்பத்தில் அமர்ந்திருக்கிறார். லக்கினாதிபதி ஏழாம் வீட்டில் அமர்ந்தால் மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ்பவராக இருப்பார்கள் ஆனால் லக்கினாதிபதி சூரியன் 7 ஆம் வீட்டில் இருப்பதால் இவருக்கு திருமணமே நடைபெறுவில்லை.

பொதுவாக 7 ஆம் வீட்டில் லக்கினாதிபதி இருந்தால் வாழ்க்கையில் பிற்பகுதியில் ஆசாபாசங்களில் விடுபட்டு சன்யாசி வாழ்க்கை நேரிடும் இது விதி. எத்தனை நாள் தான் மனைவியின சம்பாத்தில் வாழ்வது. மனைவி பணம் கொடுத்து விட்டு கணவனை உண்டு இல்லை என்று வார்த்தையாலே அபிஷேகம் செய்து விடுவார்கள். இந்த வாழ்க்கையை வேண்டாம் என்று சன்யாசியாகவே போய்விட வேண்டும் என்று சொல்வார்கள்.

என்னிடமே இந்த மாதிரி நபர்கள் சொல்லியுள்ளார்கள். சில பேர் என்னுடைய பிள்ளைகளுக்காகவே வாழ்கிறேன் என்று சொல்லியுள்ளார்கள். ஆனால் இந்த ஜாதகருக்கு திருமணமே ஆகவில்லை.

சூரியன் ஏழில் இருந்து லக்கினத்தை பார்ப்பதால் ஒன்று தலை வழுக்கை ஆக வேண்டும் அல்லது தலையில் அடிபடும். இவருக்கு தலையில் அடிப்பட்டு தலை மயிர் வெளியில் வராதிருக்க மொட்டை அடித்துக்கொண்டுள்ளார்.

பொதுவாக லக்கினாதிபதி ஏழில் அமர்ந்தாள் ஏழாம் பார்வையாக லக்கினத்தை பார்த்து நன்றாக வைத்துக்கொள்வார் என்று பொருள். ஆனால் இவரின் ஜாதகத்தில் சூரியன் ஏழில் சனியின் வீட்டில் அமர்ந்ததால் தலையில் அடிப்பட்டது. இவருக்கு எப்பொழுது அடிப்பட்டது என்று பின்பு பார்க்கலாம்.

அடுத்தது குடும்ப ஸ்தானம் என்று சொல்லக்கூடிய இரண்டாம் வீடு. அதன் அதிபதி புதன் இவர் மறைவிடம் என்று சொல்லக்கூடிய 8 ஆம் வீட்டில் மாந்தியுடன் இருக்கிறார். புதன் கெட்ட கிரகத்துடன் சேர்ந்தால் புதன் கெட்டுவிடும். அதுவும் மறைவு ஸ்தானத்தில்.

பொதுவாகவே இரண்டாம் வீடு கெட்டால் குடும்பம் அமையாது. இவருக்கும் திருமணமும் ஆகவில்லை வீட்டிலும் இல்லை. தனியாக வாழ்ந்து வந்தார் இப்பொழுது இளைய சகோதரிடம் இருக்கிறார்.

இரண்டாம் வீட்டிற்க்கு குருவின் 9 ஆம் பார்வை விழுகிறது. அதனால் ஒரளவு பொருளாதாரத்தில் நன்றாக இருக்கிறது. இரண்டாம் வீட்டு அதிபதி 8 ஆம் வீட்டில் மறைந்ததால் அதிகம் பேசுவதும் கிடையாது அப்படியே பேசினாலும் வார்த்தை தடிமனதாகத்தான் வருகிறது. பொதுவாக 2 ஆம் வீட்டு அதிபதி 8 ஆம் வீட்டில் இருந்தால் அவர்கள் பேசுவது இறப்பு சம்பந்தமாகதான் இருக்கும்.

ஞானிகளின் ஜாதகங்களில் இரண்டாம் வீடு 8 ஆம் வீட்டுடன் சம்பந்தம் பெற்று இருக்கும் ஒருவன் இறப்பை பற்றி சிந்தித்தால் மட்டுமே ஞானியாக முடியும். இறப்பை பற்றி பேசாத ஞானிகள் உண்டா.

சில பேருக்கு இரண்டாம் வீடு கெட்டும் குடும்ப வாழ்க்கை அமையும் அது எப்படி ?

சில பேர் ஜாதங்கள் அப்படி இருக்கும். ஆனால் அவர்கள் குடும்பத்திற்க்கு வெளியில் எங்கே ஆவது வேலை செய்வார்கள் அல்லது வெளிநாடுகளில் இருப்பார்கள் வேடந்தாங்களுக்கு பறவைகளில் வருவது போல் குடும்பத்திற்க்கு வந்து செல்வார்கள்.

சில பேர் திருமணம் முடிந்து 10 அல்லது 15 நாட்கள் மட்டும் தான் மனைவியுடன் இருப்பார்கள். வேலைக்காக வெளிநாடு சென்றுவிடுவார்கள். என்னடா இந்த மாதிரி எல்லாம் இருக்க என்று நினைக்க தோன்றும் இந்தமாதிரி நபர்கள் நிறைய பேர் உண்டு.

ஒருவருக்கு திருமணம் நடைபெற வைப்பது ஏழாம் வீடு. குழந்தை பாக்கியத்தை தருவது ஐந்தாம் வீடு ஆனால் இவை இரண்டு வீடுகளும் நல்ல பலன் தர வேண்டும் என்றால் இரண்டாம் வீடு நன்றாக இருக்க வேண்டும் பொதுவாக இரண்டாம் வீடு கெட்டால் திருமண வாழ்க்கை குழந்தை பாக்கியம் தடைபடுகிறது.

இவருக்கு இரண்டாம் வீட்டு காரத்துவும் நடக்க வேண்டும் என்றால் குரு பார்வையால் தான் முடியும். இரண்டாம் வீட்டிற்க்கு குருவின் பார்வை இருக்கிறது நல்லவன் ஒருவன் இருந்தாலே போதும் அனைத்திலும் வெற்றி கண்டுவிடலாம். ஆனால் இவருடைய துரதிஷ்டம் குரு மகரத்தில் நீசமாக அமர்ந்து உள்ளது. நீசம் ஆகி அமர்ந்ததால் சரியான காலத்தில் நடைபெறவேண்டியது காலம் தாழ்ந்துவிட்டது இதுவரை நடைபெறவில்லை.

குரு இவருக்கு 6 ஆம் வீட்டில் அமர்ந்துள்ளார். 6 ஆம் வீடு என்பது மிக மோசமான வீடு அந்த வீட்டில் சுபகிரகம் அமர்ந்தாள் மிக மோசம் குரு இவருக்கு 6 ஆம் வீட்டில் அமர்ந்துள்ளார்.

பொதுவாக கெட்ட கிரகங்கள் ஒருவனுக்கு தீங்கு செய்கிறது என்றால் போனால் போகட்டும் சாப்பிட சாப்பாடுனாலும் கிடைக்கும் ஆனால் குரு கெடுதல் செய்ய ஆரம்பித்தால் சாப்பிட சாப்பாடு கூட கிடைக்காது. அதுதான் குருவின் தன்மை.

அடுத்தது மூன்றாம் வீடு மூன்றாம் வீடு துலாம் ராசியாக இருக்கிறது அதன் அதிபதி சுக்கிரன் மூன்றாம் வீட்டு அதிபதி 7 ஆம் வீட்டில் இருக்கிறார்.

ஒரு இளைய சகோதரர் ஒருவர் நல்ல நிலைமையில் இருக்கிறார். இவர் சுயதொழில் செய்வதை விட ஏதாவது ஒரு வேலையில் சேருவது நல்லது. இவர் ஒரு பிரவேட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். மூன்றாம் வீடு தைரிய ஸ்தானம் ஆகியால் எதிலும் தைரியமாக செயல்பட்டு வந்தார் மூன்றாம் வீட்டு அதிபதி சுக்கிரன் சில நேரங்களில் பெரிய ஆபத்துகளில் சிக்க நேரிடும். அப்படி தான் இவரும் ஒரு சிக்கலில் மாட்டினார்.இளைய சகோதரிடம் சுமுகமான உறவு உண்டு.

அடுத்தது நான்காம் வீடு விருட்சக ராசியாக அமைகிறது அதன் அதிபதி செவ்வாய். செவ்வாய் ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். நான்காம் வீடு தாய் பற்றிய வீடாக இருப்பதால் இவரின் தாயார் நலமாக உள்ளார். செவ்வாய் ஐந்தாம் வீட்டில் இருப்பதால் தாயாரின் தம்பி ஒருவர் நல்ல செல்வாக்காக இருக்கிறார். நான்காம் வீடு வாகனங்களை குறிப்பதால் வாகன யோகம் இருக்கிறது.

செவ்வாய் ஐந்தாம் வீட்டில் ராகுகூட இருக்கிறது. செவ்வாய் பாதிக்கபட்டு இருக்கிறது சொத்துகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சொந்த வீடு இடிக்கப்பட்டு வாடகை வீட்டில் இருக்கிறார். பொதுவாக நான்காம் வீடு செவ்வாய் வந்தால் நல்ல வீடு அமையும். ஆனால் செவ்வாய் பாதிக்கப்பட்டதால் இவருக்கு நிலையான வீடு அமையவில்லை.

ஜாதகம் என்பதே சென்ற பிறவியில் என்ன தவறு செய்து இந்த பிறவியை எடுத்து இருக்கிறது என்று பார்க்கதானே. சென்ற பிறவியில் நல்லது செய்தால் இந்த பிறவியில் நல்ல யோகத்துடன் பிறக்கலாம். சென்ற பிறவியில் தீமை அதிகம் இருந்தால் அவயோகத்துடன் பிறக்கும்.

சென்ற பிறவியை பற்றி எப்படி தெரிந்துகொள்வது?

அடுத்த பதிவில் பார்க்கலாம்.


அன்புடன்

ராஜேஷ்சுப்பு.

புதன் கடைசி பகுதி



புதனைப்பற்றி பார்த்துவருகிறோம். அந்த வரிசையில் புதன் குறிக்கும் சாதி வைசியர். என்னடா கிரகங்களிலும் சாதியா என்று கேட்கலாம். ஆமாம் கிரகங்களிலும் அந்த அந்த கிரகம் ஒவ்வொரு சாதியை குறிக்கிறது. இது எதனால் என்றால் பிரசன்ன சாதகம் பார்க்கும் போது இது பயன்படும். ஒரு பொருள் திருடு போகும் போது களவு போன பொருளை திருடியவன் இந்த சாதியை சேர்ந்தவன் என்று சொல்லுவதற்க்கு பயன்படும்.

8 ஆம் வீட்டில் புதன் இருந்தால் கல்வியில் தடை ஏற்படும். மாமன் இருக்கமாட்டார் அப்படியே மாமன் இருந்தாலும் அவர் மூலம் எந்த பயனும் இருக்காது. புதன் நல்ல முறையில் இருந்தால் உயில் மூலம் சொத்து வரும்.

9 ஆம் வீட்டில் உள்ள புதன் இருந்தால் செல்வம் நன்றாக இருக்கும். குழந்தை பாக்கியம் இருக்கும். நன்றாக கவர்ந்து இழுக்கும் பேச்சு திறன் இருக்கும். நன்றாக உயர்கல்வி படித்திருப்பார்கள். உயர்கல்வியில் சிறந்த விளங்க உதவி செய்வார்.

10 ஆம் வீட்டில் புதன் இருந்தால் அரசாங்க வேலையில் இருப்பார்கள். சொத்துகள் சேரும் ஏஜென்சி தொழில் லாபம் தரும். ஆடம்பர பொருட்கள் வீடு தேடி வரும். தொழில்கள் நிறைய செய்யவைப்பார். மாமன் மூலம் தொழில் அமையும். அறிவுக்கு முக்கியம் கொடுத்து செய்யும் தொழிலில் செய்வார்.

11 ஆம் வீட்டில் புதன் இருந்தால் பெரும் பணக்காரராக இருப்பார்கள் பெண்கள் மூலம் வசதி வாய்ப்பு வரும். மூத்த சகோரர் மூலம் வருமானம் வரும். நல்ல புத்திசாலி உள்ள நண்பர்கள் கிடைப்பார்கள்.

12 ஆம் வீட்டில் புதன் இருந்தால் படிப்பறிவு இல்லாமல் போகும். வாழ்க்கையில் கஷ்டபடுவார்கள் தோல்வியாதி உள்ள பெண்ணிடம் தொடர்பு இருக்கும். பெண்கள் மூலம் விரையம் ஏற்படும். நல்ல துப்பறியும் திறன் இருக்கும்.

மேலை சொன்ன பலன்கள் பொதுவானவைதான். புதன் நல்ல முறையில் இருக்கும் போது இந்த பலன்கள் நடைபெறலாம். புதன் கெட்டால் இதற்க்கு நேரமாறான பலன்கள் நடைபெறும்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு.



Tuesday, January 3, 2012

புதன் தொடர்ச்சி 1





கடந்த பதிவில் புதனைப் பற்றி பார்த்தோம். இப்பதிவிலும் புதனைப் பற்றி பார்க்கலாம். புதன் மிதுனம் ராசிக்கும் கன்னி ராசிக்கும் அதிபதி. புதன் ஒரு இரட்டை கிரகம் இந்த ராசியில் பிறந்தவர்களைப் பற்றி பார்த்தீர்கள் ஆனால் இவர்கள் உள் ஒன்று வைத்து வெளியில் ஒரு மாதிரி பேசுவார்கள். இரட்டை வேஷம் மிகுதியாக இருக்கும்.

நீங்கள் இவர்களிடம் போய் எதனை கேட்டாலும் உங்களிடம் ஒன்று பேசிவிட்டு உங்கள் நண்பர்களிடம் உங்களைப் பற்றி கேட்டு தெரிந்துக்கொள்வார்கள். புதனின் இயல்பு இது. மிதுனம் கன்னி ராசிகாரர்கள் காமத்தில் மிகுதியான ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். அதனால் இவர்களுக்கு குழந்தைகள் பிறப்பது தாமதமாகிறது.

முறையற்ற தொடர்பு கர்மத்தை விலை கொடுத்து வாங்குவது போல் தான் இதனை இவர்கள் தவிர்க்க வேண்டும். நான் பார்த்த இந்த ராசிகாரர்களின் ஜாதகங்களில் மிகுதியான நபர்களின் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நடைபெறுவது தாமதமாகிறது.

4 ஆம் வீட்டில் புதன் இருந்தால் நல்ல கல்வியாற்றலைத் தருவார். தாய்வழி மாமன் வகையில் உதவி கிடைக்கும். வாகனம் வகையில் நல்ல வருமானம் வரும். ஒரு வாகனம் வாங்கினால் உடனே அடுத்த வாகனம் வாங்குவார். நான்காம் வீடு வீட்டை குறிப்பதால் வீடு வாங்கும் யோகம் புதனால் கிடைக்கும். ஒரு வீட்டை வாங்க ஏற்பாடு செய்தால் இரண்டு வீடு வாங்குவார்கள். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

5 ஆம் வீட்டில் புதன் இருந்தால் நல்ல கவிதை எழுதுவார். நல்ல வேடிக்கையாக பேசுவார். அரசாங்கம் மூலம் நல்ல பதவிகள் வரும். பெரியவர்கள் மூலம் நல்ல பதவி, மரியாதை கிடைக்கும். நல்ல தந்திர வேலைகள் தெரியும்.

6 ஆம் வீட்டில் புதன் இருந்தால் மாமன் வழியில் ஒருவர் மிகபிரபலமாக இருப்பர். மாமனின் உதவி கிடைக்கும். ஆறாம் வீடு சத்ரு ஸ்தானம் என்று அழைக்கப்படுவதால் விரோதிகள் வராமல் இருக்க வைப்பார். ஆனால் சச்சரவு இருக்கும். பேச்சு சில நேரங்களில் கலவரத்தை உண்டாக்குவது போல் இருக்கும்.

7 ஆம் வீட்டில் புதன் இருந்தால் நல்ல அழகான மனைவி அமையும். அவர் மூலம் வருமானம் வரும். வியாபாரத்தில் நல்ல நட்பு கிடைக்கும். கலைகளில் ஆர்வம் இருக்கும். நல்ல ஆயுள் கிடைக்கும். மாமன் மகள் கூட மனைவியாக வர வாய்ப்பு இருக்கிறது. அல்லது திருமண விஷயங்களில் மாமன் உதவி கொண்டு திருமணம் வரும். மாமனே பெண் பார்க்கலாம்.

மேலை சொன்ன அனைத்தும் பொதுபலன்கள் தான் எனக்கு மிதுன ராசி கன்னி ராசி நீங்கள் சொன்னது போல் நடக்கவில்லை என்று சொல்லாதீர்கள் ஜாதகங்களில் உள்ள கிரக நிலைகளை பொருத்து அமையும்.

புதனைப்பற்றிய பல தகவல்களுடன் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு.

Monday, January 2, 2012

புதன்



புதனை பற்றிய பாடம் இவர் தான் சோதிட சாஸ்திரத்திற்க்கு காரகம் வகிப்பவர். இவர்தான் புத்திகாரகன் என்று அழைக்கப்படுகிறார்.சோதிட சாஸ்திரத்திற்க்கு நினைவாற்றல் மிக முக்கியம் இல்லை என்றால் சோதிடம் படிக்க இயலாது.

அனைத்தும் நினைவில் இருந்தால் தான் ஜாதகம் பார்க்கும் போது அனைத்து பலன்களும் வந்து அருவியாக கொட்டும். இல்லை என்றால் வாடிக்கையாளாரிடம் பல்பு வாங்கவேண்டியது தான்.

புதன் வேறு எதற்கு எல்லாம் காரகன் ஆகிறார் என்று பார்க்கலாம். நல்ல புத்தி கூர்மைக்கு அதிபதி இவர் தான். அதனால் தான் இவரை கல்விகாரகன் என்று அழைக்கிறோம்.

ஜாதகத்தில் நல்ல முறையில் இருந்தால் தான் படிக்க முடியும். சில பேருக்கு புதன் நல்ல அமையும் சிறந்த அறிவாளியாக இருப்பார்கள். ஜாதகத்தில் நல்ல முறையில் இருந்தால் தான் படிக்க முடியும். சில பேருக்கு புதன் நல்ல அமையும் சிறந்த அறிவாளியாக இருப்பார்கள்.

வியாபாரத்திற்க்கும் இவர் தான் காரகம் வகிக்கிறார். சிறந்த முறையில் ஒருவர் வியாபாரம் செய்வதற்க்கு புதன் தான் காரணம். அனைத்து தொடர்புகள் இருந்தால் தான் ஒருவர் வியாபாரத்தில் கொடிகட்டி முடியும். புதன் நல்ல முறையில் இருக்கும் ஒருவர் அனைத்து தொடர்புகளும் கிடைக்கும்.

நல்ல பேச்சுக்கும் இவர் தான் காரகம் வகிப்பவர். புதன் நல்ல நிலையில் இருக்கும் போது பார்த்தால் திட்டமிடுதல் அனைத்து பேருக்கும் சிறந்த முறையில் நன்மை பயக்கும் விதத்தில் இருக்கும். நல்ல வழியில் திட்டமிடுதல் புதன் நல்ல நிலையில் இருக்கும் போது இந்த மாதிரி நடக்கும். உடலில் நல்ல தோல் நிலைக்கும் இவர் தான் காரகம் வகிக்கிறார்.

புதன் கெட்டால் என்ன நடக்கும்.

புத்தி கெட்டுவிடும் படிப்பது எதுவும் நினைவில் இருக்காது இரண்டாம் வீட்டில் கெட்டால் பேச்சு ஒழுங்காக வராது திக்கி திக்கி பேசுவார்கள் அல்லது பேச்சு சுத்தமாக வராது. அது புதன் உடன் சேரும் கிரகத்தைப் பொறுத்தது.

புதன் கெட்டால் திட்டமிடுதல் அனைத்தும் வில்லங்கமாகதான் இருக்கும். புதனுடன் சேரும் கெட்ட கிரகங்களை பொருத்து வில்லங்கம் அமையும். ஞாபகம் மறதி ஏற்படும். தொழுநோய் தாக்கும்

இப்பொழுது புதன் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.

1 ஆம் வீட்டில் புதன் இருந்தால் அதாவது லக்கினத்தில் இருந்தால் நல்ல புத்தி உடன் இருப்பார்கள் நல்ல பேச்சு இருக்கும் பேச்சில் இனிமை இருக்கும். நல்ல உலக விஷயங்களில் சிறந்த அறிவு இருக்கும். நல்ல சுறுசுறுப்பாகவும் நல்ல தோற்றப்பொழிவுடன் இருப்பார்கள். லக்கினத்தில் இருந்து ஏழாம் வீட்டைப் பார்ப்பதால் மனைவியுடன் பிடிப்புடன் இருப்பார்கள்.

2 ஆம் வீட்டில் புதன் இருந்தால் பேச்சு நன்றாக இருக்கும் இவரின் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். தந்தையிடம் இவருக்கு மதிப்பு இருக்கும் குடும்பம் சிறந்து விளங்கும். செல்வ வளம் நன்றாக இருக்கும்.

3 ஆம் வீட்டில் புதன் இருந்தால் இளைய சகோதர சகோதரிகள் நிறைய பேர் இருப்பார்கள். அவர்களில் இரட்டை பிறப்பு உள்ளவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு. நல்ல ஆயுள் இருக்கும். வியாபார நுட்பம் ஏற்படும்.

புதனைப்பற்றிய பல தகவல்களுடன் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு