ஒன்பதாவது வீட்டின் பலன் பிதுருக்கள் தகப்பனார் உயர்கல்வி முன்பின் தெரியாதவர்கள், தெய்வதரிசனம் போன ஜென்மத்து அதிர்ஷ்டம்,ஒருவர் செய்யும் தர்மம், நீண்ட தூர பயணம் அதாவது வெளிநாடு ஆகியவற்றை பற்றி தெரிவிப்பது இந்த வீடுதான்.
ஒன்பதாவது வீட்டுக்கிரகம் லக்கினத்தில் இருந்தால் அதாவது முதல் வீட்டில் இருந்தால் பெரியவர்களிடம் பிதா, குரு, தெய்வம் ஆகியவற்றுகளிடம் பிரியத்தை கொண்டவர்களாகவும் தான தர்மங்கள் செய்வர்களாகவும் இருப்பார்கள். பிதுர் சொத்துக்கள் கிடைக்கும்.
ஒன்பதாவது வீட்டு அதிபதி 2 ம் வீட்டில் இருந்தால் செல்வாக்குடன் முன்னோர்கள் சொத்துக்களை பெற்றவராகவும் இருப்பார்கள். அயல்நாட்டு மூலம் பணவரவு இருக்கும்.
ஒன்பதாவது வீட்டு அதிபதி 3 ம் வீட்டில் இருந்தால் இளைய சகோதர சகோதரிகளின் ஆதரவு இருக்கும். பிதுர் தோஷம் பெற்றவனாக இருப்பான்.
ஒன்பதாவது வீட்டு அதிபதி 4 ம் வீட்டில் இருந்தால் தாயின் ஆதரவு இருக்கும். வண்டி வாகனம் சொத்துக்கள் கிடைக்கும்.
ஒன்பதாவது வீட்டு அதிபதி 5 ம் வீட்டில் இருந்தால் புத்திரர்கள் சகல பாக்கியத்துடன் இருப்பார்கள் அரசாங்கத்தில் பெரியபதவி கிடைக்கும. தெய்வீக வழிபாடுகள் நிறைந்து காணப்படும்.
ஒன்பதாவது வீட்டு அதிபதி 6 ம் வீட்டில் இருந்தால் வெளிநாட்டு பயணம் கிட்டும். தந்தையின் உடல்நிலை பாதிக்கும் . முன்னோர்களின் சொத்துக்கள் கடன்களிலால் அழியும்.
ஒன்பதாவது வீட்டு அதிபதி 7 ம் வீட்டில் இருந்தால் நல்ல தெய்வபக்தியுள்ள பெண்கிடைக்கும் அந்நிய பெண் கிடைக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பு வரும். தந்தையின் சொத்துக்களால் பயன் பெறுவார்கள்.
ஒன்பதாவது வீட்டு அதிபதி 8 ம் வீட்டில் இருந்தால் தந்தையாரின் உடல் நிலை பாதிக்ககூடும். தந்தையார் இறந்து போக வாய்ப்பு உண்டு. புத்திர தோஷம் ஏற்படும்.
ஒன்பதாவது வீட்டு அதிபதி 9 ம் வீட்டில் இருந்தால் தகப்பனார் நீண்ட ஆயுள் உடன் இருப்பார். தகப்பனாரின் சொத்துகள் கிடைக்கும். தான தர்மங்கள் குடும்பத்தில் நிறைந்து விளங்கும்.
ஒன்பதாவது வீட்டு அதிபதி 10 ம் வீட்டில் இருந்தால் அரசாங்கத்தில் உயர் பதவியில் இருப்பார். தந்தையாரின் சொத்துக்கள் விருத்தி ஆகும். பெரியவர்களிடத்தில் மரியாதையாக இருப்பார்கள்.
ஒன்பதாவது வீட்டு அதிபதி 11 ம் வீட்டில் இருந்தால் தெய்வகாரியங்கள் வீட்டில் நடைபெறும். தந்தையால் லாபம் இருக்கும் அயல்நாட்டு தொடர்பு மூலம் வருமானம் கிடைக்கும்.
ஒன்பதாவது வீட்டு அதிபதி 12 ம் வீட்டில் இருந்தால் தந்தையாருக்கு கெடுதல் உண்டாகும். வெளிநாட்டு பயணம் கிடைக்கும். தந்தையாரின் சொத்துகள் நிலைக்காது.
ஒன்பதாவது வீட்டில் பாவக்கிரகங்கள் இருந்தால் பித்ரு தோஷம் ஏற்படும்.
பரிகாரம்
இராமேஸ்வரத்தில் திலா ஹோமம் செய்ய வேண்டும். மாத அமாவாசை விரதம் இருக்க வேண்டும். அமாவாசை அன்று பசு மாட்டிற்க்கு அகத்திகீரை கொடுக்கவேண்டும். வாழ்வில் ஒருமுறையாவது இராமேஸ்வரம், காசி சென்றுவரவேண்டும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு