வணக்கம்!
நீண்டநாள்களுக்கு பிறகு ஜாதககதம்பத்தில் பதிவை தருகிறேன். குரு பூர்ணிமா வாழ்த்தை தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. பலர் இன்று குரு பூர்ணிமாவை தங்களின் குருவிற்க்கு நன்றியை செலுத்தும் விதமாக நடந்துக்கொண்டு இருப்பார்கள் பலர் இந்த நாளை மறந்து போய் இருக்கலாம். ஒவ்வொருவருடமும் நாம் குரு பூர்ணிமா முடிந்தவுடன் பதிவை கொடுப்பேன்.
ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு அறிவையும் தந்த குருவிற்க்கு நன்றியை செலுத்தவேண்டும். ஒரு மனிதன் நன்றியை மறந்தான் என்றால் அவன் பெரிய அளவில் வளர்ச்சியை பெறமுடியாது. ஒவ்வொரு அறிவையும் கொடுத்தவர்கள் அனைவரும் நமக்கு குருவாகவே ஏற்று அவர்களுக்கு நன்றியை செலுத்தவேண்டும். ஒவ்வொருவருக்கும் நாம் நன்றியை செலுத்தும்பொழுது அது நமக்கு பெரியளவில் ஆசி கிடைக்கும்.
நன்றியை செலுத்துவதுடன் நமது குருவிற்க்கு தேவையானவற்றை நாம் செய்துக்கொடுக்கவேண்டும். அவர்களின் வழியில் உள்ள குரு நமக்கு ஆசியை வழங்குவார்கள். ஆசி கிடைத்தால் போதும் ஒரு வருடத்திற்க்கு நமக்கு பல நல்ல விசயங்கள் நடைபெறும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு