Followers

Thursday, May 31, 2018

கேள்வி & பதில்


வணக்கம்!
          நண்பர் ஒருவர் ஒரு கேள்வி அனுப்பியிருந்தார். ஊர் ஊராக கோவில் குளங்களை சுற்றினால் மட்டும் நமக்கு நல்லது நடந்துவிடுமா என்று கேட்டார்.

ஒரு விதி இருக்கின்றது. ஒரே மாதிரியாகவே அனைத்தும் செல்லாது. நம்முடைய வாழ்க்கையில் பகல் என்று ஒன்று இருந்தால் இரவு என்ற ஒன்று கண்டிப்பாக இருந்தே தீரும். இரவு இருப்பதால் தான் பகலுக்கு ஒரு பெயர் இருக்கின்றது. இரவு மட்டும் இல்லை என்றால் பகல் என்ற ஒன்றை எவனும் கண்டுக்கொள்ளவே மாட்டான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சில காலக்கட்டங்களில் அதிகபடியான நன்மை நடக்கும் ஒரு சில காலக்கட்டங்களுக்கு பிறகு  தீமை அதிகபடியாக நடக்க ஆரம்பித்துவிடும். தீமை தரும் காலங்களில் நீங்கள் நான் சொல்லுவது போல சென்றுவிட்டால் அதிகப்பட்சம் என்பதை குறைந்த பட்சமாக மாற்றிக்கொள்ளமுடியும்.

நான் வீட்டிலேயே தான் இருப்பேன் என்றால் தாராளமாக இருந்துக்கொள்ளலாம். உங்களிடம் சக்தி இருந்தால் தாராளமாக எதிர்க்கொள்ளலாம். சக்தி இல்லை என்றால் மட்டும் நீங்கள் சிந்தனை செய்யவேண்டும்.

கோவில்கள் என்று சுற்றும்பொழுது அது உங்களின் இந்த வாழ்க்கை மட்டும் அல்லாமல் அடுத்த ஜென்மத்திற்க்கும் அது நன்றாக உதவும் என்பதால் இதனை அடிக்கடி சொல்லுவது உண்டு.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

விதி வீட்டை சுற்றும்பொழுது


வணக்கம்!
          வீட்டைசுற்றி விதி ஆட்டம்போடுகின்றது என்று வைத்துக்கொள்வோம். அதாவது நிறைய பிரச்சினைகள் உருவாகிக்கொண்டு இருக்கின்றது. ஒரு பிரச்சினையும் தீர்ந்தபாடில்லை என்பதை தான் வீட்டை சுற்றி விதி ஆட்டம் போடுகின்றது என்று சொல்லுகிறேன். 

ஒருவருக்கு வீட்டைச்சுற்றி விதி ஆட்டம் போட்டால் அவர் செய்யவேண்டியது சாமியார் போல் ஒரு கோவிலையும் விடாமல் சென்று வருவது தான் தீர்வாக இருக்கமுடியும். கோவில் கோவிலாக சுற்றினால் உடனே பிரச்சினை தீர்ந்துவிடாது கொஞ்ச நாள்கள் எடுத்துக்கொண்டு பிரச்சினை தீர்ந்துபோகும்.

ஒரு சில இடத்தில் சொல்லுவார்கள் எவ்வளவு பிரச்சினை வந்தாலும் எதிர்த்து நிற்கவேண்டும் ஓடகூடாது என்பார்கள். அவன் அவனுக்கு வந்தால் தான் பிரச்சினை என்ன என்பது தெரியும். யார் வேண்டுமானாலும் உபதேசம் எல்லாம் செய்யலாம் ஆனால் பிரச்சினையை நேரில் எதிர்க்கொள்ளும்பொழுது மட்டுமே உண்மை என்பது புரியும்.

இந்த நேரத்தில் சந்நியாசி எப்படி செல்வார் என்பதை உணர்ந்துக்கொண்டு அவர்களை போல நீங்களும் சுற்றிக்கொண்டே இருங்குள். கோவில் கோவிலாக சுற்றுங்கள். கண்டிப்பாக ஒரு தெளிவு உங்களுக்கு கிடைக்கும்.

விதி அடிக்கும்பொழுது எதிர்த்து நிற்பது என்பது அவ்வளவு எளிதான ஒரு காரியம் கிடையாது. முடிந்தவர்கள் எதிர்த்து நின்று பாருங்கள். முடியாதவர்கள் கோவில் கோவிலாக அலைந்து திரியுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, May 30, 2018

கெடுதல் நேரம் எப்பொழுது வரும்?


வணக்கம்!
          ஒரு மோசமான கிரகத்தின் தசா அல்லது கோச்சாரபலன் வருவதற்க்கு முன்பே தன்னை தயார் செய்துவிடும் அதனை செயல்படுத்துவது அதன் காலத்தில் இருக்கும். தற்பொழுது உங்களுக்கு நல்ல நேரம் நடக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் இந்த நேரத்தில் உஷாராக செயல்படவேண்டும்.

நல்ல நேரத்தில் நமக்கு வரும் செல்வம் அதனை வைத்து ஏதோ செய்கிறோம் என்று செய்வோம் அதன் பாதிப்பு கெடுதல் நேரத்தில் தான் தெரியும். என்னை நாடி வரும் பெரும்பாலான நபர்கள் சொல்லுவது நல்ல பணம் வந்தது. நமக்கு பணம் வந்துக்கொண்டே இருக்கும் என்று பெரிய அளவில் ஆசைப்பட்டேன். பணம் நின்றுவிட்டது தற்பொழுது மாட்டிக்கொண்டேன் என்பார்கள்.

எதுவுமே தொடர்ச்சியாக நமக்கு வந்துக்கொண்டே இருக்கும் என்று நாம் நினைக்ககூடாது. அதே நேரத்தில் நம்முடைய நல்ல காலத்தில் மிக மிக நிதானமாக இருக்கவேண்டும். நிதானமாக இருந்துவிட்டால் கெடுதல் கிரகங்கள் நம்மிடம் அதிகம் வேலையை காட்டாது.

நாம் இஷ்டத்திற்க்கு ஆட்டம் போடும்பொழுது நமக்கு பிரச்சினையை அந்த நேரத்திலேயே நமக்கு தெரியாமல் செய்துவிடுகின்றது. அது பிரச்சினையை கொடுக்கும் நேரம் வந்துவிட்டால் பெரிள அளவில் காட்டிவிடுகின்றது. 

உங்களுக்கு தற்பொழுது நல்ல நேரம் நடந்துக்கொண்டு இருக்கின்றது என்றால் நீங்கள் கொஞ்சம் உஷாராகவே இருங்கள். அனைத்தையும் நன்றாக கவனித்துக்கொள்ளவும். நாம் சரியாக இருந்துவிட்டால் போதும் அதன்பிறகு இறைவன் விட்ட வழி என்று இருந்துவிடலாம்.

மதுரைக்கு இன்று செல்கிறேன். மதுரையில் இருந்து திரும்பியபிறகு பதிவுகளை தருகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, May 29, 2018

எதனால்?



வணக்கம்!
          பல இடங்களில் நாம் சொல்லுவது உங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கவேண்டுமானால் நீங்கள் நிறைய புண்ணியம் செய்துவிடுங்கள் என்று அடிக்கடி சொல்லுவது உண்டு. இது நமது தலைமுறையை காப்பதற்க்கு மட்டும் அல்லாமல் நீங்கள் அடுத்த பிறப்பு எடுப்பதற்க்கும் நன்றாக இருக்கும் என்பதற்காகவும் இதனைப்பற்றி நிறைய சொல்லிருக்கிறோம்.

நான் எந்த விசயத்தை சாென்னாலும் உண்மை நிலைமை எப்படி இருக்கின்றது என்பதை தெரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார்போல் சொல்லிவிடுவது உண்டு. நாம் நிறைய புண்ணியம் எல்லாம் செய்தாலும் இது எப்படி நம்மை காப்பாற்றும் என்பது இறைவனுக்கு மட்டும் தெரிந்த ஒன்று.

பல இடங்களில் நீங்களே பார்த்து இருக்கலாம். ஊரில் பள்ளிகூடம் கட்டுவதற்க்கு மற்றும் மருத்துவமனை கட்டுவதற்க்கு எல்லாம் அந்த காலத்தில் தன்னுடைய நிலத்தை கொடுத்து இருக்கின்றனர். பல ஊர்களில் இப்படிப்பட்ட நிகழ்வு நடந்திருப்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும்.

இப்படிப்பட்ட நிலம் கொடுத்திருக்கின்றார்கள் என்றால் அவர்களின் தர்மத்தை எப்படி சொல்லுவது அவர்களின் இந்த செயல் நாம் எதனோடும் ஒப்பிட முடியாது. இது எப்படிப்பட்ட புண்ணியத்தை அவர்களுக்கு கொடுத்திருக்கும்.

இப்படி நிலம் மற்றும் கட்டடம் எல்லாம் கட்டிக்கொடுத்து மக்களுக்கு உதவி செய்த பெரும்பான்மையான குடும்பங்கள் இன்று அட்ரஸ் இல்லாமல் சென்றுவிட்டது என்பது தான் நான் பார்த்த வரையில் உண்மையான தகவல். பல ஊர்களில் இப்படிப்பட்ட குடும்பங்கள் வாரிசுகள் என்று ஒருவரும் கூட இல்லாமல் இருக்கின்றனர். அந்த குடும்பங்கள் எல்லாம் என்ன ஆனாது என்று கூட தெரியவில்லை.

இன்று பல ஊர்களில் அவர்களின் வாரிசுகள் ஒரு சிலர் இருந்தாலும் மிகுந்த கஷ்டத்தில் இருக்கின்றனர். அந்த ஊர்களில் எல்லாம் அந்த ஊரை கெடுத்து கொண்டு இருப்பவர்கள் அந்த ஊர்களில் பெரியஆள் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். கெட்டவன் இன்று தலைவனாக இருக்கின்றனர் என்று சொல்லலாம்.

இவர்கள் செய்த இந்த புண்ணியம் எல்லாம் எங்கு சென்றது என்று சந்தேகப்பட வைக்கின்றது. கண்டிப்பாக இப்படிப்பட்ட நிகழ்வுகள் உங்களின் ஊரிலும் நிகழ்ந்து இருக்கும். இதனை கொஞ்சம் நினைவுகளை அசைப்போட்டு பாருங்கள். என்ன நடந்திருக்கும் என்பது உங்களுக்கு புரியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, May 28, 2018

திருமண நிகழ்ச்சி இடம்



வணக்கம்!
          பல ஊர்களுக்கு சென்று வந்த அனுபவத்தை வைத்து சொல்லுகிறேன். ஒரு சில ஊர்களில் திருமணம் நடைபெறும் மண்டபம் மிக சிறிய அளவில் கட்டி வைத்திருப்பார்கள். அதில் திருமணத்தை நடத்தும்பொழுது மண்டபத்தில் முழுவதும் பெண்கள் அமர்ந்துக்கொண்டு ஆண்கள் எல்லாம் வெளியில் நிற்பது போல இருக்கும்.

ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றால் அந்த திருமணத்தின் பொழுது மணமக்களை ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்த்தவேண்டும் அப்படி வாழ்த்தினால் அந்த திருமண தம்பதிகள் நன்றாக வாழ்வார்கள். தனித்தனியாக வாழ்த்த கூடாது.

பல ஊர்களில் இதனை நான் பார்த்து இருக்கிறேன். அவர் அவர்களின் வசதிகேற்ப இதனை வைத்தாலும் இதனை தவிர்த்துவிட்டு கோவிலில் கூட திருமண நிகழ்ச்சியை வைத்துக்கொள்ளலாம். சிறிய மண்டபங்களை தவிர்த்துவிடுவது நல்லது.

திருமணம் என்றாலே மண்டபத்தில் நடத்துவதை விட கோவிலில் நடத்துவது தான் நல்லது. உங்களின் வசதிகேற்ப சிறிய கோவிலில் கூட இதனை நடத்திக்கொள்ளலாம். கோவிலாக இருந்தால் அது உங்களுக்கு உள்ள தோஷத்தை கூட போக்கிவிடும்.

இருவர் இல்லறவாழ்வில் நுழையும்பொழுது இருவராக இருந்து வாழ்த்தவேண்டும். சிறிய மண்டபத்தில் திருமணத்தை நடத்தினால் அங்கு பெண்கள் மட்டும் அமர்ந்து இருந்தால் அது வேறு மாதிரியாக தெரியும்.  பெண்கள் மட்டும் இருந்தால் அது இறப்பு நிகழ்ச்சி போல இருக்கும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, May 26, 2018

பச்சைப்பரப்புதல்


வணக்கம்!
          குலதெய்வத்திற்க்கு பச்சைப்பரப்புதல் பற்றிய பதிவு இது. உங்களின் குலதெய்வம் உங்களுக்கு மட்டும் அல்லாமல் உங்களின் பங்காளிகளுக்கும் குலதெய்வமாக இருக்கும். இந்த குலதெய்வத்திற்க்கு நீங்கள் வருடத்திற்க்கு ஒரு முறை பூஜை செய்தாலும் உங்களின் வீட்டில் மாதந்தோறும் குலதெய்வத்திற்க்காக இந்த சிறப்பு பூஜையை செய்யலாம். உங்களின் குலதெய்வம் உங்களின் வீட்டிற்க்கு வந்து அருள்பாலிக்கும்.

பச்சைப்பரப்புதல் பற்றி நமது ஜாதககதம்பத்தில் நிறைய பதிவுகள் தந்திருக்கிறேன். தொடர்ச்சியாக இந்த பதிவு கொடுத்த காரணத்தால் பலர் இந்த பூஜையை வீட்டில் தொடர்ந்து செய்து வருகின்றனர். இதுவரை செயயாதவர்களும் வருகின்ற வைகாசி விசாகத்தில் இருந்து கூட ஆரம்பித்து செய்யலாம்.

உங்களின் பூஜையறையில் ஒரு வாழை இலையை பரப்பி அதில் கொஞ்சம் பச்சை அரிசியை நீரில் அலசி அதனை அப்படியே பரப்புங்கள். மாவிளக்கு மாவில் உருண்டை பிடித்து மூன்று அல்லது ஐந்து  என்ற கணக்கில் உருண்டையை பிடித்து அதில் வையுங்கள். அதில் நெய்கொண்டு உருண்டை மீது தீபம் ஏற்றுங்கள். உருண்டை மேல் சிறிய குழி செய்து அதில் வாழைபழத்தோல் கொண்டு நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

உங்களின் குலதெய்வத்திற்க்கு பிடித்த கனிகள் மற்றும் நைவேத்தியத்தையும் படைக்கலாம். அதன் பிறகு தீபாராதனை செய்துவிட்டு நன்றாக உங்களின் குலதெய்வத்திடம் உங்களின் பிராத்தனையை வைத்து வணங்குங்கள். அதன் பிறகு நைவேத்தியத்தை உங்கள் சாப்பிடலாம்.

உங்களின் குலதெய்வத்திற்க்கு நீங்கள் செய்யும் இந்த பூஜை உங்களின் குலத்தெய்வம் மனமிரங்கி உங்களுக்கு அனைத்தையும் கொடுக்கும். இந்த பூஜையை தொடர்ச்சியாக நீங்கள் செய்து வந்தால் விரைவில் ஒரு நல்ல மாற்றத்தை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, May 25, 2018

திருவாதிரை


வணக்கம்!
          இன்று சுபமுகூர்த்த நாள். நிறைய திருமணங்கள் நடைபெறுகின்றன. மலமாதத்தை எல்லாம் யாரும் கவலைப்படவில்லை. நிறைய வீடு குடிபுகுதல் மற்றும் திருமணங்கள் நடைபெறுகின்றன. 

திருவாதிரை நட்சத்திரத்தை உடையவர்களுக்கு என்று உள்ள ஒரு அமைப்பைப்பற்றி பார்க்கலாம். திருவாதிரை நட்சத்திரத்தில் உள்ளவர்களுக்கு திருமணம் என்பது அவ்வளவு எளிதில் நடைபெறுவதில்ல. திருமணத்திற்க்கு என்று நிறைய போராட்டங்களை அவர்கள் செய்யவேண்டும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் உடையவர்கள் பெரும்பாலும் திருமணத்தில் அவர்களின் வீட்டை எதிர்த்துக்கொண்டு திருமணம் செய்வது போல அதிகப்பட்சம் நடைபெறும். திருமணத்திற்க்கு ஒரு பெண்ணை பார்த்தால் அந்த பெண் வீட்டுக்காரர்கள் பிரச்சினையை கொடுப்பார்கள்.

திருவாதிரை நட்சத்திரத்தை உடையவர்கள் முடிந்தவரை திருமணத்தை கந்தர்வமணம் முடிக்க பாருங்கள். திருமணம் உங்களின் ஜாதியில் இருந்து பிற ஜாதியில் திருமண வரம் அமையும். ஒரே ஜாதியில் அமைவது பெரிய கடினமாகவே இருக்கும்.

ஒரே ஜாதியில் திருமண ஏற்பாடு நடந்தால் திருமணத்திற்க்கு கூட்டம் கூட்டாமல் பத்து பேர்க்குள் திருமணத்தை கோவிலில் நடத்திக்கொள்ளுங்கள். வரவேற்பை பெரியளவில் செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, May 24, 2018

கிரக தாக்குதல்


வணக்கம்!
          ஒரு ஜாதகருக்கு ஒரு பெரிய பாதிப்பு ஏற்பட்டால் அந்த பாதிப்பில் இருந்து வெளிவருவதற்க்கு பல வருடங்கள் கூட ஆகலாம். ஒரு வழிபாட்டை மட்டும் செய்துவிட்டு உடனே அதில் இருந்து வந்துவிடலாம் என்றால் கண்டிப்பாக அது ஆகாத ஒன்றாகவே இருக்கும்.

ஒருவர்க்கு கடன் பிரச்சினை ஏற்படுகின்றது என்று வைத்துக்கொள்வோம். அந்த கடன் பிரச்சினையில் இருந்து அவர் தப்பித்து வருவதற்க்கு ஒரு சில காலங்கள் எடுக்கும். கிரகங்கள் ஒருவரை அடிக்கும்பொழுது அது உடனே வெளியே வராதபடியாக தான் செய்யும். நீண்டகால கஷ்டத்தை கொடுத்து தான் அது செய்யும்.

உடனே ஒருவர் வருவார் என்றால் அது கோடியில் ஒருவராக இருக்கலாம் அல்லது கடவுள் அவர் பக்கம் வந்து நிற்கிறார் என்று தான் அர்த்தம். கடன் பிரச்சினையில் இருந்து மீண்டு வருகின்றார் என்றால் கண்டிப்பாக அது பெரிய விசயமாக தான் இருக்கும்.

கிரகங்கள் ஒருவரை தாக்கும்பொழுது அந்த ரணம் என்பதை உடனே சரிசெய்ய விடாமல் என்ன செய்யவேண்டுமோ அந்த மாதிரி தான் தாக்க ஆரம்பிக்கும். தீயகிரகங்களின் தாக்குதல் அப்படி தான் இருக்கும். 

ஒரு கிரகம் ஒருவருக்கு கெடுதலை கொடுத்த பிறகு அவர்களுக்கு மறுபடியும் நல்லதை கொடுக்க நல்ல கிரகங்கள் உடனே முன்வரவும் வராது. வழிபாடு மற்றும் பரிகாரங்கள் வேலை செய்யாத என்று கேட்கலாம். வேலை செய்யும் அதற்குரிய காலத்தை எடுத்துக்கொண்டு வேலை செய்ய ஆரம்பிக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

விழிப்புணர்வு


வணக்கம்!
          இரண்டு நாள்களாக கலவரம் பற்றி தான் அதிகமான எண்ணங்கள் எல்லா இடத்திலும் வந்துக்கொண்டு இருக்கின்றன. ஜாதக கதம்பத்தில் ஏற்கனவே சொல்லியபடி ஒவ்வொன்றாக வந்துக்கொண்டே இருக்கும் இதனைப்பற்றி கவலைப்படாமல் உங்களின் வேலையை பாருங்கள் என்று சொல்லிருக்கிறேன்.

இந்த பதிவு உங்களை விழிப்புணர்வுக்கு கொண்டு செல்வதற்க்காக எழுதுகிறேன் வேற எந்த நோக்கத்திற்க்காகவும் இல்லை என்பதை சொல்லிவிடுகிறேன். ஒரு சில காலங்களாக ஒரு வார்த்தையை உங்களின் முன்னாடியே வந்துக்கொண்டு வருகின்றனர். அது போராட்டம் என்ற வார்த்தையை அது இன்றைக்கு பல மடங்கு பெரியதாக்கி பல பேரை கொல்லும் நிலைக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.

ஒரு வார்த்தையை பல தடவை சொல்லி சொல்லி அதனை செயல்படுத்தும் ஹிட்லர் டெக்னிக்கை கையாண்டு வருகின்றனர். அதற்கு விழிப்பு இல்லாமல் அதில் மாட்டிக்கொண்டு அவதிப்படுகின்றனர். ஆன்மீகத்தில் ஒன்றை சொல்லுவார்கள். உலகத்தில் மாயையில் சிக்கிக்கொள்கின்றனர் என்பார்கள் அல்லவா. 

பலர் மாயையில் சிக்கி மாட்டிக்கொள்கின்றனர். இதில் நீங்களும் சிக்கிக்கொள்ளாதீர்கள். உங்கள் மீது மாற்றி மாற்றி எதையாவது வீசிக்கொண்டு இருக்கும் இந்த உலகம். இதில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.

ஆன்மீகத்தில் மாயை என்பார்கள். சோதிடத்தில் தீயகிரகங்கள் செய்யும் கர்மா என்பார்கள். இதில் விழிப்பு இருந்தால் பெரியதாக உங்களுக்கு பிரச்சினை வரபோவதில்லை. விழிப்பு இல்லை என்றால் உங்களுக்கு தான் பிரச்சினை.

தமிழ்நாடு என்றாலே நல்ல ஊர் என்ற பெயர் இருக்கின்றது. அமைதியான நாடு. நிறைய கோவில்கள் இருக்கின்றன. புகழ்பெற்ற கோவில்கள் இருக்கின்றன. இதனை எல்லாம் நாம் காப்பாற்றமுடியாவிட்டாலும் அமைதியாக இருந்தாலே போதும். காலம் நமக்கு நல்ல வாய்ப்பை கொடுக்கும். விழிப்புணர்வோடு இருங்கள். தமிழ்நாட்டு முழுவதும் சென்று இருக்கிறேன் அனைவரும் நல்லவர்கள். யாருக்கும் பாதிப்பை மறுபடியும் கொடுக்க கூடாது என்று வேண்டுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, May 23, 2018

நாளை பார்த்து செயல்பாடு


வணக்கம்!
          ஒரு நாளில் அன்றைய நட்சத்திரம் என்ன என்று பார்க்கவேண்டும். நட்சத்திரத்தின் அதிபதி யார் என்பதை தெரிந்துக்கொள்ளவேண்டும். நட்சத்திர அதிபதி யாரோடு கோச்சாரபலன்களில் சென்றுக்கொண்டு இருக்கின்றார் என்று பார்க்கவேண்டும் இதனை அறிந்து அந்த நாளை நாம் முடிவு செய்யவேண்டும்.

நேற்று மகம் நட்சத்திரம். மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது. தற்சமயம் கேது பகவான் மகரத்தில் சென்றுக்கொண்டு இருக்கின்றார். மகரத்தில் கேது பகவான் செவ்வாய் கிரகத்தோடு சேர்ந்து சென்றுக்கொண்டு இருக்கின்றார்.

மகம் நட்சத்திரத்தில் சந்திரன் சென்றுக்கொண்டு இருக்கின்றார். மகரத்திற்க்கு சந்திராஷ்டமம். மகரராசிக்கு சந்திராஷ்டம் என்றால் கணவன் மனைவிக்குள் நல்ல சண்டை சச்சரவு ஏற்பட்டு இருக்கும். இரண்டு பேருக்கும் சண்டை உருவாகி அது பெரியளவில் வந்திருக்கும். எந்த வித நல்ல காரியமும் செய்யகூடாது.

ஒரு நாளில் உள்ள நட்சத்திரம் மற்றும் அதன் அதிபதி. அந்த அதிபதி எப்படி சென்றுக்கொண்டு இருக்கின்றார் என்பதை பொறுத்து பலன்களை பார்க்கலாம். அதோடு சந்திராஷ்டமம் யாருக்கு அவர்களுக்கு  என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்த்து அதற்கு தகுந்தார் போல் நடக்க ஆரம்பிக்கவேண்டும்.

ஒவ்வொரு நாளும் இதனை பார்த்து நடக்கவேண்டும். அதோடு அன்றைய திதியையும் கணக்கில் கொண்டு நாம் செயலாற்றினால் பெரியளவில் எச்சரிக்கையோடு செயல்படலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, May 22, 2018

கர்மவினை


வணக்கம்!

நட்சத்திரப்படி உள்ள குணங்களை மாற்ற நினைத்தாலும் கர்மவினைப்படி பலனை சாதாரண மனிதன் அனுபவித்தே ஆக வேண்டும் என்று நினைக்கிறேன்.

திரு கலைராஜன் அவர்கள்

தங்களின் கருத்துக்கு நன்றி ஐயா. எனக்கும் இப்படிப்பட்ட பிரச்சினை எல்லாம் இருந்தது. நிறைய ஞானிகளின் புத்தகங்களை தேடி தேடி படித்து பார்த்து இதனை எல்லாம் மாற்றினேன். கர்மா என்பது கொஞ்சமாவது நம்மை துரத்திக்கொண்டு தான் இருக்கின்றது.

ஞானிகளின் புத்தகங்களை எப்பொழுதும் கையில் வைத்திருக்கலாம். தற்பொழுது செல்போன் இருப்பதால் வாட்ஸ்அப்பில் நிறைய ஞானிகளின் கருத்துக்களை தொகுத்து வழங்கிக்கொண்டு இருக்கின்றனர். அதன் வழியாக படிக்கலாம்.

நாம் ஒரு சாதாரணப்பட்ட மனிதன் நமக்கு வழிகாட்ட இப்படிப்பட்டவர்கள் கண்டிப்பாக இருந்தால் தான் நம்மால் நிறைய விசயங்களை மாற்றமுடியும். எப்பொழுதும் ஒரு ஞானியின் பார்வையில் நாம் இருக்கவேண்டும் அப்படி இல்லை என்றால் அவர்களின் கருத்து எண்ணம் நம்மோடு இருந்தால் தான் ஒரு சாதாரண மனிதனுக்கு நல்லது.

கர்மவினை என்பது முதலில் நம்முடைய சிந்தனையை தான் கெடுக்கும். நல்ல சிந்தனையை உருவாக்க ஞானிகளின் கருத்துக்கள் அதிகமாக பயன்படும் என்பது தான் அனுபவ உண்மை. நல்ல அறிவு என்பது உருவானாலே ஒருவனை மாற்றத்தை நோக்கி செல்வான்.

எப்பொழுது ஒரு ஆன்மீகவாதியோடு தொடர்பு இருந்தால் கண்டிப்பாக ஒருவருக்கு வரும் பிரச்சினையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். அவர்களின் ஆன்மீகபார்வை என்பது கர்மாவை போக்கும் என்பது என்னுடைய அனுபவத்தில் நான் கண்டது. இதனை அனைவரும் பின்பற்றி வரலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, May 21, 2018

சுகஸ்தானம் தரும் சக்தி


வணக்கம்!
          இந்த வீட்டைப்பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ஜாதகத்தில் நான்காவது வீடு. இது சுகஸ்தானம் மற்றும் தாயார் ஸ்தானம் என்று எல்லாம் சொல்லுவார்கள். இந்த நான்காவது வீடு நன்றாக இருந்தால் ஒருவர் நன்றாக வாழ்ந்துவிடுவார் என்றே சொல்லலாம்.

சுகஸ்தானம் என்பது அந்தளவுக்கு ஒருவருக்கு வாழ்க்கையில் அனைத்தையும் வழங்ககூடிய ஒரு ஸ்தானம் என்று சொன்னால் அது தவறு இல்லை என்று ஒப்புக்கொள்ளலாம். சுகஸ்தானம் என்பது நம்முடைய வாழ்வில் அனைத்து சுகத்தையும் கொடுக்கவல்லது. பெரும்பாலான ஜாதகர்களுக்கு இந்த வீடு அடிப்பட்டுவிடும்.

நான்காவது வீடு நன்றாக இருந்தால் தான் ஒருவர் நன்றாக இருந்துவிடுவாரே அது சரியில்லை என்றால் தான் மனிதர்களுக்கு நிறைய பிரச்சினை வருகின்றது. உங்களின் வீட்டில் ஈசானிய இடத்தை காட்டக்கூடிய ஒரு அமைப்பு தான் இந்த நான்காவது வீடு.

நான்காவது வீட்டில் நல்ல கிரகங்கள் இருந்தால் அவர்களின் வீட்டிற்க்கு ஈசானிய வழியில் இருந்து நல்ல சக்தி கிடைத்து நன்றாக இருப்பார்கள். நான்காவது வீடு கெட்டால் ஈசானிய வழியில் இருந்து உங்களுக்கு கெட்ட சக்தி தான் கிடைக்கும். 

இதனை எல்லாம் ஒன்றும் அவ்வளவு எளிதில் புரிந்துக்கொள்ளமுடியாது. நிறைய ஆன்மீக வாசம் நம்மோடு இருக்கும்பொழுது மட்டுமே இது சாத்தியப்படும். இதனைப்பற்றி பின்வரும்காலங்களில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, May 20, 2018

சூரியன்


வணக்கம்!
          சூரியன் ஒருவருக்கு நன்றாக இருந்தால் அவர்களுக்கு அரசாங்க வழியில் நல்ல வாய்ப்பு பெற்று அதன் வழியாக மேலே செல்லலாம் என்பது உங்களுக்கு தெரியும் அதே நேரத்தில் சூரியன் பாவிகளோடு சேர்ந்தால் அந்த ஜாதகர் அரசாங்கத்தை ஏமாற்றி பிழைப்பார். 

சூரியன் பாவிகளின் பார்வையில் அல்லது பாவிகளோடு சேர்ந்தால் அவர்களின் ஆத்மசாதனையும் நன்றாக இருக்காது. ஆத்மா பல கெட்ட ஆவிகளின் புகலிடமாக மாறிவிடும். இவர்களின் சிந்தனையும் கெட்ட சிந்தனையாகவே இருக்கும்.

சூரியன் ஒவ்வொரு தமிழ்மாதத்திற்க்கும் ஒவ்வொரு இராசியிலும் தங்கும். ஒரு சிலருக்கு சூரியன் கெட்ட இராசியில் தங்கும் காலத்தில் அந்த மாதத்தில் நிறைய பிரச்சினையை ஜாதகர் சந்திப்பார்கள்.

ஒவ்வொரு வருடமும் இதனை கவனித்து பார்த்தால் அந்த ஜாதகர்களுக்கு நன்றாக தெரியவரும். தமிழ்மாதத்தில் ஏதாே ஒரு மாதம் அவர்களுக்கு இது நடக்கும். அந்த மாதத்தில் எதுவும் செய்யாமல் இருந்து விடுவது நல்லது.

சூரியன் உதயம் ஆவதற்க்கு முன்பு எழுந்து சூரியனை வரவேற்பது போல உங்களின் தினசரி வாழ்க்கை இருந்தால் சூரியனால் வரும் இடர்பாடு இல்லாமல் இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, May 19, 2018

ஜாதக அனுபவம்


வணக்கம்!
          உங்களின் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் எல்லாம் பார்த்து நாம் பலனை சொன்னாலும் உங்களின் நட்சத்திரம் என்ன மற்றும் இராசி என்ன என்பதை அறிந்துக்கொண்டு அதன் குணாதியசம் என்ன என்பதை பார்த்துவிட்டு பலனை சொன்னால் அது நூறு சதவீதம் சரியாக இருக்கும்.

கிரகங்கள் இந்த பலனை கொடுக்கிறது. ஜாதகத்தில் ஒரு கிரகத்தின் தசா இப்படி வேலை செய்து பலனை கொடுக்கிறது என்றாலும் அந்த ஜாதத்தில் இராசி என்ன என்று பார்த்துவிட்டால் அதன் குணாதியசத்திற்க்கு தகுந்தார்போல் தான் பலன் இருக்கும். அதே போல நட்சத்திரத்தின் பலனையும் நாம் தெரிந்துக்கொண்டால் சரியாக இருக்கும்.

ஒரு சிலருக்கு நல்லது நடக்கும் நேரத்தில் அவர்களின் இராசியின் குணம் பிடிவாதமாக இருப்பார் என்றால் கண்டிப்பாக இவர் பிடிவாதமாகவே இருந்து நல்லது நடைபெறுவதை தட்டிக்கழித்துவிடுவார். இழப்பு என்பது அவருக்கு வந்துவிடும்.

இதனை எல்லாம் தெரிந்துக்கொண்டு நம்முடைய ஜாதகம் இப்படி தான் இருக்கின்றது என்பதை புரிந்துக்கொண்டு வருகின்ற அனைத்து வாய்ப்பையும் ஏற்றுக்கொண்டால் நல்லது உங்களுக்கு தான் நடக்க ஆரம்பிக்கும்.

இராசியின் குணாதியசத்திற்க்கு மட்டும் வாழாமல் கொஞ்சம் மாறியும் வாழ்ந்து பாருங்கள். நல்ல நல்ல வாய்ப்பை நீங்கள் பெற்றுவிடலாம். நிறைய பேர் பிடிவாதமாக மட்டும் இல்லாமல் ஒவ்வொரு குணாதிசயத்தை பெற்றுக்கொண்டு அதற்காக வாழ்ந்து வீணாக போய்விடுகின்றார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, May 18, 2018

ஆன்மீகம்


வணக்கம்!
          ஒரு சாதாரணமான நபர் சாதிப்பதை விட ஒரு ஆன்மீகவாதி சாதிப்பது எளிதாக இருக்கும் விரைவாகவும் இருக்கும். இதற்கு அவர்களிடம் உள்ள சக்தி என்று சொன்னாலும் இதில் விசயங்கள் மறைந்து கிடக்கின்றன. அதனைப்பற்றி பார்க்கலாம்.

சாதாரணமானவர்கள் செட்டில் ஆகவேண்டும் என்றால் போராடி அதனை அடையவேண்டும். ஆன்மீகவாதி உடனே அந்த இலக்கை அடைந்துவிடுவார்கள். ஆன்மீகவாதிக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்றால் அவர்கள் இலக்கு என்பது தொலைதூரமாகவும் இருக்கின்றது. விரைவில் சம்பாதித்துவிட்டு ஞானம் அடைய என்ன வழி என்பதற்க்காக அந்த தேடுதலை துவங்கவேண்டும் என்ற ஒரு நோக்கம் இருக்கும்.

விரைவில் சம்பாதித்து அவர்களுக்கு வேண்டியதை பெற்றுவிட்டு அதன்பிறகு ஞானத்திற்க்கு காலத்தை செலவிடலாம் என்ற நோக்கத்திற்க்காக விரைவில் அவர்களுக்கு கிடைக்கும். சாதாரணமானவர்களுக்கு இலக்கு என்பது இருக்காது. ஒரே வழி சம்பாதித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பது மட்டுமே இருக்கும்.

நான் ஞானம் அடையபோகிறேன் என்னை சார்ந்து இருப்பவர்களுக்கு நான் பொருள் உதவியை செய்துமுடித்துவிட்டு நான் ஞானத்தை நோக்கி செல்லவேண்டும் என்று ஒரு எண்ணத்தை உருவாக்கினால் உங்களுக்கு செல்வம் எல்லாம் வந்து சேரும். அதன்பிறகு நீங்கள் ஞானமார்க்கத்தை நோக்கி செல்லலாம்.

உங்களின் எண்ணம் உண்மையானதாக இருந்தால் மட்டுமே இது எல்லாம் நடக்கும். உங்களின் எண்ணம் இதனை செய்துவிட்டு ஜாலியாக அப்படியே வாழ்ந்துவிடலாம் என்று எண்ணினால் ஒன்றுமே வராது. உண்மையாக இருந்தால்  மட்டுமே உங்களை நாடி வரும். ஆன்மீகவாதிகள் எளிமையாக அனைத்தும் பெறுவதின் இரகசியமே இதில் தான் இருக்கின்றன. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கேள்வி & பதில்


வணக்கம்!
          ஒரு நண்பர் கெடுதல் தசாவைப்பற்றி சொல்லி பயமுறுத்திகிறீர்கள் என்று கேட்டார். கெடுதல் தசாவைப்பற்றி சொல்லி பயமுறுத்தி அதனால் மக்கள் வருவார்கள் என்று இதனை சொல்லவில்லை. ஒரு எச்சரிக்கை கொடுத்துவிட்டால் வருகின்றவர்கள் அதற்கு தகுந்த மாதிரி நடந்துக்கொள்வார்கள் என்பதற்க்காக சொல்லுகிறேன்.

நீண்டகால தசா கெடுதல் தசாவாக வரும்பொழுது அது சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமல் அவர்களுக்கு பிரச்சினை கொடுத்து அதில் மாட்டிக்கொள்வார்கள் என்பதால் தான் கெடுதல் தசாவிற்க்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுகிறேன்.

ஒருவருக்கு நடைபெறும் தசா அவர்களுக்கு மாற்றத்தையும் அல்லது அதே நிலையிலும் பலனை கொடுத்துக்கொண்டு இருக்கும். இராகு தசா பதினெட்டு வருடங்கள் நடைபெறும். ஒருவருக்கு பதினெட்டு வருடங்கள் கெடுதலை கொடுத்தால் அவர் என்ன செய்யமுடியும். அவரால் ஒன்றுமே செய்யமுடியாமல் இருந்தால் அவர்களுக்கு அந்த தசாகாலம் முழுவதும் வீணாக போய்விடும்.

ஒருவருக்கு நடைபெறும் தசா காலம் முழுவதும் வீணாக போய்விடகூடாது என்பதற்க்காக மறுபடியும் மறுபடியும் கொடுத்துக்கொண்டே இருக்கிறேன். உங்களின் ஜாதகத்தை எடுத்து எந்த தசா நடைபெறுகிறது என்பதை பாருங்கள். அது நல்ல பலனை கொடுத்தால் அனுபவியுங்கள். கெடுதல் பலனை கொடுத்தால் எதனால் பிரச்சினை கொடுக்கிறது என்பதை பாருங்கள்.

கெடுதல் தசாவிற்க்கு உள்ள பரிகாரத்தை நீங்கள் வழிபாட்டு முறையில் கூட செய்துக்கொள்ளலாம். ஜாதகத்தை பார்த்துவிட்டு அதற்கு தகுந்தார் போல் வழிபாட்டை செய்யுங்கள் அல்லது பரிகாரத்தை செய்துவிட்டு கெடுபலனை குறைத்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, May 17, 2018

சாய்பாபா


வணக்கம்!
          நமது மக்களுக்கு ஒவ்வொரு வியாழக்கிழமையையும் சாய்பாபா கோவிலுக்கு செல்லும் பழக்கம் அதிகமாகவே இருக்கின்றன. இது ஒரு நல்ல விசயம் தானே என்று சொல்லலாம். நான் கூட சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்திருக்கிறேன். தற்பொழுது எல்லாம் சாய்பாபா கோவிலுக்கு செல்வதில்லை.

குரு என்ற ஒரு காரணத்திற்க்காக சாய்பாபா வணங்கினாலும் அதற்கு பின்னால் மிகப்பெரிய வணிகம் இருக்கின்றது. இதனை அவர்களுக்கு எதிராக நான் சொல்லவேண்டும் என்பதற்க்காக சொல்லவில்லை. அதனை விட நமது பழைமையான கோவில்களில் மிகப்பெரிய சக்தி இருக்கின்றது.

பழைமையான கோவில்களில் இருக்கும் சக்தி என்பது புதிய கோவில்களில் குறைவாக தான் இருக்கும். பழைமையான கோவில்கள் என்றால் கோடிக்கானக்கான மக்கள் அங்கு தரிசனம் செய்து இருப்பார்கள் அதில் நல்ல ஆத்மாக்களும் வழிபட்டு இருக்கும் அவர்களின் தரிசனமும் உங்களுக்கு கிடைக்கும்.

புதிய கோவில்களில் சக்தி இல்லை என்று சொல்லவரவில்லை. அது மடம் போல நிறைய இடத்தில் திறந்து வைக்கின்றனர் அல்லவா. இது ஒரு பஜனை மடம் போல தான் இருக்கும். கிருஸ்துவர்கள் கூட்டம் கூட்டுவார்கள் அல்லவா. அது போல ஒரு ஒரு இடமாக தான் இருக்கும். 

நீங்கள் இதற்கு செல்லவேண்டாம் என்பதற்காக இதனை சொல்லவில்லை. நமது பழமையான கோவில்களுக்கு நீங்கள் சென்றால் மிகப்பெரிய ஒரு ஆன்மீக அனுபவத்தை பெறலாம் என்பதற்க்காக சொல்லுகிறேன். இனி உங்களின் முடிவு.

சாய்பாபாவை வணங்கவேண்டாம் என்று சொல்லவில்லை. அவரையும் வணங்குங்கள் அதனோடு நின்றுவிடாமல் கொஞ்சம் நமது பழைமையான கோவில்களையும் வணங்குங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

காேடை விடுமுறை


வணக்கம்!
          கோடை விடுமுறை காரணமாக அனைத்து கோவில்களிலும் கடுமையான கூட்டம் இருக்கின்றது. நமது நண்பர்கள் பலர் கோவில்களுக்கு சென்று கூட்டமாக இருக்கின்றது சாமி தரிசனம் செய்யமுடியவில்லை. பல மணிநேரம் காத்திருக்கவேண்டியுள்ளது என்று சொல்லியுள்ளனர்.

பெரும்பாலும் இந்த நேரத்தை கொஞ்சம் தவிர்த்துவிடுவது நல்லது என்றே தோன்றுகிறது. பள்ளிகள் திறந்த பிறகு கோவில்களில் கூட்டம் குறையும். பள்ளிகள் திறந்த பிறகு கோவில்களுக்கு சென்றால் நல்ல தரிசனம் செய்துவிட்டு வரலாம்.

இந்த நேரத்தில் சென்றால் கட்டண தரிசனத்தில் கூட பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. சாமியையும் தரிசனம் நின்று பொறுமையாக தரிசனம் செய்யமுடியவில்லை என்று நண்பர்கள் சொல்லிருக்கின்றனர். அடுத்த மாதத்தில் இருந்து கோவிலுக்கு செல்லுங்கள்.

உங்களின் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களை அழைத்துசெல்லும்பொழுது கூட்டம் குறைவாக உள்ள கோவில்களை தரிசனம் செய்ய அழைத்துச்செல்லுங்கள். வீட்டிலேயே நிறைய பூஜைகளை செய்து அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, May 16, 2018

இரண்டாவது வீடு


வணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் இரண்டாவது வீடு மட்டும் கெட்டால் அவர்களுக்கு பணவரவும் நன்றாக இருக்காது. குடும்ப வாழ்வும் நன்றாக இருக்காது. இந்த இரண்டில் ஒன்று நன்றாக இருந்தாலும் பரவாயில்லை இரண்டும் கெட்டால் கஷ்டம்.

லக்கினத்திற்க்கு இரண்டாவது வீட்டை குடும்பஸ்தானம் என்று வைத்திருக்கின்றனர். குடும்ப உறுப்பினர்களையும் காட்டக்கூடிய ஒன்று தான் அது. அப்பேர்பட்ட வீடு கெட்டால் அவர்களுக்கு அமையும் குடும்பமும் நன்றாக இருக்காது.

இரண்டாவது வீட்டு அதிபதி மறைவுஸ்தானத்திற்க்கு சென்றால் அவர்கள் போராடி திருமணம் செய்யவேண்டிய ஒரு நிலை உருவாக்கிவிடுவார். திருமணம் செய்யலாமா அல்லது செய்யாமல் அப்படியே இருந்துவிடலாமா என்று யோசிப்பார்கள்.

இரண்டாவது வீடு சுபவீடாக வந்து அல்லது அதன் அதிபதி சுபஅதிபதியாக வந்து அவர் நல்ல வீட்டில் அமர்ந்தால் அவர்களுக்கு எப்பொழுதும் பணம் வந்துக்கொண்டே இருக்கும். குடும்பமும் நன்றாக இருக்கும்.

உங்களுக்கு பணம் என்பது சுத்தமாக வரவேயில்லை என்று சொல்லுபவர்கள் ஜாதகத்தை எடுத்து உங்களின் இரண்டாவது வீட்டை சற்று அலசி பாருங்கள். உங்களுக்கு ஏன் பணம் வரவில்லை என்பது புரியும்.

ஜாதகத்தில் பணவரவை காட்டக்கூடிய இரண்டாவது நன்றாக இருந்தால் தான் அவர்களின் பைக்கு எப்பொழுது பணம் வந்துக்கொண்டே இருக்கும். இரண்டாவது நன்றாக இல்லை என்றால் பணம் வராது.

இரண்டாவது வீட்டின் அதிபதிக்கு மற்றும் அந்த வீட்டிற்க்கு கிடைக்கும் கிரகங்களின் பார்வையை பார்த்துவிட்டு அந்த கிரகத்திற்க்குரிய தேவதையை வணங்கினால் உங்களுக்கு பணம் வரும் குடும்பமும் நன்றாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, May 15, 2018

கிரகங்கள் பார்வை


வணக்கம்!
          ஒரு கிரகம் ஒரு வீட்டில் அமர்ந்து அதனோடு வேறு ஒரு கிரகம் சேர்ந்து இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். இரண்டும் நல்ல கிரகங்களாக இருந்தால் பரவாயில்லை இதுவே தீயகிரகங்களாக இருந்தால் அதனை வைத்து நாம் நிறைய பலனை சொல்லிவிடுவோம்.

அனுபவத்தில் பார்க்கும்பொழுது இரண்டு தீயகிரகங்கள் சேர்ந்தாலும் ஒன்றும் பிரச்சினை இல்லை ஆனால் ஒரு கிரகத்தின் பார்வை அடுத்த கிரகத்தின் மீது விழும்பொழுது அது அதிகமான பிரச்சினையை கொடுக்கின்றது.

இரண்டு தீயவர்கள் ஒன்றாக அமரும்பொழுது அவர்கள் ஒன்றும் அவ்வளவு பெரியதாக தன்னை காட்டிக்கொள்வதில்லை ஆனால் நேர் நேராக பார்க்கும்பொழுது அது பெரிய அளவில் பிரச்சினை கொடுக்கும்.

மனிதர்கள் தீயவர்களாக இருந்தாலும் தன்னோடு அமரும்பொழுது வெளிகாட்டிக்கொள்வதில்லை ஆனால் எதிர் எதிராக பார்த்துக்கொண்டால் அவ்வளவு தான் முறைத்து பார்த்துக்கொள்வார்கள். இதே நிலை தான் கிரகங்களுக்கும் ஏற்படுகின்றது.

நல்ல பார்வை பார்த்தால் நல்லது நடக்கும். தீய பார்வை பார்த்தால் அது ஜாதகருக்கு இன்னல்களை கொடுத்துவிடும். அவர் அவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்து இதனை தெரிந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தசாவின் கெடுதல் காலம்



வணக்கம்!
          நாம் என்ன தான் சொன்னாலும் பலர் அதனைப்பற்றி கேட்கவே மாட்டார்கள் என்று சொல்லலாம். ஒரு கெடுதலை தரப்போகின்றது என்று நாம் சொல்லுவோம். உதாரணத்திற்க்கு ராகு தசா உங்களுக்கு கெடுதலை தரும் என்று பதிவில் சொல்லுவோம்.

நமது ஜாதககதம்பத்தில் ராகு தசா குறைந்தது நூறு பேர்க்கு மேல் நடக்கும். இதில் கேட்பவர்கள் ஒருவர் வந்தாலே அது பெரிய விசயமாக தான் இருக்கும். ராகு தசா மட்டும் இல்லை எந்த தசாவாக இருந்தாலும் அதில் நிறைய பேர் படிப்பார்கள் அதற்கு என்ன செய்யலாம் என்பதை கேட்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

இது எதனால் என்றால் இவர்கள் சிக்கி இருப்பது தீயகிரகங்களின் கையில் சிக்கி இருக்கின்றனர் என்று அர்த்தம். இராகு தசா சனி தசா சுக்கிர தசா போன்ற தசாவில் இருப்பவர்கள் பெரும்பாலும் அடுத்தவர்கள் சொல்லுவதை அவ்வளவு எளிதாக கேட்கமாட்டார்கள்.

மேலே சொன்ன தசாக்கள் ஒரு நபரின் புத்தியை அதிகமாக கெடுத்துவிடும் தன்மை படைத்த கிரகங்கள். அடுத்தவர்கள் என்ன சொல்லுவது நாம் என்ன கேட்பது என்ற நினைப்பில் இருப்பார்கள். அறிவுரை கேட்டால் அவன் திருந்திவிடுவான் என்று இந்த கிரகங்கள் முடிவு எடுத்து தான் வேலை செய்கின்றன.

நமது வேலை சொல்லிக்கொண்டே இருப்பது என்பதற்க்காக சொல்லிக்கொண்டே இருப்போம். சுபக்கிரகங்கள் தசா பெரும்பாலும் அடுத்தவர் சொல்லும் அறிவுரை கேட்டு அதற்கு தகுந்தார் போல் நடக்க வைக்கும். 

தீயகிரகங்களுக்கு என்று தான் அதிகமான ஒரு காலக்கட்டத்தை ஒதுக்கி வைத்திருக்கின்றார்கள். ஒருத்தனை போட்டு கொல்லாமல் கொல்லவேண்டும் என்பதற்க்காக இப்படி வைத்திருக்கின்றார்களாக என்பது தெரியவில்லை ஆனால் இதற்க்கு அதிக காலக்கட்டத்தை கொடுத்து இருக்கின்றனர். இதில் ஒருவர் மாட்டினால் அவரை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுகின்றன.

என்னை பொருத்தவரை முடிந்தவரை அடுத்தவர்களின் அறிவுரையை கேட்டு நடக்க பாருங்கள். அது என்னிடம் தான் கேட்கவேண்டும் என்பதில்லை உங்களுக்கு யார் நல்லதை கொடுப்பார்கள் என்பதை அறிந்துக்கொண்டு அவர்கள் சொல்லுவதை கேட்டு நடந்தால் வாழ்க்கை எளிமையாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, May 14, 2018

இளைஞர்களுக்காக


வணக்கம்!
          நிறைய பேர் ஜாதககதம்பம் படிக்கும் இளைஞர்கள் இருக்கின்றனர். நல்ல ஆன்மீகவாதியாகவும் இருக்கின்றனர். ஆன்மீக தேடலுடன் பல கோவில்கள் மற்றும் யாத்திரை எல்லாம் சென்று வருகின்றனர். இது நல்லது தான். அதே நேரத்தில் காலத்தோடு திருமணமும் செய்துக்கொள்ளுங்கள்.

திருமணம் செய்யாமல் பலர் கோவில் கோவிலாக சென்றுக்கொண்டு இருப்பதும் தெரிகிறது. திருமணம் செய்யாமல் கோவிலுக்கு சுற்றிக்கொண்டு இருந்தால் அது உங்களுக்கு ஆன்மீகம் பக்கம் மட்டுமே இழுத்து செல்லும். திருமணத்தை நடத்துவதற்க்கு வாய்ப்பை வழங்காமல் கூட செல்லலாம்.

திருமணம் செய்துக்கொண்டு ஆன்மீக தேடுதலை தொடருங்கள். ஆன்மீகத்திற்க்கு திருமணம் ஒரு தடை கிடையாது திருமணம் செய்துக்கொண்டு ஆன்மீக தேடுதலை வைத்துக்கொள்ளலாம். திருமணம் செய்யாமல் கோவிலுக்கு சென்றேக்கொண்டே இருக்கவேண்டாம்.

திருமணம் நடைபெறாமல் இருப்பதற்க்கு பலரின் எதிர்பார்ப்பும் ஒரு குறையாகவே இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வயதை கடந்துவிட்டால் திருமணத்தில் பெரிய எதிர்பார்ப்பை வைக்கவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

பணம் போனால் சம்பாதித்துவிடலாம் ஆனால் வயது போனால் ஒன்றும் செய்யமுடியாது. முடிந்தவரை ஒரு குறிப்பிட்ட வயதிற்க்குள் திருமணம் செய்துக்கொள்ள அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

புதன்



வணக்கம்!
          புதன்கிரகம் நன்றாக இருந்தால் தான் ஒருவரின் செயல்பாடு நன்றாக இருக்கும். புத்திக்காரகன் என்று சொல்லக்கூடிய புதன் நன்றாக வேலை செய்யவேண்டும் அப்பொழுது அவர்களின் புத்தி நன்றாக செயல்பட்டு அனைத்திலும் திறமையாக இருப்பார்கள்.

புதன்கிரகம் தனியாக நின்று எந்த பாவிகளோடும் சேராமல் அல்லது பார்வை பெறாமல் நல்ல நட்சத்திரத்தில் பயணம் செய்தால் புதனின் முழுமையான சக்தியை பெறலாம். பலரின் ஜாதகத்தில் புதன்கிரகம் அடிப்பட்டுவிடுகிறது. புதன்கிரகம் அடிப்பட்டவுடன் அவர்கள் செய்வது அனைத்தும் தவறாகவே அமைந்துவிடுகின்றது. வாழ்க்கையில் நிறைய தோல்வி ஏற்பட்டுவிடுகின்றது.


குலதெய்வ வழிபாட்டை கூட புதன்கிழமையில் செய்ய சொல்லிருக்கிறேன். இது எதனால் என்றால் குலதெய்வம் உங்களுக்கு நல்ல அறிவை கொடுத்து உங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையில் அதனை செய்ய சொல்லிருக்கிறேன்.

புதன் கிரகம் உங்களின் ஜாதகத்தில் எப்படி செல்கின்றது என்பதை பார்த்து அந்த கிரகத்திற்க்குரிய வழிபாட்டை செய்தால் கொஞ்சம் புத்தி நன்றாக வேலை செய்ய ஆரம்பித்துவிடும். கடுமையான உழைத்து சம்பாதிப்பவர்களை விட மூளையை வைத்து சம்பாதிப்பவர்கள் அதிகம் சம்பாதித்துவிடுவார்கள்.

புதன்கிரகத்தின் முழுமையான பலனை பெறுவதற்க்கு உள்ள வழிகளை உங்களின் ஜாதகத்தில் ஆராய்ந்து அதன்படி செயல்பட்டால் கண்டிப்பாக பெரிய அளவில் நீங்கள் வந்துவிடலாம். ஜாதகத்தை நன்றாக அலசி ஆராய்ந்து அதற்கு தகுந்தார் போல் செயல்படுங்கள்.

புதன்தசா நடைபெறும் நண்பர்கள் அனைவரும் புதன்கிரகத்திற்க்கு என்று தனியாக பரிகாரம் செய்துக்கொள்வதும் நல்லது தான் அப்பொழுது தான் புதன் கிரகம் நல்ல பலனை கொடுக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, May 13, 2018

சண்டை சச்சரவுக்கு பரிகாரம்


ணக்கம்!
         பெரும்பாலான தம்பதிகள் தங்களுக்குள் சண்டை சச்சரவு போட்டுக்கொண்டால் அவர்கள் அருகில் இருக்கும் பிரசித்துபெற்ற முருகன் கோவிலுக்கு அடிக்கடி சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

ஜாதகத்தில் செவ்வாய்கிரகம் சரியில்லாமல் அமைந்தால் மற்றும் கோச்சாரபடி செவ்வாய்கிரகம் செல்லும் வீடு உங்களுக்கு சரியில்லை என்றாலும் உங்களின் இல்லறதுணையிடம் இருந்து சண்டை சச்சரவு ஏற்பட்டுவிடும்.

இது வாய் சண்டையோடு மட்டும் இருந்துவிட்டால் ஒரளவு சமாதானம் ஆகிவிடலாம் அதனையும் மீறி அதிகமாக சண்டை ஏற்படும்பொழுது பிரிவு ஏற்படும். திருமணமான அனைவரும் சந்திக்கும் பிரச்சினை தான் இந்த சண்டை சச்சரவுகள். இது முற்றிவிடகூடாது.

இதற்கு நீங்கள் உங்களின் அருகாமையில் அமைந்த பிரசித்துபெற்ற முருகன் கோவிலாக இருந்து அந்த கோவிலுக்கு அடிக்கடி சென்று வழிபட்டு வரவேண்டும் அப்படி முடியாதவர்கள் மாதம் ஒரு முறையாவது சென்று வழிபட்டு வரவேண்டும் தம்பதிகள் இருவரும் சென்று வழிபட்டு வந்தால் நன்றாக இருக்கும்.

உங்களின் வீட்டில் கணவன் மனைவி மட்டும் இல்லை குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினர்கள் சண்டை போட்டால் கூட அது செவ்வாய்கிரகத்தால் தான் வரும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு அருகில் உள்ள முருகன் கோவிலாக இருந்தாலும் பரவாயில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, May 12, 2018

கெடுதல் தரும் காலக்கட்டம்



வணக்கம்!
ஒரு குடும்பம் ஒவ்வொரு நாளும் உயர்ந்துக்கொண்டே செல்லவேண்டும் மாறாக ஒவ்வொரு நாளும் அழிந்துக்கொண்டே சென்றால் அது மிகப்பெரிய ஒரு அழிவை நோக்கி செல்லும் என்பது தான் அனுபவ உண்மை.

குடும்பத்தில் உள்ள தலைவன் என்பவர் இதனை  உற்று நோக்கிக்கொண்டே இருக்கவேண்டும். எப்படி சென்றுக்கொண்டு இருக்கின்றது என்பதை உற்றுநோக்கவேண்டும் ஒரு சில குடும்ப உறுப்பினர்கள் அழிவை ஏற்படுத்திக்கொண்டே செல்வார்கள். இது குடும்பத்திற்க்கு பெரிய இழப்பை ஏற்படுத்திவிடும்.

பொருளாதாரம் மட்டும் இல்லை நல்ல காரியங்கள் கூட நடக்காமல் தீயகாரியங்கள் நடந்துக்கொண்டே இருக்ககூடாது அப்படி நடந்துக்கொண்டே இருந்தால் எங்கு இருந்து பிரச்சினை வருகின்றது என்பதையும் தெரிந்துக்கொள்ளவேண்டும்.

அழிவு பாதைக்கு செல்வதற்க்கு காரணமாக இருப்பது அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் தீயக்கிரங்களின் தசா நடக்கும். ராகு தசா மற்றும் சனி தசா அல்லது மறைவிடங்களின் தசா நடந்தால் அது அழிவு பாதைக்கு இட்டு சென்றுவிடும்.

தொட்டது அனைத்தும் துலங்காமல் செல்வது மற்றும் பிரச்சினைகளை அதிகம் சந்திக்க வைப்பது எல்லாம் மேலே சொன்ன தசாவால் அதிக பிரச்சினையை சந்திக்க வைத்துவிடும். இதில் ராகு தசா மட்டும் கொஞ்சம் அதிகமாகவே இதனை காட்டிவிடும்.

நான் உங்களிடம் பயமுறுத்துவதற்க்காக இதனை சொல்லவில்லை. நீங்கள் இந்த காலக்கட்டங்களில் இருந்தால் அதில் இருந்து தப்பிப்பதற்க்கு என்ன செய்யலாம் என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன். தொடர்ச்சியான வழிபாடு மற்றும் பரிகாரங்களை செய்யும்பொழுது இதில் இருந்து தப்பிக்கலாம்.

கஷ்டமான காலக்கட்டங்களில் நமது புத்திநிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுவிடும். நமக்கு எது செய்யவேண்டும் எதனை செய்யகூடாது என்பது கூட நமக்கு தெரியாமல் சென்றுவிடுகின்றது. இதற்கு தினமும் கோவிலுக்கு செல்வது கூட நமது நல்ல எண்ணங்களை உருவாக்கி தரும்.

பரிகாரம் என்றால் நம்மிடம் தான் செய்யவேண்டும் என்பதில்லை உங்களுக்கு தெரிந்தவற்றை செய்யலாம். உங்களுக்கு தெரிந்தவர்கள் நன்றாக செய்தால் கூட அவர்களிடம் சென்று இதனை செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு