Followers

Saturday, December 31, 2011

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்களின் குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துக்கள். இந்த நல்வேளையில் இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு நற்பயனை வழங்குமாறு ஆண்டவனை பிராத்திக்கிறேன்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, December 29, 2011

செவ்வாய் நிறைவு பகுதி




செவ்வாய் 7 ஆம் வீட்டில் இருந்தால் 7 ஆம் பார்வையாக லக்கினத்தை பார்ப்பதால் தலையில் அடிபடும். திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படும். செவ்வாய்க்கு நட்பு வீடாக இருந்தாலும் சொந்த வீடாக அல்லது உச்ச வீட்டில் இருந்தால் பிரச்சினைகள் இருக்காது. பெண்களால் பிரச்சினை உண்டாகும். இவரிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள் முன்கோபக்காரர்களாக இருக்ககூடும்.

8 ஆம் இடத்து செவ்வாயினால் கண் பார்வை கெடும். ஜெயிலுக்கு செல்ல நேரிடும். இரத்த சம்பந்தமாக பிரச்சினை ஏற்படும்.கடன் பளு ஏற்படும். ஆயுள் குறையும். கோபம் அதிகம் வரும். சகோதர்களின் நலம் கெடும். பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்படும்.

9 ஆம் இடத்தில் உள்ள செவ்வாய்யால் தந்தையாரின் நலம் கெடும். தந்தைக்கும் இவருக்கும் சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருக்கும். 9 ஆம் இடத்தில் உள்ள செவ்வாய்யால் தந்தையாரின் நலம் கெடும். தந்தைக்கும் இவருக்கும் சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருக்கும். நற்பணிகள் செய்யமாட்டார். கொடிய செயல்கள் செய்ய வைப்பார். 9 ஆம் வீட்டு செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் நல்ல நிலைக்கு உயர்த்துவார்.

10 ஆம் இடத்தில் உள்ள செவ்வாய்யால் கனரக வாகனங்கள் தொழிற்சாலையில் உயர்ந்த பதவியில் அமர வைப்பார். பதவியில் தலைமை இடம் தேடி வரும். நெருப்பு மூலமாகவும் வருமானம் பெருகும். பெரிய மனிதர்களிடம் இருந்து பெரிய பொறுப்புகள் தேடி வரும்.

11 ஆம் இடத்து செவ்வாய் பெரும் பணக்காராக மாற்றுவார். மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். பெரும் செலவு செய்து தொழிலில் முன்னேற்றம் காண வைப்பார். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மூத்த சகோதர சகோதரிகளிடம் சண்டை சச்சரவு ஏற்படும்.

12 ஆம் வீட்டு செவ்வாயினால் கெடுதல் அதிகம் இருக்கும். சிறை செல்ல நேரிடும். பெண்கள் மூலம் பொருளாதார இழப்பு ஏற்படும். மர்ம விலங்கினால் ஆபத்து ஏற்படும்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு


Thursday, November 24, 2011

திருவண்ணாமலை



திருவண்ணாமலைக்கு நேற்று 23-11-2011 குபேர கிரிவலம் சென்று வந்தேன். . நான் வழக்கமபோல் ஒவ்வொரு பௌர்ணமியும் சென்று வருகிறேன்.குபேர கிரிவலத்தைப்பற்றி படித்ததால் சென்றேன். என்னுடன் 3 பேர் வந்தார்கள். நான் நினைத்தது குறைந்த எண்ணிக்கையில் தான் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நல்ல கூட்டம வந்தது. பல மாவட்டங்களில் இருந்தும் வந்து இருந்தார்கள்.

பிரதோஷ அபிஷேகம் முடிந்து சாமி தரிசனம் பார்க்க கடுமையான நெரிசல் ஏற்பட்டது. ஒரு வழியாக சாமி தரிசனம் முடிந்து. 6 மணிக்கு கிரிவலம் புறப்பட்டு சென்றோம்.

நீங்களும் கலந்துகொண்டிருந்தீர்கள் என்றால் மிக்க நல்லது. அப்படி வரவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்களுக்கு அனைத்து வசதியும் கிடைக்க ஒரு பொன்னான வாய்ப்பு வர இருக்கிறது. அதில் கலந்து கொள்ளுங்கள். நீங்கள் நினைப்பது நடக்கும். வருகின்ற கார்த்திகை தீபத்தில் கலந்து கொள்ளுங்கள். வருகின்ற கார்த்தீகை தீபம். பிறவியின் கருமத்தை அழிக்க பொன்னான வாய்ப்பு. அனைவரும் செல்வோம். இதை உங்கள் நண்பர்களிடமும் சொல்லுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, October 25, 2011


அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.



அன்புடன்

ராஜேஷ்சுப்பு

Friday, October 21, 2011

இரட்டை பிறப்பு ஜாதகம்



இரட்டை பிறப்பு ஜாதகம் பற்றி இன்று பார்ப்போம். இரட்டை பிறப்பு ஜாதகத்தில் பிறந்த இருவரும் ஜாதகம் ஒன்று போல் இருந்தாலும். இரண்டு ஜாதகமும் வேறுபடும். இரட்டை ராசிகளில் பிறக்கும் குழந்தைகள் ஒரு ஆண் ஒரு பெண்ணாகவும் பிறக்கின்றன. அல்லது ஒரே இனமாகவும் இருக்கின்றன.

நீங்கள் ஜாதகத்தை கணித்தால் இரண்டும் ஒரே மாதிரியான ஜாதகம் கிடைக்கும். அவர்கள் வாழ்க்கையில் பார்த்தீர்கள் என்றால் இரண்டு பேருக்கும் நடக்கும் நிகழ்ச்சிகள் வேறு மாதிரியாக நடக்கும். ஒருவருக்கு கல்வி நன்றாக வரும். மற்றோருவருக்கு கல்வியில் நாட்டம் செல்லாது. ஒருவருக்கு திருமணம் நடைபெறும் மற்றோருவருக்கு திருமணம் தள்ளி போகும்.

கணிக்கும் ஜாதகத்தில் ராசி Chart நவாம்சா Chart ஒன்றுபோல் இருக்கும். ஆனால் இரண்டு chart மட்டும் கிடையாது நிறைய chart கள் உள்ளன அதில் பார்த்தீர்கள் என்றால் கிரக நிலைகள் மாறி இருக்கும். அதைபோல் கிரகங்கள் செல்லும் நட்சத்திரங்களும் மாறி இருக்கும். என்னிடம் நிறைய இரட்டை பிறப்பு ஜாதகங்கள் உள்ளன வேறு ஒரு நாள் அந்த ஜாதகத்தைப் பற்றி பார்க்கலாம். இப்பொழுது இந்த இரட்டைபிறப்பு எவ்வாறு ஏற்படுகிறது. இவ்வாறு எதனால் ஏற்படுகிறது என்று மட்டும் பார்க்கலாம்.

இந்த இரட்டை பிறப்பை பற்றி வராஹமிஹிரர் எழுதிய பிருஹத் ஜாதகத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

சூரியன் நாற்கால் ராசியில் இருந்தால் அதாவது மேஷம் ரிஷபம் மகரம் இவைகளில் சூரியன் இருந்தால் மற்ற எல்லா கிரகங்களும் பலமாக உபய ராசிகளில் இருந்தால் இரட்டை குழந்தைகள் உண்டாகும் என்று கூறியுள்ளார். உபய ராசி எது என்றால் மிதுனம்,கன்னி,தனுசு மற்றும் மீனம் ஆகியவை உபய ராசிகளாகும். இந்த மாதிரி கிரக நிலைகள் இருக்கும் போது இரட்டை குழந்தைகள் உண்டாகும் என்று கூறியுள்ளார்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு


Friday, September 30, 2011

அனுபவம்



வணக்கம் நீண்ட நாட்களுக்கு பிறகு இதை பதிவு ஏற்றுகிறேன். நீங்கள் எல்லாரும் தினமும் வந்து சென்று இருப்பீர்கள் அதற்க்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது பணி காரணமாகத்தான் எழுதமுடியவில்லை.

நான் சோதிடம் சம்பந்தமாக எழுத ஆரம்பித்ததே பல சோதிட பதிவுகளை படித்ததால் நாமும் இந்த சோதிடம் சம்பந்தமாக தெரிந்ததே எழுதவேண்டும் என்று தோன்றியதால் இந்த பதிவை ஆரம்பித்தேன். ஏன் என்றால் இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு குட்டி சோதிடர்களாகவே ஒரு நபர் இருக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஒவ்வொரு நாள்களிலும் இன்று என்ன நாள் என்ன நட்சத்திரம் என்ன திதி இந்த ராசிக்கு என்ன பலன் என்று ஒவ்வொருவருக்கும் தெரிய ஆரம்பித்தவிட்டது. இது மிகவும் சந்தோஷபடவேண்டிய விசயம். என்னுடைய ஆசையும் அதுவே.

உங்கள் குடும்பத்தில் உள்ளவருக்கு என்ன ராசி என்ன நட்சத்திரம் என்ன தசை நடக்கிறது என்று தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் உங்கள் குடும்பத்தில் உள்ளவருக்கு எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று உங்களால் முன்கூட்டியே தெரியபடத்தலாம். தேவையற்ற நஷ்டத்தையோ விரயத்தையோ தவிர்க்க முடியும்.

பல மக்கள் வியாபாரத்தில் தோல்வியை சந்திப்பது கெட்ட நேரத்தில் தொழில்களை ஆரம்பிப்பது தான். கெட்ட நேரத்திலோ அல்லது கெட்ட தசையில் ஆரம்பிப்பததால் தான் அதனால் நீங்கள் ஆரம்பிக்கும் தொழில் அல்லது நல்ல விசயங்கள் எவை இருந்தாலும் நேரம் பார்த்து செய்யுங்கள். நேரம் என்று சொல்லுவது சோதிடத்தைதான். சில பேர் வாழ்க்கை முழுவதும் செய்யும் தொழில் அனைத்தும் தோல்வி அடைவது. கெட்ட நேரத்தில் ஆரம்பிப்பதுதான்.



அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, August 22, 2011

செவ்வாய் பகுதி 2



தென்னிந்திய மக்கள் செவ்வாய்கிழமையில் எந்த நல்ல காரியங்களும் தொடங்குவது இல்லை ஆனால் இந்தியாவின் வடமாநில மக்கள் இந்த கிழமைக்கு மங்களவார் என்று பெயர் வைத்து நல்ல காரியங்களை தொடங்குகிறார்கள் என்று தினமலர் நாளிதழில் படித்தேன். அதனால் தான் செவ்வாய்யைப் பற்றி எழுதலாம் என்று எண்ணினேன் அதனுடன் நமது பாடமும் செவ்வாய் பற்றி வந்துகொண்டுருப்பதால் எழுதுகிறேன்.

நமது வீட்டில் எல்லாம் திருமண காலங்களில் பெண் பார்க்கும் அல்லது மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் தவறாது அடிபடும் வார்த்தை செவ்வாய் தோஷம் இருக்கிறதா அல்லது இல்லையா என்றுதான். இந்த தோஷம் ஒவ்வொரு ஜோதிடரிடமும் வேறுபடும். ஒருவர் தோஷம் இருக்கும்பார் இன்னொருவர் தோஷம் இல்லை என்பார். செவ்வாய் உச்சவீட்டில் இருக்கிறது அதனால் தோஷம் கிடையாது என்பர் அல்லது செவ்வாய் நீசவீட்டில் இருக்கிறது அதனால் தோஷம் கிடையாது என்பார்கள். இதனைப்பற்றி ஆராய்வதற்கே பல வழிகள் இருக்கிறது.

நான் சொல்ல வந்தது. ஒன்பது கிரகங்களில் நீங்கள் கேட்டவுடன் அள்ளி வழங்குபவர் செவ்வாய் மட்டும் தான். ஏனென்றால் செவ்வாய்கிரகம் ஒரு அக்னி கிரகம் அது மிகவும் வீரியத் தன்மை வாய்ந்த கிரகம் இருக்கும்.

நெருப்பு உடனே பற்றிக்கொள்ளும் தன்மையினால் செவ்வாய் மட்டும் உடனே தருபவர். வேறு எந்த கிரகத்திடம் கேட்டாலும் பலன் உடனே நடக்காது. ஆனால் செவ்வாயிடம் மட்டும் கேட்டால் உடனே நிறைவேறும். நீங்கள் இதனை ஒரு ஆய்வாகவே எடுத்துக்கொள்ளலாம். செவ்வாயின் கடவுளாகிய முருகனிடம் ஏதோ ஒரு வேண்டுதலுடன் கேளுங்கள் அந்த காரியம் நிச்சயம் நடந்தேறும். உங்கள் வேலை உடனே நடக்க வேண்டும் என்றால் செவ்வாய்கிழமை பயன்படுத்துங்கள்.

உங்களுக்கு செவ்வாய்தோஷம் இருந்தால் ஒன்பது வாரம் செவ்வாய்கிழமை விரதம் இருந்து பாருங்கள். விரதத்தின் தன்மை பொறுத்து தோஷம் நீங்கி நல்லது நடக்கும். செவ்வாய் கிழமை நாம் பயன்படுத்தலாம். முருகனை முழு மனதுடன் வழிபட்டு அனைத்தையும் பெறுவோம்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு





Wednesday, August 3, 2011

ஜோதிட அனுபவம்



எனக்கு தெரிந்த ஒருவர் இருக்கிறார். இவருக்கு அயல்நாட்டில் வேலை செய்யவேண்டும் என்று ஆசை. இவரின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது அந்த மாவட்டத்தில் பெரும்பாலோர் அயல்நாடுகளில் வேலை செய்பவர்கள். அதனால் இவரும் சிங்கபூர் சென்றார்.

இவர் சென்றது சுற்றுலா விசாவில் சென்று அங்கேயே நீண்ட நாட்களாக தங்கிவிட்டார். பிறகு ஒரு நாள் அங்கு காவல்துறையில் மாட்டிக்கொண்டார். அங்கு தண்டனை பெற்று இந்தியா வந்துவிட்டார். வந்தவர் இங்கு 4 மாதங்கள் இருந்தார்.

அயல்நாட்டு ஆசை விடவில்லை மீண்டும் சிங்கபூர் செல்ல முடிவு எடுத்து மறுபடியும் சுற்றுலா விசாவில் செல்வது என்று முடிவு எடுத்து சென்றார். ஏன் என்றால் ஒருமுறை சிங்கபூரில் தவறாக தங்கினால் மீண்டும் அந்த நாட்டிற்க்கு செல்லமுடியாது என்று சட்டம் அதனால் இவர் சுற்றுலா விசாவில் மீண்டும் செல்வது என்று முடிவு எடுத்தார். அதன்படி சென்று குறுகிய காலத்தில் திரும்பி வருவார். இந்த முறைப்படி அவர் நான்கு முறை சென்று வந்துள்ளார். இவர் 5 வது முறையாக செல்லும் போது விமான நிலையத்தில் மாட்டிக்கொண்டார். இவரை அந்த நாட்டு விமான நிலைய அதிகாரிகள் இந்தியாவிற்க்கு திருப்பி அனுப்பினார்கள். இவர் இப்பொழுது இந்தியாவில் இருக்கிறார்.

இவருக்கு அயல்நாட்டின் மீது ஆசை ஏற்பட்டது எதற்க்காக?

அயல்நாட்டின் இவர் இருக்கும்போது இவர் அங்கு காவல்துறையில் மாட்டிக்கொண்டது எப்படி ?

இப்பொழுது நாம் ஜாதக ரீதியாக என்ன காரணம் என்று பார்க்கலாம்.

இவருடைய ஜாதகத்தை கீழே தந்துள்ளேன் பாருங்கள்.





இவருடைய ராசி கும்பம். கடக லக்கனம். ஒருவருடை ஜாதகத்தில்
தொலைதூர பயணங்களை குறிப்பது 9 ஆம் வீடு இந்த ஜாதகத்தில் 9 ஆம் வீடாக வருவது மீனம் அதன் அதிபதி குரு. குரு கிரகம் மூன்றாம் வீட்டில் சனி உடன் அமர்ந்துள்ளது. இவருக்கு அயல்நாட்டின் மீது ஆசையை கொடுத்தது இவருக்கு 9 ஆம் வீட்டின் அதிபதியின் தசாவில் தான்.

குரு தசை நடக்கிறது குரு அயல்நாடு செல்ல வேண்டும் என்று அயல்நாட்டிற்க்கு அழைத்து செல்கிறது. அங்கு குருவிடம் இருக்கும் சனி இவரை நன்றாக மாட்டிவிடுகிறது. அதனால் இவர் அயல்நாட்டில் இருந்து திரும்புகிறார். சனியிடம் குரு இருப்பதால் குரு கெடுகிறது.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு


Sunday, July 24, 2011

செவ்வாய்



செவ்வாய் 1 ல் இருந்தால் தலையில் அடிபடும். செவ்வாய் ஒன்றாம் வீட்டில் இருந்து 7 ம் பார்வையாக 7 ம் வீட்டை பார்ப்பதால் திருமண வாழ்வில் சங்கடங்கள் ஏற்படும். செவ்வாய் முதல் வீட்டில் இருப்பதால் மூர்க்கதனமாக கோபம் வரும். தாயாருக்கு தீங்கு விளைவிக்கும். கோபம் அதிகரிக்கும். இளம்தோற்றமாக காணப்படும். உடம்பில் உஷ்ணம் காரணமாக கட்டி ஏற்படும். நல்ல தைரியசாலிகளாக இருப்பார்கள். தலையில் அடிப்படும். ஏதாவது விதத்தில் தலையில் அடிப்படும். செவ்வாய் தசையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செவ்வாக்கு சொந்த வீடாக அல்லது உச்ச வீடாக இருந்தால் நல்லது நடக்கும்.

செவ்வாய் 2 ம் வீட்டில் இருந்தால் வாக்கில் கடுமை இருக்கும். பேச்சில் சண்டை வரும். செவ்வாய்க்கு சொந்த வீடாகவோ உச்சவீடாக இல்லாவிட்டால் அவர் சொல்லே அவருக்கு விரோதமாக ஆகும். கையில் காசு தங்காது. செவ்வாய் இரண்டில் இருப்பதால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள். கண்ணில் தொந்தரவு இருக்கும். செவ்வாய் பலம் பெற்று இருந்தால் நல்லது நடக்கும். செவ்வாய் இரண்டில் இருப்பதால் தோஷம் ஏற்படும்.

செவ்வாய் 3 ம் வீட்டில் இருந்தால் நல்ல தைரியசாலியாக இருப்பார். காதில் தொந்தரவு இருக்கும். செல்வம் நிறைய கிடைக்கும். நல்ல அறிவாற்றல் கிடைக்கும். உடம்பு நல்ல உறுதியாக இருக்கும். இளைய சகோதரருக்கு கெடுதல் செய்யும். சிலபேருக்கு இளைய சகோதர,சகோதரிகள் இருக்க மாட்டார்கள். 3 ஆம் வீட்டில் செவ்வாய் பலம் பெற்றால் நல்ல வாழ்க்கை அமையும். 3 ஆம் வீட்டு செவ்வாய் மூலம் தாய்நலம் கெடும்.

செவ்வாய் 4 ம் வீட்டில் இருந்தால் தாய்வீட்டின் சொத்து கிடைக்கும். தாயின் உடல்நிலை மோசமாக இருக்கும். கணவன் மனைவி சண்டை சச்சரவு இருக்கும். நல்ல சொத்துக்கள் சேரும். 4 ஆம் வீட்டு செவ்வாய் பலம் குறைந்தால் வாழ்க்கையில் வசதி வாய்ப்பு குறையும். மார்பில் வலி ஏற்படும்.

செவ்வாய் 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரதோஷம் ஏற்படும். புத்தி மங்கும். குழந்தைகளால் சண்டை சச்சரவுகள் ஏற்படும். வயிற்றுவலி ஏற்படும். எதிரிகளால் தொல்லை வரும். பணவரவு இருக்காது. 5 ஆம் வீடு செவ்வாய்க்கு சொந்த வீடாகவோ அல்லது உச்சவீடாகவோ இருந்தால் தடைகள் அனைத்தும் அகலும். 5 ஆம் வீடு நாம் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்று காட்டும் இடம் ஆகையால் செவ்வாய் 5-ல் இருந்தால் சுப்பிரமணியரை வணங்க வேண்டும்.

செவ்வாய் 6 ஆம் வீட்டில் இருந்தால் எதிரிகளை வெற்றிகொள்ளும் தைரியும் இருக்கும். நல்ல சொத்துக்கள் சேரும். செவ்வாய் காமம் அதிகமாக இருக்கும். தாய்மாமனுக்கு தொல்லை தருவார். நல்ல செரிக்கும். இரத்தம் மாசுபடும் அதனால் உடலில் கட்டி ஏற்படும். நல்ல கற்றவர்களிடம் தொடர்பு ஏற்படும். புகழ் ஏற்படும். 6 ஆம் வீட்டு செவ்வாயினால் பெரும் பொருட்செலவு ஏற்படும்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு





Saturday, July 9, 2011

சந்திரன் தொடர்ச்சி 2



இன்று ஒரு ஜாதகத்தை பார்க்கலாம். இந்த ஜாதகத்திலும் சந்திரன் எட்டாம் பாவத்தில் தான் நிற்கிறது. இவர் வேலை செய்வது அரசாங்க பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இந்த ஜாதகருடைய அம்மாவிற்க்கு 2 வருடம் முன்பு ஒரு ஆப்பிரேசன் நடைபெற்றது. இப்பொழுது நன்றாக உள்ளார் இவருக்கு 6 ஆம் வீட்டு அதிபதி சந்திரன் 8ல் அமர்ந்து உள்ளது. அடிக்கடி ஜலதோஷம் ஏற்படுகிறது. அம்மாவிற்க்கு இவர் மேல் நல்ல பாசமாக உள்ளார்.


9-ல் உள்ள சந்திரன் இருந்தால் நல்ல பாக்கியசாலியாக இருப்பார். புத்திரபாக்கியம் இருக்கும். உறவினர்கள் நல்ல உதவி செய்வார்கள். செல்வம் குவியும். சங்கீதம் நாடகம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகமாகும். அம்மாவின் அரவணைப்பு இருக்கும்.

10-ல் உள்ள சந்திரன் தன் மதத்தின் மீது பற்று ஏற்பட்டு மதம் பிரசாரம் செய்வார். நல்ல செல்வ வளம் சந்திரன் தருவார். வாழ்க்கையில் உன்னதமான பல நல்ல காரியங்களை செய்வார். செய்தொழில்களில் பகைவர்களை வெற்றிக்கொள்ளும் தைரியத்தை தருவார்.

வாழ்க்கையில் பற்றிய எண்ணத்தை இயற்கையாக உண்டுபண்னுவார். தாய்வழியில் நல்லது செய்வார். நண்பர்களிடத்தில் நல்ல நட்பு உண்டுபண்னுவார். தொழில் நுட்பத்துறையில் ஈடுபட வைக்கும். தொழில்நுட்பத்துறையில் நல்ல அறிவு வளர செய்வார். வாழ்க்கையில் நல்ல வசதி வாய்ப்பு கிடைக்கும். அரசாங்கத்தில் நல்ல வசதி வாய்ப்பு கிடைக்கும். சிலபேருக்கு அரசாங்கத்தில் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

11-ல் உள்ள சந்திரன் மூத்த சகோதர்களின் மூலம் லாபத்தை தருவார். எந்த வேலையை எடுத்தாலும் எளிதில் முடிக்க கூடிய திறமையை தருவார். நல்ல தீர்க்காயுள் ஏற்படும். வேலையாட்கள் மூலம் வருமானம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் மீது ஆர்வம் ஏற்படும். அரசாங்கத்தின் மூலம் பெயரும் புகழும் கிடைக்கும். நல்ல செல்வ வளம் சேரும்.

12-ல் உள்ள சந்திரன் பாதங்களில் வலி உண்டாக செய்வான். வாழ்க்கையில் மதிப்பு இழக்க செய்வான். கண் பார்வை மங்க செய்வான். அறிவாற்றல் குறையும். குறுகிய மனப்பான்மை இருக்கும். மனஉளைச்சல் இருக்கும். செலவு கூடும்.


அன்புடன்

ராஜேஷ்சுப்பு




Friday, July 8, 2011

ஆன்மீகம் என்னும் சக்தி


மனிதனுக்கும் மட்டும் தான் ஆன்மீகம் என்னும் சக்தியை உணர அதிக வாய்ப்பளித்து இருக்கிறான். மற்ற உயிரனங்கள் தான் வாழ்ந்தால் போதும் என்று உணவை மட்டும் தேடிக்கொண்டு இருக்கின்றன. 

மனிதனுக்கு உணவை மட்டும் தேடியதோடு தன் இறக்கபிறந்தவர்கள் அல்ல வேறு ஏதோ ஒன்று இருக்கின்றது என்ற ஒரு அறிவை வைத்திருக்கிறான் அதனால் தான் மற்ற உயிரனங்களில் இவன் வேறுப்பட்டு இருக்கிறான்.

தன் உணவை தேடுவதோடு இறைவனையும் தேடுகிறான். ஒரு சிலர் இறைவனை தேடுவதை விட்டுவிட்டு விலங்குகள் போலவே வாழ்ந்துக்கொண்டும் இருக்கிறார்கள். மாடுகள் போல் தலையை கீழே குனிந்து கொண்டு இருக்கிறார்கள் மேலே நிமிர்ந்து வானத்தை கூட பார்ப்பதில்லை.

ஏன் நாம் பிறந்தோம் எதற்க்காக இங்கு வந்தோம் என்று ஒரு நிமிடம் சிந்தித்தால் நமக்கு ஆன்மீகசக்தி வந்துவிடும்.நாம் வாழும் வாழ்க்கை வாழ்க்கை தானா என்று சிந்தித்து பார்க்கவேண்டும். எது மரணத்தை தருகிறதோ அது வாழ்க்கை அல்ல. மரணத்தை தராத ஒன்று இருக்கின்றதா என்று பார்த்தால் அது தான் ஆன்மீகசக்தியின் பிறப்பிடமாக இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

சந்திரன் தொடர்ச்சி 1



சந்திரன் ஒவ்வொரு வீட்டில் இருந்தால் என்ன என்று பார்த்து வருகிறோம் அதன் தொடர்ச்சி

சந்திரன் 7 ல் இருந்தால் ஆணாக இருந்தால் பெண்களிடம் பற்று இருக்கும். பெண்ணாக இருந்தால் ஆண்களிடம் பற்று இருக்கும். ஆண்/பெண் இருவரும் மூலம் பணவு இருக்கும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை இருக்கும். ஆண் /பெண் அழகாக இருப்பார்கள். சந்திரன் பலம் இழந்தால் ஆண் / பெண் உடல் பலன் குறையும். நோய் வரும்.

சந்திரன் 8- ல் இருந்தால் அறிவாற்றல் நல்ல இருக்கும். ஆனால் ஆயுளை குறைக்கும். சுக்கிலபட்சமாக இருந்தால் ஆயுள் நன்றாக இருக்கும். மனம் நிம்மதி இழந்து காணப்படும். சந்திரன் நன்றாக இருந்தால் நல்ல செல்வந்தராக இருப்பார்கள். பெரிய குடும்பத்தை உண்டுபண்னுவார்.

இப்பொழுது சந்திரன் 8- ல் இருக்கும் ஜாதகத்தை பார்க்கலாம்


இந்த ஜாதகர் சுக்கிலபட்சத்தில் பிறந்துள்ளார். இப்பொழுது 30 வயது ஆகிறது இவரின் படிப்பு பள்ளிக்கல்வியை மட்டும் தான் படித்துள்ளார். இவரின் அம்மாவிற்க்கு இவர் பிறந்ததில் இருந்து உடல் நிலை மோசமாகத்தான் உள்ளது.ஏதாவது நோய் வந்து கொண்டு இருக்கிறது.

இவருக்கு அண்ணன் ஒருவர் இருப்பதால் இவரின் அம்மா உயிருடன் இருக்கிறார். ஏனென்றால் தாய்க்கு முதல் மகனின் ஜாதகத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அண்ணனின் ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருப்பதால் அம்மா உயிருடன் இருக்கிறார்.

இவரின் ஜாதகத்தில் சந்திரன் 8-ல் அமர்ந்ததால் அஷ்டமச்சந்திரனாகிறது. சந்திரன் அமர்ந்த வீடு சனியின் வீடாக இருப்பதால் இவருக்கு சந்திரன் அதிக கெடுதல் செய்கிறார். இவருக்கு மனப்போராட்டம் அதிகமாக இருக்கிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Thursday, June 23, 2011

சந்திரன்



சந்திரன் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்

சந்திரன் முதல் வீட்டில் இருந்தால் லக்கினத்தில் இருப்பது நல்லது ஆனால் சந்திரனுக்கு அது சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இருந்தால் நல்லது நட்பு வீடாக இருந்தாலும் நல்லது வாழ்க்கையில் உயர்வு பெறுவதற்க்கு நல்லது செய்வார். சிற்றின்ப சுகம் நன்றாக அமையும். பந்தயத்தில் வெற்றி பெறுவார் திடீர் பணவரவு இருக்கும்.

2-ல் சந்திரன் செல்வம் தருவார். நன்றாக பேச்சு வரும் அரசாங்கத்தில் நல்ல மதிப்பு இருக்கும் சொத்து சுகம் ஏற்படும். பெயரும் புகழும் உண்டாகக் காரணமாக இருப்பார். நல்ல கல்வி கிடைக்கும் சந்திரன் கெட்டால் செல்வத்தை இழக்க செய்யும். நல்ல பணவரவு இருக்காது. பொதுவாக வளர்பிறையில் நல்லது செய்வார்.

3-ல் சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் உடல் வலிமையையும் ஆற்றலையும் தருவார். சகோதர சகோதரிகளை ஆதரிப்பார் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். மூன்றாவது வீடாக இருப்பதால் அடிக்கடி குறுகிய பயண செய்ய வைப்பார். வாகனம் வசதி கிடைக்கும் சந்திரன் கெட்டால் அனைத்தும் எதிர்மறையாக இருக்கும்.

4-ல் இருந்தால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும் 4 ஆம் வீடு வீட்டை குறிப்பதால் ஆறு குளம் கடலோரத்தில் வீடு அமையும். நண்பர்களுக்கு உதவி செய்வார். தாய்வழிச்சொத்து கிடைக்கும் கொடை குணம் இருக்கும்.

5-ல் சந்திரன் பலம் பெற்று இருந்தால் பணம் வந்து கொண்டே இருக்கும் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும். நல்ல அறிவாற்றலை தருவார் வாழ்க்கையில் உயர்ந்த நிலைய அடையவைப்பார். குழந்தைபாக்கியம் அமையும் ஆனால் பெண் குழந்தைகளே பிறக்கும். சந்திரன் கெட்டால் அனைத்தும் எதிர்மறையாக இருக்கும்.

6-ல் சந்திரன் இருந்தால் சுகபோக வாழ்வு வாழ்பவர். விரோதிகளை உண்டு பண்னுவார். இளம் வயதில் மகிழ்ச்சி குறையும். சந்திரன் அசுபபலன் பெற்று இருந்தால் அடுத்தவருக்கு அடங்கி நடக்கக்கூடிய தன்மையை தருவார்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Wednesday, May 25, 2011

சூரியன்

சூரியன் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்த்து வருகிறோம் அந்த வரிசையில்
சூரியன் 7 ல் இருந்தால் ஆண் ஜாதகராக இருந்தால் பெண்களால் மனசிக்கலை தருவார். உடம்பில் அடிபடும். உடம்பு சுகம் இருக்காது கவலைகள் வரும் 7 ஆம் இடத்து சூரியனால் அரசாங்கத்திற்க்கு எதிராக ஈடுபடவைக்கும். திருமணவாழ்வில் தடை உண்டாகும். தொழிலில் வருமானத்தை உண்டுபண்ணமாட்டார். வாழ்க்கை துணையின் நலத்தை கெடுப்பார்.

8 ல் உள்ள சூரியனால் கண் பார்வையை மங்கசெய்வார். அதிக காலம் வாழ்வது கடினம் ஆயுளை குறைக்க செய்வார். செல்வத்தை இழக்க செய்வார். நண்பர்கள் மூலமும் பெண்கள் மூலமும் தீமைகள் உண்டாகும். உற்றார் உறவினர்களை விட்டு பிரிவார்கள். உடலில் மர்மபாகங்களில் உபத்திரம் உண்டாகும். மனதில் எப்பொழுதும் கவலை ஏற்பட்டுக்கொண்டு இருக்கும்.

9 ல் உள்ள சூரியனால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆட்சியில் இருந்தால்
தந்தையிடம் நன்றாக நடந்துகொள்வார் தந்தையாரின் பாசம் இவருக்கு கிடைக்கும்.
பகைவீட்டில் இருந்தால் தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு கெடுக்கும். அடிக்கடி பயணம் செய்ய வைக்கும் நல்ல அறிவு வெற்றி வாழ்க்கை வசதிகள் ஆகியவற்றை பெறவைக்கும்.

10 ல் உள்ள சூரியனால் நல்ல கல்வி கிடைக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசாங்கத்தில் பணிபுரிய நேரிடும் வாகன வசதி கிடைக்கும். பெரிய தொழில்களை நிர்வகிக்க முடியும்.

11 ல் உள்ள சூரியனால் செல்வம் குவிய செய்வார். வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்வர் நல்ல உடம்பு பலம் உண்டாகும். பல்வேறு துறைகளில் வருவாய் வர செய்வார். வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி ஏற்படும் அரசாங்க வேலை கிடைக்கும்.

12 ல் உள்ள சூரியனால் தொழில்களில் வீழ்ச்சியை உண்டாகும். அனைத்து முயற்சிகளிலும் தோல்வியை உண்டாக்குவார் செல்வ வளம் இருக்காது. புனித காரியங்களுக்காக செலவு செய்திடவைப்பார். புனித யாத்திரை செய்திடவைப்பார்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு


Thursday, April 14, 2011

நன்றி!!!



அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஜாதக கதம்பம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.கடந்த ஒரு வருடகாலமாக இந்த Blog க்கிற்க்கு வந்து படித்த அனைவருக்கும் எனது நன்றிகள் பல நான் தினமும் எழுதவேண்டும் நினைக்கிறேன் ஆனால் எனது அலுவல் காரணமாக தினமும் எழுத முடியவில்லை. இந்த வருடம் நிறைய பதிவு போடவேண்டும் என்று இறைவனிடம் பிராத்திக்கிறேன். எனது பதிவில் இணைந்த அனைவருக்கும் நென்சார்ந்த நன்றிகள். இந்த கர வருடம் அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

நன்றி !!! நன்றி !!! நன்றி !!!

அன்புடன்

ராஜேஷ்சுப்பு


Saturday, April 9, 2011

ஜோதிட அனுபவம்



சில ஜோதிடர்கள் சொல்வார்கள் ஜாதகத்தில் கிரகம் கெட்டிருந்தால் அந்த கிரகத்தின் தலத்திற்க்கு அல்லது அந்த கிரகத்தின் தேவதைகளை வணங்கினால் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வணங்கவேண்டாம் என்று கூறுவார்கள்.

அனுபத்தில் பார்க்கும் போது அந்தவாறு இல்லை. ஒருவருக்கு குருதிசை மரணத்தை தரும் என்றால் அந்த திசை நடக்கும் பொழுது குருவையோ குருவின் தேவதைகளையே வணங்ககூடாது என்று கூறுவார்கள்.

எனக்கு தெரிந்த ஒருவருக்கு குரு திசை நடந்தது. குரு அவருக்கு 6 ஆம் வீட்டில் இருந்தார். கோசர பலன் படி குரு மூன்றாம் வீட்டிற்க்கு வரும் போது நீண்டகால நண்பர் அவருக்கு பல பிரச்சினைகளை தந்தார். தொழிலில் இவருக்கு பல பிரச்சினைகளை தந்தார். அதனால் இருவருக்கும் கடும் சண்டை ஏற்பட்டது.

அந்த நேரத்தில் இவர் ஆலங்குடி குரு கோவில் சென்று வணங்கிவந்தார். கோவில் சென்று வணங்கிவந்த பின் இருவருக்கும் இருந்து வந்த சண்டை முடிந்தது ஆனால் இருவரும் பிரிந்துவிட்டார்கள். அதனால் ஒருவருக்கு மோசமான கிரகத்தின் பாதிப்பு இருந்தால் அந்த கிரகத்ததை வணங்கலாம். சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைகாரன் காலில் விழுவது மேல்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு

Tuesday, March 29, 2011

ஸ்ரீ கால பைரவர் போற்றி




இதனை தினமும் சொல்லி வந்தால் நவக்கிரக தோஷம் குறையும்

ஓம் பைரவனே போற்றி
ஓம் பயநாசகனே போற்றி
ஓம் அஷ்டருபனே போற்றி
ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
ஓம் அயன்குருவே போற்றி
ஓம் அற்க்காவலனே போற்றி
ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
ஓம் அடங்காரின் அழிவே போற்றி
ஓம் அற்புதனே போற்றி
ஓம் அசிதாங்கபைரவனே போற்றி
ஓம் ஆனந்த பைரவனே போற்றி
ஓம் ஆலயக் காவலனே போற்றி
ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
ஓம் இடுகாட்டுமிருப்பவனே போற்றி
ஓம் உக்ரபைரவனே போற்றி
ஓம் உடுக்கையேந்தியவனே போற்றி
ஓம் உதிரங்குடித்தவனே போற்றி
ஓம் உன்மத்த பைரவனே போற்றி
ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
ஓம் ஊழழித்தருள்வோனே போற்றி
ஓம் எல்லைத்தேவனே போற்றி
ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
ஓம் கபாலதாரியே போற்றி
ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
ஓம் கர்வபங்கனே போற்றி
ஓம் கல்பாந்தபைரவனே போற்றி
ஓம் கதாயுதனே போற்றி
ஓம் கனல்வீசுங்கண்ணனே போற்றி
ஓம் கருமேகநிறனே போற்றி
ஓம் கட்வாங்கதாரியே போற்றி
ஓம் களவைக்குலைப்போனே போற்றி
ஓம் கருணாமூர்த்தியே போற்றி
ஓம் காலபைரவனே போற்றி
ஓம் கபாலிகர்தேவனே போற்றி
ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி
ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
ஓம் காசிநாதனே போற்றி
ஓம் காவல்தெய்வமே போற்றி
ஓம் கிரோத பைரவனே போற்றி
ஓம் கொன்றைப்பிரியனே போற்றி
ஓம் சண்டைபைரவனே போற்றி
ஓம் சட்டை நாதனே போற்றி
ஓம் சம்ஹர பைரவனே போற்றி
ஓம் சிவத்தோன்றலே போற்றி
ஓம் சிவாலயத்திருப்போனே போற்றி
ஓம் சிஷகனே போற்றி
ஓம் சீகாழித்தேவனே போற்றி
ஓம் சுடர்ச்சடையனே போற்றி
ஓம் சுதந்திர பைரவனே போற்றி
ஓம் சிவ அம்சனே போற்றி
ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
ஓம் சூலதாரியே போற்றி
ஓம் சூலவினையறுப்பவனே போற்றி
ஓம் செம்மேனியனே போற்றி
ஓம் ஷேத்ரபாலனே போற்றி
ஓம் தனிச்சன்னதியளானே போற்றி
ஓம் தலங்களின் காவலனே போற்றி
ஓம் தீதழிப்பவனே போற்றி
ஓம் துஸ்வப்நாசகனே போற்றி
ஓம் தெற்கு நோக்கனே போற்றி
ஓம் தைரியமளிப்பவனே போற்றி
ஓம் நவரஸருபனே போற்றி
ஓம் நரசிம்மசாந்தனே போற்றி
ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி
ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
ஓம் நாய் வாகனனே போற்றி
ஓம் நாடியருள்பவனே போற்றி
ஓம் நாய் வாகனனே போற்றி
ஓம் நாடியருள்பவனே போற்றி
ஓம் நிமலனே போற்றி
ஓம் நிர்வாணணே போற்றி
ஓம் நிறைவளிப்பவனே போற்றி
ஓம் நின்றருள்வோனே போற்றி
ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
ஓம் பகையழிப்பவனே போற்றி
ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
ஓம் பலிபீடத்துறைவோனே போற்றி
ஓம் பாபபஷ்யனே போற்றி
ஓம் பாசம் குலைப்போனே போற்றி
ஓம் பால பைரவனே போற்றி
ஓம் பாம்பணியனே போற்றி
ஓம் பிரளகாலனே போற்றி
ஓம் பிரம்மசிரச்சேதனே போற்றி
ஓம் பூஷண பைரவனே போற்றி
ஓம் பூதப்ரேத நாதனே போற்றி
ஓம் பெரியவனே போற்றி
ஓம் பைராகியர் நாதனே போற்றி
ஓம் மல நாசகனே போற்றி
ஓம் மஹh பைரவனே போற்றி
ஓம் மணி ஞாணனே போற்றி
ஓம் மகர குண்டலனே போற்றி
ஓம் மகோதரனே போற்றி
ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
ஓம் முக்கண்ணனே போற்றி
ஓம் முக்தியருள்வோனே போற்றி
ஓம் முனீஸ்வரனே போற்றி
ஓம் மூலமூர்த்தியே போற்றி
ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
ஓம் யாவர்க்கும் எளியனே போற்றி
ஓம் ருத்ரனே போற்றி
ஓம் ருத்ராஷதாரியே போற்றி
ஓம் வடுக பைரவனே போற்றி
ஓம் வடுகூர் நாதனே போற்றி
ஓம் வடகிழக்கருள்வோனே போற்றி
ஓம் வடைமாலைப்பிரியனே போற்றி
ஓம் வாரணாசி வேந்தே போற்றி
ஓம் வாமனர்க்கருளியவனே போற்றி
ஓம் விபீஷண பைரவனே போற்றி
ஓம் வீழாமல் காப்பவனே போற்றி



Tuesday, March 22, 2011

சூரியன் பலன்:: தொடர்ச்சி





சூரியன் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்த்து வருகிறோம் அந்த வரிசையில் இன்று

நான்காம் வீட்டு சூரியன் நல்ல பலத்தோடு இருந்தால் அரசாங்கத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். சொத்துக்கள் சேரும். நல்ல நட்பு உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும். தாயார் நல்ல நலத்துடன் வாழ்வார்கள்.
நான்காம் வீட்டு சூரியன் கெட்டு இருந்தால் தாயார் நலம் பாதிக்கப்படும். மகிழ்ச்சி உண்டாகாது. அரசாங்கத்தில் பணியாற்றி மிகவும் குறைவாக சம்பாதித்து தந்தையின் சொத்துகளை அழிப்பார். இதயநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சூரியன் 5 ஆம் வீட்டில் நல்ல நிலைமையில் இருந்தால் நல்ல அறிவாற்றலை தருவார் . மலை பிரதேசங்களில் செல்ல வாய்ப்பு கிடைக்கும். நல்ல பண வசதிகள் கிடைக்கும்.
சூரியன் கெட்டு இருந்தால் கடுமையான புத்திர தோஷம் ஏற்படும். வயிற்றுக் கோளாறு ஏற்படும். இந்த இடத்தில் சூரியன் இருப்பது ஆயுள் குறைந்து இருக்கும்.

சூரியன் 6 ஆம் இடத்தில் நல்ல நிலையில் இருந்தால் பகைவர்கள் இருப்பார்கள். அவர்களை வெற்றிக்கொள்ளும் வாய்ப்பை தருவார். நல்ல பணிகளை செய்ய வைப்பர் .செல்வம் குவியவைப்பார். வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருக்கவைப்பார். நல்ல ஜரணசக்தி கிடைக்கும்.

6- ஆம் இடத்து சூரியனால் சிற்றின்ப வேட்கையை அதிகமான தருவார். அரசாங்கத்தின் மூலம் பொருள் செலவு ஏற்படும். மனைவியின் உடல் நிலை சரியாக இருக்காது.


பார்க்கலாம் ...
அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, March 17, 2011

பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை !!!




1. வாழ்க்கை ஒரு சவால்

அதனை சந்தியுங்கள்.


2. வாழ்க்கை ஒரு பரிசு

அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.


3. வாழ்க்கை ஒரு சாகசப் பயணம்

அதனை மேற்கொள்ளுங்கள்.


4. வாழ்க்கை ஒரு சோகம்

அதனை கடந்து வாருங்கள்.


5. வாழ்க்கை ஒரு துயரம்

அதனை தாங்கிக் கொள்ளுங்கள்.


6. வாழ்க்கை ஒரு கடமை

அதனை நிறைவேற்றுகள்.


7. வாழ்க்கை ஒரு விளையாட்டு

அதனை விளையாடுங்கள்.


8. வாழ்க்கை ஒரு வினோதம்

அதனை கண்டறியுங்கள்.


9. வாழ்க்கை ஒரு பாடல்

அதனை பாடுங்கள்.


10. வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்

அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


11. வாழ்க்கை ஒரு பயணம்

அதனை புகழுடன் முடித்துவிடுங்கள்.


12. வாழ்க்கை ஒரு உறுதிமொழி

அதனை நிறைவேற்றுங்கள்.


13. வாழ்க்கை ஒரு காதல்

அதனை அனுபவியுங்கள்.


14. வாழ்க்கை ஒரு அழகு

அதனை ஆராதியுங்கள்.


15. வாழ்க்கை ஒரு உணர்வு

அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.


16. வாழ்க்கை ஒரு போராட்டம்

அதனை எதிர்கொள்ளுங்கள்.


17. வாழ்க்கை ஒரு குழப்பம்

அதனை விடைகாணுங்கள்.


18. வாழ்க்கை ஒரு இலக்கு

அதனை எட்டிப் பிடியுங்கள்.


பகவத்கீதை முதலில் சூரியபகவானுக்கே உபதேசிக்கப்பட்டது என்று படித்த ஞாபகம் அதனால் இதை எழுதினேன். இப்பொழுது சூரியன் இரண்டாம் வீட்டில் இருக்கும்போது என்ன பலன் என்று பார்க்கலாம்.


சூரியன் சொந்த வீட்டில் அல்லது உச்ச வீட்டில் இருந்தால் பணம் குவியும். செல்வாக்கு பெருகும் பலம் குறைந்து சூரியன் அமர்ந்தால் பணத்தை இழக்க நேரிடும் படிப்பு குறைவு ஏற்படும், முரட்டு தனமான பேச்சு ஏற்படும்.இரண்டாம் வீட்டில் இருக்கும் சூரியனால் குடும்ப நலத்தை பெறுவது குறைவாகும்.


மூன்றாம் வீட்டில் இருக்கும் சூரியனால் நல்ல வீரனாக இருப்பார்கள். நல்ல செல்வவளம் இருக்கும். தாய் நலம் பாதிக்கப்படும். தாய்க்கும் மகனுக்கும் உறவுநிலை திருப்திகரமாக இருக்காது.


பார்க்கலாம் ...

அன்புடன்

ராஜேஷ்சுப்பு