Followers

Saturday, June 26, 2010

நட்சத்திரங்களின் பொதுகருத்து தொடர்ச்சி




ஸ்தம்
இது
வானத்தில் பலகை போன்று காட்சி அளிக்கும். அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணங்கள் அவ்வளவாக நன்றாக இருக்காது. பிறர் பொருள்களை கவருபவராகவும் இருப்பார்கள். நல்ல செல்வாக்குடன் வாழ்வார்கள். எடுக்கிற காரியங்களில் முயற்சியுடன் இருந்து வெல்வார்கள். இது வானத்தில் மேற்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 2.48 மணி முடிவு 4.24 மணி.இந்த நட்சத்திரத்தின் படம் கீழே உள்ளது. படம் Wikepedia தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

சித்திரை
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒரு சாதாரணமான வாழ்க்கை வாழ்பவராகவும் இனிமையாக பேசகூடியவராகவும் இருப்பார்கள். இவர்கள் அழகிய கண்கள் உடைவராகவும் இருப்பார்கள். இந்த நட்சத்திரம் வானத்தில் முத்துப்போல் காட்சி அளிக்கும். இது வானத்தில் வடமேற்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 6.24 மணி முடிவு 8.00 மணி.இந்த நட்சத்திரத்தின் படம் கீழே உள்ளது. படம் Wikepedia தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

சுவாதி
சுவாதி நட்சத்திரம் பிரகாசமாக வானத்தில் மின்னிக் கொண்டிருக்கிறது. சுவாதி நட்சத்திரத்தில் ஒருவர் பிறந்தால் மிகவும் கொடுத்துவைத்தவர் ஆவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒரு வேலையை எடுத்தார்கள் என்றால் அதனை முடித்துவிட்டுதான் அமருவார்கள். அந்தளவுக்கு உழைப்பாளிகள். இது வானத்தில் வடக்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 8.48 மணி முடிவு 10.24 மணி. இந்த நட்சத்திரத்தின் படம் கீழே உள்ளது. படம் Wikepedia தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.










விசாகம்
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகாக இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தில் தான் முருக பெருமான் அவதரித்தார். எதையும் செய்து முடிப்பார்கள் பேசும் திறன் உடைபவர்களாகவும் இருப்பார்கள். சண்டைகள் போடுபவர்களாகவும் இருப்பார்கள். இது வானத்தில் வடகிழக்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 8.00 மணி முடிவு 9.36 மணி. இந்த நட்சத்திரத்தின் படம் கீழே உள்ளது. படம் Wikepedia தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.


நட்சத்திரங்களின் பொதுகருத்து தொடர்ச்சி



ஆயில்யம்

ஆயில்யம் நட்சத்திரம் வானத்தில் பாம்பு போல் காட்சி அளிக்கும். இந்த நட்சத்திரம் ஆதிசேசனின் நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தை பற்றி சொல்லிகொள்ள அவ்வளவு விசேஷம் இல்லை என்று கருத்து உள்ளது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறரை வஞ்சிப்பார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தால் மாமியாருக்கு ஆகாது என்ற கருத்து உள்ளது. இது தவறான கருத்து ஆகும். இது வானத்தில் கிழக்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 16.00 மணி முடிவு 17.36 மணி.இந்த நட்சத்திரத்தின் படம் கீழே உள்ளது. படம் Wikepedia தளத்தில்
இருந்து எடுக்கப்பட்டது.


மகம்

மகம் நட்சத்திரத்திம் பித்ரு தேவதைகளுக்கு உரிய நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆரோக்கியத்துடன் செல்வத்துடனும் இருப்பர். சுயநலம் அதிகமாக இருக்கும். இந்த நட்சத்திரம் வானத்தில் வீடு போல் காட்சி அளிக்கிறது. இது வானத்தில் தென்கிழக்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 8.00 மணி முடிவு 9.36 மணி. இந்த நட்சத்திரத்தின் படம் கீழே உள்ளது. படம் Wikepedia தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.




பூரம்


பூரம்
நட்சத்திரம் வானத்தில் ஒரு கட்டில் கால் போல் காட்சி அளிக்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் இனிமையாக பேசுவார்கள். எல்லோராலும் பாராட்டப்பெறுவார்கள். எல்லோரையும் நேசிப்பார்கள். இது வானத்தில் தெற்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 12.00 மணி முடிவு 13.36 மணி. இந்த நட்சத்திரத்தின் படம் கீழே உள்ளது. படம் Wikepedia தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.





உத்திரம்

உத்திரம் நட்சத்திரம் வானத்தில் கட்டில் கால் போல் உள்ளது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரசபோக வாழ்க்கை நடத்துவார்கள். உயர்ந்த கல்வி கற்பார்கள் புகழ் பெறுவார்கள். இவாகள் கலைகளை விரும்பி ரசிப்பார்கள். இது வானத்தில் தென்மேற்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 13.12 மணி முடிவு 14.48 மணி. இந்த நட்சத்திரத்தின் படம் கீழே உள்ளது. படம் Wikepedia தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த நட்சத்திரத்தின் படம் கீழே உள்ளது. படம் Wikepedia தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.


பார்க்கலாம் ...

Tuesday, June 22, 2010


நட்சத்திரங்களின் பொதுகருத்து தொடர்ச்சி



மிருகசீரிஷம்


மிருகசீரிஷம் வானத்தில் மானின் தலைபோல் காட்சி அளிக்கும். இது சந்திரன் பிறந்த நட்சத்திரம். மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்பமான வாழ்க்கை நடத்துபவராகவும் வாழ்க்கையை ரசிப்பவராகவும் இருப்பவராகவும். பேச்சில் கண்டிப்பும் இருக்கும். அதுபோல் இவர்களிடம் பணமும் தாராளமாக வரும். இவர்கள் எடுக்கிற காரியங்களில் திறமையாக செய்வார்கள். இந்த நட்சத்திரம் உடலற்ற நட்சத்திரம் ஆகும். இது உடலற்ற நட்சத்திரம் ஆகுதலால் சுபகாரியங்கள் எதும் செய்தல் கூடாது. இது வானத்தில் மேற்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 12.00 மணி முடிவு 13.36 மணி.

திருவாதிரை

திருவாதிரை இது வானத்தில் பவளம் போல் காட்சி அளிக்கிறது. இந்த நட்சத்திரத்தில் தான் சிவன் தோன்றினார். மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடபடுகிறது. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேச்சு ஆற்றல் உடைவராக இருப்பார்கள். சிலபேர் செய்நன்றி மறந்தவராகவும் இருப்பார்கள் தாய் தந்தையரை கவனிக்கமாட்டார்கள். இது வானத்தில் வடமேற்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 16.00 மணி முடிவு 17.36 மணி.

புனர்பூசம்

புனர்பூசம் நட்சத்திரம் வானத்தில் வில்போல் காட்சி அளிக்கிறது. இந்த நட்சத்திரம் சுபம்அற்ற நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் மிகவும் கஷ்டத்தில் வாழ்க்கை நடத்துவார்கள். இந்த நட்சத்திரத்தில் தான் இராமபிரான் அவதரிதார். அவர் பட்ட பாடு அனைவரும் அறிந்ததே. நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் பயப்பட வேண்டியதில்லை ஏன் என்றால் அனைத்தும் பொது விதிதான். ஒன்று இல்லை என்றால் இன்னொன்று உங்களுக்கு கிடைக்கும். சொல்லியவைகள் அனைத்தும் பொதுபலன். இந்த நட்சத்திரம் தலையற்ற நட்சத்திரம் ஆகும். இது தலையற்ற நட்சத்திரம் ஆகுதலால் சுபகாரியங்கள் எதும் செய்தல் கூடாது. இது வானத்தில் வடக்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 5.36 மணி முடிவு 7.12 மணி.

பூசம்

பூசம் நட்சத்திரம் வானத்தில் பூ போல தோற்றமளிக்கும். இது குருவின் நட்சத்திரம் ஆகும். பூசத்தில் பிறந்தவர்கள் நன்றாக கற்றவராக இருப்பார்கள். தாராளமான மனசு இவர்களுக்கு இருக்கும். நல்ல பழக்கவழக்கங்கள் இவர்களுக்கு இருக்கும். இது வானத்தில் வடகிழக்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 6.24 மணி முடிவு 8.00 மணி

பார்க்கலாம் ...

Sunday, June 20, 2010


நட்சத்திரங்களின் பொதுகருத்து


அசுவினி

அசுவம் என்றால் குதிரை, அசுவினி நட்சத்திரம் ஒரு குதிரை போல வானத்தில் காணப்படும். இந்த நட்சத்திரத்தின் குணம் சத்துவ குணம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகாகவும்.திறமைசாலிகளாகவும் இருப்பார்கள். பிறர்பொருளுக்கு ஆசைபடமாட்டார்கள்.வானத்தில் கிழக்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 8.24 மணி முடிவு 10.00 மணி

பரணி

பரணியில் பிறந்தவர்கள் செல்வந்தராகவும். திறமை மிக்கவராகவும் எதையும் செய்யும் ஆற்றல் படைத்தவராகவும் பலராலும் போற்றக்கூடியவராகம் காணப்படுவார். தாய் தந்தையரை மதிப்பார்கள்.பரணி நட்சத்திரம் அடுப்பு உருவம் போல் காட்சி அளிக்கும். பரணி நட்சத்திரம் எமனின் நட்சத்திரம் அதனால் இந்த நட்சத்திரத்தில் சுபகாரியங்கள் எதுவும் செய்யக்கூடாது. இந்த நட்சத்திரத்தில் வீட்டில் அடுப்பு வைக்கலாம்.தென்கிழக்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 12.00 மணி முடிவு 13.36 மணி

கிருத்திகை

கிருத்திகையில் பிறந்தவர்கள் நல்ல மனமுடையவர்களாகவும் திகழ்வார்கள். இரக்க மனம் இருக்கும். வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள்.கார்த்திகை நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்களை உளளடங்கியது. இது அக்னி பகவானின் நட்சத்திரம் ஆகும்.அதனால் இந்த நட்சத்திரத்தில் சுபகாரியங்கள் எதுவும் செய்யக்கூடாது. தெற்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 20.00 மணி முடிவு 21.36 மணி.

ரோகிணி

ரோகிணியில் பிறந்தவர்கள் நேர்மையானவராக இருப்பார். அன்போடு பழகுவார்கள் மனைவியிடம் அல்லது கணவர்களிடம் அன்போடு ஆதரவுடன் பழகுவார்கள். அடுத்தவர்களிடம் இனிமையாகவும் பாசத்துடன் பேசுவார்கள். இந்த நட்சத்திரம் பிரம்மனின் நட்சத்திரமாகும். ரோகினி நட்சத்திரம் வானத்தில் வண்டிச்சக்கரம் போலத் தோற்றமளிக்கிறது. தென் மேற்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 5.36 மணி முடிவு 7.12 மணி.

இன்னும் வரும் ...

Thursday, June 3, 2010


நட்சத்திரம்

நாம் இதுவரை கிரகங்களைப் பற்றி பார்த்தோம். அந்த விபரம் சிறிய அளவில் தான் நான் தந்தேன். ஒவ்வொரு கிரகமும் பற்றி எண்ணற்ற தகவல்கள் உள்ளன அதனைப் பற்றி வரும் நாட்களில் எழுதுகிறேன். இப்பொழுது நாம் நட்சத்திரங்களைப் பற்றி பார்ப்போம்.

வான்வெளியில் கோடி கணக்கான நட்சத்திர கூட்டங்கள் உள்ளன. அதனை நமது சித்தர்கள்,ஞானிகள் 27 வகையான நட்சத்திரமாக பிரித்து கொடுத்துள்ளனர். ஒரு நட்சத்திம் என்பது பல கூட்டான நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்கள் கிரகங்களுக்கு அப்பால் உள்ளன. உண்மையில் நட்சத்திரங்கள் கிரகங்களை விட அளவில் மிக பெரியது. இவைகள் வெகு தொலைவில் உள்ளதால் நம் கண்களுக்கு மிக சிறிய அளவில் தெரிகிறது.இந்த 27 வகையான நட்சத்திரங்கள் மண்டலத்தில் வழியாக செல்லும் கிரகங்களே பூமியில் இருக்கும் அனைத்து மனிதர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஏன் அனைத்து உயிர்களிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
இந்த நட்சத்திரங்களை 27 வகையாக நமது முன்னோர்கள் பிரித்து பெயர் வைத்தனர். அவைகள்

1. அசுவினி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோகினி
5. மிருகசீரிஷம்
6. திருவாதிரை
7. புனர்பூசம்
8. பூசம்
9. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
13. அஸ்தம்
14. சித்திரை
15. சுவாதி
16. விசாகம்
17. அனுஷம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்திராடம்
22. திருவோணம்
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்திரட்டாதி
27. ரேவதி

கேது


கேது சூரியனை ஒரு முறை சுற்றிவர 18 1/2 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும்.இராகுக்கு போல் கேதுவுக்கும் சொந்த வீடு கிடையாது. தான் அமர்ந்த வீட்டையே சொந்த வீடாக எடுத்துக்கொள்ளும். ராகு உள்ள பண்புகள் அனைத்தும் கேதுவுக்கும் பொருந்தும். பாட்டியார்,மாந்தரீகம்,ஞானம்,மோட்சம்.,விநாயகர் வழிபாடு,விரக்தியடைதல்,விபசாரம் செய்தல்,தற்கொலை செய்யும் எண்ணம்,புண்ணிய ஸ்தல யாத்திரை.சிறைப்படல்,ஞானிகள் தரிசனம் ஆகியவற்றிக்கு கேது காரணம் ஆகிறார்.

நிறம்-சிவப்பு
மலர்-செவ்வல்லி
தானியம்-கொள்
திசை-வடமேற்கு
காரகம்-ஞானம்,மோட்சம்
உச்சம்-விருச்சகம்
நட்சத்திரங்கள்-அசுவனி,மகம்,முலம்
பால்-அலி
நட்பு-சனி,சுக்கிரன்
பகை-சூரியன்,சந்திரன்,செவ்வாய்
சமம்-புதன்,குரு
திசைகாலம்-7 ஆண்டுகள்
கோசரகாலம்-1 1/2 வருடம்